01.02.26 Avyakt Bapdada Tamil Lanka Murli 15.12.2008 Om Shanti Madhuban
ஒரு தர்மமும், சட்டமும் ஒழுங்கு முறையும் உள்ள ஓர் இராச்சியம் ஸ்தாபனை ஆகும்போது, உங்களை மாற்றி, ஓர் உலகை மாற்றுபவர் ஆகுங்கள்.
இன்று, பாப்தாதா எங்கும் உள்ள தனது ராஜ்-துலாரே (இராஜரீகமான, விசேடமான அதியன்பிற்குரிய குழந்தைகள்) குழந்தைகளைப் பார்க்கிறார். கோடானுகோடிகளில் ஒரு கையளவினரே இறைவனிடம் இருந்து இந்த விசேடமான நேசத்தைப் பெறுகிறார்கள். இந்த இறை நேசத்தால், பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும் மூன்று சிம்மாசனங்களுக்கு அதிபதி ஆக்கியுள்ளார். முதலாவது, சுய இராச்சிய உரிமையுள்ள நெற்றிச் சிம்மாசனம். இரண்டாவது, பாபாவின் இதய சிம்மாசனம். மூன்றாவது, உலக இராச்சிய உரிமையுள்ள சிம்மாசனம். தந்தை இந்த மூன்று சிம்மாசனங்களையும் தனது அன்பான, துலாரே (விசேடமாக அன்புக்குரிய) குழந்தைகளுக்கு வழங்குகிறார். இந்த மூன்று சிம்மாசனங்களையும் எல்லா வேளையும் உங்களின் விழிப்புணர்வில் வைத்திருப்பதன் மூலம், ஒவ்வொரு குழந்தையும் ஆன்மீக போதையைக் கொண்டிருப்பார். எனவே, குழந்தைகளான நீங்கள் எல்லோரும் தந்தையிடம் இருந்து நீங்கள் பெற்ற ஆஸ்தியைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறீர்கள், அல்லவா? பாடல் இயல்பாகவே உங்களின் இதயத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறதுதானே? ‘ஆஹா பாபா! ஆஹா! ஆஹா எனது பாக்கியமே! ஆஹா!’ நீங்கள் ஒருபோதும் கனவுகூடக் கண்டிராதவற்றை உங்களின் நடைமுறை வாழ்க்கைகளில் பெற்றுள்ளீர்கள். இந்தச் சங்கமயுகத்தில், இந்தச் சிம்மாசனங்களுடன்கூடவே, பாப்தாதா இரட்டைக் கிரீடத்தின் மூலம் உங்களைப் பறக்கும் ஸ்திதியையும் அனுபவம் செய்ய வைத்துள்ளார். பாப்தாதா குழந்தைகள் அனைவரினதும் இரட்டைக் கிரீட ரூபத்தைப் பார்த்தார்: ஒன்று, தூய்மையின் இராஜரீகம். மற்றையது, சேவைக்கான பொறுப்புக் கிரீடம்.
இன்று, பாப்தாதா எங்கும் உள்ள குழந்தைகள் அனைவரினதும் முயற்சியின் வேகத்தைச் சோதித்தார். ஏனென்றால், உங்கள் அனைவராலும் காலத்தின் வேகத்தைப் பார்க்கக் கூடியதாகவும் அத்துடன் அறியக் கூடியதாகவும் உள்ளது. எதிர்காலத்தில் இயல்பான முறையிலும் உங்களின் சுபாவத்தின் பாகமாகவும் உள்ள உங்களின் இராச்சியம், உங்களின் எதிர்காலப் பேறுகள் மற்றும் சம்ஸ்காரங்கள் அனைத்தும் இப்போது நீண்ட காலத்திற்கு அனுபவம் செய்யப்பட வேண்டும். இது ஏனென்றால், அது ஒரு புதிய உலகம் (நயா சன்சார்). அந்தப் புதிய உலகம், உங்கள் அனைவரின் புதிய சம்ஸ்காரங்களாலும் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் புதிய உலகின் சிறப்பியல்புகளை அனுபவம் செய்கிறீர்கள்தானே? உங்களின் இராச்சியத்தில் என்ன இருக்கும் என்ற போதை உங்களுக்கு இருக்கிறதல்லவா? ‘எமது இராச்சியம், எமது புதிய உலகம் வரவுள்ளது!’ என்று உங்களின் இதயங்கள் கூறுகின்றன. எனவே, குழந்தைகளின் முயற்சி செய்யும் வாழ்க்கைகளில் எந்தளவிற்குப் புதிய உலகின் சிறப்பியல்புகள் வெளிப்பட்டுள்ளன என்பதை பாப்தாதா பார்த்தார். புதிய உலகின் புதிய சம்ஸ்காரங்கள் மற்றும் சிறப்பியல்புகள் எவை என்பதை நீங்கள் ஏற்கனவே அறிவீர்கள். புதிய உலகின் சிறப்பியல்புகள் உங்கள் அனைவரின் புத்திகளிலும் வெளிப்பட்டுள்ளன. அவற்றை நீங்கள் அறிவீர்கள்தானே? நீங்கள் அவற்றை நினைவு செய்கிறீர்கள், அத்துடன் நீங்கள் அவற்றை அறிவீர்கள். முதல் சிறப்பியல்பு - எந்தளவிற்கு ஒவ்வொரு சிறப்பியல்பும் உங்களுக்குள் வெளிப்பட்டு உள்ளது என்பதைச் சோதித்துப் பாருங்கள். ஒரே இராச்சியம் என்பதே பிரதானமான சிறப்பியல்பு ஆகும். எப்படி இயல்பாகவே அங்கே ஒரேயொரு இராச்சியம் மட்டுமே உள்ளதோ, அங்கே வேறு எந்த இராச்சியமும் இல்லையோ, அவ்வாறே, உங்களின் சங்கமயுக வாழ்க்கையிலும் ஒரேயொரு இராச்சியமே இருக்கிறதா எனப் பாருங்கள். அல்லது, சில வேளைகளில் வேறோர் இராச்சியமும் உள்ளதா? தொடர்ந்து முன்னேறும்போது, உங்களின் இராச்சியத்துடன் கூடவே, மாயையின் இராச்சியமும் உள்ளது. அப்போது ஒரு இராச்சியத்தின் சம்ஸ்காரங்கள் உங்களிடம் இருக்குமா? ஓர் இராச்சியத்தில் இருந்து, ஒரே வேளையில் இன்னோர் இராச்சியமும் ஆட்சி செய்யவில்லை, அல்லவா? இது இறைவனின் ஸ்ரீமத்தின் இராச்சியமா? அல்லது, சிலவேளைகளில் மாயையின் அடக்குமுறை உள்ளதா? உங்களின் இதயத்தில் மாயையின் இராச்சியம் இல்லையல்லவா? எனவே, இதைச் சோதித்துப் பாருங்கள். இந்த விடயங்களில் உங்களின் அட்டவணையைச் சோதித்துப் பாருங்கள். இப்போது, சங்கமயுகத்தில், இறைவனின் இராச்சியமா அல்லது மாயையின் இராச்சியமா உங்களை அடக்குகிறது? நீங்கள் இதைச் சோதித்துப் பார்த்தீர்களா? இப்போதே இதைச் சோதித்துப் பாருங்கள். நீங்கள் உங்களின் அட்டவணையைச் சோதித்தீர்கள்தானே? எனவே, இப்போதும் இரண்டு இராச்சியங்கள் இருக்குமாயின், எப்படி உங்களால் ஒரு இராச்சியத்திற்கான உரிமையைக் கோர முடியும்? மாயையின் கட்டளைகள் ஸ்ரீமத்தில் கலந்துள்ளனவா? அதேபோல், ஒரு தர்மம் உள்ளது - ஒரு இராச்சியமும் ஒரு தர்மமும் இருக்கும். தர்மம் என்றால் தாரணை என்று அர்த்தம். எனவே, உங்களின் விசேடமான தாரணை என்ன? தூய்மை என்ற தாரணை. அதனால் சோதித்துப் பாருங்கள்: தூய்மையின் சுபாவம் சதா உங்களின் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள், உறவுமுறைகள் மற்றும் தொடர்புகளில் இயல்பானதாகி விட்டதா? உங்களின் இராச்சியத்தில் இயல்பாகவே தூய்மையின் தாரணை இருப்பதைப் போல், இந்த வேளையிலும் தூய்மையின் தாரணை, இயல்பானதாகவும் உங்களின் சுபாவத்தில் ஒன்றாகவும் ஆகிவிட்டதா? உங்களின் அநாதியான ரூபமும் ஆதியான ரூபமும் தூய்மையே என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே, சோதித்துப் பாருங்கள்: உங்களின் ஒரே தர்மம், அதாவது, உங்களின் தூய்மை இயல்பானதா? நீங்கள் விரும்பாவிட்டாலும் சுபாவம் செயல்படுகிறது. சில குழந்தைகள் தமது இதயபூர்வமான உரையாடலின் போது என்ன சொல்கிறார்கள்? அவர்கள் மிக, மிக இனிய விடயங்களைக் கூறுகிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: ‘எனக்கு விருப்பம் இல்லை, ஆனால் சில வேளைகளில் எனது எண்ணங்களில் அல்லது எனது வார்த்தைகளில் தூய்மை