31-08-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே ! மன்மனாபவ என்ற
டிரில்லை சதா செய்து கொண்டேயிருந்தால் 21 பிறவிகளுக்கு
நிரந்தரமாக நோயற்றவராக ஆகிவிடலாம்.
கேள்வி:
சத்குருவின் எந்த ஸ்ரீமத்தை பாலனை
செய்வதில் குப்தமான (மறைவான) உழைப்பு இருக்கின்றது?
பதில்:
இனிமையான குழந்தைகளே! இந்த
தேகத்தை மறந்து என்னை நினையுங்கள் என்பது சத்குருவின்
ஸ்ரீமத்தாகும். தன்னை தனியான ஆத்மா என புரிந்து கொள்ளுங்கள்.
ஆத்ம உணர்வில் இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். அனைவருக்கும்
அசரீரி ஆகுங்கள் என்ற செய்தியை கொடுங்கள். தேகம் உட்பட
தேகத்தின் அனைத்து தர்மங்களையும் மறந்தால் நீங்கள் தூய்மையாகி
விடலாம். இந்த ஸ்ரீமத்தைக் கடைபிடிப்பதில் குழந்தைகள் குப்தமாக
உழைக்க வேண்டியிருக்கின்றது. அதிர்ஷ்டசாலி குழந்தைகள் தான்
இந்த குப்தமான உழைப்பை செய்ய முடியும்.
ஓம் சாந்தி.
தங்களுடைய சகோதரர்கள் அல்லது சகோதரிகளுக்கு டிரில் கற்றுக்
கொடுப் பதற்காக குழந்தைகள் அமர்ந்திருக்கிறார்கள். இது
எப்படிப்பட்ட டிரில்? இதில் குழந்தைகள் எதையும் கூற
வேண்டியதில்லை. அந்த உடலுக்கான உலகீய பயிற்சியில் சொல்ல வேண்டி
யிருக்கின்றது. இவரோ சுப்ரீம் டீச்சர், கீதையின் பகவான்
குழந்தைகளுக்கு வந்து யோகத்தின் டிரில்லைக் கற்பிக்கிறார். இது
குப்தமாக உள்ளது. மாணவர்கள் ஆரோக்கியமாக இருப்பதற்காக இந்த
டிரில் கற்பிக்கப்படுகிறது. இந்த மன்மனாபவ டிரில்லினால் 21
பிறவிகளுக்கு ஆரோக்கிய மாக இருக்கலாம். ஒருபோதும் நோய் ஏற்படாது.
எனவே இது எவ்வளவு நல்ல ஆன்மீக டிரில்லாகும். மன்மனாபவ என்பதை
பாபா புரிய வைக்கின்றார். இதில் சொல்வதற்கு எதுவும் இல்லை.
தன்னை ஆத்மா என உணருங்கள் என்று மட்டும் புரிய வைக்கப்படுகிறது.
ஆத்ம அபிமானி ஆகுங்கள். ஆகுக என்பதன் பொருளே நீங்கள் தந்தையை
நினைவு செய்யுங்கள், சதா ஆரோக்கியமாக ஆகிவிடலாம். போன
கல்பத்தில் கூட நாம் இந்த ஆன்மீக டிரில்லினால் சதா ஆரோக்கியமாக
மாறினோம். ஆன்மீக டிரில், ஆன்மீகத் தந்தை பரம்பிதா பரமாத்மா
சிவன் தான் கற்பிக்கின்றார். பகவான் என்று அவருக்குத்தான்
கூறப்படுகிறது. அவருக்குத்தான் பூஜையும் நடக்கிறது. சிவாய நமஹ
என்றும் கூறுகின்றார்கள் அல்லவா? பிரம்மா தேவதாய நமஹ,
சிவபரமாத்மாய நமஹ என்கிறார்கள். இந்த டிரில்லை வேறு எவரும்
கற்றுத்தர முடியாது. இந்த டிரில்லை பிரம்மா கற்பித்தார்
என்பதும் கிடையாது. பிரம்மா குமார் பிரம்மா குமாரிகள் என
அழைத்துக் கொள்ளலாம். ஆனால்.... கடிதத்தில் கூட சிவபாபா கேர்
ஆப் பிரம்மா என்று தான் எழுதுகின்றீர்கள். அவர் குப்தமாகி
விட்டார், ஆனால் மனிதர்களுக்கு எப்படித் தெரியும் பிரம்மாவோ
பிரஜாபிதா ஆவார். முழு உலகத்தினரும் அவருடைய குழந்தைகள் ஆவர்.
