04.08.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, பாபா உங்களை இராஜ மலர்கள் ஆக்குவதற்காக வந்துள்ளார். ஆகையினால், விகாரங்களின் துர்நாற்றம் எதுவும் இருக்கக்கூடாது.
கேள்வி:
விகாரங்களின் சகல சுவடுகளையும் முடிப்பதற்கு, நீங்கள் என்ன முயற்சி செய்ய வேண்டும்?பதில்:
சதா அகநோக்கில் இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். அகநோக்கில் இருப்பதென்றால், ஒரு விநாடியில் உங்கள் சரீரத்திலிருந்து பற்றற்றவர் ஆகுவது என அர்த்தம். நீங்கள் இவ்வுலகின் அனைத்தையும் முற்றாக மறந்துவிட வேண்டும். ஒரு விநாடியில் மேலே சென்று கீழே வாருங்கள். இதை நீங்கள் பயிற்சி செய்வதனால், விகாரங்களின் சகல சுவடுகளும் முடிவடைந்து விடும். செயல்கள் அனைத்தையும் செய்யும்போது, இடையிடையே அகநோக்குள்ளவர் ஆகுங்கள்; இது முற்றிலும் மயான அமைதி நிலவுவதைப் போல் உணரப்பட வேண்டும். சிறிதளவு சத்தமோ, அசைவோ இருக்கக்கூடாது. இவ்வுலகம் இல்லாதிருப்பதைப் போன்று இருக்க வேண்டும்.ஓம் சாந்தி.
உங்கள் ஒவ்வொருவரையும் இங்கே அமரச் செய்து சரீரம் அற்றவர்களாகித் தந்தையை நினைவு செய்யுமாறு கூறப்படுகின்றது. இத்துடன் உலகச் சக்கரத்தையும் நினைவு செய்யுங்கள். மனிதர்களுக்கு 84 பிறவிகளின் சக்கரம் பற்றித் தெரியாது. அவர்கள் அதைப் புரிந்து கொள்ளவும் மாட்டார்கள். 84 பிறவிகளின் சக்கரத்தில் சுற்றி வந்தவர்கள் மாத்திரமே இதைப் புரிந்து கொள்வதற்கு வருவார்கள். நீங்கள் இதை நினைவுசெய்ய வேண்டும். இதுவே சகல அசுர எண்ணங்களையும் இல்லாது ஒழிக்கின்ற, சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுதல் என அழைக்கப்படுகின்றது. இங்கே ஓர் அசுரன் இருப்பதாகவும் அவனுடைய கழுத்து வெட்டப்படுகின்றது என்றும் இல்லை. மக்கள் சுயதரிசனச் சக்கரம் என்பதன் அர்த்தத்தைக் கூடப் புரிந்து கொள்வதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் இங்கேயே இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். வீட்டில் வசிக்கும் பொழுதே, நீங்கள் தாமரைமலர் போன்று தூய்மையாக இருக்க வேண்டும். கடவுள் கூறுகின்றார்: இந்த ஒரு பிறவியில் தூய்மையாகுவதன் மூலம், நீங்கள் எதிர்கால தூய உலகில் 21 பிறவிகளுக்கு அதிபதிகள் ஆகுகின்றீர்கள். சத்தியயுகம் சிவாலயம் என்றும், கலியுகம் விலைமாந்தர் இல்லம் என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த உலகம் மாறுகின்றது. இது பாரதத்தை மாத்திரம் பற்றிய விடயமாகும். நீங்கள் மற்றவர்கள் என்ன கூறுகின்றார்கள் என்பதைப் பற்றி அக்கறை கொள்ளத் தேவையில்லை. சிலர் கேட்கின்றனர்: மிருகங்களுக்கு என்ன நடைபெறுகின்றது? மற்றைய மதங்களுக்கு என்ன நடைபெறுகின்றது? அவர்களிடம் கூறுங்கள்: முதலில் உங்களைப் பற்றிப் புரிந்து கொள்ளுங்கள், பின்னர் மற்றவர்களைப் பற்றிக் கேளுங்கள். ஏனெனில் பாரத மக்கள் தங்கள் சொந்தத் தர்மத்தையே மறந்து விட்டதால், சந்தோஷம் அற்றவர்கள் ஆகிவிட்டார்கள். நீங்களே