04.03.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, மனிதர்கள் அனைவரையும் விழித்தெழச் செய்து, அவர்களுக்கு வழியைக் காண்பிப்பது உங்கள் கடமையாகும். எந்தளவிற்கு அதிகமாக ஆத்ம உணர்விலிருந்து தந்தையின் அறிமுகத்தை ஏனையோருக்கு நீங்கள் கொடுக்கிறீர்களோ அந்தளவிற்கு நன்மை இருக்கும்.
கேள்வி:
எந்த ஒரு சிறப்பியல்பின் அடிப்படையில், செல்வந்தர்களை விடவும் ஏழைக் குழந்தைகள் முன்னேறிச் செல்ல முடியும்;?பதில்:
ஏழைக் குழந்தைகள் தான, தர்மங்கள் செய்வதில் பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஏழைகள் பெரும் அன்புடன் பக்தி செய்கிறார்கள். ஏழைகளுக்கே காட்சிகளும் கிடைக்கின்றன, செல்வந்தர்களுக்குத் தமது செல்வத்தின் போதை உள்ளது. அவர்கள் அதிக பாவச் செயல்களைச் செய்வதனால், ஏழைக் குழந்தைகளினால் அவர்களை விடவும் முன்னேறிச் செல்ல முடியும்.பாடல்:
ஓம் நமசிவாய!ஓம் சாந்தி.
'நீங்களே தாயும் தந்தையும், நாங்கள் உங்கள் குழந்தைகள்". நிச்சயமாக பரமாத்மா, பரமதந்தைக்கே இப்புகழ் பாடப்பட்டுள்ளது. அவரே படைப்பவர். ஆகையால், இதுவே அவரது தெளிவான புகழாகும். லௌகீகப் பெற்றோரே தமது குழந்தைகளை உருவாக்குபவர்கள். இந்த உலகிற்கு அப்பாற்பட்ட தந்தையே படைப்பவர் என்றும் அழைக்கப்படுகிறார். அவர்கள் அவரின் புகழை “அவரே நண்பர், அவரே ஆதாரம்” என்று பெருமளவு பாடுகிறார்கள். அந்தளவுக்கு லௌகீகத் தந்தையருக்குப் புகழ் இல்லை. பரமாத்மா பரமதந்தையின் புகழ் வேறானது. அவரே ஞானக்கடல் என்றும், முழு ஞானமும் நிறைந்தவர் என்றும் குழந்தைகள் புகழ் பாடுகிறார்கள். அவரிடம் இந்த முழு ஞானமும் உள்ளது. இது சரீர வாழ்வாதாரத்திற்கான கல்வி அறிவு இல்லை. அவரே ஞானக்கடலும், ழுழு ஞானமும் நிறைந்தவரும் என அழைக்கப்படுவதால், அவரிடம் நிச்சயமாகவே ஞானம் உள்ளது, ஆனால் எந்த ஞானம் உள்ளது? எவ்வாறு சக்கரம் சுழல்கிறது எனற ஞானம் அவரிடம் உள்ளது. அவரே தூய்மையாக்குபவரான, ஞானக்கடல் ஆவார். கிருஷ்ணரைத் தூய்மை ஆக்குபவர் என்றோ அல்லது ஞானக்கடல் என்றோ அழைக்க முடியாது. அவரது புகழ் முற்றிலும் தனித்துவமானது. இருவரும் பாரதவாசிகளே. சிவபாபா பாரதத்தில் புகழப்படுகிறார். இங்குதான் மக்கள் சிவனின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்கள். அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணனின் பிறந்தநாளையும் கொண்டாடுகிறார்கள். அவர்கள் கீதையின் பிறந்தநாளையும் கொண்டாடுகிறார்கள். இம்மூன்று பிறந்த நாட்களுமே பிரதானமானவை. இப்போது கேள்வி எழுகிறது: முதலில் யாருடைய பிறந்தநாள் வருகிறது? சிவனுடையதா அல்லது ஸ்ரீ கிருஷ்ணருடையதா? மக்கள் தந்தையை முற்றாக மறந்து விட்டார்கள். அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணருடைய பிறந்தநாளை மிகுந்த அன்புடன் ஆடம்பரமாகக் கொண்டாடுகிறார்கள். எவருக்குமே சிவனின் பிறந்தநாளைப் பற்றி அதிகம் தெரியாது, அதனை அவர்கள் புகழ்வதும் இல்லை. சிவன் வந்து என்ன செய்தார்? எவருக்குமே அவரது வாழ்க்கை வரலாறு தெரியாது. அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிப் பல விடயங்களை எழுதி இருக்கிறார்கள்: அவர் கோபியரைக் கடத்திச் சென்றார், அவர் அதைச் செய்தார், இதைச் செய்தார்! ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீகச் செயல்களைப் பற்றி எழுதுவதற்கு அவர்களிடம் விசேடமான சஞ்சிகை ஒன்றும் கூட உள்ளது. சிவனின் தெய்வீகச் செயல்களைப் பற்றி எதுவும் கிடையாது. ஸ்ரீகிருஷ்ணரது பிறந்தநாள் எப்போது இருந்தது? கீதையின் பிறந்தநாள் எப்போது இருந்தது? சிறிது வளர்ந்த பின்னரே ஸ்ரீ கிருஷ்ணரால் ஞானத்தை உபதேசிக்க முடியும். குழந்தை ஸ்ரீ கிருஷ்ணரை எவ்வாறு ஒரு கூடையில் சுமந்;து ஆற்றைக் கடந்து சென்றனர் என்பதைக் காட்டுகிறார்கள். அவர் இளைஞனாக இரதத்தில் நின்றவாறு சக்கரத்தைச் சுழற்றுகின்றார் என்றும் காட்டப்படுகிறது. அப்பொழுது அவருக்கு 16 அல்லது 17 வயதாக இருக்க வேண்டும். அவரின் ஏனைய படங்கள் அனைத்தும் அவரின் குழந்தைப் பருவத்திற்கு உரியவை. எப்பொழுது அவர் கீதையை உபதேசித்தார்? அவர் இன்னாரைக் கடத்தினார், இதனைச் செய்தார், அதனைச் செய்தார் என அவர்கள் கூறிய காலத்தில் அவர் கீதையை உபதேசித்திருக்க முடியாது. அந்த நேரத்தில் அவரிடம் இந்த ஞானம் இருந்திருக்கும் எனக் கூறுவது சரியாகத் தென்படவில்லை. அவர் முதிர்ச்சி அடையும்போதே இந்த ஞானத்தைக் கூறி இருக்க முடியும். அவர் கீதையை அதற்குச் சிறிது காலத்தின் பின்னரே உபதேசித்திருப்பார். சிவன் என்ன செய்தார்? அவர்களுக்கு எதுவுமே தெரியவில்லை; அவர்கள் அறியாமை எனும் உறக்கத்தில் உறங்குகின்றனர். தந்தை கூறுகிறார்: எவரும் எனது வரலாற்றை அறிய மாட்டார்கள். நான் என்ன செய்தேன்? நான் மாத்திரமே தூய்மையாக்குபவர் என்று அழைக்கப்படுகிறேன். நான் வரும் பொழுது கீதையுடனேயே வருகிறேன். நான் ஒரு வயோதிப, சாதாரண, அனுபவமுள்ள இரதத்தினுள் பிரவேசிக்கின்றேன். பாரதத்திலேயே நீங்கள் சிவனின் பிறந்தநாளையும், ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்தநாளையும், கீதையின் பிறந்தநாளையும் கொண்டாடுகிறீர்கள். இவை மூன்றுமே பிரதானமானவை. இராமரின் பிறந்த நாளும் பின்னரேயே நிகழ்கிறது. இந்நேரத்தில் நடப்பவை அனைத்தும் பின்னர் கொண்டாடப்படுகின்றன. சத்திய, திரேதா யுகங்களில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முதலியன எதுவும் இல்லை. சந்திர வம்சம், சூரிய வம்சத்திடம் இருந்து தனது ஆஸ்தியைப் பெறுகிறது; அங்கு