பிரஜா பிதா அல்லவா? டிரில் கற்பிக்கக் கூடியவர் நிராகார தந்தை
ஆவார். அவர் குப்த மாக இருக்கின்றார். குப்தமாக இருக்கின்ற
காரணத்தினால் மனிதர் களுக்கு புரிந்து கொள்ள கடினமாக
இருக்கின்றது. பிரம்மாவை பகவான் என்று கூறமுடியாது. இங்கே பெயரே
பிரம்மா குமாரிகள் பிரம்மா குமார். அதாவது பிரம்மாவின்
குழந்தைகள். யாராவது வருகிறார்கள் என்றால், அவர்களுக்கு புதிய
உலகத்தை படைப்பவர் பிரம்மா இல்லை, நிராகார் தந்தை என்று கூற
வேண்டும். அவர் பிரம்மா மூலமாக படைக்கின்றார். பரலௌகீக பரம்பிதா
பரமாத்மா பிரம்மா மூலமாக படைக்கின்றார் என்றால் பரமாத்மாவின்
படைப்பு ஆகிவிட்டது. நீங்கள் கடிதத்தின் மீது சிவபாபா கேர் ஆப்
பிரம்மா என்று எழுதுகின்றீர்கள். எனவே இதுவும் நினைப் பதற்கான
யுக்தியாகும். சிவபாபா பிரம்மா மூலமாகக் கற்பிக்கின்றார்.
மன்மனாபவ என்று மட்டும் கூறுகின்றார். வேறு எந்த துன்பமும்
கொடுப்பதில்லை. நீங்கள் தங்கள் முன்னேற்றத்தை விரும்புகிறீர்கள்
என்றால், உண்மையான உலகிற்கு அதிபதி ஆக வேண்டும் என விரும்பு
கிறீர்கள் என்றால், உண்மையான கண்டத்தை படைக்கக் கூடியவர் ஒரே
ஒரு சத்தியமான தந்தையாவார். அவரை நினையுங்கள். என்னை நினைத்தால்
பாவங்களி-ருந்து விடுபடலாம் என எல்லையற்ற தந்தை தான் வந்து
குழந்தைகளுக்குக் கூறுகின்றார். கிருஷ்ணரை பதீத பாவனர் என்று
கூறமுடியாது. பரம்பிதா பரமாத்மாவைத் தவிர. வேறு எவரையும் கூற
முடியாது. இறை தந்தை என்று தான் கூறுவார்கள். அனைவரும் அவரை
தந்தை என்கிறார்கள். பிறகு அவரை சர்வ வியாபி என்று எப்படி கூற
முடியும்? அவர் விடுவிப்பதற்காக வருகிறார் என்று
கூறுகின்றார்கள். இதை மனிதர்கள் அறியவில்லை. எனவே கல்பத்தின்
ஆயுளை தலைகீழாக எழுதி விட்டனர். இப்போது குழந்தைகள் இந்த
டிரில்லை செய்ய வேண்டும். ஞானம் கிடைத்திருக்கிறது. உட்காரும்
பொழுது தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைத் தால்
விகர்மங்கள் அழியும். டீச்சர் எதிரில் ஆசனத்தில்
அமர்ந்திருக்கின்றார் என்றால், அழகாகும். டிரில் செய்விப்பதற்கு
ஆசிரியர் நிச்சயம் தேவை என்பது முறையாகும். சிலர் பெரிய
ஆசிரியராக இருந்தால் சிலர் சிறிய ஆசிரியராக இருப்பர். இப்போது
உங்களை சோதிப்பதற்கு அவசியம் இல்லை. ஏனென்றால் நாம் எவ்வளவு
நேரம் மிகவும் அன்பான தந்தையை நினைக்கின்றோம் என உங்களுக்கே
தெரியும். பிரம்மா ஒன்றும் மிகவும் அன்பானவர் கிடையாது. மிகவும்
அன்பானவர் சதா தூய்மையாக இருப்பவர். எல்லோரையும் விட அன்பானவர்
யார் என குழந்தைகள் அறிகிறீர்கள். துக்கத்தை நீக்கி சுகம்
அளிப்பவரே என மனிதர்கள் பரமாத்மா வைத்தான் நினைக் கின்றார்கள்.
