02.05.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, ஏகாந்தத்தில் அமர்ந்திருந்து உங்களுடன் பேசுங்கள். “நான் ஓர் அழிவற்ற ஆத்மா, தந்தை கூறுவதைச் செவிமடுக்கின்றேன்” என்பதைப் பயிற்சி செய்யுங்கள்.
கேள்வி:
நினைவுசெய்வதைப் பற்றிக் கவனயீனமாகவுள்ள குழந்தைகளின் வாய்களிலிருந்து வெளிப்படும் வார்த்தைகள் எவை?பதில்:
அவர்கள் கூறுகின்றார்கள்: ‘எது எப்படியிருப்பினும், நான் சிவபாபாவின் குழந்தை ஆவேன். நான் நினைவிலேயே இருக்கிறேன்.’ எவ்வாறாயினும், பாபா கூறுகின்றார்: அவை அனைத்தும் பொய்களும், கவனயீனமும் ஆகும். நினைவில் நிலைத்திருக்க நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். அதிகாலையில் விழித்தெழுந்து உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி நினைவில் அமர்ந்திருங்கள். உங்களுடன் ஓர் இதயபூர்வமான சம்பாஷணையைக் கொண்டிருங்கள். ஆத்மாவே பேசுகின்றார். நீங்கள் இப்பொழுது ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுகின்றீர்கள். ஆத்ம உணர்வுடைய குழந்தைகள் மாத்திரமே நினைவு அட்டவணை ஒன்றை வைத்திருப்பார்கள். அவர்கள் இந்த ஞானத்தைப் பற்றிய கட்டுக் கதைகளைக் கூற மாட்டார்கள்.பாடல்:
உங்கள் இதயக் கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பாருங்கள்!ஓம் சாந்தி.
ஒவ்வோர் ஆத்மாவும் உயிர் வாழ்பவர் என்று அழைக்கப்படுகின்றார் என்று ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. தந்தை இப்பொழுது ஆத்மாக்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அப்பாடல் பக்தி மார்க்கத்துக்கு உரியது. அதன் சாராம்சம் மாத்திரம் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் இங்கே அமர்ந்திருக்கும் பொழுது, உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். சரீர உணர்வைத் துறவுங்கள். இந்த ஆத்மாவாகிய நான், மிகவும் சின்னஞ்சிறிய புள்ளி. நான் இந்தச் சரீரத்தினூடாக என்னுடைய பாகத்தை நடிக்கின்றேன். வேறு எவரும் ஆத்மாக்களைப் பற்றிய இந்த ஞானத்தைக் கொண்டிருப்பதில்லை. தந்தை கூறுகின்றார்: உங்களை ஆத்மாவாகக் கருதுங்கள். நான் ஒரு சின்னஞ்சிறிய ஆத்மா ஆவேன். ஆத்மாவே சரீரத்தினூடாக முழுப் பாகத்தையும் நடிக்கின்றார். பின்னர் சரீர உணர்வு அகற்றப்பட்டு விடும். இதுவே செய்யப்பட வேண்டிய முயற்சி ஆகும். ஆத்மாக்களாகிய நாங்களே முழு நாடகத்தினதும் நடிகர்கள் ஆவோம். பரமாத்மாவாகிய பரமதந்தையே அனைவரிலும் அதிமேன்மையான நடிகர். அவரும் ஒரு சின்னஞ்சிறிய புள்ளியாக இருப்பினும், அவருடைய புகழ் மிகவும் மகத்துவமானது என்பது புத்தியில் இருக்கின்றது. அவர் ஞானக்கடலாகவும் சந்தோஷக்கடலாகவும் இருந்தாலும், அவர் ஒரு சின்னஞ்சிறிய புள்ளியே ஆவார். ஆத்மாக்களாகிய நாங்களும் சின்னஞ்சிறிய