02.07.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் இரட்டை அகிம்சாவாதி ஆன்மீகச் சேனை ஆவீர்கள். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் தெய்வீக இராச்சியத்தை ஸ்தாபிக்க வேண்டும்.
கேள்வி:
ஆன்மீகச் சேவையாளர்களாகிய நீங்கள் அனைவருக்கும் எதனையிட்டு எச்சரிக்கை செய்ய வேண்டும்?பதில்:
நீங்கள் அனைவருக்கும் எச்சரிக்கை செய்யுங்கள்: இதுவே அதே மகாபாரத யுத்த காலமாகும். இந்தப் பழைய உலகம் இப்பொழுது அழிக்கப்படவுள்ளது. தந்தை புதிய உலகை ஸ்தாபிப்பதற்குத் தூண்டுகின்றார். விநாசத்தின் பின்னர் வெற்றிக் குரல்கள் ஒலிக்கும். விநாசம் இடம்பெறுவதற்கு முன்னர் எவ்வாறு நீங்கள் அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்கலாம் என்பதை நீங்கள் அனைவரும் ஒன்றுகூடி கலந்தாலோசிக்க வேண்டும்.பாடல்:
நீங்கள் இரவை உறக்கத்திலும் பகலை உண்பதிலும் வீணாக்கினீர்கள்!ஓம் சாந்தி.
கடவுளே அதிமேலானவர் எனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். பின்னர் நீங்கள் ஒரு சேனையினர் என்பதால், அவரைக் கட்டளைத் தளபதி என்றும் அழைக்கலாம். உங்களுடைய பரம கட்டளைத் தளபதி யார்? இரு வகையான சேனையினர் உள்ளனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்கள் லௌகீகச் சேனையினர், நீங்களோ ஆன்மீகச் சேனையினர். அந்தச் சேனையினர் எல்லைக்கு உட்பட்டவர்கள். நீங்கள் எல்லையற்ற சேனையினர். உங்களிடமும் கட்டளைத் தளபதிகள், தளபதிகள், உபதளபதிகள் போன்றோரும் உள்ளனர். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இதில் யுத்தம் போன்றவற்றிற்கான கேள்விக்கே இடமில்லை. நாங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் மீண்டும் ஒருமுறை உலகம் முழுவதிலும் எங்கள் தெய்வீக இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றோம். நாங்கள் இப் பாகத்தை ஒவ்வொரு கல்பத்திலும் நடிக்கின்றோம். இந்த விடயங்கள் அனைத்தும் எல்லையற்றவை. இவ் விடயங்கள் அந்த யுத்தங்களுடன் சம்பந்தப்பட்டவை அல்ல. தந்தையே அதிமேலானவர். அவர் மந்திரவாதி என்றும், இரத்தின வியாபாரி என்றும், ஞானக்கடல் என்றும் அழைக்கப்படுகின்றார். தந்தையின் புகழ் எல்லையற்றது. உங்கள் புத்தி தந்தையின் நினைவைக் கொண்டிருக்க வேண்டும். மாயை அவருடைய நினைவைக் கொண்டிருப்பதை மறக்கச் செய்கின்றாள். நீங்கள் இரட்டை அகிம்சாவாதி ஆன்மீகச் சேனையினர். எவ்வாறு இராச்சியத்தை ஸ்தாபிக்கலாம் என்ற ஒரேயொரு அக்கறை மாத்திரமே உங்களுக்குள்ளது. நாடகம் இதனை நிச்சயமாக உங்களைச் செய்ய வைக்கும். நீங்கள் முயற்சி செய்ய வேண்டும், இல்லையா? நல்ல குழந்தைகளாகிய நீங்கள் இதனை உங்கள் மத்தியில் கலந்தாலோசிக்க வேண்டும். மாயையுடனான