29.08.25
இன்றைய சிந்தனைக்கு......
கருத்து பரிமாற்றம்:
மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் கலையை அறிந்தவர்களே வெற்றியாளர்கள் ஆவார்கள்.
சிந்திக்க வேண்டிய கருத்து:
ஒருவர் சரியான முறையில் நம்மிடம் நடந்து கொள்ளாதபோது, அவரை குறித்து நம்முடைய மனோபாவம், நாம் அவருக்கு பதிலளிக்கும் விதம் மற்றும் நம்முடைய நடத்தையை நாம் மாற்றிக்கொள்ளும் போக்கு நம்மிடம் உள்ளது. நம்மை நாம் மாற்றிக்கொள்வதற்கு முன்பு அடுத்தவர் மாறவேண்டும் என நாம் காத்திருக்கின்றோம். அதனால் நம்மிடமோ அல்லது அடுத்தவரிடமோ நம்மால் மாற்றத்தை காண முடியவில்லை.
செயல்முறை:
மற்றவர்களுடைய தனித்துவமான குணங்களை அறிந்துகொண்டு அவற்றுடன் தொடர்புகொள்ளும் கலையை நான் அறிந்துகொள்ளும்போது, எப்பொழுதுமே நான் வெற்றியாளராக இருப்பேன். அதன்பிறகு என்னுடைய சொந்த வளர்ச்சிக்காக நான் மற்றவர்களின் நடத்தையை சார்ந்து இருக்க மாட்டேன். ஒவ்வொருவருடைய நேர்மறையான அம்சங்களை என்னால் பார்க்க முடிவதோடு அவற்றை என்னுள்ளும் கூட அவற்றை கிரகித்துக்கொள்ள முடிகின்றது. அதன்பிறகு, ஒவ்வொரு தொடர்பிலும் நான் அனுபவத்தின் வருமானத்தை ஈட்டுகின்றேன்.