எவருக்கும் புகழ் இல்லை. அவர்கள் அரசர்களின் முடிசூட்டு விழாக்களையே கொண்டாடுகிறார்கள். இந்நாட்களில் ஒவ்வொருவரும் தங்கள் பிறந்த நாட்களைக் கொண்டாடுகிறார்கள். அது ஒரு பொதுவான விடயம். ஸ்ரீ கிருஷ்ணர் பிறவி எடுத்து, வளர்ந்து பெரியவரானதும் இராச்சியத்தை ஆட்சி செய்தார். அதற்கான புகழ் என்ற கேள்விக்கே இடமில்லை. சத்திய, திரேதா யுகங்களில் சந்தோஷ இராச்சியம் நிலவியது. அந்த இராச்சியம் எப்பொழுது, எப்படி ஸ்தாபிக்கப்பட்டது? இது குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் உள்ளது. தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, நான் ஒவ்வொரு கல்பத்திலும் சங்கமயுகத்தில் வருகிறேன். கலியுக இறுதியில் தூய்மையற்ற உலகமும், சத்தியயுக ஆரம்பத்தில் அத்தூய உலகமும் இருக்கின்றன. நானே தந்தையாக இருப்பதுடன், உங்களின் ஆஸ்தியையும் உங்களுக்குக் கொடுக்கிறேன். கடந்த கல்பத்திலும் நான் உங்களுக்கு உங்கள் ஆஸ்தியைக் கொடுத்தேன், இதனாலேயே நீங்கள் கொண்டாடுகிறீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் பெயரை மறந்ததனால், ஸ்ரீ கிருஷ்ணரின் பெயரைப் புகுத்தி விட்டீர்கள். சிவனே அனைவரிலும் அதிமகத்தானவர். முதலில் அவரின் பிறந்தநாளின் பின்னரே சரீரங்களை உடைய மனிதர்களின் பிறந்தநாள் வர முடியும். உண்மையில் ஆத்மாக்கள் அனைவரும் மேலிருந்தே கீழே இறங்கி வருகின்றார்கள். நானும் அவதாரம் எடுக்கிறேன். ஸ்ரீ கிருஷ்ணர் தனது தாயின் கருப்பைப் பையின் மூலம் பிறந்து, பராமரிப்பையும் பெறுகிறார். அனைவரும் மறுபிறவி எடுக்கவே வேண்டும். சிவபாபா வந்த பொழுதிலும் அவர் மறுபிறவி எடுப்பதில்லை. ஆகவே, தந்தை இங்கிருந்து, இதனை விளங்கப்படுத்துகிறார். திரிமூர்த்திகளாக பிரம்மா, விஷ்ணு, சங்கரர் காட்டப்பட்டுள்ளனர். சிவனுக்கென ஒரு சரீரம் இல்லாததாலேயே ஸ்தாபனை பிரம்மா மூலம் நடைபெறுகிறது. தான் இவரின் வயோதிப சரீரத்தில் பிரவேசம் செய்வதாக அவரே இங்கிருந்து விளங்கப்படுத்துகிறார். இவரது சொந்தப் பிறவிகளைப் பற்றியே இவருக்குத் (பிரம்மா) தெரியாது. இப்பிறவி இவரின் பல பிறவிகளில் இறுதியானது. சிவனின் பிறந்தநாளா அல்லது ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்தநாளா மகத்தானது என்பதை முதலில் விளங்கப்படுத்துங்கள். கீதையை உபதேசித்தவர் ஸ்ரீ கிருஷ்ணரே எனில், கீதையின் பிறந்ததினம் ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்ததினத்தில் இருந்து பல வருடங்களுக்குப் பின்னரே, அவர் முதிர்ச்சியான பின்னரே வரும். இவ்விடயங்கள் அனைத்தும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். எவ்வாறாயினும் சிவனின் பிறந்ததினத்திற்கு உடனடியாக அடுத்ததாக கீதையின் பிறந்ததினமே வருகிறது. உங்கள் புத்தியில் இக்கருத்துக்கள் அனைத்தும் இருக்க