01.03.26 Avyakt Bapdada Tamil Lanka Murli 09.03.2009 Om Shanti Madhuban
இறைவனின் சகவாசத்தால் நிறமூட்டப்பட்டு, ஒன்றிணைந்த ரூபத்துடன் உண்மையான ஹோலியைக் கொண்டாடுங்கள்.
இன்று, அதிபுனிதமான தந்தை, தனது புனிதமான குழந்தைகளுடன் ஹோலியைக் கொண்டாட வந்துள்ளார். குழந்தைகளான நீங்கள் அனைவரும் புனிதமான குழந்தைகள் ஆவீர்கள். நீங்கள் அனைவரும் ஹோலியைக் கொண்டாடவே வந்துள்ளீர்கள். நீங்கள் புனிதமானவர்கள் ஆகுவதற்காக புனித ஆத்மாக்களான நீங்கள் எந்த நிறத்தால் நிறமூட்டப்படுகிறீர்கள் எனச் சிந்தித்துப் பாருங்கள். பல நிறங்கள் உள்ளன. ஆனால், நீங்கள் எந்த நிறத்தால் நிறமூட்டப்பட்டுள்ளீர்கள்? உங்களைப் புனிதம் ஆக்கிய அதி மேன்மையான நிறம் என்ன? அனைத்திலும் மகத்தான நிறம், இறை சகவாசம் என்ற நிறமாகும். நீங்கள் இறை சகவாசம் என்ற நிறத்தால் நிறமூட்டப்படுவதன் மூலம் இலகுவாகப் புனிதமானவர்கள் ஆகியுள்ளீர்கள். ஏனென்றால், இறை நிறமே, அழியாத சகவாசத்தின் நிறம் ஆகும். ஏனைய நிறங்கள் குறுகிய காலத்திற்கு மட்டுமே. ஆனால், இறை சகவாசம் என்ற நிறத்தால் நிறமூட்டப்படுவதன் மூலம் நீங்கள் இலகுவாக புனிதமானவர்கள், அதாவது, தூய்மையானவர்கள் ஆகுகிறீர்கள். ஆத்மாக்களான உங்களின் நிறம், தூய்மை அற்றதில் இருந்து தூய்மை ஆகியுள்ளது. ஏனென்றால், நீங்கள் அனைவரும் இறைவனை உங்களின் சகபாடி ஆக்கியுள்ளீர்கள். நீங்கள் அவரின் சகவாசத்தைத் தேடினீர்கள். இவ்வாறே நீங்கள் ஒன்றிணைந்தவர்கள் ஆகுகிறீர்கள். நீங்கள் இந்த ஒன்றிணைந்த ரூபத்தை விரும்புகிறீர்கள், அல்லவா? இந்த ஒன்றிணைந்த ரூபத்தை ஒருபோதும் பிரிக்க முடியாது. உங்களுக்கு இந்த அனுபவம் உள்ளதல்லவா? நீங்கள் சதா ஒன்றிணைந்து இருக்கிறீர்கள், அல்லவா? தனியே அல்ல. மாயை உங்களைத் தனிமைப்படுத்த முயற்சி செய்வாள். ஆனால், சதா ஒன்றிணைந்து இருப்பவர்களால் ஒருபோதும் பிரிந்திருக்க முடியாது. மாயை உங்களைத் தனிமைப்படுத்துகிறாள். பின்னர் உங்களின் பழைய சம்ஸ்காரங்களை வெளிப்படச் செய்கிறாள். பின்னர் பழைய சம்ஸ்காரங்கள் வெளிப்பட்டதும், தூய சம்ஸ்காரங்கள் அமிழ்ந்து போகின்றன. கவனயீனமும் சோம்பேறித்தனமுமே பழைய சம்ஸ்காரங்கள் ஆகும். இவை பல்வேறு ரூபங்களில் வெளிப்படும்போது, ஒன்றிணைந்த ரூபம் பிரிந்து போகின்றது. எனவே, நீங்கள் ஒவ்வொருவரும், சதா ஒன்றிணைந்து இருக்கிறீர்களா அல்லது பிரிந்து போகின்றீர்களா என உங்களையே சோதித்துப் பார்க்க வேண்டும். மாயையின் பல்வகை ரூபங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியும், அல்லவா? அவள் கெட்டித்தனமாக உங்களைத் தனது நிறத்தால் நிறமூட்டுகிறாள். பிரிந்து இருப்பது என்றால், மாயையின் நிறத்தால் நிறமூட்டப்படுவதாகும். கவனயீனம் மற்றும் சோம்பேறித்தனத்தின் இந்த விடயங்கள் பல்வகை வடிவங்களில் வருகின்றன. இராவணனின் பொக்கிஷங்களான, உங்களின் கவனயீனம் மற்றும் சோம்பேறித்தனத்தின் ஊடாக, மாயை உங்களைத் தன்னை நோக்கி ஈர்த்துக் கொள்கிறாள். அவை தந்தையின் பொக்கிஷங்கள் அல்ல. ஆனால் குழந்தைகள் இராவணனின் பொக்கிஷங்களை மிகுந்த போதையுடன் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள்: ‘நான் அதை விரும்பவில்லை, ஆனாலும் அதுதான் எனது சம்ஸ்காரம்’. அவை தமது சம்ஸ்காரங்கள் என அவர்கள் சொல்ல ஆரம்பிக்கிறார்கள். இவை இறை சம்ஸ்காரங்களா? அல்லது, அவை இராவணனின் சம்ஸ்காரங்களா? இதைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்: அவை உங்களின் சம்ஸ்காரங்கள் என்று சொல்வது சரியாகுமா? அவற்றை உங்களுடையவை ஆக்குவது, மாயையின் கெட்டித்தனம். தந்தையின் பொக்கிஷங்கள் அழகானவையா அல்லது ராவணனின் பொக்கிஷங்கள் அழகானவையா? பொதுவான முறையில், தங்களை விடுவிப்பதற்காகச் சில குழந்தைகள், ‘எனது சம்ஸ்காரங்கள் அப்படிப்பட்டவை, நான் அதைச் செய்ய விரும்பவில்லை’ எனக் கூறுகிறார்கள். அவை என்னுடையவையா? எனச் சிந்தித்துப் பாருங்கள். இராவணனின் பொக்கிஷங்களை உங்களுடையவை ஆக்கிக் கொள்வதன் மூலம், உங்களின் சம்ஸ்காரங்களும் படிப்படியாக முடிவடைகின்றன எனத் தந்தை கூறுகிறார்: இறை சகவாசத்தின் நிறம், மங்க ஆரம்பிக்கிறது. மாயையின் நிறம் வெளிப்பட ஆரம்பிக்கிறது. எனவே, தொடர்ந்து முன்னேறும்போது, நீங்கள் என்ன நிறத்தால் நிறமூட்டப்பட்டுள்ளீர்கள் என உங்களையே சோதித்துப் பாருங்கள். ஹோலியில் மக்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் முதலில் பழுதடைந்தவற்றை எரிக்கிறார்கள். பின்னர், ஒருவருக்கொருவர் நிறத்தைப் பூசுகிறார்கள். அவர்கள் கொண்டாடுகிறார்கள். பாப்தாதா தனது சகவாசம் எனும் நிறத்தால் உங்களை நிறமூட்டி உள்ளார். அத்துடன் கூடவே, அவர் தொடர்ந்து இந்த ஞானம், சக்திகள், நற்குணங்கள் என்ற நிறங்களால் உங்களை நிறமூட்டுகிறார்.
எனவே, நீங்கள் அனைவரும் இந்த ஆன்மீக நிறத்தால் நிறமூட்டப்பட்டுள்ளீர்கள், அல்லவா? உங்களின் கைகளை உயர்த்துங்கள்! நீங்கள் ஆன்மீக நிறத்தால் நிறமூட்டப்பட்டுள்ளீர்கள். அது ஒருபோதும் மங்காது, அல்லவா? இந்த அழியாத, ஆன்மீக நிறத்தால் நிறமூட்டப்பட்டவர்கள், வேறு எந்த நிறத்தாலும் நிறமூட்டப்பட முடியாது. நீங்கள் இந்த நிறத்தால் எவ்வளவிற்குப் புனிதம் ஆகியுள்ளீர்கள்? கல்பம் முழவதிலும் வேறு எவருமே உங்களைப் போல் புனிதமாகவோ அல்லது தூய்மையாகவோ ஆக முடியாதபடி, நீங்கள் மிகவும் புனிதமானவர்கள் ஆகியுள்ளீர்கள். உங்களின் தூய்மை, இறை சகவாசத்தின் நிறம், இறைவனுடன் ஒன்றிணைந்து உள்ள அனுபவம் என்பவை, அதி அழகானவையும் தனித்துவமானவையும் ஆகும். மற்றவர்களுக்கு, ஆத்மாக்கள் தூய்மை ஆகினாலும், அவர்களின் சரீரங்கள் தூய்மை ஆகுவதில்லை. ஆனால், ஆத்மாக்களான நீங்களும் உங்களின் சரீரங்களும் தூய்மை ஆகும்படி நீங்கள் அதி புனிதமாகவும் தூய்மையாகவும் ஆகுகின்றீர்கள். சந்தோஷம், அமைதி, அன்பு, ஆனந்தம் என்பவற்றின் தாய், தூய்மை எனப்படுகிறது. எங்கு தூய்மை உள்ளதோ, அதனுடன் சந்தோஷமும் அமைதியும் கூடவே இருக்கும். ஏனென்றால், தாய் எங்கே இருப்பாரோ, அங்கேதான் குழந்தைகளும் இருப்பார்கள். தந்தை வந்து உங்களை அதிபுனிதமாக எப்படி ஆக்குகிறார் என்றால், கலியுகத்தின் இந்தக் கடைசிப் பிறவியிலும் உங்களால் உங்களின் விக்கிரகங்களைப் பார்க்க முடிகிறது: அவை ஒழுங்குமுறையாகப் பூஜிக்கப்படுகின்றன. இதுவே தூய்மையின் சிறப்பியல்பு. எத்தனை மகாத்மாக்களும் மதரீதியான