உங்கள் போராட்டம் இறுதிவரை தொடரும். மகாபாரத யுத்தமும் நிச்சயமாக இடம்பெறப் போகின்றது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். வேறு எவ்வாறு பழைய உலகத்தின் விநாசம் இடம்பெறும்? பாபா எங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுக்கின்றார். குழந்தைகளாகிய நாங்கள் மீண்டும் ஒருமுறை எங்கள் இராச்சியத்தை ஸ்தாபிக்க வேண்டும். இப் பழைய உலகம் அழிக்கப்பட்ட பின்னர், பாரதத்தில் வெற்றிக்குரல்கள் ஒலிக்கும். நீங்கள் இதற்குக் கருவிகள் ஆகியுள்ளீர்கள். ஆகையால் இப் பழைய உலகம் அழிய உள்ளது என்ற தந்தையின் செய்தியை அனைவருக்கும் கொடுக்கும் வகையில் சேவை செய்வதற்கான வழிகளை உங்கள் மத்தியில் நீங்கள் ஒன்றுகூடி, கலந்து ஆலோசியுங்கள். தந்தையே புதிய உலகை ஸ்தாபிக்கின்றார். லௌகீகத் தந்தை ஒருவர் ஒரு புதிய வீட்டைக் கட்டும் பொழுது, அவரது குழந்தைகள் சந்தோஷம் அடைகின்றார்கள். அது ஓர் எல்லைக்கு உட்பட்ட விடயம். இதுவோ முழு உலகிற்கும் உரிய விடயம் ஆகும். அந்தப் புதிய உலகம் சத்தியயுகம் என்றும், இந்தப் பழைய உலகம் கலியுகம் என்றும் அழைக்கப்படுகின்றது. இப்பொழுது இது பழைய உலகமாகும். ஆகையால், தந்தை எப்பொழுது, எவ்வாறு புதிய உலகை ஸ்தாபிக்கின்றார் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இதனை அறிந்திருப்பவர்கள் தங்கள் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாக இதனை அறிவார்கள். தந்தையே அனைவரிலும் மகத்துவமானவர். ஏனைய அனைவரும் வரிசைக்கிரமமாக யானைப்படையாகவும் குதிரைப்படையாகவும் காலாட்படையாகவும் உள்ளார்கள். உங்களுக்கு விளங்கப்படுத்துவதற்காக, தளபதிகளும், தலைவர்களும் உதாரணமாகக் குறிப்பிடப்பட்டு உள்ளார்கள். குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் மத்தியில் ஒன்றுகூடி தந்தையின் அறிமுகத்தைக் கொடுப்பதற்கான வழிகளைப் பற்றி கலந்தாலோசிக்க வேண்டும். இதுவே ஆன்மீகச் சேவையாகும். எவ்வாறு எங்கள் சகோதர, சகோதரிகளை எச்சரித்து, தந்தை இப்பொழுது புதிய உலகை ஸ்தாபிக்க வந்துள்ளார் என்பதை அவர்களுக்குக் கூறலாம்? பழைய உலகின் விநாசம் இப்பொழுது உங்கள் முன்னிலையில் உள்ளது. இது அதே மகாபாரத யுத்தம். மகாபாரத யுத்தத்தின் பின்னர் என்ன நிகழும் என்பதைக் கூட மனிதர்கள் அறியார்கள். இந்தச் சங்கமயுகத்தில் நீங்களே அதிமேன்மையான மனிதர்கள் ஆகுகின்றீர்கள் என்பதை நீங்கள் உணர்கின்றீர்கள். உங்களை அதிமேன்மையான மனிதர்கள் ஆக்குவதற்குத் தந்தை வந்துள்ளார். இதில் யுத்தம் என்ற கேள்விக்கே இடமில்லை. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே, இத் தூய்மையற்ற உலகில் தூய்மையான ஒருவரேனும் இருக்க முடியாது, தூய உலகில் ஒரு தூய்மையற்ற நபரேனும் இருக்க முடியாது. அத்தகைய சிறிய விடயத்தை எவரும் புரிந்து கொள்வதில்லை! படங்கள் போன்ற அனைத்தும் குழந்தைகளாகிய உங்களுக்குச் சுருக்கமாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. பக்தி மார்க்கத்தில் மந்திரம் ஓதுதல், சமயக் கிரியைகள் செய்தல், தான தர்மம் செய்தல் போன்ற மக்கள் செய்வது அனைத்தும் காகத்தின் எச்சத்தைப் போன்று தற்காலிகச் சந்தோஷத்தை மாத்திரமே அவர்களுக்குக் கொடுக்கின்றது. எவ்வாறாயினும், நீங்கள் இங்கே வந்து இந்த விடயங்களைப் புரிந்து கொள்ளும் பொழுது மாத்திரமே, அவற்றை உங்கள் புத்திகளில் வைத்திருக்க முடியும். இப்பொழுது இது பக்தியின் இராச்சியமாகும். சிறிதளவு ஞானமும் இல்லை. இந்தத் தூய்மையற்ற உலகில் எவரும் தூய்மையானவர் அல்ல. அதைப் போன்றே ஒரேயொருவரைத் தவிர வேறு எவரிடமும் இந்த ஞானம் இல்லை. வேதங்கள், சமயநூல்கள் போன்ற அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கு உரியவை. நீங்கள் ஏணியில் கீழிறங்க வேண்டும். நீங்கள் இப்பொழுது பிராமணர்கள் ஆகியுள்ளீர்கள். இந்தச் சேனை வரிசைக்கிரமமானது. கட்டளைத் தளபதிகள், தலைவர்கள், தளபதிகள் போன்ற பிரதானமானவர்கள் ஒன்றுகூடி, எவ்வாறு பாபாவின் செய்தியைக் கொடுக்கலாம் எனக் கலந்தாலோசிக்க வேண்டும். தூதுவர், ஆசிரியர், குரு ஆகிய அனைவரும் ஒரேயொருவரே எனக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய அனைவரும் பக்தி மார்க்கத்திற்கு உரியவர்கள். நீங்கள் மாத்திரமே சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள். இலக்ஷ்மி நாராயணன் ஆகுகின்ற, இலக்கும் குறிக்கோளும் முற்றிலும் மிகச்சரியானவை. பக்தி மார்க்கத்தில், சத்திய நாராயணனின் கதையையும், மூன்றாம் கண்ணின் கதையையும், அமரத்துவக் கதையையும் கூறுகின்றார்கள். தந்தை இப்பொழுது உங்களுக்குச் சத்திய நாராயணனின் கதையைக் கூறுகின்றார். பக்தி மார்க்கத்தில், அனைத்துமே கடந்த காலத்திற்குரிய விடயங்கள். அவர்கள் வந்து சென்றவர்களுக்கே ஆலயங்கள் போன்றவற்றைக் கட்டுகின்றார்கள். அதுபோன்றே, சிவபாபா இப்பொழுது உங்களுக்குக் கற்பிக்கின்றார். பின்னர், பக்தி மார்க்கத்தில், இதன் ஞாபகார்த்தங்கள் கட்டப்படும். சத்தியயுகத்தில், சிவனின் அல்லது இலக்ஷ்மி நாராயணன் போன்றோரின் விக்கிரகங்கள் இருப்பதில்லை. ஞானம் பக்தியிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். உங்களுக்கு மாத்திரமே ஞானம் உள்ளது. ஆகையாலே, தந்தை கூறியுள்ளார்: தீயதைக் கேட்காதீர்கள், தீயதை பேசாதீர்கள்… குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புதிய உலகம் ஸ்தாபிக்கப்படுகின்றது