வேண்டும். பல கருத்துக்கள் உள்ளன. அவற்றைக் குறித்து வைத்திராவிடில் நீங்கள் அவற்றை நினைவில் வைத்திருக்க முடியாது. பாபா மிக அருகில் உள்ளார். இது அவரது இரதமும் ஆகும், அப்படியிருந்தும் அந்த நேரத்தில் கருத்துக்கள் அனைத்தையும் நினைவு செய்வது சிரமமானது. பாபா விளங்கப்படுத்தி உள்ளார்: இரு தந்தையரினதும் இரகசியத்தை அனைவருக்கும் விளங்கப்படுத்துங்கள். அவர்கள் சிவபாபாவின் பிறந்தநாளைக் கொண்டாடுவதனால், அவர் நிச்சயமாக வர வேண்டும். தங்கள் சொந்தச் சமயங்களை ஸ்தாபிப்பதற்கு கிறிஸ்துவும் புத்தரும் ஏனையோரும் வருவது போல், இவரும் ஒரு தர்மத்தை ஸ்தாபிப்பதற்கு இன்னொருவரில் பிரவேசம் செய்கின்ற, ஓர் ஆத்மா. அவரே உலகைப் படைப்பவரான, தந்தையாகிய சுவர்க்கக் கடவுள். ஆகவே, அவர் நிச்சயமாக ஒரு புதிய உலகைப் படைப்பார். அவர் ஒரு பழைய உலகைப் படைக்க மாட்டார். அந்தப் புதிய உலகம் சுவர்க்கம் எனப்படுகின்றது, இப்பொழுது அது நரகமாக உள்ளது. பாபா கூறுகிறார்: நான் ஒவ்வொரு கல்பத்திலும் சங்கம யுகத்தில் வந்து, குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜயோக ஞானத்தைத் தருகின்றேன். இதுவே பாரதத்தின் புராதன யோகம். அதனை யார் கற்பித்தார்? ஒரு பக்கம் அவர்கள் சிவபாபாவின் பெயரை மறைத்து விட்டனர். பின்னர் கீதையின் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர் அல்லது விஷ்ணு முதலியோர் எனக் கூறுகிறார்கள். சிவபாபாவே இராஜயோகத்தைக் கற்பித்தார். ஆனால் எவருக்குமே இது தெரியாது. அவர்கள் சிவபாபாவின் பிறந்ததினத்தை அசரீரியானவரின் பிறந்ததினமாகக் காட்டுகிறார்கள். அவர் எவ்வாறு வந்தார், வந்தபொழுது என்ன செய்தார்? அவரே அனைவருக்கும் சற்கதி அளிப்பவரும், விடுதலை அளிப்பவரும், வழிகாட்டியும் ஆவார். இப்பொழுது ஆத்மாக்கள் அனைவருக்கும் பரமாத்;மாவான வழிகாட்டி தேவை. அவரும் ஓர் ஆத்மாவே. மனிதருக்கு மனிதர்கள் வழிகாட்டிகளாக இருப்பது போல் ஓர் ஆத்மா, ஆத்மாக்களுக்கு வழிகாட்டியாகத் தேவைப்படுகின்றார். அது பரமாத்மாவாக மாத்திரமே இருக்க முடியும். மனிதர்கள் அனைவரும் மறு பிறவி எடுத்துத் தூய்மை அற்றவர்கள் ஆகுகின்றார்கள். அப்படியெனின் யார் அவர்களைத் தூய்மையாக்கித் திரும்பவும் அழைத்துச் செல்வார்கள்? தந்தை கூறுகிறார்: நான் மாத்திரமே இங்கு வந்து, தூய்மையாகும் வழியை உங்களுக்குக் காண்பிக்கிறேன். என்னை நினைவு செய்யுங்கள்! “உங்கள் சரீர உறவினர்களைத் துறவுங்கள்!" என ஸ்ரீ கிருஷ்ணரால் கூற முடியாது. அவர் 84 பிறவிகளை எடுக்கிறார். அவர் அனைத்து உறவுமுறைகளையும் கொண்டுள்ளார். தந்தை தனக்கென ஒரு சரீரம் அற்றவர். தந்தை இந்த ஆன்மீக யாத்திரையை உங்களுக்குக் கற்பிக்கிறார். இந்த ஆன்மீக