21.10.25

இன்றைய சிந்தனைக்கு......

ஒவ்வொரு அடியிலும் கொடுப்பர் ஒர் கொடையாளி ஆவார், அதன்மூலம் அவரின் சொந்த இருப்பு அதிகரிக்கிறது.

சிந்திக்க வேண்டிய கருத்து: பொதுவாக கொடையாளர்களாக இருப்பது மிகவும் கடினமாக இருப்பதாக தெரிகின்றது – நம்மிடம் இருக்கும் ஆதாரங்களிலிருந்து கொடுக்க வேண்டும். பெரும்பாலும் நம் மனதில் தோன்றும் எண்ணமானது  நம்மால் கொடுக்க முடியாது, ஏனென்றால் நாமே முழுமையாக இல்லை அல்லது நிரம்பியவராக இல்லை. நாம் தொடர்ந்து நம்மை நிரப்பிகொள்ள முயற்சி செய்வதை காண்கின்றோம், மேலும்  நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்குக் கொடுக்க நம்மிடம் நேரம் அல்லது எண்ணம் இல்லை.

தீர்வு: நம்மால் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு கொடுப்பதற்கு நம்முடைய நற்பண்புகள், நம் சிறப்புகள் போன்ற அநேக பொக்கிஷங்கள்  இருக்கின்றன. இவற்றை  நம்மால் கொடுக்க முடியும். நம்மிடம் வெகு குறைவாகவே இருந்தபோதிலும் ஒரு சிறிதை மற்றவர்களுக்கு கொடுப்பதனால் நாம் பயனடைதை நாம் காண்கின்றோம். நம்மிடம் இருப்பனவற்றிலிருந்து நாம் கொடுக்கும்போது இந்த பொக்கிஷங்கள் நம்முள் அதிகரிக்க ஆரம்பிப்பதை நம்மால் காணக்கூடியதாக இருக்கின்றது.