03.09.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, பெயரிற்கும், ரூபத்திற்கும் அப்பாற்பட்டது எதுவுமே இல்லை. ஆத்மாக்களும், பரமாத்மாவும் கூட பெயரிற்கும், ரூபத்திற்கும் அப்பாற்பட்டிருக்க முடியாது. அவர்களில் அழிவற்ற பாகங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கேள்வி:
சிவபாபாவைக் கள்ளங்கபடமற்ற பிரபுவாகவே அனைவரும் நினைவு செய்கின்றனர். அவர் ஏன் கள்ளங்கபடம் அற்றவர் என்று அழைக்கப்படுகின்றார்?

பதில்:
ஏனெனில், தந்தை மாத்திரமே கல்லுப்புத்தி உடையவர்களையும், நற்குணங்கள் அற்றவர்களையும், கூன்முதுகு உடையவர்களையும் ஈடேற்றுகின்றார். அவர் அவர்களுக்குச் சுவர்க்க இராச்சியம் என்ற ஆஸ்தியைக் கொடுக்கின்றார். தந்தையையிட்டு, அவர் சந்தோஷம், துன்பம் இரண்டையும் கொடுப்பதாக மக்கள் கூறுகின்றனர், ஆனால் பாபா கூறுகின்றார்: நான் குழந்தைகளான உங்களுக்காகச் சந்தோஷ இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றேன். நான் துன்பத்தை நீக்கிச் சந்தோஷத்தை அருள்பவர் என்று அழைக்கப்படுகின்றேன். தந்தையாகிய நான் எவ்வாறு எனது குழந்தைகளுக்குத் துன்பத்தைக் கொடுக்க முடியும் எனச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

பாடல்:
தூரதேச வாசி, அந்நிய தேசத்திற்கு வந்துள்ளார்.

ஓம் சாந்தி.
ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் பாடலைக் கேட்டீர்கள், அதாவது, ஆத்மாக்களாகிய நீங்கள் தூரதேசத்துப் பயணி வந்துள்ளார் என்ற பாடலை உங்கள் சரீரத்தின் பௌதீக அங்கங்களினூடாக, உங்கள் செவிகளினூடாகக் கேட்டீர்கள். நீங்கள் அனைவரும் பயணிகள், அல்லவா? மனித ஆத்மாக்கள் அனைவரும் பயணிகளே. ஆத்மாக்களுக்கு இங்கே வீடு இல்லை; ஆத்மாக்கள் அசரீரியானவர்கள். அசரீரி ஆத்மாக்கள் அசரீரி உலகிலேயே வசிக்கின்றனர். அது அசரீரி ஆத்மாக்களின் வீடு, தேசம் அல்லது உலகம் எனக் கூறப்படுகின்றது. இது சரீரங்களிலுள்ள ஆத்மாக்களின் உலகம் என்று அழைக்கப்படுகின்றது. அது ஆத்மாக்களின் உலகமாகும். ஆத்மாக்கள் இங்கு வந்து, சரீரங்களில் பிரவேசித்ததும், அவர்கள் அசரீரியானவர்களில் இருந்து சரீரதாரிகள் ஆகுகின்றனர். ஆத்மாக்களுக்கு ஒரு வடிவம் இல்லை என்றில்லை; அவர்களுக்கு நிச்சயமாக ஒரு வடிவமும், பெயரும் உள்ளன. அத்தகையதொரு சின்னஞ்சிறிய ஆத்மா இச்சரீரத்தின் மூலம் அத்தகைய பெரியதொரு பாகத்தை நடிக்கின்றார். ஒவ்வோர் ஆத்மாவிலும் நடிப்பதற்கென ஒரு பாகம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு பதிவு ஒரு தடவை பதிவுசெய்யப்பட்டு விட்டால், அதை மீண்டும் மீண்டும் எத்தனை தடவைகள் நீங்கள் போட்டாலும், அதே பதிவே வெளியாகும். அதேபோன்று, சரீரத்திலுள்ள ஆத்மாவும் ஒரு பதிவே ஆவார். அவரில் 84 பிறவிகளின் முழுப் பாகமும் பதிவாகி உள்ளது. ஆத்மாக்கள் அசரீரியானவர்களாக இருப்பது போன்று, தந்தையும் அசரீரியானவரே. அவர் பெயரிற்கும், ரூபத்திற்கும் அப்பாற்பட்டவர் எனச் சில