ஞானம் ஆன்மீகத் தந்தையிடம் இருந்து ஆன்மீகக் குழந்தைகளுக்குக் கிடைக்கிறது. ஸ்ரீ கிருஷ்ணர் எவருடைய ஆன்மீகத் தந்தையுமாக இருப்பதில்லை. நானே அனைவரினதும் ஆன்மீகத் தந்தை. நான் வழிகாட்டியாக வந்துள்ளேன். “விடுதலையளிப்பவர், வழிகாட்டி, பேரானந்தம் உடையவர், அமைதியானவர், என்றும் தூய்மையானவர்" என்றெல்லாம் என்னைப் பற்றியே கூறப்படுகிறது. ஆத்மாக்களான உங்களுக்கு நான் இப்பொழுது இந்த ஞானத்தைத் தருகிறேன். தந்தை கூறுகிறார்: நான் இச்சரீரத்தின் மூலம் ஆத்மாக்களாகிய உங்களுக்கு இந்த ஞானத்தைத் தருகிறேன். நீங்களும் உங்கள் சரீரங்கள் மூலம் இந்த ஞானத்தைப் பெறுகிறீர்கள். அவரே தந்தையாகிய கடவுள். அவரின் வடிவமும் காட்டப்பட்டுள்ளது. ஆத்மா எவ்வாறு புள்ளி வடிவமாக உள்ளாரோ, அவ்வாறே பரமாத்மாவும் புள்ளி வடிவமானவர். இதுவே இயற்கையின் அதிசயம். உண்மையில் எவ்வாறு அந்தச் சின்னஞ்சிறிய நட்சத்திரங்களில் 84 பிறவிகளும் பதியப்பட்டிருக்கின்றன என்பதே மிகப்பெரிய அதிசயம்! இது ஓர் அதிசயம்! இந்நாடகத்தில் தந்தைக்கும் ஒரு பாகம் உண்டு. பக்தி மார்க்கத்திலும் உங்களுக்கு அவர் சேவை செய்கிறார். 84 பிறவிகளின் பாகங்கள் ஆத்மாக்களாகிய உங்களில் அநாதியாகவே பதியப்பட்டுள்ளன. இது இயற்கையின் அதிசயம் என்று அழைக்கப்படுகின்றது. இதனை எப்படி உங்களால் விபரிக்க முடியும்? ஆத்மா மிகவும் சின்னஞ் சிறியவர்! மக்கள் இவற்றைக் கேள்வியுறும் போது ஆச்;சரியப்படுவார்கள். ஓர் ஆத்மா ஒரு நட்சத்திரம் போன்றவர். ஆத்மாக்களாகிய நீங்கள் 84 பிறவிகளை மிகச்சரியாக அனுபவம் செய்கிறீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் சந்தோஷத்தையும் மிகச்சரியாக அனுபவம் செய்கிறீர்கள். இது இயற்கையின் ஓர் அதிசயம். தந்தையும் பரமாத்மாவாகிய, ஓர் ஆத்மாவே. இந்த ஞானம் முழுவதும் அவரில் பதியப்பட்டுள்ளது. அவரே குழந்தைகளாகிய உங்களுக்கு இதனை விளங்கப்படுத்துகிறார். இவை புதிய விடயங்கள். வந்து, இவற்றைச் செவிமடுக்கும் புதியவர்கள், உங்கள் ஞானம் எந்தவொரு சமயநூல்கள் போன்றவற்றிலும் குறிப்பிடப்படவில்லை எனக் கூறுகிறார்கள். ஆனாலும் சென்ற கல்பத்தில் இதனைச் செவிமடுத்துத் தங்களது ஆஸ்தியைப் பெற்றவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்கும். அதற்குக் காலம் எடுக்கும். பல பிரஜைகள் உருவாக்கப்படுகிறார்கள். அது இலகுவானது. ஓர் அரசர் ஆகுவதற்கு முயற்சி தேவைப்படுகின்றது. பெருஞ் செல்வத்தைத் தானம் செய்யும் மக்கள், தமது அடுத்த பிறவியில் ஓர் அரச குடும்பத்தில் எடுக்கிறார்கள். தங்கள் தைரியத்திற்கேற்ப தானம் செய்யும் ஏழைகளும் அரசர்கள் ஆகுகிறார்கள். முழுமையான பக்தர்களாக உள்ளவர்களும் தான தர்மங்கள் செய்கின்றனர். செல்வந்தர்களே அதிக