01.05.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் எல்லையற்ற தந்தையிடம் இருந்து, உங்கள் எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுவதற்காக வந்துள்ளீர்கள். இங்கே எதுவும் எல்லைக்கு உட்பட்டதல்ல. நீங்கள் தந்தையைப் பெருமளவு உற்சாகத்துடன் நினைவு செய்யும்போது, நீங்கள் பழைய உலகை மறப்பீர்கள்.

கேள்வி:
நீங்கள் எவ்விடயத்தை மீண்டும், மீண்டும் உங்களுக்குள் அரைத்து, அதனை உறுதியாக்கிக் கொள்ள வேண்டும்?

பதில்:
நான் ஓர் ஆத்மா. நான் எனது ஆஸ்தியைப் பரமாத்மாவான தந்தையிடம் இருந்து பெற்றுக் கொள்கின்றேன். ஆத்மாக்கள் குழந்தைகள். பரமாத்மா தந்தை ஆவார். குழந்தைகளுக்கும் தந்தைக்கும் இடையிலான சந்திப்பு இப்பொழுதே இடம்பெறுகின்றது. இந்த விடயத்தை மீண்டும் மீண்டும் உங்களுக்குள் அரைப்பதன் மூலம், அதனை உறுதியாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் எந்தளவிற்கு அதிகமாக ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுகின்றீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக உங்கள் சரீர உணர்வு முடிவடையும்.

பாடல்:
அன்பிற்கினியவருடன் இருப்பவர்களின் மீதே ஞான மழை பொழிகின்றது.

ஓம் சாந்தி.
நீங்கள் பாபாவுடன் அமர்ந்திருக்கின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அவரே அனைவருக்கும் தந்தையான, மகத்துவமான பாபா ஆவார். பாபா இப்பொழுது வந்துள்ளார். நீங்கள் தந்தையிடம் இருந்து எதனைப் பெறுகின்றீர்கள் என்ற கேள்வி எழக்கூடாது. நீங்கள் உங்கள் ஆஸ்தியைத் தந்தையிடம் இருந்து பெறுகின்றீர்கள். அவர் அனைவரதும் எல்லையற்ற தந்தை ஆவார். அவரிடம் இருந்தே நீங்கள் எல்லையற்ற சந்தோஷத்தையும் எல்லையற்ற சொத்தையும் பெறுகின்றீர்கள். மற்றைய சொத்து எல்லைக்கு உட்பட்டதாகும். சிலரிடம் 1000 (ரூபாய்கள்) உள்ளன, வேறு ஒருவரிடம் 5000 உள்ளன. சிலரிடம் ஒரு மில்லியன், இரு மில்லியன்கள், ஐந்து மில்லியன்கள், பலமில்லியன்கள் இருக்கக்கூடும்.அந்த அனைத்து லௌகீகத் தந்தையர்களும் குழந்தைகளும் எல்லைக்கு உட்பட்டவர்கள். இங்கே, நீங்கள் உங்களின் எல்லையற்ற சொத்தைக் கோருவதற்கு எல்லையற்ற தந்தையிடம் வந்திருக்கிறீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். உங்கள் இதயத்தில் உங்களுக்கு இந்த எதிர்பார்ப்பு உள்ளது. பாடசாலைகளைத் தவிர, சத்சங்கங்கள் போன்ற வேறு எந்த இடங்களிலும் எவரும் எதிர்பார்ப்புடன் இருப்பதில்லை. அவர்கள் தங்களுக்கு அமைதி கிடைத்தால் போதும் என்று கூறுகிறார்கள். எவ்வாறாயினும், அவர்களால் அதனை அங்கே பெற முடியாது. நீங்கள் புதிய உலகின் அதிபதிகள் ஆகுவதற்கே இங்கு வந்திருக்கிறீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். வேறு எதற்காக நீங்கள் இங்கே வந்துள்ளீர்கள்? குழந்தைகளாகிய உங்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. நீங்கள் கூறுகின்றீர்கள்: