03.11.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்கள் நடத்தைகளை சீராக்கி, உலகை விகாரமற்றதாக்குவதற்கு தந்தை வந்துள்ளார். நீங்கள் சகோதரர்கள் ஆதலால், உங்கள் பார்வை மிகவும் தூய்மையானதாக இருக்க வேண்டும்.
கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் கவலையற்ற சக்கரவர்த்திகளாக இருப்பினும், உங்களுக்கு நிச்சயமாக ஒரு பிரதானமான அக்கறை இருக்க வேண்டும். அந்த அக்கறை யாது?பதில்:
தூய்மையற்றவர்களிலிருந்து எவ்வாறு தூய்மையாகுவது என்பதே, பிரதான அக்கறை ஆகும். நீங்கள் தந்தைக்குரியவர்களாக இருப்பதால், நீங்கள் தந்தையின் முன்னிலையில் தண்டனையை அனுபவம் செய்வதாக இருக்கக்கூடாது. நீங்கள் தண்டனையிலிருந்து விடுவிக்கப்படுவதிலேயே அக்கறை கொண்டிருக்கவேண்டும். இல்லாவிட்டால், அந்நேரத்தில், நீங்கள் பெரும் அவமானத்தை உணர்வீர்கள். நீங்கள் கவலையற்ற சக்கரவர்த்திகள், நீங்கள் அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்கவேண்டும். இதைப் புரிந்துகொள்பவர்கள், எல்லையற்றதன் அதிபதிகள் ஆகுகிறார்கள். எவராவது அதைப் புரிந்துகொள்ளாதுவிடின், அவருடைய பாக்கியம் அதுவாகும். நீங்கள் அதைப் பற்றி அக்கறைப்படக் கூடாது.ஓம் சாந்தி.
சிவன் என்னும் பெயருடைய ஆன்மீகத் தந்தை, இங்கமர்ந்திருந்து தனது குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகிறார். அனைவருக்கும் ஆன்மீகத் தந்தை ஒருவரே ஆவார். எல்லாவற்றுக்கும் முதலில், இது விளங்கப்படுத்தப்பட வேண்டும், ஏனெனில், அதன்பின்னர் அனைத்தையும் புரிந்துகொள்வது அவர்களுக்கு இலகுவாகிறது. அவர்கள் தந்தையின் அறிமுகத்தைப் பெற்றுக்கொள்ளாதுவிடின், தொடர்ந்தும் கேள்விகளைக் கேட்பார்கள். எல்லாவற்றுக்கும் முதலில், அவர்களில் இந்த நம்பிக்கை பதிக்கப்பட வேண்டும். கீதையின் கடவுள் யார் என்பது முழு உலகத்துக்கும் தெரியாது. அவர்கள், அது ஸ்ரீகிருஷ்ணர் என்றே கூறுகிறார்கள், நாங்களோ கீதையின் கடவுள் பரமாத்மாவாகிய பரமதந்தை சிவனே என்று கூறுகிறோம். அவர் மாத்திரமே ஞானக்கடலாவார். சமய நூல்கள் அனைத்தினதும் இரத்தினமாகிய கீதையே பிரதான சமயநூல் ஆகும். அவர்கள் “ஓ, பிரபு! உங்கள் வழிமுறைகள் தனித்துவமானவை” என்று கூறும்பொழுது, கடவுளையே குறிப்பிடுகிறார்கள். அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றி இவ்வாறு கூறுவதில்லை. சத்தியமானவராகிய தந்தையே நிச்சயமாக உங்களுக்குச் சத்தியத்தைக் கூறுகிறார். முதலில் உலகம் புதியதாகவும், சதோபிரதானாகவும் இருந்தது. இப்பொழுது உலகம் பழையதாகவும், தமோபிரதானாகவும் இருக்கிறது. ஒரு தந்தையால் மாத்திரமே உலகை மாற்ற முடியும். அதை எவ்வாறு தந்தை மாற்றுகிறார் என்பதையும் நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். ஆத்மாக்கள் சதோபிரதானாக ஆகும்;பொழுது மாத்திரமே சதோபிரதான் உலகம் ஸ்தாபிக்கப்பட முடியும். எல்லாவற்றுக்கும் முதலில், குழந்தைகளாகிய நீங்கள் அகநோக்குடையவர்களாக இருக்கவேண்டும். நீங்கள் அதிகளவு பேசக்கூடாது. மக்கள் வந்து