இன்மையின் சுவடு வெளிப்பட்டு விடுகிறது’. பல பிறவிகளின் சம்ஸ்காரங்கள் இருப்பதனாலேயே இது நிகழ்கிறது. எனவே, ஒரே தர்மம் என்றால் தூய்மையின் தாரணை இயல்பானதாகவும் உங்களின் சுபாவத்தில் ஒன்றாகவும் இருக்க வேண்டும். உங்களின் வார்த்தைகளில் ஏதாவது விசை இருக்குமாயின், பின்னர் நீங்கள் கூறுகிறீர்கள்: ‘அது கோபம் இல்லை, ஆனால் நான் சிறிது வலிமையைப் பிரயோகித்து விட்டேன்’. எனவே, அந்த வலிமை என்ன? அது கோபத்தின் குழந்தை. ஆகவே, ஒரே தர்மத்தின் சம்ஸ்காரங்கள் எப்போது இயல்பானது ஆகும்? அதனால், சோதியுங்கள். சோதிப்பதுடன் கூடவே, நீங்கள் தந்தையிடம் இருந்து பெற்ற சக்திகளால் மாற்றத்தை ஏற்படுத்துங்கள். குறைந்தபட்சம் பாப்தாதா முன்கூட்டியே இதில் உங்களின் கவனத்தை ஈர்க்கிறார். நீங்கள் சோதித்துப் பின்னர் மாறுவதில் தீவிர முயற்சி செய்தால், அதில் ஓர் எல்லை காணப்படும். ஆனால், சிறிது காலத்தின் பின்னர், ‘சடுதியாக’ அல்லது ‘மிகவும் தாமதமாகி விட்டது’ என்ற அறிவிப்புப்பலகை நிச்சயமாகப் போடப்பட்டு விடும். அப்போது, பாபா உங்களை எச்சரிக்கவில்லை எனச் சொல்லாதீர்கள். இதனாலேயே, முயற்சி செய்யும் காலம் இப்போது முடிந்து விட்டது. ஆனால் இன்னமும் தீவிர முயற்சி செய்வதற்கான நேரம் உள்ளது. எனவே, சோதியுங்கள். ஆனால் வெறுமனே சோதிக்காமல், அதே வேளையில் மாற்றத்தையும் கொண்டு வாருங்கள். உங்களில் சிலர் உங்களைச் சோதிக்கிறீர்கள். ஆனால் உங்களை மாற்றிக் கொள்வதற்கான சக்தியைக் கொண்டிருப்பதில்லை. சோதிப்பதும் மாறுவதும் இரண்டுமே ஒரே நேரத்தில் இடம்பெற வேண்டும். உங்கள் எல்லோருடைய சுய மரியாதையும் புகழும் என்ன? உங்களின் பட்டம் என்ன? மாஸ்ரர் சர்வசக்திவான், சகல சக்திகளையும் கொண்ட ஒருவர். நீங்கள் சகல சக்திகளையும் கொண்ட மாஸ்ரரா அல்லது உங்களிடம் சில சக்திகள் மட்டுமே உள்ளனவா? தாங்கள் சகல சக்திகளையும் கொண்ட மாஸ்ரர்கள் எனக் கூறுபவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! அச்சா, சகல சக்திகளையும் கொண்ட மாஸ்ரர்களே, பாராட்டுக்கள்! எவ்வாறாயினும், சகல சக்திகளையும் கொண்ட மாஸ்ரர்களான உங்களால் மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை என்றால் அதை என்னவென்று சொல்வது? உங்களின் சொந்த சம்ஸ்காரங்களையும் சுபாவத்தையும் மாற்றுவதற்கு நீங்கள் விரும்பினாலும், அவற்றை மாற்ற முடியாமல் இருந்தால் அதை என்னவென்று சொல்வது? உங்களையே கேட்டுப் பாருங்கள்: நான் சில சக்திகளை மட்டும் கொண்டுள்ள மாஸ்ரரா அல்லது சகல சக்திகளையும் கொண்ட மாஸ்ரரா? சகல சக்திகளையும் கொண்டுள்ள ஒரு மாஸ்ரர், ‘நான் இதைச் செய்ய வேண்டும்’ என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தால், அது ஏற்கனவே நிறைவேறி விட்டது. ‘அது நடக்குமா? நான் அதைப் பார்ப்பேன், என்னால் அதைச் செய்ய முடியாது....’ என்ற எண்ணம் அப்போது இருக்காது. எனவே, இப்போது, காலத்திற்கு ஏற்ப, உங்களுக்கு என்ன எண்ணம் ஏற்படுகிறதோ, அந்த எண்ணமும் அந்த ரூபமாக நீங்கள் ஆகுவதும் ஒரே வேளையில் இடம்பெற வேண்டும் என்பதே பெறுபேறாக இருக்க வேண்டும்.