புள்ளிகளே. தெய்வீகப் பார்வையின்றி ஓர் ஆத்மாவைக் காண முடியாது. நீங்கள் இந்த நேரத்தில் இப்புதிய விடயங்களைக் கேட்கின்றீர்கள். இதைப் பற்றி உலகத்துக்கு என்ன தெரியும்? எவ்வாறாயினும், உங்கள் மத்தியிலும், மிகச் சொற்ப அளவினர் மாத்திரமே இதை மிகச்சரியாகப் புரிந்துகொள்வதுடன், தாங்கள் ஆத்மாக்களாகிய சின்னஞ்சிறிய புள்ளிகள் என்பதையும் தங்கள் புத்தியில் வைத்திருக்கின்றார்கள். எங்கள் தந்தையே இந்த நாடகத்தின் பிரதான நடிகர். தந்தையே அனைவரிலும் அதிமேலான நடிகர். ஏனைய அனைவரும் பின்னர் வருகின்றார்கள். தந்தை ஞானக்கடலாக இருப்பினும், ஒரு சரீரமின்றி அவரால் ஞானத்தைப் பேச முடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் ஒரு சரீரத்தில் உள்ளபொழுது மாத்திரமே அவரால் பேச முடியும். ஆத்மாக்கள் சரீரம் அற்றவர்களாக உள்ளபொழுது, தமது அங்கங்களில் இருந்து அவர்கள் வேறுபட்டவர்களாக உள்ளார்கள். பக்திமார்க்கத்தில் உள்ளவர்கள் சதா சரீரதாரிகளை நினைவு செய்கின்றார்கள். அவர்கள் பரமாத்மாவாகிய பரமதந்தையின் பெயர், ரூபம், தேசம் அல்லது காலத்தை அறிய மாட்டார்கள். அவர் பெயருக்கும், ரூபத்துக்கும் அப்பாற்பட்டவர் என்று அவர்கள் இலகுவில் கூறிவிடுகின்றார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நாடகத்துக்கேற்ப, முதல் இலக்க, சதோபிரதானாக இருந்தவர்களாகிய நீங்கள், மீண்டும் சதோபிரதான் ஆகவேண்டும். திரும்பவும் தமோபிரதானில் இருந்து சதோபிரதானாக மாறுவதற்கு, உங்கள் ஸ்திதியை நீங்கள் உறுதியாக வைத்திருக்க வேண்டும்: நான் ஓர் ஆத்மா. ஆத்மா இச்சரீரத்தினூடாகப் பேசுகின்றார். ஆத்மா இந்த ஞானத்தைக் கொண்டிருக்கின்றார். 84 பிறவிகளின் அழியாத பாகம் ஒவ்வோர் ஆத்மாவிலும் பதியப்பட்டுள்ளது எனும் ஞானம் வேறு எவரின் புத்தியிலும் இல்லை. இவை மிகவும் புதிய கருத்துக்கள். ஏகாந்தத்தில் அமர்ந்திருந்து இவ்வாறு உங்களுடன் பேசுங்கள்: “நான் ஓர் ஆத்மா. நான் தந்தை கூறுவதைச் செவிமடுக்கின்றேன். இந்த ஆத்மாவாகிய நான், இந்த ஞானத்தைக் கிரகிக்கின்றேன். இந்த ஆத்மா இப்பாகத்தினால் நிரப்பப்பட்டுள்ளார். நான் ஓர் அழிவற்ற ஆத்மா”. நீங்கள் இதை உங்களுக்குள் அரைக்க வேண்டும். நாங்கள் தமோபிரதானில் இருந்து சதோபிரதானாக மாற வேண்டும். ஆத்மா என்றால் என்ன எனும் அறிவேனும் சரீர உணர்வுடைய மனிதர்களுக்கு இருப்பதில்லை. அவர்கள் தங்களுடன் பெரிய புத்தகங்களை வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு அதிகளவு அகங்காரம் உள்ளது. இது தமோபிரதான் உலகம். அதிமேலான ஆத்மாக்கள் இங்கே இல்லை. தமோபிரதானில் இருந்து சதோபிரதானாக மாறுவதற்கு, நீங்கள் முயற்சி செய்ய வேண்டும் என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். உங்களுக்குள் இவ்விடயத்தை