03.05.26    Avyakt Bapdada     Tamil Lanka Murli    18.01.2010     Om Shanti     Madhuban


தந்தை பிரம்மாவைப் போல் பற்றை வென்றவராகவும் நினைவின் சொரூபமாகவும் ஆகுவதற்கு, உங்களின் மனதிற்கு ஒரு நேர அட்டவணையை உருவாக்கி, அனைத்தையும் செய்யும்போதும் சரீரமற்ற கர்மயோகியாக இருப்பதைப் பயிற்சி செய்யுங்கள்.


இன்று, எங்கும் உள்ள குழந்தைகளான உங்கள் அனைவரிலும் குறிப்பாக அன்பு அமிழ்ந்துள்ளது. இன்று, நினைவு நாள் என்று அழைக்கப்படுகிறது. அமிர்த வேளையில் இருந்து, இந்தத் தேசத்திலும் வெளிநாடுகளிலும் எங்கும் ஒவ்வொரு குழந்தையின் இதயத்திலும் தந்தையின் அன்புச் சித்திரம் தென்படுவதை பாப்தாதா பார்த்தார். தந்தையின் இதயத்திலும் ஒவ்வொரு குழந்தையின் சித்திரமும் அமிழ்ந்துள்ளது. இன்று, குறிப்பாக, இது அன்பு நாள், நினைவு நாள் என்று அழைக்கப்படுகிறது. அமிர்த வேளைக்கு முன்னரே குழந்தைகளின் அன்பு முத்துக்களால் ஆன அட்டியல்களை பாப்தாதா பார்த்தார். ஒவ்வொரு குழந்தையின் இதயத்திலும், இயல்பாகவே இந்தப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது: ‘எனது பாபா, பிரம்மாபாபா, இனிய பாபா’. பாப்தாதாவின் இதயத்திலும் இந்தப் பாடல் ஒலித்தது: இனிய குழந்தைகளே, அன்பான குழந்தைகளே. இன்று, ஒவ்வொருவரிலும் ஏனைய சக்திகளை விட, அன்பு சக்தியே அதிகளவில் ஒவ்வொருவருக்குள்ளும் அமிழ்ந்து இருந்தது. இந்த இறையன்பு, இந்த ஆன்மீக அன்பு, சங்கமயுகத்தில் மட்டுமே அனுபவம் செய்யப்படும். அனுபவசாலிகள் மட்டுமே இறைவனின் இந்த அன்பை அறிவார்கள்: இது குழந்தைகளான உங்கள் அனைவரையும் இலகு யோகிகள் ஆக்குகிறது. குழந்தைகள் அனைவரிலும் பற்பல அன்பான அனுபவங்கள் அவர்களுக்குள் அமிழ்ந்து இருப்பதை பாப்தாதா கண்டார். அன்பே, உங்களின் பிறப்பின் அடிப்படை. ஒரு குழந்தையேனும் புலப்படவில்லை.... ஏனைய சக்திகள் குறைவாக இருக்கக்கூடும். ஆனால் தந்தையின் அன்பின் அனுபவம், அத்துடன் கருவிகள் ஆகியிருக்கும் விசேடமான ஆத்மாக்களின் அன்பு, பெரும்பாலான குழந்தைகளான உங்களின் இதயங்களிலும் முகங்களிலும் புலப்படுகின்றன. இன்று குறிப்பாக உங்கள் அனைவரையும் இங்கே வரச் செய்தது எது? நீங்கள் எந்த விமானத்தில் வந்தீர்கள்? நீங்கள் புகைவண்டியில் வந்தீர்களா அல்லது விமானத்தில் வந்தீர்களா? உங்கள் அனைவரிலும் அன்பு அமிழ்ந்து இருப்பதை அனைவரின் முகங்களும் காட்டுகின்றன, நீங்கள் அன்பெனும் விமானத்தில் ஏறி இங்கே வந்துள்ளீர்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டி இருந்தாலும், நீங்கள் அனைவரும் அன்பெனும் விமானத்தில் ஏறியே இங்கே வந்துள்ளீர்கள்.