இப்போது, புதிய வருடமான அவ்யக்த் வருடம் வரப் போகிறது. அவ்யக்த பராமரிப்பைப் பெற்று, 40 வருடங்கள் பூர்த்தியாகப் போகின்றன. எனவே, இப்போது அவ்யக்த பராமரிப்பையும் பௌதீக ரூபத்தினூடான பராமரிப்பையும் பெற்று 72 வருடங்கள் பூர்த்தியாகின்றன. எனவே, நீங்கள் இரண்டு தந்தையர்களிடமும் இருந்து பெற்ற பராமரிப்பின் பிரதிபலனை பாப்தாதாவிற்குக் கொடுக்க மாட்டீர்களா? சிந்தித்துப் பாருங்கள்: நீங்கள் என்ன பராமரிப்பைப் பெற்றீர்கள்? நடைமுறையில் என்ன காணப்படுகிறது? இப்போதும் கவனக்குறைவும் இராஜரீகமான சோம்பேறித்தனமும் காணப்படுவதை பாப்தாதா கண்டார். ‘அது நடக்கும், நான் அப்படி ஆகுவேன், நான் அங்கு சென்றடைவேன்’ (பிற்போடும் மொழி) என்பதே இராஜரீகமான சோம்பேறித்தனம் ஆகும். ‘நான் அதைச் செய்கிறேன்’ (சாக்குப் போக்குகள் சொல்லும் மொழி) என்பதே கவனக்குறைவு ஆகும். ‘இது நடக்கவே வேண்டும், இதைச் செய்யவே வேண்டும்’. எவ்வாறாயினும், நீங்கள் சொல்வதற்கும் நீங்கள் செய்வதற்கும் இடையில் ஒரு வேறுபாடு காணப்படுகிறது. ஒரு காட்சியைப் பார்க்கும்போது பாப்தாதா தொடர்ந்து புன்னகை செய்கிறார். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? ‘குறைந்தபட்சம், இது நடக்க வேண்டும்! இதை முதலில் செய்யுங்கள், அதன்பின்னர் என்னால் மிக நன்றாக முன்னேற முடியும்!’ மற்றவர்கள் மாற வேண்டும் என்பதை விரும்பும் மனோபாவம் காணப்படுகிறது. ஆனால், சிலரில், சுய மாற்றத்திற்கான மனோபாவம் சிறிது குறைவாகவே காணப்படுகிறது. எனவே, இப்போது மற்றவர்களைப் பார்க்கும் மனோபாவத்தை மாற்றுங்கள். நீங்கள் மற்றவர்களைப் பார்க்க விரும்பினால், அவர்களின் சிறப்பியல்புகளைப் பாருங்கள். ‘இது எப்படியும் நடக்கிறது, இது எப்படியும் தொடர்கிறது, இவரும் இதையே செய்கிறார்.....’ இப்போது இந்த உணர்வைக் குறையுங்கள். உங்களைப் பாருங்கள், தந்தையை உங்களின் முன்னால் வைத்திருங்கள். யாராக இருந்தாலும், ஒருவர் மகாராத்தியோ அல்லது மத்திய நிலையில் இருப்பவரோ, அவர்களின் முயற்சிகளில் அவர்கள் அனைவரும் ஏதாவதொரு பலவீனத்தை மாற்றுகிறார்கள். ஆகவே, தந்தையைப் பாருங்கள், இரட்டைத் தந்தையர்களையும் பாருங்கள். பிரம்மா பாபாவைப் பாருங்கள், சிவபாபாவைப் பாருங்கள். தந்தை உங்களைத் தனது இதய சிம்மாசனத்தில் இருத்தி வைத்திருக்கிறார். நீங்களும் தந்தையை உங்களின் இதய சிம்மாசனத்தில் இருத்தி வைத்திருக்கிறீர்கள். உங்களின் சுலோகம், ‘தந்தையைப் பாருங்கள்’ என்பதே ஆகும். ‘சகோதரியைப் பாருங்கள், சகோதரனைப் பாருங்கள்’ என்ற சுலோகம் கிடையாது. இப்போதும், உங்கள் ஒவ்வொருவரிலும் ஏதாவதொரு பலவீனம் காணப்படுகிறது. எவ்வாறாயினும், நீங்கள் மற்றவர்களைப் பார்க்க விரும்பினால், அவர்களின் சிறப்பியல்புகளைப் பாருங்கள். அவர்கள் தங்களிடம் இருந்து நீக்குகின்ற பலவீனங்களை நீங்கள் பார்க்காதீர்கள். இரண்டாவதாக, உங்களின் இராச்சியத்தில், நீங்கள் உங்களின் இராச்சியத்தை நினைவு செய்வீர்கள்தானே? நேற்று, உங்களின் இராச்சியமாக இருந்தது, நாளை, அது உங்களின் இராச்சியமாக இருக்கும். உங்களின் இராச்சியம் தெளிவாக