அதிகளவு படங்களைப் பார்க்கும்பொழுது, தொடர்ந்தும் கேள்விகளைக் கேட்கிறார்கள். எல்லாவற்றுக்கும் முதலில், நீங்கள் ஒரு விடயத்தை மாத்திரமே விளங்கப்படுத்த வேண்டும். அவர்கள் அதிகளவு கேள்விகளைக் கேட்பதற்கு எவ்வித்திலும் இடமளிக்காதீர்கள். அவர்களிடம் கூறுங்கள்: எல்லாவற்றுக்கும் முதலில், ஒரு விடயத்தில் நம்பிக்கை வையுங்கள், பின்னர் நாங்கள் மேலும் விளங்கப்படுத்துவோம். பின்னர் அவர்களை 84 பிறவிச் சக்கர படத்துக்கு அழைத்து செல்லுங்கள். தந்தை கூறுகிறார்: இவருடைய பல பிறவிகளின் இறுதிப் பிறவியில் நான் இவரில் பிரவேசிக்கிறேன். தந்தை இவரிடம் கூறுகிறார்: நீங்கள் உங்களுடைய சொந்தப் பிறவிகளையே அறிந்திருக்கவில்லை. பிரஜாபிதா பிரம்மாவினூடாக, தந்தை எங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். எல்லாவற்றுக்கும் முதலில், அல்பாவை அவர் எங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். மக்கள் அல்பாவைப் புரிந்துகொள்ளும்போது, அவர்களுக்கு எச்சந்தேகங்களும் இருக்கமாட்டாது. அவர்களுக்குக் கூறுங்கள்: தந்தை சத்தியமானவர்; அவர் பொய்யான எதையும் கூறுவதில்லை. எல்லையற்ற தந்தை மாத்திரமே எங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறார். சிவராத்திரி நினைவுகூரப்படுவதால், நிச்சயமாகச் சிவன் ஏதோவொரு நேரத்தில் இங்கு வந்திருக்க வேண்டும். அதேவிதமாகவே, இங்கு மக்கள் ஸ்ரீகிருஷ்ணஜெனமஸ்தமியை கொண்டாடுகிறார்கள். அவர் கூறுகிறார்: நான் பிரம்மாவினூடாக, ஸ்தாபனையை மேற்கொள்கிறேன். அனைவரும் அந்த ஓர் அசரீரித் தந்தையின் குழந்தைகள் ஆவார்கள். நீங்களும் அவருடைய குழந்தைகளே, பின்னர் நீங்கள் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகளாகவும் ஆகுகிறீர்கள். பிரஜாபிதா பிரம்மாவினூடாக, ஸ்தாபனை மேற்கொள்ளப்படுவதால், நிச்சயமாக பிராமணர்கள் இருக்க வேண்டும். ஆகவே, நீங்கள் சகோதரர்களும் சகோதரிகளும் ஆதலால், இதில் தூய்மை உள்ளது. இதுவும் உங்கள் குடும்பத்துடன் வீட்டில் வசிக்கும்பொழுது, தூய்மையாக இருப்பதற்கான ஒரு தந்திரமாகும். ஒருபொழுதும் சகோதர, சகோதரிகள் ஒருவர் மீதொருவர் குற்றப் பார்வையைக் கொண்டிருக்கக் கூடாது. உங்கள் பார்வை 21 பிறவிகளுக்குச் சீராக்கப்படுகிறது. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பித்தல்களைக் கொடுக்கிறார். அவர் உங்கள் நடத்தைகளை சீராக்கிறார்;. இப்பொழுது முழு உலகினது நடத்தைகளும் சீராக்கப்பட வேண்டும். இப்பழைய, தூய்மையற்ற உலகில், நன்னடத்தைகள் எதுவும் கிடையாது. அனைவரிலும் விகாரங்கள் இருக்கின்றன. இது தூய்மையற்ற, விகாரமான உலகம். எவ்வாறு விகாரமற்ற உலகம் உருவாக்கப்படும்? தந்தையைத் தவிர வேறு எவராலும் அதை உருவாக்க முடியாது. தந்தை இப்பொழுது உங்களைத் தூய்மையாக்குகிறார். இவ்விடயங்கள் அனைத்தும் மறைமுகமானவையாகும். நான் ஓர் ஆத்மா ஆவேன். இந்த ஆத்மாவாகிய, நான் தந்தையாகிய கடவுளைச் சந்திக்க வேண்டும். அனைவரும் கடவுளைச் சந்திப்பதற்கு முயற்சி செய்கிறார்கள். கடவுளே