சந்தர்ப்பங்களில், சில சமயநூல்களில் அவர்கள் எழுதியுள்ளனர். எவ்வாறாயினும், ஒரு பெயரோ அல்லது ரூபமோ இன்றி எதுவுமே இருக்க முடியாது. ஆகாயம் ஒரு வெளி; அதற்கும் ஒரு பெயரும், ரூபமும் உள்ளன. பெயரோ அல்லது ரூபமோ இன்றி, எதுவுமே இல்லை. பரமதந்தை பெயரிற்கும், ரூபத்திற்கும் அப்பாற்பட்டவர் என மக்கள் எண்ணுகின்றார்கள். அவருக்கென ஒரு பெயர் இருந்திராது விட்டால், அவர் ஒரு ரூபத்தையோ அல்லது தேசத்தையோ கொண்டிருந்திருக்க மாட்டார். அவ்வாறாயின், எதுவுமே இருந்திருக்க மாட்டாது. “ஓ தூரதேச வாசியான பரமாத்மாவான, பரமதந்தையே!” என அவர்கள் அழைக்கின்றனர். ஆத்மாக்கள் தூரதேசத்தில் வசிக்கின்றனர்; இது இராம இராச்சியம், இராவண இராச்சியம் என்ற இரு இராச்சியங்களைக் கொண்ட பௌதீக உலகமாகும். அரைக் கல்பத்திற்கு இராம இராச்சியமும், அரைக் கல்பத்திற்கு இராவண இராச்சியமும் உள்ளன. இறை இராச்சியம் சத்திய யுகத்துடன் ஆரம்பம் ஆகுகின்றது எனக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. பரமாத்மா பரமதந்தையே இறை இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றார். அவர் ஒருபொழுதும் இராவண இராச்சியத்தை ஸ்தாபிப்பதில்லை. ஒரு தந்தை எப்பொழுதாவது தனது குழந்தைகளுக்காகத் துன்ப இராச்சியத்தை ஸ்தாபிப்பாரா? கடவுளே சந்தோஷத்தையும் துன்பத்தையும் கொடுப்பதாக அவர்கள் கூறுகின்றனர். தந்தை கூறுகின்றார்: நான் எவ்வாறு எனது குழந்தைகளுக்குத் துன்பத்தைக் கொடுக்க முடியும்? எனது பெயரே துன்பத்தை நீக்கிச் சந்தோஷத்தைக் கொடுப்பவர் என்பதாகும். அது மக்களின் தவறாகும். கடவுள் ஒருபொழுதும் துன்பத்தைக் கொடுக்க மாட்டார். இந்நேரத்தில் இது துன்ப தாமம் ஆகும். இராவண இராச்சியத்தில் அரைக் கல்பத்திற்குத் துன்பமே உள்ளது; அதில் எள்ளளவு சந்தோஷம் கூட கிடையாது. சந்தோஷ தாமத்தில் ஒருபொழுதும் எவ்விதத் துன்பமும் இருப்பதில்லை. தந்தையே சுவர்க்கத்தைப் படைப்பவர். நீங்கள் இப்பொழுது சங்கம யுகத்தில் இருக்கின்றீர்கள். எவருமே இதைப் புதிய உலகம் என்று அழைக்க மாட்டார்கள். புதிய உலகம் சுவர்க்கம் என அழைக்கப்படுகின்றது. அதே உலகம் பின்னர் பழைய உலகம் ஆகுகின்றது. புதிதாக இருந்த ஒன்று பழையதாகவும், தீயதாகவும் காணப்படும்பொழுது, அது அழிக்கப்பட வேண்டும். மக்கள் நஞ்சையே (விகாரம்) சந்தோஷம் எனக் கருதுகின்றனர். நான் ஏன் அமிர்தத்தைத் துறந்து நஞ்சை அருந்த வேண்டும்? எனக் கூறப்படுகின்றது. இங்கு எண்ணற்ற திருடர்கள் உள்ளனர் என்று குருநானக்கினால் பேசப்பட்ட வார்த்தைகளும் கிராந்தில் உள்ளன. அவர்கள் தந்தையின் புகழையும் பாடுகின்றனர்: நீங்கள் வந்து எதைச் செய்தாலும், அது நன்மைக்கே. இல்லாவிடில், இராவண இராச்சியத்தில் மக்கள் தொடர்ந்தும் தீய செயல்களையே செய்வார்கள். தந்தை மாத்திரமே வந்து அழுக்கான ஆடைகளைக் கழுவுகின்றார். கிராந்தில் பல விடயங்கள் எழுதப்பட்டுள்ளன. சிந்தி மக்கள் கிராந்த் சமயநூலை