02.12.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் இந்தச் சத்தியத்தைச் செய்தீர்கள்: நீங்கள் வரும்பொழுது எங்களை உங்களுக்கு அர்ப்பணிப்போம். உங்கள் சத்தியத்தை உங்களுக்கு நினைவு படுத்துவதற்குத் தந்தை இப்பொழுது வந்து விட்டார்.

கேள்வி:
எந்தப் பிரதான சிறப்பியல்பினால், தேவர்கள் மாத்திரமே பூஜிக்கப்படத் தகுதி வாய்ந்தவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்?

பதில்:
எவரையும் நினைவுசெய்யாத சிறப்பியல்பைத் தேவர்கள் மாத்திரமே கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் தந்தையையும் நினைவு செய்வதில்லை. வேறெவரின் உருவங்களையேனும் அவர்கள் நினைவு செய்வதுமில்லை. இதனாலேயே அவர்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் எனக் கூறப்படுகின்றார்கள். அங்கே சந்தோஷத்தைத் தவிர, வேறெதுவும் இல்லை. இதனாலேயே அவர்களுக்கு வேறு எவரையும் நினைவு செய்ய வேண்டிய தேவையும் இல்லை. இப்பொழுது ஒரேயொரு தந்தையை நினைவு செய்வதால், நீங்கள் அதிதூய்மையாகவும், பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாகவும் ஆகுவதனால், நீங்கள் பின்னர் எவரையும் நினைவுசெய்ய வேண்டிய தேவை இருக்க மாட்டாது.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளே, உங்களை ஆன்மீக ஆத்மாக்கள் என அழைக்க முடியாது. உயிர் அல்லது ஆத்மா இரண்டும் ஒன்றேயாகும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். முன்னர் பரமாத்மாவாகிய பரமதந்தை ஆத்மாக்களுக்கு இந்த ஞானத்தை வழங்கியதில்லை. தந்தையே கூறுகின்றார்: நான் சக்கரத்தில் ஒருமுறை மாத்திரமே அதிமேன்மையான சங்கமயுகத்தில், வருகிறேன். வேறெவராலும் இதைக் கூற முடியாது. சக்கரத்தின் சங்கமயுகத்தைத் தவிர்ந்த வேறெந்த நேரத்திலும் தந்தை ஒருபொழுதும் வருவதில்லை. பக்தி முடிவுக்கு வரவுள்ள பொழுது, சங்கம யுகத்திலேயே தந்தை வருகின்றார். தந்தை இங்கு அமர்ந்திருந்து, இந்த ஞானத்தைக் குழந்தைகளாகிய உங்களுக்குக் கொடுக்கின்றார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள். சில குழந்தைகளுக்கு இது மிகவும் கடினமாக இருக்கின்றது. இது மிக இலகுவாக இருந்தாலும், அது அவர்களின் புத்தியில் மிக நன்றாகப் பதிவதில்லை. இதனாலேயே பாபா அவர்களுக்கு மீண்டும் மீண்டும் விளங்கப்படுத்துகின்றார். அவர்களுக்கு விளங்கப்படுத்தினாலும், அவர்கள் எதையும் புரிந்து கொள்வதில்லை. ஒரு பாடசாலையில், ஓர் ஆசிரியரினால் 12 மாதங்களுக்குக் கற்பிக்கப்பட்டாலும், சில மாணவர்கள் தோல்வி அடைகின்றார்கள். இந்த எல்லையற்ற தந்தை ஒவ்வொரு நாளும் குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார். இருப்பினும், உங்களிற் சிலரால் மாத்திரமே கிரகித்துக் கொள்ள முடிகின்றது, ஏனையோர் மறந்து விடுகின்றார்கள். உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ள பிரதான விடயம்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள். தந்தையே