தாயும், தந்தையுமென பாரதத்திலேயே அவர்கள் அழைக்கின்றார்கள். வெளிநாடுகளில் அவர்கள் “தாயும், தந்தையும்” என்ற பதத்தை அதிகளவு பயன்படுத்துவதில்லை; அவர்கள் வெறுமனே தந்தையாகிய கடவுள் பற்றிப் பேசுகின்றார்கள். உண்மையில் பாரதத்தில் அபரிமிதமான சந்தோஷம் இருந்தது. பாரதம் சுவர்க்கமாக இருந்தது என நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். தந்தை வந்து முட்களை, மலர்களாக மாற்றுகின்றார். தந்தை பூந்தோட்டத்தின் அதிபதி எனவும் அழைக்கப்படுகின்றார். “வந்து முட்களை மலர்களாக மாற்றுங்கள்” என மக்கள் அவரை அழைக்கின்றார்கள். தந்தை பூந்தோட்டத்தை உருவாக்குகின்றார். பின்னர் மாயை அதை முட்காடாக ஆக்குகின்றாள். “கடவுளே, உங்கள் மாயை மிகவும் சக்தி வாய்ந்தவள்!” என மக்கள் கூறுகின்றார்கள்: அவர்கள் கடவுளையோ அல்லது மாயையையோ அறியார்கள். சிலர் அந்த வார்த்தைகளைக் கூறினார்கள், மற்றவர்கள் அதனைத் தொடர்ந்தும் மீண்டும் மீண்டும் கூறி வருகின்றார்கள். அவற்றிற்கு எந்த அர்த்தமும் இல்லை. இந்த நாடகம் இராம இராச்சியம், இராவண இராச்சியம் பற்றிய நாடகம் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். இராம இராச்சியத்தில் சந்தோஷமும், இராவண இராச்சியத்தில் துன்பமும் இருக்கின்றன. இது இங்கேயே பொருந்துகின்றது. இது கடவுளின் மாயை இல்லை. மாயை ஐந்து விகாரங்களையே குறிக்கின்றது. அவை இராவணன் எனவும் அழைக்கப்படுகின்றன. எவ்வாறாயினும், மனிதர்கள் மறுபிறவி எடுத்து 84 பிறவிகளின் சக்கரத்தினுள் வந்தாக வேண்டும்: நீங்கள் சதோகுணியில் இருந்து, தமோபிரதானாக வேண்டும். இந்த நேரத்தில் அனைவரும் விகாரத்தின் மூலமே பிறப்பெடுக்கின்றனர், இதனாலேயே அவர்கள் விகாரமானவர்கள் என அழைக்கப்படுகின்றனர். விகாரமான உலகம், விகாரமற்ற உலகம் என்பனவே அவற்றின் பெயர்களாகும். எவ்வாறு புதிய உலகம் பழையது ஆகுகின்றது என்பதைப் புரிந்துகொள்வது பொதுவானது. முதலில் புதிய உலகில் சுவர்க்கம் இருந்தது. பரமாத்மா பரமதந்தை, சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார் எனவும், அங்கே அபரிமிதமான சந்தோஷம் இருக்கின்றது எனவும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். எவ்வாறு இந்த ஞானத்தின் மூலம் பகலும், பக்தியின் மூலம் இரவும் இருக்கின்றது என எவரும் புரிந்துகொள்வதில்லை. பிரம்மாவினதும், அவரது வாய்வழித் தோன்றல்களான பிராமணர்களினதும் பகல் குறிப்பிடப்படுகின்றது. பின்னர் அதே பிராமணர்களின் இரவும் இருக்கின்றது. பகலும், இரவும் இங்கேயே இடம்பெறுகின்றன என மக்கள் புரிந்து கொள்வதில்லை. அது பிரஜாபிதா பிரம்மாவின் இரவாக இருக்கின்ற பொழுது, அது நிச்சயமாக வாய்வழித் தோன்றல்களாகிய, பிராமணர்களின் இரவாகவும் இருக்க வேண்டும். அரைக் கல்பத்துக்குப் பகலும், மற்றைய அரைக் கல்பத்துக்கு இரவும் இருக்கின்றது. தந்தை இப்பொழுது உலகை விகாரம் அற்றதாக ஆக்குவதற்கு வந்துள்ளார். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, காமமே கொடிய எதிரி. நீங்கள் அதை வெற்றிகொள்ள வேண்டும். நீங்கள் முற்றிலும் விகாரமற்றுத் தூய்மையாக வேண்டும். தூய்மை அற்றவர்கள் ஆகுவதனால், நீங்கள் பல பாவங்களைச் செய்துள்ளீர்கள். இது பாவாத்மாக்களின் உலகமாகும். பாவங்கள் நிச்சயமாகச் சரீரத்தின் மூலமே செய்யப்படுகின்றன, பின்னர் அந்த ஆத்மாக்கள் பாவாத்மாக்கள் ஆகுகின்றனர். தேவர்களின் தூய உலகில் எந்தப் பாவங்களும் செய்யப்படுவதில்லை. இங்கே, நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால், மேன்மையானவர்களாகவும், புண்ணியாத்மாக்களாகவும் ஆகுகின்றீர்கள். ஸ்ரீ ஸ்ரீ 108 மணிமாலை இருக்கின்றது. மேலே குஞ்சம் இருக்கின்றது; அது சிவனைக் குறிக்கின்றது. அது அசரீரியான மலராகும். பின்னர் சரீர வடிவில் ஆணினதும், பெண்ணினதும் மாலை உருவாக்கப்படுகின்றது. அவர்கள் சிவபாபாவினால் பூஜிக்கவும், நினைவுசெய்யவும் தகுதியானவர்கள் ஆக்கப்படுகின்றார்கள். சிவபாபா உங்களை வெற்றி மாலையின் மணிகள் ஆக்குவதற்கு வந்துள்ளார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நாங்கள் நினைவுச் சக்தியின் மூலம் உலகை வெற்றி கொள்கின்றோம். இந்த நினைவின் மூலமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படுகின்றன. பின்னர் நீங்கள் சதோபிரதான் ஆகுகின்றீர்கள். அந்த மக்கள் “கடவுளே, உங்கள் மாயை மிகவும் சக்திவாய்ந்தவள்!” என்று புரிந்து கொள்ளாமல் கூறுகின்றனர். ஒருவரிடம் அதிகளவு செல்வம் இருக்கின்ற பொழுது, அவரிடம் பெருமளவு மாயை உள்ளது என மக்கள் கூறுகின்றார்கள். உண்மையில் இராவணன் எனவும் அழைக்கப்படுகின்ற, ஐந்து விகாரங்களையே மாயை குறிக்கின்றது. பின்னர் அவர்கள் பத்துத் தலைகளுடன் கூடிய இராவணனின் படத்தை உருவாக்குகின்றார்கள். அந்தப் படம் இருப்பதால், அதனுடைய விளக்கமும் கொடுக்கப்பட வேண்டும். உதாரணமாக, அங்கதனைப் பற்றிக் கூறப்படுகின்றது. இராவணன் அவரை அசைக்க முயற்சித்த பொழுதும், அவனால் சிறிதளவுகூட அவரை அசைக்க முடியவில்லை. அவர்கள் வெறுமனே உதாரணங்களை உருவாக்கி உள்ளார்கள், ஆனால் அவ்வாறாக எதுவும் இல்லை. தந்தை கூறுகின்றார்: எந்தளவுக்கு மாயை உங்களை அசைக்க முயன்றாலும், நீங்கள் ஸ்திரமாக இருக்க வேண்டும். இராவணன், அனுமான், அங்கதன் போன்றோரின் உதாரணங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த உதாரணங்களின் அர்த்தங்களையும் நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். ரீங்காரமிடும் வண்டின் உதாரணமும் இருக்கின்றது. ரீங்காரமிடும் வண்டின் (பிரம்மரி) பெயரினதும், பிராமண ஆசிரியரின் (பிராமணி) பெயரினதும் ஒலிகள் ஒரேமாதிரியானவை. நீங்கள் அழுக்கான பூச்சிகளுக்கு ஞானத்தையும், யோகத்தையும் ரீங்காரமிட்டு அவர்களைத் தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மை ஆக்குகின்றீர்கள். தந்தையை நினைவு