02.08.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, ஒருபொழுதும் களைப்படைந்து, நினைவு யாத்திரையைக் கைவிடாதீர்கள். ஆத்ம உணர்வில் இருப்பதற்குச் சதா முயற்சி செய்யுங்கள். இனிமையானவர் ஆகுவதற்கும், தந்தையின் அன்பை ஈர்த்துக் கொள்வதற்கும், நினைவில் நிலைத்திருங்கள்.

கேள்வி:
16 சுவர்க்கக் கலைகள் நிறைந்தவர்களாகவும், சம்பூரணமானவர்களாகவும் ஆகுவதற்கு நீங்கள் நிச்சயமாகச் செய்ய வேண்டிய முயற்சி என்ன?

பதில்:
இயன்றவரை உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, அன்புக்கடலான தந்தையை நினைவு செய்தால், நீங்கள் சம்பூரணம் ஆகுவீர்கள். இந்த ஞானம் மிகவும் இலகுவானது, ஆனால், 16 சுவர்க்கக் கலைகளும் நிறைந்தவர்கள் ஆகுவதற்கு, ஆத்மாவான நீங்கள் சம்பூர்ணம் அடைய வேண்டும். அதற்கு முதலில் நீங்கள் நினைவைக் கொண்டிருக்க வேண்டும். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுவதன் மூலம் இனிமையானவர்கள் ஆகுவீர்கள்; அப்பொழுது சகல முரண்பாடுகளும் முடிவடையும்.

பாடல்:
நீங்களே அன்புக்கடல், நாங்கள் ஒரு துளிக்காகத் தவிக்கின்றோம்.

ஓம் சாந்தி.
அன்புக்கடலானவர் தனது குழந்தைகளையும், அன்புக்கடல்களாக ஆக்குகின்றார். இலக்ஷ்மி, நாராயணன் போன்று ஆகுவதே குழந்தைகளாகிய உங்கள் இலக்கும் குறிக்கோளும் ஆகும். அனைவரும் அவர்களை அதிகளவு விரும்புகின்றனர். பாபா உங்களையும் அவர்களைப் போன்று இனிமையானவர்கள் ஆக்குகின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இங்கேயே நீங்கள் இனிமையானவர்கள் ஆகுகின்றீர்கள். எவ்வாறாயினும், நினைவின் மூலமே நீங்கள் அவ்வாறாக ஆகுகின்றீர்கள். பாரதத்தின் யோகம் நினைவுகூரப்படுகின்றது; இதுவே நினைவாகும். இந்த நினைவின் மூலமே நீங்கள் அவர்களைப் போன்று உலக அதிபதிகளாக ஆகுகின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இந்த முயற்சியையே செய்ய வேண்டும். நீங்கள் அதிகளவு ஞானத்தைக் கொண்டிருக்கிறீர்கள் என நினைப்பதால், அகங்காரம் அடைய வேண்டாம். பிரதான விடயம் நினைவேயாகும். நினைவே உங்களுக்கு அன்பைக் கொடுக்கின்றது. நீங்கள் இனிமையானவர்களாகவும் அன்பானவர்களாகவும் உயர்ந்த அந்தஸ்தைக் கோருபவர்களாகவும் விரும்பினால், அப்பொழுது முயற்சி செய்யுங்கள்! இல்லையெனில், அதிகளவு வருந்த வேண்டியிருக்கும். நினைவில் நிலைத்திருக்க முடியாத பல குழந்தைகள் இருக்கின்றார்கள். ஏனெனில் அவர்கள் களைப்படைவதால், நினைவு செய்வதை நிறுத்தி விடுகின்றார்கள். முதலில், ஆத்ம உணர்வு உடையவர் ஆகுவதற்குப் பெருமளவு முயற்சி செய்யுங்கள். இல்லையெனில் நீங்கள் அடையும் அந்தஸ்து மிகவும் குறைவாக இருக்கும். நீங்கள் ஒருபொழுதும் மீண்டும் இனிமையானவர் ஆகமாட்டீர்கள். வெகுசில குழந்தைகளே நினைவில் நிலைத்திருப்பதால், அதிகளவு அன்பை ஈர்த்துக் கொள்கின்றார்கள். தந்தையின் நினைவு மாத்திரமே இருக்க வேண்டும். எந்தளவிற்கு அதிகமாக நீங்கள் அவரை நினைவு செய்கின்றீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக நீங்கள் இனிமையானவர்கள் ஆகுவீர்கள். இலக்ஷ்மி, நாராயணன் தங்களுடைய