கூறுகின்றார்: சதா என்னை மாத்திரமே நினைவு செய்யுங்கள். எந்தவொரு மனிதராலும் என்றுமே இவ்வாறு கூற முடியாது. தந்தை கூறுகின்றார்: நான் ஒருமுறையே வருகிறேன். நான் ஒரு சக்கரத்தின் பின்னர் சங்கமயுகத்தில் வந்து, குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே விளங்கப்படுத்துகிறேன். நீங்கள் மாத்திரமே இந்த ஞானத்தைப் பெறுகிறீர்கள்; வேறு எவரும் இதனைப் பெறுவதில்லை. பிரஜாபிதா பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்களான நீங்கள் மட்டுமே இந்த ஞானத்தைப் புரிந்து கொள்கின்றீர்கள். முன்னைய கல்பத்தின் சங்கமயுகத்தில் தந்தை உங்களுக்கு இந்த ஞானத்தைக் கற்பித்ததை நீங்கள் அறிவீர்கள். பிராமணர்களாகிய உங்களுக்கே இந்தப் பாகங்கள் இருக்கின்றன. நிச்சயமாக நீங்கள் இக்குலங்களினூடாகச் செல்ல வேண்டும். ஏனைய சமயத்தவர்கள் இக்குலங்களினூடாகச் செல்வதில்லை. பாரத மக்கள் மாத்திரமே இக்குலங்களினூடாகச் செல்கின்றனர். பிராமணர்களே பாரதத்தில் வசிப்பவர்கள் ஆகுகின்றார்கள். இதனாலேயே தந்தை பாரதத்திற்கு வரவேண்டியுள்ளது. பிராமணர்களாகிய நீங்களே பிரஜாபிதா பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்கள்;. பிராமணர்களுக்குப் பின்னர் நீங்கள் தேவர்கள் ஆகிய பின்னர் சத்திரியர்கள் ஆகுகிறீர்கள். எவருமே சத்திரியர் ஆக்கப்படுவதில்லை. நீங்கள் பிராமணர்களாக ஆக்கப்பட்டு, பின்னர் தேவர்கள் ஆகுகின்றீர்கள். அதே தேவர்களின் கலைகள் குறைவடையும் பொழுது, அவர்கள் சத்திரியர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்; அவர்கள் இயல்பாகவே சத்திரியர்கள் ஆகுகிறார்கள். தந்தை வந்து, உங்களைப் பிராமணர்கள் ஆக்குகிறார். பின்னர் நீங்கள் பிராமணர்களிலிருந்து தேவர்கள் ஆகுகிறீர்கள், பின்னர் அதே தேவர்கள் சத்திரியர்கள் ஆகுகிறார்கள். இந்த நேரத்திலேயே ஒரேயொரு தந்தை மூன்று தர்மங்களையும் ஸ்தாபிக்கின்றார். அவர் மீண்டும் சத்திய, திரேதா யுகங்களில் வருவார் என்றில்லை. மக்கள் இதனைப் புரிந்து கொள்ளாததால், அவர் சத்திய, திரேதா யுகங்களிலும் வருவதாகக் கூறுகின்றனர். தந்தை கூறுகின்றார்: நான் ஒவ்வொரு யுகத்திலும் வருவதில்லை. நான் சக்கரத்தில் ஒருமுறை மாத்திரம் சங்கமயுகத்தில் வருகிறேன். பிரஜாபிதா பிரம்மா மூலம் நானே உங்களைப் பிராமணர்கள் ஆக்குகிறேன். நான் பரந்தாமத்திலிருந்து வருகிறேன். அச்சா, பிரம்மா எங்கிருந்து வந்தார்? பிரம்மா 84 பிறவிகளை எடுக்கின்றார்; நான் அதனை எடுப்பதில்லை. பிரம்மாவும் சரஸ்வதியும் விஷ்ணு ஆகுகின்றனர். அவரது இரட்டை வடிவம் இலக்ஷ்மியும், நாராயணனும் ஆகும். இவர் 84 பிறவிகளை எடுக்கின்றார். பின்னர் இவரது பல பிறவிகளின் இறுதியில் நான் இவரில் பிரவேசித்து, இவரை பிரம்மா ஆக்குகிறேன்; நான் இவருக்கு “பிரம்மா” எனப் பெயரிடுகிறேன். இவரது பெயர் இவரால் தெரிவு செய்யப்படுவது இல்லை. ஒரு குழந்தை பிறந்த 6ம் நாளின் பின்னர், அவரது