உங்களின் புத்தியிலும் உங்களின் கண்களிலும் பிரவேசித்துள்ளது, அல்லவா? நீங்கள் உங்களின் இராச்சியத்தை எத்தனை தடவைகள் ஆட்சி செய்தீர்கள் என்று கணக்கிட்டீர்களா? நீங்கள் எண்ணற்ற தடவைகள் ஆட்சி செய்துள்ளீர்கள். நீங்கள் அதைப் பற்றிப் பேசிய உடனேயே, அது உங்களின் முன்னால் வருகிறது. இராச்சியத்திற்கான உரிமையைக் கொண்டிருக்கும் உங்களின் ரூபமும் உங்களின் மேன்மையான இராச்சியமும். உங்களின் இராச்சியத்தில் இயல்பாகவே சட்டமும் ஒழுங்குமுறையும் செயல்படுவதைப் போல் இருக்கும். ஞானம் நிறைந்தவர்களாக இருக்கும் சம்ஸ்காரங்களை நீங்கள் அனைவரும் கொண்டிருக்கிறீர்கள். சட்டம் என்றால் என்ன, ஒழுங்குமுறை என்றால் என்னவென்பதை நீங்கள் அறிவீர்கள். அதேபோல், உங்களின் வாழ்க்கையைப் பாருங்கள்: நீங்கள் தந்தையின் கட்டளைகளின்படி செயல்படுகிறீர்களா அல்லது சிலவேளைகளில் மாயையின் கட்டளைகளின்படி நடக்கிறீர்களா? நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, சிலவேளைகளில் மற்றவர்களின் கட்டளைகளையும் உங்களின் சொந்த மனதின் கட்டளைகளையும் பின்பற்றுகிறீர்களா? எனவே, சட்டம் என்ன? கவலையற்ற சக்கரவர்த்தியாக இருப்பதே சட்டம் ஆகும். உங்களுக்குக் கவலைகள் கிடையாது, ஏனென்றால், உங்களிடம் சகல பேறுகளும் உள்ளன. அதேபோல், தந்தை உங்களுக்கு வழங்கிய சகல பேறுகளும் உங்களிடம் உள்ளனவா என உங்களின் சங்கமயுக மேன்மையான வாழ்க்கையைச் சோதித்துப் பாருங்கள். அவை இறைவனிடம் இருந்து பெற்ற பிரசாதத்தைப் (இறைவனுக்குப் படைக்கப்பட்ட புனிதமான தூய உணவு) போன்றவை. பிரசாதத்திற்கு அதிகளவு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. எனவே, தந்தையிடம் இருந்து சகல பேறுகளையும் பிரபு பிரசாதமாகப் பெற்றுள்ளீர்கள். பிரபு பிரசாதத்திற்கு முக்கியத்துவம் உள்ளது. அது ஓர் ஆஸ்தி, ஓர் உரிமை, அத்துடன் பிரசாதம். எனவே, சோதித்துப் பாருங்கள்: நான் சட்டம், ஒழுங்குமுறை இரண்டினாலும் நிரம்பி இருக்கிறேனா?
உங்களில் பெரும்பாலானோர் மாற்றத்திற்கான சக்தியைப் பெற்றுள்ளதை பாப்தாதா கண்டார். அந்த சக்தியைச் சரியான வேளையில் பயன்படுத்தினால், எந்தவிதமான முயற்சியும் இல்லை. பாருங்கள், உங்கள் எல்லோருக்கும் இந்த அனுபவம் உள்ளது. உங்களில் எவராவது எந்த முறையிலாவது மாயையால் தோற்கடிக்கப்பட்டால், நீங்கள் எல்லோரும் உங்களின் உரைகளிலும் அத்துடன் நீங்கள் நடத்தும் வகுப்புகளிலும் இந்த இரண்டு வார்த்தைகள், உங்களை விழவும் செய்யக்கூடும், அவை உங்களை ஏறவும் செய்யக்கூடும் எனக் கூறுகிறீர்கள். உங்களுக்கு இந்த இரண்டு வார்த்தைகளைப் பற்றியும் தெரியும். அவை அனைவரின் மனதிலும் பிரவேசித்துள்ளது. இந்த இரண்டு வார்த்தைகளும், ‘நான்’ மற்றும் ‘எனது’ என்பவையே ஆகும். நீங்கள் உங்களின் உரைகளிலும் இதைக் கூறுகிறீர்கள், நீங்கள் அவற்றைப் பற்றி வகுப்புக்களும் எடுக்கிறீர்கள். பாப்தாதா அந்த வகுப்புக்களைப் பற்றிக் கேள்விப்படுகிறார். நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? இப்போது, மாற்றத்தின் சக்தியால், நீங்கள் இந்த இரண்டு