முன்னைய பிறவியில் கடவுளை அதிகளவு நினைவு செய்தார்கள். இந்த நினைவின் மூலமே, அவர்கள் மிகவும் இனிமையானவர்கள் ஆகினார்கள். சத்தியயுகத்தின் சூரிய வம்சம் முதலாம் இலக்கத்திற்குரியது, சந்திர வம்சம் இரண்டாம் இலக்கத்திற்கு உரியது. இலக்ஷ்மியும், நாராயணனுமே அதிகளவு விரும்பப்படுகின்றார்;கள். இலக்ஷ்மி நாராயணனின் முகச்சாயலுக்கும், இராமர், சீதையின் முகச்சாயலுக்கும் இடையில் பெருமளவு வேறுபாடு உள்ளது. இலக்ஷ்மி, நாராயணன் ஒருபொழுதும் எவரினாலும் அவமதிக்கப்படவில்லை. ஸ்ரீகிருஷ்ணர் தவறுதலாக அவமதிக்கப்பட்டார். இராமர், சீதையும் அவமதிக்கப்பட்டார்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் உங்களை ஆத்மாக்களாகக் கருதும்பொழுது, மிகவும் இனிமையானவர்கள் ஆகுவீர்கள். ஒருவர் தன்னை ஆத்மாவாகக் கருதி, தந்தையை நினைவு செய்வதில் அதிகளவு சந்தோஷத்தை அனுபவம் செய்கின்றார். எந்தளவிற்கு அதிகமாக நீங்கள் அவரை நினைவு செய்கின்றீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். நீங்கள் 16 சுவர்க்கக் கலைகள் நிறைந்தவர்கள் ஆகுவீர்கள். 14 சுவர்க்கக் கலைகள் உடையவர்கள் என்பது குறைபாடு உள்ளதாகவே கருதப்படுகின்றது. பின்னர் தொடர்ந்தும் அதிகக் குறைபாடுகள் உள்ளன. நீங்கள் 16 சுவர்க்கக் கலைகளால் சம்பூரணமானவர்களாக வேண்டும். இந்த ஞானம் மிகவும் இலகுவானது. எவருமே அதைக் கற்க முடியும். ஒவ்வொரு கல்பத்திலும் நீங்கள் 84 பிறவிகளை எடுக்கிறீர்கள். நீங்கள் முழுமையாகத் தூய்மை ஆகும்வரை உங்களில் எவருமே வீடு திரும்ப முடியாது. இல்லாவிடில், தண்டனை அனுபவம் செய்யப்பட வேண்டும். பாபா உங்களுக்கு மீண்டும், மீண்டும் விளங்கப்படுத்துகின்றார்: இயன்றவரையில் ‘நான் ஓர் ஆத்மா’ என்ற இந்தக் கருத்தை உறுதியாக்குங்கள். ஆத்மாவான, நான், வீட்டில் வசிக்கும் பொழுது, சதோபிரதானாக இருக்கின்றேன். பின்னர், நான் இங்கே வந்து பிறப்பு எடுக்கின்றேன். சிலர் குறித்த சில எண்ணிக்கையான பிறவிகளையும், ஏனையோர் வேறு எண்ணிக்கையான பிறவிகளையும் எடுக்கின்றார்கள். இறுதியில், ஆத்மாக்கள் அனைவரும் தமோபிரதான் ஆகுகின்றார்கள். உலகின் மதிப்பு தொடர்ந்தும் குறைவடைகின்றது. ஒரு வீடு புதியதாக இருக்கும் பொழுது, அதில் பெருமளவு சௌகரியம் அனுபவம் செய்யப்படுகின்றது. பின்னர் அது குறைபாடு உடையதாக ஆகுகின்றது. சுவர்க்கக் கலைகள் தொடர்ந்தும் குறைவடைகின்றன. குழந்தைகளான நீங்கள் சம்பூரணமான உலகிற்குச் செல்ல விரும்பினால், நீங்கள் சம்பூரணமாக வேண்டும். ஞானத்தைக் கொண்டிருந்தால், சம்பூரணமாக இருக்கலாம் என்று அர்த்தம் இல்லை. ஆத்மாக்களாகிய நீங்கள் சம்பூரணம் ஆகவேண்டும். இயன்றவரை உங்களை பாபாவின் குழந்தையான, ஆத்மாவாகக் கருதுங்கள். உள்ளே பெருமளவு சந்தோஷத்தை அனுபவம் செய்ய வேண்டும். மனிதர்கள் தங்களைச் சரீரதாரிகளாகக் கருதுவதில் சந்தோஷம் அடைகின்றார்கள்: “நான் இன்னாரின் குழந்தை.” அந்தப் போதை தற்காலிகமானது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது உங்கள் புத்தியின் யோகத்தை முழுமையாகத் தந்தையுடன் இணைக்க வேண்டும். நீங்கள் இதில் குழப்பம் அடையக்கூடாது. நீங்கள் வெளிநாட்டுக்கு எங்கேயாவது செல்ல வேண்டி இருந்தாலும் ஒரு கருத்தை உறுதி ஆக்குங்கள்: நான் பாபாவை நினைவுசெய்ய வேண்டும். பாபா அன்புக்கடல் ஆவார். இந்தப் புகழ் எந்த மனிதருக்கும் சொந்தமானதல்ல. ஆத்மாக்கள் தங்களுடைய தந்தையைப் புகழ்கின்றார்கள். ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்கள். ஒரேயொருவரே ஆத்மாக்கள் அனைவரதும் தந்தையாவார். தந்தை அனைவருக்கும் கூறுகிறார்: குழந்தைகளே, நீங்கள் சதோபிரதானாக இருந்தீர்கள். இப்பொழுது தமோபிரதானாகி விட்டீர்கள். தமோபிரதான் ஆகியதால், நீங்கள் சந்தோஷம் அற்றவர்களாகி விட்டீர்கள். இப்பொழுது பரமாத்மாவான பரமதந்தை ஆத்மாக்களாகிய எங்களுக்குக் கூறுகின்றார்: ஆரம்பத்தில் நீங்கள் சம்பூரணமாக இருந்தீர்கள். ஆத்மாக்கள் அனைவரும் அங்கே இருக்கும் பொழுது சம்பூரணமாக இருந்தார்கள். அவர்கள் வெவ்வேறு பாகங்களை நடித்தாலும் சம்பூரணமானவர்களாகவே இருந்தார்கள். தூய்மை அடையாமல் எவருமே அங்கே திரும்பிச் செல்ல முடியாது. சந்தோஷ தாமத்தில் உங்களுக்கு அமைதியும், சந்தோஷமும் இருக்கின்றன. இதனாலேயே உங்களுடைய தர்மம் அதிமேலானது. நீங்கள் எல்லையற்ற சந்தோஷத்தைக் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் என்னவாக ஆகுகின்றீர்கள் எனச் சிந்தியுங்கள். நீங்கள் சுவர்க்க அதிபதிகள் ஆகுகின்றீர்கள். அந்தப் பிறவி வைரத்தைப் போல் பெறுமதியானது. இப்பொழுது பிறப்பு சிப்பியைப் போன்றதாகும். தந்தை இப்பொழுது நினைவில் நிலைத்திருக்குமாறு உங்களுக்குச் சமிக்ஞை கொடுக்கின்றார். நீங்கள் அவரை அழைத்தீர்கள்: வந்து தூய்மையற்ற எங்களைத் தூய்மை ஆக்குங்கள்! சத்தியயுகத்தில் அவர்கள் முற்றிலும் விகாரம் அற்றவர்கள். இராமரும், சீதையும் முழுமை அடைந்தவர்கள் என அழைக்கப்படுவதில்லை. அவர்கள் இரண்டாம் தரத்திற்குச் செல்கின்றார்கள். அவர்கள் நினைவு யாத்திரை என்ற பாடத்தில் சித்தி அடையவில்லை. இந்த ஞானத்தில் நீங்கள் எவ்வளவு திறமைசாலிகளாக இருந்தாலும், அதனால் நீங்கள் இனிமையானவரென தந்தை ஒருபொழுதும் உங்களை இனங்காண மாட்டார். நீங்கள் நினைவில் நிலைத்திருந்தால் மாத்திரமே, இனிமையானவர்கள் ஆகுகிறீர்கள். அப்பொழுதே நீங்கள் தந்தையையும் மிகவும் இனிமையானவராகக் காண்பீர்கள். இந்தக் கல்வி மிகவும் பொதுவானது. தூய்மையாகி, நினைவில் நிலைத்திருங்கள். இதை மிகக் கவனமாகக் குறித்துக் கொள்ளுங்கள். நீங்கள் நினைவு யாத்திரையில் நிலைத்திருக்கும் பொழுது குழப்பங்கள் இடம்பெறுவதும், அகங்காரம் விருத்தியாவதும் நிறுத்தப்படும். பிரதான விடயம் உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவு செய்வதாகும். உலகிலுள்ள மக்கள் அதிகளவு சண்டை, சச்சரவில் ஈடுபடுகின்றார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையை நஞ்சு போன்று ஆக்குகின்றார்கள். இந்த வார்த்தை சத்தியயுகத்தில் இருக்கமாட்டாது. நீங்கள் முன்னேறிச் செல்லும் பொழுது மனிதர்களின் வாழ்க்கை மேலும் நஞ்சு போன்றதாகும். இது நச்சுக்கடல். சகலரும் ஆழ்நரகத்தில் இருக்கின்றார்கள். பெருமளவு