அவரை விடுவிக்கக் கூடியவர் என்றும் கூறுகின்றார்கள். அதாவது
துக்கத்தில் இருந்து விடுவிக்கக் கூடியவர் எனவே குழந்தைகள்
தங்களது முயற்சியை செய்ய வேண்டும். நாடகத்தின் படி இந்த உலகம்
தூய்மையாக வேண்டும். மேலும் தூய்மையான உலகத்தை உருவாக்க
தீப்பற்றி எரிய வேண்டும். எப்படி தீப்பற்றி எரியும் என்பதையும்
அறிகிறீர்கள். அழியாமல் உலகம் தூய்மையாக முடியாது. இதுவே ருத்ர
ஞான யக்ஞம்.......... ருத்ரனுக்கும் சிவனுக்கும் எந்த
வித்தியாசமும் இல்லை. ஆனால் சிவன் என்ற பெயர் முக்கியமானதாகும்.
மற்றபடி அவரவர் மொழியில் பல பெயர்கள் வைத்து விட்டனர்.
சிவஜெயந்தி கூட கொண்டாடுகிறார்கள். பாரதத்தில் தான் சிவ ஜெயந்தி
புகழ் பெற்றதாகும். எல்லையற்ற தந்தையின் சிவஜெயந்தி என்றால்
நிச்சயம் வந்திருப்பார். சிவபாபா வின் பெயர் பிரசித்தமாக
இருக்கின்றது. பிரம்மா மூலமாக சொர்க்கத்தின் ஸ்தாபனை செய்யக்
கூடியவர் ஆவார். எனவே அந்த உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தையை
நினைக்க வேண்டும். பிரம்மா உயர்ந்ததிலும் உயர்ந்தவர் கிடையாது.
உண்மையில் பிரம்மா உயர்ந்தவராகவும் ஆகிறார். பிறகு கீழேயும்
இறங்குகிறார். பிராமண குழந்தைகளாகிய நீங்களும் கீழே
இறங்குகிறீர்கள். இப்போது உயர்ந்தவர் ஆகிக்கொண்டு
இருக்கின்றீர்கள். ஒரேயடியாக உயர்ந்த பாபாவின் வீட்டிற்குச்
சென்று விடுவீர்கள். நீங்கள் இச்சமயம் திரிகாலதர்ஷி ஆகிக்கொண்டு
இருக்கின்றீர்கள். நாம் தான் சுயதரிசன சக்கரதாரி என நீங்களே
அறிகிறீர்கள். நாம் பிரம்மாண்டம் மற்றும் சிருஷ்டியின் முதல்
இடை இறுதியை அறிந்தவர்கள். பிரம்மாண்டம் என்றால் உயர்ந்தது.
அங்கே அனைத்து ஆத்மாக்களும் வசிக்கிறார்கள். உலகத்தில் வேறு
யாரும் மூலவதனத்தில் ஆத்மாக்கள் வசிக்கின்றனர் என்று கூறவில்லை.
உலகம் மற்றும் பிரம்மாண்டம் தனித்தனியாகும். ஆத்மாக்கள்
நிர்வாணதாமத்தில் வசிக்கின்றார்கள். அதற்கு சாந்தி தாமம் என்று
கூறப்படுகிறது. அது அனைவருக்கும் பிடித்திருக் கின்றது.
அதனுடைய உண்மையான பெயர் சாந்தி தாமம் அல்லது நிர்வாணதாமம் ஆகும்.
ஆத்மாவின் சொரூபம் அமைதியாகும். ஒன்று சாந்திதாமம், இன்னொன்று
சைகையின் உலகம் மற்றும் இது பேசும் உலகம் ஆகும். சைகையின்
உலகத்தில் அதிகம் இருக்க வேண்டிய தில்லை. சாந்தி தாமத்தில்
நிறைய பேர் வசிக்க வேண்டி இருக்கின்றது. வேறு எந்த இடமும் இல்லை.
ஆத்மா பாபாவையோ வீட்டையோ நினைக்கும் பொழுது மேலே நினைக்கின்றது.