அரையுங்கள். உங்களில் பலரால் ஞானத்தை உரைக்க முடியும், இருப்பினும், அந்த நினைவு இருப்பதில்லை. சுய பரிசோதனை செய்யப்பட வேண்டும். தந்தையின் நினைவைக் கொண்டிருப்பதன் மூலம், நீங்கள் தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மையானவர்களாக மாற வேண்டும். ஒரு பண்டிதராக ஆகாதீர்கள். “இராமா, இராமா” என்று கூறுவதனால் ஆற்றைக் கடந்து அக்கரை செல்ல முடியும் என்று சில தாய்மார்களுக்குக் கூறிய பண்டிதரின் உதாரணம் உள்ளது. அத்தகைய பொய்களைக் கூற வேண்டாம். அவ்வாறான பலர் உள்ளார்கள். சிலர் மிகவும் நன்றாக விளங்கப்படுத்துகின்றார்கள். ஆனால், அவர்கள் எந்த யோகத்தையும் கொண்டிருப்பதில்லை. அவர்கள் நாள் முழுவதும் சரீர உணர்வில் உள்ளார்கள். இல்லாவிட்டால், தாங்கள் எத்தனை மணிக்கு விழித்து எழுகின்றார்கள் என்றும், தாங்கள் எந்தளவுக்கு நினைவைக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் கூறி, பாபாவுக்குத் தங்கள் அட்டவணையை அவர்கள் அனுப்புவார்கள். சிலர் முற்றாகச் செய்திகளை அனுப்புவதே இல்லை. அவர்கள் இந்த ஞானத்தை அவசியமற்ற முறையில் அதிகளவில் பேசுகிறார்கள். ஆனால் முற்றிலும் யோகம் செய்வதே இல்லை. அவர்கள் முக்கிய பிரமுகர்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுத்தாலும் யோகத்தில் பலவீனமாக உள்ளார்கள். அதிகாலையில் விழித்தெழுந்து தந்தையை நினைவு செய்யுங்கள்: பாபா, நீங்களே அதி அன்பிற்கினியவர். இது அத்தகையதொரு தனித்துவமான, ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட நாடகம். இந்நாடகத்தின் இரகசியங்களை எவரும் அறிய மாட்டார்கள். ஆத்மா என்றால் என்ன என்றோ அல்லது பரமாத்மா என்றால் என்ன என்றோ அவர்கள் அறிய மாட்டார்கள். இப்பொழுது மனிதர்கள் மிருகங்களை விடவும் மோசமாக உள்ளார்கள். நாங்களும் அவ்வாறே இருந்தோம். மாயையின் இராச்சியத்தில், நீங்கள் அத்தகையதொரு மோசமான நிலையை அடைந்தீர்கள். நீங்கள் எவருக்கும் இந்த ஞானத்தைக் கொடுக்க முடியும். அவர்களுக்குக் கூறுங்கள்: நீங்கள் இப்பொழுது தமோபிரதான் ஆகியுள்ள ஓர் ஆத்மா ஆவீர்கள். நீங்கள் மீண்டும் சதோபிரதானாக வேண்டும். எல்லாவற்றுக்கும் முதலில், உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். அது ஏழைகளுக்கு இலகுவானது. செல்வந்தர்களுக்குப் பெருமளவு சிக்கல்கள் உள்ளன. தந்தை கூறுகின்றார்: நான் ஒரு சாதாரண சரீரத்தில் பிரவேசிக்கின்றேன், இவர் மிகவும் எழையோ அல்லது மிகவும் செல்வந்தரோ கிடையாது. ஒவ்வொரு கல்பத்திலும், தந்தை இந்த நேரத்தில் வந்து எவ்வாறு தூய்மை ஆகுவது என்று எங்களுக்கு அறிவுரை கூறுகின்றார் என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். உங்கள் வியாபாரத்தின் சிக்கல்களைப் பற்றி உங்களுக்கு அறிவுரை கூறுவதற்கு