ஜாதகத்திற்கு ஏற்ப, பெயர் சூட்டுவிழா அவர்களால் செய்யப்படுகின்றது. அவர்கள் அக்குழந்தையின் பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார்கள். இவரது ஜாதகத்திற்கேற்ப, இவரது பெயர் லேக்ராஜ் என்பதாகும். பிறந்த நாள் முதல் இதுவே இவரது பெயராக இருந்தது. சங்கமயுகத்தில் தந்தை இவரில் பிரவேசித்ததும், இவரது பெயர் மாற்றப்பட்டது. இவர் தனது ஓய்வு ஸ்திதியில் இருக்கும் பொழுதே, தந்தை இவரது பெயரை மாற்றுகிறார். அந்தச் சந்நியாசிகள் வீட்டை விட்டுச் செல்லும் பொழுது, அவர்களது பெயர்கள் மாற்றப்படுகின்றன. இவர் வீட்டிலேயே வசிக்கிறார். பிராமணர்கள் தேவைப்பட்டதால், நான் இவருக்குப் பிரம்மா எனப் பெயர் சூட்டினேன். நான் உங்களை எனக்குரியவர்கள் ஆக்கி, உங்களைத் தூய பிராமணர்கள் ஆக்குகிறேன். நீங்கள் தூய்மை ஆக்கப்படுகிறீர்கள். நீங்கள் பிறப்பிலிருந்தே தூய்மையானவர்கள் என்றில்லை. நீங்கள் தூய்மை ஆகுவதற்காக இந்தக் கற்பித்தல்களைப் பெறுகின்றீர்கள். பிரதான விடயம் எவ்வாறு தூய்மையாகுவது என்பதாகும். பக்தி மார்க்கத்தில் உள்ள ஒருவரேனும் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவராக இருக்க முடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள். குருமார் போன்றோர் தங்கள் வீடுகளைத் துறந்து தூய்மை ஆகுவதால், மக்கள் அவர்கள் முன்னிலையில் தலை வணங்குகிறார்கள். எவ்வாறாயினும், அவர்களைப் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் எனக் கூற முடியாது. பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் எவரையும் நினைவு செய்வதில்லை. சந்நியாசிகள் பிரம்ம தத்துவத்தை நினைவுசெய்து, பிரார்த்திக்கிறார்கள். சத்தியயுகத்து மக்கள் எவரையும் நினைவு செய்வதில்லை. தந்தை கூறுகின்றார்: நீங்கள் இப்பொழுது அந்த ஒரேயொருவரையே நினைவுசெய்ய வேண்டும். அது பக்தி மார்க்கம். ஆத்மாக்களாகிய நீங்கள் மறைமுகமானவர்கள். எவருக்கும் ஆத்மாக்களை மிகச்சரியாகத் தெரியாது. சத்திய திரேதா யுகங்களிலும் சரீரதாரிகள் தமது பெயர்களைக் கொண்டே தங்கள் பாகங்களை நடிக்கிறார்கள். பெயர்கள் இல்லாமல் நடிகர்கள் இருக்க முடியாது. நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சரீரங்களுக்கான பெயர்கள் நிச்சயமாகக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு பெயரில்லாமல் உங்கள் பாகத்தை எவ்வாறு நீங்கள் நடிக்க முடியும்;? தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்தி இருக்கின்றார்: பக்தி மார்க்கத்தில் நீங்கள் பாடுவதுண்டு: நீங்கள் வரும்பொழுது, வேறு எவரையும் அன்றி, உங்களையே நான் எனக்குரியவர் ஆக்குவேன். நான் உங்களுக்கு மாத்திரமே உரியவன். ஆத்மாக்கள் இதைக் கூறுகின்றார்கள். பக்தி மார்க்கத்தில் பெயர்கள் வழங்கப்பட்டிருக்கின்ற எந்தச் சரீரதாரிகளையும் நாங்கள் வழிபட மாட்டோம். நீங்கள் வரும்பொழுது எங்களை உங்களுக்கே அர்ப்பணிப்போம்! அவர் எப்பொழுது