01.11.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் இந்த ஆன்மீகப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள். தந்தையின் செய்தியை முழு உலகிற்கும் கொடுக்க வேண்டியது உங்கள் கடமையாகும்.
கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் எதனைப் பற்றி முரசு கொட்டி, அனைவருக்கும் என்ன விளங்கப்படுத்துகின்றீர்கள்?பதில்:
புதிய தெய்வீக இராச்சியம் மீண்டும் ஒருமுறை ஸ்தாபிக்கப்படுவதுடன் அனைத்து எண்ணற்ற சமயங்களும் இப்பொழுது அழிக்கப்பட உள்ளன என்பதை அனைவருக்கும் கூறுவதற்காகவே முரசு கொட்டுகின்றீர்கள். நீங்கள் அனைவரையும் கவலையற்றவர்களாக இருக்குமாறு கூறுகின்றீர்கள், ஏனெனில் அது சர்வதேச பிரச்சைனையாகும். யுத்தம் நிச்சயமாக இடம்பெறும், அதன்பின்னர் தெய்வீக இராச்சியம் வரும்.ஓம் சாந்தி.
இது ஆன்மீகப் பல்கலைக்கழகமாகும். முழு உலகிலும், ஆத்மாக்கள் அனைவருமே ஒரு பல்கலைக்கழகக்தில் கற்கின்றார்கள். ‘யுனிவர்ஸ்’ என்றால் உலகமாகும். சட்டப்படி, ‘பல்கலைக்கழகம்’ என்ற வார்த்தை குழந்தைகளாகிய உங்களுக்கே பொருத்தமாகும். இது ஓர் ஆன்மீகப் பல்கலைக்கழகமாகும். இது பௌதீகப் பல்கலைக்கழகமாக இருக்க முடியாது. இது மாத்திரமே இறை தந்தையின் பல்கலைக் கழகமாகும். ஆத்மாக்கள் அனைவரும் பாடநெறிகளைப் பெறுகின்றார்கள். நீங்கள் கொடுக்கும் இச்செய்தி ஏதாவது ஒரு வகையில் நிச்சயமாக எல்லோரையும் சென்றடைய வேண்டும். நீங்கள் இச்செய்தியைக் கொடுக்கவே வேண்டும். இச்செய்தி மிகவும் சாதாரணமானது. அவர் (கடவுள்) எங்கள் எல்லையற்ற தந்தையும், அவரே அனைவராலும் நினைவு செய்யப்படுபவரும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அவரே உங்கள் எல்லையற்ற அன்பிற்கினியவரென்றும், உலகிலுள்ள உயிர்வாழும் ஆத்மாக்கள் அனைவரும், நிச்சயமாக அந்த ஒரேயொரு அன்பிற்கினியவரையே நினைவு செய்கின்றார்கள் என்றும் நீங்கள் கூறலாம். நீங்கள் இக் கருத்துக்களை மிக நன்றாகக் கிரகிக்க வேண்டும். தெளிவான புத்தியுள்ளவர்களால் அனைத்தையும் மிக நன்றாகக் கிரகிக்க முடியும். உலகிலுள்ள ஆத்மாக்கள் அனைவரதும் தந்தை ஒரேயொருவரே. மனிதர்கள் மாத்திரமே ஒரு பல்கலைகழகத்தில் கற்கின்றார்கள். நீங்களே 84 பிறவிகளை எடுக்கின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். 8.4 மில்;லியன் பிறப்புகள் என்ற கேள்விக்கே இடமில்லை. இந்த நேரத்தில், உலகில் உள்ள ஆத்மாக்கள் அனைவரும் தூய்யைற்றவர்களாகவே உள்ளார்கள். இந்தத் தீய உலகம் துன்ப உலகமாகும். ஒரேயொரு தந்தையே உங்களை அந்த சந்தோஷ உலகிற்கு அழைத்துச் செல்கின்றார். அவர் முக்தியளிப்பவர் என்றும் அழைக்கப்படுகின்றார். நீங்கள் முழு உலகிற்கும், பிரபஞ்சத்திற்கும் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். தந்தை