என்பதனால் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றீர்கள். சந்தோஷ தாமத்தின் ஸ்தாபனைக்காகவே பாபா எங்களுக்கு மீண்டும் ஒருமுறை வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார். நீங்கள் தூய்மையாக வேண்டும் என்பதே முதற்தரமான வழிகாட்டல் ஆகும். அனைவரும் தூய்மை அற்றவர்கள். நல்ல குழந்தைகள் ஒன்றுகூடி, சேவையை எவ்வாறு அதிகரிப்பது, ஏழைகளுக்கு எவ்வாறு தந்தையின் செய்தியைக் கொடுப்பது என்று கலந்தாலோசிக்க வேண்டும். தந்தை முன்னைய கல்பத்தில் வந்ததைப் போன்று வந்துள்ளார். அவர் கூறுகின்றார்: உங்களை ஓர் ஆத்மா எனக் கருதி, என்னை நினைவு செய்யுங்கள்! அந்த இராச்சியம் நிச்சயமாக ஸ்தாபிக்கப்பட வேண்டும். அவர்கள் நிச்சயமாக இதனைப் புரிந்து கொள்வார்கள். தேவதர்மத்தைச் சேராதவர்கள் இதனைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். விநாச காலத்தில் அவர்கள் கடவுளின் மீது அன்பற்ற புத்திகளையே கொண்டிருக்கின்றார்கள். அவரே உங்கள் பிரபுவும் அதிபதியும் ஆவார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். ஆகையால், நீங்கள் விகாரத்தில் ஈடுபடவோ அல்லது சண்டை சச்சரவுகளில் ஈடுபடவோ கூடாது. உங்கள் பிராமண தர்மம் மிகவும் மேன்மையானது. அவர்கள் சூத்திர சமயத்திற்கு உரியவர்கள், நீங்களோ பிராமண தர்மத்திற்கு உரியவர்கள். நீங்கள் உச்சிக்குடுமிகளும், அவர்கள் பாதங்களும் ஆவார்கள். உச்சிக்குடுமிக்கு மேல், அதிமேலானவரான ஒரேயொரு அசரீரியான கடவுள் மாத்திரமே உள்ளார். எவராலும் அவரை இப் பௌதீகக் கண்களால் பார்க்க முடியாது என்பதால், சிவபாபாவோ அல்லது உச்சிக்குடுமியோ (பிராமணர்களோ) பல்வகை ரூபத்தில் காட்டப்படவில்லை. அவர்கள் தேவர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்களைப் பற்றி மாத்திரம் பேசுகின்றார்கள். தேவர்களாக ஆகுபவர்கள் பின்னர் மறுபிறவி எடுத்து, சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் ஆகுகின்றார்கள். பல்வகை ரூபத்தின் அடையாளத்தை எவரும் புரிந்து கொள்வதில்லை. நீங்கள் இப்பொழுது இதனைப் புரிந்து கொள்கின்றீர்கள். ஆகையால் நீங்கள் படத்தைத் திருத்தி அமைக்க வேண்டும். சிவபாபாவும் பிராமணர்களாகிய நீங்களும் காட்டப்பட வேண்டும். நீங்கள் இப்பொழுது அனைவருக்கும் செய்தியைக் கொடுக்க வேண்டும்: உங்களை ஓர் ஆத்மாவெனக் கருதி, தந்தையை நினைவு செய்யுங்கள்! இந்தச் செய்தியைக் கொடுக்க வேண்டியது உங்கள் கடமையாகும். தந்தையின் புகழ் எல்லையற்றதாக இருப்பதைப் போன்றே பாரதமும் பெருமளவு புகழப்படுகின்றது. ஒருவர் இந்த ஞானத்தை ஏழு நாட்களுக்குச் செவிமடுத்தால், அவரின் புத்தியில் இது நிலைத்திருக்கும். அவர்கள் தங்களுக்கு நேரம் இல்லை என்று