அசுத்தமான நடத்தை உள்ளது; அது நாளுக்கு நாள் தொடர்ந்தும் அதிகரிக்கின்றது. இது தீய உலகம் என அழைக்கப்படுகின்றது. அவர்கள் தொடர்ந்தும் ஒருவரையொருவர் சந்தோஷம் அற்றவர்கள் ஆக்குகின்றார்கள், ஏனெனில் சரீர உணர்வு, காமம் என்ற தீய ஆவிகள் உள்ளன. தந்தை கூறுகின்றார்: அந்தத் தீய ஆவிகளைத் துரத்தி விடுங்கள்! அந்தத் தீய ஆவிகளே உங்களை அவலட்சணமானவர்கள் ஆக்குகின்றன. நீங்கள் காமச் சிதையில் அமர்வதால், அவலட்சணமாகிய பின்னர் தந்தை வந்து கூறுகின்றார்: நான் மீண்டும் ஒருமுறை ஞானாமிர்தத்தைப் பொழிய வந்துள்ளேன். நீங்கள் இப்பொழுது என்னவாக ஆகுகின்றீர்கள்? அங்கேயுள்ள மாளிகைகளில் வைரங்கள் பதிக்கப்பட்டிருக்கும். சகலவிதமான சௌகரியங்களும் அங்கேயிருக்கும். இங்கு அனைத்தும் கலப்படமானவை. அவர்கள் பசுக்களுக்கு எதை ஊட்டுகிறார்கள் எனப் பாருங்கள்! நன்மையையும், பலத்தையும் பெற்ற பின்னர் அவற்றிற்கு வைக்கோலே கொடுக்கப்படுகின்றது. பசுக்கள் போதிய உணவைக் கூடப் பெறுவதில்லை. ஸ்ரீகிருஷ்ணருடன் காட்டப்பட்டுள்ள பசுக்களுடன் அவற்றை ஒப்பிட்டுப் பாருங்கள். அவை முதற்தரமான பசுக்களாகக் காணப்படுகின்றன. சத்தியயுகத்தில் பசுக்கள் அவ்வாறானவை, கேட்கவே வேண்டாம்! அவற்றைப் பார்க்கும் பொழுதே, நீங்கள் சந்தோஷத்தை உணர்வீர்கள். இங்கே அனைத்திலிருந்தும், அவற்றின் சாராம்சம் அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளது. இது மிகத் தீய உலகம். உங்கள் இதயத்தில் அதன் மீது பற்று வைக்காதீர்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் விகாரம் நிறைந்தவர்களாகி விட்டீர்கள்! அவர்கள் எவ்வாறு ஒருவரையொருவர் தொடர்ந்தும் யுத்தத்தில் கொல்கின்றார்கள் எனப் பாருங்கள். அணுகுண்டுகளைக் கண்டுபிடித்தவர்களுக்கு அதிகளவு மரியாதை கொடுக்கப்பட்டது. அவையே அனைத்தையும் அழிக்கப் போகின்றன. இன்றைய மனிதர்கள் எவ்வாறானவர்கள் என்றும், நாளைய மனிதர்கள் எவ்வாறு இருப்பார்கள் எனவும் தந்தை இங்கிருந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் இப்பொழுது இடையில் இருக்கின்றீர்கள். நல்ல சகவாசம் உங்களை அக்கரைக்கு எடுத்துச் செல்கின்றது, தீய சகவாசம் உங்களை மூழ்கடித்து விடுகின்றது. நீங்கள் அதிமேன்மையான மனிதர்கள் ஆகுவதற்குத் தந்தையின் கரத்தைப் பிடித்துள்ளீர்கள். ஒருவர் நீந்துவதற்குக் கற்கும்பொழுது, அவர் கற்பிப்பவரின் கரத்தைப் பற்றிக் கொள்ள வேண்டும், இல்லையெனில் அவர் மூச்சுத் திணறுவார். இங்கேயும் நீங்கள் பாபாவின் கரத்தைப் பற்றிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் மாயை உங்களைக் கீழே தள்ளிவிடுவாள். நீங்கள் முழு உலகையும் சுவர்க்கம் ஆக்குகின்றீர்கள். நீங்களே உங்களைப் போதை நிறைந்த நிலைக்குக் கொண்டு வரவேண்டும். ஓ நாங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால், எங்கள் சொந்த இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றோம். மனிதர்கள் அனைவரும் தானம் செய்கின்றார்கள். அவர்கள் பக்கிரிகளுக்குப் (துறவி) பணம் கொடுக்கின்றார்கள். அவர்கள் யாத்திரை