02.11.25    Avyakt Bapdada     Tamil Lanka Murli    31.10.2007     Om Shanti     Madhuban


உங்களுடைய மேன்மையான சுயமரியாதையின் ஆன்மீக போதையில் இருந்து, அசாத்தியமானதை சாத்தியமாக்கி, ஒரு கவலையற்ற சக்கரவர்த்தி ஆகுங்கள்.


இன்று, பாப்தாதா மேன்மையான சுயமரியாதையைக் கொண்ட, எங்குமுள்ள தனது விஷேட குழந்தைகளைப் பார்க்கின்றார். ஒவ்வொரு குழந்தையினதும் சுயமரியாதை மிக விஷேடமானது, உலகிலுள்ள வேறெந்த ஆத்மாவும் அதைக் கொண்டிருக்க முடியாது. உலகிலுள்ள ஆத்மாக்களுக்கு நீங்கள் அனைவரும் மூதாதையர்களும், பூஜிக்கத் தகுதி வாய்ந்தவர்களும், ஆவீர்கள். நீங்கள் முழு உலகினதும் விருட்சத்தின் வேர்களில் ஆதார ரூபங்களாக இருப்பவர்கள். நீங்களே முதல் படைப்புக்கள், முழு உலகினதும் மூதாதைகள். ஒவ்வொரு குழந்தையினதும் சிறப்பியல்பைப் பார்ப்பதில் பாப்தாதா மகிழ்ச்சியடைகிறார். நீங்கள் சிறு குழ்ந்தைகளாகவோ, வயதான தாய்மாராகவோ, அல்லது இல்லறத்தவர்களாகவோ இருந்தாலும், நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கேயுரிய சிறப்பியல்பைக் கொண்டிருக்கிறீர்கள். இன்றைய நாட்களில், விஞ்ஞானிகள் எவ்வளவுதான் மகத்தானவர்களாக இருந்தாலும், உலகைப் பொறுத்தவரை அவர்கள் மிக விஷேடமானவர்களாக இருக்கலாம் - அவர்கள் இயற்கையை வென்றுள்ளனர் – அவர்கள் சந்திரனை அடைந்துள்ளனர், ஆனால் அவர்களால் ஒளி வடிவிலான, மிகவும் சின்னஞ்சிறிய ஆத்மாவை இனங்காண முடியவில்லை. எவ்வாறாயினும், இங்கே, சிறு குழந்தைகூட, “நான் ஓர் ஆத்மா” என்பதை அறிவார், ஓர் ஒளிப்புள்ளி பற்றியும் அவர் அறிவார். அவர் போதையுடன் கூறுகிறார்: “நான் ஓர் ஆத்மா”. மகாத்மாக்கள் எவ்வளவுதான் மகத்தானவர்களாக இருந்தாலும், இங்குள்ள பிராமணத் தாய்மார்கள் ஆன்மீக போதையுடன் கூறுகின்றனர்: “நாங்கள் கடவுளை அடைந்துவிட்டோம்.” நீங்கள் அவரை அடைந்துவிட்டீர்கள், அல்லவா? இருந்தும், மகாத்மாக்கள் என்ன கூறுகின்றனர்?“கடவுளை அடைவது மிகவும் கடினமானது.” இல்லறத்தவர்கள் ஒரு சவால் விடுக்கின்றீர்கள்: “நாம் அனைவரும் இல்லறத்தில் ஒன்றாக இருந்தவாறே தூய வாழ்க்கை வாழ்கின்றோம், ஏனெனில், நம் இருவருக்குமிடையில் தந்தை இருக்கின்றார். இதனாலேயே நாம் இருவரும் ஒன்றாக வாழ்ந்தாலும், எம்மால் இலகுவாகத் தூய்மையாக இருக்க முடிகிறது. ஏனெனில், தூய்மையே எமது சுய தர்மம் ஆகும்.” வேறொரு தர்மத்தைக் கடைப்பிடிப்பது சிரமமானது, ஆனால் ஒருவரின் சுய தர்மத்தைக் கடைப்பிடிப்பது இலகுவானது. ஆனால் மக்கள் என்ன கூறுகின்றனர்? “நெருப்பும், பஞ்சும் ஒன்றாக இருக்க முடியாது, அது மிகவும் சிரமமானது.” எவ்வாறாயினும், நீங்கள் அனைவரும் என்ன கூறுகிறீர்கள்? அது மிக இலகுவானது. நீங்கள் அனைவரும் ஆரம்பத்தில் ஒரு பாடலை வைத்திருந்தீர்கள்: “ஒருவர் எந்தளவிற்கு ஒரு வியாபாரியாகவோ, பிரபுவாகவோ இருந்தாலும், அவருக்கு அந்த ஒரு அல்ஃபாவைத் தெரியாது.” அவர்களுக்கு அந்தச் சின்னஞ்சிறிய ஒளிப்புள்ளியை, அந்த ஆத்மாவைத் தெரியாது. எவ்வாறாயினும், குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் அவரை இனங்கண்டு, அவரை அடைந்தும் விட்டீர்கள். நீங்கள் மிகுந்த நம்பிக்கையுடனும், ஆன்மீக போதையுடனும் கூறுகிறீர்கள்: “அசாத்தியமானது சாத்தியமாகும்.” பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும் ஒரு வெற்றி மணியாகப் பார்த்து மகிழ்ச்சியடைகிறார். ஏனெனில், குழந்தைகளாகிய நீங்கள் தைரியத்தைக் கொண்டிருக்கும்போது, தந்தை உதவி செய்கிறார். இதனாலேயே, உலகிற்கு அசாத்தியமான விடயங்கள் உங்களுக்கு இலகுவாகவும், சாத்தியமாகவும் ஆகிவிட்டன. நீங்கள் கடவுளின் நேரடிக் குழந்தைகள் என்ற ஆன்மீக போதையைக் கொண்டிருக்கிறீர்கள். இந்த நம்பிக்கை, மற்றும் போதையினாலும், கடவுளின் குழந்தைகளாக இருப்பதாலும், நீங்கள் மாயையிடமிருந்து பாதுகாப்பாக இருக்கிறீர்கள். ஒரு குழந்தை (பச்சா) ஆகுவதென்றால், இலகுவாகப் பாதுகாக்கப்படுவதாகும் (பச்னா). நீங்கள் அனைவரும் எனது குழந்தைகள், அனைத்துத் தடைகளில் இருந்தும், பிரச்சனைகளிலிருந்தும் பாதுகாப்பாக இருக்கிறீர்கள்.