பாவங்கள் செய்கின்றார்கள். ஏழைகள் அதிக நம்பிக்கை வைக்கின்றனர். ஏழைகள் தம்மிடமுள்ள ஒரு சிலவற்றையும் பெரும் அன்புடன் கொடுப்பதனால் அதற்குப் பலனாக அவர்கள் பெருமளவைப் பெறுகிறார்கள். ஏழைகள் பெருமளவு பக்தியும் செய்கிறார்கள். எனக்கு ஒரு காட்சியை அருளுங்கள் அல்லது நான் எனது கழுத்தை வெட்டுவேன்! செல்வந்தர்கள் இதைச் செய்வதில்லை. ஏழைகளுக்கே காட்சி கிடைக்கிறது. தான தர்மம் செய்பவர்களும், அரசர்கள் ஆகுபவர்களும் அவர்களே. பணம் அதிகம் உள்ளவருக்கு அகங்காரமும் அதிகளவில் இருக்கிறது. இங்கும் ஏழைகளே 21 பிறவிகளுக்குச் சந்தோஷத்தைப் பெறுகிறார்கள். ஏழைகளே அதிகளவில் உள்ளனர்; செல்வந்தர்கள் பின்னரே வருவார்கள். மிகுந்த செழிப்புடன் இருந்த பாரதம் எவ்வாறு இப்பொழுது மிக ஏழ்மை நிலையை அடைந்துள்ளது என்பது உங்களுக்கு மாத்திரமே விளங்குகிறது. மாளிகைகள் முதலியவை எல்லாம் பூகம்பங்கள் முதலியவற்றால் அழிந்து, பாரதம் ஏழையாகும். இராவண இராச்சியம் ஏற்படும் பொழுது, விரக்திக் கூக்குரல்கள் பல எழுகின்றன. எனவே அதே விடயங்கள் இருப்பதில்லை. அனைத்திற்கும் ஓர் ஆயுட்காலம் உள்ளது. அங்கு மக்கள் நீண்ட ஆயுள் உடையவர்களாக இருப்பதைப் போலவே, கட்டடங்களும் நீண்ட ஆயுளைக் கொண்டிருக்கின்றன. பல பெரிய கட்டடங்கள், தங்கம், பளிங்கு முதலியவற்றால் தொடர்ந்து கட்டப்படும். தங்கத்தாலான கட்டடங்கள் மேலும் உறுதி வாய்ந்தவை. நாடகம் (சினிமா) ஒன்றில் யுத்தம் நடக்கும் பொழுது எவ்வாறு கட்டடங்கள் முழுமையாக அழிக்கப்படுகின்றன எனவும், அவை எவ்வாறு மீண்டும் கட்டப்படுகின்றன எனவும் காட்டுகிறார்கள். அவை அப்படிக் கட்டப்படுகின்றன. சுவர்க்கத்தில் மாளிகைகள் கட்டப்பட்ட போது, மர வேலையாளர் போன்றவர்கள் எவ்வாறு அவற்றைக் கட்டுகிறார்கள் எனக் காண்பிப்பதில்லை. ஆம், அதே கட்டடங்கள் அங்கே இருக்கும் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும் பொழுது உங்களுக்குக் காட்சிகள் கிடைக்கும். அறிவு இதனையே கூறுகிறது. குழந்தைகளான உங்களுக்கும் இவற்றிற்றும் தொடர்பேதும் இல்லை. குழந்தைகளாகிய நீங்கள் கற்றுச் சுவர்க்க அதிபதிகளாக வேண்டும். சுவர்க்கமும், நரகமும் பலமுறை வந்து சென்று இருக்கின்றன. இப்பொழுது இரண்டும் கடந்து விட்டன. இப்பொழுது இது சங்கமயுகம். இந்த ஞானம் சத்திய யுகத்தில் இருக்க மாட்டாது. இந்நேரத்தில் குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த ஞானம் முழுவதும் உள்ளது. இலக்ஷ்மி நாராயணனுக்கு அவர்களது இராச்சியத்தை யார் கொடுத்தார்கள்? குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது இது தெரியும். அவர்கள் தங்கள் ஆஸ்தியை யாரிடம் இருந்து பெற்றனர்? அவர்கள் இங்கு கற்றுச் சுவர்க்க அதிபதிகள் ஆகினார்கள். இங்கே சத்திரசிகிச்சை