செய்யும்பொழுது, பண்டிதர்களுக்கும் சிலவற்றைத் தானம் செய்கின்றார்கள். அவர்கள் தானமாக நிச்சயமாக எதையாவது, ஒரு கைப்பிடி அரிசியையேனும் கொடுப்பார்கள். அவை அனைத்தும் பக்திமார்க்கத்தில் தொடர்கின்றது. தந்தை இப்பொழுது எங்களை இரட்டைத் தானிகளாக ஆக்கியுள்ளார். தந்தை கூறுகின்றார்: மனிதர்கள் வந்து 21 பிறவிகளுக்குக் சுகப்படும் வகையில், மூன்றடி சதுர நிலத்தில் ஓர் இறை பல்கலைக்கழகம் இணைந்த ஒரு வைத்தியசாலையைத் திறவுங்கள். இப்பொழுது எங்குமுள்ள பலவிதமான நோய்களைப் பாருங்கள். சிலர் நோயுற்றிருக்கும் பொழுது, சிலசமயங்களில் அத்தகைய துர்நாற்றம் வீசுவதால், நீங்கள் வைத்தியசாலைக்குள் பிரவேசிக்கும் பொழுதே விருப்பமின்மையை உணர்கின்றீர்கள். கர்ம வேதனை மிகவும் கடுமையானது. தந்தை கூறுகின்றார்: இந்தத் துன்பங்கள் அனைத்தில் இருந்தும் விடுதலை ஆகுவதற்கு, என்னை நினைவு செய்யுங்கள்! நான் உங்களுக்கு வேறு எந்தக் கஷ்டமும் கொடுப்பதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் பல கஷ்டங்களுக்கு முகம் கொடுத்துள்ளீர்கள் என்பதை பாபா அறிவார். விகாரமான மனிதர்களின் முகங்கள் முற்றிலும் மாறுகின்றன் அவர்கள் பிணம் போல ஆகுகின்றார்கள். அவர்கள் மதுபானம் அருந்தாமல் இருக்க முடியாத குடிகாரர்களைப் போன்றவர்கள் ஆகுகிறார்கள். அவர் மதுபானத்தினால் மிகவும் போதை ஊட்டப்படுகிறார், ஆனால் அது சிறிது நேரமே நீடிக்கின்றது. விகாரங்களினால், விகாரமான மனிதர்களின் ஆயுட்காலம் மிகவும் குறைவடைந்துள்ளது. விகாரமற்ற தேவர்களின் ஆயுட்காலம் சராசரியாக 125-150 வருடங்களாக இருந்தது. நீங்கள் என்றென்றும் ஆரோக்கியமானவர்கள் ஆகும்பொழுது, உங்கள் ஆயுட்காலமும் அதிகரிக்கும், இல்லையா? அப்பொழுது நீங்கள் நோயிலிருந்து விடுபட்ட சரீரத்தைக் கொண்டிருப்பீர்கள். தந்தை அநாதியான சத்திரசிகிச்சை நிபுணர் எனவும் அழைக்கப்படுகின்றார். சற்குரு ஞானத் தைலத்தைக் கொடுக்கும் பொழுது அறியாமை இருள் அகற்றப்படுகின்றது. அவர்கள் தந்தையை அறியாததால், அறியாமை இருள் இருப்பதாகக் கூறுகின்றார்கள். இது பாரத மக்களுக்கே பொருந்துகின்றது. கிறிஸ்து இன்ன, இன்ன நேரத்தில் இருந்தார் என அவர்கள் அறிவார்கள். அவர்களிடம் இந்தத் திகதிகள் அனைத்தினதும் முழுப் பட்டியலும் உள்ளது. அவர்கள் பாப்பரசர்கள் வரிசைக்கிரமமாக எவ்வாறு சிம்மாசனத்தில் அமர்ந்தார்கள் எனக் காட்டுகின்றார்கள். பாரதம் மாத்திரமே எவரது சுய சரிதையையும் அறியாதுள்ளது. அவர்கள் அழைக்கின்றார்கள்: ஓ பரமாத்மாவே! ஓ துன்பத்தை நீக்கிச் சந்தோஷத்தை அருள்பவரே! ஓ தாய் தந்தையே! நல்லது, தாய், தந்தையின் சுயசரிதையை எங்களுக்குக் கூறுங்கள். அவர்களுக்கு எதுவுமே தெரியாது! இது அதிமேன்மையான சங்கமயுகம் என நீங்கள் அறிவீர்கள். நாங்கள் இப்பொழுது அதிமேன்மையான மனிதர்கள் ஆகுகின்றோம். ஆகையினால், நாங்கள் முழுமையாகக் கற்க வேண்டும். பலரும் சமூகத்தின் அபிப்பிராயங்களில் அதிகளவு சிக்கியுள்ளார்கள். இந்த பாபா எவரைப் பற்றியும் அக்கறை கொள்ளவில்லை. அவர் மிகவும் அவமரியாதை செய்யப்பட்டார். இவர் என்றுமே இவை