05.05.25
இன்றைய சிந்தனைக்கு
பொறுமை
அமைதி இருக்குமிடத்தில் பொறுமை இருக்கிறது.
சிந்திக்க வேண்டிய கருத்து:
நாம் சிந்தனை செய்வதற்கு நேரம் கொடுக்காமலோ அல்லது ஒரு சூழ்நிலையை சரியாக புரிந்துகொள்ளாமலோ, பெரும்பாலும் உணர்ச்சிவசப்படுகிறோம் அல்லது வேகமாக செயல்படுகிறோம். இப்பொறுமையின்மையினால் பெரும்பாலும், நாம் பல விஷயங்களை, நம்மை அறியாமலேயே இழந்துவிடுகின்றோம்.
செயல்முறை:
நான், குறிப்பாக கஷ்டங்களை சந்திக்கும்போது, என்னுடைய மனதை அமைதியாக வைத்திருப்பதற்கு உணர்வுபூர்வமாக முயற்சி செய்வது அவசியம். அப்படிப்பட்ட மனநிலை, பொறுமை என்ற போஷாக்கை அளிக்கின்றது: அமைதி சக்தியை உருவாக்குகிறது, இது பொறுமையை கொண்டுவருகிறது.