வார்த்தைகளைப் பயன்படுத்தும் போதெல்லாம், ‘நான், இன்னார்’ அல்லது ‘நான் ஒரு பிராமணன்’ எனக் கூறும்போது, நான் யார்? பாப்தாதா உங்களுக்குப் பல சுயமரியாதைப் பட்டங்களை வழங்கி உள்ளார். ‘நான்’ என்ற வார்த்தையை நீங்கள் பயன்படுத்தும் போதெல்லாம், அதனுடன் சேர்த்து ஏதாவதொரு ஒரு சுயமரியாதைப் பட்டத்தையும் கூறுங்கள், அதாவது, அதை உங்களின் புத்தியில் கொண்டு வாருங்கள். ‘நான்’ என்ற வார்த்தையை நீங்கள் கூறிய உடனேயே, உங்களின் சுய மரியாதையையும் நீங்கள் நினைவு செய்கிறீர்கள். ‘எனது’ என்பதை நீங்கள் கூறும்போது, நீங்கள் பாபாவை நினைவு செய்கிறீர்கள்: எனது பாபா. இது உங்களின் இயல்பான விழிப்புணர்வு ஆகவேண்டும். இந்த மாற்றத்தை ஏற்படுத்துங்கள். இரண்டாவதாக, பொதுவாக, உங்களுக்கு மற்றவர்களுடன் ஓர் உறவுமுறை அல்லது தொடர்பு இருக்கும்போது, மாயை இரண்டு வார்த்தைகளுடன் பிரவேசிக்கிறாள்: ஒன்று, நோக்கம் (பாவ்), மற்றையது, உணர்வு (பாவனா - தூய உணர்வுகள்/நல்லாசிகள்). நீங்கள் ‘பாவ்’ என்ற வார்த்தையைப் பற்றிப் பேசும்போது அல்லது சிந்திக்கும்போது, ஆன்மீக நோக்கத்தை நினைவு செய்யுங்கள். நீங்கள் ‘பாவ்’ என்ற வார்த்தையை கூறிய உடனேயே, ஆன்மீக நோக்கத்தை நினைவு செய்யுங்கள். நீங்கள் ‘பாவனா’ எனக் கூறும்போது, தூய உணர்வுகளை நினைவு செய்யுங்கள். வார்த்தைகளின் அர்த்தத்தை மாற்றுங்கள். உங்களின் பட்டம் என்ன? உலகை மாற்றுபவர்கள். உலகை மாற்றுபவர்களால் இந்த வார்த்தைகளை மாற்ற முடியாதா? எனவே, மாற்றத்திற்கான சக்தியைச் சரியான வேளையில் பயன்படுத்துவதன் மூலம் இதை முயற்சி செய்து பாருங்கள். அது பின்னரே வருகிறது. அந்தச் சூழ்நிலை கடந்து சென்ற பின்னர், உங்களின் மனம் அதை விரும்பாதபோது, உங்களின் மனம் அதைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பிக்கிறது. எவ்வாறாயினும், அப்போது காலம் கடந்து சென்றுவிடும், அப்படித்தானே? இதனாலேயே, இப்போது துரித கதிக்கான தேவை உள்ளது, சிலவேளைகளுக்கு மட்டுமல்ல. நீங்கள் பெரும்பாலான நேரங்களில் நன்றாக இருக்கிறீர்கள் என்று நினைக்காதீர்கள். ஏனென்றால், இறுதிக் கணங்களுக்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை என்று பாப்தாதா ஏற்கனவே கூறியுள்ளார். ‘சடுதியாக’ என்ற விளையாட்டு ஏற்படப்போகிறது. சில குழந்தைகள் தந்தைக்கும் மிக இனிமையான விடயங்களைக் கூறுகிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: ‘காலம் சிறிது அதிகமாக உச்சக்கட்டத்தை அடையும்போது, எப்படியும் விருப்பமின்மை இருக்கும். எனவே, விருப்பமின்மைக்குரிய வேளையில், எனது வேகம் தானாகவே துரிதமாகும்’. எவ்வாறாயினும், நீங்கள் நீண்ட காலத்திற்கு முயற்சி செய்ய வேண்டியது அவசியம் என்று பாப்தாதா ஏற்கனவே கூறியுள்ளார். முயற்சி குறுகிய காலத்திற்காக இருந்தால், நீங்கள் பெறுகின்ற வெகுமதியும் குறுகிய காலத்திற்கே இருக்கும். நீங்கள் முழுமையாக 21 பிறவிகளுக்கான வெகுமதியை உருவாக்க மாட்டீர்கள். சதா இந்த மூன்று வார்த்தைகளை நினைவு செய்யுங்கள்: சடுதியாக, என்றும் தயார் மற்றும் நீண்ட