வருவார் என்பதையும் நீங்கள் அறிந்திருக்கவில்லை. பல்வேறு பெயர்களைக் கொண்ட எத்தனையோ சரீரதாரிகளை மக்கள் தொடர்ந்தும் வழிபடுகின்றனர். சக்கரத்தின் இரண்டாவது அரைப் பகுதியின் பின்னர், பக்தி முடிவுறும் பொழுது, தந்தை வருகிறார். அவர் கூறுகிறார்: நீங்கள் பிறவிபிறவியாகக் கூறி வந்தீர்கள்: நான் உங்களைத் தவிர வேறு எவரையும் நினைவுசெய்ய மாட்டேன். எனது சொந்தச் சரீரத்தையேனும் நான் நினைவுசெய்ய மாட்டேன். எவ்வாறாயினும் என்னைக் கூட உங்களுக்குத் தெரியாது. எனவே எவ்வாறு உங்களால் என்னை நினைவுசெய்ய முடியும்? தந்தை இப்பொழுது இங்கே அமர்ந்திருந்து, குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள். தந்தை மாத்திரமே தூய்மையாக்குபவர். அவரை நினைவுசெய்வதன் மூலம் நீங்கள் தூய்மையாகவும், சதோபிரதானாகவும் ஆகுவீர்கள். சத்திய திரேதா யுகங்களில் பக்தி என்பது இல்லை. நீங்கள் தந்தையையோ வேறு எந்த உருவங்களையோ நினைவு செய்வதில்லை. அங்கு, சந்தோஷத்தைத் தவிர, வேறெதுவும் இல்லை. தந்தை விளங்கப்படுத்தி இருக்கின்றார்: நீங்கள் எந்தளவிற்கு நெருக்கமாக வருகின்றீர்களோ, அந்தளவிற்குக் கர்மாதீத ஸ்திதியை நெருங்கி வருவீர்கள். சத்தியயுகத்தில், புதிய உலகிலும், ஒரு புதிய இல்லத்திலும் இருக்கின்ற பெருஞ் சந்தோஷம் இருக்கின்றது. பின்னர் அது 25 வீதம் பழைமையானது ஆகும்பொழுது நீங்கள் சுவர்க்கத்தை மறந்து விட்டதைப் போலாகி விடுகின்றது. எனவே தந்தை கூறுகின்றார்: நீங்கள் பாடியதுண்டு: “நாங்கள் உங்களுக்கு மாத்திரமே உரியவர்களாக இருப்போம். நாங்கள் உங்களை மாத்திரமே செவிமடுப்போம்” ஆத்மாக்கள் தந்தையைப் பரமாத்மா எனக் குறிப்பிடுகின்றனர். ஆத்மாக்கள் மிகச் சின்னஞ்சிறிய, சூட்சுமமான புள்ளிகள். ஓர் ஆத்மாவைப் பார்ப்பதற்குத் தெய்வீகப் பார்வை தேவைப்படுகின்றது. உங்களால் ஓர் ஆத்மாவின் மீது மனதை ஒருமுகப்படுத்த முடிவதில்லை. உங்களை அத்தகைய ஒரு சின்னஞ்சிறிய புள்ளியாகிய, ஓர் ஆத்மா எனக் கருதித் தந்தையை நினைவுசெய்வதற்கு முயற்சி தேவை. ஆத்மாவின் காட்சியைப் பெறுவதற்கு மக்கள் முயற்சி செய்வதில்லை. பரமாத்மா ஆயிரம் சூரியன்களின் ஒளியை விடவும் பிரகாசமானவர் என அவர்கள் கேள்விப்பட்டிருப்பதால், பரமாத்மாவின் காட்சியைப் பெறுவதற்கே முயற்சி செய்கிறார்கள். ஒருவர் ஒரு காட்சியைப் பெற்றதும், அது மிகவும் பிரகாசமாக இருந்தது என அவர் கூறுகின்றார், ஏனெனில் அவர் அவ்வாறே கேள்விப்பட்டிருக்கிறார். மக்கள் எவரைத் தீவிரமாக வழிபடுகிறார்களோ, அவரது காட்சியே அவர்களுக்குக் கிடைக்கும். இல்லையேல் அவர்கள் நம்பிக்கையைக் கொண்டிருக்க முடியாது. தந்தை கூறுகின்றார்: அவர்களால் ஓர் ஆத்மாவைக் காண முடியாது விடின், அவர்களால் எவ்வாறு பரமாத்மாவைக் காண முடியும்? அவர்களால் ஓர் ஆத்மாவையேனும் எவ்வாறு காண முடியும்? மனிதர்களுக்குச் சரீர உருவங்கள் இருக்கின்றன. அவர்களுக்குப் பெயர்கள் இருக்கின்றன, ஆனால் ஆத்மா