கூறுகின்றனர். ஓ! ஆனால் நீங்கள் அரைக்கல்பமாக அழைத்தீர்கள், அவர் நடைமுறைரீதியில் இப்பொழுது இங்கே வந்துள்ளார். (ஒவ்வொரு கல்பத்தின்) இறுதியிலேயே தந்தை இங்கே வர வேண்டும். பிராமணர்களாகிய நீங்கள் மாத்திரமே உங்கள் முயற்சிகளுக்கேற்ப வரிசைக்கிரமமாக இதனைப் புரிந்துகொள்கின்றீர்கள். இக் கல்வியை நீங்கள் கற்க ஆரம்பித்தவுடன், நீங்கள் அழைத்த உங்கள் அன்பிற்கினியவர் இப்பொழுது வந்துள்ளார் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்கின்றீர்கள். அவர் நிச்சயமாக ஒருவரது சரீரத்தினுள் வர வேண்டும். அவருக்கெனச் சொந்தமாக ஒரு சரீரம் இல்லை. தந்தை கூறுகின்றார்: நான் இவருக்குள் பிரவேசித்து, குழந்தைகளாகிய உங்களுக்கு உலகச் சக்கரத்தினதும், படைப்பவரினதும், படைப்பினதும் ஞானத்தைக் கொடுக்கின்றேன். வேறு எவருக்கும் இது தெரியாது. இது ஒரு கல்வியாகும். பாபா இதனை மிகவும் இலகுவாக்கி, இதனை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். பாபா கூறுகின்றார்: நான் உங்களை மிகவும் செல்வந்தர்கள் ஆக்குகின்றேன்! ஒவ்வொரு கல்பத்திலும் உங்களைப் போன்று தூய்மையாகவும் சந்தோஷமாகவும் எவரும் ஆகுவதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் இந்த நேரத்தில் அனைவருக்கும் இந்த ஞானத்தைத் தானம் செய்கின்றீர்கள். தந்தை உங்களுக்கு இரத்தினங்களைத் தானம் செய்கின்றார். நீங்கள் அதனைப் பின்னர் ஏனையோருக்குத் தானம் செய்கின்றீர்கள். நீங்கள் பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குகின்றீர்கள். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றி, உங்கள் சரீரங்கள், மனங்கள், செல்வத்தைப் பயன்படுத்தி பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குகின்றீர்கள். இது அத்தகையதொரு மேன்மையான பணியாகும். நீங்கள் மறைமுகமான சேனை ஆவீர்கள். எவருக்கும் இது தெரியாது. நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால் உலகம் முழுவதிலும் இராச்சியத்தைக் கோரி, மேன்மையானவர்கள் ஆகுகின்றீர்கள் என்பதை அறிவீர்கள். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது சதா என்னை மாத்திரமே நினைவு செய்யுங்கள்! ஸ்ரீகிருஷ்ணரால் இதைக் கூறி இருக்க முடியாது. அவர் ஓர் இளவரசராக இருந்தார். நீங்கள் இளவரசர்கள் ஆகுகின்றீர்கள். சத்திய, திரேதாயுகங்களில், தூய இல்லறப் பாதை உள்ளது. தூய்மையற்ற அரசர்கள் தூய அரசரான நாராயணனினதும், தூய அரசியான இலக்ஷ்மியினதும் விக்கிரகங்களை வழிபடுகின்றார்கள். முதலில் தூய இல்லறப் பாதையின் இராச்சியமும், அதன்பின்னர் தூய்மையற்ற இல்லறப்பாதையின் இராச்சியமும் உள்ளன. அது பகலும் இரவுமாக, அரைக்கு அரைவாசியாக உள்ளது. அது