29.11.25

இன்றைய சிந்தனைக்கு

சந்தோஷம்:

கொண்டாடுவது என்றால், நிலையான சந்தோஷத்தை கொண்டிருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

விசேஷமான சமயங்களில், நாம் கொண்டாட்டத்தினுடைய ஆதிக்கத்தின் கீழ், அத்தருணங்களை ரசிக்கும் போக்கு உடையவர்களாக இருக்கின்றோம். ஆனால் நேரம் கடந்து செல்ல செல்ல, சூழ்நிலைகள் மாறிவிடுகின்றன. நாம் அதே சந்தோஷமான மனநிலையை தொடர்ந்து பராமரிக்க முடியாதவர்களாக இருக்கின்றோம் – நம்முடைய ஊக்கம் உற்சாகத்தை இழக்கின்றோம்.  அதன்பிறகு, நம்முடைய மனநிலையை மாற்றுவதற்கு, ஏதேனும் ஒன்று நடப்பதற்காக நாம் ஏங்குகின்றோம்.

செயல்முறை:

நான் சூழ்நிலையினால் பாதிக்கபட்டவராக இருப்பதைக் காட்டிலும், எஜமானராக இருப்பது அவசியம். நிகழ்காலத்தின் அழகில் நன்மையடைவது நல்லது, ஆனால் அதை சார்ந்திருக்க கூடாது.  கொண்டாட்டங்கள் எத்தகைய சந்தோஷத்தை கொண்டுவந்தாலும், நான் என்னுடைய உள்ளார்ந்த சந்தோஷத்தை பராமரிப்பது அவசியம்.  இதுவே உண்மையான கொண்டாட்டமாகும். இது ஒவ்வொரு அடியிலும் புதுமையான சந்தோஷத்தை எனக்கு கொண்டுவருகின்றது.