03.07.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, இந்த நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியை நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் தந்தையிடம் இருந்து இந்த ஞானம் என்ற மூன்றாவது கண்ணைப் பெற்றிருக்கின்றீர்கள் என்பதாலேயே நீங்கள் ஆஸ்திகர்கள் ஆவீர்கள்.
கேள்வி:
தந்தையின் எப்பட்டத்தைச் சமய ஸ்தாபகர்களுக்குக் கொடுக்க முடியாது?பதில்:
தந்தையே சற்குரு ஆவார். எந்தச் சமய ஸ்தாபகர்களையும் குருவென்று அழைக்க முடியாது. ஏனெனில், துன்பத்திலிருந்து உங்களை விடுவித்துச் சந்தோஷத்திற்கு அழைத்துச் செல்பவரே குரு ஆவார். சமய ஸ்தாபகர்களால் ஸ்தாபிக்கப்படும் சமயங்களைச் சேர்ந்த ஆத்மாக்கள் அந்த ஸ்தாபகரைத் பின்தொடர்ந்து கீழே இறங்குகின்றார்கள். சமய ஸ்தாபகர்கள், எவரையும் திரும்பவும் அழைத்துச் செல்வதில்லை. தந்தை வரும்போதே, ஆத்மாக்கள் அனைவரையும் அவர் மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றார். ஆகையாலேயே அவர் அனைவரதும் சற்குரு ஆவார்.பாடல்:
எங்கள் அனைவரையும் இப்பாவ உலகிலிருந்து ஓய்வும் சௌகரியமும் நிறைந்த இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்…ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் பாடலின் ஒரு வரியைச் செவிமடுத்தீர்கள். இது ஒரு பாவ உலகமாகும். இது பாவ ஆத்மாக்களின் உலகம் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். ‘பாவம்’ என்ற வார்த்தை மிகவும் தீயதாயினும் இவ் உலகம் உண்மையிலேயே பாவாத்மாக்களின் உலகம் என்பதை இந்த உலக மக்கள் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கின்றார்கள். நிச்சயமாக புண்ணியாத்மாக்களின் உலகம் ஒன்றிருந்திருக்க வேண்டும். அதுவே சுவர்க்கம் என்று அழைக்கப்படுகின்றது. பாவாத்மாக்களின் உலகம் நரகம் என்று அழைக்கப்படுகின்றது. பாரதத்தில் சுவர்க்கம், நரகத்தைப் பற்றிய பேச்சு அதிகளவில் உள்ளது. ஒரு நபர் மரணிக்கும் பொழுது அவர் சுவர்க்கவாசியாகி விட்டார் என்று மக்கள் கூறுகின்றார்கள். அவர் நரகவாசியாக இருந்திருக்கின்றார் என்பதையும் அவர் தூய்மையற்ற உலகிலிருந்து தூய உலகிற்குச் சென்றிருக்கின்றார் என்பதையும் அது நிரூபிக்கின்றது. எவ்வாறாயினும் மக்கள் எதனையும் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் தமது மனதில் தோன்றுவதை எல்லாம் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் மிகச்சரியான அர்த்தத்தைப் புரிந்து கொள்ளவில்லை. தந்தை வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு உறுதி அளிக்கின்றார்: இன்னும் சிறிது காலத்திற்குப் பொறுமையாக இருங்கள்! நீங்கள் பாவச்சுமையினால் மிகவும் துன்பப்படுகின்றீர்கள். நீங்கள் இப்பொழுது புண்ணியாத்மாவாக மாற்றப்பட்டு, சுவர்க்க உலகிற்கு அழைத்துச் செல்லப்பட உள்ளீர்கள். அங்கே, எப்பாவமோ துன்பமோ இருக்க