பாபா, நாங்கள் உலக அதிபதிகள் ஆகுவதற்கே, இங்கே வந்துள்ளோம். இங்கே எதுவுமே எல்லைக்கு உட்பட்டதல்ல. பாபா, நாங்கள் எல்லையற்ற சுவர்க்கம் என்ற எங்கள் ஆஸ்தியைப் பெறுவதற்காகவே இங்கே வந்துள்ளோம். நாங்கள் இந்த ஆஸ்தியைத் தந்தையிடம் இருந்து ஒவ்வொரு கல்பத்திலும் பெறுகின்றோம். பின்னர், பூனையாகிய மாயை அதனை எங்களிடம் இருந்து அபகரித்துக் கொள்கின்றாள். ஆகையாலேயே இது வெற்றி, தோல்விக்கான விளையாட்டு என்று அழைக்கப்படுகின்றது. தந்தை இங்கே அமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் வரிசைக்கிரமமாகப் புரிந்து கொள்கின்றீர்கள். இவர் ஒரு சாதுவோ அல்லது புனிதரோ இல்லை. இவரும் நீங்கள் அணிந்திருக்கின்ற, அதேவிதமான ஆடைகளையே அணிகின்றார். இவர் பாபா ஆவார். நீங்கள் யாரைச் சந்திப்பதற்காகச் செல்கின்றீர்கள் என்று உங்களிடம் யாராவது கேட்கும் பொழுது, நீங்கள் கூறுகின்றீர்கள்: நாங்கள் பாப்தாதாவிடம் செல்கின்றோம். ஆகையால் இது ஒரு குடும்பம். இங்கே நீங்கள் ஏன் வருகின்றீர்கள்? அங்கே நீங்கள் எதைப் பெறப் போகின்றீர்கள்? எவராலும் இதனைப் புரிந்து கொள்ள முடியாது. தாங்கள் பாப்தாதாவிடம் செல்கின்றார்கள் என்றோ, அவரிடமிருந்து தங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றார்கள் என்றோ அவர்கள் கூற மாட்டார்கள். அனைவருக்கும் தங்கள் பாட்டனாரின் சொத்துக்கான உரிமை உள்ளது. எவ்வாறாயினும் ஆத்மாக்களாகிய நீங்களே, சிவபாபாவின் அழிவற்ற குழந்தைகள். இப்பொழுது பிரஜாபிதா பிரம்மாவிற்கு உரியவர்கள் ஆகுவதன் மூலம், நீங்கள் அவரின் பேரன், பேத்திகள் ஆகுகின்றீர்கள். நீங்கள் ஆத்மாக்கள் என்பதை இப்பொழுது அறிவீர்கள். இதனை நீங்கள் உங்கள் இதயத்தில் உறுதியாக வைத்திருக்க வேண்டும். ஆத்மாக்களாகிய நாங்கள் பரமாத்மாவாகிய, தந்தையிடம் இருந்து எங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றோம். ஆத்மாக்களாகிய நாங்கள் வந்து, தந்தையைச் சந்தித்துள்ளோம். முன்னர், நாங்கள் சரீர உணர்வில் இருக்கும்பொழுது, நாங்கள் “இன்ன பெயருடையவர் இன்ன சொத்தைப் பெறுகின்றார்” என்று கூறுவோம். ஆத்மாக்கள் என்ற வகையில், நாங்கள் பரமாத்மாவிடம் இருந்தே எங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றோம் என்பதை இப்பொழுது புரிந்து கொள்கின்றோம். ஆத்மாக்கள் குழந்தைகள் ஆவார்கள். பரமாத்மா தந்தை ஆவார். தந்தையுடனான குழந்தைகளின் சந்திப்பு நீண்ட காலத்தின் பின்னர் இடம்பெறுகின்றது, அது ஒவ்வொரு கல்பத்திலும் ஒருமுறை மாத்திரம் இடம்பெறுகின்றது. பக்தி மார்க்கத்தில் பல போலியான மேலாக்கள் இடம்பெறுகின்றன. இதுவே ஆத்மாக்களுக்கான அதி அற்புதமான மேலாவாகும். ஆத்மாக்கள் பரமாத்மாவிடம் இருந்து நீண்டகாலமாகப் பிரிந்திருந்தனர். எந்த ஆத்மாக்கள்? ஆத்மாக்களாகிய நீங்களே. நீங்கள் இனிய, மௌன