எனவே, நீங்கள் உங்களுடைய இந்த மேன்மையான சுயமரியாதையை அறிவீர்கள், அல்லவா? ஏன் அது இலகுவானது? ஏனெனில், மௌன சக்தியுடன் மாற்றத்தின் சக்தியையும் நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். நீங்கள் எதிர்மறையானதை நேர்முகமானதாக மாற்றுகிறீர்கள். எத்தனை வகையான பிரச்சனைகளில் மாயை வந்தாலும், மாற்றத்தின் சக்தியாலும், மௌன சக்தியாலும், நீங்கள் எந்தப் பிரச்சனையையும் தீர்வு வடிவிற்கு மாற்றிவிடுகிறீர்கள். நீங்கள் ஒரு காரணத்தைத் தீர்வாக மாற்றுகிறீர்கள். உங்களிடம் இந்தளவு சக்தி உள்ளதல்;லவா? நீங்கள் பாடநெறியையும் வழங்குகிறீர்கள், அல்லவா? நீங்கள் அவர்களுக்கு எதிர்மறையானதை நேர்முகமானதாக மாற்றுவதற்கான வழியைக் கற்பிக்கிறீர்கள். நீங்கள் இந்த மாற்றத்தின் சக்தியைத் தந்தையிடமிருந்து ஆஸ்தியாகப் பெற்றுள்ளீர்கள். ஒரு சக்தியை மாத்திரமல்ல, சகல சக்திகளையும் உங்களுடைய இறை ஆஸ்தியாகப் பெற்றுள்ளீர்கள். இதனாலேயே பாப்தாதா உங்களுடன் தினமும் பேசுகிறார். நீங்கள் தினமும் முரளியைச் செவிமடுக்கிறீர்கள், அல்லவா? எனவே, பாப்தாதா தினமும் உங்களுக்குக் கூறுகிறார்: தந்தையை நினைவு செய்யுங்கள், ஆஸ்தியை நினைவு செய்யுங்கள். ஏன் நீங்கள் தந்தையை மிக இலகுவாக நினைவு செய்கிறீர்கள்? நீங்கள் ஆஸ்தி என்ற பேறை நினைவு செய்யும்போது, அந்தப் பேறு காரணமாக இலகுவாகவே தந்தையை நினைவு செய்கிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் இந்த ஆன்மீக போதையைக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் இதயங்களில், நீங்கள் பாடுகின்ற பாடல்: “நான் அடைய விரும்பியதை அடைந்துவிட்டேன்.” இப்பாடல் உங்கள் அனைவருடைய இதயங்களிலும் இயல்பாகவே ஒலிக்கின்றன, அல்லவா? நீங்கள் இந்த ஆன்மீக போதையைக் கொண்டிருக்கிறீர்கள், அல்லவா? நீங்கள் எந்தளவிற்கு இந்த ஆன்மீக போதையைக் கொண்டிருக்கிறீர்களோ, அதன் அடையாளம் என்னவென்றால், நீங்கள் கவலைகளிலிருந்து விடுபட்டிருப்பீர்கள். உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள், உறவுமுறைகள் அல்லது தொடர்புகளில் கவலைகள் ஏதாவது இருக்குமாயின், ஆன்மீக போதை இருக்க முடியாது. பாப்தாதா உங்களைக் கவலையற்ற சக்கரவர்த்திகள் ஆக்கியுள்ளார். பேசுங்கள், நீங்கள் கவலையற்ற சக்கரவர்த்திகளா? நீங்கள் அப்படியா? கவலையற்ற சக்கரவர்த்திகள் கைகளை உயர்த்துங்கள்! அல்லது, உங்களுக்கு சிலவேளைகளில் ஏதாவது கவலைகள் உள்ளனவா? நீங்கள் சிலவேளைகளில் கவலைப்படுகிறீர்களா? நல்லது. தந்தை கவலையற்றவராக இருப்பதால், குழந்தைகள் எதைப் பற்றிக் கவலைப்பட முடியும்?

