04.07.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, ஞானக்கடலான தந்தை உங்கள் ஒவ்வொருவருக்கும் இந்த ஞானம் என்ற மூன்றாவது கண்ணை வழங்க வந்துள்ளார். அதன் மூலம் ஆத்மாக்களாகிய நீங்கள் ஒளியேற்றப்படுகிறீர்கள்.
கேள்வி:
தந்தை ஏன் கரன்கரவன்ஹார் என்று அழைக்கப்படுகின்றார்? அவர் தானாகவே எதைச் செய்கின்றார், மற்றவர்களை எதைச் செய்யத் தூண்டுகின்றார்?பதில்:
பாபா கூறுகின்றார்: நான் குழந்தைகளாகிய உங்களுக்கு முரளியை கூறுகின்ற பணியை மேற்கொள்கின்றேன். நான் உங்களுக்கு முரளியை கூறி, உங்களுக்கு ஒரு மந்திரத்தைக் கொடுத்து, உங்களைத் தகுதி வாய்ந்தவர்கள் ஆக்குகின்றேன். பின்னர் குழந்தைகளாகிய உங்கள் மூலம் சுவர்க்கத்தின் திறப்புவிழாவை மேற்கொள்கின்றேன். நீங்கள் தூதுவர்களாகி, அனைவருக்கும் செய்தியைக் கொடுக்கின்றீர்கள். நான் குழந்தைகளாகிய உங்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுக்கின்றேன். இது எனது கருணையும், ஆசீர்வாதங்களும் ஆகும்.பாடல்:
அதிகாலை வேளையில் இங்கு வந்திருப்பவர் யார்?ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். இந்த ஞானம் என்ற எங்களது மூன்றாவது கண்ணை முற்றாகத் திறக்கச் செய்வதற்காக, குழந்தைகளாகிய எங்களை அதிகாலையில் விழித்தெழச் செய்பவர் யார்? இந்த ஞானம் என்ற எங்களது மூன்றாவது கண், பரமதந்தை, பரமாத்மாவாகிய ஞானக்கடலினாலேயே திறக்கச் செய்யப்பட்டுள்ளது. தந்தையே எங்களை ஒளியேற்றுபவர் எனக் கூறப்படுகின்றது, எனினும் அவரே எங்களது தந்தை என்பதை எவரும் அறியாதுள்ளனர். அவர் ஒரு சுவாலை, அதாவது ஜோதி என்று பிரம்ம சமாஜிகள் நம்புகின்றனர். கடவுள் ஒளி வடிவமானவர் என அவர்கள் நம்புவதால், அவர்கள் சதா தங்கள் ஆலயங்களில் விளக்கேற்றி தொடர்ந்தும் எரியச் செய்கிறார்கள். இதனாலேயே அவர்கள் தங்களது ஆலயங்களில் அணையாத விளக்கொன்றை வைத்திருக்கின்றனர். தந்தை தீக்குச்சியால் உங்கள் தீபத்தை ஏற்றுவதில்லை. இது முற்றிலும் தனித்துவமான ஒன்றாகும். கடவுளின் வழிமுறைகள் தனித்துவமானவை எனப் பாடப்படுகின்றது. தந்தை வந்து, உங்களுக்குச் சற்கதி அருள்வதற்காக இந்த ஞானத்தையும், யோகத்தையும் கற்பிக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். இதை உங்களுக்குக் கற்பிப்பதற்கு ஒருவர் நிச்சயமாக இருக்க வேண்டும். சரீரம் எதையும் கற்பிக்காது. ஆத்மாவே அனைத்தையும் செய்கின்றார். நல்ல, தீய சம்ஸ்காரங்கள் ஆத்மாவிலேயே உள்ளன. இந்நேரத்தில் இராவணனின் பிரவேசத்தாலேயே மனிதர்களின் சம்ஸ்காரங்கள் தீயவையாக உள்ளன. அதாவது, அனைவருக்குள்ளும் ஐந்து விகாரங்களும் பிரவேசித்துள்ளன. தேவர்களில் இந்த ஐந்து விகாரங்களும் இருப்பதில்லை. பாரதத்தில் தேவ இராச்சியம் இருந்தபோது இத்தீய சம்ஸ்காரங்கள் இருக்கவில்லை, நீங்கள் சகல தெய்வீகக் குணங்களும் நிறைந்தவர்களாக இருந்தீர்கள். தேவர்கள் மிக நல்ல சம்ஸ்காரங்களைக் கொண்டிருந்தனர், நீங்கள் இப்பொழுது அவற்றைக் கிரகிக்கின்றீர்கள். தந்தை மாத்திரமே வந்து