வீட்டின் வாசிகள் என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். இங்கே உங்கள் பாகங்களை நடித்ததால், களைப்படைந்து உள்ளீர்கள். ஆகையாலேயே சந்தியாசிகளிடமும் குருமாரிடமும் சென்று, அமைதியைத் தேடினீர்கள். அவர்கள் தங்களுடைய வீடுகளை விட்டு காடுகளுக்குச் சென்றதால் அவர்களிடம் இருந்து உங்களால் அமைதியைப் பெற முடியும் என்று நீங்கள் நினைத்தீர்கள். எவ்வாறாயினும் அது அவ்வாறல்ல. இப்பொழுது அவர்கள் அனைவரும் நகரங்களுக்குத் திரும்பி வந்து விட்டனர். காட்டிலுள்ள குகைகள் வெறுமையாகி விட்டன. உண்மையில் துறவறப் பாதைக்கான ஞானத்தையும் தூய்மையையும் கற்பித்துக் கொண்டு இருக்க வேண்டிய அவர்கள், இப்பொழுது நகரத்தில் குருமார்களாக இருக்கின்றார்கள். இந்நாட்களில் அவர்கள் திருமண வைபவங்களைக் கூட நடாத்துகின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் யோக சக்தியினால் உங்கள் புலன்களைக் கட்டுப்படுத்துகின்றீர்கள். யோக சக்தியின் மூலம், புலன்கள் குளிர்மையும் சாந்தமும் அடைகின்றன. புலன்களின் விஷமத்தனமும் உள்ளது. இனியும் விஷமத்தனத்தைக் கொண்டிருக்காத வகையில் நீங்கள் உங்கள் புலன்களை வெற்றிகொள்ள வேண்டும். உங்களுக்கு யோக சக்தி இல்லாதிருப்பின், புலன்களைக் கட்டுப்படுத்துதல் அசாத்தியமாகி விடும். தந்தை கூறுகின்றார்: யோக சக்தியினால் மாத்திரமே புலன்களின் விஷமத்தனத்தை முடிக்க முடியும். யோகசக்தியில் வலிமை உள்ளது. அதற்குப் பெருமளவு முயற்சி தேவை. நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும்போது, உங்கள் புலன்களின் விஷமத்தனம் நிறுத்தப்படும். சத்தியயுகத்தில் தீங்கான நோய்கள் இருப்பதில்லை. இங்கே உங்கள் புலன்களை நீங்கள் கட்டுப்படுத்துவதற்குக் கற்கின்றீர்கள், அதனால் அங்கே அழுக்கு எதுவும் இருக்காது. அதன் பெயரே சுவர்க்கம் ஆகும். இதனை மறந்ததால், அவர்கள் அது நூறாயிரம் வருடங்களுக்கு நீடிக்கின்றது என்று கூறுகின்றார்கள். இப்பொழுதும் அவர்கள் தொடர்ந்தும் ஆலயங்களைக் கட்டுகின்றார்கள். அது நூறாயிரம் வருடங்களுக்கு உரியதாயின், அவர்களால் எதனையும் ஞாபகத்தில் வைத்திருக்க முடியாதிருக்கும். அவர்கள் ஏன் ஆலயங்களைக் கட்டுகின்றார்கள்? அங்கே புலன்கள் குளிர்மையாகவும் சாந்தமாகவும் இருப்பதால், அவை அங்கே எந்த விஷமத்தனமும் செய்வதில்லை. சிவபாபாவிற்கு எந்தப் பௌதீகப் புலன்களும் இல்லை, ஆனால் அவரது ஆத்மாவில் ஞானம் முழுவதையும் வைத்திருக்கிறார். அவர் மாத்திரமே அமைதிக்கடலும் சந்தோஷக்கடலும் ஆவார். பௌதீகப் புலன்களைக் கட்டுப்படுத்துதல் அசாத்தியம் என மக்கள் கூறுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: யோகசக்தியினால் உங்கள் புலன்களைக் கட்டுப்படுத்துங்கள். தந்தையின் நினைவில் நிலைத்திருங்கள். நியதிகளுக்கு மாறாக எச்செயலையும் செய்வதற்கு உங்கள் புலன்களை