பாபா வரவில்லை. நீங்கள் அழைத்தீர்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! ஆகவே, பாபா உங்களுக்குத் தூய்மை ஆகுவதற்கான வழியைக் காட்டுகின்றார். இந்த பிரம்மா தானாக எதையும் அறிந்திருக்கவில்லை. நீங்கள் ஒரு நடிகராக இருந்து, நாடகத்தின் ஆரம்பம், மத்தி அல்லது இறுதியைப் பற்றி அறியாது விட்டால், உங்களை என்னவென்று அழைப்பது? இவ்வுலகச் சக்கரத்தில் ஆத்மாக்களாகிய நாங்கள் நடிகர்கள், ஆனால் இது எப்படி என்பதை எவரும் அறிய மாட்டார்கள். அசரீரி உலகில் ஆத்மாக்கள் வசிக்கின்றார்கள் என்று கூறினாலும், அவர்கள் அதை அனுபவத்தில் இருந்து கூறுவதில்லை. நீங்கள் அசரீரி உலகில் வசிப்பவர்கள் என்று இப்பொழுது ஆத்மாக்களாகிய நீங்கள் நடைமுறை ரீதியில் அறிவீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் அழிவற்றவர்கள். இதை உங்கள் புத்தியில் வைத்திருங்கள். முற்றாகவே யோகத்தைக் கொண்டிராத பலர் உள்ளார்கள். பின்னர், தங்கள் சரீர உணர்வு காரணமாக, அவர்கள் பல தவறுகளைச் செய்கின்றார்கள். ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுவதே பிரதான விடயம். சதோபிரதான் ஆகுவதைப் பற்றியே நீங்கள் அக்கறை கொண்டிருக்க வேண்டும். சதோபிரதான் ஆகுவதைப் பற்றி அக்கறை கொண்டிருக்கின்ற குழந்தைகள், ஒருபொழுதும் தங்கள் வாய்களில் இருந்து கற்கள் வெளிப்படுவதை அனுமதிப்பதில்லை. அவர்கள் ஒரு தவறு செய்தால், உடனடியாக அதைத் தந்தைக்கு அறிவிக்கின்றார்கள்: பாபா, நான் இந்தத் தவறைச் செய்தேன். தயவுசெய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்! அவர்கள் அதை மறைக்க மாட்டார்கள். அது மறைக்கப்படும் பொழுது, அது மேலும் அதிகளவுக்கு அதிகரிக்கின்றது. தொடர்ந்தும் உங்கள் செய்திகளை பாபாவுக்குக் கூறுங்கள். பாபா பதிலளிப்பார்: உங்கள் யோகம் மிகச்சரியான முறையில் இல்லை. தூய்மை ஆகுவதே பிரதான விடயம். குழந்தைகளாகிய உங்களின் புத்தியில், 84 பிறவிகளின் கதை உள்ளது. இயன்றளவுக்கு, சதோபிரதான் ஆகுவதைப் பற்றி மாத்திரமே அக்கறை கொண்டிருங்கள். சரீர உணர்வைத் துறந்து விடுங்கள். நீங்கள் இராஜரிஷிகள். ஹத்தயோகிகளால் ஒருபொழுதும் இராஜயோகத்தைக் கற்பிக்க முடியாது. தந்தையால் மாத்திரமே இராஜயோகம் கற்பிக்க முடியும். தந்தை மாத்திரமே இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். இந்த நேரத்தில் பக்தி தமோபிரதானாக உள்ளது. சங்கமயுகத்தில் மாத்திரமே தந்தை இந்த ஞானத்தைக் கொடுப்பதற்கு வருகின்றார். இப்பொழுது தந்தை வந்துவிட்டதால் பக்தி முடிவடைய வேண்டும், இவ்வுலகமும் முடிவடைய வேண்டும். இந்த ஞானத்தின் ஊடாகவும் யோகத்தின் ஊடாகவும் சத்தியயுகம் ஸ்தாபிக்கப்படுகின்றது. பக்தி முழுமையாகவே வேறுபட்டது. இங்கு சந்தோஷம், துன்பம் இரண்டும் உள்ளன என்று