அனைவருக்கும் ஒரு விநாடியில் சற்கதி அருள்கிறார். பக்தி மார்க்கத்தின் ஆரம்பம் முதல், குருமார்கள், சந்நியாசிகள் போன்றோர் இருந்துள்ளனர். எனினும் அவர்களில் எவராலுமே ஒருவருக்கேனும் சற்கதியையோ முக்தியையோ கொடுக்க முடியாது. தந்தை வரும்போதே அனைவரும் சற்கதியை பெறுகின்றனர். பரம தந்தை, பரமாத்மாவை வந்து, தூய்மையற்ற உலகை அழித்து, தூய உலகை அங்குரார்ப்பணம் செய்து, தூய உலகின் வாயிலைத் திறக்குமாறு மக்கள் அவரை அழைக்கின்றனர். தந்தை வந்து, சிவசக்தி தாய்மார் மூலம் வாயிலைத் திறந்து விடுகின்றார். “வந்தே மாதரம் (தாய்மாருக்கு வந்தனங்கள்)” நினைவுகூரப்படுகின்றது. இக்காலத்தில் பெண்கள் எவருமே மேன்மையானவர்களாக இல்லாததால், எவருமே நமஸ்கரிக்கப்படுவதில்லை. யோக சக்தி மூலம் பிறப்பவர்களே மேன்மையானவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இலக்ஷ்மி, நாராயணன் மேன்மையானவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். பாரதத்தில் தேவர்கள் இருந்தபோது, அது மேன்மையானதாக இருந்தது. மனிதர்கள் இதை அறியமாட்டார்கள். அவர்கள் தொடர்ந்தும் தங்களது சொந்தத் திட்டங்களைத் தீட்டுகின்றனர். காந்திஜியும் இராம இராச்சியத்தையே விரும்பினார். இது இராவண இராச்சியம் என்பதையே அது நிரூபிக்கின்றது. பாரதம் தூய்மையற்றது. எவ்வாறாயினும், இராம இராச்சியத்தை ஸ்தாபித்து, இராவண இராச்சியத்தை அழிப்பதற்கு எல்லையற்ற பாபுஜி (தந்தை) தேவைப்படுகின்றார். இராவண இராச்சியம் இப்பொழுது தீக்கிரையாக வேண்டும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். சகல ஆத்மாக்களும் அறியாமை என்ற உறக்கத்தில் உறங்கிக் கொண்டிருக்கின்றனர். நீங்களும் உறங்கிக் கொண்டிருந்தீர்கள் என்பதையும், தந்தை வந்து உங்களை விழித்தெழச் செய்தார் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். பக்தியின் இரவு முடிவிற்கு வருகின்றது, பகல் ஆரம்பிக்கின்றது. இரவு முடிவடைந்து, பகல் ஆரம்பிக்கின்றது. தந்தை சங்கம யுகத்திலேயே வருகின்றார். அவர் குழந்தைகளாகிய உங்களுக்கு தெய்வீகக் காட்சிகளையும், இந்த ஞானம் என்ற மூன்றாவது கண்ணையும் வழங்குகின்றார். அதன் மூலம் நீங்கள் இப்பொழுது முழு உலகையும் அறிந்து கொள்கின்றீர்கள். இது ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட அழிவற்ற நாடகம் என்பதும், இது தொடர்ந்தும் சுழல்கின்றது என்பதும் உங்கள் புத்திகளில் உள்ளது. நீங்கள் இப்பொழுது விழித்தெழுந்து விட்டீர்கள், முழு உலகமும் உறங்கிக் கொண்டிருக்கின்றது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது முழு உலகினதும் அதாவது அசரீரி உலகம், சூட்சுமலோகம், பௌதீக உலகம் ஆகியவற்றின் ஆரம்பம், மத்தி, இறுதியை அறிவீர்கள். உலகிலுள்ள ஏனைய அனைவரும் அறியாமையில் கும்பகர்ண உறக்கத்தில் உறங்கிக் கொண்டிருக்கின்றனர். தூய்மையாக்குபவர் யாரென்பதை எவரும் அறியமாட்டார்கள். மக்கள் அழைக்கின்றனர்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! வந்து