செய்யுங்கள், நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். ஆமையின் உதாரணமும் இருக்கின்றது: அவை தங்களின் பௌதீக அங்கங்கள் அனைத்தையும் உள்ளே இழுத்து அகநோக்காக ஆகுகின்றன. தந்தை உங்களுக்குக் கூறுகின்றார்: நீங்கள் செயல்களைச் செய்ய வேண்டும், அதன்பின்னர் இந்த உலகமே இல்லாதது போன்று அகநோக்காக ஆகுங்கள். சகல அசைவுகளும், சத்தமும் முடிவுக்கு வரட்டும். பக்தி மார்க்கத்திலே அவர்கள் புறநோக்கு உடையவர்கள். அவர்கள் பாடல்கள் பாடி, இதையும் அதையும் செய்கின்றனர்; அதிகளவு குழப்பங்களை உருவாக்கி, அதிகளவு பணத்தையும் செலவு செய்கின்றார்கள்! அவர்கள் பல விழாக்களையும் நடத்துகின்றார்கள்! தந்தை கூறுகின்றார்: அவ்வாறு செய்வது அனைத்தையும் நிறுத்திவிட்டு, இந்த உலகம் இல்லாததைப் போன்று மிகவும் அகநோக்காக ஆகுங்கள். நீங்கள் தகுதியானவர்களாகி விட்டீர்களா என உங்களைச் சோதித்துப் பாருங்கள்: விகாரங்கள் எதுவும் என்னைத் தொந்தரவு செய்கின்றதா? நான் தந்தையை நினைவு செய்கின்றேனா? உங்களை உலகின் அதிபதிகள் ஆக்குகின்ற தந்தையை நீங்கள் இரவுபகலாக நினைவுசெய்ய வேண்டும். நான் ஓர் ஆத்மா, அவர் எனது தந்தை. “நான் புதிய உலகின் மலராக ஆகுகின்றேன்” என உள்ளார எப்பொழுதும் நினைவு செய்யுங்கள். நான் எருக்கலம் பூவாகவோ அல்லது நச்சுப் பூவாகவோ ஆகக்கூடாது. நான் ஓர் இராஜ மலரான, மிகவும் நறுமணம் மிக்க மலராக ஆகவேண்டும். எந்தத் துர்நாற்றமும் இருக்கக்கூடாது. சகல தீய எண்ணங்களையும் அகற்ற வேண்டும். உங்களை வீழ்த்துவதற்கு மாயையின் பல புயல்கள் வரும். உங்கள் பௌதீக அங்கங்களினால் எந்தப் பாவச் செயல்களையும் செய்யாதீர்கள். இந்த முறையில் உங்களைப் பலமானவர்களாக்கி, உங்களைச் சீர்திருத்திக் கொள்ளுங்கள். நான் எந்தச் சரீரதாரியையும் நினைவு செய்யக்கூடாது. தந்தை கூறுகின்றார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதி என்னை நினைவுசெய்து, உங்கள் சரீரங்களின் வாழ்வாதாரத்துக்கான செயல்களைச் செய்யுங்கள். நீங்கள் அதற்கும் நேரத்தை ஒதுக்க முடியும். நீங்கள் உணவை உண்கின்ற பொழுதும், தந்தையைத் தொடர்ந்தும் புகழுங்கள். பாபாவின் நினைவில் உணவை உண்கின்ற பொழுது, உணவும் தூய்மையாகும். நீங்கள் சதா தந்தையை நினைவு செய்யும்பொழுது, அந்த நினைவு உங்களின் பல பிறவிகளின் பாவங்களை அழிப்பதால், நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். நீங்கள் எந்தளவிற்கு நிஜத் தங்கமாகி உள்ளீர்கள் என உங்களை நீங்கள் சோதித்துப் பார்க்க வேண்டும். இன்று நான் எத்தனை மணித்தியாலம் நினைவில் நிலைத்திருந்தேன்? நேற்று நான் மூன்று மணிநேரம் நினைவில் நிலைத்திருந்தேன். இன்று நான் இரண்டு மணிநேரம் நினைவில் இருந்தேன். எனவே இன்று எனக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்றமும், இறக்கமும் தொடர்ந்தும் உள்ளன. மக்கள் யாத்திரைக்குச் செல்கின்ற பொழுது, சில இடங்கள் உயரமாகவும், மற்றைய