மக்கள் கூறுகின்றார்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு ஒரு பாரிய பொறுப்பு உள்ளது. உங்களுக்கு நன்மை அளிப்பதற்குத் தொடர்ந்தும் வழிகளை உருவாக்குங்கள். அமைதி தாமமும், சந்தோஷ தாமமுமே தூய உலகங்கள் என்றும் விளங்கப்படுத்தப்படுகின்றது. இதுவே, துன்ப தாமமாகிய, அமைதியின்மைக்குரிய தாமம் ஆகும். யோகமே முதன்மையானதும் பிரதானமானதுமான விடயமாகும். நீங்கள் யோகம் செய்யா விட்டால், பண்டிதர்களைப் போன்று தேவையின்றி அதிகளவில் இந்த ஞானத்தைப் பேசுகின்றீர்கள். இந்நாட்களில், பெருமளவு மாயாஜால சக்தி உள்ளது. அதற்கு, இந்த ஞானத்துடன் தொடர்பு கிடையாது. மக்கள் அதிகளவுக்குப் பொய்மையில் சிக்கி உள்ளார்கள். அவர்கள் தூய்மை அற்றவர்கள். தந்தையே கூறுகிறார்: நான் ஒரு தூய்மையற்ற சரீரத்தில், தூய்மையற்ற உலகத்துக்குள் வருகின்றேன். இங்குள்ள எவரும் தூய்மையானவர்கள் அல்லர். இவர் தன்னைக் கடவுள் என அழைப்பதில்லை. இவர் கூறுகிறார்: ‘நானும் தூய்மையற்றவர். நான் தூய்மையாகும் பொழுது, ஒரு தேவதை ஆகுவேன்.’ நீங்களும் தூய்மையான தேவதைகள் ஆகுவீர்கள். நாங்கள் எவ்வாறு தூய்மையாகுவது என்பதே பிரதான விடயம். இதற்கு நினைவு முற்றிலும் அவசியம். நினைவுசெய்வதைப் பற்றிக் கவனயீனமாக இருக்கின்ற குழந்தைகள் கூறுகின்றார்கள்: எது எப்படியிருப்பினும், நாங்கள் சிவபாபாவின் குழந்தைகள். நாங்கள் பாபாவின் நினைவில் நிலைத்திருக்கின்றோம். எவ்வாறாயினும், பாபா கூறுகிறார்: அவை அனைத்தும் பொய். அது கவனயீனம் ஆகும். நீங்கள் இந்நினைவுக்காக முயற்சி செய்ய வேண்டும். அதிகாலையில் விழித்தெழுந்து, உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி நினைவில் நிலைத்திருங்கள். ஓர் இதயபூர்வமான சம்பாஷணையைக் கொண்டிருங்கள். ஆத்மாவே பேசுகின்றார். நீங்கள் இப்பொழுது ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுகின்றீர்கள். ஏனையோருக்கு நன்மை அளிப்பவர்கள் பற்றிய புகழ் பாடப்பட்டுள்ளது. அது சரீரத்தின் புகழ். இந்தப் புகழோ அசரீரியான, பரமாத்மாவாகிய பரமதந்தைக்கு உரிய புகழ். நீங்கள் இதைப் புரிந்து கொள்கின்றீர்கள். ஏணியின் ஞானமும், நாங்கள் கீழிறங்கி வரும்பொழுது, எவ்வாறு 84 பிறவிகளை எடுக்கின்றோம் என்பதும் வேறு எவருடைய புத்தியிலும் இருக்க மாட்டாது. இப்பொழுது பாவக்கலசம் நிறைந்து விட்டது. அது எவ்வாறு சுத்தம் செய்யப்பட முடியும்? இதனாலேயே நீங்கள் தந்தையை வரும்படி அழைக்கின்றீர்கள். நீங்கள் பாண்டவ சமுதாயத்துக்கு உரியவர்கள். நீங்கள் ஆன்மிக-அரசியல்வாதிகள் ஆவீர்கள். அனைத்துச் சமயங்களின் விடயங்கள் பற்றியும் பாபா விளங்கப்படுத்துகின்றார். வேறு எவராலும் அவற்றை உங்களுக்கு இதைப் போன்று விளங்கப்படுத்த முடியாது. சமய ஸ்தாபகர்கள் அனைவரும் என்ன