ஆத்மாக்களும் எவ்வளவுதான் தூய்மை ஆகினாலும், அவர்களில் எவருக்கும் ஆலயங்கள் கட்டப்படவில்லை. வேறு எவரும் இத்தகைய ஒழுங்குமுறையுடன் பூஜிக்கப்படவில்லை. கடைசிப்பிறவி வரை, உங்களின் விக்கிரகங்கள் தொடர்ந்து ஆசீர்வாதங்களை வழங்குகின்றன. அவை குறுகிய நேரத்திற்கு அமைதி மற்றும் சந்தோஷத்தின் அனுபவத்தை வழங்குகின்றன. உங்களின் ஹோலிக்கும் உலக மக்கள் கொண்டாடும் ஹோலிக்கும் இடையில் அதிகளவு வேறுபாடு உள்ளது. ஆம், களிப்பிற்காக நீங்களும் சிறிதளவு கொண்டாடுகிறீர்கள். ஆயினும், நீங்கள் இறை சகவாசத்தின் நிறத்துடனும் ஒன்றிணைந்த ரூபத்துடனும் உண்மையான ஹோலியைக் கொண்டாடுகிறீர்கள். மக்களும் பல்வேறு வழிகளில் ஹோலியைக் கொண்டாடுகிறார்கள். ஹோலி என்ற வார்த்தையின் அர்த்தம் உங்களுக்குத் தெரியும். உங்களுக்கு மட்டுமே இது தெரியும், அத்துடன் நீங்கள் அதை அந்த முறையில் கொண்டாடுகிறீர்கள். ஹோலி என்றால் ‘ஹோ லி’, அதாவது, எது நடந்ததோ அது நடந்து விட்டது என்று அர்த்தம். எனவே, நீங்கள் அனைவரும், பழைய வாழ்க்கை, பழைய சூழ்நிலைகள், பழைய சம்ஸ்காரங்கள், பழைய வீணான எண்ணங்கள் அனைத்திற்கும் ‘கடந்தது கடந்தாகி விட்டது’ என்று கூறியுள்ளீர்கள், அல்லவா? கடந்ததைக் கடந்ததாகக் கைவிடுதல் என்றால் ‘ஹோ லி’ என்று அர்த்தம். எனவே, நீங்கள் இதைச் செய்துள்ளீர்களா? அல்லது, இப்போதும் தவறுதலாகப் பழைய சம்ஸ்காரங்கள் வெளிப்படுகின்றனவா? உங்களின் பிறவி, புதிய பிறவியாக இருப்பதனால், நீங்கள் அனைவரும் மரணித்து வாழ்கிறீர்கள்தானே? வாழ்கிறீர்களா? நீங்கள் மரணித்து வாழ்கிறீர்களா? உங்களின் கைகளை உயர்த்துங்கள்! அச்சா. இது உங்களின் புதிய பிறவி. எனவே, எப்படி நீங்கள் உங்களின் பழைய பிறவியை நினைவு செய்கிறீர்கள்? உங்களின் கடந்த பிறவி, கடந்து சென்றுவிட்டது. கடந்த காலத்தின் விடயங்கள், எண்ணங்கள் அல்லது சம்ஸ்காரங்கள் மீண்டும் வெளிப்பட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? அது ஹோலியைக் கொண்டாடுவதா? நீங்கள் அதைக் கடந்து செல்ல விட்டுவிடவில்லை என்பதே அதன் அர்த்தம் ஆகும். நீங்கள் இறை சகவாசத்தால் மிக நன்றாக நிறம் ஊட்டப்படவில்லை என்பதே அதன் அர்த்தம். இறை சகவாசத்தால் நிறமூட்டப்படுவது என்றால், உங்களின் கடந்த பிறவியையும் கடந்தகாலச் சூழ்நிலைகளையும் மறத்தல் என்று அர்த்தம். ஏனென்றால், நீங்கள் மரணித்து வாழ்கிறீர்கள்தானே? நீங்கள் பௌதீகமாக ஒரு பிறவியில் இறந்து, இன்னொரு பிறவியை எடுக்கும்போது, உங்களின் கடந்தகாலப் பிறவி உங்களுக்கு நினைவிருக்குமா? எனவே, நீங்கள் அனைவரும் இப்போது உங்களின் பிராமணப் பிறவியை எடுத்துள்ளீர்கள். கடந்த காலத்தின் சம்ஸ்காரங்களை நீங்கள் தவறுதலாக உங்களின் சம்ஸ்காரங்கள் எனச் சொல்கிறீர்கள். அவை உங்களுடையவையா? அப்படியா? அவை பிராமணப் பிறவியின் சம்ஸ்காரங்களா? சிலவேளைகளில், கவனயீனம் இருக்கும். சிலவேளைகளில், இராஜரீகமான சோம்பேறித்தனம் காணப்படும். பல்வேறு வகையான சோம்பேறித்தனங்கள் உள்ளன. ஏதாவதொரு வேளையில் இதைப் பற்றி வகுப்பு எடுங்கள்! பல வகையான சோம்பேறித்தனங்கள் உள்ளன. அவை இராஜரீகமான வடிவங்களில் வருகின்றன!
