03.08.25 Avyakt Bapdada Tamil Lanka Murli 28.03.2006 Om Shanti Madhuban
இந்தத் துன்ப உலகில் இருந்து ஆத்மாக்களை விடுவிப்பதற்கு, உங்களின் மனதினால் செய்யும் சேவையை அதிகரியுங்கள். சம்பூரணமாகவும் முழுமையாகவும் ஆகுங்கள்.
இன்று, சகல பொக்கிஷங்களுக்கும் அதிபதியான பாப்தாதா, எங்கும் உள்ள சகல பொக்கிஷங்களாலும் நிரம்பியுள்ள தனது குழந்தைகளைப் பார்க்கிறார். பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும் சகல பொக்கிஷங்களுக்கும் அதிபதியாக ஆக்கியுள்ளார். அருள்பவர் ஒரேயொருவரே ஆவார். அவர் எல்லோருக்கும் அதே அளவையே வழங்கி உள்ளார். அவர் சிலருக்குக் குறைவாகவும் ஏனையோருக்கு அதிகமாகவும் கொடுக்கவில்லை. ஏன்? தந்தையே முடிவற்ற பொக்கிஷங்களின் அதிபதி ஆவார். பொக்கிஷங்கள் எல்லையற்றவை. இதனாலேயே, ஒவ்வொரு குழந்தையும் இந்த முடிவற்ற பொக்கிஷங்களுக்கு அதிபதி ஆவார். பாப்தாதா ஒவ்வொருவருக்கும் எல்லாவற்றையும் அதே அளவிலேயே வழங்கி உள்ளார். எவ்வாறாயினும், அவற்றைக் கிரகித்தவர்களில், சிலர் சகல பொக்கிஷங்களையும் உள்ளெடுத்துள்ளார்கள். சிலர் தமது கொள்ளளவிற்கு ஏற்ப அவற்றை உள்ளெடுத்துள்ளார்கள். சிலர் முதலாம் இலக்கத்தில் இருக்கிறார்கள். ஏனையோர் வரிசைக்கிரமமாக இருக்கிறார்கள். நீங்கள் ஒவ்வொருவரும் எத்தனை பொக்கிஷங்களை உள்ளெடுத்தீர்களோ, இவற்றின் போதை உங்களின் முகத்திலும் உங்களின் கண்களிலும் தெளிவாகப் புலப்படும். இந்தப் பொக்கிஷங்களால் நிறைந்திருக்கும் ஆத்மாக்களுக்கு, அவர்களின் முகங்களிலும் அவர்களின் கண்களிலும் அவை நிறைந்திருப்பதைக் காண முடிகிறது. பௌதீகமான பொக்கிஷங்களைப் பெற்ற ஓர் ஆத்மாவின் நடத்தையிலும் முகத்திலும் அவர் அந்தப் பொக்கிஷங்களைப் பெற்றுள்ளார் என்பதை எப்படி உங்களால் கூற முடியுமோ, அதேபோல், இந்த அழியாத பொக்கிஷங்களின் போதையும் சந்தோஷமும் தெளிவாகப் புலப்படும். நிரம்பி இருப்பதன் ஆன்மீக போதை உங்களைக் கவலையற்ற சக்கரவர்த்தி ஆக்குகிறது. எங்கே இறை போதை இருக்கிறதோ, அங்கே எந்தவிதமான கவலைகளும் இருக்க முடியாது. நீங்கள் கவலையற்ற சக்கரவர்த்திகள், துன்பம் அற்ற தேசத்தின் சக்கரவர்த்திகள் ஆகுகிறீர்கள். எனவே, நீங்கள் எல்லோரும் இறை பொக்கிஷங்கள் நிறைந்த கவலையற்ற சக்கரவர்த்திகள்தானே? நீங்கள் துன்பமற்ற தேசத்தின் சக்கரவர்த்திகள். உங்களுக்கு ஏதாவது கவலைகள் இருக்கின்றதா? உங்களுக்கு ஏதாவது துன்பம் இருக்கிறதா? என்ன நடக்குமோ அல்லது எப்படி அது நடக்குமோ என்ற எந்தவிதக் கவலைகளும் உங்களுக்கு இல்லை. நீங்கள் திரிகாலதரிசி ஸ்திதியில் ஸ்திரமாக இருப்பவர்கள். என்ன நடந்தாலும் அது நல்லதாகவே இருக்கும், என்ன நடக்க இருக்கிறதோ, அது மிகச் சிறப்பாக இருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஏன்? நீங்கள் சர்வசக்திவான் தந்தையின் சகபாடிகள். நீங்கள் சதா அவருடனேயே இருக்கிறீர்கள். பாப்தாதா சதா உங்களின் இதயத்தில் இருக்கிறார், நீங்கள் சதா தந்தையின் இதய சிம்மாசனத்தில் இருக்கிறீர்கள் என்ற போதையும் பெருமையும் உங்கள் ஒவ்வொருவரிடமும் உள்ளன. எனவே, உங்களிடம் இத்தகைய போதை உள்ளதல்லவா? நீங்கள் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறீர்கள். ஆகவே, உங்களின் எண்ணங்களில் மட்டுமல்ல, ஆனால் உங்களின் கனவுகளிலேனும், துன்பத்தின் சிறிதளவு அலையோ அல்லது சுவடோ இருக்க முடியாது. ஏன்? நீங்கள் சகல பொக்கிஷங்களாலும் நிரம்பி இருப்பவர்கள். நிரம்பி இருக்கும் எதுவும் அசையாது.