அசரீரியானவர் ஆவார். பரமாத்மா மாத்திரமே விடுதலையளிப்பவர், வழிகாட்டி என அழைக்கப்படுகிறார். ஏனைய சமயத்தவர்கள் விடுதலையளிப்பவர் அல்லது வழிகாட்டி என எவரையும் அழைப்பதில்லை. பரமாத்மாவாகிய பரமதந்தை மாத்திரமே வந்து அனைவரையும் விடுதலை செய்கிறார், அதாவது, அவர் தமோபிரதானானவர்களைச் சதோபிரதானாக மாற்றுகிறார்;. அவர் அனைவருக்கும் வழிகாட்டுகிறார். ஆகவே, எல்லாவற்றுக்கும் முதலில், அவர்களின் புத்தியில் இந்த ஒரு விடயத்தைப் பதியுமாறு செய்யுங்கள். அவர்கள் இதைப் புரிந்துகொள்ளாதுவிடின், அவர்களை விட்டுவிடுங்கள்! அவர்கள் அல்பாவைப் புரிந்துகொள்ளாதுவிடின், எவ்வாறு அவர்களால் பீற்றாவினூடாக நன்மையடைய முடியும்? பதிலாக, அவர்களைச் செல்லவிடுங்கள். நீங்கள் குழப்பமடையக் கூடாது. நீங்கள் கவலையற்ற சக்கரவர்த்திகள் ஆவீர்கள். அசுரர்களிடமிருந்து தடைகள் ஏற்படும். இந்த ஞானமே ருத்திர ஞான யாகமாகும். ஆகவே, எல்லாவற்றுக்கும் முதலில், அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். தந்தை கூறுகிறார்: மன்மனாபவ! நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப, ஓர் அந்தஸ்தைக் கோருகிறீர்கள். ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்தின் இராச்சியம் ஸ்தாபிக்கப்பட்டு வருகிறது. இலக்ஷ்மி நாராயணனின் வம்சம் உள்ளது. ஏனைய சமயத்தவர்கள் ஒரு வம்சத்தை ஸ்தாபிப்பதில்லை. தந்தை வந்து அனைவரையும் விடுதலை செய்கிறார். பின்னர் ஏனைய சமய ஸ்தாபகர்கள் தங்கள் சொந்த சமயத்தை ஸ்தாபிப்பதற்கு, தங்களுக்குரிய நேரத்தில் வரவேண்டும். சனத்தொகை வளரவேண்டும். அனைவரும் தூய்மையற்றவர்கள் ஆகவேண்டும். தந்தைக்கு மாத்திரமே தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்கும் பணி இருக்கிறது. அம்மக்கள் ஒரு சமயத்தை ஸ்தாபிப்பதற்கே வருகிறார்கள். அதில் மகத்துவம் எதுவும் இல்லை. ஒரேயொருவரின் புகழே உள்ளது. அம்மக்கள் கிறிஸ்துவுக்காக அதிகளவைச் செய்கிறார்கள். கிறிஸ்தவ சமய ஆத்மாக்கள் அவரைத் தொடர்ந்தும் பின்பற்றுகிறார்கள். நீங்கள் அவர்களுக்கும் விளங்கப்படுத்த வேண்டும், தந்தையாகிய கடவுளே, விடுதலையாக்குபவரும், வழிகாட்டியும் ஆவார். ஒரு தந்தை மாத்திரமே உங்களைத் துன்பத்திலிருந்து விடுதலை செய்கிறார். இக்கருத்துக்கள் அனைத்தையும் உங்கள் புத்தியில் மிக நன்றாகக் கிரகித்துக் கொள்ளுங்கள். ஒரேயொரு கடவுளே கருணை நிறைந்தவர் என அழைக்கப்படுகிறார். ஒரு மனிதர்கூட இன்னுமொருவருக்காகக் கருணை கொண்டிருப்பதில்லை. அவருடைய கருணை எல்லையற்றதாகும். ஒரு தந்தை மாத்திரமே அனைவர் மீதும் கருணை கொண்டிருக்கிறார். சத்தியயுகத்தில் அனைவருமே சந்தோஷமாகவும், அமைதி நிறைந்தவர்களாகவும் இருந்தார்கள்;. அங்கு துன்பத்தின் கேள்விக்கே இடமில்லை. குழந்தைகளாகிய நீங்கள் அல்ஃபா பற்றி விளங்கப்படுத்தும்போது, இந்த ஒரு விடயத்தில் நம்பிக்கையை அவர்களில் பதிக்காது, ஏனைய விடயங்களுக்குச் செல்லும்பொழுதே, உங்கள் தொண்டை வரண்டுவிடுகின்றது என