04.05.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்கள் புத்தியில் நம்பிக்கை வைத்து, தொடர்ந்தும் தந்தையின் ஒவ்வொரு வழிகாட்டல்களையும் பின்பற்றுங்கள். அவரின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதனால் மாத்திரமே, நீங்கள் மேன்மையானவர் ஆகுவீர்கள்.

கேள்வி:
எக்குழந்தைகள் கடவுளின் உண்மையான உதவியாளர்கள் என அழைக்கப்படுகின்றனர்?

பதில்:
ஓர் இராச்சியத்தைப் பெறுவதற்கு முயற்சி செய்பவர்களும், பிறரைத் தமக்குச் சமமாக்குபவர்களும் ஆவர். இவ்வாறாகத் தம்மைக் கடவுளின் சேவையில் ஈடுபடுத்துபவர்களே கடவுளின் உண்மையான உதவியாளர்கள். அவர்களைப் பிறர் பார்க்கும்பொழுது, அவர்களும் ஒத்துழைப்பவர்கள் ஆகுகின்றார்கள்.

ஓம் சாந்தி.
நீங்கள் இங்கே அமர்ந்திருக்கும் பொழுது, நீங்கள் அனைவரிடமும் சிவபாபாவை நினைவு செய்யுமாறு கூறுகிறீர்கள். சிவபாபா இருக்கின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். மக்கள் அவரது ஆலயத்துக்குச் செல்கின்றார்கள், ஆனால் அவர் யார் என்பதை வேறு எவருமன்றிக் குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். ஆகையால், சிவபாபாவை அவர்களுக்கு ஞாபகப்படுத்துங்கள். இங்கு அமர்ந்திருக்கும் சில குழந்தைகளின் புத்திகளின் யோகம் எங்கும் அலைந்து திரிகின்றது. இதனாலேயே அவர்களுக்கு நினைவூட்டுவது உங்களின் கடமை ஆகும்: சகோதர, சகோதரிகளே உங்களுக்கு ஆஸ்தியைத் தரக்கூடிய தந்தையை நினைவு செய்யுங்கள். நீங்கள் இப்பொழுது உண்மையான சகோதர, சகோதரிகள் ஆவீர்கள். பௌதீகமான முறையில், ஆணும் பெண்ணுமாக இருப்பதால், நீங்கள் சகோதர, சகோதரிகளாக இருக்கின்றீர்கள். ஒரு சொற்பொழிவு ஆற்றும்பொழுதும், நீங்கள் “சகோதர சகோதரிகளே” என்றே அழைக்கின்றீர்கள். அது சரீர ரீதியில் சகோதர, சகோதரிகளாக இருத்தல் என்று அர்த்தமாகும். இங்கே அவ்வாறல்ல. இங்கே, படைப்பவரான, உங்கள் தந்தையை நினைவு செய்யுமாறு ஆத்மாக்களான உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் அவரிடமிருந்து ஆஸ்தியைப் பெற இருக்கின்றீர்கள்; அதில் ஒரு வேறுபாடு உள்ளது. ‘சகோதர, சகோதரிகள்’ என்ற வார்த்தைகள் பொதுவானவை. இங்கே, குழந்தைகளாகிய உங்களிடம் தந்தை கூறுகின்றார்: உங்கள் தந்தையான, என்னை நினைவு செய்யுங்கள்! சிவபாபாவே ஆன்மீகத் தந்தை ஆவார். பிரஜாபிதா பிரம்மா பௌதீகத் தந்தை ஆவார். பாபா, தாதா இருவருமே கூறுகின்றார்கள்: குழந்தைகளே, தந்தையை நினைவு செய்யுங்கள், உங்கள் புத்தி வேறெங்கும் அலைபாய்வதை அனுமதிக்காதீர்கள். புத்தி பெருமளவில் அலைகிறது. பக்தி மார்க்கத்திலும் இதுவே நிகழ்கின்றது. அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் அல்லது வேறொரு தேவ விக்கிரகத்தின் முன்னால் அமர்ந்திருந்து, மாலையின் மணிகளை