எனவே, எங்கும் உள்ள குழந்தைகள் எல்லோருடைய சம்பூரண ஸ்திதியை பாப்தாதா பார்த்தார். பாப்தாதா ஒவ்வொருவரின் சேமிப்புக் கணக்கையும் சோதித்தார். நீங்கள் முடிவற்ற பொக்கிஷங்களைப் பெற்றுள்ளீர்கள். ஆனால், அவற்றை வெறுமனே பயன்படுத்துவதன் மூலம், அந்தப் பொக்கிஷங்களை முடித்து விட்டீர்களா அல்லது நீங்கள் பெற்ற பொக்கிஷங்களைப் பயன்படுத்துவதன் மூலம் அவற்றை அதிகரித்துள்ளீர்களா? ஒவ்வொருவரின் கணக்கிலும் எத்தனை சதவீதம் சேமிக்கப்பட்டுள்ளது? இந்தப் பொக்கிஷங்கள் இந்த நிகழ்காலத்திற்கு மட்டுமல்ல. இந்தப் பொக்கிஷங்கள் எதிர்காலத்திற்கும் உங்களுடன் செல்லப் போகின்றன. நீங்கள் சேமித்தவை மட்டுமே உங்களுடன் செல்லும். எனவே, பாபா சதவீதத்தைப் பார்த்தார். அவர் எதைக் கண்டார்? குழந்தைகள் எல்லோரும் தமது யோகம் மற்றும் கொள்ளளவிற்கேற்ப சேவை செய்கிறார்கள். ஆனால், சேவையின் பலனைச் சேமிப்பதில் ஒரு வேறுபாடு உருவாகிறது. சில குழந்தைகளின் சேமிப்புக் கணக்குகளை பாப்தாதா பார்த்தார். அவர்கள் அதிகளவில் சேவை செய்கிறார்கள். ஆனால் சேவையின் பலனைச் சேமிப்பதன் அடையாளம், சேவை செய்யும் ஆத்மாக்கள் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களில் 100 வீத மதிப்பெண்களைப் பெறுவதேயாகும். மூன்றிலும் 100 மதிப்பெண்கள். அவர்கள் சேவை செய்தார்கள். ஆனால், சேவை செய்யும் வேளையில், அல்லது சேவை செய்து முடிந்தபின்னர், அவர்கள் தமது மனங்களில் தம்முடன் திருப்தியாக இருந்தால், அத்துடன் அவர்கள் யாருக்குச் சேவை செய்தார்களோ, அந்த ஆத்மாக்கள், சேவை செய்யும்போது அவர்களின் சகபாடிகள், அந்தச் சேவை செய்வதைக் கண்டவர்கள் அல்லது கேட்டவர்கள், எல்லோரும் திருப்தியாக இருந்தால், அவர்கள் அந்தப் பலனைச் சேமித்துள்ளார்கள் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும். உங்களுக்குள் அல்லது மற்றவர்களில் திருப்தி இருக்காவிட்டால், சேமிக்கப்பட்ட சதவீதம் குறைந்துவிடும்.
மிகச்சரியான சேவை செய்வதற்கான வழிமுறை என்னவென்று உங்களுக்கு ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. மூன்று விடயங்கள் சரியான முறையில் செய்யப்பட்டால், நீங்கள் சேமிப்பீர்கள். உங்களுக்குக் கூறப்பட்ட விடயங்கள் 1) கருவியாக இருக்கும் உணர்வு. 2) பணிவு உணர்வுகள் 3) அ) தூய சுபாவம் ஆ) தூய வார்த்தைகள். நோக்கம் (உணர்வு), உணர்ச்சிகள், சுபாவம், வார்த்தைகள் - இவற்றில் ஒரு விடயம் குறைவாக இருந்தாலும், உங்களிடம் ஒன்று இருந்து ஏனைய இரண்டும் இல்லாவிட்டால், அல்லது உங்களிடம் இரண்டு விடயங்கள் இருந்து, மூன்றாவது இல்லாவிட்டால், அந்தப் பலவீனம் நீங்கள் சேமிக்கும் சதவீதத்தைக் குறைத்துவிடும். எனவே, நான்கு பாடங்களிலும் உங்களைச் சோதித்துப் பாருங்கள் - கருவி, பணிவு, தூய சுபாவம் மற்றும் தூய வார்த்தைகள். நான் நான்கு பாடங்களிலும் எனது கணக்கில் சேமித்துள்ளேனா? ஏன்? பாபா கூறிய இந்த நான்கு விடயங்களிலும் சில குழந்தைகள் அந்த நான்கு விடயங்களைப் பற்றியும் அதிகளவில் சேவைச் செய்திகளை எழுதுகிறார்கள். ஆனால் அதனுடனான தொடர்பில் அவர்களின் சேமிப்புக் கணக்கு குறைவாக உள்ளதை பாப்தாதா பார்த்துள்ளார்.