எங்களுக்கு உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களைக் கூறுங்கள் என அவர்கள் கூறுவதில்லை. தந்தை கூறுகின்றார்: இந்த உலகச் சக்கரத்தை அறிந்து கொள்வதன் மூலம் நீங்கள் பூகோளத்தை ஆட்சிசெய்பவர்கள் ஆகுவீர்கள். நினைவின் மூலம் மாத்திரமே நீங்கள் தூய்மை ஆகின்றீர்கள். விநாசம் சற்று முன்னாலேயே உள்ளது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். யுத்தம் நிகழ வேண்டும். கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் யுத்தம் இடம்பெறவில்லை. பாண்டவர்கள் யார்? எவருக்கும் தெரியாது. சேனை போன்ற கேள்விக்கே இடமில்லை. இவ்வுலகிற்கு அப்பாலுள்ள பரமாத்மா உங்கள் பக்கம் நடைமுறையில் உள்ளார். தந்தையிடம் இருந்து மாத்திரமே நீங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். ஸ்ரீகிருஷ்ண ஆத்மா 84 பிறவிகள் எடுக்கின்றார் என்பதையும், அவர் இப்பொழுது தந்தையிடம் இருந்து மீண்டும் ஒருமுறை ஆஸ்தியைப் பெறுகின்றார் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். உலகின் வரலாறும், புவியியலும் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது விநாசம் இடம்பெறுவதற்கு முன்னர் நிச்சயமாக சதோபிரதான் ஆகவேண்டும். வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழும்போதும் ஒரு தாமரையைப் போன்று தூய்மையாக இருங்கள். “கடவுள் பேசுகின்றார்” என்பது நினைவு கூரப்படுகின்றது. வீட்டில் வாழும்போது, இந்த ஒரு பிறவியில் தூய்மை ஆகுங்கள். கடந்தது கடந்துவிட்டது. இவை யாவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளன. உலகம் சதோபிரதான் ஆகவேண்டும். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இது கடவுளால் நிர்ணயிக்கப்படவில்லை. நாடகத்தின் நியதி இவ்வாறாகவே உருவாக்கப்பட்டுள்ளது. இதனையே தந்தை இங்கிருந்து விளங்கப்படுத்துகின்றார். இரண்டாவது அரைச் சக்கரம் முடிவிற்கு வரும்போதே தந்தை வருகின்றார். தந்தை கூறுகின்றார்: இரவு முடிவடைந்து, பகல் ஆரம்பிக்க இருக்கும்போதே நான் வருகின்றேன். மக்கள் சிவராத்திரியைப் பற்றியும் பேசுகின்றனர். சிவ பக்தர்கள் சிவராத்திரியில் நம்பிக்கை வைத்துள்ளனர். அதை ஒரு விடுமுறையாகக் கொண்டாடுவதை அரசாங்கம் நிறுத்திவிட்டது. இல்லாவிடில், அவ்விடுமுறை ஒரு மாதத்திற்காவது தொடரவேண்டும். சிவபாபாவே அனைவருக்கும் சற்கதியை அருள்பவர் என்பதை எவரும் அறியமாட்டார்கள். அவர் மாத்திரமே அனைவரதும் துன்பத்தை நீக்கி, சந்தோஷத்தை அருள்பவர். அவரது பிறந்ததினம் எல்லா மதத்தவர்களாலும் குறைந்தது ஒரு மாதத்திற்காவது கோலாகலமாகக் கொண்டாடப்பட வேண்டும். தந்தை வந்து, குறிப்பாக பாரதத்திற்கு நேரடியாக சற்கதியை அருள்கின்றார். பாரதம் சுவர்க்கமாக இருந்தபோது, தேவர்களின் இராச்சியமாக இருந்தது. வேறெந்த சமயங்களுமே அந்நேரத்தில் இருக்கவில்லை. தேவர்கள் உலகின் அதிபதிகளாக இருந்தார்கள். அங்கு பிரிவினை போன்ற எதுவும் இருக்கவில்லை. இதனாலேயே கூறப்படுகின்றது: நாங்கள் மீண்டும் ஒருமுறை அமைதியும், சந்தோஷமும், செழிப்பும் நிறைந்த, உறுதியான, அசைக்க முடியாத, எங்களின் தெய்வீக இராச்சியத்தைக் கோருகின்றோம். 