எதனைப் பற்றியும் சிந்தித்திருக்கவோ அல்லது கனவு காணவோ இல்லை. எவ்வாறாயினும் பாதையில் சென்ற பிராமணர் சிக்கிக்கொண்டார். பாபா இவரை ஒரு பிராமணர் ஆக்கிய பின்னரே இவர் அவமரியாதை செய்யப்பட்டார். ஊர்சபை முழுவதும் ஒருபுறத்திலும், தாதா மறுபுறத்திலும் இருக்க நேர்ந்தது. சிந்தி சபையினர் அனைவரும் அவரிடம் வினவினார்கள்: நீங்கள் என்ன செய்கிறீர்கள்? கீதையில் கடவுள் சிவனின் வாசகங்கள் கூறுகின்றன: காமமே கொடிய எதிரி. இதை வெற்றி கொள்வதன் மூலம் நீங்கள் உலகின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். இந்தக் கூற்று கீதையில் உள்ளது. யாரோ ஒருவர் என்னைக் கூற வைக்கின்றார்: காம விகாரத்தை வெற்றி கொள்வதன் மூலம் நீங்கள் உலகை வெற்றி கொள்பவர்கள் ஆகுகிறீர்கள். இலக்ஷ்மி, நாராயணனும் இதை வெற்றி கொண்டார்கள். இதில் யுத்தம் என்ற கேள்விக்கே இடமில்லை. நான் உங்களுக்குச் சுவர்க்க இராச்சியத்தைக் கொடுக்க வந்துள்ளேன். இப்பொழுது தூய்மையாகி, தந்தையை நினைவு செய்யுங்கள். ஒரு மனைவி தான் தூய்மையாக வேண்டும் எனவும் ஆனால் கணவன் தூய்மையாக மாட்டேன் எனவும் கூறும்பொழுது, ஒருவர் அன்னமாகவும், மற்றவர் நாரையாகவும் ஆகுகின்றனர். தந்தை உங்களை இந்த ஞான இரத்தினங்களைத் தேர்ந்தெடுக்கின்ற அன்னங்களாக ஆக்குவதற்கு வந்துள்ளார். எவ்வாறாயினும் ஒருவர் தூய்மையாகி, மற்றவர் தூய்மை ஆகாதுவிடின், சண்டை சச்சரவுகள் இருக்கின்றன. ஆரம்பத்தில் அவர்கள் பெருமளவு வலிமையைக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது எவருக்கும் அந்தளவு தைரியமில்லை. தங்களை வாரிசுகள் என அவர்கள் கூறுகின்றார்கள், ஆனால் வாரிசாகுவது என்பது முற்றிலும் வேறுபட்ட விடயம். ஆரம்பத்தில் அது அவர்களின் அற்புதமாக இருந்தது. பிரபல்யமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உடனடியாகவே அனைத்தையும் துறந்து, தங்கள் ஆஸ்தியைக் கோர வந்தார்கள். ஆகையினால் அவர்கள் தகுதியானவர்கள் ஆகினார்கள். ஆரம்பத்தில் வந்தவர்கள் மகத்தான அற்புதங்களைப் புரிந்தார்கள். இப்பொழுது அவர்களைப் போன்று அரிதாக வெகுசிலரே வெளிப்படுகின்றார்கள். அவர்கள் சமூகத்தின் அபிப்பிராயங்களில் பெருமளவு அக்கறை கொண்டுள்ளார்கள். ஆரம்பத்தில் வந்தவர்கள் பெருமளவு தைரியத்தைக் காட்டினார்கள். இப்பொழுது அரிதாகவே சிலர் அந்தளவு தைரியத்தைக் கொண்டுள்ளார்கள். ஆம், ஏழைகளிடம் அந்தத் தைரியம் உள்ளது. மாலையின் ஒரு மணியாகுவதற்கு நீங்களும் முயற்சி செய்ய வேண்டும். இந்த மணிமாலை மிகவும் நீளமானது. 8 மணிகளின் மாலையும், 108 மணிகளின் மாலையும், அத்துடன் 16,108 மணிகளின் மாலையும் உள்ளன. தந்தை கூறுகின்றார்: பெருமளவு முயற்சி செய்யுங்கள்! உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். சிலர் உண்மையைக் கூறுவதில்லை. தங்களை மிக நல்லவர்களாகக் கருதுபவர்களுமே பாவம் செய்கின்றார்கள். அவர்கள் ஞானம் நிறைந்தவர்களாக இருந்தும், இந்த ஞானத்தை நன்றாக விளங்கப்படுத்திய பொழுதிலும் அவர்கள் எந்த விதமான யோகத்தையும் கொண்டிருப்பதில்லை. ஆகவே அவர்களால் பாபாவின் இதயத்தில் அமர