எனவே, உங்களின் பிராமண வாழ்க்கை என்பது ஒரு புதிய வாழ்க்கை. அதில் பழையது எதுவும் இருக்க முடியாது. எனவே, இன்று, நீங்கள் இங்கே ஹோலியை கொண்டாட வந்துள்ளீர்கள், அல்லவா? ஹோலி என்றால் ‘ஹோ லி’ என்று அர்த்தம். எனவே, இன்று, ஹோலியைக் கொண்டாடுதல் என்றால், பழைய சம்ஸ்காரங்களின் ஹோலியை எரித்தல் என்று அர்த்தம். இவற்றை எரித்த பின்னர் மட்டுமே உங்களால் கொண்டாட முடியும். எனவே, உங்களின் ரூபம் இப்போது கொண்டாடுவதற்கு உரியது. நீங்கள் பழையவை அனைத்தையும் ஏற்கனவே எரித்து விட்டீர்கள். இப்போது நீங்கள் கொண்டாடுவீர்கள். நீங்கள் இறை சகவாசத்தின் நிறத்தை இரசிக்கப் போகின்றீர்கள். நீங்கள் ஒன்றிணைந்து இருப்பதை அனுபவம் செய்யப் போகின்றீர்கள். ஏன்? அதிபுனிதமான தந்தை, உங்களைப் புனிதமாகவும் தூய்மையாகவும் ஆகுகின்ற நிறத்தால் நிறமூட்டி உள்ளார்.
எனவே, இன்று நீங்கள் என்ன ஹோலியைக் கொண்டாடுகிறீர்கள்? குறிப்பாக இன்று, பழைய சம்ஸ்காரங்கள் எவையும் வருவதற்கு அனுமதிக்காதீர்கள். இதுவே ஹோலியைக் கொண்டாடுவதாகும். உங்களால் அதை இந்த முறையில் கொண்டாட முடிகிறதா? அல்லது சிலவேளைகளில் அவை மீண்டும் வருமா? இன்றில் இருந்து, திடசங்கற்பமான எண்ணங்கள் என்ற வழிமுறையால், ‘நான் அதை விரும்பவில்லை, ஆனால் அவை எனது சம்ஸ்காரங்கள்’ என்ற இராஜரீகமான வார்த்தைகளை முடியுங்கள். இத்தகைய ஹோலியை எல்லா வேளைக்கும் கொண்டாடுகின்ற தைரியம் உங்களுக்கு இருக்கிறதா? அல்லது, நீங்கள் அதைச் சிலவேளைகளில் மட்டும் கொண்டாடுவீர்களா? இன்றில் இருந்து, உங்களின் பழைய சம்ஸ்காரங்கள் என்று வரும்போது, கடந்ததைக் கடந்தாகக் கைவிடுவீர்கள் என்றும் இது உங்களின் புதிய பிறவி என்றும் பழைய பிறவி முடிந்து விட்டது என்றும் நீங்கள் உணர்கிறீர்கள். நீங்களே இனிமையிலும் இனிமையான, அதியன்பிற்குரிய, நீண்ட காலம் தொலைந்து, இப்போது கண்டு பிடிக்கப்பட்ட இத்தகைய தைரியத்தைக் கொண்டுள்ள, தந்தையின் குழந்தைகள், அப்படியல்லவா? எனவே, உங்களுக்கு இந்த எண்ணத்தை மட்டுமன்றி, இந்தத் திடசங்கற்பமான எண்ணத்தைக் கொண்டிருப்பதற்கான தைரியம் உங்களுக்கு இருக்கிறதா? உங்களின் கைகளை உயர்த்துங்கள்! பாருங்கள், நீங்கள் அனைவரும் தைரியத்தைப் பேணியுள்ளீர்கள். ஓகே, சிலர் விடுபடலாம், ஆனால், நீங்கள் அனைவரும் சகபாடிகள், அல்லவா? நீங்கள் அனைவரும் உறுதியான சகபாடிகள், உங்களின் இரண்டு கைகளையும் உயர்த்துங்கள்! அனைவரின் புகைப்படத்தையும் எடுங்கள். அச்சா. இரட்டை வெளிநாட்டவர்களும் தமது கைகளை உயர்த்துகிறார்கள்!