வைத்திருக்கின்றனர், எனினும் அவர்கள் சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்களல்ல. அவர்கள் ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்கள். சீக்கியர்களின் குருநானக் தாடியையும், நீண்ட தலைமுடியையும் கொண்டிருந்தார். ஆகவே சீக்கியர்கள் அனைவரும் தாடியையும், நீண்ட தலைமுடியையும் கொண்டிருக்க வேண்டும். இந்நாட்களில் அவர்கள் தாடி வைத்திருப்பதில்லை; அவர்கள் மிகவும் நாகரிகமானவர்களாகி விட்டார்கள். உண்மையில் அவர்கள் (தங்களது தலைவரை) பின்பற்ற வேண்டும். அவர்கள் குருநானக்கின் சீடர்கள் ஆதலால், அவர்கள் அவரைப் பின்பற்ற வேண்டும். குருநானக் வந்து, 500 வருடங்களாகி விட்டன என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். அவர் மீண்டும் எப்பொழுது வருவார்? உங்களால் அதை நேரடியாகவே கூறமுடியும். எவரிடமாவது கேளுங்கள்: குருநானக் மீண்டும் எப்பொழுது வருவார் என்று எங்களுக்குக் கூறுங்கள். ‘அவரது ஆத்மா ஒளியுடன் இரண்டறக் கலந்து விட்டதால், அவரால் எவ்வாறு மீண்டும் வரமுடியும்?’ என அவர்கள் கூறுவார்கள். இன்றிலிருந்து 4500 வருடங்களின் பின்னர் அவர் மீண்டும் வருவார் என நீங்கள் கூறுவீர்கள். முழு உலகினதும் வரலாறினதும், புவியியலினதும் சக்கரம் உங்கள் புத்திகளில் சுழல்கின்றது. புத்தர், கிறிஸ்து போன்ற ஏனைய சமயத்தவர்கள் அனைவரும் இப்பொழுது தமோபிரதானாகவும் இடுகாட்டிலும் உள்ளனர் எனக் கூறப்படும். இது கணக்குத் தீர்க்கும் காலம் என்று அழைக்கப்படுகின்றது. இது மனிதர்கள் அனைவரும் மரணித்து விட்டதைப் போல உள்ளது, அனைவரின் ஒளியும் அணைந்து போய் விட்டதைப் போன்றுள்ளது. தந்தை அனைவரையும் விழித்தெழச் செய்யவே வருகின்றார். காமச் சிதையில் அமர்ந்ததால், எரிந்து போயுள்ள குழந்தைகள் மீது அவர் அமிர்தத்தைப் பொழிகின்றார்; அவர் அவர்களை விழித்தெழச் செய்து, தன்னுடன் திரும்பவும் அழைத்துச் செல்கின்றார். மாயை அவர்களைக் காமச்சிதையில் அமர்த்தி, இடுகாட்டில் புதைத்து விட்டாள். அவர்கள் அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கின்றனர். தந்தை இப்பொழுது அமிர்தத்தை உங்கள் மீது தெளிக்கின்றார். இதனாலேயே அமிர்தசரஸ் என்ற பெயர் உள்ளது. தந்தை வந்து அமிர்தத்தைத் தெளிக்கின்றார். இந்த ஞான அமிர்தத்திற்கும், தண்ணீருக்கும் இடையில் அத்தகையதொரு வேறுபாடு உள்ளது. சீக்கியர்கள் பெரும் வைபவம் ஒன்றைக் கொண்டாடும் பொழுது, பெருமளவு பகட்டுடன் அந்தக் குளத்தைச் சுத்தப்படுத்துகின்றார்கள். அவர்கள் அதிலிருந்து அசுத்தம், சேறு அனைத்தையும் அகற்றுகின்றார்கள். இதனாலேயே அவர்கள் அமிர்த ஏரியான, அமிர்தசரஸ் என்ற பெயரை வைத்துள்ளனர். குருநானக்சாகிப் ஞானக்கடல் அல்லர். அவரும் தந்தையையே புகழ்ந்தார். அவரே கூறினார்: கடவுள் அசரீரியானவரும், சத்தியமானவரும், எப்பொழுதும் உண்மையே பேசுபவரும் ஆவார். சத்திய நாராயணனைப் பற்றிய கதை உள்ளது. சிந்தியில் வாழ்பவர்கள் வெளிநாடு