இடையில் இருக்கும் தாமத்தை உங்களைத் தவிர வேறு யாரும்
அறியவில்லை. மனிதர்களுக்கு இவ்வளவு ஞானம் இல்லை. பிரம்மா,
விஷ்ணு, சங்கர் சூட்சும வதனத்தில் இருக்கிறார் என்று மட்டும்
கூறுகிறார்கள். மற்றபடி அவர்களுடைய தொழிலைப் பற்றி எதுவும்
தெரிய வில்லை. 84 பிறவிகள் எடுக்கின்றார்கள். பிரம்மாவிலிருந்து
விஷ்ணு, விஷ்ணுவிலி ருந்து பிரம்மா. இதுவே லீப் யுகம் ஆகும்.
சிறிய காலம் ஆகும். புருஷோத்தம மாதம் என்று கூறுவதைப் போன்று
ஆகும். இது உங்களை வைரம் போன்று உயர்ந்தவர்களாக மாற்றுவதற் கான
பிறவியாகும். சூத்திரனிலிருந்து பிராமணன் ஆவது அனைத்தையும் விட
உயர்ந்ததாகும். பிராமணன் ஆகின்றீர்கள் என்றால் தாத்தாவின்
சொத்தை அடைவதற்கு உரிமையானவர்கள் ஆகிறீர்கள்.
குழந்தைகளே! எப்பொழுதும் மன்மனாபவ என பாபா குழந்தைகளுக்கு
கூறுகின்றார். பாபாவின் செய்தியை அனைவருக்கும் கொடுத்துக்
கொண்டேயிருங்கள். பாபாவிற்குத்தான் தூதுவர் என்று
கூறுப்படுகின்றது. வேறு யாருக்கும் தூதுவர் என்று கூற முடியாது.
அவர்களோ வந்து தர்மத்தை உருவாக்குகின்றார்கள். தூதுவர் ஒருவரே.
அவரே வந்து உங்களுக்கு தூய்மை யாவதற்கான செய்தியை அளிக்கிறார்.
அவர்கள் தர்மத்தை ஸ்தாபனை செய்வதற்காக வருகிறார்கள். அவர்கள்
யாரும் திரும்ப அழைத்துச் செல்லும் வழிகாட்டி கிடையாது. அவரோ
ஒரே ஒரு சத்குரு சத்கதி அளிப்பவர் ஆவார். உண்மையைப்
பேசக்கூடியவர் உண்மையான வழியை காட்டக்கூடியவர் ஒரே ஒரு பரம்பிதா
சிவனே ஆவார். எனவே மிகவும் குப்தமாக குழந்தைகள் உழைக்க வேண்டும்.
இப்போது நாம் இந்த தேகத்தை மறந்து ஒரு தந்தையை நினைக்க வேண்டும்
என நீங்கள் அறிகிறீர்கள். சரீரத்தை விட்டுவிட்டால் முழு உலகமும்
விடுபட்டுவிடும். ஆத்மா தனியாகி விடுகிறது. ஆத்ம உணர்வில்
வந்தால் வேறு எந்த நண்பர்கள் உறவினர்கள் நினைவில் வரமாட்டார்கள்
என பாபா கூறுகின்றார். நாம் ஆத்மாக்கள் நாம் பாபாவுடன்
சென்றுவிடுவோம். நீங்கள் என்னிடம் எப்படி வரமுடியும் என பாபா
ஆலோசனை வழங்குகின்றார். இந்த பாபாவும் புகழ் பெற்றவர் ஆவார்.
இவர் மூலமாக பாபா அனைத்து ஆத்மாக்களுக்கும் வழிகாட்டியாகி
கொசுக்கூட்டம் போன்று அழைத்துச் செல் கின்றார். இந்த உண்மையான
ஞானம் குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் மட்டுமே இருக் கின்றது.
உங்களை பாண்டவ சேனை என்றும் கூறுகின்றார்கள். பாண்டவ பதி, சுயம்
சாட்சாத் பரம் பிதா பரமாத்மா ஆவார். அவரே குழந்தைகளாகிய
உங்களுக்கு டிரில்லை கற்றுக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்.