நிபுணர்கள் பெரிய வைத்தியசாலைகளைக் கட்டுவது போல், அவர்கள் அங்கு சென்று மாளிகைகள் போன்றவற்றைக் கட்டுகிறார்கள். தந்தை தினமும் பற்பல மிக நல்ல கருத்துக்களைக் குழந்தைகளான உங்களுக்குத் தருகிறார். மிகுந்த அன்புடன் தந்தை இங்கிருந்து விளங்கப்படுத்துவது போல், மக்கள் அனைவரையும் விழித்தெழச் செய்து அவர்களுக்குப் பாதையைக் காட்டுவதே உங்கள் தொழிலாகும். சரீர உணர்விற்கு அவசியமே இல்லை. தந்தை ஒருபொழுதும் சரீர உணர்வு உடையவராக இருக்க முடியாது. ஆத்ம உணர்வு உடையவர் ஆகுவதற்கே நீங்கள் சகல முயற்சிகளையும் செய்கிறீர்கள். ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுபவர்களால், மக்களுடன் அமரந்திருந்து பலருக்கு நன்மை அளிப்பதற்கு, தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க முடியும். சரீர உணர்வு வரும்பொழுது, ஏனைய அனைத்து விகாரங்களும் வருகின்றன. சண்டையிடல், சச்சரவு செய்தல், அதிகாரம் செலுத்துதல் போன்ற இவை அனைத்தும் சரீர உணர்வுகளே. உங்களுடையது இராஜயோகம், ஆயினும் நீங்கள் மிகவும் சாதாரணமாகவே இருக்க வேண்டும். நீங்கள் செய்யும் மிகச் சிறிய செயலிலும் அகங்காரம் ஏற்படுகிறது. நீங்கள் நாகரீகமான கைக்கடிகாரத்தைக் காணும் போது, உங்கள் இதயம் அதனை அணிய விரும்புகிறது; நீங்கள் தொடர்ந்து அதனைப் பற்றிச் சிந்திக்கின்றீர்கள். அதுவும் சரீர உணர்வு என்றே அழைக்கப்படுகின்றது. உங்களிடம் விலை உயர்ந்த மிகச் சிறந்த பொருள் ஒன்று இருக்குமாயின், நீங்கள் அதனைக் கவனமாகப் பராமரிக்க வேண்டும். நீங்கள் அதனைத் தொலைத்தீர்கள் ஆயின், அதனைப் பற்றிய எண்ணங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். உங்கள் இறுதி நேரத்தில் எதையாவது நினைவில் வைத்திருந்தீர்கள் ஆயின் உங்கள் அந்தஸ்து அழிக்கப்பட்டு விடும். இப்பழக்கங்கள் சரீர உணர்விற்கு உரியன. அப்பொழுது சேவை செய்வதற்குப் பதிலாக நிச்சயமாக அவச்சேவை செய்யப்படும். இராவணன் உங்களைச் சரீர உணர்வு உடையவர்கள் ஆக்கி விட்டான். பாபா எவ்வாறு அனைத்தையும் மிகவும் எளிமையாகச் செய்கிறார் என்பதை உங்களால் பார்க்க முடியும். ஒவ்வொருவரின் சேவையும் பார்க்கப்படுகிறது. மகாராத்திக் குழந்தைகள் தம்மை வெளிப்படுத்த வேண்டும். மகாராத்திகளுக்கே எழுதப்பட்டுள்ளது: இந்த இடத்திற்குச் சென்று சொற்பொழிவு ஆற்றுங்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் அழைக்கிறார்கள். எவ்வாறாயினும், குழந்தைகளில் பெருமளவு சரீர உணர்வு உள்ளது. அவர்கள் சொற்பொழிவு கொடுப்பதில் திறமைசாலிகள் ஆயினும், அவர்கள் மத்தியில் அந்த ஆன்மீக அன்பு இல்லை. சரீர உணர்வு உங்களை உவர்நீர் போல் ஆக்குகிறது. நீங்கள் அற்ப விடயங்களிலும் மிக விரைவில் குழப்பமடையக் கூடாது. பாபா