27.08.25

இன்றைய சிந்தனைக்கு......

நேர்மறைதன்மை:

நேர்மறையான எண்ணங்கள், மற்றவர்கள் வெற்றிபெற சக்திகளை வழங்குகின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் பெரும்பாலும் மற்றவர்களுக்கு உதவுவதற்கு முயற்சி செய்யும்போது, மிக அதிகமாக செய்கின்றோம். சில சமயங்களில், ஒருவருக்கு வழங்கும் சிறப்பான உதவியானது செயல்களால் அல்ல, ஆனால் எண்ணத்தின் மூலமாகும்.

செயல்முறை:

இன்று, நான் நேர்மறையான எண்ணங்களால் என்னை நிரப்பிக்கொள்வேன். இது இயற்கையாகவே நான் உதவி செய்ய விரும்புகின்ற அனைவரையும் சென்றடைகிறது. இவ்விதத்தில் நேர்மறையான அதிர்வலைகளை என் மனதின் மூலம் நான் பரப்பும்போது, நான் மற்றவர்களை அவர்களுக்கு உதவி செய்து கொள்வதற்கு உதவுகின்றேன். இதனால், அவர்கள் மற்றவர்களின் ஆதரவைச் தொடர்ந்து சார்ந்திருக்காமல் வெற்றியாளர் ஆகுவதற்கு கற்றுக்கொள்வார்கள்.