ஒரு புள்ளியே, மிக மிகச் சின்னஞ்சிறிய புள்ளி. அதை எவ்வாறு காண முடியும்? அவர்கள் பெருமளவு முயற்சி செய்த பொழுதிலும், உங்கள் பௌதீகக் கண்களால் ஆத்மாவைக் காண்பது சாத்தியம் அல்ல. ஆத்மாக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் இந்த ஞானம் எனும் சூட்சுமமான கண்ணைப் பெறுகிறீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் எவ்வளவு சின்னஞ் சிறியவர்கள் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். ஆத்மாவாகிய என்னிலே மீண்டும் மீண்டும் நான் நடிக்க வேண்டிய, 84 பிறவிகளின் பாகம் பதியப்பட்டிருக்கின்றது. நீங்கள் உங்களை மேன்மையானவர்களாக ஆக்குவதற்கு, தந்தையின் ஸ்ரீமத்தைப் பெறுகிறீர்கள். ஆகவே நீங்கள் அதைக் கடைப்பிடிக்க வேண்டும். தெய்வீகக் குணங்களையும் நீங்கள் கிரகிக்க வேண்டும். உங்கள் உணவும், பானமும் இராஜரீகமாக இருக்க வேண்டும். நீங்கள் தேவர்கள் ஆகுவதால், உங்கள் நடத்தை மிகவும் இராஜரீகமானதாக இருக்க வேண்டும். தேவர்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள்; அவர்கள் ஒருபொழுதும் எவரையும் வழிபடுவதில்லை. அவர்கள் இரட்டைக் கிரீடம் உடையவர்கள். அவர்கள் ஒருபொழுதும் எவரையும் வழிபடுவதில்லை. ஆகவே அவர்கள் வழிபடத் தகுதிவாய்ந்தவர்கள். சத்திய யுகத்தில் எவரையும் வழிபட வேண்டிய தேவையில்லை. எனினும் நிச்சயமாக அவர்கள் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்துகிறார்கள். ஒருவருக்குத் தலைவணங்குவது என்பது மரியாதை செலுத்துவதாகும். ஒருவரை உங்கள் இதயத்தில் வைத்திருக்க வேண்டும் என்றில்லை. மரியாதை அளிக்கப்பட வேண்டும். உதாரணமாக, ஜனாதிபதி உயர்ந்த பதவியில் இருப்பதை அனைவரும் அறிந்திருப்பதால், அனைவரும் அவருக்கு மரியாதை அளிக்கிறார்கள். நீங்கள் எவருக்கும் தலைவணங்கத் தேவையில்லை. எனவே தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இந்த ஞான மார்க்கம் முற்றிலும் வேறுபட்ட ஒன்றாகும். இங்கு, நீங்கள் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருத வேண்டும். இதை நீங்கள் மறந்து விட்டீர்கள். நீங்கள் சரீரங்களின் பெயர்களை நினைவு செய்கிறீர்கள். ஒரு பெயரைக் கொண்டே அனைத்தையும் செய்ய வேண்டியுள்ளது. ஒரு பெயர் இல்லாமல் ஒருவரை எவ்வாறு அழைப்பீர்கள்? நீங்கள் உங்களுடைய பாகங்களை நடிக்கின்ற சரீரதாரிகளாக இருந்தாலும், உங்கள் புத்தியில் சிவபாபா இருக்க வேண்டும். ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தர்கள் தாங்கள் ஸ்ரீ கிருஷ்ணரை மாத்திரமே நினைவுசெய்ய வேண்டும் என நம்புகின்றனர். தாங்கள் எங்கே பார்த்தாலும் ஸ்ரீ கிருஷ்ணரையே காண்பதாகக் கூறுகிறார்கள். அவர்கள் கூறுகின்றனர்: நானும் கிருஷ்ணர், நீங்களும் கிருஷ்ணர். ஓ ஆனால், உங்கள் பெயர் அவரின் பெயரிலிருந்து வேறுபட்டது. எனவே அனைவரும் எவ்வாறு ஸ்ரீ கிருஷ்ணர் ஆகமுடியும்? அனைவரும் கிருஷ்ணர் என்ற பெயரைக் கொண்டிருக்க