உங்கள் அனைவரிடமும் கூறுகின்றார்: அவைரிடமும் சென்று இச் செய்தியைக் கொடுங்கள். அனைவரும் தந்தையை நினைவு செய்கின்றார்கள். அவர் வழிகாட்டியும், முக்தியளிப்பவரும், கருணைநிறைந்தவரும் என அழைக்கப்படுகின்றார். பல மொழிகள் உள்ளன. ஆத்மாக்கள் அனைவரும் ஒரேயொருவரையே கூவி அழைக்கின்றார்கள். ஆகையால், அவர் முழு உலகிற்கும் ஆசிரியரும் ஆவார். எவ்வாறாயினும் அவரே தந்தை என்றாலும், அவரே ஆத்மாக்களாகிய எங்கள் அனைவருக்கும் ஆசிரியரும், குருவும் என்பது எவருக்கும் தெரியாது. அவர் அனைவருக்கும் வழிகாட்டுகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே எல்லையற்ற வழிகாட்டியை அறிந்திருக்கின்றீர்கள். வேறு எவருமன்றி பிராமணர்களாகிய நீங்கள் மாத்திரமே அவரை அறிந்திருக்கின்றீர்கள். ஆத்மா என்றால் என்ன என்பதை நீங்கள் மாத்திரமே அறிந்துள்ளீர்கள். ஓர் ஆத்மா என்றால் என்ன என்பதை உலகிலுள்ள வேறு எவருமே புரிந்து கொண்டிருக்கவில்லை. குறிப்பாகப் பாரதத்திலும். பொதுவாக உலகிலும், எவருமே ஆத்மா என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. நெற்றியின் நடுவில் அற்புதமான ஆத்மா பிரகாசித்துக் கொண்டிருக்கின்றார் என்று அவர்கள் கூறிய போதிலும், அவர்கள் எதனையும் புரிந்து கொள்ளவில்லை. ஆத்மாக்கள் அழிவற்றவர்கள் என்பதை இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். இந்த ஆத்மா என்றுமே அளவில் சிறிதாகவோ பெரிதாகவோ ஆகுவதில்லை. நீங்கள் ஓர் ஆத்மா என்பதைப் போன்றே தந்தையும் ஒரு புள்ளி ஆவார். அவர் அளவில் பெரிதாகவோ சிறிதாகவோ ஆகுவதில்லை. அவரும் ஓர் ஆத்மாவே, ஆனால் அவரே பரமாத்மாவாகிய பரமன் ஆவார். உண்மையில், ஆத்மாக்கள் அனைவரும் பரந்தாம வாசிகளே ஆவர். அவர்கள் தமது பாகத்தை நடிப்பதற்காக இங்கே வருகின்றார்கள். அதன் பின்னர் மீண்டும் அவர்கள் தமது பரந்தாமத்திற்குச் செல்ல முயற்சிக்கின்றார்கள். அனைவரும் பரமாத்மாவான பரமதந்தையை நினைவு செய்கின்றார்கள் ஏனெனில், பரம தந்தை மாத்திரமே ஆத்மாக்களை முக்திக்கு அழைத்துச் செல்கின்றார். ஆகையால் அவர்கள் அவரை நினைவு செய்கின்றார்கள். ஆத்மாக்கள் தமோபிரதான் ஆகியுள்ளார்கள். அவர்கள் ஏன் அவரை நினைவு செய்கின்றார்கள்? இதுவும் அவர்களுக்குத் தெரியாது. ஒரு சிறு குழந்தை ‘பாபா’ எனக் கூறுகின்றது, அவ்வளவுதான்.! அவருக்கு எதுவும் தெரியாது. அதனைப் போன்றே நீங்களும் ‘பாபா, மம்மா’ எனக் கூறுகின்றீர்கள், ஆனால் உங்களுக்கு எதுவும் தெரியாது. பாரதத்தில் ஒரு இனம் மாத்திரமே இருந்தது. அது தேவ இனம் என அழைக்கப்பட்டது. பின்னர், பல இனங்கள் உருவாகின. இப்பொழுது பல இனங்கள் இருப்பதாலேயே அதிகளவு சண்டை போன்றன இடம்பெறுகின்றன. எங்கெல்லாம் ஏனைய இனத்தவர்கள் வாழ்கின்றார்களோ, அங்கே வாழும் உள்நாட்டவர்கள் தொடர்ந்தும் அவர்களை