அனுமதிக்காதீர்கள். அத்தகைய அன்பான தந்தையை நினைவுசெய்யும் பொழுது, அன்புக்கண்ணீர் சிந்த வேண்டும். ஆத்மாக்கள் பரமாத்மாவுடன் இரண்டறக் கலப்பதில்லை. ஒருமுறை மாத்திரமே ஒரு சரீரத்தை அவர் கடனாகப் பெறும்பொழுதே, தந்தை உங்களைச் சந்திக்கின்றார். ஆகவே, அத்தகைய தந்தையுடன் நீங்கள் அதிகளவு அன்புடன் தொடர்பு கொள்ள வேண்டும். பாபாவிற்குப் பெருமளவு உற்சாகம் இருந்தது. ஓ! பாபா என்னை உலக அதிபதி ஆக்குகின்றார்! இந்தச் செல்வம், சொத்துக்கள் ஆகியவற்றின் மூலம் நான் என்ன செய்வது? அவர் கூறினார்: நான் அனைத்தையும் துறப்பேன். அவர் பித்துப் பிடித்தவரைப் போலிருந்தார். அனைவரும் கேட்க ஆரம்பித்தார்கள்: அவருக்குத் திடீரென்று என்ன நடந்தது? அவர் தனது வியாபாரத்தையும் கைவிட்டு, பாபாவிடம் வந்தார். அவரது சந்தோஷப் பாதரசம் மிகவும் உயர்வாக இருந்தது. அவருக்கு ஓர் இராச்சியம் கிடைக்க இருப்பதைக் காட்டுகின்ற காட்சிகளைக் காண ஆரம்பித்தார். எவ்வாறாயினும், அதனை அவர் எவ்வாறு பெறுவார் என்பதையோ அல்லது என்ன நடக்கும் என்பதையோ அவர் அறிந்திருக்கவில்லை. அதனைத் தான் பெறுவேன் என்பதை மாத்திரமே அவர் அறிந்திருந்தார். அந்தச் சந்தோஷத்தில் அவர் அனைத்தையும் துறந்தார். பின்னர், படிப்படியாக, அவர் தொடர்ந்தும் இந்த ஞானத்தைப் பெற்றார். குழந்தைகளாகிய நீங்கள் இங்கே இந்தப் பாடசாலைக்கு வந்துள்ளீர்கள். உங்கள் இலக்கும் குறிக்கோளும் உள்ளன. இதுவே இராஜயோகம். நீங்கள் உங்கள் இராச்சியத்தைக் கோருவதற்கு எல்லையற்ற தந்தையிடம் வந்துள்ளீர்கள். நாங்கள் அவருடன் கற்கின்றோம் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அவரையே நாங்கள் நினைவுசெய்து வருகின்றோம்: பாபா, வந்து எங்கள் துன்பத்தை அகற்றி, எங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுங்கள். புதல்விகள் கூறுகின்றார்கள்: எங்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணரைப் போன்றதொரு குழந்தை வேண்டும். உங்களால் வைகுந்தத்தில் மாத்திரமே அவ்வாறான குழந்தைகளைப் பெற முடியும்.கிருஷ்ணர் வைகுந்தத்திற்கு உரியவர். நீங்கள் அவரை (விக்கிரகத்தை) ஊஞ்சலில் ஆட்டுகின்றீர்கள், ஆனால் வைகுந்தத்தில் மாத்திரமே உங்களால் அவரைப் போன்றதொரு குழந்தையைப் பெற முடியும். உங்கள் வைகுந்த இராச்சியத்தைப் பெறவே நீங்கள் இப்பொழுது வந்துள்ளீர்கள். நீங்கள் நிச்சயமாக அங்கே இளவரசர்கள், இளவரசிகளைக் காண்பீர்கள். தூய்மையான குழந்தைகளைப் பெறுகின்ற உங்கள் விருப்பம் நிறைவேறும். இங்கும் பல இளவரசர்கள், இளவரசிகள் உள்ளனர். ஆனால் அவர்கள் நரகவாசிகள். சுவர்க்கத்தில் வாழ்கின்ற குழந்தைகளைப் பெறவே நீங்கள் விரும்புகின்றீர்கள். இக்கல்வி மிகவும் இலகுவானது. தந்தை கூறுகின்றார்: நீங்கள் பெருமளவு பக்தி செய்துள்ளீர்கள். நீங்கள் அதிகளவு தடுமாறித் திரிந்தீர்கள். நீங்கள் அதிகளவு சந்தோஷத்துடன் யாத்திரைகள் சென்றீர்கள். நீங்கள் அமர்நாத்திற்கும் (இமயமலையிலுள்ள ஆலயம்) சென்றீர்கள். அங்கே பார்வதிக்குச் சங்கரர் அமரத்துவக் கதையைக் கூறியதாக நம்பப்படுகின்றது. இப்பொழுது அமர்நாத் (அமரத்துவ பிரபு) உங்களுக்குக் கூறுகின்ற, உண்மையான, அமரத்துவக் கதையை நீங்கள் செவிமடுக்கின்றீர்கள். தந்தை இங்கே அமர்ந்திருந்தே உங்களுக்கு அதனைக் கூறுகின்றார். நீங்கள் தந்தையிடம் வந்துள்ளீர்கள். இவரே ‘பாக்கிய இரதம்’ என்பதை நீங்கள் அறிவீர்கள். பாபா இந்த இரதத்தைக் கடனாகப் பெற்றுள்ளார். நாங்கள் சிவபாபாவிடம் செல்கின்றோம், நாங்கள் அவருடைய ஸ்ரீமத்தை மாத்திரமே பின்பற்றுவோம். உங்களுக்கு வேண்டுமாயின், நீங்கள் பாபாவிடம் எதனையும் கேட்கலாம். சிலர் கூறுகின்றார்கள்: பாபா, என்னால், எந்த ஞானத்தையும் பேச முடியாதுள்ளது. பாபா கூறுவார்: நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். இதனையிட்டு பாபாவினால் என்ன செய்ய முடியும்? மேன்மையானவர்கள் ஆகுவதற்குத் தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு மிகவும் இலகுவான வழியைக் காட்டுகின்றார். முதலில், உங்கள் புலன்களைக் கட்டுப்படுத்துங்கள். இரண்டாவதாக, தெய்வீகக் குணங்களைக் கிரகியுங்கள். கோபப்படுகின்ற எவர் கூறுவதையும் செவிமடுக்காதீர்கள். அதனை ஒரு காதால் கேட்டு, மறு காதால் விட்டு விடுங்கள். நீங்கள் விரும்பாத எந்தத் தீய விடயங்களையும் செவிமடுக்காதீர்கள். உங்கள் கணவர் கோபப்பட்டு, உங்களை அடிக்க வருவதைக் காணும்பொழுது, நீங்கள் என்ன செய்ய வேண்டும்? உங்கள் கணவர் கோபப்படுவதை நீங்கள் பார்க்கும் பொழுது, அவர் மீது பூக்களைத் தூவுங்கள். தொடர்ந்தும் அவரைப் பார்த்துப் புன்னகை செய்யுங்கள். பயன்படுத்துவதற்குப் பல சாதுரியங்கள் உள்ளன. காமமும், கோபமும் நிறைந்த பலர் உள்ளனர். அப்பாவிகள் கதறி அழைக்கின்றார்கள். ஒரேயொரு திரௌபதி மாத்திரம் இருக்கவில்லை. நீங்கள் அனைவரும் திரௌபதிகளே. துகில் உரியப்படுவதில் இருந்து உங்களைப் பாதுகாக்கவே தந்தை இப்பொழுது வந்துள்ளார். தந்தை கூறுகின்றார்: இந்த மரண உலகில் இதுவே உங்கள் இறுதிப் பிறவியாகும். நான் குழந்தைகளாகிய உங்களை மௌன தாமத்திற்கு அழைத்துச் செல்லவே வந்துள்ளேன். ஆத்மாக்கள் இன்னமும் தூய்மை அற்றவர்களாக இருப்பதனால், அங்கே போக முடியாது. ஆகையால் நான் அனைவரையும் தூய்மையாக்கவே வந்துள்ளேன். ஒவ்வோர் ஆத்மாவும் என்ன பாகத்தைப் பெற்றிருக்கின்றாரோ, வீடு திரும்புவதற்கு முன்னர், அவர் அந்தப் பாகத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். முழு விருட்சத்தைப் பற்றிய முழு இரகசியங்களும் உங்கள் புத்தியில் உள்ளன. எவ்வாறாயினும் மரத்திலுள்ள அனைத்து இலைகளையும் எவராலும் கணக்கிட முடியாது. எனவே விதையினதும் விருட்சத்தினதும் பற்றிய பிரதான விடயத்தைத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். பல