நீங்கள் கூறுகிறீர்கள். எல்லாவற்றுக்கும் முதலில், நீங்கள் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். ஏனைய விடயங்களுக்குள் செல்லவேண்டாம். அவர்களுக்குக் கூறுங்கள்: தந்தை சத்தியத்தை மாத்திரமே கூறுகிறார். தந்தை மாத்திரமே இவை அனைத்தையும் பிரம்மகுமார் பிரம்மகுமாரிகளாகிய எங்களுக்குக் கூறுகிறார். அவரே இப்படங்கள் அனைத்தையும் உருவாக்கியவர், உங்களுக்கு இதைப் பற்றிய சந்தேகம் எதுவும் இருக்கக் கூடாது. சந்தேக புத்தி உங்களை விநாசத்துக்கு இட்டுச் செல்கிறது. எல்லாவற்றுக்கும் முதலில், உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவுசெய்வதனால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். வேறெந்த வழியும் இல்லை. ஒரு தந்தை மாத்திரமே தூய்மையாக்குபவர், தந்தை கூறுகிறார்: சரீர உறவினர்கள் அனைவரையும் துறந்துவிட்டு, சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள்! கடவுள் பிரவேசிப்பவருமே, சதோபிரதான் ஆகுவதற்கான முயற்சியை செய்ய வேண்டும். முயற்சி செய்வதால் மாத்திரமே அவர் அவ்வாறு ஆகுவார். அவர் எங்களுக்கு பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்குமிடையிலான தொடர்பையும் காண்பிக்கிறார். தந்தை பிராமணர்களாகிய உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறார், அதனால் நீங்கள் விஷ்ணு தாமத்தின் அதிபதிகள் ஆகுகிறீர்கள். நீங்களே 84 பிறவிகளை எடுத்து, இறுதியில் சூத்திரர்கள் ஆகுகிறீர்கள். பின்னர், தந்தை வந்து உங்களைச் சூத்திரர்களிலிருந்து பிராமணர்களாக மாற்றுகிறார். வேறு எவராலும் இதை விளங்கப்படுத்த முடியாது. தந்தையின் அறிமுகத்தைக் கொடுப்பதே, முதலாவது விடயமாகும். தந்தை கூறுகிறார்: நான் இங்கு தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குவதற்கு வரவேண்டும். நான் மேலிருந்து தூண்டுதல்களைக் கொடுக்கிறேன் என்பதில்லை. இவரின் பெயரே, “பாக்கிய இரதம்” என்பதனால், அவர் நிச்சயமாக இவரில் பிரவேசிக்கிறார். இது அவரின் பல பிறவிகளின் இறுதியானதாகும். பின்னர் அவர் சதோபிரதான் ஆகுகிறார். இதற்கான வழிமுறையைத் தந்தை உங்களுக்குக் காண்பிக்கிறார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதிச் சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள்! நான் மாத்திரமே சர்வசக்திவான் ஆவேன். என்னை நினைவுசெய்வதால், நீங்கள் சக்தியைப் பெறுவீர்கள். நீங்கள் உலக அதிபதிகள் ஆகுவீர்கள். அவர்கள் தந்தையிடமிருந்து தமது ஆஸ்தியை பெற்று இலக்ஷ்மி நாராயணன் ஆகுகிறார்கள். அவர்கள் அதை எவ்வாறு பெற்றார்கள் என்பதை அவர் விளங்கப்படுத்துகிறார். அருங்காட்சியகங்களிலும், கண்காட்சிகளிலும் அவர்களுக்குக் கூறுங்கள்: முதலில் ஒரு விடயத்தைப் புரிந்துகொள்ளுங்கள். அதன் பின்னர், ஏனைய தலைப்புக்களுக்குச் செல்லுங்கள். ~இதைப் புரிந்துகொள்வது மிகவும் அவசியம்| எனக் கூறுங்கள். இல்லாவிட்டால், உங்களால் துன்பத்திலிருந்து விடுபட இயலாது. இதில் உங்களுக்கு நம்பிக்கை ஏற்படும்வரையில், உங்களால் எதையும் புரிந்துகொள்ள