போன கல்பத்தைப் போன்றே வினாசம் நடக்கும் பொழுது அனைத்து
ஆத்மாக்களும் உடலை விட்டு விட்டு சென்று விடுவர். சத்யுகத்தில்
சில ஆத்மாக்களே இருப்பதால் ஒரே இராஜ்யம் இருக்கின்றது. இப்போது
பல்வேறாக இருக்கின்றது. மீண்டும் ஒன்றாக மாறும். இந்த ஞானத்தை
முழு நாளும் புத்தியில் நினைக்க வேண்டும். குழந்தைகள் பட
கண்காட்சிகளில் கூட புரிய வைக்க வேண்டும். புது டெல்லி இருந்த
போது புதிய பாரதம் இருந்தது. ஒரே ஒரு ஆதி சனாதன தேவி தேவதா
தர்மம் இருந்தது. இந்து தர்மம் ஆதி சனாதன தர்மம் கிடையாது. நாம்
பிராமணரிலிருந்து தேவதை ஆகின்றோம். இதை மற்ற தர்மத்தினர்
ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். யார் முதலில் வருகிறார்களோ அவர்களே
84 பிறவிகளை எடுக்கின்றார்கள். இது முற்றிலும் எளிதாகப்
புரிந்து கொள்ள வேண்டிய விசயம் ஆகும். இப்போது குழந்தைகளாகிய
உங்களின் புத்தியில் இந்த நாடகம் முடியப் போகின்றது என்பது
இருக்கின்றது. அனைத்து நடிகர்களும் வந்துவிட்டனர். 84 பிறவிகள்
முடிந்து விட்டது. இப்போது மீண்டும் வீட்டிற்குப் போக வேண்டும்.
ஏனென்றால் மிகவும் களைத்துப் போய் விட்டனர் அல்லவா?
பக்திமார்க்கம் என்பதே களைப்படையும் மார்க்கம் (வழி) ஆகும்.
இப்போது என்னை நினையுங்கள் மற்றவர்களுக்கும் தேகம் உட்பட
தேகத்தின் அனைத்து தர்மங்களையும் விட்டு விட்டு தன்னை ஆத்மா என
உணர்ந்து தந்தையை நினையுங்கள் என்ற செய்தியை அளியுங்கள். அசரீரி
ஆகினால் தூய்மையாகி விடலாம். ஏனென்றால் இப்போது வீட்டிற்குத்
திரும்பிப் போக வேண்டும். மரணம் எதிரிலேயே உள்ளது.
இங்கே கூட குழந்தைகள் தந்தையிடம் புத்துணர்வு அடைவதற்காக
வருகின்றார்கள். பாபா நேரடியாக குழந்தைகளுக்குப் புரிய
வைக்கிறார் - குழந்தைகளே தேக உணர்வை விட்டு விட்டு என்னை
மட்டும் நினையுங்கள். இந்த பழைய உலகம் இப்போது அழியப் போகின்றது.
நீங்கள் ஒரு தந்தையை நினைத்து தூய்மையானால் தூய்மையான
உலகத்திற்கு அதிபதியாகி விடலாம். ஒருவேளை முயற்சி செய்யவில்லை
என்றால் பலனும் கிடைக்காது. பிறகு தன்டனையும் அடைய
வேண்டியிருக்கும். தங்களின் வருமானத்தை சேமித்துக் கொண்டே
இருங்கள் மற்றும் மற்றவர்களுக்கும் அழைப்பு கொடுங்கள் என்று
பாபா கூறு கின்றார். பாபாவின் வழியைக் காண்பியுங்கள்.
குழந்தைகளாகிய நீங்கள் நன்மை செய்யக் கூடியவர் ஆக வேண்டும்.
தன்னுடைய நண்பர்களுக்கும் உறவினர் களுக்கும் நன்மை செய்ய
வேண்டும். இங்கே உங்களை ஆத்ம உணர்வுடையவர் ஆக்கப்படுகிறது. மகா
மந்திரம் அளிக்கப்படுகிறது. பழமையான யோகத்தை தந்தை தான் வந்து
கற்பித்திருக்கின்றார். இதற்குத் தான் யோக அக்னியினால் பாவம்
பஸ்பம் ஆகிவிடும் என்று பாடப்பட்டு இருக்கின்றது. போன
கல்பத்திலும் கூட இதே சைகை கிடைத்துள்ளது. தன்னை ஆத்மா என்று
உணர்ந்து என்னை நினையுங்கள் என பாபா சைகை அளிக்கின்றார்.