மனிதர்கள் உள்ளனர். ஒவ்வொரு நபருக்குள்ளும் என்ன நடக்கின்றது என்று அவர் அமர்ந்திருந்து, பார்த்துக் கொண்டிருக்க மாட்டார். ஒவ்வொருவரின் உள்ளேயும் என்னவுள்ளது என்பதைக் கடவுள் அறிவார் என்ற நம்பிக்கை மக்களுக்கு உள்ளது. அவை அனைத்தும் குருட்டு நம்பிக்கையாகும். தந்தை கூறுகின்றார்: வந்து, உங்களைத் தூய்மையாக்கி, உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்குமாறு நீங்கள் என்னை அழைத்தீர்கள். நீங்கள் இப்பொழுது இராஜயோகம் கற்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவுசெய்யுங்கள். தந்தையே இந்த வழிகாட்டல்களைக் கொடுப்பவர். தந்தையின் ஸ்ரீமத்தும் வழிமுறைகளும் முற்றிலும் தனித்துவமானவை. ‘வழிமுறை’ என்றால் எங்களுக்குச் சத்கதி அருள்கின்ற, ஆலோசனைகள் ஆகும். அந்த ஒரேயொரு தந்தை மாத்திரமே எங்களுக்குச் சத்;கதி அருள்;கின்றார். இதனை வேறு எவரும் செய்வதில்லை. இந்த நேரத்திலேயே நீங்கள் அவரை அழைக்கின்றீர்கள். நீங்கள் அவரை சத்தியயுகத்திற்கு வருமாறு அழைப்பதில்லை. அனைவருக்கும் சத்கதி அருள்பவர் ஒரேயொரு இராமரே என்று இப்பொழுது மாத்திரமே நீங்கள் கூறுகின்றீர்கள். மக்கள் மாலையின் மணிகளை உருட்டுகின்றார்கள். அவர்கள் அதனை உருட்டிக் கொண்டிருக்கும்போது குஞ்சத்திடம் வரும்பொழுது, அதனை இராமா என்று அழைத்து, தங்கள் கண்களில் ஒற்றிக் கொள்கின்றார்கள். அவர்கள் உச்சரிக்கின்ற பெயர், அந்தக் குஞ்சத்திற்கு உரியது. ஏனைய அனைவரும் அவரது தூய படைப்புக்கள் ஆவார்கள். நீங்கள் இந்த மாலையை மிக நன்றாக அறிவீர்கள். இதுவே தந்தையுடன் சேவை செய்கின்றவர்களின் மாலையாகும். சிவபாபாவைப் படைப்பவர் என்று அழைக்க முடியாது. அவரை நீங்கள் படைப்பவர் என்று அழைத்தால், கேள்வி ஒன்று எழுகின்றது: அவர் எப்பொழுது உலகைப் படைத்தார்? பிராமணர்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் பிரஜாபிதா பிரம்மாவின் மூலம் உருவாக்கப்படுகின்றார்கள். சிவபாபாவின் படைப்பு அநாதியானது. தந்தை தூய்மை அற்றவர்களைத் தூய்மை ஆக்குவதற்கே வருகின்றார். இப்பொழுது இது பழைய உலகம். தேவர்கள் புதிய உலகில் வசிக்கின்றார்கள். இப்பொழுது சூத்திரர்களைத் தேவர்களாக மாற்றுவது யார்? நீங்கள் இப்பொழுது மீண்டும் ஒருமுறை தேவர்கள் ஆகுகின்றீர்கள். பாபா உங்களைச் சூத்திரர்களில் இருந்து பிராமணர்களாகவும் பிராமணர்களில் இருந்து தேவர்களாகவும் மாற்றுகின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் தேவர்கள் ஆகுவதற்காகவே பிராமணர்கள் ஆகியுள்ளீர்கள். ஆகையால் பிரம்மாவே மனித உலகைப் படைப்பவர் ஆகுகின்றார். அவரே மனித உலகின் தலைவர் ஆவார். ஆனால் சிவனே ஆத்மாக்கள் அனைவரதும் அழிவற்ற தந்தை ஆவார். நீங்கள் இப்பொழுது இப்புதிய விடயங்கள் அனைத்தையும் செவிமடுக்கின்றீர்கள். புத்திசாலிகள் இவற்றை