இயலாது. இந்நேரத்தில், உலகம் சீரழிந்துள்ளது. தேவர்களின் உலகம் மிகவும் மேன்மையாக இருந்தது. இவ்விதமாக நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். அவர்கள் எதையாவது புரிந்து கொண்டுள்ளார்களா அல்லது அவர்கள் அங்கு பித்துப் பிடித்த நபரைப் போன்று அமர்ந்திருக்கிறார்களா எனப் பார்ப்பதற்கு, நீங்கள் மனிதர்களின் நாடித்துடிப்பை உணர வேண்டும். அவர்களுக்குப் பித்துப் பிடித்திருப்பின், அவர்களைத் தனியே விட்டுவிடுங்கள். நீங்கள் உங்களுடைய நேரத்தை வீணாக்கக் கூடாது. யார் இந்த ஞானத்தில் தாகமாகவும், தகுதியானவராகவும் இருக்கிறார்கள் என்பதை இனங்காண்கின்ற ஒரு புத்தி உங்களுக்குத் தேவை. இதைப் புரிந்துகொள்பவர்களின் முகங்கள் மாறும். எல்லாவற்றுக்கும் முதலில், அவர்களுக்குச் சில நற்செய்திகளைக் கூறுங்கள்: நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து ஓர் எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். சில குழந்தைகள் நினைவுயாத்திரையில் மிகவும் பலவீனமாக இருக்கிறார்கள் என்பது பாபாவுக்குத் தெரியும். தந்தையின் நினைவில் நிலைத்திருப்பதற்கு முயற்சி தேவை. இதிலேயே மாயை பல தடைகளை உருவாக்குகிறாள். இது நாடகத்தில் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. தந்தை இங்கமர்ந்திருந்து எவ்வாறு இந்நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது என்பதை விளங்கப்படுத்துகிறார். உலகிலுள்ள மனிதர்கள் சிறிதளவேனும் எதையும் புரிந்துகொள்வதில்லை. நீங்கள் தந்தையின் நினைவில் நிலைத்திருந்து, ஏனையோருக்கு விளங்கப்படுத்தும்பொழுது, ஸ்திரத்தன்மையைப் பேணுவீர்கள். இல்லாவிட்டால், அவர்கள் உங்களின் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டியபடியே இருப்பார்கள். பாபா கூறுகிறார்: நீங்கள் எந்தப் பெருஞ் சிரமங்களுக்கூடாகவும் செல்லத் தேவையில்லை. ஸ்தாபனை நிச்சயமாக இடம்பெற வேண்டும். எவராலும் விதியை மாற்ற முடியாது. நீங்கள் உற்சாகமாக இருக்க வேண்டும். நாங்கள் தந்தையிடமிருந்து எங்கள் எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுகிறோம். தந்தை கூறுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள்! அமர்ந்திருந்து பெருமளவு அன்புடன் விளங்கப்படுத்துங்கள். தந்தையை நினைவு செய்யும்பொழுது, அன்புக் கண்ணீர் சிந்தவேண்டும். ஏனைய உறவுமுறைகள் அனைத்தும் கலியுகத்தினதாகும். இந்த உறவுமுறை ஆன்மீகத் தந்தையுடனானதாகும். உங்களுடைய இந்தக் கண்ணீரே, வெற்றிமாலையின் மணிகள் ஆகின்றன. மிகச் சிலரே அந்தளவு அன்புடன் தந்தையை நினைவு செய்கிறார்கள். உங்கள் எதிர்காலத்தை மேன்மையானதாக்குவதற்கு, இயன்றவரை நேரத்தை ஒதுக்குங்கள். கண்காட்சிகளில் அதிகளவு குழந்தைகள் இருக்க வேண்டியதில்லை, அங்கு அதிகளவு படங்கள் வைத்திருக்கவும் வேண்டியதில்லை. முதற்தரமான படம்: “கீதையின் கடவுள் யார்?” என்பதாகும். அந்தப் படத்துக்கு அடுத்ததாக, இலக்ஷ்மி