வெளியேற்றவே முயற்சிக்கின்றார்கள். அதிகளவு சண்டை இடம்பெறுகின்றது. அதிகளவு இருள் சூழ்ந்துள்ளது. எதற்கும் ஓர் எல்லை இருக்க வேண்டும். நடிகர்களின் எண்ணிக்கைக்கு ஓர் எல்லையுள்ளது. நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. நடிகர்கள் எத்தனை பேர் உள்ளனரோ, அந்த எண்ணிக்கையை விட குறைவாகவோ அல்லது கூடவோ முடியாது. நடிகர்கள் அனைவரும் மேடைக்கு வந்த பின்னர். அவர்கள் மீண்டும் வீடு திரும்ப வேண்டும். இன்னமும் மேலே எஞ்சியுள்ளவர்கள் தொடர்ந்தும் கீழே இறங்குகின்றார்கள். அவர்கள் சனத்தொகையைக் கட்டுப்படுத்த எவ்வளவு பிரயத்தனம் செய்த போதிலும், அதனை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்களிடம் கூறுங்கள்;: பிரம்மகுமாரிகளைப் பொறுத்தவரை 900,000 பேர் மாத்திரமே எஞ்சியிருக்கும் வகையில் அவர்கள் குடும்பக் கட்டுப்பாட்டைச் செய்கின்றார்கள். முழுச் சனத்தொகையும் குறைக்கப்படும். நாங்கள் உங்களுக்கு உண்மையைக் கூறுகின்றோம். நாங்கள் இப்பொழுது அந்த உலகை ஸ்தாபிக்கின்றோம். புதிய உலகம், புதிய விருட்சம் நிச்சயமாகச் சிறிதாகவே இருக்கும். அதனை இங்கிருக்கும் எவராலும் கட்டுப்படுத்த முடியாது. ஏனெனில் அந்த உலகம் மேலும் மேலும் தமோபிரதான் ஆகுகின்றது. சனத்தொகை தொடர்ந்தும் அதிகரிக்கின்றது. இனிமேலும் வரவுள்ள நடிகர்கள் அனைவரும், இங்கே வந்து சரீரங்களை எடுப்பார்கள். எவருக்கும் இவ்விடயங்கள் புரியாது. ஓர் இராச்சியத்தில் எல்லா வகையான நடிகர்களும் இருப்பார்கள் என்பதைக் கூர்மையான புத்தியுடையவர்கள் புரிந்து கொள்கின்றார்கள். சத்தியயுகத்தில் நிலவிய இராச்சியம் மீண்டும் ஸ்தாபிக்கப்படுகின்றது. அதன் பின்னர் நீங்கள் இடம் மாற்றப்படுவீர்கள். நீங்கள் இப்பொழுது தமோபிரதானில்; இருந்து சதோபிரதான் தரத்திற்கு மாற்றப்படுகின்றீர்கள். நீங்கள் பழைய உலகில் இருந்து புதிய உலகிற்குச் செல்கின்றீர்கள். உங்கள் கல்வி இவ்வுலகிற்கானது அல்ல. அதனைப் போன்ற வேறு எந்தப் பல்கலைக்கழகமும் இருக்க முடியாது. தந்தையான கடவுள் கூறுகின்றார்: நான் அமரத்துவ உலகிற்காகக் கற்பிக்கின்றேன். இந்த மரண உலகம் அழிக்கப்பட வேண்டும். சத்தியயுகத்தில் இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் நிலவியது. அது எவ்வாறு ஸ்தாபிக்கப்பட்டது என்பதை எவரும் அறிய மாட்டார்கள். பாபா எப்பொழுதும் கூறுகின்றார்: நீங்கள் சொற்பொழிவாற்றச் செல்லும் இடத்திற்கெல்லாம் நீங்கள் இலக்ஷ்மி நாராயணனின் படத்தை எடுத்துச் செல்ல வேண்டும். அதில் திகதியும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். புதிய உலக ஆரம்பத்தில், முதல் 1250 வருடங்களுக்கு அந்த வம்சத்தின் இராச்சியமே நிலவுகின்றது என நீங்கள் விளங்கப்படுத்தலாம். அது