ஒவ்வொரு பொக்கிஷத்தையும் சோதித்துப் பாருங்கள். இந்த ஞானம் என்ற பொக்கிஷம் என்றால், அதன் அர்த்தம் - நான் ஞானம் நிறைந்தவராக இருந்தவண்ணம் ஒவ்வோர் எண்ணத்தையும் உருவாக்கினேனா? ஒவ்வொரு செயலையும் செய்தேனா? அது சாதாரணமாக இருக்கவில்லையே? யோகம் என்றால் சகல சக்திகளின் பொக்கிஷக் களஞ்சியம் நிரம்பியுள்ளது என்று அர்த்தம். எனவே, ஒவ்வொரு நாளும் நேர அட்டவணையைச் சோதியுங்கள்: காலத்திற்கேற்பத் தேவைப்படும் சக்தி, அதற்குக் கட்டளை இட்டதும் பெறக்கூடியதாக இருக்கிறதா? மாஸ்ரர் சர்வசக்திவான் என்றால் ஓர் அதிபதி என்று அர்த்தம். காலம் கடந்து சென்றபின்னர், நீங்கள் அந்தச் சக்தியைத் தொடர்ந்து சிந்திப்பதாக இருக்கக்கூடாது. சக்திக்குக் கட்டளை இட்ட வேளையில் அது வெளிப்படாவிட்டால், உங்களால் உங்களின் கட்டளைகளின்படி ஒரு சக்தியைச் செயல்பட வைக்க முடியாவிட்டால், எப்படி நீங்கள் தடைகளில் இருந்து விடுபட்ட ஓர் இராச்சிய உரிமையைக் கோருவீர்கள்? நீங்கள் எத்தனை சக்திகளின் பொக்கிஷங்களைச் சேமித்துள்ளீர்கள்? சரியான வேளையில் உங்களால் பயன்படுத்தக் கூடியதாக இருப்பதே சேமிக்கப்படும். நீங்கள் எதைச் சேமித்துள்ளீர்கள் எனத் தொடர்ந்தும் சோதிக்கிறீர்களா? பாப்தாதா குழந்தைகளான உங்கள் எல்லோரின் மீதும் ஆழ்ந்த அன்பு வைத்துள்ளார். ஒவ்வொரு குழந்தையின் சேமிப்புக் கணக்கும் நிரம்பி இருக்க வேண்டும் என பாப்தாதா விரும்புகிறார். தாரணையிலும்: தாரணையின் அடையாளம், உங்களின் ஒவ்வொரு செயலும் நற்குணங்களால் நிரம்பி இருக்கும். எந்த வேளையில் என்ன நற்குணம் தேவையோ, அது வெளிப்பட்டு, உங்களின் முகத்திலும் உங்களின் நடத்தையிலும் புலப்படும். எந்தவொரு நற்குணம் குறைவாக இருந்தாலும், உதாரணமாக, எதையாவது செய்யும் வேளையில் உங்களுக்கு இலகுத்தன்மை, எளிமை அல்லது இனிமை தேவைப்படுமாக இருந்தால், அப்போது உங்களின் வார்த்தைகளிலும் செயல்களிலும் இலகுத்தன்மை, எளிமை மற்றும் இனிமைக்குப் பதிலாக, சிறிதளவேனும் விசை இருக்குமாயின் அல்லது களைப்பின் காரணத்தால் அந்த இனிமை இல்லாவிட்டால், வார்த்தைகள் அந்தளவிற்கு இனிமையாக இல்லாவிட்டால், உங்களின் முகம் இனிமையாக இல்லாமல் நீங்கள் சீரியஸாக இருந்தால், அதை நற்குணங்கள் நிரம்பியவராக இருத்தல் என்று அழைக்க முடியாது. சூழ்நிலைகள் எத்தகையதாக இருந்தாலும் உங்களின் நற்குணங்கள் என்னவோ, அந்த நற்குணங்கள் மட்டுமே வெளிப்பட வேண்டும். பாபா இப்போது உங்களுக்குச் சுருக்கமாகக் கூறுகிறார்.
