07.05.25
இன்றைய சிந்தனைக்கு
மனஉறுதி
மனஉறுதி, கஷ்டங்கள் உருவாக்கும் தடைகளை உடைக்கின்றது.
சிந்திக்க வேண்டிய கருத்து:
நம்முடைய வழியை தடுத்து, வாழ்க்கையில் நாம் முன்னேறுவதை நிறுத்தும் தடைகளை நம்மால் தவிர்க்க முடியாது. நம்மிடம் மனஉறுதி இல்லாதபோது, நாம் இத்தடைகளுக்கு பின்னால் அகப்பட்டுகொள்வதோடு, வாழ்க்கையில் ஆர்வத்தையும், அனைத்து சந்தர்ப்பங்களையும் நாம் இழந்துவிடுவதை நம்மால் காண முடிகின்றது.
செயல்முறை:
எப்பொழுதெல்லாம், தடைகள் தோன்றுகின்றதோ அப்போது, அவற்றை சவாலாக ஏற்றுக்கொண்டு, முன்னோக்கி செல்வதற்கான ஒரு வழியாக பயன்படுத்த முடியும் என்பதை எனக்கு நானே நினைவூட்டி கொள்வது அவசியம். இவ்வாறு செய்யும்போது, தடைகளை வெற்றிகொள்வதற்கு தேவையான மனஉறுதி எனக்கு கிடைக்கிறது.