செய்கின்றார்கள்? அவர்களைப் பின்பற்றுபவர்கள் அவர்களுக்குப் பின்னால் கீழிறங்கி வரவேண்டும். அவர்களால் எவருக்கும் அநாதியான முக்தியை அருள இயலாது. இறுதியில், தந்தை வரும்பொழுது மாத்திரமே அனைவரும் தூய்மை ஆக்கப்படவும் திரும்பவும் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்படவும் முடியும். இதனாலேயே, அவரைத் தவிர எவருக்கும் புகழ் கிடையாது. பிரம்மாவின் புகழோ அல்லது உங்கள் புகழோ கிடையாது. பாபா வராவிட்டால், நீங்கள் என்ன செய்வீர்கள்? தந்தை இப்பொழுது உங்களை, உங்களுடைய மேலேறும் ஸ்திதிக்குள் அழைத்து வந்துள்ளார். பாடப்பட்டுள்ளது: உங்கள் ஸ்திதி மேலேறும் பொழுது, அனைவரும் நன்மை பெறுகின்றார்கள். எவ்வாறாயினும், இதன் அர்த்தத்தை எவரும் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் பெருமளவு புகழை மாத்திரம் பாடுகின்றார்கள். ஆத்மா அமரத்துவமானவர் எனவும் இது அவருடைய சிம்மாசனம் எனவும் தந்தை இப்பொழுது விளங்கப்படுத்தி உள்ளார். ஆத்மாக்கள் அழிவற்றவர்கள். அவர்கள் ஒருபொழுதும் மரணிக்க முடியாது. ஓர் ஆத்மா தனது சரீரத்தை நீக்கி இன்னொரு பாகத்தை நடிப்பதற்கு, மற்றுமொரு சரீரத்தை எடுக்கின்றார். மரண தூதுவர்கள் (எமன்) வந்து அவரை அழைத்துச் செல்கின்றார்கள் என்பதல்ல. ஒருவர் தனது சரீரத்தை நீக்கும்பொழுது, நீங்கள் சந்தோஷம் அற்று இருக்கக்கூடாது. அந்த ஆத்மா ஒரு சரீரத்தைத் துறந்து, இன்னுமொரு பாகத்தை நடிப்பதற்குச் சென்று விட்டார். அதைப் பற்றி அழுவதற்கு என்ன உள்ளது? எவ்வாறு ஆத்மாக்களாகிய நாங்கள் அனைவரும் சகோதரர்கள் என்று நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். பாடப்பட்டுள்ளது: நீண்டகாலமாக ஆத்மாக்கள் பரமாத்மாவிடம் இருந்து பிரிந்திருந்தார்கள். உங்களைச் சந்திப்பதற்குத் தந்தை எங்கே வருகின்றார்? இதைக் கூட அவர்கள் அறிய மாட்டார்கள். இப்பொழுது உங்களுக்கு அனைத்து விடயங்களும் விளங்கப்படுத்தப்படுகின்றன. நீண்டகாலமாக அவ்விடயங்களை நீங்கள் கேட்டு வருகின்றீர்கள். அந்த ஒரேயொருவர் புத்தகங்கள் போன்ற எவற்றையும் கொண்டிருப்பதில்லை. உங்களுக்கு விளங்கப்படுத்துவதற்காக அவர் அவற்றைப் பற்றிக் குறிப்பிடுகிறார். தந்தையே சத்தியமானவர் ஆதலால், அவர் உண்மையான படைப்பைப் படைக்கின்றார். அவர் உங்களுக்குச் சத்தியத்தைக் கூறுகின்றார். சத்தியத்தினூடாக வெற்றியும், பொய்மையினூடாகத் தோல்வியும் ஏற்படுகின்றன. சத்தியமான தந்தை சத்திய பூமியை ஸ்தாபிக்கிறார். நீங்கள் பல தடவைகள் இராவணனினால் தோற்கடிக்கப்படுகின்றீர்கள். நாடகத்தில் அவை அனைத்தும் நிச்சயிக்கப்பட்டுள்ளன. இப்பொழுது உங்கள் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். பின்னர் இவை அனைத்தும் இருக்க மாட்டாது. இவை அனைத்தும் பின்னரே