அதேபோல், சேவையில்: சேவை செய்யும் சேவையாளரின் சிறந்த அடையாளம், அவர் சதா இலேசாக இருப்பார், அவர் இலேசாகவும் சந்தோஷமாகவும் இருப்பதைக் காண முடியும். சேவையின் பலன் சந்தோஷமே. சேவை செய்யும்போது, உங்களின் சந்தோஷம் மறையுமாக இருந்தால், அது உங்களின் சேவைக் கணக்கில் சேமிக்கப்பட மாட்டாது. நீங்கள் சேவை செய்தீர்கள், உங்களின் நேரத்தைக் கொடுத்தீர்கள். நீங்கள் முயற்சி செய்தீர்கள். அதனால் சிறிதளவு சதவீதம் சேமிக்கப்படும். அது வீணாகிப் போகாது. எவ்வாறாயினும், இருக்க வேண்டிய அளவு சதவீதத்தை நீங்கள் சேமிக்க மாட்டீர்கள். அதேபோல், உறவுமுறைகள் மற்றும் தொடர்புகளைப் பொறுத்தவரை இதன் அடையாளம், ஆசீர்வாதங்கள் என்ற பேறு ஆகும். நீங்கள் யாருடன் தொடர்பில் வருகிறீர்களோ அல்லது உறவுமுறையைக் கொண்டிருக்கிறீர்களோ, அவர்களின் மனங்களில் இருந்து உங்களுக்காக ‘மிகவும் நல்லது!’ என்ற ஆசீர்வாதங்கள் வெளிப்பட வேண்டும். புறத்தே அன்றி, அவர்களின் இதயங்களில் இருந்து வெளிப்படும். அவர்களின் இதயங்களில் இருந்து ஆசீர்வாதங்கள் வெளிப்பட வேண்டும். நீங்கள் அவர்களின் ஆசீர்வாதங்களைப் பெற்றால், ஆசீர்வாதங்களைப் பெறுவது, முயற்சி செய்வதற்கான மிக இலகுவான வழிமுறை ஆகும். சொற்பொழிவுகள் கொடுக்காதீர்கள். ஓகே, உங்களின் மனங்களால் செய்யும் சேவையும் அந்தளவிற்கு சக்திவாய்ந்ததாக இல்லாதிருக்கலாம். புதிய திட்டங்களை எப்படி உருவாக்குவது என்பதும் உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். அது பரவாயில்லை. முயற்சி செய்வதற்கு எல்லாவற்றிலும் மிக இலகுவான வழிமுறை, ஆசீர்வாதங்களைக் கொடுப்பதும் ஆசீர்வாதங்களைப் பெறுவதும் ஆகும். பாப்தாதா குழந்தைகள் பலரின் மனங்களில் உள்ள எண்ணங்களை வாசித்து அறிகிறார். காலத்திற்கும் அவர்களின் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப, சில குழந்தைகள் கூறுகிறார்கள்: தவறு செய்கின்ற ஒருவருக்கு நான் எப்படி ஆசீர்வாதங்களைக் கொடுக்க முடியும்? அவரின் மீது கோபமே ஏற்படும், அப்படி இருக்கும்போது ஒருவரால் எப்படி ஆசீர்வாதங்களைக் கொடுக்க முடியும்? ஆம், கோபத்திற்கும் பல குழந்தைகள் உள்ளன. ஓகே, அந்த நபர் தவறு ஏதோ செய்திருக்கிறார். அவர் தவறானவர். அவர் ஏதோ பிழை செய்திருக்கிறார் என நீங்கள் மிகச்சரியாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள். நீங்கள் நல்லதொரு தீர்மானத்தை எடுத்தது நல்லதே, அவரை நீங்கள் நன்றாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள். எவ்வாறாயினும், புரிந்து கொள்வது ஒரு விடயம். மற்றவர் செய்த தவறான விடயங்களையும் தவறான சூழ்நிலைகளையும் உங்களின் இதயத்தில் எடுத்துக் கொள்வது இன்னொரு விடயம். அதைப் புரிந்து கொள்வதற்கும் அதை உங்களுக்குள் எடுத்துக் கொள்வதற்கும் இடையில் வேறுபாடு உள்ளது. நீங்கள் விவேகியாக இருந்தால், புத்திசாலியான ஒருவர் தனக்குள் தவறான விடயங்களை வைத்திருப்பாரா? அந்த நபர் தவறானவர். நீங்கள் அதை உங்களின் இதயத்தில் அமிழ்த்திக் கொண்டீர்கள். அதாவது, நீங்கள் அந்தப் பிழையான விடயத்தை உங்களுக்குள் வைத்திருந்து, அதைப் பராமரித்தீர்கள். அதைப் புரிந்து கொள்வது ஒரு விடயம். அதை உங்களுக்குள் எடுத்துக் கொள்வது வேறொரு விடயம். புத்திசாலியாக இருப்பது நல்லதே. அப்படியே இருங்கள். ஆனால், ‘இவர் எப்படியும் இப்படித்தான்’ என்பதை உங்களுக்குள் எடுத்துக் கொள்ளாதீர்கள். அது உங்களுக்குள் அதை எடுத்துக் கொள்வதாகும். அந்த நோக்கைக் கொண்டிருந்த வண்ணம் மற்றவர்களுடன் பழகுவது, பொது அறிவிற்குரிய செயல் அல்ல. எனவே, பாப்தாதா இதைச் சோதித்தார். இப்போது, காலம் நெருங்கி வரப் போவதில்லை. நீங்கள் அதை நெருக்கமாகக் கொண்டு வரவேண்டும். சிலர் கேட்கிறார்கள்: எங்களுக்கு ஒரு சிறிய சமிக்கை கொடுங்கள்: அதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்? 10 வருடங்களா? 20 வருடங்களா? அதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்?