செல்ல நேரிடும் பொழுது, தாங்கள் செல்வதற்கு முன்னர், தங்களின் இடங்களில் சத்திய நாராயணனின் கதையைக் கூறுகின்ற, சமய ஒன்றுகூடலை ஏற்பாடு செய்கின்றார்கள். சத்திய நாராயணனின் கதையைக் கேட்டு விட்டு, வெளிநாடு செல்லும் பொழுது, தங்கள் பயணம் பாதுகாப்பாக இருக்கும் என அவர்கள் நம்புகின்றனர். அமரத்துவ கதையும், மூன்றாவது கண்ணின் கதையும் உள்ளன. பக்தி மார்க்கத்தில் நீங்கள் பல கதைகளைச் செவிமடுத்தீர்கள். சங்கரர் பார்வதிக்குக் கதையைக் கூறியதாக அவர்கள் கூறுகின்றார்கள். அவர் சூட்சும உலகவாசி ஆவார். அவர் அங்கு எந்தக் கதையைக் கூறுவார்? தந்தை இங்கிருந்து இவ்விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். உண்மையில் நான் உங்களுக்கு அமரத்துவக் கதையைக் கூறி, உங்களை அமரத்துவ உலகிற்கு அழைத்துச் செல்லவே வந்துள்ளேன். நான் உங்களை மரண பூமியிலிருந்து அமரத்துவப் பூமிக்கு அழைத்துச் செல்கின்றேன். பார்வதிக்குச் சூட்சும லோகத்தில் கதை கூறுமளவிற்கு, பார்வதி அங்கு என்ன குற்றம் செய்தார்? நீங்கள் ஒரு சாதாரண ஆணிலிருந்து நாராயணனாகவும், சாதாரணப் பெண்ணில் இருந்து இலக்ஷ்மியாகவும் ஆகுகின்றீர்கள் என இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். இது நாங்கள் அமரத்துவப் பூமிக்குச் செல்வதற்கான சத்திய நாராயணனின் கதையும், மூன்றாவது கண்ணின் கதையும் ஆகும். ஆத்மாக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் இப்பொழுது மூன்றாவது ஞானக் கண்ணைப் பெற்றுள்ளீர்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் அழகானவர்களாகவும், பூஜிக்கத் தகுதி வாய்ந்தவர்களாகவும் இருந்தீர்கள், 84 பிறவிகள் எடுக்கையில் நீங்கள் பூஜிப்பவர்கள் ஆகினீர்கள். இதனாலேயே பாடப்படுகின்றது: பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்த நீங்கள் பூஜிப்பவர்கள் ஆகினீர்கள். தந்தை கூறுகின்றார்: நான் என்றென்றும் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர். நான் வந்து உங்களைப் பூஜிப்பவர்களில் இருந்து மாற்றி, பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்குகின்றேன். மக்கள் அழைக்கின்றார்கள்: ஓ இராமா, வந்து எங்களைத் தூய்மை ஆக்குங்கள்! பக்தர்கள் அனைவரும் அழைக்கின்றார்கள். ‘ஓ தூய்மையாக்குபவரே!’ என ஆத்மாக்கள் அழைக்கின்றனர்: கீதையை உபதேசித்தவர் ஸ்ரீகிருஷ்ணர் அல்ல என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். பரமாத்மா பரமதந்தை மாத்திரமே அனைவரையும் தூய்மை ஆக்குகின்றார். ஒரேயொரு இராமரே இருக்கின்றார். தந்தை கூறுகின்றார்: கடவுள் சர்வவியாபகர் அல்ல எனக் கூறுகின்ற மக்களின் அபிப்பிராயத்தைத் தொடர்ந்தும் பெற்றுக் கொள்ளுங்கள். கீதையின் கடவுள் சிவனேயன்றி, ஸ்ரீகிருஷ்ணர் அல்ல. முதலில் அவர்களிடம் கேளுங்கள்: யார் கடவுள்? அசரீரியானவரா அல்லது சரீரதாரியா? ஸ்ரீகிருஷ்ணர் சரீரதாரியும், சிவன் அசரீரியானவரும் ஆவர். இந்தச் சரீரத்தைக் கடனாகவே