5000 வருடங்களுக்கு முன்னரும், நீங்கள் எல்லையற்ற தந்தையிடம் இருந்து எல்லையற்ற ஆஸ்தியைப் பெற்றீர்கள். சூரிய, சந்திர வம்ச இராச்சியங்களில் துன்பத்தின் சுவடே இல்லை. “அரசர் இராமர் எவ்வாறோ, இராமரின் பிரஜைகளும் அவ்வாறே இருப்பார்கள்” என நினைவு கூரப்படுகின்றது. அங்கு எவ்வித அதர்மமும் இருக்கவில்லை. பிரம்மா, விஷ்ணுவைப் பற்றியும், அவர்களுக்கு இடையிலான உறவுமுறை பற்றியும் பாபா உங்களுக்கு விளங்கப்படுத்தி உள்ளார். விஷ்ணுவின் தொப்புள் கொடியிலிருந்து பிரம்மா தோன்றுவது போன்று அவர்கள் ஓர் அற்புதமான படத்தை உருவாக்கி உள்ளனர். இலக்ஷ்மியும், நாராயணனுமே இறுதியில் உலகத் தாயான சரஸ்வதியாகவும், உலகத் தந்தையான பிரம்மாவாகவும் ஆகுகின்றனர் என பாபா விளங்கப்படுத்துகின்றார். இவர்கள் இருவரும் விஷ்ணுவாக, அதாவது இலக்ஷ்மி, நாராயணனாக ஆகுகின்றனர். நீங்கள் பார்க்கின்ற உருவங்கள் யாவும் தவறானவை எனத் தந்தை இங்கிருந்து விளங்கப்படுத்துகின்றார். சிவனுக்காக அவர்கள் உருவாக்குகின்ற பெரிய உருவமும்கூட தவறானதே. அவர்கள் பக்திக்காக பெரிய உருவங்களை உருவாக்கினார்கள். எவ்வாறு ஒரு புள்ளியைப் பூஜிக்க முடியும்? பிரம்மா, விஷ்ணு, சங்கரரைப் பற்றியேனும் அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. அவர்கள் திரிமூர்த்தி பிரம்மாவைப் பற்றிப் பேசுகின்றனர். அவர்கள் பிரம்மாவினால் ஸ்தாபனை, விஷ்ணுவினால் பராமரிப்பு எனப் பேசுகின்றனர். எனினும் பிரம்மா ஸ்தாபனையை மேற்கொள்வதில்லை. பிரம்மா சுவர்க்கத்தின் ஸ்தாபனையை மேற்கொள்வாரா? இல்லை! பரமதந்தை, பரமாத்மா மாத்திரமே சுவர்க்கத்தின் ஸ்தாபனையை மேற்கொள்கின்றார். இந்த ஆத்மா தூய்மையற்றவர், அவர் சரீரதாரி பிரம்மா எனப்படுகின்றார். இவ்வாத்மா தூய்மையாகி, பின்னர் வீடு திரும்புவார். அவர் பின்னர் சத்திய யுகத்திற்குச் சென்று நாராயணன் ஆகுவார். எனவே, பிரஜாபிதா நிச்சயமாக இங்கேயே தேவைப்படுகின்றார். அவர்கள் அவரின் விக்கிரகங்களை அங்கிருப்பதாகக் காட்டியுள்ளனர். அதுபோன்றே, இந்த ஞான அணிகலன்களும் உண்மையில் உங்களுடையதே. ஆனால் அவர்கள் அவற்றை விஷ்ணுவிற்குக் கொடுத்துள்ளனர். அவர்கள் தீவிர பக்தி செய்தபின்னர் காட்சிகள் காண்பார்கள். மீராவின் பெயர் நினைவுகூரப்படுகின்றது. ஆண்களின் மத்தியில் முதலாம் இலக்க பக்தராக நாரதரும், பெண்களில் முதலாம் இலக்க பக்தையாக மீராவும் நினைவு கூரப்படுகின்றனர். நீங்கள் இலக்ஷ்மி அல்லது நாராயணனைத் திருமணம் செய்யத் தகுதி வாய்ந்தவர் ஆகுவதற்காகவே இப்பொழுது இந்த ஞானத்தைச் செவிமடுக்கின்றீர்கள். உங்களின் திருமணங்களும் இடம்பெறுகின்றன. நாரதர் ஒன்றுகூடலுக்குச் சென்று, தான் இலக்ஷ்மியைத் திருமணம் செய்ய முடியுமா எனக் கேட்டதாக அவர்கள் காண்பித்துள்ளனர். நீங்கள் இப்பொழுது