எனவே, பாப்தாதா குழந்தைகளான உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறார். நீங்கள் தந்தையிடம் பல கேள்விகளைக் கேட்கிறீர்கள். எனவே, இன்று, தந்தை உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறார். யார் காலத்தை நெருக்கமாகக் கொண்டு வரக்கூடியவர்கள்? அது நாடகத்தில் உள்ளது, ஆனால் யார் அதற்குக் கருவிகள்? உங்களிடம் ஒரு பாடல் உள்ளது: யாராவது அதைத் தடுக்க முயற்சி செய்தாலும், எவராலும் காலை வருவதைத் தடுக்க முடியுமா? உங்களிடம் இந்தப் பாடல் உள்ளதல்லவா? எனவே, யார் அந்தக் காலையைக் கொண்டு வருவீர்கள்? விநாசத்திற்காக வேலை செய்பவர்கள், விநாசத்தை ஏற்படுத்துவதற்கான பரிதவிப்புடன் இருக்கிறார்கள். ஆனால், மீள் புதுப்பித்தலைச் செய்பவர்கள் அதே அளவிற்குத் தயாரா? பழைய உலகம் அழிக்கப்பட்டு, புதிய உலகம் இன்னமும் தயாராக இல்லாவிட்டால் என்ன நடக்கும்? இதனாலேயே, பாப்தாதா இப்போது தந்தையின் ரூபத்திற்குப் பதிலாக ஆசிரியரின் ரூபத்தை எடுத்துள்ளார். உங்களுக்கு வீட்டுவேலை கொடுக்கப்பட்டுள்ளது, அல்லவா? யார் வீட்டுவேலை கொடுப்பார்கள்? ஓர் ஆசிரியர். இறுதியில், சற்குருவின் பாகம் உள்ளது. எனவே, உங்களையே கேளுங்கள்: எந்தளவிற்கு நீங்கள் உங்களின் சம்பூரணமான, முழுமையான ஸ்திதியை உருவாக்கி உள்ளீர்கள்? நீங்கள் சத்தத்திற்கு அப்பால் செல்கின்ற மற்றும் சத்தத்திற்குள் வருகின்ற ஸ்திதிகள் இரண்டிலும் சமமாக இருக்கிறீர்களா? நீங்கள் விரும்பியபோது சத்தத்திற்கு வருவது இலகுவாக இருப்பதைப் போல், நீங்கள் விரும்பியபோது, விரும்பியபடி உங்களால் சத்தத்திற்கு அப்பால் செல்ல முடிகிறதா? உங்களால் ஒரு விநாடியில் சத்தத்திற்குள் வரமுடியும். எனவே, ஒரு விநாடியில் சத்தத்திற்கு அப்பால் செல்கின்ற பயிற்சி உங்களுக்கு உள்ளதா? பௌதீகமாக, உங்களின் சரீரத்தால் உங்களால் நீங்கள் விரும்பிய இடத்திற்கு, விரும்பிய வேளையில் உங்களின் மனதாலும் புத்தியாலும் வந்து செல்ல முடிகிறதா? இறுதியில், தாம் விரும்பியதை, விரும்பியபடி, தமது கட்டளைகளின்படி ஒரு விநாடியில் செய்வதில் வெற்றி பெறுபவர்கள், சித்தி அடைவதற்கான மதிப்பெண்களைப் பெறுவார்கள். விஞ்ஞானிகளும் இதைச் செய்வதற்கு முயற்சி செய்கிறார்கள்: எதுவும் இலேசாக இருக்க வேண்டும். அத்துடன் அதற்கு மிகச் சிறிதளவு நேரமே எடுக்க வேண்டும். எனவே, உங்களின் ஸ்திதி அப்படி இருக்கிறதா? நீங்கள் நிமிடங்கள் அல்லது விநாடிகள் என்ற ஸ்திதியை அடைந்து விட்டீர்களா? நீங்கள் எங்கே வந்து அடைந்துள்ளீர்கள்? எப்படி வெளிச்சவீடாலும் சக்தி வீடாலும் ஒரு விநாடியில் அதன் ஆளியை நீங்கள் போட்ட உடனேயே அதன் ஒளியைப் பரப்பக் கூடியதாக இருக்கிறதோ, அப்படியே, உங்களாலும் ஒரு விநாடியில் வெளிச்சவீடாகி உங்களின் ஒளியைப் பரப்ப முடியுமா? நீங்கள் ஓரிடத்தில் அமர்ந்திருக்கும் போது, உங்களின் பௌதீகக் கண்களால் உங்களால் தொலைவில் இருப்பதைப் பார்க்க முடியும், அல்லவா? உங்களின் பார்வையைத் தொலைவிற்குச் செலுத்த முடியும் அல்லவா? அதேபோல், ஓரிடத்தில் அமர்ந்த வண்ணம், ஆசீர்வாதங்களை அருள்பவராகவும் பாக்கியத்தை அருள்பவராகவும் ஆகி, உங்களின் மூன்றாம் கண்ணைப் பயன்படுத்தி, மற்றவர்களை ஒரு கணப் பார்வையால் அப்பால் எடுத்துச் செல்ல