பாப்தாதா ஏற்கனவே கூறியுள்ளார்: உங்களுடைய அனைத்துக் கவலைகளையும் அல்லது எவ்வகையான சுமையையும் பாப்தாதாவிடம் கையளித்துவிடுங்கள். தந்தை கடல், அல்லவா? எனவே, சுமைகள் யாவும் அதில் உள்ளடக்கப்பட்டுவிடும். சிலவேளைகளில், பாப்தாதா குழந்தைகளின் ஒரு பாடலைக் கேட்டுப் புன்னகைக்கின்றார். அது என்ன பாடல் என உங்களுக்குத் தெரியுமா? “நான் என்ன செய்வது? எவ்வாறு நான் இதைச் செய்வது?” சிலவேளைகளில், நீங்கள் இதைப் பாடுகிறீர்கள், பாப்தாதா தொடர்ந்தும் அதைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். எவ்வாறாயினும், பாப்தாதா குழந்தைகள் அனைவருக்கும் கூறுகிறார்: ஓ எனது இனிய குழந்தைகளே, எனது அன்பிற்கினிய குழந்தைகளே, பற்றற்ற பார்வையாளர் ஸ்திதி என்ற உங்களுடைய ஆசனத்தில் உங்களை நிலைநிறுத்தி, ஆசனத்தில் இருந்தவாறே விளையாட்டுக்களை அவதானியுங்கள். உண்மையாகவே நீங்கள் இரசிப்பீர்கள். அல்லது, திரிகாலதரிசி ஸ்திதியில் உங்களை ஸ்திரப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் உங்களுடைய ஆசனத்தை விட்டு இறங்குவதாலேயே குழப்பம் அடைகிறீர்கள். நீங்கள் உறுதியாக அமர்ந்திருந்தால், குழப்பமடைய மாட்டீர்கள். எந்த மூன்று விடயங்கள் குழந்தைகளாகிய உங்களைத் தொந்தரவு செய்கின்றன? 1) விஷமம் புரியும் மனம் 2) அலைந்து திரியும் புத்தி 3) பழைய சம்ஸ்காரங்கள். குழந்தைகளின் ஒரு விடயத்தைக் கேட்டு பாப்தாதா புன்னகைக்கின்றார். அது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? குழந்தைகள் கூறுகின்றனர்: “பாபா, நான் என்ன செய்வது? இவை எனது பழைய சம்ஸ்காரங்கள்.” பாப்தாதா புன்னகைக்கின்றார். “இவை எனது சம்ஸ்காரங்கள்” என்று நீங்களே கூறுவதால், அதன் அர்த்தம் நீங்கள் அவற்றை “எனது” ஆக்கியுள்ளீர்கள். அவை “எனது” ஆகும்போது, அவற்றின்மீது எனக்கு உரிமை உள்ளது. பழைய சம்ஸ்காரங்களை நீங்கள் உங்களுக்குச் சொந்தமாக்கிவிட்டதால், உங்களுடைய அவை சிறிது இடத்தை எடுத்துக்கொள்ளும், அல்லவா? பிராமண ஆத்மாக்கள் “எனது சம்ஸ்காரங்கள்” என எப்பொழுதாவது கூற முடியுமா? நீங்கள் கூறியுள்ளீர்கள், “அவை என்னுடையவை.” எனவே, “என்னுடையவை” தமக்குரிய இடத்தை எடுத்துக்கொள்ளும். பிராமணர்களாகிய நீங்கள் “அவை என்னுடையவை” எனக் கூறமுடியாது. அவை உங்களுடைய கடந்தகால வாழ்க்கையின் சம்ஸ்காரங்கள் ஆகும். அவை சூத்திர வாழ்க்கையின் சம்ஸ்காரங்களேயன்றி, பிராமண வாழ்க்கையின் சம்ஸ்காரங்களல்ல. எனவே, நீங்கள் “எனது, எனது” என்று கூறியதால், அவை உங்களுக்குச் சொந்தமாக இருப்பதற்கான உரிமையுடன் இருந்துவிட்டன. பிராமண வாழ்க்கையின் மேன்மையான சம்ஸ்காரங்கள் பற்றி நீங்கள் அறிவீர்கள், அல்லவா? எவ்வாறாயினும், “பழைய சம்ஸ்காரங்கள்” என நீங்கள் அழைப்பவை உண்மையில் பழையவை அல்ல. மேன்மையான ஆத்மாக்களாகிய உங்களுடைய, அனைத்து சம்ஸ்காரங்களிலும் அதி பழமையான சம்ஸ்காரங்கள் உங்களுடைய ஆதியான மற்றும் அநாதியான சம்ஸ்காரங்களே ஆகும். ஏனைய சம்ஸ்காரங்கள் மத்திய காலப்பகுதிக்குரியவை, அதாவது துவாபர யுகத்திற்குரியவை. எனவே, இப்பொழுது மத்திய காலப்பகுதிக்குரிய சம்ஸ்காரங்களை முடித்துவிடுங்கள், தந்தையின் உதவி இருக்கும்போது அது சிரமமாக இருக்காது. எவ்வாறாயினும், அதற்குப் பதிலாக என்ன நிகழ்கிறது? காலத்திற்கேற்ப, தந்தை உங்களுடன் இணைந்திருக்கிறார், அவர் இணைந்திருப்பதை நீங்களும் அறிவீர்கள். ‘இணைந்திருத்தல்’ என்றால், தேவைப்படும் நேரத்தில் அவர் ஒத்துழைப்பவர் ஆகுவதாகும். எவ்வாறாயினும், நீங்கள் தேவைப்படும் நேரத்தில் அந்த உதவியைப் பெறுவதில்லை, மத்திய கால சம்ஸ்காரங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