கடந்ததைக் கடந்ததாக ஆக்குவதன் மூலம் ஹோலியைக் கொண்டாடுவதற்காக, பாப்தாதா உங்களுக்கு கோடானுகோடி வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். இப்போது, தவறுதலாகவேனும் உங்களின் வாயில் இருந்து இந்த வார்த்தைகள் வெளிப்பட அனுமதிக்காதீர்கள்: ‘எனது சம்ஸ்காரங்கள்’. இராவணனின் சம்ஸ்காரங்களுக்கு, ‘எனது சம்ஸ்காரங்கள்’ என நீங்கள் சொல்கிறீர்கள், இது ஓர் அற்புதம்! இராவணன் உங்களின் எதிரி என்று அழைக்கப்படுகிறான். உங்களின் எதிரியின் பொக்கிஷங்களை உங்களுடையவை எனச் சொல்வது அதிசயமான ஒரு விடயம் ஆகும். நீங்கள் கூறுவதை இட்டு, நீங்களும் வியப்படைவீர்கள். நீங்கள் அதைத் தவறுதலாகக் கூறுகிறீர்கள். நீங்கள் அதைக் கூறுகிறீர்கள், பின்னர் உள்ளே உங்களின் மனச்சாட்சி உங்களை உறுத்துகிறது. நீங்களும் அதை உணர்ந்து கொள்கிறீர்கள். நீங்கள் அதைப் பற்றித் தந்தையிடம் பேசி, மன்னிப்புக் கேட்கிறீர்கள்: ‘பாபா, நாளையில் இருந்து, நான் அதைச் செய்ய மாட்டேன்’. பின்னர், நீங்கள் அதைச் செய்கிறீர்கள்! எனவே, பாப்தாதா இப்போது என்ன செய்வது? அவர் தொடர்ந்து அதை அவதானித்துக் கொண்டே இருக்க வேண்டுமா? இப்போது, இந்த வார்த்தைகளின் ஹோலியை எரியுங்கள். எரிப்பதிலும், பாபா உங்களுக்கு மிகவும் நல்ல விடயத்தைப் பற்றிக் கூறுவார். ஒரு கோக்கி (இனிப்பான தடித்த சப்பாத்தி) அதைச் சுற்றி ஒரு நூலுடன் சமைக்கப்படுகிறது. அதைச் சுடும்போது, கோக்கி சமைக்கப்படும். ஆனால் அந்த நூல் எரிந்து விடாது. ஆத்மா அழியாதது, சரீரம் அழியக்கூடியது என்று ஆத்மாவைப் பற்றி நீங்கள் கற்கும் முதல் பாடத்தின் அடையாளமே இது. இந்தப் பண்டிகைகளையும் சமய நூல்களையும் உருவாக்கியவர்களும் தந்தையின் குழந்தைகளே. ஆனால் நீங்கள் நீண்ட காலம் பிரிந்திருந்து இப்போது கண்டெடுக்கப்பட்ட குழந்தைகள் ஆவீர்கள். அவர்களின் அற்புதம் எதிலும் குறைந்ததல்ல என்பதை பாப்தாதா பார்க்கிறார். இது ஒரு மூடை மாவில் ஒரு துளி உப்பைப் போன்றது. ஆனால், அவர்கள் அதை மிகவும் களிப்பூட்டும் முறையில் செய்துள்ளார்கள். நீங்கள் அதைப் பார்த்தால், அவர்கள் ஒவ்வொரு பண்டிகையின் ஞாபகார்த்தத்தையும் செய்துள்ளார்கள். எவ்வாறாயினும், அவர்கள் சூட்சுமமான சில விடயங்களுக்கு பௌதீக வடிவத்தைக் கொடுத்துள்ளார்கள். ஆனால் குறைந்தபட்சம் அவர்கள் ஒரு ஞாபகார்த்தத்தை உருவாக்கி உள்ளார்கள். அவர்கள் பக்தியிலும் எந்தவிதக் குறைவும் விடவில்லை. பக்தியிலும், துவாபர, கலியுகங்களில், உங்களின் விழிப்புணர்வின் சில விடயங்களை வைத்துள்ளார்கள். இவை அதிகபட்சம் விகாரங்களால் நிறைந்திருப்பதில் இருந்து உங்களைப் பாதுகாத்துள்ளன. எனவே, இந்தச் சாதனங்கள், பண்டிகைகள், சமயநூல்கள் போன்றவற்றை உருவாக்கியவர்களுக்கு அதற்கான பலனை பாப்தாதா நிச்சயமாக வழங்குகிறார். குறைந்தபட்சம், அவர்கள் பக்தியில் சில விடயங்களை நினைவு செய்கிறார்கள், அதனால் குறுகிய காலத்திற்காயினும் அவர்கள் விகாரங்களில் இருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்.