மிகவும் நன்றாகக் கிரகிக்கின்றார்கள். படிப்படியாக, உங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். நீங்கள் எவ்வாறு ஆதியில் தேவர்களாக இருந்தீர்கள் என்பதும் பின்னர் நீங்கள் எவ்வாறு 84 பிறவிகளை எடுத்தீர்கள் என்பதும் உங்களுக்கு நினைவூட்டப்படுகின்றது. உங்களுக்கு அதன் இரகசியங்கள் அனைத்தும் தெரியும். மேலதிகமாக எதற்குள்ளும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தந்தை கூறுகின்றார்: நீங்கள் உங்கள் முழு ஆஸ்தியையும் தந்தையிடம் இருந்து பெறுவதற்குச் செய்ய வேண்டிய பிரதான விடயமானது, முதலில் அவரை நினைவுசெய்ய வேண்டும், இரண்டாவதாக, தூய்மையாக வேண்டும். சுயதரிசனச் சக்கரதாரி ஆகி, பிறரையும் உங்களைப் போன்று ஆக்குங்கள். அது மிகவும் இலகுவானது. நினைவு மாத்திரமே நிலைத்திருப்பதில்லை. இந்த ஞானம் மிகவும் இலகுவானது. பழைய உலகம் இப்பொழுது அழிக்கப்படவுள்ளது. பின்னர் புதிய சத்தியயுகத்து உலகைத் தேவர்கள் ஆட்சி செய்வார்கள். இந்த உலகில் தேவர்களின் ரூபங்களும் அவர்களின் மாளிகைகளுமே பழைமையானவை. நீங்களே உலகின் அதி பழைமையான சக்கரவர்த்திகளும் சக்கரவர்த்தினிகளுமாக இருந்தீர்கள் என நீங்கள் சொல்கிறீர்கள். அந்தச் சரீரங்கள் அழிக்கப்படும். ஆனால், அவர்களின் உருவங்கள் இன்னமும் தொடர்ந்தும் உருவாக்கப்படுகின்றன. ஆட்சி செய்த இலக்ஷ்மியும் நாராயணனும் எங்கே சென்று விட்டார்கள் என்றோ அல்லது அவர்கள் எவ்வாறு அந்த இராச்சியத்தைப் பெற்றார்கள் என்றோ எவரும் அறியார். பிர்லா (இலக்ஷ்மி நாராயணன் ஆலயத்தைக் கட்டிய தொழிலதிபர்) பல ஆலயங்களைக் கட்டுகின்றார், ஆனால் அவருக்கு எதுவும் தெரியாது. அவர் தொடர்ந்தும் பல நன்கொடைகளைப் பெற்று மென்மேலும் கட்டுகின்றார். அதனைத் தேவர்களின் ஆசீர்வாதம் என்றே அவர் நம்புகின்றார். சிவனை வழிபடுதல் மாத்திரமே கலப்படமற்ற பக்தியாகும். ஒரேயொரு ஞானக்கடல் மாத்திரமே இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். ஏனைய அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கு உரியவை. பக்திக்கான அவசியம் இல்லாத பொழுது, இந்த ஞானத்தின் மூலம் அரைக்கல்பத்திற்குச் சத்கதி கிடைக்கும். ‘ஞானம், பக்தி, விருப்பமின்மை’ என்றே கூறப்படுகின்றது. இப்பொழுது பக்தியிலும் பழைய உலகிலும் விருப்பமின்மை உள்ளது. பழைய உலகம் இப்பொழுது அழிக்கப்பட உள்ளது. ஆகையால் அதன் மீது ஏன் நீங்கள் கவரப்பட வேண்டும்? இந்த நாடகம் இப்பொழுது முடிவடைகின்றது, நாங்கள் வீடு திரும்பவுள்ளோம். இந்தச் சந்தோஷம் உள்ளது. தாங்கள் மீண்டும் திரும்பி வரவேண்டியதில்லை என்பதால், அநாதியாக முக்தி அடைவது நல்லது என்று சிலர் நினைக்கின்றார்கள். ஆத்மாக்கள் கடலில் அமிழ்ந்துவிடும் குமிழ்கள் என்று அவர்கள் நினைக்கின்றார்கள். அவை அனைத்தும் பொய்யாகும். ஒரு நடிகர் நிச்சயமாக நடிப்பார். அவர் வீட்டிலேயே