31.01.26

இன்றைய சிந்தனைக்கு

மரியாதை:

மரியாதை கொடுப்பது என்றால், மரியாதையை பெறுவதாகும். 

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம், பொதுவாக மற்றவர்களிடமிருந்து மரியாதையை எதிர்பார்கின்றோம். மற்றவர்கள் நம்முடையஎதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு நடந்துகொள்ளாதபோது, ஏமாற்றம்  அடையும்  மனப்போக்கு  நம்மிடம்  உள்ளது. மற்றவர்கள் நமக்கு கொடுப்பதற்கு வேறு என்ன இருக்கிறது என்பதை மட்டுமே நாம் சிந்திக்கின்றோம். ஆனால் சூழ்நிலைகள் எப்போதும் நம் எதிர்பார்புகளுக்கு ஏற்றவாறு  இருப்பதில்லை. 

செயல்முறை:

என்னுடைய ஆசைகளுக்கு ஏற்றவாறு மற்றவர்கள் மாறவேண்டும் என  எதிர்பார்ப்பதற்கு பதிலாகவும், மற்றவர்களிடமிருந்து மரியாதையை எதிர்பார்ப்பதற்கு பதிலாகவும், நான் அவர்களுக்கு  திரும்ப  மரியாதை  கொடுக்கின்றேனா என, என்னை நான் கவனிப்பது அவசியம். மற்றவர்களை, அவர்கள் உள்ளவாறே ஏற்றுக்கொண்டு மரியாதை அளிக்கும்போது, என்னுடைய மனம் மேன்மேலும் அமைதியாக இருக்கும் (வீணான மற்றும் எதிர்மறையான எண்ணங்களிலிருந்து விடுபட்டு இருக்கும்) பின்னர் மற்றவர்கள் என்னுடைய உணர்வுகளுக்கு பதிலளிப்பதோடு, எனக்கு மரியாதையும் கொடுப்பார்கள்.