நாராயணனின் படத்தையும், பின்னர் ஏணியின் படத்தையும் வைத்திருங்கள். அவ்வளவுதான். அதிகளவு படங்களை வைத்திருக்க வேண்டியதில்லை. இயன்றவரையில் குழந்தைகளாகிய நீங்கள் நினைவு யாத்திரையை அதிகரித்துக் கொள்ள வேண்டும். தூய்மையற்றவரிலிருந்து எவ்வாறு தூய்மையாகுவது என்பதே, உங்களுக்கு இருக்க வேண்டிய பிரதான அக்கறையாகும். நீங்கள் பாபாவுக்குரியவர்கள் ஆயின், நீங்கள் அவர் முன்னிலையில் சென்று தண்டனை பெறுவதாக இருந்தால், அது மிகவும் இழிவானதொரு விடயமாகும். இப்பொழுது நீங்கள் நினைவுயாத்திரையில் நிலைத்திருக்காதுவிடின், தண்டனைக்குரிய நேரத்தில் நீங்கள் தந்தையின் முன்னிலையில் இருக்கும்பொழுது, மிகவும் வெட்கப்படுவீர்கள். நீங்கள் தண்டனையை அனுபவிக்காமல் இருப்பதே, நீங்கள் கொண்டிருக்க வேண்டிய மாபெரும் அக்கறையாகும். நீங்கள் ரூப்பும் பசந்தும் ஆவீர்கள். பாபா கூறுகிறார்: நானும் ரூப்பும் பசந்தும் ஆவேன். நான் ஒரு சின்னஞ் சிறிய புள்ளியும் ஞானக்கடலும் ஆவேன். அவர் ஆத்மாக்களாகிய உங்களை இந்த ஞானம் முழுவதாலும் நிரப்புகிறார். உங்கள் புத்தியில் 84 பிறவிகளின் இரகசியங்கள் அனைத்தும் உள்ளன. நீங்கள் இந்த ஞானத்தின் சொரூபங்களாகி, ஏனையோர் மீது இந்த ஞானத்தைப் பொழிகிறீர்கள். இந்த ஞான இரத்தினம் ஒவ்வொன்றும், மிகவும் பெறுமதிவாய்ந்ததாகும், எவராலுமே இவற்றிற்கு விலை நிர்ணயிக்க முடியாது. இதனாலேயே தந்தை கூறுகிறார்: நீங்கள் பலமில்லியன் மடங்கு பாக்கியசாலிகள். உங்கள் பாதங்களில் தாமரை ஓர் அடையாளமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. எவராலும் இதைப் புரிந்துகொள்ள முடியாது. மக்களுக்கு “பதம்பதி” (பல்கோடீஸ்வரர்கள்) என்னும் பெயர் உள்ளது, இப்பெயர் உள்ளவர்களிடம் பெருமளவு செல்வம் உள்ளது என ஏனையோர் நினைக்கிறார்கள். “பதம்பதி” என்னும் குடும்பப்பெயரும் உள்ளது. தந்தை அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். பின்னர் அவர் கூறுகிறார்: தந்தையையும், 84 பிறவி சக்கரத்தையும் நினைவு செய்வதே பிரதான விடயமாகும். இந்த ஞானம் பாரத மக்களுக்கானதாகும். நீங்களே 84 பிறவிகளை எடுப்பவர்கள். இதுவும் புரிந்துகொள்ளப்பட வேண்டிய விடயமாகும். சந்நியாசிகள் போன்ற எவரும் சுயதரிசனச் சக்கரதாரிகள் என அழைக்கப்படுவதில்லை. தேவர்களைக்கூட அவ்வாறு அழைக்கக்கூடாது. தேவர்களிடம் இந்த ஞானம் இல்லை. அவர்களிடம் கூறுங்கள்: எங்களிடம் இந்த ஞானம் முழுவதும் உள்ளது. இலக்ஷ்மி நாராயணனிடமும் இந்த ஞானம் இல்லை. தந்தை விளங்கப்படுத்துகின்ற அனைத்தும் மிகச்சரியானவையாகும். இந்த ஞானம் மிகவும் அற்புதமானதாகும்! நீங்கள் மிகவும் மறைமுகமான மாணவர்கள். நீங்கள் ஒரு பல்கலைக்கழகத்துக்குச் செல்வதாகவும், கடவுள் உங்களுக்குக் கற்பிப்பதாகவும் நீங்கள் கூறுகிறீர்கள். உங்களுடைய இலக்கும், இலட்சியமும் என்ன? நாங்களே அவர்கள் (இலக்ஷ்மியும் நாராயணும்) ஆகுகிறோம். மக்கள் இதைக் கேட்கும்பொழுது, வியப்படைவார்கள். நீங்கள் கூறுகிறீர்கள்: நாங்கள் எங்கள் தலைமை அலுவலகத்துக்குச் செல்கிறோம். நீங்கள் எதைக் கற்கிறீர்கள்? சாதாரண மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுவதற்கும், பிச்சைக்காரர்களில் இருந்து இளவரசர்களாகுவதற்கும் நாங்கள் கற்கிறோம். உங்கள் படங்கள் முதற்தரமானவையாகும். இந்தச் செல்வம் தகுதியானவர்களுக்கே தானம் செய்யப்பட வேண்டும். நீங்கள் எங்கு தகுதியானவர்களைக் கண்டுபிடிப்பீர்கள்? சிவாலயங்களிலும், இலக்ஷ்மி நாராயணன் ஆலயங்களிலும், இராமர் சீதை ஆலயங்களிலும் ஆகும். அங்கு சென்று அவர்களுக்குச் சேவை செய்யுங்கள்! உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்! கங்கையாற்றுக்குச் சென்று அங்கு மக்களைக் கேளுங்கள்: கங்கை தூய்மையாக்குபவரா அல்லது பரமாத்மாவாகிய பரமதந்தை தூய்மையாக்குபவரா? இந்த நீர் அனைவருக்கும் சற்கதியை அளிக்குமா அல்லது எல்லையற்ற தந்தை அதைச் செய்வாரா? உங்களால் இதை மிக நன்றாக விளங்கப்படுத்த முடியும். மக்களுக்கு உலக அதிபதிகள் ஆகுவதற்கான வழியைக் காண்பியுங்கள். மனிதர்களுக்கு இதைத் தானம் செய்து, சிப்பிகளைப் போன்றோரை வைரங்களாகவும், உலக அதிபதிகளாகவும் ஆக்குங்கள். பாரதம் உலக அதிபதியாக இருந்தது. உங்கள் பிராமண குலம் தேவர்களினுடையதை விடவும் உயர்வானதாகும். தான் மட்டுமே தந்தையின் ஒரேயொரு அன்பிற்கினிய புதல்வன் என்பதை இந்த பாபா புரிந்துகொள்கிறார். பாபா என்னுடைய இந்தச் சரீரத்தைக் கடனாகப் பெற்றுள்ளார். உங்களைத் தவிர வேறு எவராலும், இவ்விடயங்களைப் புரிந்துகொள்ள இயலாது. பாபா எனது இரதத்தை ஓட்டுகிறார். நான் பாபாவை எனது தோள்களில் இருத்தியுள்ளேன், அதாவது, சேவை செய்வதற்காக, நான் இச்சரீரத்தை பாபாவுக்குக் கொடுத்துள்ளேன். அவர் அதற்கு அதிகளவு பிரதிபலன்களைக் கொடுக்கிறார். அவர் என்னை அனைவரிலும் உயர்வானவராக்கி, என்னை அவருடைய தோள்களில் இருத்துகிறார். அவர் என்னை முதலாம் இலக்கத்தவர் ஆக்குகிறார். ஒரு தந்தை தனது குழந்தைகளில் அதிகளவு அன்பு செலுத்தும்பொழுது, அவர்களைத் தனது தோள்களில் அமர்த்துகிறார். ஒரு தாய் ஒரு குழந்தையைத் தனது மடியிலேயே இருத்துவார், ஆனால் ஒரு தந்தை குழந்தையைத் தனது தோள்களில் இருத்துகிறார். ஒரு பாடசாலை ஒருபொழுதுமே கற்பனை என அழைக்கப்படுவதில்லை! வரலாறும், புவியியலும் ஒரு பாடசாலையில் கற்கப்படுகின்றன. அது கற்பனையாக இருக்க முடியுமா? இதுவும் உலகின் வரலாறும், புவியியலும் ஆகும். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.தாரணைக்கான சாராம்சம்:
1. அமர்ந்திருந்து, ஆன்மீகத் தந்தையை அதிகளவு அன்புடன் நினைவு செய்யுங்கள். நீங்கள் நினைவு செய்து, அன்புக் கண்ணீர் சிந்தும்பொழுது, அக்கண்ணீர் வெற்றிமாலையின் மணிகள் ஆகின்றன. உங்கள் நேரத்தைத் தகுதியான வழியில் உங்கள் எதிர்கால வெகுமதியை உருவாக்குவதற்குப் பயன்படுத்துங்கள்.2. அதிகம் பேசாதீர்கள், ஆனால் அகநோக்குடையவராகி, அனைவருக்கும் அல்பாவின் செய்தியைக் கொடுங்கள். நீங்கள் தண்டனையை அனுபவம் செய்யும் வகையில், எச்செயல்களையும் செய்யக்கூடாது என்ற ஓர் அக்கறையை மாத்திரம் கொண்டிருங்கள்.