அனைத்துக் குழந்தைகளும் தந்தையின் அன்புக்குத் தகுதியானவர்கள், அவர்களுக்கு அதற்கான உரிமை உள்ளது என்பதை பாப்தாதா அறிவார். இந்த அன்பு காரணமாகவே நீங்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்தோ, இந்நாட்டிலிருந்தோ இங்கு வந்திருக்கிறீர்கள் என்பதை பாபா அறிவார். நீங்கள் அனைவரும் இறை அன்பின் ஈர்ப்பு காரணமாக எப்படியோ உங்கள் வீட்டை வந்தடைந்துவிட்டீர்கள். அன்பு என்ற பாடத்தில் உங்களில் பெரும்பான்மையினர் சித்தியடைந்துவிட்டீர்கள் என்பதை பாப்தாதா அறிவார். வெளிநாட்டவர்கள் அன்பு என்ற விமானத்தில் இங்கு வந்திருக்கிறீர்கள். கூறுங்கள், அன்புப் பிணைப்பினால் பிணைக்கப் பட்டிருப்பதாலேயே நீங்கள் அனைவரும் இங்கு வந்தீர்கள், அல்லவா? கடவுளின் இந்த அன்பு இதயத்திற்கு சௌகரியம் அளிக்கின்றது. அச்சா. முதல் தடவையாக இங்கு வந்திருப்பவர்கள் கைகளை உயர்த்துங்கள்! கைகளை அசையுங்கள்! நல்வரவு!