உருட்டுகின்றார்கள். எவ்வாறாயினும், அவ்வேளையில் அவர்களின் புத்தி வேறெங்கோ அலைகிறது. தேவர்கள் யார்? அவர்கள் எவ்வாறு, எப்பொழுது தமது இராச்சியத்தைப் பெறுகின்றார்கள்? எவருக்கும் இது தெரியாது. குருநானக் சீக்கிய சமயத்தை ஸ்தாபித்தார் என்பதைச் சீக்கியர்கள் அறிவார்கள். அவருக்குப் பின்னர் பேரக் குழந்தைகளும், குருமார்களும் அவரின் பின்னர் வந்தார்கள்; அவர்கள் தொடர்ந்தும் மறுபிறவி எடுக்கின்றனர். எவரும் இவ்விடயங்களைப் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் சதா குருநானக்கை நினைவு செய்வதில்லை. அச்சா, உதாரணமாக, சிலர் குருநானக்கையோ, புத்தரையோ அல்லது தத்தமது சமய ஸ்தாபகரையோ நினைவு செய்தாலும், இவ்வேளையில் அந்த ஸ்தாபகர் எங்கிருக்கின்றார் என்பது அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் வெறுமனே அவர் ஒளியுடன் கலந்து விட்டார் என்றோ அல்லது அவர் ஒலிக்;கு அப்பால் சென்று விட்டார் என்றோ அல்லது ஸ்ரீகிருஷ்ணர் எங்கும் இருக்கின்றார் என்றோ கூறுகின்றார்கள். தாம் பார்க்கும் இடமெல்லாம் கிருஷ்ணரை மாத்திரம் அல்லது இராதையை மாத்திரம் காண்பதாக அவர்கள் தொடர்ந்தும் கூறுகின்றார்கள். தந்தை இங்கே அமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார்: பாரத மக்களான நீங்கள் தேவர்களாக இருந்தீர்கள். உங்கள் முகங்கள் மனிதர்களுடையதைப் போன்றிருந்தன, ஆனால் உங்கள் குணாதிசயங்கள் தேவர்களுக்கு உரியவையாக இருந்தன. தேவர்களின் விக்கிரகங்கள் இருக்கின்றன. விக்கிரகங்கள் எதுவும் இல்லாதிருந்தால், இதனை உங்களால் புரிந்து கொள்ள முடியாதிருக்கும். தந்தை மாத்திரமே வந்து, இராதைக்கும் கிருஷ்ணருக்கும், இலக்ஷ்மிக்கும் நாராயணனுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி விளங்கப்படுத்துகின்றார். இதனை எங்களுக்கு அசரீரியான பாபாவே விளங்கப்படுத்துகின்றார் என நீங்கள் எவருக்குமே விளங்கப்படுத்தலாம். உண்மையில், அனைவரும் அசரீரியானவர்களே. ஆத்மாக்கள் அசரீரியானவர்கள். பின்னர் ஆத்மாக்கள் சரீர வடிவங்களின் மூலம் பேசுகின்றனர். அசரீரியான ஒருவரால் பேச முடியாது. எங்கள் பாபாவே அவர்களது பாபாவும் என்று நீங்கள் விளங்கப்படுத்தலாம். சிவபாபாவே ஞானக்கடலும், அமைதிக்கடலும் ஆவார். அவர் எல்லையற்ற தந்தை. அவருக்கும் ஒரு சரீரம் தேவை. அவரே கூறுகின்றார்: நான் பிரம்மாவின் இந்தச் சரீரத்தில் பிரவேசித்தால் மாத்திரமே, பிராமண தர்மத்தை ஸ்தாபிக்க முடியும். பிரம்மாவினூடாகவே பிராமணர்கள் எனும் படைப்பு படைக்கப்படுகின்றது. ஆகையால், தந்தை வேறு எவருக்குமன்றி, பிராமணக் குழந்தைகளுக்கு மாத்திரமே விளங்கப்படுத்துகின்றார். அவர் குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே விளங்கப்படுத்துகின்றார். நாங்கள் சிவபாபாவின் குழந்தைகள் என்பதால் நாங்களும் கடவுள்கள் என்றில்லை; இல்லை. தந்தை தந்தையே, குழந்தைகள் குழந்தைகளே. ஆம், ஒரு குழந்தை வளர்ந்து பெரியவராகிக் குழந்தைகளைப் படைப்பதால், தந்தையாகும் பொழுது, அவரும் ஒரு தந்தையாக இருப்பார். அந்த ஒரேயொருவருக்குப் பல குழந்தைகள் உள்ளனர். அவர் புத்தியில் நம்பிக்கை வைத்துள்ள குழந்தைகளுக்கு மாத்திரமே விளங்கப்படுத்துகின்றார். புத்தியில் நம்பிக்கை உள்ளவர்கள் தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றுகின்றார்கள், ஏனெனில், ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால் மாத்திரமே நீங்கள் மேன்மையானவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் அந்தத் தேவர்களைப் போல் ஆகுகின்றீர்கள் என்பதை இப்பொழுது புரிந்து கொள்;கின்றீர்கள். நாங்கள் பிறவிபிறவியாகத் தேவர்களின் புகழைத் தொடர்ந்தும் பாடி வந்துள்ளோம், இப்பொழுது நாங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம், அவர்களைப் போன்றவர்கள் ஆக வேண்டும். இராச்சியம் ஸ்தாபிக்கப்பட வேண்டும். அனைவருமே ஸ்ரீமத்தை முழுமையாகப் பின்பற்றுவார்கள் என்றில்லை. இராச்சியம் மிகவும் பெரியது என்பதால், அவர்கள் வரிசைக்கிரமமாகவே அதனைப் பின்பற்றுவார்கள். ஓர் இராச்சியத்தில், பல வகையினரும் உள்ளனர்: பிரஜைகள், பணிப்பெண்கள், வேலையாட்கள், சுடலையாண்டிகள் போன்றோர். அனைவருமே தேவைப்படுகிறார்கள். இத்தகைய செயற்பாடுகள் உள்ளவர்களையும், எவ்வாறு இன்னார் சுடலையாண்டிக் குடும்பத்திற்குள் செல்கிறார் என்பதையும் நீங்கள் காட்சிகள் மூலம் காண்பீர்கள். ஒரேயொரு சுடலையாண்டி மாத்திரமே இருக்க மாட்டார்; அவருடைய குடும்பமே இருக்கும். இப்பொழுது சுடலையாண்டிகளின் சங்கமும் உள்ளது; அவர்கள் அனைவரும் ஒன்றாகச் சந்திப்பார்கள். அவர்கள் வேலை நிறுத்தம் செய்தால், அனைவருமே வேலை செய்வதை நிறுத்தி விடுகின்றார்கள். சத்தியயுகத்தில் அவ்வாறான விடயங்கள் நிகழ்வதில்லை. நீங்கள் ஏனையோரிடம் காட்டி, இதில் நீங்கள் என்னவாக வர விரும்புகின்றீர்கள் என வினவுகின்ற ஒரு படமும் உள்ளது: நீங்கள் ஒரு சட்டநிபுணராகவா அல்லது தேவராகவா ஆகுவீர்கள்? உங்கள் முழு இராச்சியமும் ஸ்தாபிக்கப்படுகின்றது. இது சிறியதொரு விடயம் அல்ல! எல்லையற்ற தந்தை இங்கே அமர்ந்திருந்து எல்லையற்ற விடயங்களை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்; அவை உங்கள் புத்திகளில் நிலைத்திருக்க வேண்டும். நாங்கள் முயற்சி செய்து எதிர்காலத்தில் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவோம். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால், நாங்கள் அதிமேன்மையான இராஜ அந்தஸ்தைக் கோருவோம். நாங்கள் பிறரை எங்களுக்குச் சமமாக்கும் பொழுது, இறை உதவியாளர்கள் என்று அழைக்கப்படுகின்றோம். ஒருவர் செய்கின்ற எதுவும் மறைக்கப்பட முடியாது. நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும் பொழுது, அனைத்தும் அறிந்து கொள்ளப்படும். இதுவே ஞான ஒளி எனப்படுகின்றது; நீங்கள் தொடர்ந்தும் ஒளியைப் பெறுகின்றீர்கள். மக்கள் எதனையும் அறியார்கள். அவர்கள் தொடர்ந்தும் நிலத்துக்கடியில் குண்டுகளைத் தயாரிக்கின்றார்கள். எதுவும் களஞ்சியப்படுத்துவதற்கு மாத்திரம் தயாரிக்கப்படுவதில்லை. ஆரம்ப காலத்தில், அவர்கள் வாள்களால் சண்டையிட்டனர். அதன்பின்னர் துப்பாக்கிகளைத் தயாரித்து அவற்றைப் பயன்படுத்தினர், அவற்றை அவர்கள் களஞ்சியப்படுத்துவதற்காகத் தயாரிக்கவில்லை. அவற்றினால் மரணம் இடம்பெறும் என்பதையும் அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். அவர்கள் அவற்றைப் பரிசோதித்துப் பார்த்துள்ளார்கள். ஹிரோஷிமாவில் ஒரேயொரு குண்டு வீசப்;பட்ட பொழுது, பலர் மரணித்தார்கள். அவர்கள் அந்நேரத்தில் இருந்து அதிகளவு வளர்ச்சி அடைந்து, பல கட்டடங்களையும் கட்டியுள்ளார்கள். அவர்கள் வைத்தியசாலைகளில் தங்கியிருக்கும் வகையில் விநாசம் இடம்பெற மாட்டாது. வைத்தியசாலைகளும் இருக்க மாட்டாது, ஏனெனில் ஒரே நேரத்தில் பூமி அதிர்ச்சிகளும் இடம்பெறும். எவராலுமே இயற்கை அனர்த்தங்களைத் தடுக்க முடியாது. அவர்கள் கூறுகின்றார்கள்: இவை அனைத்தும் கடவுளின் கையிலேயே உள்ளது. விநாசம் இடம்பெற வேண்டும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்போது புரிந்து கொள்கின்றீர்கள். பஞ்சம் நிலவும், நீங்கள்; தண்ணீரைக்; கூட பெற மாட்டீர்கள். இது எதுவும் புதியதல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். முன்னைய கல்பத்திலும் இதுவே நடந்தது. எவரிடமும் சக்கரத்தைப் பற்றிய இந்த ஞானம் இல்லை. கிறிஸ்துவுக்கு 3000 ஆயிரம் வருடங்களின் முன்னர் வைகுந்தம் இருந்தது என அவர்கள் கூறுகின்றார்கள். ஆனால்;, பின்னர் சக்கரம் நூறாயிரம் ஆண்டுகளைக் கொண்டது என்றும் அவர்கள் சமயநூல்களில் எழுதி உள்ளார்கள்! எவரது கவனமும் இதில் ஈர்க்கப்படவில்லை. அவர்கள் இவற்றைச் செவிமடுத்த பின்னர், தங்கள் சொந்த வேலைகள் போன்றவற்றில் ஈடுபடுகின்றார்கள். ஆகவே, குழந்தைகளாகிய உங்களுக்குத் தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இப்பொழுது விரைவாக முயற்சி செய்யுங்கள். நினைவில் நிலைத்திருந்தால் கலப்படம் அகற்றப்படும். இங்கே நீங்கள் சதோபிரதான் ஆக வேண்டும். தவறினால், தண்டனையை அனுபவம் செய்த பின்னர் உங்கள் சொந்தத் தர்மத்திற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். நீங்கள் கடவுளிடம் இருந்து ஸ்ரீமத்தைப் பெறுகின்றீர்கள். ஸ்ரீகிருஷ்ணர் ஓர் இளவரசர். ஆகையால், அவரால் எவ்வாறு