போன்றே, ‘கிறிஸ்தவ வம்சத்தின் இராச்சியமும் உள்ளது’ எனக் கூறப்படுகின்றது. அவர்கள் ஒருவரையொருவர் தொடர்ந்தும் பின்பற்றுகின்றனர். தேவ வம்சம் நிலவிய போது, வேறு எவரும் இருக்கவில்லை. இந்த வம்சமே மீண்டும் ஒருமுறை ஸ்தாபிக்கப்படுகின்றது. ஏனைய அனைவரும் அழிக்கப்பட வேண்டும். யுத்தம் சற்று முன்னாலேயே உள்ளது. பாகவதம் போன்றவற்றில் உள்ள கதைகள் அனைத்தும் இவற்றின் அடிப்படையிலேயே உள்ளது. எங்கள் குழந்தைப் பருவத்தில் இக்கதைகளை நாங்கள் கேட்பதுண்டு. இப்பொழுது இந்த இராச்சியம் எவ்வாறு ஸ்தாபிக்கப்படுகின்றது என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். தந்தை நிச்சயமாக எங்களுக்கு இராஜயோகம் கற்பித்தார். சித்தியடைபவர்கள் வெற்றி மாலையில் ஒருவர் ஆகுகின்ற போதிலும், ஏனையோரோ இந்த மாலையைப் பற்றியே அறியாதுள்ளனர். உங்களுக்கு மாத்திரமே இது தெரியும். உங்களுடையது இல்லறப்பாதையாகும். பாபா மேலே இருக்கின்றார். அவர் தனக்கென ஒரு சரீரத்தைக் கொண்டிருக்கவில்லை. அதன் பின்னர் பிரம்மாவும் சரஸ்வதியும் உள்ளார்கள், அவர்களே நாராயணனும் இலக்ஷ்மியும் ஆகுகின்றார்கள். முதலில் தந்தையும் பின்னர் தம்பதியினரும் இருக்க வேண்டும். உருத்திராட்ச மணி (டிநயன) உள்ளது. நேபாளத்தில் உள்ள ஒரு மரத்திலேயே அவர்கள் உருத்திர மணிகளை எடுக்கின்றார்கள். அதில் சில உண்மையானவையும் உள்ளன. எந்தளவிற்கு சிறிதாக உள்ளதோ அந்தளவிற்கு அவை விலையுயர்ந்ததாகவும் உள்ளன. இப்பொழுது உங்களுக்கு இதன் அர்த்தம் புரிகின்றது. விஷ்ணுவின் வெற்றி மாலை அதாவது, ருண்ட மாலை உருவாக்கப்படுகின்றது. அவர்கள் மாலையை உருட்டியவாறே இராமரின் பெயரை உச்சரிக்கின்றார்கள், ஆனால் அதில் எந்த அர்த்தமும் இல்லை. அவர்கள் தொடர்ந்தும் மாலையின் மணிகளை உருட்டுகின்றார்கள். இங்கே, தந்தை கூறுகின்றார்;: என்னை நினைவு செய்யுங்கள்! இது சப்தமற்ற உச்சரிப்பாகும். உங்கள் வாயினால் எதனையும் நீங்கள் கூறத் தேவையில்லை. பாடல்களும் பௌதீகமானவையே. குழந்தைகளாகிய நீங்கள் தந்தையை நினைவு செய்ய வேண்டும். அல்லது நீங்கள் தொடர்ந்தும் பாடல்களையே நினைவு செய்வீர்கள். இங்கே பிரதான விடயம் நினைவு ஆகும். நீங்கள் சப்தத்திற்கு அப்பாற் செல்ல வேண்டும். தந்தையின் வழிகாட்டல்: மன்மனாபவ! தந்தை உங்களிடம் பாடல்களைப் பாடுங்கள் என்றோ சப்தமாகப் பேசுங்கள் என்றோ கூறுவதில்லை. என்னுடைய புகழைப் பாடத் தேவையில்லை. அவரே ஞானக் கடலும், அவரே அமைதிக்கடலும், சந்தோஷக் கடலும் ஆவார். மனிதர்கள் இதனைப் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் அவருக்கு அப்பெயர்களை மாத்திரமே கொடுத்துள்ளார்கள். உங்களைத் தவிர வேறு எவருக்கும் இது தெரியாது. தந்தை வந்து உங்களிடம் தனது பெயரையும் வடிவத்தையும் கூறுகின்றார். அவர் தான் எவ்வாறானவர் என்பதையும் ஆத்மாக்களாகிய