இப்பொழுது, பாப்தாதா உங்களுக்கு வீட்டுவேலை கொடுத்திருந்தார். அந்த வீட்டுவேலை உங்களுக்கு நினைவிருக்கிறதா? அது உங்களுக்கு நினைவிருக்கிறதா? பாப்தாதா பல இடங்களிலிருந்து பெறுபேறுகளைப் பெற்றுள்ளார், ஆனால் இப்பொழுது நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? அனைவரதும் பெறுபேறுகள் வரவில்லை. சிலர் குறிப்பிட்ட சதவீதமான தமது பெறுபேறை அனுப்பியுள்ளனர். பாப்தாதா எதை விரும்புகிறார்? பாப்தாதா விரும்புவது… நீங்கள் அனைவரும் பூஜிக்கத் தகுதியான ஆத்மாக்கள். எனவே, பூஜிக்கத் தகுதியான ஆத்மாக்களின் விஷேட தகைமை நிச்சயமாக ஆசீர்வாதங்களைக் கொடுப்பதே ஆகும். எனவே, நீங்கள் பூஜிக்கத் தகுதியான ஆத்மாக்கள் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்களா? எனவே, இந்த ஆசீர்வாதங்களைக் கொடுங்கள். ஆசீர்வாதங்களைக் கொடுப்பது என்றால், ஆசீர்வாதங்களைப் பெறுவது என்பதும் புரிந்துகொள்ளப்படுகிறது. நீங்கள் யாருக்கு ஆசீர்வாதங்களை வழங்குகிறீர்களோ, அவர்களின் இதயங்களிலிருந்து தமக்கு அந்த ஆசீர்வாதங்களை வழங்கியவர்களுக்காக மீண்டும் மீண்டும் இயல்பாகவே ஆசீர்வாதங்கள் வெளிப்படுகின்றன. ஓ பூஜிக்கத் தகுதியான ஆத்மாக்களே, ஆசீர்வாதங்களை வழங்குவது உங்களுடைய இயல்பான சம்ஸ்காரம் ஆகும். ஆசீர்வாதங்களை வழங்குவது உங்களுடைய அநாதியான சம்ஸ்காரமாகும்.உங்களுடைய உயிரற்ற விக்கிரகங்களே ஆசீர்வாதங்களைக் கொடுக்கும்போது, உயிருள்ள ரூபங்களிலுள்ள பூஜிக்கத் தகுதியான ஆத்மாக்களாகிய உங்களுக்கு, ஆசீர்வாதங்களைக் கொடுப்பதென்பது ஓர் இயல்பான சம்ஸ்காரமாக இருக்கட்டும். இதை நீங்கள், “எனது சம்ஸ்காரம்” எனக் கூறலாம். மத்திய காலப்பகுதிக்குரிய, அதாவது துவாபர யுகத்து சம்ஸ்காரங்கள் இயல்பானவை ஆகிவிட்டன. அவை உங்களுடைய சுபாவம் ஆகிவிட்டன. உண்மையில், ஆசீர்வாதங்களைக் கொடுப்பதே உங்களுடைய இயல்பான சுபாவம் ஆகும். நீங்கள் ஒருவருக்கு ஆசீர்வாதங்களைக் கொடுக்கும்போது, அந்த ஆத்மா மிகவும் சந்தோஷமடைகிறார். அந்தச் சந்தோஷமான சூழல் மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கிறது. எனவே, உங்களில் யார் வீட்டுவேலை செய்தீர்களோ, நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்களோ, இல்லையோ, நீங்கள் பாப்தாதாவிற்கு முன்னால் இருக்கிறீர்கள். அக்குழந்தைகளை பாப்தாதா பாராட்டுகிறார். நீங்கள் உங்களுடைய வீட்டுவேலையைச் செய்து, அதை உங்களுடைய இயல்பான சுபாவமாக ஆக்கிக் கொண்டிருக்கிறீர்கள். தொடர்ந்தும் அதைச் செய்து, ஏனையோரையும் அவ்வாறு செய்யத் தூண்டுங்கள். சிறிதளவில் வீட்டுவேலை செய்தவர்கள் அல்லது அதை அறவே செய்யாதவர்கள், நீங்கள் அனைவரும் எப்பொழுதும் கொண்டிருக்க வேண்டிய விழிப்புணர்வு, “நான் ஒரு பூஜிக்கத் தகுதியான ஆத்மா.” “நான் தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுகின்ற விஷேட ஆத்மா.” இந்த விழிப்புணர்வை மீண்டும் மீண்டும் உங்களுடைய உணர்விலும், உருவத்திலும் கொண்டுவாருங்கள். ஏனெனில், நீங்கள் என்னவாக ஆகப்போகிறீர்கள் என உங்கள் ஒவ்வொருவரிடமும் கேட்கப்படும்போது, நீங்கள் அனைவரும் கூறுகிறீர்கள்: நான் இலக்ஷ்மி, நாராயணன் ஆகுவேன். இராமர், சீதை ஆகுவதற்கு உங்களில் எவரும் கை உயர்த்துவதில்லை. பதினாறு கலைகளும் நிரம்பியவர்கள் ஆகுவதற்கான இலக்கை நீங்கள் கொண்டிருப்பதால், பதினாறு கலைகள் என்றால் அதியுயர்ந்த நிலையில் பூஜிக்கத் தகுதியானவர் என்று அர்த்தம். பூஜிக்கத் தகுதியான ஆத்மாவின் கடமை ஆசீர்வாதங்களைக் கொடுப்பதாகும். நடந்தும், உலாவியும் திரியும்போதெல்லாம், இதை உங்களுடைய நிரந்தரமான, மற்றும் இலகுவான சம்ஸ்காரம் ஆக்கிக்கொள்ளுங்கள். நீங்கள் பூஜிக்கத் தகுதியானவர். நீங்கள் பதினாறு கலைகளும் நிரம்பியவர், இதுவே உங்களுடைய இலக்கு, அல்லவா?