இடங்கள் தாழ்வாகவும் இருக்கின்றன. உங்கள் ஸ்திதியும் தொடர்ந்தும் மேலும், கீழும் செல்கின்றது. நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய சொந்தக் கணக்கைப் பார்க்க வேண்டும். நினைவு யாத்திரையே பிரதான விடயமாகும். இவை கடவுளின் வாசகங்களாக இருப்பதனால், நிச்சயமாக அவருடைய குழந்தைகளுக்கு மாத்திரமே அவர் கற்பிக்கின்றார். அவர் எவ்வாறு முழு உலகிற்கும் கற்பிக்க முடியும்? யார் கடவுள் என அழைக்கப்பட முடியும்? கிருஷ்ணர் ஒரு சரீரதாரி. அசரீரியான, பரமாத்மாவான பரமதந்தையே கடவுள் என அழைக்கப்படுகின்றார். அவர் கூறுகின்றார்: நான் ஒரு சாதாரண சரீரத்தில் பிரவேசிக்கின்றேன். பிரம்மா ஒரு வயதான சரீரத்தைக் கொண்டிருந்தார் என நினைவு கூரப்படுகின்றது. ஒரு முதிய மனிதரே வெள்ளை நிற தாடி, மீசையைக் கொண்டிருப்பார். ஒரு முதிர்ந்த, அனுபவமுள்ள இரதமே நிச்சயமாகத் தேவைப்படுகின்றார். கடவுள் ஓர் இளைய இரதத்தில் பிரவேசிப்பாரா? அவரே கூறுகின்றார்: எவருமே என்னை அறியார். அவரே பரமனும், தந்தையான கடவுளும் ஆவார். அவரே பரமாத்மா. நீங்கள் 100வீதம் தூய்மையாக இருந்தீர்கள். நீங்கள் இப்பொழுது 100வீதம் தூய்மை அற்றவர்கள் ஆகிவிட்டீர்கள். சத்திய யுகத்தில் 100வீதம் தூய்மை இருந்தது. ஆகையினால் அங்கே அமைதியும், செழிப்பும் இருந்தன. தூய்மையே பிரதான விடயம். எவ்வாறு தூய்மையற்ற மக்கள் தூய்மையானவர்களின் விக்கிரகங்களுக்கு முன்னால் தலை வணங்கி, அவர்களின் புகழ் பாடுகின்றார்கள் என நீங்கள் பார்க்கலாம். “நீங்கள் சகல தெய்வீகக் குணங்களும் நிறைந்தவர்கள், நாங்கள் சீரழிந்த பாவிகள்” என அவர்கள் ஒருபொழுதும் சந்நியாசிகளுக்குக் கூறுவதில்லை. அவர்கள் இதைத் தேவர்களின் விக்கிரகங்களுக்கே கூறுகின்றனர். பாபா விளங்கப்படுத்தி உள்ளார்: அனைவரும் ஒரு குமாரிக்குத் தலை வணங்குகின்றார்கள். பின்னர் அவள் திருமணம் புரிந்ததும், அவள் பாவத்தில் ஈடுபட்டு, அனைவருக்கும் தலை வணங்க வேண்டும். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது நீங்கள் விகாரமற்றவர்கள் ஆகினால், அரைக் கல்பத்துக்கு விகாரம் அற்றவர்கள் ஆகுகிறீர்கள். ஐந்து விகாரங்களின் இராச்சியம் இப்பொழுது முடிவிற்கு வருகின்றது. இது மரணபூமியும், அது அமரத்துவ பூமியும் ஆகும். ஆத்மாக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் இப்பொழுது மூன்றாவது கண்ணாகிய ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். தந்தையே உங்களுக்கு இதைக் கொடுக்கின்றார். நெற்றியிலேயே ஒரு திலகம் இடப்படுகின்றது. ஆத்மாக்களாகிய உங்களுக்கு இப்பொழுது இந்த ஞானம் கொடுக்கப்படுகின்றது. எதற்காக? அதன் மூலம் நீங்கள் உங்களுக்கே இராச்சியத் திலகத்தைக் கொடுக்க முடியும். ஒருவர் சட்டநிபுணர் ஆகுவதற்காகக் கற்கின்ற பொழுது, அவர் சட்டநிபுணர் என்ற திலகத்தைத் தனக்கு இட்டுக் கொள்வார். ஒருவர் கற்கின்ற பொழுது, திலகம் இடப்படுகின்றது. ஒருவர் ஆசீர்வாதங்களைக் கேட்பதனால், அவருக்கு அதனைக் கொடுக்க