25.11.25
இன்றைய சிந்தனைக்கு
நம்பிக்கை:
சாத்தியமானதற்கும் சாத்தியமற்றதற்கும் இடையில் உள்ள வேறுபாடு, ஒருவரின் திடமான மனதை பொறுத்து அமைகின்றது.
சிந்திக்க வேண்டிய கருத்து:
நாம் புதிதாக ஒரு காரியத்தை செய்ய ஆரம்பிக்கும்போது நம்மால் அதை செய்ய முடியும் என்று நம்புகின்றோம். ஆனால் அந்த புதிய திட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது சில நேரங்களில் நாம் நம்பிக்கையையும் தைரியத்தையும் இழந்து பாதியில் அந்த காரியத்தை விட்டுவிடும் தன்மை நம்மிடம் இருகின்றது. சிரமங்களும் சவால்களும் நம்முடைய திடமனதை தடுமாற செய்கின்றன. அதனால், நாம் சாதிக்க வேண்டியதை நாம் சாதிக்க இயலாமல் இருக்கின்றோம்.
செயல்முறை:
சாத்தியமற்ற காரியத்தை சாதிக்க எனக்கு வேண்டியதுதிடமான எண்ணம் . நான் வெற்றி பெறவேண்டும் என்பதில் திடமாக இருக்கும்போது என்னுடைய இலக்கை அடையும் வரை என் வழியில் எதுவும் குறுக்கிட நான் ஒருபோதும் அனுமதிக்காமல் நான் முன்னேறி செல்வேன். என் மீது எனக்கு நம்பிக்கை இருக்கும்போது உதவி என்னை நாடி வருவதை என்னால் பார்க்க முடியும். மேலும் புது அனுபவங்களினால் என் வாழ்க்கை செழிப்பாகிறது.