நீங்கள் எவ்வாறானவர்கள் என்பதையும் விளங்கப்படுத்துகின்றார். உங்கள் பாகத்தை நடிக்கையில் அதிகளவு முயற்சி செய்து விட்டீர்கள். நீங்கள் அரைக்கல்பத்திற்கு பக்தி செய்தீர்கள். நான் அத்தகைய பாகத்தை நடிப்பதில்லை. நான் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் அப்பாற்பட்டவன். நீங்கள் துன்பத்தை அனுபவம் செய்த பின்னர், சத்தியயுகத்தில் நீங்கள் சந்தோஷத்தை அனுபவம் செய்கின்றீர்கள். உங்களுடைய பாகங்கள் என்னுடையதை விடவும் மேலானது. நான் அரைக்கல்பத்திற்கு அங்கே மேலே சௌகரியமாக ஓய்வு ஸ்திதியில் அமர்ந்திருக்கின்றேன். நீங்கள் தொடர்ந்தும் என்னைக் கூவி அழைக்கின்றீர்கள். நான் அங்கிருக்கும் போது, உங்கள் அழைப்பை செவிமடுக்கின்றேன் என்றில்லை. எனது பாகம் இந்த நேரத்திற்கானதாகும். நாடகத்தில் உள்ள பாகத்தை நான் அறிவேன். நாடகம் இப்பொழுது முடிவிற்கு வருகிறது. நான் தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குகின்ற எனது பாகத்தை நடிக்க வரவேண்டுமே அல்லாது வேறு எதற்காவும் அல்ல. பரமாத்மா சர்வசக்திவான் என்பதால் அனைவருக்குள்ளும் இருப்பதை அவர் அறிவார் என மக்கள் நம்புகின்றார்கள். ஒவ்வொருவருக்குள்ளும் என்ன நடக்கின்றது என்பதை அவர் அறிவார் என அவர்கள் நினைக்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: அவ்வாறில்லை. நீங்கள் முற்றிலும் தமோபிரதான் ஆகும் போது, அதுவே நான் வருவதற்குரிய மிகச் சரியான நேரமாகும். நான் ஒரு சாதாரண சரீரத்தில் பிரவேசிக்கின்றேன். நான் வந்து குழந்தைகளாகிய உங்களைத் துன்பத்திலிருந்து விடுவிக்கின்றேன். பிரம்மாவின் மூலம் ஒரேயொரு தர்மத்தின் ஸ்தாபனையும், சங்கரரின் மூலம் எண்ணிக்கையற்ற சமயங்களின் விநாசமும் இடம்பெறுகின்றன. விரக்திக் கூக்குரலின் பின்னர், வெற்றி முரசு கொட்டும். அதிகளவு துயரம் நிலவும்! மக்கள் தொடர்ந்தும் இயற்கை அனர்த்தங்களினால் மரணிப்பார்கள். இயற்கை அனர்த்தங்களினால் அதிகளவு உதவி கிடைக்கின்றது. அல்லாதுவிடின், மக்கள் பெரும் நோயாளிகளாகி அதிகளவு துன்பத்தை அனுபவம் செய்ய நேரிடும். தந்தை கூறுகின்றார்;: குழந்தைகள் தொடர்ந்தும் துன்பத்தை அனுபவம் செய்யாதிருக்கவே, இயற்கை அனர்த்தங்கள் மிகப் பயங்கரமாக வந்து அனைவரையும் அழிக்கின்றன. குண்டுகளோ அற்ப விடயம்! இயற்கை அனர்த்தங்களே அதிகளவு உதவுகின்றன. பூமி அதிர்ச்சியில் அதிகளவு மக்கள் மரணிக்கின்றார்கள். நீரலைகள் ஓரிரு முறை மேலெழும்பும் போதும் மக்கள் மரணிப்பார்கள். கடலில் பேரலைகள் ஏற்படும். நூறு அடி உயரத்திற்கு அலைகள் உருவாகி பூமி அதில் புதையுண்டு போகும். அப்பொழுது என்ன நடக்கும்? விரக்தியின் காட்சிகள் ஆகும். அத்தகைய காட்சிகளைக் காண்பதற்கு அதிகளவு தைரியம் தேவையாகும். நீங்களும் முயற்சி செய்து பயமற்றவர்கள் ஆக வேண்டும். குழந்தைகளாகிய உங்களுக்கு சற்றும் அகங்காரம் இருக்கக் கூடாது. ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுங்கள்! ஆத்ம உணர்வுடையவர்கள் மிகவும் இனிமையானவர்கள். தந்தை கூறுகின்றார்: நான் அசரீரியானவனும் தனித்துவமானவனும் ஆவேன். நான் அனைவருக்கும் சேவை செய்யவே இங்கு வருகின்றேன். என்னை மக்கள் எவ்வளவு புகழ்கின்றார்கள் எனப்பாருங்கள். ஞானக்கடல். ஓ பாபா! பின்னர் அவர்கள் கூறுகின்றார்கள்: தூய்மையற்ற உலகிற்கு வாருங்கள்! நீங்கள் எனக்குச் சிறந்ததோர் அழைப்பிதழைக் கொடுக்கின்றீர்கள்! சுவர்க்கத்தில் உள்ள சந்தோஷத்தைப் பார்ப்பதற்கு நீங்கள் என்னை அங்கே அழைப்பதில்லை! நீங்கள் கூவி அழைக்கின்றீர்கள்: ஓ தூய்மையாக்குபவரே, நாங்கள் தூய்மையற்றவர்கள்! எங்களை வந்து தூய்மை ஆக்குங்கள்! எனக்கு நீங்கள் கொடுக்கின்ற அழைப்பிதழைப் பாருங்கள்! நீங்கள் என்னை முற்றிலும் தமோபிரதானான, தூய்மையற்ற உலகிற்கும், தூய்மையற்ற சரீரத்திற்குள்ளுமே அழைக்கின்றீர்கள்! பாரதமக்களாகிய நீங்கள் எனக்கு சிறந்ததொரு அழைப்பிதழையே கொடுக்கின்றீர்கள்! அதுவே நாடகத்தின் முக்கியத்துவம் ஆகும். இதுவே இவரது பல பிறவிகளின் இறுதிப் பிறவி என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. பாபா அவரினுள் பிரவேசித்த பின்னரே அவருக்கு அது கூறப்பட்டது. பாபா அனைத்தினது முக்கியத்துவத்தையும் விளங்கப்படுத்தியுள்ளார். பிரம்மா அவரது மனைவியாக வேண்டும். பாபாவே கூறுகின்றார்;: இவர் எனது மனைவி. நான் இவருக்குள் பிரவேசித்து அவரினூடாக உங்களைத் தத்தெடுக்கின்றேன். இவரே உண்மையான மூத்த தாய் ஆவார். அவர் தத்தெடுக்கப்பட்ட தாயாவார். நீங்கள் அவர்களைத் ‘தாயும் தந்தையும்’ என அழைக்கலாம். நீங்கள் ‘தந்தை’ என்று சிவபாபாவை மாத்திரமே கூறுகின்றீர்கள். இவர் பிரம்ம பாபா. மம்மா மறைமுகமானவர். பிரம்மா தாயாவார், ஆனால் அவர் ஆண் சரீரத்தைக் கொண்டிருக்கின்றார். அவரால் உங்களைப் பராமரிக்க முடியாததாலேயே புத்திரி தத்தெடுக்கப்பட்டார். அவருக்கு மாதேஸ்வரி சரஸ்வதி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. அவரே தலைமை நிர்வாகி (hநயன) ஆவார். நாடகத்திற்கு ஏற்ப ஒரேயொரு சரஸ்வதி மாத்திரமே உள்ளார். ஆனால் ‘துர்க்கா, காளி’ போன்ற பல பெயர்கள் உள்ளன. ஒரேயொரு தாயும் தந்தையும் மாத்திரமே இருக்க முடியும். நீங்கள் அனைவரும் குழந்தைகள். பிரம்மாவின் புத்திரி சரஸ்வதி என நினைவு கூரப்பட்டுள்ளது. நீங்கள் பிரம்ம குமார்களும் பிரம்மகுமாரிகளும் ஆவீர்கள். உங்களுக்கு பல பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவ்விடயங்கள் அனைத்தையும் புரிந்து கொண்டிருப்பவர்களும், அவற்றை வரிசைக்கிரமமாகவே புரிந்திருக்கின்றீர்கள். ஒரு