முடியாது. அந்த வகையில், ஆசிரியர் அனைவர் மீதும் கருணை கொண்டால், அனைவரும் சித்தி அடைந்து விடுவார்கள். குழந்தைகளாகிய நீங்கள் உங்களுக்கே இராச்சியத் திலகத்தை இட்டுக் கொள்ள வேண்டும். தந்தையை நினைவு செய்வதனால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும், சக்கரத்தைச் சுழற்றுவதன் மூலம் நீங்கள் பூகோளத்தை ஆட்சிசெய்பவர்களான, சக்கரவர்த்திகள் ஆகுவீர்கள். தந்தை கூறுகின்றார்: நான் உங்களை அரசர்களுக்கெல்லாம் அரசர்கள் ஆக்குகின்றேன். தேவர்கள் இரட்டைக் கிரீடம் உடையவர்கள் ஆகுகின்றார்கள். தூய்மையற்ற அரசர்கள் கூட அவர்களைப் பூஜிக்கின்றார்கள். நான் உங்களைப் பூஜிக்கின்ற அரசர்களை விடவும் உங்களை மேலும் மேன்மையானவர்கள் ஆக்குகின்றேன். அதிகளவு தானஞ் செய்து, பெருமளவில் புண்ணியம் செய்தவர்கள், தாங்கள் செய்த நல்ல செயல்களின் பலனாக ஓர் அரசருக்குத் தங்கள் அடுத்த பிறப்பை எடுப்பார்கள். இங்கே, நீங்களும் கிரகித்து, மற்றவர்களுக்கும் தானஞ் செய்கின்ற, அழியாத இந்த ஞான இரத்தினங்களை இப்பொழுது பெறுகின்றீர்கள். இதுவே உங்கள் வருமானத்தின் ஆதாரமாகும். அந்த ஆசிரியர்கள் அந்தக் கல்வியைத் தானஞ் செய்கின்றார்கள். அந்தக் கல்வி தற்காலிக காலத்துக்கானதாகும். அந்த மாணவர்கள் வெளிநாட்டில் தங்களது கல்வியை முடித்து வீடு திரும்பியதும் மாரடைப்பு ஏற்பட்டு, அந்தக் கல்வி அனைத்தும் முடிந்து விடுகின்றது. ஆகவே அது அழியக்கூடியது, இல்லையா? அந்த முயற்சிகள் அனைத்தும் வீணாகி விடுகின்றன. உங்கள் முயற்சி அவ்வாறு வீணாக்கப்பட முடியாது. நீங்கள் எந்தளவு அதிகமாகக் கற்கின்றீர்களோ, அந்தளவுக்கு அந்தக் கல்வி உங்களுடன் 21 பிறவிகளுக்கு நிலைத்திருக்கும். அங்கே அகால மரணங்கள் இல்லை. நீங்கள் இந்தக் கல்வியை உங்களுடன் எடுத்துச் செலகிறீர்கள். தந்தை எவ்வாறு உபகாரியாக இருக்கின்றாரோ, அவ்வாறே குழந்தைகளாகிய நீங்களும் உபகாரிகளாகி, அனைவருக்கும் பாதையைக் காட்ட வேண்டும். பாபா உங்களுக்கு நல்ல அறிவுரை கொடுக்கின்றார். அனைத்துச் சமயநூல்களினதும் அதிமேன்மையான இரத்தினமாக விளங்குகின்ற, ஸ்ரீமத் பகவத் கீதைக்கு ஏன் அதிகளவு புகழ் உள்ளது என அனைவருக்கும் விளங்கப்படுத்துங்கள். கடவுளின் வழிகாட்டல்கள் மாத்திரமே மேன்மையானவை, ஆனால் கடவுள் என அழைக்கப்படுபவர் யார்? ஒரேயொரு கடவுள் மாத்திரமே இருக்க முடியும். அவர் சகல ஆத்மாக்களினதும் தந்தையான, அசரீரியானவர் ஆவார். இதனாலேயே அனைவரும் சகோதரர்கள் எனக் கூறப்படுகின்றது. பின்னர் பிரம்மாவினால் புதிய உலகம் ஸ்தாபிக்கப்படுகின்ற பொழுது, நீங்கள் சகோதர, சகோதரிகள் ஆகுகின்றீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் சகோதர, சகோதரிகள் ஆகுகின்றீர்கள். ஆகவே நீங்கள் தூய்மையாக இருக்க வேண்டும். இதுவே தூய்மையாக இருப்பதற்கான நல்ல யுக்தியாகும். உங்கள் குற்றப்பார்வை முழுமையாக முடிவடைய வேண்டும். உங்களுடைய