இருந்தால், அவர் நடிகராக இருக்க முடியாது. மோட்சம் என்பது இருக்க முடியாது, இந்த நாடகம் அநாதியாக நிச்சயிக்கப்பட்டது. இங்கே நீங்கள் அதிகளவு ஞானத்தைப் பெறுகின்றீர்கள். இவை எதுவுமே ஏனைய மனிதர்களின் புத்தியில் இல்லை. உங்களின் பாகங்களுக்கு ஏற்ப, நீங்கள் தந்தையிடம் இருந்து இந்த ஞானத்தைப் பெற்று, உங்கள் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். நீங்கள் இந்த நாடகத்தின் பந்தனத்தினால் கட்டுப்பட்டுள்ளீர்கள். நீங்கள் நிச்சயமாக முயற்சி செய்ய வேண்டும். நாடகத்தில் இருந்தால் நீங்கள் எதையாவது பெறுவீர்கள் என்றில்லை. அவ்வாறாயின், நீங்கள் எதுவுமே செய்யாது வெறுமனே அமர்ந்திருக்கலாமே! எனினும் எவராலும் செயல்கள் செய்வதை நிறுத்த முடியாது. கர்மத்தைத் துறத்தல் என்பது இருக்க முடியாது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. யோக சக்தியின் வலிமையின் மூலம் உங்கள் புலன்களைக் குளிர்மையாகவும் சாந்தமாகவும் வைத்திருங்கள். அவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள். தீய விடயங்களைப் பற்றிப் பேசவோ அல்லது செவிமடுக்கவோ வேண்டாம். நீங்கள் விரும்பாத விடயங்களை ஒரு காதால் கேட்டு, மறு காதால் விட்டுவிடுங்கள்.

2. தந்தையிடம் இருந்து உங்கள் முழுமையான ஆஸ்தியைப் பெறுவதற்கு, ஒரு சுயதரிசனச் சக்கரதாரி ஆகுங்கள். தூய்மையாகி, பிறரையும் உங்களைப் போன்றவர்கள் ஆக்குவதற்குச் சேவை செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு முரளிதார் ஆகி, முரளியின் சங்கீதத்திற்கு மாயையைச் சரண் அடையச் செய்வீர்களாக.

நீங்கள் பல முரளிகளைக் கேட்டுள்ளீர்கள். அதனால் அந்த முரளிக்கு மாயையே தன்னை அர்ப்பணிக்கத்தக்க வகையில் நீங்கள் இப்போது முரளிதார் ஆகவேண்டும். நீங்கள் சதா முரளியின் இரகசியங்களின் சங்கீதத்தைப் பாடினால், மாயை எல்லா வேளைக்கும் தன்னை அர்ப்பணித்து விடுவாள். மாயை உங்களிடம் வருகின்ற பிரதானமான வடிவம், நீங்கள் சாக்குப் போக்குகள் சொல்வதே ஆகும். முரளியினூடாக நீங்கள் சாக்குப் போக்குகளுக்கான தீர்வைக் கண்டுவிட்டால், மாயை எல்லா வேளைக்குமாக முடிந்து விடுவாள். சாக்குப்போக்குகள் முடிவடைதல் என்றால் மாயை முடிவடைதல் என்று அர்த்தம்.

சுலோகம்:
அனுபவ சொரூபி ஆகுங்கள். உங்களின் சந்தோஷ பாக்கியத்தின் பிரகாசம் உங்களின் முகத்தில் புலப்படும்.

அவ்யக்த சமிக்கை: ஆன்மீக இராஜரீகம் மற்றும் தூய்மையின் ஆளுமையைக் கடைப்பிடியுங்கள்.

சங்கமயுக பிராமண வாழ்க்கையின் சிறப்பியல்பு தூய்மையாகும். உங்களின் இல்லறத்தில் வாழும்போது, தூய்மையின்மைக்கு அப்பாற்பட்டு இருங்கள். உங்களின் கனவுகளிலேனும் தூய்மையின்மையின் எந்தவோர் எண்ணத்திற்கும் அப்பாற்பட்டு இருங்கள். இதுவே உலகிற்கு சவால் விடுவதற்கான வழிமுறை ஆகும். இதுவே பிராமணர்களான உங்களின் ஆன்மீக இராஜரீகமும் ஆளுமையும் ஆகும்.