முடியுமா? இவை எல்லாவற்றிலும் நீங்கள் உங்களைச் சோதிக்கிறீர்களா? உங்களின் மூன்றாம் கண் மிகச் சுத்தமாகவும் தெளிவாகவும் உள்ளதா? சிறிதளவு பலவீனம் இருந்தாலும் முன்னரே அவை அனைத்திற்குமான காரணம் என்னவென்று உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது: ‘நான்’ மற்றும் ‘எனது’ என்ற எல்லைக்கு உட்பட்ட பற்று. உங்களுக்கு ‘நான்’ என்ற உணர்வினைப் பற்றித் தெளிவாகக் கூறப்பட்டது. உங்களுக்கு வீட்டுவெலையும் கொடுக்கப்பட்டது. நீங்கள் இரண்டு ‘நான்’ என்பவற்றை முடித்து, ஒரு ‘நான்’ என்பதை வைத்திருக்க வேண்டும். நீங்கள் எல்லோரும் இந்த வீட்டு வேலையைச் செய்கிறீர்களா? இந்த வீட்டுவெலையில் வெற்றி பெற்றவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள். நீங்கள் வெற்றி பெற்றீர்களா? பாப்தாதா எல்லோரையும் பார்த்தார். தைரியத்தைக் கொண்டிருங்கள். பயப்படாதீர்கள். நல்லது. அப்போது நீங்கள் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். மிகச் சிலரே இருக்கிறீர்கள். அதை நீங்கள் செய்திருந்தால், உங்களின் கைகளை உயர்த்துங்கள். அவர்களின் கைகளை தொலைக்காட்சியில் காட்டுங்கள். மிகச்சிலரே உங்களின் கைகளை உயர்த்தியுள்ளீர்கள். இப்போது நாம் செய்ய வேண்டும்? நீங்கள் எல்லோரும் உங்களையிட்டு வியப்படைகிறீர்கள்.
அச்சா. மற்றைய வீட்டுவேலை, கோபத்தைத் துறத்தல் என்பதாகும். அது இலகுவானதுதானே? யார் கோபத்தைத் துறந்துள்ளீர்கள்? இந்த நாட்களின் போது யாருக்குக் கோபமே வரவில்லை? (பலர் இதற்காகத் தமது கைகளை உயர்த்தினார்கள்). இதில் மேலும் சிலர் இருக்கிறார்கள். கோபமே கொள்ளாதவர்கள் - உங்களுக்கு நெருக்கமாக வாழ்பவர்களிடம் உங்களைப் பற்றிக் கேட்கப்படும். பலர் உள்ளனர். நீங்கள் கோபப்படவில்லையே? உங்களின் எண்ணங்களில், உங்களின் மனதில், நீங்கள் கோபம் கொள்ளவில்லையே? ஓகே. எனினும், பாராட்டுக்கள்! உங்களின் மனதில் உங்களுக்குக் கோபம் ஏற்பட்டும் வார்த்தைகளில் கோபம் வராவிட்டால், அதற்காகப் பாராட்டுக்கள்! மிகவும் நல்லது.
எனவே, பெறுபேற்றுக்கேற்ப, ஸ்தாபனைப் பணியோ, உங்களை நிரம்பியவர் ஆக்கி ஆத்மாக்கள் எல்லோருக்கும் முக்தியின் ஆஸ்தியை ஆத்மாக்கள் எல்லோருக்கும் கொடுப்பது நிறைவேறி உள்ளதா என உங்களால் பார்க்க முடியும். உங்களை ஜீவன்முக்தி சொரூபமாக்கி ஆத்மாக்கள் எல்லோரையும் அவர்களின் முக்திக்கான ஆஸ்தியைக் கோரச் செய்வது - இதுவே ஸ்தாபனைப் பணியைச் செய்யும் ஆத்மாக்களின் அதி மேன்மையான செயலாகும். இதனாலேயே, பாப்தாதா கேட்கிறார்: நீங்கள் சகல பந்தனங்களில் இருந்தும் விடுபட்டிருக்கும் ஸ்திதியை அடைந்து, சங்கமயுகத்தில் ஜீவன்முக்தி வாழ்க்கை வாழப் போகின்றீர்களா? அல்லது அந்த ஸ்திதியை சத்தியயுகத்தில்தான் அடையப் போகின்றீர்களா? நீங்கள் சங்கமயுகத்தில் சம்பூரணம் அடையப் போகின்றீர்களா அல்லது அங்கும் நீங்கள் இராஜயோகத்தைக் கற்கப் போகின்றீர்களா? இங்கேயே நீங்கள் சம்பூரணம் ஆகவேண்டும். இங்கேயே நீங்கள் முழுமை அடைய வேண்டும். சங்கமயுகத்தின் நேரமே, எல்லாவற்றிலும் மிகப் பெரிய பொக்கிஷம் ஆகும். எனவே, காலை தோன்றுவது அதை நிறுத்த முயற்சி செய்யும் எவராலும் நிறுத்தப்பட்டு விட்டதா? பேசுங்கள்!