கல்வியில். அனைவரும் வரிசைக்கிரமமாகவே உள்ளனர். ஒருவர் மற்றவரைப் போன்றிருக்க முடியாது. இந்த இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது. இந்த நாடகம் முன்னரே நிச்சயிக்கப்பட்டது. இது மிகவும் விபரமாகப்; புரிந்து கொள்ளப்பட வேண்டும். பல கருத்துக்கள் உள்ளன. சட்டநிபுணராகுவதற்குக் கற்பவர்களும் வரிசைக்கிரமமாவே இருக்கின்றார்கள். சில சட்டநிபுணர்கள் இரண்டு மூன்று நூறு ஆயிரங்களைச் சம்பாதிப்பவர்களாக இருக்கின்ற போதிலும் சிலர் கிழிந்த ஆடைகளை அணிகின்றார்கள். இங்கும் அவ்வாறே. சர்வதேசப் பிரச்சினையொன்று ஏற்படவுள்ளது எனக் குழந்தைகள் அனைவருக்கும் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. இப்பொழுது நீங்கள் அனைவரிடமும் கவலையற்றவர்களாக இருங்கள் எனக் கூற வேண்டும். யுத்தம் நிச்சயமாக இடம்பெறும். புதிய தெய்வீக இராச்சிம் மீண்டும் ஒருமுறை ஸ்தாபிக்கப்படுகின்றது என்பதை முரசு கொட்டி நீங்கள் அறிவிக்கின்றீர்கள். எண்ணிக்கையற்ற சமயங்களின் விநாசம் உள்ளது. இது மிகத் தெளிவாகத் தெரிகின்றது! இம் மக்கள் அனைவருமே பிரஜாபிதா பிரம்மாவினால் உருவாக்கப்படுகின்றார்கள். அவர் கூறுகின்றார்: இவர்கள் எனது வாய்வழித் தோன்றல்கள். நீங்கள் வாய்வழித் தோன்றல்களான பிராமணர்கள். அந்தப் பிராமணர்கள் விகாரத்தினூடாகப் பிறக்கின்றார்கள். அவர்கள் வழிபடுபவர்கள் நீங்களோ இப்பொழுது வழிபடத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் வழிபடத்தகுதி வாய்ந்த தேவர்கள் ஆகுகின்றீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது உங்களிடம் ஒளிக்கிரீடம் இல்லை. ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையாகிய பின்னர், நீங்கள் சரீரங்களை விட்டுநீங்கிச் செல்வீர்கள். தற்போதைய உங்கள் சரீரத்தில் நீங்கள் இருக்கும் போது உங்களுக்கு ஒளிக் கிரீடம் கொடுக்கப் பட முடியாது. அது உங்களுக்கு பொருத்தமாக இருக்க மாட்டாது. இப்பொழுது நீங்கள் போற்றத்தகுதியானவர்கள் மாத்திரமே. இந்த நேரத்தில் எந்த ஆத்மாவுமே தூய்மையாக இல்லை. அதனாலேயே இந்நேரத்தில், எவர் மீதும் ஒளி இருக்க முடியாது. சத்தியுகத்திலேயே ஒளி உள்ளது. இரு கலைகளே குறைந்திருப்பவர்கள் மீதேனும் இவ் ஒளியைக் காட்டக் கூடாது. அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. விநாசத்தின் இறுதிக் காட்சிகளைப்; பார்க்கக் கூடியளவிற்கு உங்கள் ஸ்திதியை ஆட்ட அசைக்க முடியாததாகவும், அச்சமற்றதாக்கவும் ஆக்கிக் கொள்ளுங்கள். ஆத்ம உணர்வுடையவர்; ஆகுவதற்கு முயற்சி செய்யுங்கள்.2. புதிய இராச்சியத்தில் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவதற்கு, உங்கள் கல்வியில் கவனம் செலுத்துங்கள். சித்தியடைந்து வெற்றிமாலையில் ஒரு மணியாகுங்கள்.