நூறாயிரம் வருடங்களுக்கு உரியதாயின், அது அரைக்கு அரைவாசியாக இருக்க முடியாது. அது நூறாயிரக்கணக்கான வருடங்களாக இருப்பின், இந்து சமயத்தினரின், அதாவது, உண்மையில் தேவிதேவதா தர்மத்தினரின் சனத்தொகை மிகவும் அதிகளவாக இருந்திருக்கும். எண்ணற்ற இந்துக்கள் இருந்திருப்பார்கள். தற்சமயம், அவர்கள் இன்னமும் சனத்தொகை மதிப்பீட்டை எடுக்கின்றார்கள். அது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது, அது மீண்டும் நடைபெறும். மரணம் முன்னால் நிற்கின்றது. அதே பாரத யுத்தமே நடக்கும். ஆகவே, ஒன்றுகூடி, சேவைத் திட்டங்களை உருவாக்குங்கள். நீங்கள் தொடர்ந்தும் சேவை செய்கின்றீர்கள். நீங்கள் புதிய படங்களை உருவாக்கிக் கண்காட்சிகளை நடாத்துகின்றீர்கள். நல்லது, நீங்கள் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? அச்சா, ஓர் ஆன்மீக அருங்காட்சியகத்தை உருவாக்குங்கள். மக்கள் அதனைப் பார்க்கும் பொழுது, ஏனையோரையும் அதனைப் பார்க்குமாறு சிபாரிசு செய்வார்கள். ஏழைகள், செல்வந்தர்கள் இருபாலாரும் தானமாகக் கொடுப்பதற்கு, பணத்தை ஒதுக்கி வைக்கின்றார்கள். செல்வந்தர்கள் அதிகப் பணத்தை ஒதுக்குகின்றார்கள். இங்கும் அதுவே உள்ளது. சிலர் ஆயிரம் ரூபாயையும் ஏனையோர் குறைவாகவும் கொடுக்கின்றார்கள். சிலர் இரண்டு ரூபாய்களை மாத்திரம் அனுப்புகின்றார்கள். அவர்கள் கூறுகின்றார்கள்: எனது பெயரில் ஒரு செங்கல்லை இடுவதற்கு ஒரு ரூபாயைப் பயன்படுத்துங்கள், மற்றைய ரூபாயை 21 பிறவிகளுக்காகச் சேமியுங்கள். இது மறைமுகமானது. ஏழையின் ஒரு ரூபாயானது, செல்வந்தரின் ஆயிரம் ரூபாய்களுக்குச் சமமானது. ஏழைகள் சிறிதளைவையே கொண்டிருப்பதால், அவர்களால் என்ன செய்ய முடியும்? கணக்கு உள்ளது. வியாபாரிகளும் தானத்திற்கெனச் சிலவற்றை ஒதுக்கி வைக்கின்றார்கள். இப்பொழுது என்ன செய்யப்பட வேண்டும்? தந்தைக்கு உதவி செய்யுங்கள்! பின்னர் தந்தை உங்களுக்கு அதன் பலனை 21 பிறவிகளுக்குக் கொடுப்பார். தந்தை வந்து ஏழைகளுக்கு உதவுகின்றார். இவ்வுலகம் இருக்கப் போவதில்லை. அனைத்தும் தூசாகப் போகின்றது. முன்னைய கல்பத்தில் நடைபெற்றதைப் போன்று ஸ்தாபனை நடைபெற வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். அசரீரியான தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, உங்கள் சரீர சமயங்கள் அனைத்தையும் துறந்து ஒரேயொரு தந்தையை நினைவு செய்யுங்கள். இந்த பிரம்மாவும் படைப்பில் ஒருவரே. பிரம்மா யாருடைய குழந்தை? அவரைப் படைத்தவர் யார்? பிரம்மாவும் விஷ்ணுவும் சங்கரரும் எவ்வாறு படைக்கப்பட்டனர்? எவருக்கும் இதில் எதுவும் தெரியாது. தந்தை வந்து சத்தியத்தை விளங்கப்படுத்துகின்றார். பிரம்மா நிச்சயமாக மனித