அவர் பெற்றுக் கொள்கின்றார். அவர் ஒரு தாயின் கருப்பை மூலம் பிறப்பதில்லை. ஸ்ரீகிருஷ்ணரின் ஆத்மாவே கருப்பையில் பிரவேசிக்கின்ற முதலாம் இலக்க ஆத்மா ஆவார். பிரம்மா, விஷ்ணு, சங்கரர் ஆகியோர் சூட்சும சரீரங்களைக் கொண்டவர்கள். சிவனிற்கெனச் சொந்தமாக ஒரு சரீரம் இல்லை. இங்கே இவ்வுலகில், ஆத்மாக்கள் பௌதீகச் சரீரங்களைக் கொண்டிருக்கின்றனர். தூய்மையாக்குபவரும், அனைவருக்கும் சற்கதி அருள்பவரும், அனைவருக்கும் விடுதலை அளிப்பவரும், துன்பத்தை நீக்கிச் சந்தோஷத்தை அருள்பவரும் என்பவை தந்தையின் புகழாகும். சரி, எங்கே நீங்கள் சந்தோஷத்தைப் பெற முடியும்? இராவண உலகம் அழிக்கப்பட்டு, சுவர்க்கம் ஸ்தாபிக்கப்பட்டதும், நீங்கள் உங்கள் அடுத்த பிறவியில் சந்தோஷத்தைப் பெறுவீர்கள். சரி, நீங்கள் எதிலிருந்து விடுதலை அடைகின்றீர்கள்? இராவணனின் துன்பத்தில் இருந்தாகும்! இது துன்பபூமி ஆகும். அப்பொழுது பாபா வழிகாட்டியாகவும் ஆகுகின்றார். சரீரங்கள் இங்கேயே அழிக்கப்பட உள்ளன. அதன்பின்னர் அவர் சகல ஆத்மாக்களையும் திரும்பவும் அழைத்துச் செல்கின்றார். அவர் அனைவரையும் துன்பத்தில் இருந்து விடுவித்து, அவர்களைத் தூய்மையாக்கி, வீட்டிற்குத் திரும்பவும் அழைத்துச் செல்கின்றார். புதிதாகத் திருமணம் செய்த ஒரு தம்பதியினர் முதன் முதலாக வீட்டை அடையும் பொழுது, முதலில் மணவாளனும், பின்னர் மணவாட்டியும் உள்ளே வருகிறார்கள். அதன்பின்னரே ஊர்வலம் தொடர்ந்து வருகின்றது. உங்களின் மாலையும் அவ்வாறானதே. முதலில் மலரான (குஞ்சம்), சிவபாபா உள்ளார். மக்கள் முதலில் மலரையே (மாலையின் குஞ்சத்தை) நமஸ்கரிக்கின்றார்கள். பின்னர் இரட்டை மணிகளான பிரம்மாவும், சரஸ்வதியும், அதன்பின்னர் பாபாவின் உதவியாளர்கள் ஆகுகின்ற, குழந்தைகளான நீங்கள் அனைவரும் இருக்கின்றீர்கள். நினைவு செய்யப்படுகின்ற, மலரான சிவபாபாவாலேயே, சூரிய வம்சத்து விஷ்ணு மாலை உருவாக்கப்படுகின்றது. சரஸ்வதியும் பிரம்மாவும் பின்னர் இலக்ஷ்மியும் நாராயணனும் ஆகுகின்றனர். தேவர்கள், சத்திரியர்கள் போன்றோர் உள்ளனர். பின்னர் நீங்கள் சூத்திரர்களில் இருந்து பிராமணர்கள் ஆகுகின்றீர்கள், அதன்பின்னர் இந்த ஞானத்தைப் பெறுவதால், இலக்ஷ்மியும் நாராயணனும் ஆகுகின்றீர்கள். இது அவர்களின் மாலையாகும். இந்தப் பிரம்மாவும் சரஸ்வதியும் அரசராகவும், அரசியாகவும் ஆகுகின்றனர். அவர்கள் முயற்சி செய்ததாலேயே பூஜிக்கப்படுகின்றனர். மாலை எதைக் குறிக்கின்றது என்பது எவருக்குமே தெரியாது. அவர்கள் தொடர்ந்தும் அவ்வாறே மாலையின் மணிகளை உருட்டுகின்றார்கள். 