தங்களுடைய இல்லற விவகாரத்தில் இருங்கள். நல்லது. உங்களை
சரணடைந்து இருக்கிறோம் என பாடப்பட்டு இருக்கின்றது. யாருக்காவது
துக்கம் ஏற்படும் போது உயர்ந்த சக்தி உடையவர்களிடம் சென்று
சரணடை கிறார்கள். இங்கேயோ நடைமுறையில் இருக்கின்றது. எப்போது
நிறைய துக்கத்தை பார்க்கிறார்களோ பொறுத்துக் கொள்ள
முடியவில்லையோ வேறு வழி இல்லை என்ற போது பாபாவிடம் ஓடி வந்து
சரணடைகிறார்கள். பாபாவைத் தவிர வேறு யாரும் சத்கதி அளிக்க
முடியாது. பழைய உலகம் அழியப்போகிறது என குழந்கைதள் அறிகிறீர்கள்.
ஏற்பாடு கள் நடந்து கொண்டு இருக்கின்றது. இந்த பக்கம் உங்கள்
ஸ்தாபனையின் ஏற்பாடு, அந்த பக்கம் அழிவிற்கான ஏற்பாடு
நடக்கின்றது. ஸ்தாபனை ஆகிவிட்டது என்றால் நிச்சயம் அழிவும்
ஏற்படும். பாபா ஸ்தாபனை செய்வதற்காக வந்திருக்கின்றார். இவர்
மூலமாக நிச்சயமாக சொத்தும் கிடைக்கும் என அறிகிறீர்கள். மற்றபடி
தூண்டுதலினால் வேலை நடக்காது. நாங்கள் உங்களின் தூண்டு தலினால்
படித்து விடுவோம் என்று ஆசிரியரிடம் கூற முடியாது.
தூண்டுதலினால் அனைத்தும் நடக்கின்றது என்றால் சிவ ஜெயந்தி ஏன்
கொண்டாடப்படுகின்றது. தூண்டுதலினால் செய்யக் கூடியவருக்கு
சிவஜெயந்தி கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை. அனைத்து ஆத்மாக்
களுக்கும் ஜெயந்தி இருக் கின்றது. ஆத்மாக்கள் அனைத்தும் உடலில்
வருகின்றது. ஆத்மாவும் உடலும் ஒன்றாக இருக்கும் பொழுது நடிப்பை
நடிக்கின்றது. ஆத்மாவின் சுய தர்மமே அமைதியாகும். அதில் தான்
ஞானம் தாரணை ஆகின்றது. ஆத்மா தான் நல்ல கெட்ட சம்ஸ்காரங்களை
எடுத்துச் செல்கிறது. பாபா சொர்க்கத்தைப் படைப்பவர் ஆவார்.
அங்கே தூய்மை தான் இருக்கின்றது. அசுத்தத்தின் பெயர் அடையாளம்
இல்லை. இது விஷக்கடல் ஆகும். எவ்வளவு தெளிவாகப் புரிய
வைத்தாலும் புரிய வில்லை. ஆனால் நீங்கள் யாரையும் குற்றம்
சொல்வ தில்லை. நாடகத்தில் அனைவரும் கட்டுப்பட்டு இருக்கின்றனர்.
ஏணிப்படியில் மேலிருந்து கீழே இறங்கி வந்துவிட்டோம் என புரிந்து
கொள்கிறீர்கள். நாடகத்தின் படி நாம் இறங்கத்தான் வேண்டும்.
பிறகு இப்போது ஏறுவதற்கு முயற்சி செய்யுங் கள் என பாபா
கூறுகின்றார். ஆனால் யாருடைய அதிர்ஷ்டத்தில் இல்லையோ அவர்கள்
இவ்வாறு கூறகின்றார்கள். யார் இவ்வாறு கூறுகின்றார்களோ அவர்கள்
மூலம் இவர்கள் அதிர்ஷ்டத்தில் இல்லை என்று புரிந்து
கொள்ளப்படுகிறது. 2-4 வருடங்கள் போகப் போக விழுந்து
விடுகிறார்கள். நாம் பெரிய தவறு செய்து விட்டோம் என்று
உணருகின்றார்கள். பெரிய அடி பட்டு விட்டது. இது கூட அரை
கல்பத்தின் நோயாகும். குறைந்தது இல்லை. அரை கல்பத்தில்
நேயாளிகளாக இருக்கின்றனர். போகியானதால் நோயாளி ஆகிவிட்டனர்.