இன்று, நினைவு நாள் என்று அழைக்கப்படுகிறது. ஆனால், நினைவு நாளுடன் கூடவே, இது சக்தி நாள் என்றும் அழைக்கப்படுகிறது. இன்று, முடிசூட்டு நாள் என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால், இந்த நாளிலேயே பாப்தாதா, குறிப்பாகத் தந்தை பிரம்மா, கருவி மகாவீர் குழந்தைகளுக்கு உலகச் சேவை என்ற கிரீடத்தை முடிசூட்டினார். தந்தை பிரம்மா தெரியாதவர் ஆகி, குழந்தைகளுக்கு உலகச் சேவை என்ற நினைவுத் திலகத்தை அணிவித்தார். அவர் குழந்தைகளை கரன்ஹார் (செய்பவர்) ஆக்கித் தன்னை கரவன்ஹார் (செய்யத் தூண்டுபவர்) ஆக்கினார். தன்னைப் போன்றே தேவதை ரூபத்தின் ஆசீர்வாதத்தை வழங்கியதுடன் அவர்களுக்கு ஒளிக்கிரீடத்தையும் வழங்கினார். எனவே, பாப்தாதா வழங்கிய கிரீடம் மற்றும் திலகத்தின் ஆசீர்வாதத்திற்கு ஏற்ப, குழந்தைகள் தமது கடமையைச் செய்வதைப் பார்க்கும்போது, பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். குழந்தைகள் சேவைக்கான ஆசீர்வாதத்தை நடைமுறைப்படுத்தி உள்ளார்கள். இதைப் பார்க்கும்போது, பாப்தாதா களிப்படைகிறார். குறிப்பாக நீங்கள் இதுவரை நடித்த பாகத்திற்காகவும் இனிமேலும் நடிக்க இருக்கும் பாகத்திற்காகவும் தந்தை பிரம்மா கோடானுகோடி வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். ஆஹா குழந்தைகளே! ஆஹா! பாபா வெளிநாடுகளிலும் சுற்றுலா சென்றார், அங்கே அவர் எதைக் கண்டார்? ஒவ்வொரு குழந்தையும் அன்பிலே திளைத்திருந்தார்கள். நீங்கள் தந்தையிடம் இருந்து சக்திகளைப் பெற்றுள்ளீர்கள். ஏனென்றால், இந்தத் தினம் குறிப்பாக அன்புடன் கூடவே சக்திகளை ஆசீர்வாதங்களாகப் பெறுகின்ற தினமாகும். சில குழந்தைகள் ஆழ்ந்த நினைவில் மூழ்கியிருந்து சேவை செய்வதில் ஈடுபட்டு இருப்பதை பாப்தாதா கண்டார். அவர்கள் மிக நல்ல அமிர்த வேளையை அனுபவம் செய்கிறார்கள். அவர்கள் சரீரமற்றவராக இருக்கும் அனுபவத்தையும் கொண்டிருக்கிறார்கள். ஆனால், கர்மயோகிகள் என்று வரும்போது, ஒரு யோகியாக இருப்பதுடன் செயல்களைச் செய்தல் என்ற இரண்டையும் செய்வதில் ஒரு வேறுபாடு ஏற்படுகிறது. அவர்கள் கர்மத்திற்கும் யோகத்திற்கும் இடையில் சமநிலையைப் பேணுவதற்கு முயற்சி செய்கிறார்கள். ஆனால், அமிர்த வேளையில் அவர்கள் சக்திவாய்ந்த ஸ்திதியை அனுபவம் செய்தாலும், அவர்களின் செயல்களில் ஒரு வேறுபாடு காணப்படுகிறது. அவர்கள் சிரமப்படுகிறார்கள். இந்த உலகின் விநாசம் சடுதியாகவே இடம்பெறும் என்று பாப்தாதா குழந்தைகளான உங்கள் அனைவருக்கும் கூறியுள்ளார். நாள் முழுவதும் கவனம் செலுத்தாமல் இருந்து, எதையாவது கிரகிப்பதில் நீங்கள் தோல்வி அடைந்தால், அப்போது கர்மயோகியாக இருக்கும் உங்களின் ஸ்திதியில் ஒரு வேறுபாடு காணப்படும். அப்போது விநாசம் வந்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்? உலக விநாசத்திற்கான திகதியை பாப்தாதா அறிவிக்கப் போவதில்லை. உங்களின் வாழ்க்கை எப்போது முடியப் போகிறது என்று உங்களுக்குத் தெரியுமா? எந்தத் திகதியில் உங்களுக்கு மரணம் ஏற்படும் என உங்களில் எவருக்காவது தெரியுமா? உங்களில் யாருக்காவது இது தெரியுமா? இது