மாட்டாது. குழந்தைகளாகிய உங்களுக்குப் பொறுமை வழங்கப்பட்டுள்ளது. இன்று, நீங்கள் இங்கே இருக்கின்றீர்கள், நீங்கள் நாளை உங்களது அமைதிதாமத்திற்கும் பின்னர் உங்களது சந்தோஷ தாமத்திற்கும் செல்வீர்கள். ஒருவர் சுகயீனம் அடைந்து, அவர் மீண்டும் சுகம் அடையும் தறுவாயில், வைத்தியர்கள் அவர் கூடிய விரைவில் சுகமடைந்து விடுவார் என்று உறுதி அளிக்கின்றார்கள். இங்கே, எல்லையற்ற பொறுமை உள்ளது. எல்லையற்ற தந்தை கூறுகின்றார்: நீங்கள் மிகவும் சந்தோஷம் அற்றவர்களாகவும் தூய்மை அற்றவர்களாகவும் இருக்கின்றீர்கள். நான் இப்பொழுது குழந்தைகளாகிய உங்களை ஆஸ்திகர்கள் ஆக்குகின்றேன். அவர் படைப்பின் அறிமுகத்தையும் உங்களுக்குக் கொடுக்கின்றார். ரிஷிகள் போன்றோர் தமக்குப் படைப்பவரையோ அல்லது படைப்பையோ தெரியாது என்று கூறுகின்றார்கள். அவற்றை அறிந்திருப்பவர்கள் யார்? எப்பொழுது அல்லது யாரிடமிருந்து இவற்றை அறிந்து கொள்ளலாம் என்பதை எவரும் அறியாதுள்ளார்கள். எவருக்கும் நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியைத் தெரியாது. தந்தை கூறுகின்றார்: நான் சங்கமயுகத்தில் வந்து நாடகத்திற்கு ஏற்ப, குழந்தைகளாகிய உங்களை ஆஸ்திகர்கள் ஆக்கி, பின்னர் படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியத்தை உங்களுக்குக் கூறுகின்றேன். அதாவது, நான் இந்த ஞானம் என்ற உங்களது மூன்றாவது கண்ணைத் திறக்கின்றேன். உங்களுக்கு ஒளி கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு நபர் தனது கண்பார்வையை இழக்கும்போது, அவர் குருடர் ஆகுகின்றார். இந்த நேரத்தில் மக்களிடம் இந்த ஞானம் என்ற மூன்றாவது கண் இல்லை. அவர்கள் மனிதர்களாக இருந்த போதிலும், அவர்களுக்குத் தந்தையையும் படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியையும் தெரியாதிருந்தால் அவர்கள் புத்தியற்றவர்கள் என்றே அழைக்கப்படுகின்றனர். ‘சிலர் குருடரின் குழந்தைகளான குருடர்கள் ஆவார்கள், ஏனையோர் பார்வை உடையவர்கள் ஆவார்கள்’ என்று பாடலிலும் கூறப்பட்டது. மகாபாரதயுத்தம் இடம்பெற்றதாகவும் ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் ஸ்தாபிக்கப்பட்டதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. உங்களுக்குச் சத்தியயுக இராச்சியத்தைக் கொடுப்பதற்காகத் தந்தை வந்து ஆத்மாக்களாகிய உங்களுக்கு இராஜயோகம் கற்பித்தார். ஆத்மாக்கள் கூறுகின்றார்கள்: நான் ஓர் அரசன். நான் ஒரு சட்டநிபுணர். நீங்கள் உலக இராச்சியத்தை, உலகைப் படைப்பவரான தந்தையிடம் இருந்து பெறுகின்றீர்கள் என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் அறிவீர்கள். அவர் எதனைப் படைப்பவர் ஆவார்? புதிய உலகை ஆகும். தந்தை ஒரு புதிய உலகைப் படைக்கின்றார். அவரே படைப்பவரும் அத்துடன் அவரிடமே ஞானம் முழுவதும் உள்ளது. வேறு எவருக்கும் முழு உலகினதும் வரலாறு தெரியாது. எவருக்குமே