முடியாது. அவர்கள் மனம் போன போக்கில் பேசுகிறார்கள். தந்தை இப்பொழுது கூறுகிறார்: பக்தி மார்க்கத்தின் உருவங்கள் அனைத்தையும் மறந்து, ஒரேயொரு தந்தையையே நினைவு செய்யுங்கள். அந்த உருவங்களை நீங்கள் தூய்மையாக்குபவர் என அழைப்பதில்லை. அனுமனும், ஏனையோரும் தூய்மையாக்குபவர் அல்ல. பல உருவங்கள் உள்ளன, ஆனால் அவற்றில் எதுவும் தூய்மையாக்குபவர் அல்ல, சரீரதாரிகளான அந்தத் தேவியர்கள் எவரும் தூய்மையாக்குபவராக முடியாது. தங்கள் சொந்த புத்திக்கேற்ப, மனிதர்கள் 6 முதல் 8 வரையான கரங்களுடன் தேவியர்களை உருவாக்குகிறார்கள். அவர்கள் யார் என்பது அவர்களுக்குத் தெரியாது. அவர்களே தூய்மையாக்குபவரான தந்தையின், உதவியாளர்களான குழந்தைகள். எவருக்கும் இது தெரியாது. உங்கள் புறத்தோற்றம் சாதாரணமானதே. அந்தச் சரீரங்கள் அழிக்கப்படும். உங்கள் உருவங்கள் போன்றவை நிலைத்திருக்கும் என்றில்லை. அவை யாவும் முடிவடைந்து விடும். உண்மையில், நீங்கள் தேவியர்;களே. சீதா தேவி, இன்ன இன்ன தேவி என்று பெயரகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அவர்கள் “இராம தேவர்” என்று ஒருபொழுதும் கூறுவதில்லை. அவர்கள் “தேவி அல்லது ஸ்ரீமதி இன்னார்” என்று கூறுகின்றார்கள். எவ்வாறாயினும், அதுவும் பிழையாகும். இப்பொழுது நீங்கள் தூய்மையாகுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் கூறுகின்றீர்கள்: வந்து, எங்களைத் தூய்மை அற்றவரிலிருந்து தூய்மையானவர்கள் ஆக்குங்கள்! “எங்களை இலக்ஷ்மி நாராயணன் ஆக்குங்கள்” என நீங்கள் கூறுவதில்லை. தந்தை மாத்திரமே தூய்மையற்ற உங்களைத் தூய்மையானவர்களாக மாற்றுகின்றார். அவரே உங்களைச் சாதாரண மனிதரிலிருந்து நாராயணனாக மாற்றுகின்றார். அம்மக்கள் அசரீரியான ஒரேயொருவரையே தூய்மையாக்குபவர் என்று அழைக்கின்றனர். அவர்கள் வேறொருவரையே சத்திய நாராயணனின் கதையைக் கூறியதாகச் சித்தரித்து விட்டனர். அவர்கள் கூறுவதில்லை: பாபா, எங்களுக்குச் சத்திய நாராயணனின் கதையைக் கூறி, எங்களை அமரத்துவமானவர்கள் ஆக்குங்கள். அல்லது, எங்களைச் சாதாரண மனிதரிலிருந்து நாராயணன் ஆக்குங்கள்! அவர்கள் கூறுகிறார்கள்: வந்து, எங்களைத் தூய்மை ஆக்குங்கள். பாபாவே உங்களுக்குச் சத்திய நாராயணனின் கதையைக் கூறி, உங்களைத் தூய்மை ஆக்குகின்றார். நீங்கள் பின்னர் அவ் உண்மைக் கதையை மற்றவர்களுக்கும் கூறுகின்றீர்கள். இதை வேறு எவருமே அறிந்திருக்க முடியாது. உங்களுக்கு மாத்திரமே இது தெரியும். வீட்டில் உங்கள் நண்பர்கள், உறவினர்கள், சகோதரர்கள் போன்றோர் இருந்த பொழுதிலும், அவர்கள் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை. அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களை மேன்மையானவர்கள் ஆக்குவதற்கு, தந்தையிடமிருந்து நீங்கள் பெறுகின்ற ஸ்ரீமத்தைப் பின்பற்றி, தெய்வீகக் குணங்களையும் கிரகியுங்கள். உங்கள் உணவும், பானமும், நடத்தையும் மிகவும் இராஜரீகமாக இருக்க வேண்டும்.