எனவே, நீங்கள் இன்று என்ன ஹோலியைக் கொண்டாடினீர்கள்? எந்த ஹோலியை நீங்கள் கொண்டாடினீர்கள்? ‘ஹோ லி’, அனைவரும் ‘ஹோ லி’ எனக் கூறுங்கள்! இப்படிச் செய்யுங்கள் (அதை அப்பால் தள்ளுங்கள்). இது உறுதியாக உள்ளது, அல்லவா? நீங்கள் கொண்டாடினீர்களா? கொண்டாடினீர்களா? நல்லது. அப்படி என்றால், நாளையே மாயை வருவாள். ஏனென்றால், மாயையும் கேட்டுக் கொண்டு இருக்கிறாள். ஆனால் நீங்கள் அவளை வரவேற்கக் கூடாது. இதில் மகிழ்ச்சி உள்ளதல்லவா? இந்த மகிழ்ச்சியுடன் இருங்கள்.
தந்தையை நினைவு செய்யுங்கள், நீங்கள் புனித அன்னங்கள் ஆகுவதற்காக, அவர் எப்படி இந்த ஆன்மீக நிறத்தால் உங்களை நிறமூட்டுகிறார் எனப் பாருங்கள். புனித அன்னங்கள், வேறுபிரித்தறியும் சக்தியைக் கொண்ட புனித அன்னங்கள் ஆவார்கள். நீங்கள் எப்பொழுதெல்லாம் ஒரு வேலையைச் செய்ய வேண்டி இருந்தாலும், முதலில் ஓர் ஆசனத்தை நிச்சயம் செய்து கொள்ளுங்கள். உங்களை அந்த ஆசனத்தில் நிலைநிறுத்திய பின்னர், தீர்மானியுங்கள். உங்களுக்கு அந்த ஆசனத்தைத் தெரியும். அது திரிகாலதரிசியாக இருக்கும் ஆசனம் ஆகும். அனைத்திற்கும் முதலில், உங்களை திரிகாலதரிசியாக இருக்கும் ஆசனத்தில் நிலைநிறுத்தி, முக்காலங்களையும் கருத்தில் கொள்ளுங்கள். நிகழ்காலத்தை மட்டும் கருத்தில் கொள்ளாதீர்கள். ஆனால், ஆரம்பம், மத்தி, இறுதி என்ற மூன்று காலங்களையும் பாருங்கள். முக்காலங்களிலும் நன்மை உள்ளதா அல்லது இழப்பு ஏற்பட்டுள்ளதா? சில குழந்தைகள் மிகவும் கெட்டிக்காரர்கள். அவர்களின் கெட்டித்தனத்தைப் பற்றி பாபா உங்களுக்குச் சொல்லட்டுமா? அவர்கள் என்ன சொல்கிறார்கள்? ‘நான் அந்த முறையில் அதைச் செய்ய வேண்டியுள்ளது, அதனால் நான் அதைச் செய்தேன். நான் அதைச் செய்யக்கூடாது என்று உணர்கிறேன், ஆனாலும் நான் அதைச் செய்து விட்டேன்’. ஓகே, நீங்கள் அதைச் செய்துள்ளீர்கள், அதனால் நீங்கள் நிச்சயமாக அந்தச் செயலின் பலனைப் பெறுவீர்கள், அல்லவா? எனவே, அந்த முறையில் கெட்டிக்காரர்கள் ஆகாதீர்கள். நீங்கள் தந்தையை மகிழ்விக்க முயற்சி செய்கிறீர்கள். நீங்கள் ஒரு தவறைச் செய்கிறீர்கள். பின்னர், பாப்தாதாவிற்கு இத்தகைய விடயங்களைக் கூறுகிறீர்கள்: ‘பாபா, நீங்கள் கருணைநிறைந்தவர், அல்லவா? நீங்கள் மன்னிப்புக்கடல் அல்லவா?’ தந்தைக்கு அவர் யார் என்பதை நீங்கள் நினைப்பூட்டுகிறீர்கள். அத்துடன், ‘நான் அதைப் பற்றி உங்களிடம் கூறி, அதை முடித்து விட வேண்டும் என்று நீங்கள் கூறியுள்ளீர்கள்’ என்றும் அவரிடம் கூறுகிறீர்கள். எவ்வாறாயினும், பாபாவிற்கு அதைப் புரிந்துணர்வுடன் கூறி, நீங்கள் அதை முடிக்க வேண்டும். பாபாவிற்கு அதைப் பற்றிக் கூறுகின்ற ஒரு விடயத்தை நீங்கள் உறுதிப்படுத்துகிறீர்கள். ஆனால், முதலில் நீங்கள் உங்களைத் திடசங்கற்பம் நிறைந்த எண்ணங்களால் மாற்றிக் கொள்ள வேண்டும். அதன்பின்னர் அதைப் பற்றி பாபாவிற்குக் கூற வேண்டும். ‘பாபா, நீங்கள் இப்படிக் கூறினீர்கள், அல்லவா?’ எனக் கூறி நீங்கள் தந்தையை அதிகளவில் சந்தோஷப்படுத்துகிறீர்கள். நீங்கள் பாபாவிற்கு நினைவூட்டுகிறீர்கள்: ‘நீங்கள் இப்படிக் கூறினீர்கள், நீங்கள் இப்படிக் கூறினீர்கள்.’ நீங்கள் மிகவும் கெட்டிக்காரர்கள். இப்போது, அந்த முறையில் கெட்டிக்காரர்கள் ஆகாதீர்கள். தைரியத்தைக் கொண்டிருங்கள். ‘நான் இதைச் செய்யவே வேண்டும்.’ ‘நான் அதைச் செய்வேன், நான் அதைச் செய்வேன்!’ எனக் கூறாதீர்கள்.