இந்த ஞானம் என்ற மூன்றாவது கண் இல்லை. தந்தையைத் தவிர வேறு எவராலும் உங்களுக்கு மூன்றாவது கண்ணைக் கொடுக்க முடியாது. உங்களுக்கு உலகின் வரலாறும், புவியியலும் தெரியும். அதாவது அசரீரி உலகம், சூட்சும உலகம், பௌதீக உலகம். அசரீரி உலகமே ஆத்மாக்களின் உலகமாகும். சந்நியாசிகள் தாம் பிரம்மதத்துவத்தில் அல்லது ஜோதியுடன் இரண்டறக் கலந்து விடுவோம் என்று கூறுகின்றார்கள். அது அவ்வாறில்லை. நீங்கள் பிரம்மதத்துவத்;திற்குச் சென்று அங்கு வாழ்வீர்கள். அந்த அமைதிதாமமே உங்கள் வீடாகும். பிரம்மதத்துவமே கடவுள் என்று அவர்கள் கூறுகின்றார்கள். இதில் அதிகளவு வேறுபாடு உள்ளது! பிரம்மம் ஒரு தத்துவமாகும். ஆகாயம் ஒரு தத்துவம் போன்றே பிரம்மமும் ஒரு தத்துவமாகும். ஆத்மாக்களாகிய நாங்களும் பரமாத்மாவும் வாழும் இடமே இனிய வீடு என்று அழைக்கப்படுகின்றது. அதுவே ஆத்மாக்களின் வீடாகும். ஆத்மாக்களால் பிரமாண்டமான பிரம்ம தத்துவத்துடன் இரண்டறக் கலக்க முடியாது என்பதையும், ஆத்மாக்கள் என்றுமே அழிவதில்லை என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். ஆத்மாக்கள் அழிவற்றவர்கள். முன்கூட்டியே நிச்சயிக்கப்பட்ட இந்த நாடகமும் அழிவற்றதாகும். இந்த நாடகம் பல நடிகர்களைக் கொண்டது. இப்பொழுது இது நடிகர்கள் அனைவரும் வருகை தந்துள்ள சங்கமயுகமாகும். ஒரு நாடகம் நிறைவு பெறும்போது, நடிகர்கள், அதனைப் படைப்பவர் போன்ற அனைவரும் மேடைக்கு வருவதுண்டு. இதுவே எல்லையற்ற நாடகம் நிறைவு பெறும் நேரமாகும். அது மீண்டும் இடம்பெறும். எல்லைக்கு உட்பட்ட நாடகங்களில் மாற்றங்கள் நிகழக்கூடும். அது பழையதாக ஆகுகின்றது. இது அநாதியான, அழியாத, எல்லையற்ற நாடகமாகும். தந்தை உங்களைத் திரிகாலதரிசியாகவும், திரிநேத்ரியாகவும் ஆக்குகின்றார். தேவர்களோ அல்லது சூத்திர குலத்தைச் சேர்ந்தவர்களோ திரிகாலதரிசிகள் அல்ல. பிராமண குலத்தைச் சேர்ந்த நீங்கள் மாத்திரமே திரிகாலதரிசிகள் ஆவீர்கள். நீங்கள் பிராமணர்கள் ஆகாது உங்களால் இந்த ஞானம் என்ற மூன்றாவது கண்ணைப் பெற முடியாது. உங்களுக்கு விருட்சத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியையும், சகல சமயங்களையும் தெரியும். நீங்களும் மாஸ்டர் ஞானம் நிறைந்தவர்கள் ஆகுகின்றீர்கள். தந்தை தனது குழந்தைகளைத் தனக்குச் சமமானவர்கள் ஆக்குகின்றார். ஒரேயொரு தந்தை மாத்திரமே ஞானக்கடலும் அவரே ஆத்மாக்கள் அனைவரதும் தந்தையும் ஆவார். அவர் குழந்தைகளான உங்கள் அனைவரையும் ஆஸ்திகர்களாகவும் திரிகாலதரிசிகளாகவும் ஆக்குகின்றார். சிவபாபா வந்துள்ளார் என்றும் அவரை நினைவு செய்யுங்கள் என்றும் நீங்கள் இப்பொழுது அனைவரிடமும் கூற வேண்டும். ஆஸ்திகர்கள் ஆகுபவர்கள் தந்தையின் மீது அதிகளவு அன்பு கொண்டிருக்கின்றார்கள். தந்தையும் உங்கள் மீது அன்பு கொண்டிருக்கின்றார். அவர் உங்களுக்குச் சுவர்க்கம் என்ற உங்கள் ஆஸ்தியைக் கொடுக்கின்றார். அன்பற்ற