2. ஒருவரையொருவர் நினைவு செய்யாதீர்கள், ஆனால் நிச்சயமாக மரியாதை கொடுங்கள். தூய்மையாகுவதற்கு முயற்சி செய்வதுடன், ஏனையோரையும் அவ்வாறு செய்வதற்குத் தூண்டுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் என்றுமே சந்தோஷமாக இருப்பதுடன், ஓர் சுவையற்ற (வறண்ட) சூழலிலும் பிறரை ஒரு சந்தோஷத்திற்கான சுவையை அனுபவம் செய்ய வைப்பீர்களாக.

என்றுமே சந்தோஷமாக இருக்கின்ற ஆசீர்வாதத்தைப் பெற்றிருக்கின்ற குழந்தைகளாகிய நீங்கள், துன்ப அலைகளை உருவாக்குகின்ற சூழலிலும், ஒரு வறண்ட, சுவையற்ற சூழலிலும், ஆத்மாக்களைத் தங்கள் பேறுகளின் குறைவை அனுபவம் செய்ய வைக்கின்ற சூழலிலும் சதா சந்தோஷமாக இருப்பீர்கள். சூரியன் இருளை மாற்றுவதைப் போல், உங்களின் சந்தோஷத்திற்குரிய காட்சி மூலம் உங்களால் ஒரு துன்பகரமான, துக்கத்திற்குரிய சூழலையும் மாற்றமடையச் செய்ய முடியும். இருளில் ஒளியை ஏற்படுத்துவதும், அமைதியற்ற இடத்தில் அமைதியை உருவாக்குவதும், ஒரு வறண்ட, சுவையற்ற சூழலில் சந்தோஷத்திற்கான ஓர் இரசனையைக் (சுவையை) கொடுப்பதுமே என்றும் சந்தோஷமாக இருப்பது எனப்படுகிறது. தற்பொழுது, இவ்விதமான சேவை அத்தியாவசியமாக இருக்கின்றது.

சுலோகம்:
ஒரு சரீரமற்றவரே, எவ்விதமான சரீரக் கவர்ச்சியாலும் கவரப்படுவதில்லை.

அவ்யக்த சமிக்ஞை: இப்பொழுது முழுமையாகவும் கர்மாதீத்தாகவும் ஆகுகின்ற ஆழமான அக்கறையைக் கொண்டிருங்கள்.

கர்மாதீதம் அடைவது என்றால், நீங்கள் கர்மத்திற்கு அப்பால் (செயல்கள் செய்வதிலிருந்து) விலகிச்; செல்வதாக அர்த்தம் கிடையாது. கர்மம் செய்வதிலிருந்து நீங்கள் விலகி இருக்காதீர்கள். ஆனால் கர்ம பந்தனத்தில் சிக்கிக் கொள்வதிலிருந்து விலகி இருங்கள். இதுவே கர்மாதீதம் என்று அறியப்பட்டுள்ளது. கர்மயோகா ஸ்திதியானது உங்களைக் கர்மாதீத ஸ்திதியை அனுபவம் செய்ய வைக்கின்றது. ஒரு கர்மயோகியானவர் அதிகளவு அன்பானவராகவும், பற்றற்றவராகவும் இருக்கின்றார். இந்த ஸ்திதி மூலம் எவ்வளவு பெரிய பணியாக இருந்தாலும் அல்லது அதற்காக எவ்வளவு முயற்சியைச் செய்ய வேண்டியிருப்பினும் பரவாயில்லை, அது நீங்கள் எந்த வேலையையும் செய்யாததைப் போல் உணரப்படும், ஆனால் நீங்கள் ஒரு விளையாட்டை விளையாடுவதைப் போலுள்ளது.