16,108 மணிமாலையும் உள்ளது. அது மிகப்பெரிய ஆலயங்களில் வைக்கப்படுகின்றது. அதைச் சிலர் ஓரிடத்தில் இருந்து இழுக்கின்றார்கள், சிலர் இன்னோரிடத்தில் இருந்து இழுக்கின்றார்கள். பாபா பம்பாயில் உள்ள இலக்ஷ்மி நாராயணனின் ஆலயத்திற்குச் செல்வதுண்டு. அவர் அங்கு சென்று மாலையின் மணிகளை உருட்டி, இராம நாமத்தை உச்சரிப்பது வழக்கம். சிவபாபாவே மலர் ஆவார். இவர் 'இராமா இராமா' என மலரை நோக்கிக் கூறி, பின்னர் முழு மாலையையும் வணங்குவார். இவரிடம் இந்த ஞானம் எதுவும் இருக்கவில்லை. கிறிஸ்தவப் பாதிரிமாரும் தங்கள் கையில் ஒரு மாலையை வைத்திருந்து, அதன் மணிகளை எப்பொழுதும் உருட்டிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் யாருடைய மாலையை உருட்டுகின்றார்கள் எனக் கேளுங்கள், தாங்கள் கிறிஸ்துவின் நினைவில் மாலையின் மணிகளை உருட்டுவதாக அவர்கள் பதிலளிப்பார்கள். போப்பாண்டவரே அவர்களின் மூத்த பாதிரியார். எனவே, அவர்கள் போப்பாண்டவர்களின் மாலையை வைத்திருப்பார்கள். அவர்கள் அனைவரினதும் உருவங்கள் உள்ளன. பாப்பரசர்களுக்கு அதிகளவு மரியாதை வழங்கப்படுகின்றது. கிறிஸ்துவின் ஆத்மா எங்கே இருக்கின்றார் என்பது அவர்களுக்கே தெரியாது. கிறிஸ்துவின் ஆத்மா எங்காவது ஒரு பிச்சைக்கார வடிவில் இருக்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்களும் இப்பொழுது பிச்சைக்காரர்களே, நீங்கள் இளவரசர்களாக ஆகுகின்றீர்கள். பாரதம் இளவரசனாக இருந்தது; அது இப்பொழுது பிச்சைக்காரனாக உள்ளது, அது மீண்டும் ஒருமுறை இளவரசன் ஆகும். ஒரேயொரு ஆன்மீகத் தந்தையே அதை அவ்வாறு ஆக்குகின்றார். நீங்கள் பிச்சைக்காரர்களில் இருந்து இளவரசர்கள் ஆகுகின்றீர்கள். இளவரசர்களும், இளவரசிகளும் கற்பதற்கென ஒரு கல்லூரியும் உள்ளது. நீங்கள் இங்கே கற்று, 21 பிறவிகளுக்குச் சுவர்க்கத்தின் இளவரசர்களாகவும், இளவரசிகளாகவும் ஆகுகின்றீர்கள். இந்த ஞானத்தின் மூலம், நீங்கள் மனிதர்களில் இருந்து தேவர்களாக மாறுகின்றீர்கள். சத்தியயுகத்து இளவரசராக இருந்த ஸ்ரீகிருஷ்ணர், 84 பிறவிகளை எடுத்த பின்னர் இப்பொழுது பிச்சைக்காரர் ஆகிவிட்டார் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். 5000 வருடங்களுக்கு முன்னர் தேவர்கள் மிகவும் செல்வந்தர்களாக இருந்தனர்! அவர்கள் இப்பொழுது ஏழைப் பிச்சைக்காரர்கள் ஆகிவிட்டனர். நீங்கள் மாத்திரமே இவ்விடயங்களைச் செவிமடுக்கின்றீர்கள். கடவுள் பேசுகின்றார். அவரே அனைவரதும் தந்தை. நீங்கள் தந்தையான கடவுள் கூறுவதைச் செவிமடுக்கின்றீர்கள். கீதையில், ‘கடவுள் சிவன் பேசுகின்றார்’ எனக் கூறுவதற்குப் பதிலாக, ‘கடவுள் கிருஷ்ணர் பேசுகின்றார்' எனக் கூறி, அவர்கள் தவறிழைத்து விட்டனர். அதனாலேயே இவ்வுலகம் முழுவதும் பொய்யானது எனக் கூறப்படுகின்றது. இந்நேரத்தில் முழு உலகமும் முட்காடாகி விட்டது. பம்பாயில் அவர்கள் பபுல்நாதருக்கு (முட்களின் பிரபு) ஓர் ஆலயத்தைக் கட்டியுள்ளனர். தந்தை வந்து, இந்த முட்களை மலர்களாக மாற்றுகின்றார். அனைவரும் தொடர்ந்தும் ஒருவரையொருவர் குத்துகின்றனர், அதாவது, அவர்கள் தொடர்ந்தும் காம வாளைப் பிரயோகிக்கின்றனர். அதனாலேயே இது முட்காடு என்று அழைக்கப்படுகின்றது. சத்தியயுகம் அல்லாவின் பூந்தோட்டம் என்று அழைக்கப்படுகின்றது. மலர்களாக