எவருக்கும் வழிகாட்டல்களை வழங்க முடியும்? உலகில் உள்ள எவராலும் இவ்விடயங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. நீங்கள் பெருமளவு அன்புடன் விளங்கப்படுத்த வேண்டும்: சிவபாபாவை நினைவு செய்யுங்கள்! சிவபாபாவே கூறுகின்றார்: சதா என்னை மாத்திரமே நினைவு செய்யுங்கள்! அவரே உபகாரி. ஏனைய அனைவரிடம் இருந்தும் உங்களைத் துண்டித்து, ஒரேயொருவருடன் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். நீங்களே பாரதத்தின் படகை அக்கரை சேர்ப்பவர்கள். சத்திய நாராயணனின் கதை பாரதத்துடன் தொடர்புடையது. ஏனைய சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்றுமே சத்திய நாராயணனின் கதையைச் செவிமடுக்க மாட்டார்கள். ஆதிசனாதன தேவதேவியரின் தர்மத்தைச் சேர்ந்தவர்களும், மனிதர்களிலிருந்து தேவர்களாக (நாராயணனாக) மாறுபவர்களுமே அதனைச் செவிமடுப்பார்கள். அவர்கள் மாத்திரமே அமரத்துவக் கதையைச் செவிமடுப்பார்கள். அமரத்துவ உலகில் தேவர்கள் இருந்தார்கள், அவர்கள் நிச்சயமாக அந்த அந்தஸ்தை அமரத்துவக் கதையைச் செவிமடுத்ததாலேயே அடைந்திருப்பார்கள். ஒவ்வொரு விடயமும் நினைவு செய்வதற்குத் தகுதியானது. ஒரு விடயம் மாத்திரமே உங்கள் புத்தியில் நிலைத்திருந்தாலும், நீங்கள் ஏனைய அனைத்தையும் நினைவு செய்வீர்கள். தந்தையை நினைவு செய்வதுடன், சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுவதிலும் கவனம் செலுத்துங்கள். நீங்கள் இங்கே இப்பொழுது உங்கள் பாகத்தைச் சிவபாபாவுடன் நடிக்கின்றீர்கள், அதன்பின்னர் நீங்கள் வீடு திரும்புவீர்கள். தந்தை மாத்திரமே உண்மை எது, பொய் எது என்று விளங்கப்படுத்துகின்றார். ஒரேயொருவர் மாத்திரமே சத்தியமானவர், ஏனைய அனைத்தும் பொய்மையே. ‘இலங்கையில் இராவணன் இருந்தான்’. இது ஒருவரைப் பற்றிய கேள்வியல்ல. இத்தகைய விடயங்கள் சத்திய, திரேதா யுகங்களில் இடம்பெறுவதில்லை. மனிதர்கள் வாழும் இவ்வுலகம் முழுவதுமே இலங்கை ஆகும். இது இராவண இராச்சியம். சீதைகள் அனைவருமே ஒரேயொரு இராமரையே நினைவு செய்கின்றார்கள், அதாவது, மணவாட்டிகளான பக்தர்கள் அனைவரும் ஒரேயொரு கடவுளான மணவாளனை நினைவு செய்கின்றார்கள், ஏனெனில் இது இராவண இராச்சியம். சந்நியாசிகள் இவ்விடயங்களைப் புரிந்து கொள்வதில்லை. அனைவருமே துன்பக் குடிலில் சந்தோஷம் அற்றுள்ளார்கள். இந்தக் கலியுகமே துன்பக்குடில். அந்த சத்தியயுகம் துன்பத்திலிருந்து விடுபட்ட குடில் ஆகும். இங்கே, ஒவ்வோர் அடியிலும் துன்பமே உள்ளது. பாபா இப்பொழுது துன்பமற்ற சுவர்க்கத்திற்கு உங்களை அழைத்துச் செல்கின்றார். இங்கு மனிதர்கள் அதிகளவு துன்பத்தில் உள்ளார்கள். ஒருவர் மரணிக்கும் பொழுது, அவர்களுக்குப் பித்துப் பிடித்து விடுகின்றது. சுவர்க்கத்தில் இத்தகைய