இலக்ஷ்மியைத் திருமணம் செய்யத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுகின்றீர்கள். அக்கதைகள் யாவும் பக்தி மார்க்கத்திற்கு உரியவை. தந்தை இங்கிருந்து உண்மையான விடயங்களையே உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இலக்ஷ்மி சத்திய யுகத்தில் இருந்தார், பக்தரான நாரதரோ துவாபர யுகத்தில் இருந்தார். எவ்வாறு நாரதர் சத்திய யுகத்திற்கு வந்தார்? இராதையும், கிருஷ்ணருமே அவர்களின் திருமணத்தின் பின்னர் இலக்ஷ்மி, நாராயணன் எனப் பெயரிடப்படுகின்றனர். பாரத மக்கள் இதையேனும் அறியாதுள்ளனர். அறியாமை இருள் அதிகமாக உள்ளது. தந்தை உபகாரி ஆவார். அவர் உங்களையும் உபகாரிகள் ஆக்குகின்றார். எவ்வாறு மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவதென நீங்கள் இப்பொழுது இந்த ஞானக் கடலைக் கடைய வேண்டும். எவ்வாறு படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன எனத் தந்தை இங்கிருந்து விளங்கப்படுத்துகின்றார். காந்தியின் தொப்புள் கொடியிலிருந்து நேரு தோன்றுவதாக அவர்கள் சித்தரித்துள்ளனர். விஷ்ணு தேவருக்கும், மனிதருக்கும் இடையில் பெருமளவு வேறுபாடு உள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இப்பொழுது இவ்விடயங்களைப் புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் வரிசைக்கிரமமாக சந்தோஷத்தை அனுபவம் செய்கிறீர்கள். எல்லையற்ற தந்தையே எங்களுக்குக் கற்பிக்கன்றார். நீங்கள் இவ்விடயங்களை முன்னர் ஒருபோதுமே கேள்விப்பட்டதில்லை. ஏனெனில் கீதை, பகவான் ஸ்ரீகிருஷ்ணரால் பேசப்பட்டதாக அவர்கள் எழுதியுள்ளனர். எப்பொழுது கடவுள் வந்தார், எப்பொழுது அவர் கீதையைப் பேசினார்? எந்தத் திகதியோ, நேரமோ இல்லை. ஒவ்வொரு சக்கரத்தின் காலப்பகுதியும் நூறாயிரக் கணக்கான வருடங்கள் என அவர்கள் கூறுகின்றனர். இது எவரது புத்தியிலும் புகுவதில்லை. தந்தை இப்பொழுது இங்கிருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். பிராமணர்களின் விருட்சம் தொடர்ந்தும் வளர்கின்றது. உங்களின் எண்ணிக்கை பெரிதாகி, அது எண்ணற்றதாகும். எவ்வாறு வெவ்வேறு குலத்தவர்கள் சக்கரத்தைச் சுற்றிவருகின்றனர் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பிராமணர்களான எங்களது குலமே அதி மேன்மையானது. நாங்கள் பாரதத்தின் உண்மையான, மறைமுகமான, சமூக சேவையாளர்கள். பரமதந்தை, பரமாத்மா எங்களைச் சேவை செய்ய வைக்கின்றார். நாங்கள் ஆன்மீக சேவை செய்கின்றோம், அவர்களோ பௌதீக சேவை செய்கின்றனர். நீங்கள் எவ்வாறு பாரதத்திற்குச் சேவை செய்கின்றீர்கள் என அவர்கள் கேட்டால், அவர்களிடம் கூறுங்கள்: நாங்கள் ஆன்மீக சேவகர்கள். நாங்கள் சுவர்க்கத்தைத் திறந்து, அதனை ஸ்தாபிக்கின்றோம். சிவபாபா கரன்கரவன்ஹார், அவர் எங்கள் மூலம் அனைத்தையும் செய்விக்கின்றார். அவரும் அதனை மேற்கொள்கிறார். முரளியைப் பேசுபவர் யார்? அவரே அதனை செய்கிறார். அதை எவ்வாறு செய்வதென அவர் உங்களுக்கும் கற்பிக்கின்றார். அவர் மன்மனாபவ என்ற மகா மந்திரத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார். எவ்வாறு