உள்ளவர்கள் பின்னர் முட்களாகி, அதன்பின்னர் முட்களிலிருந்து மலர்கள் ஆகுகின்றனர். சத்தியயுகத்தில் அவர்கள் ஒருபொழுதும் இராவணனின் கொடும்பாவியை எரிப்பதில்லை. இராவணனே பாரதத்தின் பழைய எதிரி. அரைக்கல்பமாக உங்களுக்குத் துன்பம் விளைவித்த இராவணனுடனேயே உங்கள் யுத்தம் உள்ளது. இறுதியில் மகாயுத்தம் இடம்பெறும். உண்மையான தசேரா இடம்பெறவுள்ளது. இராவண இராச்சியம் அழிக்கப்படும். அதன் பின்னர் நீங்கள் தங்க மாளிகைகளைப் பெறுவீர்கள். நீங்கள் இப்பொழுது இராவணனை வெற்றிகொண்டு, சுவர்க்க அதிபதிகள் ஆகுகின்றீர்கள். பாபா உங்களுக்கு முழு உலக இராச்சியம் என்ற உங்கள் பாக்கியத்தைக் கொடுக்கின்றார், அதனாலேயே அவர் சகல பொக்கிஷங்களினதும் கள்ளங்கபடமற்ற பிரபுவாகிய சிவன் என்று அழைக்கப்படுகின்றார். நற்குணங்கள் அற்றவர்கள், கல்லுப்புத்தி உடையவர்கள், கூன்முதுகு உடையவர்கள் அனைவரையும் தந்தை உலக அதிபதிகள் ஆக்குகின்றார். அவர் மிகவும் கள்ளங்கபடமற்றவர்! அவர் இங்கே வந்து, தூய்மையற்ற உலகில் ஒரு தூய்மையற்ற சரீரத்தில் பிரவேசிக்கின்றார். சுவர்க்கத்திற்குச் செல்லத் தகுதி அற்றவர்களால் விகாரங்களைத் துறக்க முடியாது. தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, இப்பொழுது இந்த இறுதிப் பிறவியில் தூய்மை ஆகுங்கள். அந்த விகாரம் நஞ்சாகும், அதன் ஆரம்பம் முதல் மத்தியினூடாக இறுதிவரை அது உங்களுக்குத் துன்பத்தையே கொடுக்கின்றது. இந்த ஒரு இறுதிப் பிறவியில் உங்களால் அதைத் துறக்க முடியாதா? உங்களை அமரத்துவமானவர்கள் ஆக்குவதற்கு, நான் உங்களுக்குப் பருகுவதற்கு அமிர்தத்தைக் கொடுக்கின்றேன். அப்படியிருந்தும் நீங்கள் தூய்மை ஆகுவதில்லை! உங்களால் விகாரம், சிகரெட், மதுபானம் இல்லாமல் இருக்க முடியாதுள்ளது. உங்கள் எல்லையற்ற தந்தையான, நான் உங்களுக்குக் கூறுகின்றேன்: ஒரு பிறவிக்குத் தூய்மை ஆகுங்கள். நான் உங்களைச் சுவர்க்க அதிபதிகள் ஆக்குவேன். முழு உலகையும் துன்பத்திலிருந்து விடுவித்து, உங்களை அமைதி தாமத்திற்கும் சந்தோஷ தாமத்திற்கும் அழைத்துச் செல்லவே தந்தை வந்திருக்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அனைத்துச் சமயங்களும் இப்பொழுது அழிக்கப்பட வேண்டும். ஒரேயொரு ஆதி சனாதன தேவிதேவதா தர்மம் ஸ்தாபிக்கப்படுகின்றது. கிராந்தில், பரமாத்மா பரமதந்தை, அமரத்துவ ரூபமாகக் குறிப்பிடப்படுகின்றார். தந்தையே மகா மரணம் (மகா காலன்) ஆவார். ஏனைய மரணங்கள் ஓரிருவரையே கொண்டு செல்லும், ஆனால் நானோ சகல ஆத்மாக்களையும் என்னுடன் திரும்பவும் வீட்டிற்கு அழைத்துச் செல்வேன். இதனாலேயே நான் மகாகாலன் என அழைக்கப்படுகின்றேன். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இந்த இறுதிப் பிறவியில் இந்த ஞான அமிர்தத்தைப் பருகி, அமரர்கள் ஆகுங்கள். உங்களைச் சுவர்க்கத்திற்குச் செல்லத் தகுதியுடையவர்கள் ஆக்குங்கள். தீய பழக்கங்கள் அனைத்தையும் துறந்திடுங்கள்.