கண்கள் சிலநேரங்களில் விஷமம் செய்யாதிருப்பதில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். நீங்கள் வீதியில் வறுத்த கடலை விற்பதைப் பார்க்கும் பொழுது, நீங்கள் அதை உண்ண விரும்புவதில்லை, அப்படித்தானே? பலர் அவ்வாறான ஆசையைக் கொண்டுள்ளனர். அவர்கள் அதை உண்ணவும் செய்கின்றார்கள். ஒரு பிராமணச் சகோதரி ஒரு சகோதரனுடன் எங்கேயாவது செல்லும் பொழுது, அவர் கடலையை அவளுக்கு வாங்கிக் கொடுத்தால், அதை ஒருமுறை உண்டால் பாவமில்லை என அவள் எண்ணுகின்றாள். பலவீனமானவர்கள் எவ்விதத் தயக்கமும் இல்லாமல் அவற்றை உண்டு விடுகின்றார்கள். சமயநூல்களில் இதை அடிப்படையாகக் கொண்டு ஓர் உதாரணமும் உள்ளது. அவர்கள் அந்தக் கதைகளை உருவாக்கி உள்ளார்கள். அவை அனைத்தும் இந்த நேரத்திற்கே பொருந்துகின்றன. நீங்கள் அனைவரும் சீதைகள். தந்தை ஒரேயொரு தந்தையை நினைவு செய்யுமாறு உங்களுக்கு கூறுகின்றார், அதன் மூலம் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். எவ்வாறாயினும் வேறு எதுவுமில்லை. இராவணன் உண்மையில் ஒரு நபரல்ல என நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். விகாரங்கள் ஆரம்பிக்கும் பொழுது, மக்கள் இராவண சமூகத்திற்கு உரியவர்கள் எனக் கூறப்படுகின்றார்கள். ஒருவர் அவ்வாறான செயல்களைச் செய்யும் பொழுது, “நீங்கள் அசுரர் போன்றவர்!” எனக் கூறப்படுகின்றார். அவரது நடத்தை அசுரத்தனமானது. விகாரமான குழந்தைகள் குலத்தின் பெயரை அவதூறு செய்பவர்கள் என்று அழைக்கப்படுவார்கள். எல்லையற்ற தந்தை கூறுகின்றார்: நான் உங்களை அவலட்சணமானவர்களில் இருந்து, அழகானவர்கள் ஆக்குகின்றேன். பின்னர் நீங்கள் உங்கள் முகங்களை அழுக்காக ஆக்குகின்றீர்கள். நீங்கள் தூய்மையாக இருப்பதாக ஒரு சத்தியம் செய்கின்றீர்கள், பின்னர் நீங்கள் விகாரமானவர்கள் ஆகுகின்றீர்கள். அவ்வாறானவர்கள் அவர்கள் முன்னர் இருந்ததை விட அவலட்சணமானவர் ஆகுகின்றார்கள். இதனாலேயே அவர்கள் கல்லுப்புத்திகளை உடையவர்கள் எனக் குறிப்பிடப்படுகின்றார்கள். நீங்கள் இப்பொழுது தெய்வீகப் புத்தியுடையவர்கள் ஆகுகின்றீர்கள். உங்கள் ஸ்திதி இப்பொழுது உயர்கின்றது. நீங்கள் தந்தையை இனங்கண்டவுடன், உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள். இதில் சந்தேகத்துக்கான எந்தக் கேள்வியுமில்லை. தந்தையே சுவர்க்கக் கடவுளான, தந்தையாவார். ஆகவே அவர் நிச்சயமாகக் குழந்தைகளாகிய உங்களுக்குச் சுவர்க்கத்தைப் பரிசாகக் கொண்டு வருவார். மக்கள் சிவனின் பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்கள், அப்பொழுது அவர்கள் என்ன செய்கின்றனர்? அவர்கள் விரதம் இருக்கின்றார்கள். உண்மையில் விகாரங்களைக் கைவிடுவதற்கே விரதம் இருக்க வேண்டும்: நீங்கள் விகாரத்தில் ஈடுபடக்கூடாது. விகாரத்தின் மூலமே அது ஆரம்பித்த காலத்தில் இருந்து மத்தியினூடாக இறுதிவரை நீங்கள் துன்பத்தைப் பெறுகின்றீர்கள். இப்பொழுது இந்த ஒரு பிறவிக்குத் தூய்மை ஆகுங்கள். பழைய உலகின் விநாசம் முன்னால் உள்ளது. எவ்வாறு பாரதத்தில் 900,000 பேர் மாத்திரம் இருப்பார்கள் எனப் பாருங்கள்; பின்னர் அமைதி நிலவும். அங்கே முரண்பாடுகளை விளைவிப்பதற்கு வேறு எந்த மதங்களும் இருக்க மாட்டாது. ஒரு தர்மம் மாத்திரமே ஸ்தாபிக்கப்பட்டு, ஏனைய மதங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விடும். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை, ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. அழியாத இந்த ஞானச் செல்வத்தைக் கிரகித்து, பின்னர் அதைத் தானம் செய்யுங்கள். இந்தக் கல்வியின் மூலம் உங்களுக்கு ஓர் இராச்சியத் திலகத்தை இடுங்கள். தந்தையைப் போன்று உபகாரி ஆகுங்கள்.2. உணவு, பானம் பற்றிய அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் கடைப்பிடியுங்கள். உங்கள் கண்கள் ஒருபொழுதும் உங்களை ஏமாற்றாதவாறு கவனமாக இருங்கள். உங்களைச் சீர்திருத்துங்கள். உங்கள் பௌதீக அங்கங்கள் மூலம் எந்தப் பாவச் செயலையும் செய்யாதீர்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் சதா உங்களின் மனதின் சக்தியை அனுபவம் செய்து, அதை எல்லையற்ற பணிகளில் ஒத்துழைப்பதற்குப் பயன்படுத்துவீர்களாக.சடப்பொருளையும் தமோகுணி ஆத்மாக்களின் அதிர்வலைகளையும் மாற்றுவதற்கும் அவசியமற்ற இரத்தம் சிந்தும் சூழலிலும் அதிர்வலைகளில் இருந்தும் உங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும் ஆத்மாக்கள் பலருக்கு ஒத்துழைப்பை வழங்குவதற்கும் புதிய உலகிற்கான புதிய படைப்பை யோக சக்தியுடன் ஆரம்பியுங்கள். இந்தப் பாரிய பணிகள் எல்லாவற்றுக்கும் உங்களின் மனதின் சக்தி உங்களுக்கு அவசியம். உங்களின் மனதின் சக்தியால் மட்டுமே உங்களின் இறுதிக் கணங்கள் அழகானவை ஆகும். ஒருவரின் மனதின் சக்தி என்றால், மேன்மையான எண்ணங்களின் சக்தி, ஒரேயொருவருடன் தெளிவான இணைப்பைப் பேணுதல் என்று அர்த்தம். இப்போது, இதில் அனுபவசாலி ஆகுங்கள். அப்போது உங்களால் இந்த எல்லையற்ற பணிகளில் ஒத்துழைக்கக் கூடியதாக இருப்பதுடன் அந்த எல்லையற்ற இராச்சியத்தின் உரிமையையும் கோர முடியும்.
சுலோகம்:
பயமின்மையும் பணிவுமே ஒரு யோகி மற்றும் ஞானி ஆத்மாவின் ரூபங்கள் ஆகும்.அவ்யக்த சமிக்கை: ஓர் இலகு யோகியாக இருப்பதற்கு, இறை அன்பில் அனுபவசாலி ஆகுங்கள்.
இறையன்பே ஆனந்தம் மிக்க ஊஞ்சல் ஆகும். சந்தோஷத்தைக் கொடுக்கும் இந்த ஊஞ்சலில் ஆடிக் கொண்டு, சதா இறையன்பில் திளைத்திருக்கும்போது, மாயையின் எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையோ அல்லது குழப்பங்களோ உங்களிடம் வரமுடியாது. இறையன்பானது முடிவற்றது மற்றும் அசைக்க முடியாதது. அது அதிகளவில் இருப்பதுடன் மிகவும் பலம் வாய்ந்தது. அதை எவராலும் பெற முடியும். ஆனால் இறையன்பைப் பெறுவதற்கான வழிமுறை, பற்றற்றவராக இருப்பதே ஆகும். எந்தளவிற்கு நீங்கள் பற்றற்றவராக இருக்கிறீர்களோ, அந்தளவிற்கு இறையன்பிற்கான உரிமையைப் பெறுவீர்கள்.