செயல்களைச் செய்வதென அவர் உங்களுக்குக் கற்பித்தார். பின்னர் அவர் உங்களுக்குக் கூறுகின்றார்: இப்பொழுது மற்றவர்களுக்குக் கற்பியுங்கள். இதனாலேயே அவர் கரன்கரவன்ஹார் என்று அழைக்கப்படுகின்றார். குழந்தைகளாகிய நீங்களும் அதே கற்பித்தல்களையே வழங்குகின்றீர்கள்: தந்தையையும், ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள்! குழந்தைகளாகிய நீங்கள் இச்செய்தியை எங்கும் சென்றடையச் செய்யவேண்டும். நீங்கள் இச்செய்தியை மற்றவர்களுக்கு வழங்கிவிட்டு, நீங்கள் நினைவு செய்யாதிருப்பது என்றிருக்கக் கூடாது. அப்பொழுது என்ன நடக்கும்? மற்றவர்கள் முயற்சிசெய்து முன்னேறிச் செல்வார்கள், ஆனால் அவர்களுக்கு அச்செய்தியை வழங்கியவர்களோ பின்தங்கி விடுவார்கள். நீங்கள் நினைவில் இருக்க முயற்சி செய்யாது விட்டால் உங்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறமுடியாது. மற்றவர்கள் நினைவு யாத்திரை மூலம் தூய்மை ஆகுவார்கள். இதற்குப் பந்தனத்திலுள்ள பெண்களை பாபா உதாரணமாகக் காட்டியுள்ளார். அவர்கள் அதிகளவில் நினைவில் இருக்கின்றனர். அவர்கள் பாபாவைச் சந்திக்கவில்லை ஆயினும், பாபாவிற்குக் கடிதங்கள் எழுதுகின்றனர்: பாபா, நான் இப்பொழுது உங்களுக்குச் சொந்தமாகி விட்டேன். நான் நிச்சயமாகத் தூய்மையாக இருப்பேன். குழந்தைகளாகிய நீங்கள் தந்தை மீது அன்பான புத்தியைக் கொண்டுள்ளீர்கள். உங்களின் மாலை உருவாக்கப்படுகின்றது. விஷ்ணுவின் மாலையிலும், உருத்திராட்ச மாலையிலும் இரட்டை மணி உள்ளது. நீங்கள் ஒரு மாலையை எடுத்தவுடனே குஞ்சமும் இரட்டை மணியுமே முதலில் உங்கள் கைக்கு வருகின்றன. நீங்கள் அதை வணங்குகின்றீர்கள். பின்னர் மாலை உள்ளது. நீங்கள் பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குகின்றீர்கள். எனவே இம்மாலை உங்கள் ஞாபகார்த்தமாகும். தந்தை கீதா ஞானயாகத்தை உருவாக்கியுள்ளார். பழைய உலகம் முழுவதும் அதில் அர்ப்பணிக்கப்படும். தந்தையே அதியன்பிற்கினிய தந்தை ஆவார். அவர் உங்களின் எதிர்கால 21 பிறவிகளுக்கு நிலையான சந்தோஷம் என்ற ஆஸ்தியை உங்களுக்கு வழங்குகின்றார். முன்னைய கல்பத்தில் தங்களின் ஆஸ்தியைக் கோரியவர்கள் நாடக நியதிப்படி நிச்சயமாக மீண்டும் வருவார்கள். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, நீங்கள் சந்தோஷ தாமத்திற்குச் செல்ல விரும்பினால், தூய்மை ஆகுங்கள்! என்னை நினைவு செய்யுங்கள்! நீங்கள் கருணையையோ, உதவியையோ கேட்க வேண்டியதில்லை, இல்லை. நான் அனைவருக்கும் உதவி செய்கின்றேன், ஆனால் நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். ஆசீர்வாதங்கள் என்ற கேள்விக்கு இடமில்லை. தந்தை கூறுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள்! என்னை நினைவு செய்வது உங்கள் கடமை. உங்களுக்கு வழிகாட்டல்களை வழங்குவது அவரது கருணை. நீங்கள் உண்ணலாம், பருகலாம், சுற்றித் திரியலாம், ஆனால் தூய உணவை மாத்திரமே நீங்கள் உண்ண வேண்டும். நாங்கள் தேவர்கள் ஆகின்றோம். அங்கு