தெரிந்தவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! எதுவும் சடுதியாக நடக்கலாம். பஞ்சபூதங்களால் ஏதாவது நடக்கும்போது, ஒரே வேளையில் பலர் இறக்கிறார்கள். எனவே, உலக விநாசத்திற்கான திகதியைப் பற்றிச் சிந்தித்து கவனயீனம் ஆகாதீர்கள். உங்களின் ஜெகதாம்பாவின்(உலகத் தாய்) சுலோகம், ஒருபோதும் சிலவேளைகளில் (கஃப்) எனக் கூறாதீர்கள், ஆனால் அப் (அஃப்) எனக் கூறுங்கள் என்றே இருந்தது. எதுவும் நாளை நடக்கலாம், ஆனால் நான் நிச்சயமாக என்றும் தயாராக இருக்க வேண்டும். எனவே, நீங்கள் அனைவரும் உங்களின் ஆயத்தங்களில் இத்தகைய கவனத்தைச் செலுத்துகிறீர்களா? உங்களின் கர்மக் கணக்குகளைத் தீர்த்து விட்டீர்களா? ஞானம், யோகம், தாரணை, சேவை என்ற நான்கு பாடங்களிலும் ஒவ்வொரு விதத்திலும் இத்தகைய ஆயத்தங்களைச் செய்து விட்டீர்களா? நீங்கள் சம்பூரணமான, எல்லையற்ற விருப்பமின்மையை அனுபவம் செய்கிறீர்களா என்பதைச் சோதித்தீர்களா? நீங்கள் என்றும் தயாராக இருக்கிறீர்களா என்பதை உங்களின் இதயபூர்வமாகச் சோதித்துப் பார்த்தீர்களா? நீங்கள் பற்றை வென்றவராகவும் நினைவு சொரூபமாகவும் இருக்கிறீர்களா? தந்தை பிரம்மா தனது முயற்சிகளால் தன்னை இவ்வாறு ஆக்கிக் கொண்டார், அனுபவசாலியான குழந்தைகள் அதைக் கண்டார்கள். அவரின் கர்மக் கணக்குகளின் எந்தவிதமான சூழலும் இருக்கவில்லை, ஏனென்றால் அவரின் அடிக்கடி செய்கின்ற சரீரமற்றவர் ஆகுகின்ற பயிற்சியானது, அவரைச் சடுதியாகவும் சரீரமற்றவர் ஆகுவதற்கும் உதவியது. ஒரு நாள் அவர் பறந்து சென்று விட்டார். பிரம்மா பாபா செல்லப் போகின்றார் என யாராவது கற்பனை செய்து பார்த்தார்களா? எவ்வாறாயினும், அவர் பற்றை வென்றவராக இருந்தார். அவருடைய கரத்தைக் குழந்தைகளின் கரங்களில் வைத்தபோது, ஏதாவது ஈர்ப்பு ஏற்பட்டதா? அவர் ஒரு தேவதை ஆகினார். குழந்தைகளுக்கு தேவதைகள் ஆகுகின்ற திலகத்தை வைத்துவிட்டு அவர் சென்றுவிட்டார். இதற்கான காரணம் என்னவென்றால், நீண்ட காலத்திற்கு சரீரமற்றவராக இருக்கும் பயிற்சியைச் செய்ததே ஆகும். பாபாவுடன் வாழ்ந்த பல அனுபவசாலிக் குழந்தைகளுக்கும், அனைத்தையும் செய்யும்போதே, அவர் சரீரமற்றவர் ஆகுவதை அனுபவம் செய்யக்கூடியதாக இருந்தது. உங்களின் கர்மயோகி ஸ்திதியில் வேறுபாடு ஏற்படுவதற்கான காரணம், நீங்கள் செயல்படும்போது, ‘நான் ஓர் ஆத்மா’ என்பது உங்களின் விழிப்புணர்வில் வெளிப்படுவதில்லை. அனைவருக்கும் இது தெரியும்: நான் என்ன வகையான ஆத்மா? ஆத்மாவான நான், கரவன்ஹார் ஆவேன், இந்தப் பௌதீக அங்கங்கள் கரன்ஹார் ஆகும். அனைத்தையும் செய்யும்போது, கரவன்ஹார் என்ற சுயமரியாதையின் விழிப்புணர்வின் சொரூபமாக இருங்கள். நீங்கள் உங்களின் பௌதீக அங்கங்களால் எதையும் செய்ய வேண்டி இருந்தாலும், ‘நான் கரவன்ஹார், நானே அதிபதி’ என்பதை நினைவில் வைத்திருங்கள். நீங்கள் உங்களின் ஆசனத்தில் நிலையாக அமர்ந்திருந்தால், உங்களின் பௌதீக அங்கங்களும் ஒழுங்காக இருக்கும். நீங்கள் உங்களின் ஆசனத்தில் நிலையாக இல்லாவிட்டால், எவரும் நீங்கள் சொல்வதைக் கேட்க மாட்டார்கள். ஆத்மாவே கரவன்ஹார், உங்களின் பௌதீக அங்கங்கள் கரன்ஹார். அவை கரவன்ஹார் இல்லை.