நாள் முழுவதும், ‘நான் அதைச் செய்வேன், நான் இதைச் செய்வேன்!’ என்ற பல பாடல்களை பாப்தாதா கேட்கிறார். ‘நான் அதைச் செய்வேன், நான் அவர்களுக்குக் காட்டுவேன், நான் அப்படி ஆகுவேன்’. ஆனால் என்ன வேகத்தில்? இந்த முறையில் அதை எதிர்காலத்திற்காக விட்டுவிடுபவர்களால் தந்தையுடன் திரும்பிச் செல்ல முடியுமா? தந்தை என்றும் தயாராக இருக்கிறார். அதைத் தாம் செய்வோம் எனக் கூறுபவர்கள், தயாராக இல்லை. எனவே, நீங்கள் எப்படித் தந்தையுடன் திரும்பிச் செல்வீர்கள்? எப்படி மற்றவர்கள் தந்தையுடன் திரும்பிச் செல்கிறார்கள் என்பதை நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். ஒவ்வொரு குழந்தையின் மீதும் தந்தை கோடானுகோடி மடங்கு அன்பை வைத்திருக்கிறார். தனது குழந்தைகள் தன்னுடன் வீட்டுக்குத் திரும்பிச் செல்லாமல் விடுவதைத் தந்தை விரும்புவதில்லை. நீங்கள் வீட்டுக்குத் திரும்பிச் செல்வதற்கான நேரம் வந்திருக்கும் இந்த வேளையில் நீங்கள் வீடு திரும்ப மாட்டீர்களா? நீங்கள் முதலில் வீட்டுக்குச் செல்ல வேண்டும், பின்னரே இராச்சியத்திற்குச் செல்ல வேண்டும். நீங்கள் ஒன்றாக வீட்டுக்குத் திரும்பிச் செல்லாவிட்டால், தந்தை பிரம்மாவுடன் நீங்கள் இராச்சியத்திற்குச் செல்ல மாட்டீர்கள், பிந்தியே செல்வீர்கள். உங்களின் சத்தியம் என்ன? நீங்கள் ஒன்றாகத் திரும்பிச் செல்வீர்கள் என்பதா அல்லது நீங்களாகவே அங்கே செல்வீர்கள் எனக் கூறுகிறீர்களா? நீங்கள் இதையும் எதிர்காலத்திற்காக விட்டுவிடுவீர்களா? ‘நான் அங்கே சென்றடைவேன். பாருங்கள், பாபா, நான் நிச்சயமாக அங்கே செல்வேன்.’ எனவே இப்போது, இவ்வாறு பேசுவதை முடித்து விடுங்கள். அச்சா.
பாப்தாதா எங்கும் உள்ள குழந்தைகள் அனைவரையும் பார்க்கிறார். அவர்கள் தொலைவில் அமர்ந்திருந்தாலும், பெரும்பாலான இடங்களில், நிலையங்களில், அவர்கள் தொடர்ந்து பாப்தாதாவைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கே நீங்கள் தோளி உண்ணும்போது, அங்கும் அவர்கள் தோளி கொடுக்கிறார்கள். பாப்தாதா - எப்படி அவர்கள் தொலைவில் அமர்ந்திருந்தாலும் தங்களை நெருக்கமாக இருப்பதாகவே அனுபவம் செய்கிறார்கள் என - அனைவரையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். சதா தந்தைக்குச் சமமானவராகவும் சம்பூரணமாகவும் ஆகவேண்டும் என்ற திடசங்கற்பமான எண்ணத்தைக் கிரகித்திருக்கும் குழந்தைகள் அனைவருக்கும், அவ்வப்போது, அவர்கள் தொடர்ந்து அந்த எண்ணத்திற்கு திடசங்கற்பத்தின் சக்தியை வழங்குகிறார்கள். தூய எண்ணங்களைக் கிரகித்திருக்கும் இத்தகைய எங்கும் உள்ள குழந்தைகள் அனைவருக்கும், அத்துடன் கூடவே, தந்தையின் நம்பிக்கைகளை நிறைவேற்றப் போகும் நம்பிக்கை நட்சத்திரங்களுக்கும் அத்துடன் தாதியின் வார்த்தைகளான, ‘நான் கர்மாதீத் ஆகவேண்டும், நான் அப்படி ஆகவேண்டும், நான் அப்படி ஆகவேண்டும்’ என்பதையும், அத்துடன் மம்மா எப்போதும் பேசுகின்ற