உலகில் இருக்க வேண்டும். “பிரம்மாவின் வம்சம்” நினைவுகூரப்படுகின்றது. கடவுள் எவ்வாறு மனித உலகைப் படைக்கின்றார் என்பதை எவரும் அறியார். பிரம்மா இங்கு இருக்க வேண்டும், இல்லையா? தந்தை கூறுகின்றார்: நான் பிரவேசித்துள்ளவரின் சரீரமானது இப்பொழுது அவரது பல பிறவிகளின் இறுதியில் உள்ளது. அவர் முழுமையான 84 பிறவிகளையும் எடுத்துள்ளார். பிரம்மா படைப்பவர் அல்லர். ஒரேயொரு அசரீரியானவர் மாத்திரமே படைப்பவர் ஆவார். ஆத்மாக்களும் அசரீரியானவர்கள். அவர்கள் அநாதியானவர்கள். அவர்களை எவரும் படைக்கவில்லை. ஆகவே, பிரம்மா எங்கிருந்து வந்தார்? தந்தை கூறுகின்றார்: நான் அவரில் பிரவேசித்து, அவரது பெயரை மாற்றினேன். பிராமணர்களாகிய உங்கள் பெயர்களும் மாற்றப்பட்டன. நீங்கள் இராஜரிஷிகள். ஆரம்பத்தில், நீங்கள் அனைத்தையும் துறந்து, வந்து, தந்தையுடன் தங்கினீர்கள். ஆகவே, உங்கள் பெயர்கள் மாற்றப்பட்டன. பின்னர், உங்களிற் சிலரை மாயை உண்டதால், மாலையை உருவாக்கிப் புதிய பெயர்களைக் கொடுப்பதை பாபா நிறுத்தினார். இந்நாட்களில், ஒவ்வொரு விடயத்திலும் பெருமளவு ஏமாற்றுதல் உள்ளது. அவர்கள் பாலிலும் ஏமாற்றுகின்றார்கள். உங்களால் உண்மையானதைப் பெற முடியாதுள்ளது. அவர்கள் தந்தையையும் ஏமாற்றுகின்றார்கள். அவர்கள் தங்களைக் கடவுள் என அழைக்க ஆரம்பிக்கின்றார்கள். ஆத்மா என்றால் என்ன என்பதையும், பரமாத்மா என்றால் என்ன என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். எவ்வாறாயினும், இது நீங்கள் ஒவ்வொருவரும் செய்யும் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமானது. நீங்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு கற்று ஏனையோருக்குக் கற்பிக்கின்றீர்கள் என்பதையும், நீங்கள் என்ன அந்தஸ்தைப் பின்னர் பெறுவீர்கள் என்பதையும் தந்தை அறிவார். நீங்கள் தந்தையால் உலகின் முடிக்குரிய இளவரசர்கள் ஆக்கப்படுகின்றீர்கள் எனும் நம்பிக்கை உங்களுக்கு உள்ளது. ஆகவே, நீங்கள் அதற்கேற்ப முயற்சிசெய்து, முடிக்குரிய இளவரசர்கள் ஆகுகின்றீர்கள் என்பதை அனைவருக்கும் காட்ட வேண்டும். நீங்கள் 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி வந்து, இப்பொழுது மீண்டும் அவ்வாறு ஆகுகின்றீர்கள். இது நரகம். இங்கே எதுவும் எஞ்சியிருப்பதில்லை. இப்பொழுது தந்தை வந்து, உங்கள் பொக்கிஷக் களஞ்சியத்தை நிரப்புவதுடன் உங்கள் துன்பம் அனைத்தையும் அகற்றுகின்றார். அனைவரிடமும் வினவுங்கள்: நீங்கள் உங்கள் பொக்கிஷக் களஞ்சியத்தை நிரப்புவதற்கு, இங்கு வந்துள்ளீர்கள், இல்லையா? அமரத்துவ பூமியில் மரணம் இருக்க முடியாது. உங்கள் துன்பத்தை அகற்றி, உங்கள் பொக்கிஷக் களஞ்சியத்தை நிரப்புவதற்கு, தந்தை