நீங்கள் தந்தை பிரம்மாவின் அனுபவங்களில் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆரம்பத்தில் பிரம்மாபாபா இதைத் தினமும் பயிற்சி செய்வார்: நாளின் இறுதியில், அவர் தனது பௌதீக அங்கங்களுக்காக ஒரு சபையைக் கூட்டுவாராம். பழைய குழந்தைகள் பாபாவின் டயறியில் பார்த்திருக்கிறார்கள். பாபா தினமும் ஒரு சபையைக் கூட்டி, அதிபதியான கரவன்ஹாராக இருந்தவண்ணம், தனது பௌதீக அங்கங்களுடன் தினமும் பரிமாற்றத்தைச் செய்வார். ஆரம்பத்தில், தந்தை பிரம்மா இந்தளவு கவனம் செலுத்தினார். அதனால், நீங்களும் உங்களை கரவன்ஹார், அதிபதிகளாகக் கருத வேண்டும். ஏனென்றால், ஆத்மாக்களான நீங்கள் அரசர்கள் ஆவீர்கள். உங்களின் பௌதீக அங்கங்கள் உங்களின் சகபாடிகள் ஆகும். எனவே, இன்று, உங்களின் மனம், புத்தி, சம்ஸ்காரங்கள், சுபாவம் அல்லது சம்ஸ்காரங்கள் - நீங்கள் எவ்வாறு அவற்றை அழைக்க விரும்பினாலும் பரவாயில்லை - என்பனவற்றின் நிலைமை எப்படி இருந்தது என்று சோதித்துப் பாருங்கள். அவற்றை உடனடியாகவே நீங்கள் சோதிப்பதன் மூலம், உங்களின் பௌதீக அங்கங்கள் கவனம் செலுத்தும். ஏனென்றால், அவற்றின் அரசர் அவற்றின் நலத்தைப் பற்றிக் கேட்க இருக்கிறார். எனவே, ஆத்மாவான அரசர், கரவன்ஹாராக இருப்பவர், பௌதீக அங்கங்களான கரன்ஹாரைச் சோதிக்க வேண்டும். இல்லாவிட்டால், சில குழந்தைகள், ‘நாங்கள் எமது பௌதீக அங்கங்களுக்குக் கட்டளை இடுகிறோம், ஆனால் அவை மாறுகின்றன. நாங்கள் முயற்சி செய்கிறோம், ஆனால் சில சம்ஸ்காரங்களும் சுபாவமும் கட்டளைப்படி நடப்பதில்லை’ எனக் கூறுகிறார்கள். உங்களின் சுயமரியாதை என்ற ஆசனத்தில் நிலையாக நீங்கள் அமர்ந்திருக்காததே இதற்கான காரணம் ஆகும். நீங்கள் உங்களின் ஆசனத்தில் அமர்ந்திருக்கும்வரை, எத்தனை கட்டளைகளை நீங்கள் கொடுத்தாலும், உங்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிபவர்களும் நீங்கள் சொல்வதைக் கேட்கப் போவதில்லை. எனவே, அனைத்தையும் செய்யும்போதும், கரவன்ஹார், அதிபதியாக இருக்கும் உங்களின் ஆசனத்தில் நிலையாக அமர்ந்திருங்கள். சில குழந்தைகள் பாப்தாதாவுடன் இதயபூர்வமாக உரையாடிக் கூறுகிறார்கள்: பாபா, நீங்கள் எங்களைச் சகல சக்திகளும் கொண்ட சர்வசக்திவான்கள் ஆக்கியுள்ளீர்கள். ஒருசில சக்திகளைக் கொண்டவர்களாக அல்ல. ஆனால், ஒரு குழந்தை இந்தப் பிராமணப் பிறவி எடுத்த உடனேயே, சர்வசக்திவானாக இருக்கும் ஆசீர்வாதத்தை நீங்கள் அவர்களுக்கு வழங்கினீர்கள். உங்களின் பிறப்பு எடுத்த வேளையில் உங்களுக்கு வழங்கப்பட்ட ஆசீர்வாதம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? தந்தை ஒவ்வொரு குழந்தைக்கும் மாஸ்ரர் சர்வசக்திவானாக இருக்கும் ஆசீர்வாதத்தை வழங்கினார். யார் அந்த ஆசீர்வாதத்தை வழங்கியது? சர்வசக்திவான். எவ்வாறாயினும், அந்த வேளையில் உங்களுக்குத் தேவையான சக்தி வருவதில்லை, அது உங்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதில்லை என்று நீங்கள் முறைப்பாடு செய்கிறீர்கள். அது ஏன்? சர்வசக்திவானிடம் இருந்து உங்களுக்கு இந்த ஆசீர்வாதம் கிடைத்திருப்பதனால், அவரை விட மகத்தானவர் யாரும் இல்லை. நீங்கள் அந்த ஆசீர்வாதத்தின் ஸ்திதியில் ஸ்திரமாக இருந்தவண்ணம் அந்தக் கட்டளை இட்டீர்கள் என்றால், உங்களுக்கு ஒரு கட்டளை இடுவதற்கும் அந்தச் சக்தி உங்களுக்குக் கீழ்ப்படியாமலும் இருப்பது என்பதும் சாத்தியம் இல்லை. ஒன்று, ஆத்மாவே