விடயங்கள் இடம்பெறுவதில்லை. அங்கே ஒரு மனைவி விதவை ஆகும் வகையில், அகால மரணம் இடம்பெறுவதில்லை. அங்கே அவர்கள் தமது ஆடைகளைக் களைந்து, தமக்குரிய நேரத்தில் வேறொன்றைப் பெறுகின்றார்கள். அவர்கள் ஆண் அல்லது பெண்ணின் ஆடையைப் பெறுவார்கள் என்பதால், அதற்கான காட்சியைப் பெறுவார்கள். இறுதியில், யார் என்னவாக ஆகுவார்கள் என்பதைப் பற்றிய அனைத்தையும் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். பின்னர், அந்த நேரத்தில், நீங்கள் அவ்வளவு காலமும் போதியளவு முயற்சி செய்யவில்லை எனக் கூறுவீர்கள். அந்த நேரத்தில் இவ்வாறு கூறுவதில் எந்தப் பயனும் இல்லை; ஏனெனில், காலம் கடந்து போயிருக்கும். இதனாலேயே தந்தை இப்பொழுது கூறுகின்றார்: குழந்தைகளே, முயற்சி செய்யுங்கள்! சேவையில் உண்மையான வலது கரங்கள் ஆகினால், நீங்கள் இராச்சியத்திற்குள் செல்வீர்கள். சேவையில் மும்முரமாக இருங்கள். முழுக் குடும்பங்கள் பலவும் சேவையில் மும்முரமாக ஈடுபட்டுள்ள உதாரணங்கள் உள்ளன. அந்தக் குடும்பம் அத்தகைய நல்ல செயல்களைச் செய்ததால், அவர்கள் அனைவருமே இறைசேவையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்கள் எனக் கூறப்படும். தாய், தந்தை, குழந்தைகள் அனைவருமே இதனைச் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளார்கள். அது நல்லது, அல்லவா? அவர்கள் சேவையின் பின்னால் ஓடிச் செல்கின்றார்கள். குழந்தைகளான நீங்கள், மனிதர்களுக்குப் பாதையைக் காட்டுவதற்காக அதிகளவு உற்சாகத்தைக் கொண்டிருக்க வேண்டும். அதன் மூலம் அநத் ஆத்மாக்கள் சந்தோஷம் அடைவார்கள். நீங்கள் எத்தனை பேருக்குப் பாதையைக் காட்டுகின்றீர்கள்? நீங்கள் விதைகளை விதைக்கும் பொழுது, பிரஜைகளை உருவாக்குகின்றீர்கள். எவருமே அரசராகப் பிறப்பதில்லை. முதலில், அவர்கள் பிரஜைகளாக இருக்கின்றார்கள், பின்னர் முயற்சி செய்வதன் மூலம் எதுவும் அற்றவர்களாக இருந்தவர்கள், மகத்தானவர்களாக ஆகுகின்றார்கள். நீங்கள் சேவையில் மும்முரமாக இருப்பதைக் காணும்பொழுது, அவர்களுக்கும் ஆர்வம் ஏற்படும்: நானும் ஏன் முயற்சி செய்யக்கூடாது? தவறினால், ஒவ்வொரு கல்பத்திலும் இதுவே உங்கள் நிலைமையாக இருக்கும். பலரும் வந்து வருந்துவார்கள். அந்த நேரத்தில் அனுபவம் செய்யும் துன்பத்தை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் வேறெந்த நேரத்திலும் காண மாட்டீர்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்றாததாலும், பல பாவச் செயல்கள் செய்யப்பட்டதாலும், நீங்கள் இறுதியில் அத்தகைய துன்பத்தைக் காண நேரிடும், கேட்கவே வேண்டாம்! பாபா உங்களுக்கு மிகவும் இலகுவான வழியைக் காட்டுகின்றார்: தந்தையை மாத்திரம் நினைவுசெய்து, ஏனையோருக்கும்; பாதையைக் காட்டுங்கள். நீங்கள் தேவ தர்மத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தீர்கள். கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மக்கள் இருப்பதைப் போல் நீங்கள் தேவ தர்மத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களே அனைவரிலும் அதி தூய்மையானவர்கள். உங்கள் தர்மத்தைப் போன்றதொரு தர்மம் வேறு எதுவுமே இல்லை. நீங்கள் அரைக் கல்பத்திற்குத் தூய்மையாக இருக்கின்றீர்கள். சுவர்க்கம், நரகம் இரண்டும் நினைவு கூரப்பட்டுள்ளன. சுவர்க்கம் என்றால் என்னவென எவரும் புரிந்து கொள்வதில்லை. தந்தை பாரதத்திற்கு மாத்திரமே வந்து, குழந்தைகளாகிய உங்களை விழித்தெழச் செய்கின்றார். இது 5000 வருடங்களுக்கான விடயம். சுவர்க்கவாசிகளாக இருந்தவர்கள், நரகவாசிகள் ஆகியுள்ளார்கள், தந்தை இப்பொழுது உங்களைத் தூய சுவர்க்கவாசிகள் ஆக்குவதற்கு வந்துள்ளார். ஒரேயொரு மணவாளனே தனது துன்பமற்ற குடிலிற்குத் தனது மணவாட்டிகள் அனைவரையும் அழைத்துச் செல்கின்றார். ஆகையால், முதலில், அனைவரிடமும் தந்தையை நினைவு செய்யுமாறு கூறுங்கள். இல்லையேல், இங்கே அமர்ந்திருக்கும் பொழுது, அவர்களின் புத்திகள் தொடர்ந்தும் எங்கும் அலைகின்றன. பக்தி மார்க்கத்திலும் இதுவே அவர்களின் நிலைமையாக உள்ளது. பாபா அனுபவசாலி. நகை வியாபாரியின் வியாபாரமே சிறந்த வியாபாரம். அவர்கள் பெரும் சிரமத்தின் மத்தியிலேயே நிஜமான இரத்தினங்களையும், போலி இரத்தினங்களையும் வேறுபடுத்துகின்றார்கள். உண்மை இங்கே மறைந்துள்ளது; எங்கும் பொய்மையைத் தவிர வேறெதுவும் இல்லை. இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நீங்கள் அனைவருமே நாடகத்தில் நடிகர்கள் என்பதை அறிவீர்கள். எவராலும் இந்த நாடகத்தில் இருந்து வெளியேற முடியாது; எவராலும் அநாதியான முக்தியைப் பெற முடியாது. அனைத்தும் புரிந்துணர்வுடன் செய்யப்பட வேண்டும். நீங்கள் தொடர்ந்தும் உங்கள் பாகங்களை நடிக்கிறீர்கள். ஒரு கல்பத்தின் பின்னர் அதே பாகங்களை நீங்கள் மீண்டும் நடிப்பீர்கள். மக்கள் தொடர்ந்தும் எவ்வாறு மரணிக்கின்றார்கள் என நீங்கள் பார்ப்பீர்கள். விநாசம் இடம்பெற வேண்டும். ஆத்மாக்கள் அனைவரும் நிர்வாணா தாமத்திற்குச் செல்வார்கள். உங்கள் புத்திகளில் இந்த ஞானம் உள்ளது. நீங்கள் சேவையில் மும்முரமாக இருப்பதனால், பலரும் நன்மை அடைவார்கள். முழுக் குடும்பமும் இந்த ஞானத்தைப் பின்பற்ற ஆரம்பித்தால், அது பெரும் அற்புதமாக இருக்கும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இறுதியில், பயங்கரமான காட்சிகளில் இருந்தும், அனைத்துத் துன்பங்களில் இருந்தும் விடுவிக்கப்படுவதற்கு, இப்பொழுது தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்ற ஆரம்பியுங்கள். ஸ்ரீமத்திற்கேற்ப, பிறரை உங்களுக்குச் சமமாக்குவதற்கான சேவையைச் செய்யுங்கள்.

