01.05.25
இன்றைய சிந்தனைக்கு
அகநோக்கு
மெளனம் என்பது, கடினமான சூழ்நிலைகளுக்கு, தீர்வு காண ஒருவருக்கு உதவி செய்கின்றது.
சிந்திக்க வேண்டிய கருத்து:
சவாலான சூழ்நிலைகளில், சரியான தீர்வை கண்டுபிடிக்கும் முயற்சியில், அதிகமாக சிந்திக்கும் போக்கு நம்மிடம் உள்ளது. ஆனால் பெரும்பாலும், நாம் அதிகமாக சிந்திக்கும்போது, மனமானது மீண்டும் மீண்டும் ஒன்றையே சிந்திப்பதால், நாம் மேலும் தீர்வை விட்டு விலகி செல்கின்றோம்.
செயல்முறை:
உள்ளார்ந்த மெளனம் என்றால், உள்ளார்ந்த சாந்தமான நிலையை உருவாக்குவதாகும். என்னுடைய உள்ளார்ந்த மனதின் சப்தத்தை நான் கேட்கும்போது, பிரச்சனைகளிலிருந்து என்னால் விடுபட முடிவதோடு, தீர்வுகளையும் கண்டுபிடிக்க முடிகின்றது. சரியானதை செய்வதால் என்னால் நம்பிக்கையுடன் இருக்கமுடிவதுடன், செய்யப்படவேண்டியதை செய்ய, என்னுடைய திறமை, படைப்பாற்றல் மற்றும் உள்ளார்ந்த சக்தியை சிறப்பான முறையில் என்னால் பயன்படுத்த முடியும்.