அதிபதி ஆவார், நீங்கள் அந்த ஆசீர்வாதத்தைச் சர்வசக்திவானிடம் இருந்து பெற்றுள்ளீர்கள். எனவே, நீங்கள் அந்த ரூபத்தில் ஸ்திரமாக இருக்கும்போது, நீங்களே அதிபதி ஆவீர்கள். உங்களுக்கு அந்த ஆசீர்வாதம் உள்ளது. அதனால், இரண்டு ரூபங்களின் விழிப்புணர்வு ஸ்திதியில் ஸ்திரமாக இருந்தவண்ணம் ஒரு கட்டளை இடுங்கள். அந்தச் சக்தி நீங்கள் சொல்வதைக் கேட்காமல் இருப்பதற்கு சாத்தியமே இல்லை. ஏனென்றால், உங்களிடம் அந்த ஆசீர்வாதம் உள்ளது. அத்துடன் சங்கமயுகத்தில் தந்தையின் சொத்திற்கான உரிமையும் உங்களுக்கு உள்ளது. நீங்கள் அனைவரும் சர்வசக்திவான் என்ற பட்டத்தைப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் அந்த ஸ்திதியில் ஸ்திரமாக இருப்பதில்லை, அவ்வளவே. நீங்கள் அந்த ஸ்திதியில் எல்லா வேளையும் இருப்பதில்லை. இதில் ‘சிலவேளைகளில்’ என்பது ஏற்படுகிறது. உங்களின் பிராமண அகராதியில் இருந்து ‘சிலவேளைகளில்’ என்ற வார்த்தையை நீக்கிவிடுங்கள். இப்போது பிரசன்னமாக இருங்கள். நீங்கள் கூறுகிறீர்கள்: ‘பாபா, நாங்கள் உங்களை நினைவு செய்கிறோம், நீங்களும் பிரசன்னம் ஆகுகிறீர்கள்’. உங்களுக்கு இந்த அனுபவம் உள்ளதா? உங்களின் கைகளை உயர்த்துங்கள்! உங்களுக்கு இந்த அனுபவம் ஏற்பட்டுள்ளதா? இப்போது பாருங்கள்! நீங்கள் உங்களின் கைகளை உயர்த்துகிறீர்கள்! தந்தை பிரசன்னம் ஆகுகிறார். பிரபுவே பிரசன்னம் ஆகுகிறார், எனவே இந்தச் சக்தி எம்மாத்திரம்? நீங்கள் அந்தச் சக்திகளைத் தந்தையின் சொத்தில் இருந்து பெற்றுள்ளீர்கள். எனவே, அதிபதியாக இருந்தவண்ணம் கட்டளை இடுங்கள். அதிபதியாக இல்லாமல் நீங்கள் கட்டளை இட்டால், உங்களின் சக்தியை நீங்கள் இழந்து விடுவீர்கள். ஆகவே, இத்தகைய ஸ்திதியில் இருந்தவண்ணம் நீங்கள் கட்டளை இட்டால், நீங்கள் அவற்றின் அதிபதி இல்லாததால், அந்தச் சக்திகள் ஏன் உங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும்?

எனவே, இப்போது பாப்தாதா எதை விரும்புகிறார்? உங்களுக்கு அது தெரியும், அல்லவா? தனது ஒவ்வொரு குழந்தையும் அனைத்தையும் செய்யும்போதும் ஓர் அரச குழந்தையாக, தனக்கே அதிபதியாக இருக்க வேண்டும், தனது சுய இராச்சிய அதிகாரி என்ற ஆசனத்தைக் கைவிடக்கூடாது என்றே தந்தை விரும்புகிறார். ஓர் அரசர், நாள் முழுவதும் ஓர் அரசராகவே இருப்பார், அப்படியல்லவா? அல்லது, அவர் சிலவேளைகளில் அரசராகவும் ஏனைய வேளைகளில் அப்படி இல்லாமலும் இருப்பாரா? சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பது அல்லது அமராமல் விடுவது என்பது வேறு விடயம். ஆனால், வீட்டில் இருக்கும்போதும், தான் ஓர் அரசன் என்பதை அவர் மறக்க மாட்டார். எனவே, ஒரு கர்மயோகியாக இருப்பதற்கும் அமிர்த வேளையில் ஒரு சக்திவாய்ந்த ஸ்திதியில் மிகச்சரியாக யோகம் செய்வதற்கும் இடையில் எந்தவிதமான வேறுபாடும் இருக்கக்கூடாது. இது இரட்டை வேலை, ஆனால் நீங்கள் யார்? நீங்களே உலகை மாற்றுபவர்களும் உலக உபகாரிகளும் ஆவீர்கள். இதனாலேயே, நீங்கள் நடக்கும்போதும் அசையும்போதும் அரசராக இருப்பதை மறக்கக்கூடாது, உங்களின் ஆசனத்தைக் கைவிடக்கூடாது என்றே தந்தை விரும்புகிறார். உங்களின் ஆசனம் இல்லாமல், யாருமே உங்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மாட்டார்கள். தற்காலத்தில், அவர்கள் ஓர் ஆசனத்திற்காக எவ்வளவற்றைச் செய்கிறார்கள் எனப் பாருங்கள்! தமது உரிமையைக் கோருவதற்காக அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள்! அவர்களில் எவரும் தமது உரிமையைக் கைவிட விரும்புவதில்லை. எனவே, நீங்கள் உங்களின் இறை உரிமையைக் கோர வேண்டும்: நான் யார்? நீங்கள் வேலை செய்யும் ஒவ்வொரு கணமும், உங்களின் பணியைச் செய்யும்போதும் உங்களின் மனதில் ஒரு நேர அட்டவணையைச் செய்து கொள்ளுங்கள்: ‘இந்தக் குறிப்பிட்ட பணியைச் செய்யும்போது, எனது மனதில் இருக்க வேண்டிய சுய மரியாதை என்ன? நான் இன்று என்ன இலட்சியத்தை வைத்திருக்க வேண்டும்?’ உங்களின் பணியைச் செய்யும்போது, உங்களின் சுயமரியாதைப் பட்டியலில் இருந்து, வெவ்வேறு நேர அட்டவணைகளை உருவாக்குங்கள். உங்களின் பௌதீக வேலைக்காக ஒரு நேர அட்டவணையை நிச்சயம் செய்வதைப் போல், உங்களின் மனதிற்கும் ஒரு நேர அட்டவணையை நிச்சயம் செய்யுங்கள். இந்த வேளையில் இந்த வேலையைச் செய்ய வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே, அந்த வேலையுடன் என்ன சுயமரியாதையை வைத்திருப்பீர்கள்? எந்த சுயமரியாதை ரூபத்துடன் நீங்கள் அதிபதிக்கான உரிமையைக் கோருவீர்கள்? இதற்காக உங்களின் மனதில் ஒரு நேர அட்டவணையை உருவாக்குங்கள். எப்படி நேர அட்டவணையை உருவாக்குவது என்று உங்களுக்குத் தெரியும் அல்லவா? தாய்மார்களான உங்களுக்கு அதை எப்படிச் செய்வது என்று தெரியுமா? தாய்மார்களே, உங்களுக்காக ஒரு நிகழ்ச்சியை உருவாக்கிக் கொள்ளுங்கள். உணவு தயாரிக்கும் வேளையில், உங்களின் புத்தியில் என்ன சுய மரியாதையை நீங்கள் வெளிப்படுத்தி வைத்திருப்பீர்கள்? சுய மரியாதைக்கான ஒரு நீண்ட மாலை உள்ளது. சுயமரியாதை மாலை மிகவும் நீண்டது. அதன் மூலம் உங்களால் அதைக் கணக்கிட்டு, அதில் அமிழ்ந்து போக முடியும். நீண்ட காலம் என்பதைப் பற்றிச் சில குழந்தைகள் கூறுகிறார்கள்: ‘இன்னமும், விநாசத்திற்கான எந்தவிதமான அடையாளங்களையும் எங்களால் காண முடியவில்லை. அதற்காக இன்னமும் திகதி நிச்சயம் செய்யப்படவில்லை. அதனால் ஏதாவதொரு வேளையில் நாங்கள் அதைச் செய்வோம், அது நடக்கும்’. இது கவனயீனம் ஆகும். நீங்கள் செய்தியைக் கொடுப்பதில் உலக உபகாரிகள், எனினும் இன்னமும் நேரம் எஞ்சி இருப்பதாகவும் தாம் மேற்கொண்டு முன்னேறும்போது அந்தச் செய்தியைக் கொடுப்போம் என்றும் சில குழந்தைகள் நினைக்கிறார்கள். ஆனால் இல்லை. நீங்கள் தாமதமாகச் செய்தியைக் கொடுப்பவர்கள், உங்களிடம் முறைப்பாடு செய்வார்கள். அவர்கள் எதைப் பற்றி முறைப்பாடு செய்வார்கள்? நீங்கள் ஏன் எங்களுக்கு முன்னரே சொல்லவில்லை, நாங்கள் ஏதாவது செய்திருப்போமே? நீங்கள் இப்போது இறுதிக்கணத்தில் எங்களுக்குச் சொல்கிறீர்கள்! இப்போது, எங்களால் அவரை இனங்காண மட்டுமே முடியும், ‘ஓ கடவுளே, உங்களின் திருவிளையாடல்கள் அற்புதமானவை!’ எனக் கூற முடியும். எங்களால் இதைச் சொல்ல மட்டுமே முடியும், ஆனால் எங்களால் ஓர் அந்தஸ்தைக் கோர முடியாது! ஏன்? நீண்ட காலத்திற்கு ஒத்துழைப்பு இருக்க வேண்டும். இங்கே அமர்ந்திருக்கும் அனைவரும் வாரிசுகள், அப்படித்தானே? உங்களை வாரிசுகளாகக் கருதுபவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! நீங்கள் வாரிசுகளா? அச்சா, நீங்கள் வாரிசுகளாக இருந்தால், நீங்கள் முழுமையான ஆஸ்தியைப் பெறப் போகின்றீர்களா அல்லது சிறிதளவு ஆஸ்தியைப் பெறப் போகின்றீர்களா? நீங்கள் அனைவருமே உங்களுக்கு முழுமையான ஆஸ்தி வேண்டும் எனக் கூறுகிறீர்கள். முழுமையான ஆஸ்தி என்பது, ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை, 21 சம்பூரணமான பிறவிகள் ஆகும். அரச பிரஜைகளாக அன்றி, அரச குடும்பத்திற்குள் வரவேண்டும். நீங்கள் அரச குடும்பத்திற்குள் வரவேண்டும். ஒருவர் மட்டுமே சிம்மாசனத்தில் அமர்வார். ஒரு தம்பதி அதில் அமர்வார்கள். ஆனால், அங்கே சபை கூட்டப்படும்போது, அங்கே அமர்ந்திருக்கும் அரச குடும்பத்தின் விசேடமான கருவி ஆத்மாக்களுக்கும் கிரீடம் அணிவிக்கப்படும். அவர்கள் கிரீடம் இல்லாமல் அமர்ந்திருக்க மாட்டார்கள். ஒவ்வொரு பணியைப் பற்றியும் ஆலோசனை கூறுபவர்களும் இருப்பார்கள். ஒருவர் மட்டும் ஆட்சி செய்வார் என்றில்லை, அவர்கள் அங்கே அனைத்தையும் ஆலோசனைப்படி செய்வார்கள். இதனாலேயே, உங்களின் முழுமையான ஆஸ்தியை நீங்கள் பெற விரும்பினால், அப்போது..... முதல் பிறவியில் இருந்து இறுதிவரை, 21 முழுமையான பிறவிகள் இருக்க வேண்டும். அரைவாசி மட்டும் இருக்கக்கூடாது. நீங்கள் அரைவாசியில் விட்டுச் செல்லப் போவதில்லை. அங்கே அகால மரணம் இருக்காது. எனவே, நீங்கள் உங்களின் முழுமையான ஆஸ்தியைக் கோரப் போகின்றீர்களா அல்லது வெறுமனே சிறிதளவுடன் சந்தோஷம் அடைவீர்களா? உங்களின் மாதேஸ்வரி ஜெகதாம்பா எப்போதும் இந்த இலட்சியத்தைக் கொண்டிருந்தார் - பாப்தாதா என்ன ஸ்ரீமத்தைக் கொடுத்தாலும் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களுக்காக தான் என்ன ஸ்ரீமத்தைப் பெற்றாலும், நிச்சயமாக அதைச் செய்ய வேண்டும். தமது முழுமையான ஆஸ்தியைப் பெற இருப்பவர்கள், உங்களின் புத்திகளில் இந்த இலட்சியத்தை வைத்திருக்க வேண்டும்: சடுதியாக, என்றும் தயார், நீண்ட காலப்பகுதி. இந்த மூன்று விடயங்களையும் ஒன்றாக நினைவு செய்யுங்கள். இதனாலேயே, நம்பிக்கைத் தீபங்களான குழந்தைகளான உங்கள் அனைவருக்கும் பாப்தாதாவின் ஆசீர்வாதம் என்னவென்றால், சதா இந்த மூன்று விடயங்களையும் நினைவு செய்து, நம்பிக்கைத் தீபங்கள் ஆகுகின்ற நடைமுறைப் பயிற்சியைச் செய்து காட்டுங்கள். அச்சா.

வெளிநாடுகளில் இருப்பவர்கள், உங்களின் மனங்களால் சேவை செய்வதற்கு ஒத்துழைக்கின்றீர்கள், அல்லவா? சகல மதங்களிலும் விரிவாக்கம் இடம்பெறுவதை பாப்தாதா பார்க்கிறார். அது ஒரு மதத்தில் மட்டும் அல்ல, இந்து தர்மத்தில் மட்டும் அன்றி, முஸ்லிம்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள் அனைவரும் படிப்படியாக ஆன்மீகத்தில் ஆர்வம் செலுத்துகிறார்கள். முன்னர், பிரம்மா குமாரிகள் என்ற பெயரைக் கேட்டாலே மக்கள் பயப்படுவதுண்டு. அவர்கள் என்ன கூறுகிறார்கள் - விநாசம், விநாசம்? இப்போது அவர்கள் என்ன சொல்கிறார்கள்? இப்போது அவர்கள் சொல்கிறார்கள்: ‘எப்போது விநாசம் நடக்கும் எனச் சொல்லுங்கள்! அது எப்படி நடக்கும்? நாங்கள் என்ன செய்ய வேண்டும்?’ அது நடக்கும் என்பதற்கு உத்தரவாதம் உள்ளது. உங்கள் அனைவருக்கும் இந்த உத்தரவாதம் உள்ளதல்லவா? வெளிநாடுகளோ அல்லது பாரதத்திலோ உங்களுக்கு இந்த உத்தரவாதம் உள்ளதல்லவா? உங்களின் தீவிர முயற்சி செய்வதற்கு பாப்தாதா ஒரு சமிக்கை கொடுத்துள்ளார். வெறுமனே முயற்சி அல்ல, ஏனென்றால் முயற்சி செய்வதற்கான காலம் கடந்து விட்டது. இப்போது இது தீவிர முயற்சி செய்வதற்கான நேரம் ஆகும். ‘ஏதாவதொரு வேளையில்’ என்று இல்லாமல், ‘இப்போது!’ என்று இருக்க வேண்டும். நீங்கள் இப்போது இதைச் செய்ய வேண்டும், இப்போதே அவ்வாறு ஆகவேண்டும். எனவே, இது நடக்க வேண்டும். அச்சா.