வருகின்றன. இவ்வுலகச் சக்கரத்தைப் புத்தியில் வைத்திருப்பது மிகவும் இலகுவானது. முயற்சி செய்யும் குழந்தைகள், தாங்கள் மிகவும் நன்றாக இந்த ஞானத்தைப் பேசுகிறார்கள் என்னும் உண்மை மூலம் இலகுவில் சந்தோஷமடைய மாட்டார்கள். அத்துடன், அவர்கள் யோகத்தைக் கொண்டிருப்பதுடன் சிறந்த பண்புகளையும் கிரகிப்பார்கள். நீங்கள் மிகவும் இனிமையானவர்கள் ஆக வேண்டும். நீங்கள் எவருக்கும் துன்பம் விளைவிக்கக் கூடாது. பெருமளவு அன்புடன் ஏனையோருக்கு விளங்கப்படுத்துங்கள். தூய்மையின் காரணமாக, அதிகளவு குழப்பம் உள்ளது. இது நாடகத்துக்கேற்ப நடைபெறுகிறது. அது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அது நாடகத்தில் இருப்பின், நீங்கள் எதையாவது பெறுவீர்கள் என்பதல்ல. இல்லை, நீங்கள் அதற்காக முயற்சி செய்ய வேண்டும். தேவர்களிடம் உள்ளதைப் போன்று, நீங்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்க வேண்டும். நீங்கள் உப்புநீர் போன்று ஆகக்கூடாது. நீங்கள் மோசமாக நடந்து கொள்ளவில்லை என்பதையும், தந்தையின் கௌரவத்துக்கு இழப்பை ஏற்படுத்தவில்லை என்பதையும் சோதித்துக் கொள்ளுங்கள். சற்குருவை இகழ்பவர்கள் எவராலும் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோர முடியாது. அந்த ஒரேயொருவரே உண்மையான தந்தையும், உண்மையான ஆசிரியரும் ஆவார். தந்தையே ஞானக்கடலும், சந்தோஷக்கடலும் என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். அவர் நிச்சயமாக முன்னரும் இந்த ஞானத்தைக் கொடுத்துச் சென்றார். இதனாலேயே அவர் நினைவுகூரப்படுகின்றார். இந்த ஆத்மாவிடம் முன்னர் இந்த ஞானம் எதுவும் இருக்கவில்லை. ஆத்மா என்றால் என்ன என்றோ அல்லது நாடகம் என்றால் என்ன என்றோ எவரும் அறிய மாட்டார்கள். மனிதர்களுக்கு இந்த ஞானம் கொடுக்கப்பட வேண்டும். மக்கள் உருத்திர யாகத்தை வளர்க்கின்றார்கள், அவர்கள் ஆத்மாக்களை வழிபடுகின்றார்கள். தெய்வீகக் குணமுடைய சரீரதாரிகளை வழிபடுவதை விடவும் ஆத்மாக்களை வழிபடுவது சிறந்ததா? சரீரங்கள் பஞ்ச தத்துவங்களால் உருவாக்கப்படுகின்றன. இதனாலேயே, சிவபாபாவை வழிபடுவது மாத்திரமே கலப்படமற்றது. நீங்கள் இப்பொழுது அந்த ஒரேயொருவர் கூறுவதை மாத்திரமே செவிமடுக்க வேண்டும். ஆகவே, கூறப்பட்டுள்ளது: தீயவற்றைக் கேட்காதீர்கள்! அவதூறான விடயங்களைச் செவிமடுப்பதை நிறுத்துங்கள். என்னை மாத்திரம் செவிமடுங்கள். இந்த ஞானம் கலப்படமற்றது. உங்கள் சரீர உணர்வு துண்டிக்கப்படும் பொழுது மாத்திரமே உங்களால் குளிர்ச்சியாகவும் சாந்தமாகவும் ஆகமுடியும் என்பதே பிரதான விடயம். நீங்கள் தந்தையின் நினைவில் நிலைத்திருந்தால், ஒருபொழுதும் தவறான விடயங்களைக் கூற மாட்டீர்கள். தீய பார்வையும் இருக்க மாட்டாது. அனைத்தையும் பார்க்கும்பொழுது, நீங்கள் எதையும் பார்க்கவில்லை