26.11.25

இன்றைய சிந்தனைக்கு

பொறுப்பு

பாரமற்று இருக்கும்போது பொறுப்பு சிறப்பான முறையில் நிறைவேற்றப்படுகின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

சில சமயங்களில், நம்முடைய பொறுப்புகள் மேன்மேலும் அதிகரிக்கும்போது, அது, எதிர்மறையான சிந்தனைக்கு வழிவகுக்கிறது. நம்முடைய பொறுப்புகளால் நாம் அதிகமான பாரத்தை உணர்வதால், நாம் அதிலிருந்து தப்பிக்க விரும்புகிறோம். பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு, அவற்றை எவ்வாறு பாரமற்று இருந்து செயல்படுத்துவது என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

செயல்முறை:

என்னுடைய பொறுப்புகள், சுமைகள் அன்று, ஆனால் பரிசுகள் என்று நான் சிந்திப்பது அவசியமாகும். நான் ஒன்றுக்காக பொறுப்பேற்பது, மற்றவர்களுடைய நன்மைக்காக நான் என்னால் முடிந்த உதவியை கவனத்துடன் சிறப்பாக செய்வதற்கு உதவி செய்கின்றது.  இந்த முயற்சியில், நான் புது திறன்களை கற்றுக்கொள்வதையும், நான் கற்பதற்கேற்ப, என்னுடைய உள்ளார்ந்த குணங்கள் வளர்வதையும் காண்கின்றேன்.  இதன் விளைவாக, நான் செய்துகொண்டிருப்பதிலிருந்து, மகிழ்ச்சியை அனுபவம் செய்வதைக் காண்பேன். இனிபொறுப்புகள் என்னை தயக்கமடைய செய்யாது; அவை என்னை வளர அனுமதிக்கிறது.