ஆசீர்வாதம்:
சதா ஆன்மிக யாத்திரீகர் என்ற விழிப்புணர்வில் இருந்து, அப்பாலும், விடுபட்டவராகவும், பற்றிலிருந்து விடுபட்டவராகவும் ஆகுவீர்களாக.ஓர் ஆன்மிக யாத்திரீகர் சதா தொடர்ந்தும் நினைவுயாத்திரையில் முன்னேறிச் செல்கிறார். இந்த யாத்திரை சதா சந்தோஷத்தை கொடுக்கின்றது. இந்த ஆன்மிக யாத்திரையில் நிலைத்திருப்பவர்கள், வேறு எந்த யாத்திரையையும் மேற்கொள்ள வேண்டியதில்லை. ஏனைய அனைத்து யாத்திரைகளும் இந்த யாத்திரையில் அமிழ்ந்துள்ளன. மனதினதும், சரீரத்தினதும் அனைத்து அலைபாய்தலும் முடிவடைந்து விட்டது. எனவே, நீங்கள் ஓர் ஆன்மிக யாத்தீரிகள் என்ற விழிப்புர்ணவில் சதா நிலைத்திருங்கள். ஏனெனில், ஒரு யாத்திரீகருக்கு எவர் மீதும் எந்த பற்றும் இருப்பதில்லை. அவர் அப்பாலும்,. விடுபட்டவராகவும், பற்றிலிருந்து விடுபட்டவராகவும் இருப்பதற்கான ஆசீர்வாத்தை இலகுவாக பெறுகிறார்.
சுலோகம்:
சதா ~~ஆஹா பாபா!|| ஆஹா எனது பாக்கியமே! ஆஹா எனது இனிய குடும்பம்!|| என்று தொடர்ந்தும் பாடிக்கொண்டிருங்கள்.அவ்யக்த சமிக்ஞை: சரீரமற்ற ஸ்திதியின் பயிற்சியை அதிகரியுங்கள் (அசரீரி மற்றும் விதேஹி).
தந்தையை அவரது அனைத்து வடிவங்களிலும், அனைத்து உறவுமுறைகளிலும் அறிந்திருக்க வேண்டியது அவசியம், அவ்வாறே தந்தையினூடாக உங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். அறிந்திருப்பது என்றால் ஏற்றுக் கொள்வதாகும். நீங்கள் யாராக, எவ்வாறானவராக இருக்கிறீர்களோ அவ்வாறாகவே உங்களை நீங்கள் கருதினால், அப்பொழுது உங்கள் சரீரத்தில் நீங்கள் இருக்கின்ற போதே, சரீரமற்ற ஒரு ஸ்திதியை உங்களால் உருவாக்க முடியும். வியக்தாக (பௌதீக சரீரம்) இருக்கின்ற போதே, அவ்யக்தாக இருங்கள், நடந்து உலாவித்திரியும் போது ஒரு தேவதையாகவும் செயல்களை செய்கின்ற போது கர்மாதீத்தாகவும் இருங்கள்.