வெங்காயம் போன்ற எதுவும் இருக்காது. அவையனைத்தும் இங்கே துறக்கப்பட வேண்டும். அவை அங்கு இருப்பதில்லை. அவற்றின் விதைகள்கூட அங்கு இருப்பதில்லை. அதுபோன்றே, நோய்கள் போன்ற எதுவும் சத்திய யுகத்தில் இருக்க மாட்டாது. இப்பொழுது எவ்வளவு நோய்கள் தோன்றியுள்ளன எனப் பாருங்கள். அங்கு தூய்மையற்ற எதுவுமே இருக்கமாட்டாது. அனைத்துமே சதோபிரதான் ஆகும். இங்குள்ள மக்கள் எவற்றை உண்கின்றார்கள் எனப் பாருங்கள்! தந்தை இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள், ஏனைய அனைவரிடம் இருந்தும் உங்களை விடுவித்து, என்னுடன் மாத்திரம் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. கடந்தது கடந்து சென்றுவிட்டது. கடந்தவற்றை மறந்துவிட்டு, வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழும்போதே சதோபிரதான் ஆகுவதற்கு முயற்சி செய்யுங்கள். விநாசம் நிகழ்வதற்கு முன்னர் நிச்சயமாகத் தூய்மை ஆகுங்கள்.2. பாரதத்தைத் சுவர்க்கம் ஆக்குகின்ற உண்மையான சேவையைச் செய்வதில் ஈடுபட்டிருங்கள். உங்களின் உணவும், பானமும் மிகவும் தூய்மையாக இருக்கவேண்டும். தூய உணவை மாத்திரமே உண்ணுங்கள்.
ஆசீர்வாதம்:
பௌதீகப் பணியை செய்கின்ற அதேவேளையில், உங்கள் மனதினூடாக உலக மாற்றத்திற்கான பணியைச் செய்கின்ற பொறுப்பானதோர் ஆத்மா ஆகுவீர்களாக.எந்தவொரு பௌதீக பணியைச் செய்கின்ற போதும், உலக மேடையில் நீங்கள் உலக நன்மைக்கான சேவையை செய்கின்ற ஒரு கருவி என்ற விழிப்புணர்வை எப்பொழுதும் கொண்டிருங்கள்: என்னுடைய மேன்மையான ஸ்திதியினால், உலக மாற்றம் என்ற பணியைச் செய்ய வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு எனக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வை நீங்கள் கொண்டிருக்கும் போது, அனைத்து கவனயீனமும் முடிந்து விடும். நேரத்தை வீணாக்குவதற்கு மாறாக நீங்கள் அதனைச் சேமிப்பீர்கள். ஒவ்வொரு விநாடியையும் மிகப் பெறுமதியானது எனக் கருதுவதால், உங்கள் நேரத்தை உலக நன்மைக்காகவும் உயிரற்ற, உயிருள்ளவற்றின் மாற்றத்திற்கான பணியில் தகுதிவாய்ந்த வகையில் பயன்படுத்துவீர்கள்.
சுலோகம்:
இப்பொழுது, போராடுபவர்களாக இருப்பதற்குப் பதிலாக யோகிகள் ஆகுங்கள்.அவ்யக்த சமிக்கை: எரிமலை ஸ்திதியில் இருந்தவண்ணம் சக்திவாய்ந்த நினைவை அனுபவம் செய்யுங்கள்.
சந்தோஷமிழந்த ஆத்மாக்களின் மனதிலிருந்து, இப்பொழுது விநாசம் இடம்பெற வேண்டும் என்ற ஓசை வெளிப்பட ஆரம்பித்துள்ளது. அவ்வாறாகவே, உலகிற்கு நன்மைபயக்கும் ஆத்மாக்களாகிய உங்களிடம், ஆத்மாக்கள் அனைவரும் விரைவில் நன்மையடைய வேண்டும், அப்பொழுதே நிறைவு இடம்பெறும் என்ற எண்ணம் வெளிப்பட வேண்டும். நன்மைபயக்கும் ஆத்மாக்களான உங்களின் எண்ணங்களினூடாக விநாசத்தை மேற்கொள்பவர்கள் சமிக்கையைப் பெற வேண்டும். ஆகையால் எப்பொழுதும் ஆயத்தமாக இருக்க வேண்டும் என்ற உங்களுடைய சக்திமிக்க எண்ணத்தினால், நீங்கள் எரிமலை யோகத்தை கொண்டிருந்து விநாசத்தின் சுவாலையை தீவிரப்படுத்துங்கள்.