முடியாது. அவர்கள் நினைவில் நிலைத்திருக்காதுவிடின் அவர்களால் பாபாவின் இதய சிம்மாசனத்தில் அமர முடியாது. நினைவே, நினைவைத் தூண்டுகின்றது. ஆரம்பத்தில் இருந்தவர்கள் உடனடியாகவே தங்களை அர்ப்பணித்தார்கள். உங்களை அர்ப்பணிப்பது என்றால், உங்கள் மாமியார் வீட்டுக்குச் செல்வது போன்றதல்ல! நினைவே பிரதான விடயம், அப்பொழுதே உங்கள் சந்தோஷப் பாதரசம் உயரும். உங்கள் சுவர்க்கக் கலைகள் தொடர்ந்தும் குறைவடைந்து உள்ளதால், உங்கள் துன்பமும் தொடர்ந்தும் அதிகரித்து உள்ளது. இப்பொழுது எந்தளவிற்குச் சுவர்க்கக் கலைகள் அதிகரிக்கின்றனவோ, அந்தளவிற்குச் சந்தோஷ பாதரசமும் உயரும். இறுதியில் நீங்கள் அனைத்தினதும் காட்சிகளைக் காண்பீர்கள். பெருமளவு நினைவைக் கொண்டிருந்தவர்கள் என்ன அந்தஸ்தைப் பெறுவார்கள் என்பதை நீங்கள் காண்பீர்கள். இறுதியில் நீங்கள் பல காட்சிகளைக் காண்பீர்கள். விநாசம் இடம்பெறும் பொழுது, சுவர்க்கக் காட்சிகள் என்ற அல்வாவை உண்டு கொண்டிருப்பீர்கள். பாபா மீண்டும் மீண்டும் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: நினைவை அதிகரியுங்கள். நீங்கள் சிறிதளவில் இந்த ஞானத்தைச் சிலருக்கு விளங்கப்படுத்துவதால் பாபா பூரிப்படைவதில்லை. இராமரின் பெயரை உச்சரித்துக் கொண்டே உங்களால் ஆற்றைக் கடக்க முடியும் என ஒரு பண்டிதர் கூறிய கதை ஒன்று உள்ளது. நம்பிக்கை கொண்டிருப்பதன் மூலம் வெற்றி அடையலாம் என்பதே இதன் அர்த்தமாகும். நீங்கள் தந்தை மீது சந்தேகம் கொள்ளும் பொழுது, அழிவிற்கே இட்டுச் செல்லப்படுகிறீர்கள். தந்தையின் நினைவில் இருப்பதன் மூலமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படுகின்றன. இரவுபகலாக முயற்சி செய்யுங்கள். அப்பொழுது உங்கள் பௌதீகப் புலன்களின் விஷமங்கள் முடிந்துவிடும். இதற்குப் பெருமளவு முயற்சி தேவை. நினைவு அட்டவணை வைத்திருக்காத பலர் உள்ளார்கள். அவர்களுக்கு ஆழமான அத்திவாரம் இல்லாதுள்ளது. இயன்றளவுக்கு அனைத்துச் சந்தர்ப்பங்களிலும், நினைவில் நிலைத்திருங்கள். அப்பொழுதே நீங்கள் சதோபிரதானாகவும், 16 சுவர்க்கக் கலைகள் நிறைந்தவராகவும் ஆகமுடியும். தூய்மையுடன் நினைவு யாத்திரையிலும் இருக்க வேண்டும். நீங்கள் தூய்மையாக இருக்கும் பொழுதே உங்களால் நினைவில் நிலைத்திருக்க முடியும். இக் கருத்தை மிக நன்றாகக் கிரகித்துக் கொள்ளுங்கள். தந்தை மிகவும் ஆணவமற்றவர். நீங்கள் முன்னேறிச் செல்லும்பொழுது அனைவரும் உங்கள் பாதங்களில் வீழ்ந்து வணங்குவார்கள். உண்மையில், இந்தத் தாய்மார்களே சுவர்க்க வாயில்களைத் திறக்கின்றார்கள் என அவர்கள் கூறுவார்கள். நினைவுச் சக்தி இன்னமும் மிகக் குறைவாகவே உள்ளது. சரீரதாரிகளை நினைவு செய்யாதீர்கள்! தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகுவதற்குப் பெருமளவு முயற்சி தேவையாகும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் இதயப் பற்றை, துன்பத்தை விளைவிக்கும் இப் பழைய, தூய்மையற்ற, அசுத்த உலகின் மீது வைக்காதீர்கள். தந்தையின் கரத்தைப் பற்றிக் கொண்டிருப்பதன் மூலம் உங்களால் அக்கரைக்குச் செல்ல முடியும்.

