04.05.25
இன்றைய சிந்தனைக்கு
உள்ளார்ந்த வலிமை
கஷ்டங்களும் சவால்களும் நம்மிடம் மறைந்திருக்கும் பொக்கிஷங்களை வெளியே கொண்டு வரும்.
சிந்திக்க வேண்டிய கருத்து:
நாம் சவால்களை சந்திக்கும்போது, சில சமயங்களில், நமக்கு போதுமான வலிமை இல்லை என்றோ அல்லது நாம் சிறப்பாக இருக்க முடியாது என்றோ நாம் உணர்கின்றோம். சவாலான சூழ்நிலையை, வளர்வதற்கும் முன்னேறுவதற்கும் ஒரு சந்தர்ப்பமாக பார்ப்பதற்கு பதிலாக, நாம் அதிகமான எதிர்மறை எண்ணங்களை அனுபவம் செய்கின்றோம்.
செயல்முறை:
என் மீது எனக்கு நம்பிக்கை இருக்கும்போது, என்னுள் மறைந்திருக்கும் பொக்கிஷங்களை எவ்வாறு பயன்படுத்துவது என நான் கற்றுக்கொள்ளும்போது, என்னால் மிகவும் நெருக்கடியான சூழ்நிலைகளிலும் வலிமையாக இருக்க முடியும். அதன்பிறகு, கஷ்டங்கள் மாறிவிடும் - என்னுடைய புதிய கண்டுபிடிக்கப்பட்ட உள்ளார்ந்த வலிமையினால், அவை கஷ்டங்களாக தோன்றுவதற்கு மாறாக, மேலும் வலிமையுடன் வளர்வதற்கு, நாம் வரவேற்கிற சந்தர்ப்பங்களாக தோன்றும்.