புத்தி உடையவர்கள் விநாசகாலத்தில் விநாசத்திற்கு இட்டுச் செல்லப்படுகின்றார்கள் என்றும், அன்பான புத்தி உடையவர்கள் வெற்றி ஈட்டுகின்றார்கள் என்றும் நினைவுகூரப்பட்டுள்ளது. கீதையின் சில வார்த்தைகள் உண்மையாகும். ஸ்ரீமத் பகவத்கீதை அதிமேன்மையான சமயநூலாகும். அது ஆதிசனாதன தர்மத்திற்கான சமயநூல் ஆகும். நான்கு பிரதான சமயநூல்கள் உள்ளன என்று விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய சமயங்களைச் சேர்ந்தவர்கள் தமது சமயத்தை ஸ்தாபிக்க மாத்திரமே வருகின்றனர். ஓர் இராச்சியம் என்ற கேள்விக்கு இடமில்லை. அவர்களைக் குரு என்று அழைக்க முடியாது. அனைவரையும் வீட்டிற்கு மீண்டும் அழைத்துச் செல்வதே ஒரு குருவின் பணியாகும். ஆபிரகாம், புத்தர், கிறிஸ்து போன்றோர் வரும்பொழுது, அவர்களின் வம்சம் அவர்களைப் பின்தொடர்ந்து வருகின்றார்கள். உங்களைத் துன்பத்தில் இருந்து அகற்றிச் சந்தோஷத்திற்கு அழைத்துச் செல்பவரே ஒரு குரு ஆவார். அவர்கள் தமது சமயத்தை ஸ்தாபிக்கவே வருகின்றார்கள். இங்கே, பலரும் குரு என்று அழைக்கப்படுகின்றார்கள். எவ்வாறாயினும், பிரம்மாவையும், விஷ்ணுவையும், சங்கரரையும் கூடக் குரு என்று அழைக்க முடியாது. சிவபாபா மாத்திரமே அனைவருக்கும் சற்கதி அருள்பவர் ஆவார். மக்கள் ஓர் இராமரை அழைக்கின்றார்கள். சிவபாபாவும் இராமர் என்று அழைக்கப்படுகின்றார். பல மொழிகள் உள்ளன என்பதால் பல பெயர்கள் அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவரது உண்மையான பெயர் சிவனாகும். அவர் சோமநாதர் (அமிர்தத்தின் பிரபு) என்றும் அழைக்கப்படுகின்றார். அவர் உங்களுக்கு அமிர்தத்தைப் பருகக் கொடுக்கின்றார். அதாவது அவர் உங்களுக்கு இந்த ஞானச் செல்வத்தைக் கொடுக்கின்றார். எவ்வாறாயினும், தண்ணீர் போன்றவற்றிற்கான கேள்விக்கு இடமில்லை. அவர் நேரடியாக வந்து உங்களை ஞானம் நிறைந்தவராகவும், பேரானந்தம் மிக்கவராகவும் ஆக்குகின்றார். தந்தை ஞானக்கடல் ஆவார். அவர் உங்களை ஞானநதிகள் ஆக்குகின்றார். ஒரேயொரு கடலே உள்ளது, ஒரு கடலில் இருந்து பல நதிகள் உருவாகுகின்றன. நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள். இந்த நேரத்தில் இந்த பூமி முழுவதுமே இராவணனின் இடமாகும். இலங்கை மாத்திரமே இராவணனிற்கு உரிய இடமல்ல. பூமி முழுவதுமே இராவண இராச்சியமாகும். இராம இராச்சியத்தில் வெகுசில மக்களே இருப்பார்கள். இந்த நேரத்தில் மாத்திரமே இது உங்கள் புத்தியில் உள்ளது. பாபா தான் மூன்று தர்மங்களை ஸ்தாபிப்பதாக விளங்கப்படுத்தியுள்ளார்: பிராமண, தேவ, மற்றும் சத்திரிய தர்மங்கள். ஏனைய சமய ஸ்தாபகர்கள் அனைவரும் வைசிய, சூத்திர குலத்திற்குள் வந்து, தமது சொந்தச் சமயங்களை ஸ்தாபிக்கின்றார்கள். அவர் எண்ணிக்கையற்ற சமயங்கள் அனைத்தின் அழிவையும் தூண்டுகின்றார். அவர்கள் பாரதத்தில் திரிமூர்த்தி படம் ஒன்றையும் செய்துள்ளார்கள். ஆனால் அதில் அவர்கள் சிவனின் உருவத்தை