வார்த்தைகளான, ‘நீங்கள் எங்கே செல்ல வேண்டியிருந்தாலும், அதை இன்றே செய்யுங்கள், அதை நாளைக்கு என்று விட்டுவிடாதீர்கள்’ என்பதையும் தீதியின் வார்த்தைகளான, ‘நாங்கள் இப்போது வீடு திரும்ப வேண்டும்’ என்பதையும் நினைவு செய்பவர்களுக்கும், இந்த வார்த்தைகள் உங்களின் காதுகளில் மீண்டும் மீண்டும் எதிரொலிக்க வேண்டும். இந்த ஒரு அக்கறையை மட்டும் கொண்டிருங்கள்: ‘நான் இப்போது கர்மாதீத் ஆகி, வீடு திரும்ப வேண்டும்.’ இந்த வார்த்தைகளைத் தமது விழிப்புணர்வில் மீண்டும் மீண்டும் கொண்டு வருகின்ற சக்திசாலி ஆத்மாக்களுக்கு, பாப்தாதாவின் புனிதமான குழந்தைகளுக்கு ஹோலிக்கான வாழ்த்துக்கள். இத்துடன் கூடவே, மதுவனத்தின் கேவாரைப் (ஜிலேபி போன்றதொரு இனிப்பு) பெறுவதற்கு முன்னர், அனைவரும் உங்களின் வாயைத் திறந்து கேவாரை உண்ணுங்கள். நீங்கள் அதை உண்டீர்களா? எனவே, குழந்தைகளான உங்கள் அனைவருக்கும் பாப்தாதாவிடம் இருந்தும் முன்னோடிக் குழு ஆத்மாக்களிடம் இருந்தும் அதிக, அதிகளவு கோடானுகோடி மடங்கு அன்பும் நினைவுகளும் அத்துடன் தந்தையிடம் இருந்து நமஸ்தேயும்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஆத்ம உணர்வு உடையவராகி, ஆத்மாக்கள் அனைவருக்கும் அன்பையும் தூய, சாதகமான உணர்வுகளையும் கொண்டிருப்பீர்களாக.உங்களைப் புகழ்கின்ற ஆத்மாக்களிடம் உங்களுக்கு அன்பான உணர்வுகள் இருப்பதைப் போன்று, சமிக்கைகளின் ஊடாக உங்களுக்குக் கற்பித்தல்களை வழங்கும் எந்தவோர் ஆத்மாவிற்கும் அதேயளவு அன்பைக் கொண்டிருங்கள். அந்த ஆத்மா உண்மையில் உங்களின் நலம் விரும்பி என்ற தூய, சாதகமான உணர்வுகளைக் கொண்டிருங்கள். இத்தகைய ஸ்திதியே ஆத்ம உணர்வு எனப்படுகிறது. நீங்கள் ஆத்ம உணர்வு உடையவராக இல்லாவிட்டால், நிச்சயமாக அகங்காரம் காணப்படும். அகங்காரம் கொண்ட ஒருவரால் ஒருபோதும் அவமதிப்பைச் சகித்துக் கொள்ள முடியாது.
சுலோகம்:
இறையன்பில் சதா திளைத்திருங்கள், அப்போது துன்ப உலகம் மறக்கப்பட்டு விடும்.அவ்யக்த சமிக்கை: உங்களின் நம்பிக்கை அத்திவாரத்தை உறுதியானதாக்கி, சதா பயமற்றவராகவும் கவலையற்றவராகவும் இருங்கள்.
உங்களின் கரம் மூத்த ஒருவரின் கையுடன் இருக்கும்போது, இளையவரான உங்களின் ஸ்திதி கவலையற்றதாகவும் கவலையில் இருந்து விடுபட்டதாகவும் இருக்கும். ஒவ்வொரு செயலிலும் பாப்தாதா உங்களுடன் இருக்கிறார், இந்த ஆன்மீக வாழ்க்கையில், உங்களின் கரம், அவரின் கரத்துடன் உள்ளது என்ற நம்பிக்கை குழந்தைகளான உங்களுக்கு உள்ளது. உங்களின் வாழ்க்கையை நீங்கள் அவரிடம் அர்ப்பணித்து விட்டீர்கள் என்றும், அதனால் அனைத்தும் அவரின் பொறுப்பு என்பதே இதன் அர்த்தமாகும். உங்களின் சுமைகள் அனைத்தையும் தந்தையிடம் ஒப்படைத்துவிட்டு, உங்களை இலேசாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் சதா கவலையற்ற ஸ்திதியுடன் இருப்பீர்கள். அப்போது அனைத்தும் மிகச்சரியாக இருக்கும்.