ஆசீர்வாதம்:
சதா கடவுளினதும் உங்கள் பாக்கியத்தினதும் விழிப்புணர்வில் நிலைத்திருந்து, அதிமேன்மையான பாக்கியசாலி ஆத்மா ஆகுவீர்களாக.சங்கமயுகத்தில், கடவுள் உயிருள்ள வடிவில் தனது குழந்தைகளுக்கு சேவை செய்கின்றார். பக்தி மார்க்கத்தில் அனைவரும் கடவுளுக்கு சேவை செய்கிறார்கள். ஆனால் இங்கோ கடவுள் தானே உயிருள்ள விக்கிரங்களுக்கு சேவை செய்கின்றார். அவர் உங்களை அமிர்தவேளையில் விழித்தெழச் செய்கின்றார், உங்களுக்கு ~போக்| கொடுக்கின்றார், உங்களை உறங்கச் செய்கின்றார். பாடலை கேட்டவாறு (இரவில் ஒலிக்கின்ற பாடல்) உறங்கச் செல்பவர்களும் பாடலை கேட்டவாறே விழிப்பவர்களும் (அமிர்தவேளை பாடல்);- ~~பிராமணர்களாகிய நாங்கள் குறிப்பாக நேசிக்கப்படுபவர்களும் அதிமேன்மையான பாக்கியசாலி ஆத்மாக்களுமாவோம்.|| - சதா இந்த பாக்கியத்தின் சந்தோஷத்தில் தொடர்ந்தும் ஆடுங்கள். மாயையால் அன்றி, குறிப்பாக தந்தையால் நேசிக்கப்படுபவர்கள் ஆகுங்கள். மாயையால் நேசிக்கப்படுபவர்கள் அதிகளவு குழந்தைத்தனமான விளையாட்டுகளை விளையாடுவார்கள்.
சுலோகம்:
உங்களுடைய மலர்ச்சியான முகத்தினால், அனைத்து பேறுகளின் அனுபவங்களையும் கொடுப்பதே உண்மையான சேவை ஆகும்.அவ்யக்த சமிக்ஞை: சரீரமற்ற ஸ்திதியின் பயிற்சியை அதிகரியுங்கள் (அசரீரி மற்றும் விதேஹி).
சரீரமற்றவர் ஆகுதல் என்றால் சத்தத்திற்கு அப்பால் செல்வதாகும். சரீரம் இருந்தாலே சத்தம் உள்ளது. சரீரத்திற்கு அப்பால் சென்றால், மௌனம்; உள்ளது. ஒரு விநாடி சேவைக்கான எண்ணங்களை கொண்டிருங்கள். அதன் பின்னர் ஒரு விநாடி எந்த எண்ணங்களுக்கும் அப்பாற்பட்டிருக்கும் சொரூபம் ஆகுங்கள். ஒரு பணியை மேற்கொள்வதற்காக உங்கள் சரீரத்தின் விழிப்புணர்வில் இருங்கள், அதன் பின்னர் சரீரமற்றவர் ஆகுங்கள். இந்த அப்பியாசம் உறுதியாகும் போது, உங்களால் சகல பாதகமான சூழ்நிலைகளுக்கும் முகம் கொடுக்க முடியும்.