மறைத்து விட்டார்கள். சிவனின் உருவத்தின் ஊடாகவே பரமாத்மாவான பரமதந்தை சிவன் பிரம்மாவின் மூலம் ஸ்தாபனையையும், விஷ்ணுவின் மூலம் பராமரிப்பையும் மேற்கொள்கின்றார் என்பது நிரூபிக்கப்படுகின்றது. அவர் கரன்கரவன்ஹார் என்று அழைக்கப்படுகின்றார். அவர் தானே செயல்களை ஆற்றுவதுடன் குழந்தைகளாகிய உங்களுக்கும் கற்பிக்கின்றார். அவர் உங்களுக்குச் செயல்கள், நடுநிலைச் செயல்கள், பாவச் செயல்களின் தத்துவத்தையும் விளங்கப்படுத்துகின்றார். இராவண இராச்சியத்தில் நீங்கள் எந்தச் செயலைச் செய்தாலும் அவை பாவச் செயல்களே ஆகும். சத்தியயுகத்தில் நீங்கள் எந்தச் செயல்களைச் செய்தாலும் அவை நடுநிலையானவை. இங்கே பாவச் செயல்கள் மாத்திரமே செய்யப்படுகின்றன. ஏனெனில் இது இராவண இராச்சியமாகும். சத்தியயுகத்தில் ஐந்து விகாரங்கள் இருப்பதில்லை. ஒவ்வொரு விடயமும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். அது ஒரு விநாடியில் உங்களுக்கு விளங்கப்படுத்தப்படுகின்றது. அவர்கள் ‘ஓம்’ என்பதன் அர்த்தத்தை மிகவும் விபரமாக விளங்கப்படுத்துகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: ஓம் என்றால் நான் ஓர் ஆத்மா, இது எனது சரீரம் ஆகும். இது மிகவும் இலகுவானது! நீங்கள் சந்தோஷ உலகிற்குச் செல்கின்றீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். ஸ்ரீகிருஷ்ண ஆலயமும் சந்தோஷ உலகம் என்றே அழைக்கப்படுகின்றது. அது கிருஷ்ணதாமம் ஆகும். தாய்மார்கள் கிருஷ்ண தாமத்திற்குச் செல்வதற்கு அதிகளவு முயற்சி செய்கின்றார்கள். நீங்கள் இப்பொழுது பக்தி செய்வதில்லை. ஏனெனில் நீங்கள் இந்த ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். வேறு எந்த மனிதரிடமும் இந்த ஞானம் இல்லை. நான் உங்களைத் தூய்மையாக்கிய பின்னர் மீண்டும் சென்று விடுவேன். எனவே, உங்களைத் தூய்மையற்றவர் ஆக்குவது யார்? யாராலும் இதற்கு பதிலளிக்க முடியாது. ஆண்கள், பெண்கள் அனைவருமே சீதைகளான பக்தர்களே. தந்தை அனைவருக்கும் சற்கதி அருள்கின்றார். அனைவருமே இராவணனின் சிறையில் உள்ளனர். இது துன்ப உலகம் ஆகும். தந்தை உங்களைச் சந்தோஷ உலகிற்கு அதிபதிகள் ஆக்குகின்றார். நீங்கள் மாத்திரமே அத்தகைய தந்தையை 5000 வருடங்களின் பின்னர் பார்க்கின்றீர்கள். இலக்ஷ்மியினதும் நாராயணனினதும் ஆத்மாக்கள் இப்பொழுது இந்த ஞானத்தைக் கொண்டுள்ளார்கள். நான் இவ்வாறு (கிருஷ்ணராக) ஒரு குழந்தையாக ஆகி, அதன் பின்னர் வயோதிபர் ஆகுகின்றேன். இவ்வாறாக நான் ஒரு சரீரத்தை நீக்கி இன்னொன்றை எடுப்பேன். வேறு எவரிடமும் இந்த ஞானம் இல்லை. தந்தை கூறுகின்றார்: நீங்கள் அனைவரும் பார்வதிகள். உங்களை அமரத்துவமானவர்கள் ஆக்கி, உங்களை அமரத்துவ உலகிற்கு அழைத்துச் செல்வதற்காக சிவபாபா அமரத்துவக் கதையை உங்களுக்குக் கூறுகின்றார். இது மரண உலகமாகும். பார்வதிகளாகிய