ஆகவே, பாப்தாதா எதை விரும்புகிறார்? குழந்தைகளான நீங்கள் தந்தையின் நம்பிக்கைத் தீபங்கள் ஆவீர்கள். எனவே, உங்களின் கணக்கை மிக நன்றாகச் சோதித்துப் பாருங்கள். பாபா சில குழந்தைகளைக் கண்டார்: அவர்கள் மிகவும் சௌகரியமானவர்கள், தமது சொந்த சௌகரியத்துடன் செயல்படும் சௌகரியத்தின் அதிபதிகள். (கவலையற்றவர் - மௌஜிரம்). என்ன நடக்கிறதோ, அது நல்லதே. ஓகே, இப்போது நாம் வாழ்க்கையை இரசிப்போம். யார் சத்தியயுகத்தைப் பார்க்கப் போகிறார்கள்? யாருக்குத் தெரியும்? சேமிப்புக் கணக்கில், இத்தகைய சௌகரியத்தின் அதிபதிகளாக இருக்கும் சில குழந்தைகளை பாபா கண்டார். நாம் வாழ்க்கையை இரசிப்போம். அவர்கள் மற்றவர்களுக்கும் சொல்கிறார்கள்: நீங்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்? வாழ்க்கையை இரசியுங்கள். உண்டு, குடித்து, களிப்பாக இருங்கள்! வாழ்க்கையை இரசித்து வாழுங்கள். ஆகவே, தந்தையும் கூறுகிறார்: இரசித்து வாழுங்கள். நீங்கள் சிறிதளவுடன் திருப்திப்படுபவர்களாக இருந்தால், அந்தளவுடன் சந்தோஷமாக இருங்கள். அந்த அழிகின்ற வசதிகளின் களிப்பு தற்காலிகமானது. நீங்கள் நிரந்தரமான களிப்பைக் கைவிட்டு, தற்காலிக வசதிகளின் களிப்பு வேண்டும் என நினைத்தால், பாப்தாதாவால் என்ன சொல்ல முடியும்? அவர் உங்களுக்கு ஒரு சமிக்கை கொடுப்பார். வேறு என்னதான் அவரால் செய்ய முடியும்? வைரங்களின் சுரங்கத்திற்குச் செல்லும் ஒருவர் இரண்டு வைரங்களுடன் மட்டும் சந்தோஷம் அடைந்தால் அதை நீங்கள் என்னவென்று சொல்வீர்கள்? அதனால், அப்படி இருக்காதீர்கள். அதீந்திரிய சுகத்தின் களிப்பெனும் ஊஞ்சலில் ஆடுங்கள். அழியாத பேறுகளின் களிப்பெனும் ஊஞ்சலில் ஆடுங்கள். நாடகத்தைப் பாருங்கள். மாயையின் பாகமும் தனித்துவமானது. இந்த வேளையில், முன்னர் இருந்திராத இத்தகைய வசதிகள் தோன்றியுள்ளன. எவ்வாறாயினும், உங்களின் முன்னால் ஆன்மீக முயற்சிகளைச் செய்து, எந்தவிதமான அந்த வசதிகள் எதுவும் இல்லாமல் சேவை செய்த உதாரணங்களும் இருக்கிறார்கள். அப்போது அந்த வசதிகள் ஏதாவது இருந்ததா? எனினும் எத்தனை சேவைகள் இடம்பெற்றன? குறைந்தபட்சம் தரம் வெளிப்பட்டது. ஆதி இரத்தினங்கள் குறைந்தபட்சம் தயார் ஆகினார்கள். அந்த வசதிகள் கவர்ச்சிகரமானவை. வசதிகளைப் பயன்படுத்துவது தவறு எனச் சொல்லவில்லை. ஆனால் உங்களின் ஆன்மீக முயற்சியை மறந்து, வசதிகளில் மட்டும் ஈடுபட்டிருந்தால், அது தவறு என பாப்தாதா கூறுகிறார். வசதிகள், உங்களின் வாழ்க்கையில் பறக்கும் ஸ்திதிக்கான அடிப்படை கிடையாது. ஆன்மீக முயற்சியே அதற்கான அடிப்படை ஆகும். ஆன்மீக முயற்சிக்குப் பதிலாக, வசதிகளை நீங்கள் உங்களின் ஆதாரம் ஆக்கினால் அதன் பெறுபேறு என்னவாக இருக்கும்? ஆன்மீக முயற்சி அழியாதது. எனவே, பெறுபேறு என்னவாக இருக்கும்?