2. இப்பொழுது இந்தக் கல்வியைக் கற்று, 21 பிறவிகளுக்குச் சுவர்க்கத்தின் இளவரசர்களாகவும், இளவரசிகளாகவும் ஆகுங்கள். சத்திய நாராயணனின் கதையைச் செவிமடுத்து, சாதாரண ஆணிலிருந்து, நாராயணனாக மாறுவதற்கு முயற்சி செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் இந்த ஞானத்தின் இரகசியங்களை ஒரு சில வார்த்தைகளில் தெளிவுபடுத்துவதற்கு மிகச்சரியானவராகவும் சக்திவாய்ந்தவராகவும் ஆகுவீர்களாக.

அதியுச்ச சக்திவாய்ந்த எதுவும் எண்ணிக்கையில் மிகக் குறைவாகவே இருக்கும். அதேபோல், நீங்கள் உங்களை சத்தத்திற்கு வருவதற்கு முன்னர், சத்தத்திற்கு அப்பாற்பட்ட நிலையில் ஸ்திரப்படுத்தினால், நீங்கள் ஒருசில வார்த்தைகளைப் பயன்படுத்தினாலும் அவை மிகச்சரியாகவும் சக்திவாய்ந்தவையாகவும் இருக்கும். ஒவ்வொரு வார்த்தையும் அதற்குள் ஆயிரம் வார்த்தைகளின் அர்த்தம் பொதிந்ததாக இருக்கும். அப்போது வீணான உரையாடல் இயல்பாகவே முடிந்துவிடும். ஒரு வார்த்தையால், உங்களால் இந்த ஞானத்தின் இரகசியங்கள் அனைத்தையும் தெளிவுபடுத்தக் கூடியதாக இருக்கும். அப்போது விரிவாக்கம் அனைத்தும் முடிந்துவிடும்.

சுலோகம்:
உங்களின் இதயபூர்வமாக ‘பாபா’ என்று சொல்வதென்றால், சந்தோஷத்தையும் சக்தியையும் பெற்றுக் கொள்ளுதல் என்று அர்த்தம்.

அவ்யக்த சமிக்ஞை: இப்போது உங்களின் அருள்கின்ற ரூபத்தை வெளிப்படுத்துங்கள்.

அருள்பவரின் குழந்தைகளாக, நீங்கள் அனைவருக்கும் எதையாவது கொடுக்கும் உணர்வால் நிரம்பியவர் ஆகவேண்டும். ‘இது நடந்தால், நானும் அதைச் செய்வேன், சந்தர்ப்பமோ சூழ்நிலையோ இவ்வாறு இருந்தால் நான் இதைச் செய்வேன்’ என்று ஒருபோதும் நினைக்காதீர்கள். அருள்பவரின் சம்ஸ்காரங்களைக் கொண்டுள்ளவர்கள், இயல்பாகவே அனைவரிடம் இருந்தும் ஒத்துழைப்பைப் பெறுவார்கள். ஆகவே, மாஸ்ரர் அருள்பவர்களான உங்களால் ஒருபோதும் மற்றவர்களிடம் இருந்து எதையும் பெற்றுக் கொள்ளும் எதிர்பார்ப்பைக் கொண்டிருக்க முடியாது.