நீங்கள் அனைவரும் அமரத்துவப் பிரபுவிடம் அமரத்துவக் கதையைச் செவிமடுக்கின்றீர்கள். நீங்கள் உண்மையிலேயே அவ்வாறு ஆகுகின்றீர்கள். தந்தையை நினைவு செய்வதன் மூலம் ஆத்மாக்களாகிய நீங்கள் அமரத்துவமானவர்கள் ஆகுகின்றீர்கள். அது துன்பத்தின் சுவடே இல்லாததொரு இடமாகும். ஒரு பாம்பு தனது தோலை நீக்கி இன்னொன்றை எடுப்பதைப் போன்று மிகவும் இலகுவாக அங்கே நீங்கள் இன்னொரு சரீரத்தை எடுக்கின்றீர்கள். அந்த உதாரணங்கள் அனைத்தும் இந்நேரத்தையே குறிக்கின்றன. ரீங்காரமிடும் விட்டில் பூச்சிகளின் உதாரணமும் இந்த நேரத்தையே குறிக்கின்றன. பிராமணர்களாகிய நீங்கள் என்ன செய்கின்றீர்கள்? நீங்கள் விகாரம் நிறைந்த பூச்சிகளைத் தேவர்கள் ஆக்குகின்றீர்கள். இது மனிதர்களையே குறிக்கின்றது. ரீங்காரமிடும் விட்டில் பூச்சிகளின் அந்தக் கதை வெறும் உதாரணமே. பிராமணக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தந்தையிடம் இருந்து அமரத்துவக் கதையைச் செவிமடுக்கின்றீர்கள். நீங்கள் இப்போது அமர்ந்திருந்து மற்றவர்களுக்கு இந்த ஞானத்தை ரீங்காரம் இடுகிறீர்கள். இதன் மூலம் அவர்கள் மனிதர்களில் இருந்து சுவர்க்கத்தின் தேவதைகளான, தேவர்களாகவும் ஆகுவார்கள். மன்சரோவர் ஏரியில் மூழ்கி எழுவதால் எவராலும் தேவதைகள் ஆக முடியும் என்பதல்ல. அவை அனைத்தும் பொய்யே ஆகும். நீங்கள் பொய்யையே செவிமடுத்தீர்கள். ஆனால் தந்தை இப்பொழுது உண்மையைக் கூறுகின்றார். தந்தை கூறுகின்றார்: உங்களை ஆத்மா என்று கருதுங்கள். அசரீரியான பரமாத்மாவான பரமதந்தை இந்த வாயினூடாக இந்த ஞானத்தைப் பேசுகின்றார், அதனை உங்கள் காதுகளினூடாகச் செவிமடுக்கின்றீர்கள் என்பதைப் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆக வேண்டும். அதன் பின்னர் கடவுள் யார் என்பதை அவர் உங்களை உணரச் செய்கின்றார். வேறு எவராலும் உங்களை ஆத்ம உணர்வுடையவர் ஆக்க முடியாது. தந்தையைத் தவிர வேறு எவராலும் உங்களை இவ்வாறு ஆக்க முடியாது. ஆத்ம உணர்வுடையவர் ஆகுங்கள் எனத் தந்தையை தவிர வேறு எவராலும் கூற முடியாது: சிவனின் பிறந்தநாளை மக்கள் கொண்டாடுகின்றார்கள். ஆனால், அவரது பிறப்பு எவ்வாறு இடம்பெறுகின்றது என்பதை எவரும் அறியாதுள்ளார்கள். தந்தையே வந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: நான் ஒரு சாதாரண வயோதிப சரீரத்தில் பிரவேசிக்கின்றேன். வேறு எங்கிருந்து பிரம்மா வரமுடியும்? ஒரு தூய்மையற்ற சரீரம் தேவையாகும். அவரால் சூட்சும உலகவாசியான அவ்யக்த பிரம்மாவில் பிரவேசித்து பிராமணர்களை உருவாக்க முடியாது. அவர் கூறுகின்றார்: நான் ஒரு தூய்மையற்ற சரீரத்தில் தூய்மையற்ற உலகிலேயே பிரவேசிக்கின்றேன். ஸ்தாபனை பிரம்மாவின் ஊடாக இடம்பெறுகின்றது என்று நினைவு கூரப்படுகின்றது, இந்த ஞானத்தைப் பெறுபவர்கள் பின்னர் தேவர்கள் ஆகுகின்றார்கள். பிரம்மாவின் படத்தைப் பார்ப்பவர்கள் குழப்பம் அடைகின்றார்கள். இது