2. சேவையில் தந்தையின் வலது கரமாக ஆகுங்கள். ஆத்மாக்களைச் சந்தோஷமானவர்கள் ஆக்குவதற்கான வழியைக் காட்டுங்கள். அனைவருக்கும் நன்மை செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
உங்களின் சொந்த எண்ணங்களின் பின்விளைவுகளாக ஏற்படும் எந்தவிதமான பிரச்சனைகளுக்கும் அப்பால் சென்று, திறமைச் சித்தி எய்துவீர்களாக.

திறமைச் சித்தி அடைவது என்றால், உங்களின் சொந்த எண்ணங்களின் பின்விளைவுகள் (தண்டனை) எதையும் அனுபவிக்காமல் இருப்பதாகும். தர்மராஜிடம் (உச்ச நீதிபதி) இருந்து தண்டனையைப் பெறுகின்ற விடயம் பின்னர் வரும். எவ்வாறாயினும், உங்களின் சொந்த எண்ணங்களின் பின்விளைவுகளான பிரச்சனைகள் எதில் இருந்தும் அப்பாற்பட்டு இருப்பதே திறமைச்சித்தி அடைவதன் அடையாளம் ஆகும். வார்த்தைகள், செயல்கள், உறவுமுறைகள் மற்றும் தொடர்புகளின் விடயங்கள், புற விடயங்களாகும். ஆனால், உங்களின் எண்ணங்களிலேனும் எந்தவிதமான பிரச்சனைகளும் வெளிப்படக் கூடாது. நீங்கள் இத்தகைய சத்தியத்தை நிறைவேற்றும்போதே, திறமைச் சித்தி அடைவீர்கள்.

சுலோகம்:
இந்த ஞான எண்ணெயும் யோகம் என்ற திரியும் நன்றாக இருக்கும்போது, சந்தோஷ தீபம் ஒளியேற்றப்பட்டு இருக்கும்.

அவ்யக்த சமிக்ஞை: சதா ஆட்ட, அசைக்க முடியாத மற்றும் நிலையான ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.

உலகின் எந்த வகையான குழப்பமும் உங்களின் ஆட்ட, அசைக்க முடியாத ஸ்திதியில் எந்தவிதமான தடைகளையும் ஏற்படுத்தக் கூடாது. அத்தகைய தடைகளை அழிப்பவர்களாகவும் அதனால் ஆட்ட, அசைக்க முடியாதவர்களாகவும் ஆகுங்கள். அதன் மூலம் நீங்கள் சகல தடைகளையும் தடைகளாக அன்றி, ஒரு விளையாட்டைப் போல் வெற்றி பெறுவீர்கள். ஒரு மலையைக் கடுகைப் போல் அனுபவம் செய்வீர்கள். ஏனென்றால், ஞானம் நிறைந்த ஆத்மாக்களுக்கு அந்த விடயங்கள் அனைத்தும் வரப் போகின்றன, அவை நடக்கப் போகின்றன என்பது முன்கூட்டியே தெரியும்.