காலப்பகுதிக்கு. இந்த மூன்று வார்த்தைகளை உங்களின் புத்தியில் எல்லா வேளைக்கும் வைத்திருங்கள். எவருடைய இறுதிக் கணமும் எந்த இடத்திலும் எந்த வேளையிலும் இடம்பெறலாம். இப்போதும், எத்தனை பிராமணர்கள் சரீரத்தை விட்டுச் செல்கிறார்கள் என்பதை உங்களால் காணக்கூடியதாக உள்ளது. அவர்களுக்குத் தெரிந்திருந்ததா? இதனாலேயே, நீங்கள் நிச்சயமாக நீண்ட காலத்திற்கு முயற்சி செய்வதன் மூலம் முழுமையான 21 பிறவிகளுக்கான ஆஸ்தியைக் கோர வேண்டும். நீங்கள் என்ன நினைத்தீர்கள்? நீங்கள் முதல் பிறவியில் வரவேண்டும், அப்படித்தானே? எதில் மகிழ்ச்சி ஏற்படும்? முதல் பிறவியிலா அல்லது எந்தவொரு பிறவியிலுமா? ஸ்ரீ கிருஷ்ணருடன் முதல் பிறவியில் அவர்களின் இராச்சியத்தில் ஒரு பாகத்தைத் தாமும் கொண்டிருக்க வேண்டும் என்று உணர்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! (அனைவரும் தமது கைகளை உயர்த்தினார்கள்). அச்சா. முதல் பிறவியில் ஒரு பாகமா? சகல கரங்களையும் பார்க்கும்போது, பாபா மகிழ்ச்சி அடைகிறார். நீங்கள் கைதட்டலாம். முதல் பிறவியில் வருவதற்குப் பாராட்டுக்கள்! எவ்வாறாயினும்.... பாபா உங்களுக்குச் சொல்லட்டுமா? அவர் சொல்லக்கூடாது, இல்லையா? நீங்கள் முதலில் வரவேண்டும். எனவே, பாபா ஏன் உங்களுக்கு ஏனைய விடயங்களைக் கூற வேண்டும்? இது நல்லது. வந்திருக்கும் நீங்கள் அனைவரும் முதல் பிறவியில் வரவேண்டும். நீங்கள் முதல் பிறவிக்கும் முதல் ஸ்திதிக்கும் கைதட்டி உள்ளீர்கள். எனவே, நீங்கள் நிச்சயமாக முதல் ஸ்திதியை உருவாக்க வேண்டும். நீங்கள் வேகமாகச் செல்ல வேண்டும் என்ற திடசங்கற்பமான எண்ணத்தைக் கொண்டிருப்பவர்கள். என்னதான் தடைகள் வந்தாலும், தடைகள் தடைகளாகவே இருக்கக்கூடாது. தடைகளை அழிப்பவர்களின் முன்னால், அவை தமது வெற்றி ரூபத்தை மாற்ற வேண்டும், ஏனென்றால், நீங்கள் அனைவருமே தடைகளை அழிப்பவர்கள் ஆவீர்கள். உங்களின் பட்டம் என்ன? தடைகளை அழிப்பவர்கள். எனவே, அவை வந்தாலும், விளையாட்டுக்களை விளையாடவே வரும். ஆனால் நீங்கள் அதைத் தொலைவில் இருந்தே இனங்காண வேண்டும். அவை இராஜரீகமான ரூபத்தில் வரும். ஆனால், தடைகளை அழிப்பவர்களான நீங்கள், தொலைவில் இருந்தே அவை என்ன விளையாட்டுக்களை விளையாடுகின்றன என்பதை அறிந்து கொள்வீர்கள். இதனாலேயே, குழந்தைகளான நீங்கள் அனைவரும் ஒன்றாகவே திரும்பிச் செல்ல வேண்டும் என்று பாப்தாதாவும் விரும்புகிறார். உங்களில் எவரும் பின்தங்கக்கூடாது. குழந்தைகள் இல்லாமல் பாப்தாதாவாலும் இரசிக்க முடியாது. எனவே, உங்களின் திடசங்கற்பம் ஒருபோதும் பலவீனம் அடைய அனுமதிக்காதீர்கள். நீங்கள் இதைச் செய்ய வேண்டும். ‘கே, கே (நான் அதை ஏதாவதொரு வேளையில் செய்வேன்), நான் அதைச் செய்வேன், நான் அதைப் பார்ப்பேன், அது நடக்கும், பொறுத்திருந்து பாருங்கள்’ என்ற மொழியைப் பயன்படுத்தாதீர்கள். இவ்வாறு கூறாதீர்கள். திடசங்கற்பமே, வெற்றிக்கான திறவுகோல் ஆகும். ஒருபோதும் இந்தச் சாவியைத் தொலைக்காதீர்கள். மாயையும் கெட்டிக்காரி, அப்படித்தானே? அவள் சாவியைக் கண்டுபிடித்து விடுகிறாள். அதனால், நீங்கள் இந்தச் சாவியை மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நீங்கள் நினைத்த உடனேயே எதையாவது பயிற்சி செய்கின்ற திடசங்கற்பத்தைக் கொண்டிருக்கும் எங்கும் உள்ள அதிர்ஷ்டகரமான, அன்பான குழந்தைகள் அனைவருக்கும், ‘நான் அதைச் செய்வேன், நான் அதைப் பார்ப்பேன்’ என்று நீங்கள் கூறுவதில்லை, ஆனால் அதைப் பற்றிச் சிந்தித்த உடனேயே அதைச் செய்கிறீர்கள். சதா பற்றை அழித்தவர்களாக இருப்பவர்களுக்கு - அவர்கள் தமது உறவுமுறைகளில் மட்டும் பற்றில் இருந்து விடுபட்டவர்களாக இல்லை. ஆனால், அவர்களிடம் சரீரத்தைப் பற்றிய உணர்வில் அல்லது சரீர அகங்காரத்தில் எந்தவிதமான பற்றும் கிடையாது. பற்றை அழித்தவர்களாகவும் என்றும் தயாராகவும் இருக்கும் இத்தகைய குழந்தைகளுக்கு, சதா தமது கரத்தைத் தந்தையின் ஸ்ரீமத் என்ற கரத்தில் வைத்திருப்பவர்களுக்கு, தந்தையுடன் திரும்பிப் பறந்து சென்று, தந்தை பிரம்மாவுடன் தமது இராச்சியத்திற்குள் செல்பவர்களுக்கும், பறக்கும் ஸ்திதியைக் கொண்டுள்ள இத்தகைய வேகமான முயற்சி செய்யும் குழந்தைகளுக்கும், தயவு செய்து பாப்தாதாவிடம் இருந்து அதிக, அதிக ஆசீர்வாதங்களையும் அன்பையும் நினைவுகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள். மாஸ்ரர்களாக இருக்கும் குழந்தைகளுக்கு நமஸ்தே.
ஆசீர்வாதம்:
நீங்கள் பற்றை வென்றவர்களாகி, உங்களின் மாற்றத்திற்கான சக்தியால் அனைவரிடம் இருந்தும் நன்றிகளைப் பெற்றுக் கொள்வதற்குத் தகுதியானவர் ஆகுவீர்களாக.யாராவது உங்களை இகழ்ந்தால், ஒரு விநாடியில் அந்த இகழ்ச்சியை ஈடேற்றமாக மாற்றிக் கொள்ளுங்கள். யாராவது உங்களின் முன்னால் தனது சம்ஸ்காரங்களை அல்லது சுபாவத்தைப் பரீட்சிக்க வந்தால், ஒரேயொருவரின் விழிப்புணர்வைக் கொண்டிருப்பதன் மூலம், உங்களின் மேன்மையான சம்ஸ்காரங்களையும் கருணைநிறைந்த இதயத்தின் சுபாவத்தையும் ஏற்றுக் கொள்ளுங்கள். யாராவது உங்களின் முன்னால் சரீரப் பார்வையுடன் வந்தால், அந்தப் பார்வையை ஆத்ம உணர்வுப் பார்வையாக மாற்றுங்கள். இந்த முறையில் நீங்கள் மாற்றுகின்ற கலையைக் கற்றுக் கொண்டால், நீங்கள் தடைகளை வென்றவர் ஆகுவீர்கள். உங்களுடன் தொடர்பில் உள்ள ஆத்மாக்கள் அனைவரும் அப்போது உங்களுக்கு நன்றி சொல்வார்கள்.
சுலோகம்:
அனுபவ சொரூபம் ஆகுங்கள். சந்தோஷப் பாக்கியத்தின் பிரகாசம் உங்களின் முகத்தில் புலப்படும்.அவ்யக்த சமிக்கை: ஒற்றுமை மற்றும் நம்பிக்கை என்ற சிறப்பியல்புடன் வெற்றி நிறைந்தவர் ஆகுங்கள்.
பல நாடுகளும் பல மொழிகளும் பல ரூபங்களும் நிறங்களும் இருக்கும் வேளையில், ஒவ்வொருவரின் இதயத்திலும் ஒற்றுமை புலப்பட வேண்டும். ஏனென்றால், அனைவரும் ஒரேயொரு தந்தையின் குழந்தைகள் ஆவார்கள். அனைத்துமே ஒரே மரத்தின் கிளைகளே. அனைவரும் ஒரேயொருவரின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுகிறார்கள். வேறுபாடுகளிலும் ஒற்றுமையைக் காட்டுதல், பாழாகிப் போனதை சீர்திருத்துதல், வேற்றுமையிலும் ஒற்றுமையை ஏற்படுத்துதல் என்பதே மிகப்பெரிய சேவை ஆகும். இது ஓர் அற்புதம், அத்துடன் வெற்றிக்கான அடிப்படை ஆகும்.