வீட்டுவேலையைச் செய்த அனைவருக்கும் தந்தையினால் உங்கள் நெற்றிகளில் வெற்றித் திலகம் இடப்பட்டுள்ளதையிட்டு பாப்தாதா மகிழ்ச்சியடைகிறார். அத்துடன்கூடவே, வெவ்வேறு அணிகள், மற்றும் நிலையங்கள் என எல்லா இடங்களிலிருந்தும் சேவையின் செய்திகளையும் பாப்தாதா பெற்றுக்கொண்டார். அவர்கள் மிகச் சிறந்த பெறுபேறுகளுடன் இங்கே வந்திருக்கிறார்கள். எனவே, முதலில், உங்களுடைய வீட்டுவேலையைச் செய்ததற்காகப் பாராட்டுக்கள், அத்துடன்கூடவே, நீங்கள் செய்துள்ள சேவைக்காகவும் பாராட்டுக்கள். பல்கோடி மடங்கு பாராட்டுக்கள்! பெரும்பாலான இடங்களில், பாபாவின் செய்தியை அனைத்துக் கிராமங்களுக்கும் மிகச் சிறந்த முறையில் வழங்குகின்ற சேவையை நீங்கள் செய்ததைத் தந்தை பார்த்தார். எனவே, நீங்கள் கருணை நிறைந்தவர்களாக இருப்பதாலும், சேவை செய்வதில் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் கொண்டிருப்பதாலும், அச்சேவையின் பெறுபேறு மிகச் சிறந்ததாக உள்ளது. கடினமாக உழைத்த அனைவருக்கும் - அது கடின உழைப்பாக இருக்கவில்லை – ஆனால், தந்தை மீது அன்பு வைத்திருப்பதென்றால், செய்தியைக் கொடுப்பதில் அன்பு வைத்திருப்பதாகும். எனவே, தந்தை மீதுள்ள அன்பு காரணமாக சேவை செய்துள்ளவர்கள், சேவாதாரி ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் இயல்பாகவே அன்பிற்காக பல்கோடி மடங்கு பிரதிபலனைப் பெறுவதுடன், தொடர்ந்தும் பெறுவீர்கள். அத்துடன், நீங்கள் அனைவரும் உங்களுடைய அன்புக்குரிய தாதிஜியை மிகுந்த அன்புடன் நினைவு செய்கையில், தாதிமீது நீங்கள் வைத்துள்ள அன்பிற்கான பிரதிபலனைக் கொடுக்கிறீர்கள். இந்த அன்பின் மிகச் சிறந்த நறுமணம் பாப்தாதாவை வந்தடைந்துள்ளது.

இப்பொழுதும்கூட, மதுவனத்தில் இடம்பெறுகின்ற அனைத்துப் பணிகளும், அது இரட்டை வெளி நாட்டவர்களுடையதோ அல்லது பாரதவாசிகளுடையதோ, அப்பணிகள் யாவும் ஒத்துழைப்பு, மற்றும் ஒருவர்மீதொருவர் கொண்டிருக்கும் மதிப்பின் அடிப்படையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுவதுடன், எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள பணிகளும் வெற்றியடைவதற்கு ஏற்கனவே உத்தரவாதம் உள்ளது, ஏனெனில் வெற்றி உங்களுடைய கழுத்து மாலை ஆகும். நீங்கள் பாபாவின் கழுத்து மாலையும் ஆவீர்கள். நீங்கள் பாபாவின் கழுத்து மாலையாக(ஹார்) இருப்பதால், நீங்கள் ஒருபோதும் தோற்கடிக்கப்படக்(ஹார்னா) கூடாது எனத் தந்தை உங்களுக்கு ஞாபகப்படுத்தியுள்ளார். கழுத்து மாலையாக இருப்பவர்கள் ஒருபோதும் தோற்கடிக்கப்பட முடியாது. நீங்கள் மாலையாக விரும்புகிறீர்களா அல்லது தோற்கடிக்கப்பட விரும்புகிறீர்களா? நீங்கள் தோற்கடிக்கப்பட விரும்பவில்லை, அல்லவா? ஒரு மாலையாக இருப்பது நல்லது, அல்லவா? எனவே, ஒருபோதும் தோற்கடிக்கப்படாதீர்கள். தோற்கடிக்கப்படுபவர்கள் பல மில்லியன் ஆத்மாக்கள், ஆனால் நீங்கள் மாலை ஆகியுள்ளீர்கள், பாபாவின் கழுத்தில் மாலையிடப்பட்டுள்ளீர்கள். அப்படித்தானே, இல்லையா? எனவே, இப்பொழுது இந்தத் திடசங்கல்பத்தைக் கொண்டிருங்கள்: தந்தை மீதுள்ள அன்பு காரணமாக, மாயை எத்தனை புயல்களை உங்கள் முன்னால் கொண்டுவந்தாலும், மாஸ்டர் சர்வசக்திவான் ஆத்மாக்களாகிய உங்களுக்கு முன்னால், புயல்களும்கூட (ரூஃபான்) ஒரு பரிசு (ரோஃபா) ஆகிவிடும். அத்தகையதோர் ஆசீர்வாதத்தை சதா நினைவில் வைத்திருங்கள். மலை எவ்வளவுதான் பெரிதாக இருந்தாலும், அது பஞ்சாக மாறிவிடும். இப்பொழுது, காலத்தின் நெருக்கத்திற்கேற்ப, ஒவ்வொரு கணமும் ஆசீர்வாதங்களை அனுபவம் செய்யுங்கள். அனுபவத்தின் அதிகாரி ஆகுங்கள்.