எனவே பாபா வந்து முயற்சி செய்விக்கிறார். கிருஷ்ணரை யோகேஷ்வர்
என்கின்றார்கள். இச்சமயம் நீங்களே உண்மையிலும் உண்மையான யோகி.
யோகேஷ்வர் உங்களுக்கு யோகத்தை கற்பிக் கின்றார். நீங்கள் ஞான
ஞானேஷ்வர், பிறகு இராஜ இராஜேஸ்வர் ஆகிறீர்கள். ஞானத்தினால்
நீங்கள் செல்வந்தராக ஆகிறீர்கள். யோகத்தினால் நோயற்றவராக சதா
ஆரோக்கியமானவராக ஆகிறீர்கள். அரைக்கல்பத்திற்கு உங்களுடைய
துக்கமும் விலகிப் போகின்றது என்றால் அதற்காக எவ்வளவு முயற்சி
செய்ய வேண்டும். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு
நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. தூய்மையாவதற்கு அசரீரி ஆகும் பயிற்சி செய்ய வேண்டும். ஒரு
தந்தையை நினையுங்கள். தேகம் உட்பட அனைத்தையும் மறந்து விடுங்கள்
என்ற செய்தியை அனைவருக்கும் கொடுக்க வேண்டும்.
2. யோகேஷ்வர் பாபாவிடம் யோகத்தைக் கற்றுக் கொண்டு உண்மையிலும்
உண்மையான யோகி ஆக வேண்டும். ஞானத்தினால் செல்வந்தர் மற்றும்
யோகத்தினால் நோயற்றவராக சதா ஆரோக்கியமானவராக ஆகவேண்டும்.
வரதானம்:
நிமித்தமான ஆத்மாக்கள் மூலமாக கர்மயோகியாகக் கூடிய வரதானத்தைப்
பிராப்தி செய்யக் கூடிய மாஸ்டர் வரமளிக்கும் வள்ளல் ஆகுக !
ஏதாவது ஒரு பொருளை சாகாரத்தில் பார்த்தவுடன் அதன் மீது உடனே
கவர்ச்சி ஏற்படுகிறது. அதுபோல நிமித்தமாக இருக்கக்கூடிய
சிரேஷ்ட ஆத்மாக்களின் சேவை, தியாகம், சிநேகம் அனைவருக்கும்
உதவக்கூடிய கர்மங்களைப் பார்த்து என்ன பிரேரனை கிடைக்கிறதோ அது
வரதானமாகிறது இப்பொழுது நிமித்த ஆத்மாக்களின் கர்மங்களைப்
பார்க்கும்பொழுது கூடவே குணங்களின் தாணையும் பார்த்தால் சகஜ
கர்மயோகி ஆவதற்காக வரதானம் கிடைக்கின்றது. யார் இந்த வரதானத்தை
பிராப்தி செய்கிறார்களோ அவர்களும் மாஸ்டர் வரதாதா
ஆகிவிடுகிறார்கள்.
சுலோகன்:
பெயர், புகழின் ஆதாரத்தில் சேவை செய்வது என்பது உயர்ந்த
பதவியி-ருந்து தன் பெயர் பின் தங்கி விடுவதாகும்.
அவ்யக்த இசரா : தூய்மையற்ற விதையைக் கூட முடித்துவிட்டு
சம்பூர்ண தூய்மை (பவித்ரம்) ஆகுங்கள்.
தூய்மைத்தன்மையின் அடையாளம் தூய்மை மற்றும் உண்மைத் தன்மை, முழு
நாளிலும் எழுவது, உட்காருவது, பேசுவது, ஸ்தூல சேவை சூட்சும சேவை
எதுவாக இருந்தாலும் விதிபூர்வமாக இல்லாமல், சிறிதளவு
வித்தியாசம் இருந்தாலும், அது கூட தூய்மையற்றதாகும்.
தூய்மையற்ற தன்மை என்பது, யாருக்கேனும் துக்கம் கொடுப்பது
அல்லது பாவ கர்மம் செய்வதில் மட்டும் இல்லை. தனக்குள் உண்மை
தூய்மை என்பது விதிபூர்வமாக அனுபவம் செய்வதுதான் தூய்மையாகும்.