வந்துள்ளார். அது அமரத்துவ பூமியும், இது மரண பூமியும் ஆகும். பயனற்ற விடயங்களை அன்றி, இந்த இனிய விடயங்களையே செவிமடுத்துப் பேசுங்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்ற, இக்கல்வியை உங்களுக்குக் கற்பிப்பதற்குத் தந்தை வந்துவிட்டார். ஆகவே, ஒருபொழுதும் உங்களுக்கு நேரமில்லை என்று கூறாதீர்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்றி உங்கள் சரீரம், மனம், செல்வத்தின் மூலம் பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குவதற்குச் சேவை செய்யுங்கள்.2. உங்கள் மத்தியில் இந்த ஞானத்தின் மிகவும் இனிய விடயங்களையே செவிமடுத்துப் பேசுங்கள். எப்பொழுதும் தந்தையின் வழிகாட்டலை நினைவுசெய்யுங்கள்: தீயதைக் கேட்காதீர்கள், தீயதைப் பேசாதீர்கள்…
ஆசீர்வாதம்:
நீங்கள் விகாரத்தை வென்றவராகி, அதன்மூலம் எல்லைக்கு உட்பட்ட ஆசைகள் அனைத்தையும் வெற்றி கொண்டு, உலகை வென்றவர் ஆகுவீர்களாக.எல்லைக்கு உட்பட்ட ஆசைகள் எல்லாமே, விகாரத்தின் சுவடுகள் ஆகும். பொருட்களுக்கான ஆசைகள் உள்ளன. இரண்டாவதாக, ஏனைய மனிதர்களிடம் இருந்து பெறப்படும் எல்லைக்கு உட்பட்ட பேறுகளுக்கான ஆசைகள் உள்ளன. மூன்றாவது, உறவுமுறைகளை நிறைவேற்றுவதில் ஆசை உள்ளது. நான்காவதாக, சேவை செய்யும் நோக்கத்தில் ஏதாவது எல்லைக்கு உட்பட்ட ஆசை உள்ளது. குறிப்பாக ஒரு நபரினால் அல்லது பொருளால் கவரப்பட்டு, அது ஆசை இல்லை, ஆனால் உங்களுக்கு அது விருப்பம் எனச் சொல்வதும் விகாரத்தின் சுவடே ஆகும். இந்த சூட்சுமமான சுவடுகள் முடிவடையும் போது, நீங்கள் விகாரத்தை வென்றவர் என்றும் அதனால் உலகை வென்றவர் என்றும் அழைக்கப்படுவீர்கள்.
சுலோகம்:
உங்களின் இதயபூர்வமான இனங்காணுதலைக் கொண்டிருப்பதன் மூலம் இதயங்களுக்கு சௌகரியம் அளிக்கும் தந்தையின் ஆசீர்வாதங்களுக்கான உரிமையைப் பெற்றுக் கொள்ளுங்கள்.அவ்யக்த சமிக்கை: எண்ணங்களின் சக்தியை சேமித்து மேன்மையான சேவைக்கு கருவியாகுங்கள்.
உங்களின் மனம் ஒரு சூட்சுமமான சக்தி. அது உங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். அதாவது, அதற்குக் கொடுக்கப்படும் கட்டளைக்கேற்ப அது எல்லாவற்றையும் செய்ய வேண்டும். அப்போது நீங்கள் திறமைச்சித்தி அடையவும் இராச்சிய உரிமையைப் பெறவும் அது உதவும். உங்களின் எண்ணங்களின் சக்தியைச் சேமிப்பதற்கு, நீங்கள் நினைத்ததை மட்டுமே செய்யுங்கள். ‘நில்’ என நீங்கள் சொன்னதும் உங்களின் எண்ணங்கள் நிற்க வேண்டும். நீங்கள் சேவை செய்ய நினைக்கும்போது, சேவை செய்வதில் மும்முரமாக ஈடுபடுங்கள். நீங்கள் பரந்தாமத்தை நினைக்கும்போது, பரந்தாமத்திற்குச் செல்லுங்கள். இத்தகைய கட்டுப்படுத்தும் சக்தியை அதிகரியுங்கள்.