நீங்கள் விரும்பியபோதெல்லாம், சரீரமற்றவராகும் அப்பியாசம், தேவதை ரூபமாகும் அப்பியாசம் போன்றவற்றைத் தொடர்ந்தும் செய்யுங்கள். ஒரு கணம் பிராமணர், ஒரு கணம் தேவதை, ஒரு கணம் சரீரமற்ற நிலை. நடந்தும், உலாவியும் திரியும்போதும், உங்கள் வேலைகளைச் செய்யும்போதும்கூட, இதைப் பயிற்சி செய்வதற்காக ஓரிரு நிமிடங்களை எடுத்துக்கொள்ளுங்கள். சோதியுங்கள்: நான் என்ன எண்ணத்தைக் கொண்டிருந்தாலும், அந்த ரூபத்தில் இருப்பதை அனுபவம் செய்தேனா? அச்சா.

சதா தமது மேன்மையான சுயமரியாதையில் இருக்கின்ற, எங்குமுள்ள குழந்தைகள் அனைவருக்கும், தங்களை எப்பொழுதும் அதி பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாகவும், மூதாதைகளாகவும் அனுபவம் செய்பவர்களுக்கும், ஒவ்வொரு பாடத்திலும் அனுபவ சொரூபங்களாகத் தங்களை எப்பொழுதும் ஆக்கிக் கொள்பவர்களுக்கும், எப்பொழுதும் தந்தையின் இதய சிம்மாசனத்திலும், நெற்றி சிம்மாசனத்திலும் அமர்ந்திருப்பவர்களுக்கும், தமது மேன்மையான ஸ்திதியின் அனுபவத்தில் எப்பொழுதும் ஸ்திரமாக இருப்பவர்களுக்கும், எங்குமுள்ள குழந்தைகளாகிய உங்கள் அனைவருக்கும் அன்பும், நினைவும் நமஸ்தேயும் உரித்தாகட்டும்.

பாப்தாதா எல்லா இடங்களிலிருந்தும் பல கடிதங்களையும், ஈ-மெயில்களையும், செய்திகளையும் பெற்றுள்ளார். சேவாதாரி ஆத்மாக்கள் அனைவரும் சேவையின் பலனையும், சக்தியையும் பெற்றுள்ளதுடன், தொடர்ந்தும் அதைப் பெறுவார்கள். பாபா அவர்களின் அன்புக் கடிதங்கள், மற்றும் மாற்றம் குறித்த கடிதங்கள் பலவற்றைப் பெறுகிறார். மாற்றத்தின் சக்தியைக் கொண்டவர்களுக்கு பாப்தாதா “நீங்கள் அமரராக இருப்பீர்களாக!” என்ற ஆசீர்வாதத்தை வழங்குகிறார். ஸ்ரீமத்தை மிக நன்றாகப் பின்பற்றியுள்ள சேவாதாரி ஆத்மாக்களுக்கு, தந்தையைப் பின்பற்றியுள்ள அத்தகைய குழந்தைகளுக்கு, பாப்தாதா “ஆஹா எனது கீழ்ப்படிவான குழந்தைகளே, ஆஹா!” என்ற ஆசீர்வாதத்தை வழங்குகிறார். பாபா மீது அன்பு வைத்திருப்பவர்களுக்கு, தந்தையை மிகுந்த அன்புடன் தமது இதயங்களில் அமிழ்;த்தியுள்ளவர்களுக்கு, பாப்தாதா “நீங்கள் அதி அன்பானவர்களாகவும், மாயையின் எந்தத் தடைகளிலிருந்தும் விடுபட்டவராகவும் இருப்பீர்களாக.” அச்சா.