2. மாலையில் ஒரு மணியாகுவதற்கு, பெருமளவு தைரியத்தைப் பேணி, முயற்சி செய்யுங்கள். இந்த ஞான முத்துக்களைத் தேர்ந்தெடுக்கின்ற ஓர் அன்னம் ஆகுங்கள். பாவச் செயல்கள் எதையும் செய்யாதீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு கருவியாக இருக்கும் உணர்வைக் கொண்டிருப்பதன் மூலம் சேவையில் வெற்றி பெறும் ஒரு மேன்மையான சேவையாளர் ஆகுவீர்களாக.

கருவியாக இருக்கும் உணர்வானது இயல்பாகவே நீங்கள் செய்யும் சேவையில் வெற்றியை ஏற்படுத்துகிறது. கருவியாக இருக்கும் உணர்வு இல்லாவிட்டால், வெற்றி ஏற்பட மாட்டாது. மேன்மையான சேவையாளர் ஒவ்வோர் அடியையும் தந்தையின் பாதச் சுவடுகளில் வைத்து, ஒவ்வோர் அடியிலும் மேன்மையான வழிகாட்டல்களைப் பின்பற்றுவதன் மூலம் ஒவ்வோர் அடியையும் மேன்மையானது ஆக்கிக் கொள்வார். உங்களின் சேவையிலும் உங்களிலும் எந்தளவிற்கு அதிகமாக வீணானவை முடிகிறதோ, அந்தளவிற்கு நீங்கள் சக்திவாய்ந்தவர்கள் ஆகுவீர்கள். இத்தகைய சக்திவாய்ந்ததோர் ஆத்மா ஒவ்வோர் அடியிலும் வெற்றி பெறுவார். மேன்மையான சேவையாளர் சதா ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொண்டிருப்பதுடன் மற்றவர்களுக்கும் உற்சாகத்தை வழங்குவார்.

சுலோகம்:
இறை சேவை செய்ய நீங்களாக முன்வாருங்கள். நீங்கள் தொடர்ந்தும் நன்றிகளைப் பெறுவீர்கள்.

அவ்யக்த சமிக்கை: ஓர் இலகு யோகியாக இருப்பதற்கு, இறை அன்பை அனுபவிப்பவராக இருங்கள்.

இறையன்பின் இழையானது, உங்களை வெகு, வெகு தொலைவில் இருந்து நெருக்கமாக இழுக்கிறது. இந்த அன்பே, நீங்கள் ஒரு விநாடியேனும் இந்த அன்பிலே மூழ்கி இருந்தாலும் துன்பங்கள் பலவற்றை மறந்து, எல்லா வேளையும் சந்தோஷ ஊஞ்சலில் தொடர்ந்து ஆட வைக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கின்றது. தந்தை குழந்தைகளான உங்களின் மீது அதிகளவு அன்பு வைத்திருக்கிறார். அதனால் வாழ்க்கையில் சந்தோஷம் மற்றும் அமைதிக்கான உங்களின் ஆசைகள் நிறைவேறுகின்றன. தந்தை உங்களுக்கு சந்தோஷத்தை மட்டும் தருவதில்லை. ஆனால் அவர் உங்களை சந்தோஷப் பொக்கிஷக் களஞ்சியத்தின் அதிபதியாக ஆக்குகிறார்.