என்பதாக இருக்க வேண்டும். ஞானமாகிய எங்கள் மூன்றாவது கண் இப்பொழுது திறக்கின்றன. தந்தை வந்து, எங்களைத் திரிநேத்ரியாகவும் திரிகாலதரிசியாகவும் ஆக்கியுள்ளார். நீங்கள் இப்பொழுது முக்காலத்தினதும் மூவுலகங்களினதும் ஞானத்தைக் கொண்டிருக்கின்றீர்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. ஞானத்தைச் செவிமடுப்பதுடன், யோகத்திலும் நிலைத்திருங்கள். சிறந்த பண்புகளைக் கிரகியுங்கள். மிகவும் இனிமையானவர்கள் ஆகுங்கள். ஒருபொழுதும் உங்கள் வாயிலிருந்து கற்கள் வெளிப்படுவதை அனுமதிக்காதீர்கள்.2. ஏகாந்தத்தில் அமருங்கள், சுய பரிசோதனை செய்து உங்களுடன் பேசுங்கள். தூய்மை ஆகுவதற்கான வழிகளை உருவாக்குங்கள். அதிகாலையில் விழித்தெழுந்து பெருமளவு அன்புடன் தந்தையை நினைவுசெய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் விகாரமற்றவராகி, விநாச வேளையில் உங்களின் வயரற்ற கருவி மூலம் இறுதி வழிகாட்டல்களைப் பிடித்துக் கொள்வீர்களாக.விநாச வேளையில் இறுதி வழிகாட்டல்களைப் பிடித்துக் கொள்வதற்கு, உங்களுக்கு விகாரமற்ற புத்தி தேவை. எப்படி அவர்கள் வயரற்ற கருவி மூலம் மற்றவர்களுடன் தொடர்பு கொள்கிறார்களோ, அவ்வாறே, உங்களிடம் விகாரம் அற்றிருத்தல் என்ற வயரற்ற கருவி உள்ளது. இந்த வயரற்ற கருவி மூலம் பாதுகாப்பான ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் செல்லும்படி உங்களுக்கு ஒலி கிடைக்கும். தந்தையின் நினைவில் இருப்பதுடன் விகாரமற்றும் இருப்பவர்கள், அத்துடன் சரீரமற்ற பயிற்சியைக் கொண்டிருப்பவர்கள் விநாச வேளையில் அழிக்கப்பட மாட்டார்கள். ஆனால் தமது சொந்த விருப்பத்திற்கேற்ப தமது சரீரங்களை விட்டு நீங்குவார்கள்.
சுலோகம்:
யோகத்தை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, செயல்களைச் செய்வதில் மும்முரம் ஆகுதல் என்றால் அது கவனயீனம் ஆகும்.அவ்யக்த சமிக்கை: ஆன்மீக இராஜரீகம் மற்றும் தூய்மையின் ஆளுமையைக் கடைப்பிடியுங்கள்.
தூய்மையின் இராஜரீகம் என்றால் ஒரேயொருவருக்குச் சொந்தம் ஆகுதல் என்று அர்த்தம். இந்த பிராமண வாழ்க்கையில் சம்பூரணமாகத் தூய்மை ஆகுதல் என்றால் ஒரேயொருவருக்குச் சொந்தமாக இருக்கும் பாடத்தை மிக உறுதியாக்கிக் கொள்ளுதல் என்று அர்த்தம். உங்களின் மனோபாவத்திலும் உங்களின் பார்வையிலும் நல்லாசிகளும் தூய உணர்வுகளும் இருக்க வேண்டும். எல்லோரையம் அவர்களின் ஆத்ம உணர்வு அல்லது தேவதை ரூபத்தில் பாருங்கள். உங்களின் செயல்களில், ஒவ்வோர் ஆத்மாவிற்கும் சந்தோஷத்தைக் கொடுத்து சந்தோஷத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். யாராவது உங்களுக்குத் துன்பத்தைக் கொடுத்தால் அல்லது அவமதித்தால் நீங்கள் சகிப்புத்தன்மையின் தேவியாக அல்லது தேவனாக ஆகுங்கள்.