நீங்கள் அனைவரும் உங்கள் இதயத்தில் என்ன உற்சாகத்தைக் கொண்டிருக்கிறீPர்கள்? நீங்கள் ஒரேயொரு உற்சாகத்தையே கொண்டிருக்கிறீர்கள்: “நான் தந்தைக்குச் சமனாக வேண்டும்.” நீங்கள் இந்த உற்சாகத்தைக் கொண்டிருக்கிறீர்களா? பாண்டவர்களே, உங்கள் கைகளை உயர்த்துங்கள்! “நான் நிச்சயமாக அவ்வாறு ஆகவேண்டும்.” நான் அவ்வாறு ஆகுவேன் என்றில்லை, “நான் அதைச் செய்வேன், நான் அதைப் பார்த்துக்கொள்வேன், நான் அவ்வாறு ஆகுவேன்…” “நான் செய்வேன், நான் செய்வேன்” என கூறாதீர்கள், ஆனால் “நான் அவ்வாறு ஆகவேண்டும்.” என்று கூறுங்கள். அதை உறுதியாக்கிக் கொள்ளுங்கள்! அது உறுதியா? அச்சா. நீங்கள் ஒவ்வொருவரும் தொடர்ந்தும் உங்களுடைய ஓ.கே. அட்டையை உங்களுடைய அட்டவணையாக உங்களுடைய ஆசிரியரிடம் கையளிக்க வேண்டும். அதிகம் எழுதாதீhகள். ஒரு அட்டையை எடுத்து, அதில் “ஓ.கே.” என்று எழுதுங்கள். அல்லது ஓ.கே. எழுதி அதன் குறுக்காக ஒரு கோடு போடுங்கள். அவ்வளவுதான். உங்களால் இந்தளவைச் செய்ய முடியும் தானே. நீண்ட கடிதங்களை எழுதாதீர்கள். அச்சா.

ஆசீர்வாதம்:
நீங்கள் சங்கம யுகத்தின் நடைமுறையான, உடனடிப் பழத்தை உண்பதன் மூலம் சக்திசாலியாகி, சதா சக்திசாலி ஆத்மாவாக இருப்பீர்களாக.

சங்கம யுகத்தில் எல்லையற்ற சேவை செய்வதற்குக் கருவிகளாகின்ற ஆத்மாக்கள், தாங்கள் கருவிகள் ஆகுவதற்கான உடனடிப் பலனாக சக்தியைப் பெறுகிறார்கள். இந்த நடைமுறையான, உடனடிப் பலனே இந்த மேன்மையான யுகத்தின் பழமாகும். இத்தகைய பழத்தை உண்கின்ற சக்திசாலி ஆத்மாக்கள், வருகினற பாதகமான சூழ்நிலைகள் எதுவாயினும், அதை இலகுவாகவே வெற்றிகொள்கின்றனர். சர்வசக்திவான் தந்தையுடன் இருப்பதால், அவர்கள் இலகுவாகவே வீணானவை அனைத்திலிருந்தும் விடுபட்டுவிடுகின்றனர். பாம்பைப் போன்று நஞ்சாக இருக்கின்ற ஒரு சூழலையும்கூட அவர்கள் வெற்றி கொள்கின்றனர். இதனாலேயே, ஒரு ஞாபகார்த்தமாக, ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு பாம்பின் மீது நடனமாடுவதாகக் காட்டப்பட்டுள்ளது.

சுலோகம்:
சதா தந்தைக்கு நெருக்கமாக(ஹிந்தியில் பாஸ் - நெருக்கம்) இருந்து, திறமைச் சித்தி (பாஸ் வித் ஒணர்) எய்துவதன் மூலம் கடந்ததைக் (பாஸ்ற்) கடந்ததாக விட்டுவிடுங்கள்.

அவ்யக்த சமிக்ஞை: சரீரமற்ற ஸ்திதியைப் பயிற்சி செய்வதை அதிகரியுங்கள்(அசரீரி, விதேகி).

பாப்தாதா சரீரமற்றவராக இருந்து, ஒரு சரீரத்திற்குள் பிரவேசிப்பது போன்றே, குழந்தைகளாகிய நீங்கள் சரீரமற்றவர்களாகி, பின்னர் உங்கள் சரீரங்களுக்குள் வாருங்கள். அவ்யக்த ஸ்திதியில் ஸ்திரமாக இருந்து, பின்னர் உங்களுடைய பௌதீக ரூபங்களுக்குள் செல்லுங்கள். ஒரு சரீரத்தை நீக்கி, வேறொரு சரீரத்தை எடுக்கும் அனுபவம் அனைவருக்கும் உள்ளது. அதேபோன்று, உங்களுக்கு வேண்டியபோது அச்சரீரத்தின் உணர்வைத் துறந்து, சரீரமற்றவர் ஆகுங்கள், உங்களுக்கு வேண்டியபோது செயல்களைச் செய்வதற்காக அச்சரீரத்தின் ஆதாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அந்தப் பௌதீக ஆடையை, இச்சரீரத்தை ஏற்கின்ற, ஆத்மாவாகிய என்னிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக அனுபவம் செய்யுங்கள்.