28.08.25
இன்றைய சிந்தனைக்கு......
இனிமை:
உண்மையை அறிந்துகொள்வதென்றால் இனிமையை அனுபவம் செய்வதாகும்.
சிந்திக்க வேண்டிய கருத்து:
எதிர்மறையாக ஏதாவது நடக்கும்போது, இந்த எதிர்மறை தன்மை நம்முடைய சிந்தனையை எதிர்மறையாக மாற்றுகிறது. நாம் சூழ்நிலையை தெளிவாக பார்ப்பதில்லை, மேலும் மோசமான சூழ்நிலைகளுக்கு பின்னால் மறைந்துள்ள நேர்மறையான அம்சங்களை நாம் பார்க்க தவறிவிடக்கூடும்.
செயல்முறை:
உண்மையை அறிந்துகொள்வதென்றால் ஒவ்வொரு செயலிலும், சொல்லிலும் அழகை வெளிப்பட வைப்பதாகும். உண்மை என்னுடைய உள்ளார்ந்த குணத்தை பாராட்ட அனுமதிக்கின்றது. எனவே, எப்படிப்பட்ட சிரமமான அல்லது சவாலான சூழ்நிலையாக இருப்பினும் கூட, நான் செய்கின்ற அனைத்திலும் இனிமையை கொண்டுவருவதற்கு எனக்கு இது உதவி செய்கின்றது.