எங்கும் உள்ள தீவிர முயற்சியாளர்கள் அனைவருக்கும், சதா ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் முன்னால் காலடி எடுத்து வைப்பவர்களுக்கும் உண்மையான இதயத்துடன் அனைத்தையும் செய்பவர்களுக்கும் பாப்தாதா உங்களின் நெற்றிகளில் வெற்றித் திலகத்தைப் பார்க்கிறார். ஒவ்வொரு குழந்தையும் பாப்தாதாவின் இதயத்தில் கலந்துள்ளார், தந்தை ஒவ்வொரு குழந்தையின் இதயத்தில் கலந்துள்ளார். குழந்தைகளான நீங்கள் தந்தையின் இதயத்தில் கலந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்களுடன் நமஸ்தே.

ஆசீர்வாதம்:
நீங்கள் மாஸ்ரர் படைப்பவராகி, படைப்பின் சகல கவர்ச்சிகளில் இருந்தும் அப்பால் இருப்பதற்கு உங்களின் சக்திவாய்ந்த ஸ்திதியைப் பயன்படுத்துவீர்களாக.

ஒரு மாஸ்ரர் படைப்பவர், சக்திவாய்ந்த ஸ்திதியில் ஸ்திரமாகவும் மாஸ்ரர் ஞானம் நிறைந்தவராக இருக்கும் போதையுடனும் இருந்தால், அவரால் சகல கவர்ச்சிகளில் இருந்தும் அப்பால் விலகி இருக்க முடியும். இது ஏனென்றால், படைப்பானது இப்போது வெவ்வேறான நிறங்களையும் வடிவங்களையும் அதிகமாக உருவாக்கும். ஆகவே, நீங்கள் இன்னமும் எஞ்சியுள்ள, கவனயீனம், சோம்பேறித்தனம், அலட்சிய மனப்பான்மை போன்ற குழந்தைப்பருவத் தவறுகள் அனைத்தையும் மறக்க வேண்டும். அப்போது, சக்தி என்ற உங்களின் சக்திசாலி வடிவத்தை, ஆயதங்கள் தரித்த உங்களின் ரூபத்தை, சதா ஒளியேற்றப்பட்ட ரூபத்தை வெளிப்படுத்த முடியும். அப்போது மட்டுமே நீங்கள் மாஸ்ரர் படைப்பவர் என்று அழைக்கப்படுவீர்கள்.

சுலோகம்:
உங்களின் மனதின் ஸ்திதியில் மிகவும் உறுதியாக இருங்கள், எந்தவொரு சூழ்நிலையாலும் அதை உருகச் செய்ய முடியாது.

அவ்யக்த சமிக்கை: சதா ஆட்ட, அசைக்க முடியாத நிலையான ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.

நீங்கள் என்ன வகையான சூழலில் வசித்தாலும், உங்களின் ஸ்திதி எப்போதும் ஆட்ட, அசைக்க முடியாததாக இருக்க வேண்டும். ஒரு கருவி உங்களுக்கு அறிவுரை கொடுக்கும்போது, அதனால் குழப்பம் அடையாதீர்கள். ஏனென்றால், கருவிகளாக இருப்பவர்கள், ஏற்கனவே அனுபவசாலிகள் ஆவார்கள். அவர்களின் வழிகாட்டல்கள் எதுவும் தெளிவாக இல்லாவிட்டாலும் எந்தவிதமான குழப்பமும் இருக்கக்கூடாது. நீங்கள் அதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள் என்பதை அவர்களுக்குப் பொறுமையாகக் கூறுங்கள். அப்போது மட்டுமே உங்களின் ஸ்திதியானது நிலையாகவும் ஆட்ட, அசைக்க முடியாததாகவும் இருக்கும்.