பாப்தாதா எங்கும் இருந்து சேவைச் செய்திகள், கடிதங்கள், குழந்தைகளின் முயற்சி பற்றிய கடிதங்கள், அவர்களின் அன்பு அனைத்தையும் பெற்றுள்ளார். நாம் இதைச் செய்வோம், நாம் அதைச் செய்வோம் எனக் குழந்தைகளின் செய்திகள் ஊக்கமும் உற்சாகமும் நிரம்பி இருப்பதைக் கேட்கும்போது பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். இப்போது, உங்களிடம் உள்ள தைரியத்திற்கும் ஊக்கத்திற்கும் உற்சாகத்திற்கும் மீண்டும் மீண்டும் கவனம் செலுத்தி, அதை நடைமுறை வடிவத்தில் போடுங்கள். இவையே உங்கள் எல்லோருக்கும் பாப்தாதாவின் இதயத்தில் இருந்து கிடைக்கும் ஆசீர்வாதங்கள் ஆகும்.
தமது எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள், உறவுமுறைகள், தொடர்புகளில் நிரம்பி இருக்குப் போகும் எங்கும் உள்ள மேன்மையான ஆத்மாக்களுக்கும், எப்போதும் தங்களையே பார்க்கின்ற சுயதரிசன சக்கரதாரிக் குழந்தைகளுக்கும் தமது திடசங்கற்பத்தால் மாயையை வென்றவர்களாகி, தங்களைத் தந்தைக்கு வெளிப்படுத்துபவர்களுக்கும் தந்தையை உலகிற்கு வெளிப்படுத்துகின்ற சேவை செய்கின்ற, ஞானம் நிறைந்தவர்களான, வெற்றி நிறைந்தவர்களான குழந்தைகளுக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும். இதயபூர்வமான பலமில்லியன் மடங்குகள் ஆசீர்வாதமும் நமஸ்தேயும். நமஸ்தே.
ஆசீர்வாதம்:
நீங்கள் இதயங்களுக்கு சௌகரியம் அளிக்கும் திலாராமால் நேசிக்கப்பட்டு, நேர்மையான, சுத்தமான இதயத்தைக் கொண்டிருப்பதன் அடிப்படையில் முதலாம் இலக்கத்தைக் கோருவீர்களாக.இதயங்களுக்குச் சௌகரியம் அளிக்கும் தந்தை, நேர்மையான இதயங்களைக் கொண்ட குழந்தைகளை மட்டுமே நேசிக்கிறார். ஒருவருக்கு உலகியல் அறிவு இல்லாவிட்டாலும் நேர்மையான, சுத்தமான இதயத்தைக் கொண்டிருந்தால், அவர் முதல் இலக்கத்தைக் கோருவார். தந்தை உங்களுக்குப் பெரிய புத்திகளைக் கொடுத்துள்ளார். அவற்றினூடாகப் படைப்பவரை அறிந்து கொள்வதன் மூலம் நீங்கள் படைப்பின் ஆரம்பம், மத்தி, முடிவின் ஞானத்தையும் அறிந்துள்ளீர்கள். எனவே, இலக்கங்கள் நேர்மையான, சுத்தமான இதயங்களைக் கொண்டிருப்பதன் அடிப்படையிலேயே பெறப்படுகின்றன. சேவையின் அடிப்படையில் அல்ல. உண்மையான இதயத்துடன் செய்யப்படும் சேவை, இதயங்களில் ஓர் விளைவை ஏற்படுத்தும். புத்திசாலிகள் பெயரைச் சம்பாதிப்பார்கள். ஆனால் இதயத்தைக் கொண்டிருப்பவர்கள் ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள்.
சுலோகம்:
எல்லோருக்காகவும் தூய எண்ணங்களையும் நல்லாசிகளையும் கொண்டிருத்தல் என்றால் உண்மையான ஈடேற்றத்தைக் கொடுப்பதாகும்.அவ்யக்த சமிக்கை: ஓர் இலகு யோகி ஆகுவதற்கு, இறையன்பை அனுபவம் செய்யுங்கள்.
சதா அன்பிலே அமிழ்ந்திருப்பதுடன் அன்பிலே மூழ்கி இருக்கும் குழந்தைகளின் பிரகாசத்தின் கதிர்கள், போதை மற்றும் அனுபவம் மிகவும் சக்திவாய்ந்தவை. அதனால் அவர்களை அணுகும் ஒரு பிரச்சனையும் மிகத் தொலைவில் இருப்பதுபோல் தோன்றும். எந்தவொரு பிரச்சனையும் யோகிகளைப் பார்ப்பதற்குத் தமது கண்களையே உயர்த்த முடியாதது போல் இருக்கும். அவர்கள் எந்த வகையான முயற்சியும் செய்ய வேண்டியதில்லை.