இதனாலேயே கூறுகிறார்: யாரிடமாவது வினவ வேண்டுமாயின், பாபாவிடம் கேளுங்கள்! சிலர் கேட்கிறார்கள்: பாபா உங்களுக்கு எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள்? பாபா கூறுகின்றார்: எனக்கு எண்ணற்ற குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனால் சிலர் தகுதியற்றவர்கள், ஏனையோர் தகுதி உள்ளவர்களாகவும் மிக நல்லவர்களாகவும் உள்ளனர். நீங்கள் அப்படிப்பட்ட தந்தைக்குக் கீழ்ப்படிவு உள்ளவர்களாகவும் அவரின் மீது நம்பிக்கை உள்ளவர்களாகவும் இருங்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. சரீர உணர்வு உடையவராகி, நாகரீகத்தைப் பின்பற்ற வேண்டாம். பலவற்றில் ஆர்வம் கொண்டிருக்காதீர்கள். தொடர்ந்து மிக எளிமையாக வாழுங்கள்.2. ஒருவரோடு ஒருவர் மிகுந்த ஆன்மீக அன்புடன் பழகுங்கள். ஒருபோதும் உவர்நீர் போல் ஆக வேண்டாம். பாபாவின் தகுதிவாய்ந்த குழந்தைகள் ஆகுங்கள். ஒருபோதும் அகங்காரம் உடையவர்களாக வேண்டாம்.
ஆசீர்வாதம்:
நீங்கள் சதா சந்தோஷ இதயமுடையவராக இருந்து, உங்கள் பாக்கியத்தினதும், பாக்கியத்தை அருள்பவரினதும் புகழைப் பாடுவீர்களாக.பிறப்பிலேயே பிராமணக் குழந்தைகள் அனைவரும் தங்கள் பிறப்புரிமையாக ஒரு கிரீடத்தையும், சிம்மாசனத்தையும், திலகத்தையும் பெறுகின்றார்கள். ஆகவே, இப்பிரகாசிக்கின்ற பாக்கிய நட்சத்திரத்தைப் பார்த்து, உங்கள் பாக்கியத்தினதும், பாக்கியத்தை அருள்பவரினதும் புகழைத் தொடர்ந்தும் பாடுங்கள், நீங்கள் தெய்வீகக் குணங்கள் அனைத்தும் நிறைந்தவர்கள் ஆகுவீர்கள். உங்கள் பலவீனங்கள் பற்றிய புகழைப் பாடாதீர்கள், ஆனால் தொடர்ந்தும் உங்கள் பாக்கியத்தின் புகழைப் பாடுங்கள். கேள்விகள் அனைத்திற்கும் அப்பால் இருப்பதால் மாத்திரமே சதா சந்தோஷ இதயம் உடையவராக இருக்கின்ற ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள். அப்பொழுதே உங்களால் பிறரையும் சந்தோஷமானவர்கள் ஆக்க இயலும்.
சுலோகம்:
ஒரேயொருவருக்கு உரியவராக இருத்தலும் (ஏக்னாமி), சிக்கனமாக இருத்தலுமே பிராமண வாழ்வின் வெற்றிக்கான அடிப்படை.அவ்யக்த சமிக்கை: உங்களின் நம்பிக்கை அத்திவாரத்தை உறுதியானதாக்கி, சதா பயமற்றவராகவும் கவலையற்றவராகவும் இருங்கள்.
நம்பிக்கை உங்களைக் கவலையற்றவர்கள் ஆக்குவதுடன், ஒரு கவலையற்ற ஸ்திதியில் பணி எதனையும் மேற்கொள்பவர்கள், நிச்சயமாக அதில் வெற்றி அடைகின்றார்கள். இது ஏனெனில், நீங்கள் ஒரு கவலையற்ற ஸ்திதியில் இருக்கும் பொழுதே, உங்கள் புத்தி அனைத்தையும் மிகச்சரியாகத் தீர்மானிக்கின்றது. உங்கள் புத்தியானது நம்பிக்கை கொண்டிருப்பதுடன், ஒரு கவலையற்ற ஸ்திதியிலும் இருப்பதே மிகச்சரியான தீர்மானத்திற்கான அடிப்படை. அந்த ஸ்திதியில் எதனையும் சிந்திக்க வேண்டிய தேவை இல்லை.