தாதாவின் படம் என்றே அவர்கள் கூறுகின்றார்கள். பிரஜாபிதா பிரம்மா நிச்சயமாக இங்கேயே இருக்க வேண்டும். அவரால் எவ்வாறு சூட்சும உலகில் மக்களை உருவாக்க முடியும்? பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகளான ஆயிரமாயிரம் பிரம்மாகுமார், பிரம்மாகுமாரிகள் உள்ளனர். இது பொய்யாக இருக்க முடியாது. நாங்கள் சிவபாபாவிடம் இருந்து எங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றோம். அவர் அவ்யக்த பிரம்மா என்று உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. பிரஜாபிதா இந்தப் பௌதீக உலகிலேயே இருக்க வேண்டும். இந்த தூய்மையற்றவர் பின்னர் தூய்மையானவர் ஆகுகின்றார். இதுவே உங்களுக்கும் பொருந்தும். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. ஆத்ம உணர்வுடையவர் ஆகி, உங்கள் காதுகளின் ஊடாக அமரத்துவக் கதையைச் செவிமடுங்கள். இந்த ஞானத்தை ரீங்காரமிட்டு, பிறரை உங்களுக்குச் சமமாக ஆக்குகின்ற சேவையில் மும்முரமாக இருங்கள்.2. தந்தையைப் போன்று ஞானம் நிறைந்தவராகவும் பேரானந்தம் மிக்கவராகவும் இருங்கள். இந்த ஞான அமிர்தத்தைப் பருகுவதுடன், பிறருக்கும் அதனைப் பருகக் கொடுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு மாஸ்ரர் உலகைப் படைப்பவராகி, மாயையின் எந்தவிதமான தடைகளையும் ஒரு விளையாட்டைப் போன்று உணர்வீர்களாக.சிறுவர்கள் தமது குழந்தைப் பருவத்தில் தமது மூத்தவர்களின் முன்னால் ஏதாவது கவனயீனமாகச் சொல்லும்போது அல்லது அத்தகைய செயல்களைச் செய்யும்போது, அந்தக் குழந்தைகளைக் குறைசொல்ல முடியாது, அவர்கள் அப்பாவிச் சிறுவர்கள் என்றே அந்தப் பெரியவர்கள் நம்புவார்கள். அதனால் அவர்கள் அவற்றால் பாதிக்கப்படுவதில்லை. அதேபோல், நீங்கள் உங்களை உலகின் மாஸ்ரர் படைப்பவர்களாகக் கருதினால், மாயையின் எந்தவிதமான தடைகளும் சிறுவர்களின் விளையாட்டுக்களைப் போன்றே இருக்கும். மாயை உங்களின் முன்னால் ஓர் ஆத்மாவினூடாக ஏதாவதொரு வடிவில் - ஒரு பிரச்சனை அல்லது ஒரு தடை அல்லது ஒரு பரீட்சைத்தாள் - வந்தாலும், நீங்கள் பயப்பட மாட்டீர்கள். ஏனென்றால், நீங்கள் அந்த ஆத்மாவை அப்பாவி என்றே கருதுவீர்கள்.
சுலோகம்:
உங்களை அன்பு, சக்தி, ஆன்மீகக் கவர்ச்சியால் நிரப்புங்கள். அனைவரும் உங்களுடன் ஒத்துழைப்பார்கள்.அவ்யக்த சமிக்கை: எரிமலை ஸ்திதியில் இருந்தவண்ணம், சக்திவாய்ந்த நினைவை அனுபவம் செய்யுங்கள்.
இப்போது, ஜ்வாலாமுகி (எரிமலை) ஆகி, உங்களின் அசுர சம்ஸ்காரங்களையும் சுபாவத்தையும் எரியுங்கள். தேவிகளின் ஞாபகார்த்தத்தில், அவர்கள் அசுரர்களை அழிப்பதாகக் காட்டி உள்ளனர். அசுரர்கள் மனிதர்கள் அல்ல, ஆனால் அவர்கள் (தேவிகள்) அசுர சக்திகளையே அழித்தார்கள். இதுவே இந்த நேரத்தில் உங்களின் எரிமலை ரூபத்தின் ஞாபகார்த்தம் ஆகும். இப்போது, இந்த கலியுக உலகம் சம்பூரணமாக எரிந்து போகும் வகையில் யோக அக்கினியை ஏற்றி வையுங்கள்.