04.09.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, இந்த எல்லையற்ற நாடகத்தில் கதாநாயக, கதாநாயகிகளின் பாகத்தை நடிப்பவர்கள், நீங்களேயன்றி, தந்தையல்ல. தூய்மை அற்றவர்களைத் தூய்மையாக்குகின்ற கலை தந்தையிடம் மாத்திரமே உள்ளது.
கேள்வி:
பிரம்மாவின் படத்தைப் பார்த்து ஆட்சேபிப்பவர்களுக்கு, நீங்கள் என்ன முக்கியத்துவத்தை விளங்கப்படுத்த வேண்டும்?பதில்:
இவரே ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை ஒரு பாகத்தை நடிக்கின்ற ஆத்மா என்பதை அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். முதலாவது இளவரசராக இருந்த ஸ்ரீகிருஷ்ணரின் சரீரத்திலேயே, தந்தை பிரவேசிக்கின்றார். இவரது இறுதிப் பிறவியில் அவர், இவரினுள் பிரவேசிக்கின்றார். இது ஒரு தூய்மையற்ற சரீரம், அது தூய்மையாக வேண்டும். இவர் கடவுளல்ல. கடவுள் என்றென்றும் தூய்மையானவர். அவர் இந்தச் சரீரத்தின் ஆதாரத்தை எடுக்கின்றார்.பாடல்:
உங்கள் இதயக் கண்ணாடியில் உங்களின் முகத்தைப் பாருங்கள்.ஓம் சாந்தி.
நீங்கள் அமைதிக்காக வாயில் தோறும் வெளியில் தடுமாறித் திரியத் தேவையில்லை எனத் தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தி உள்ளார். ஹத்தயோக சந்நியாசிகள் வீட்டிலே தங்களுடைய குடும்பத்துடன் வாழும்பொழுது, அமைதியைப் பெற முடியாது என்றும், அதைக் காட்டிலேயே கண்டடைய முடியும் எனவும் நம்புகின்றனர். எவ்வாறாயினும், அவர்களால் அங்கேயும் அமைதியைப் பெற முடியாது எனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். ஓர் அரசி தனது கழுத்திலே மாலையை அணிந்து கொண்டு, அதை எல்லா இடங்களிலும் தேடியதாக, ஒரு கதை அல்லது உதாரணம் உள்ளது. அதேபோன்று அமைதி உங்கள் கழுத்தைச் சுற்றியுள்ளது. நீங்கள் ஏன் அதை வெளியில் தேடுகின்றீர்கள்? தந்தை வந்து விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே, ஆத்மாக்களாகிய உங்கள் ஆதிதர்மம் அமைதி ஆகும். அந்தச் சரீரங்கள் உங்கள் பாகங்களை நடிப்பதற்கான பௌதீக அங்கங்கள். ஆத்மாக்கள் அழிவற்றவர்கள். ஆத்மாக்கள் சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ ஆகுவதில்லை, அத்துடன் என்றுமே அழிக்கப்படுவதும் இல்லை. ஆம், ஆத்மாக்கள் தூய்மை அற்றவர்கள் ஆகுகின்றனர், அவர்கள் தூய்மையாக்கப்பட வேண்டும். ஆத்மாக்கள் முதலில் சிறிய சரீரங்களைப் பெறுகின்றார்கள். அவை வாலிப சரீரங்களாக வளர்ச்சி அடைகின்றன, அந்தச் சரீரங்கள் தொடர்ந்தும் முதுமை அடைகின்றன. ஆத்மாக்கள் அழிவற்றவர்கள். நீங்கள் முதலில் ஆத்மாக்களைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும். ஆத்மாவாகிய நான், சட்டநிபுணர் போன்றவர் ஆகுகின்றேன். இதுவே ஆத்ம உணர்வில் இருப்பது என அழைக்கப்படுகின்றது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே, நீங்கள் சரீர உணர்வு உடையவர்கள் ஆகிவிட்டீர்கள். இதனாலேயே நீங்கள் உங்களைச் சரீரங்களாகக் கருதுகின்றீர்கள். நீங்கள் ஆத்மாக்கள் என்பதையும், அவை உங்களுடைய சரீரங்கள் என்பதையும் மறந்து விட்டீர்கள். நீங்கள் உங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆத்மாவே 84 பிறவிகள் எடுக்கின்றார். தந்தை இப்பொழுது விளங்கப்படுத்தி உள்ளார்: பிராமணர்கள் ஆகியுள்ளவர்களே பின்னர் தேவர்களாகப் போகின்றார்கள். அனைவரும் 84 பிறவிகள் எடுப்பார்கள் என்றில்லை. சிலர் ஆரம்பத்தில் வருவார்கள், ஏனையோர் 50 அல்லது 100 வருடங்களின் பின்னர் தொடர்ந்தும் வருவார்கள். சிலர் 80 அல்லது 82 பிறவிகளை எடுப்பார்கள். ஏனையோர் வேறுபட்ட எண்ணிக்கையான பிறவிகளை எடுப்பார்கள். மக்கள் 8.4 மில்லியன் பிறவிகள் பற்றிப் பேசுகின்றார்கள். ஆயினும் இத்துடன் அவர்கள் திருப்தி அடையாததால், கடவுள் ஒவ்வொரு துணிக்கையிலும் இருப்பதாகக் கூறுகின்றார்கள். கடவுள் இப்பொழுது கூறுகின்றார்: நான் ஒரு மனித சரீரத்தில் இருப்பதில்லை (எனக்கு மனித சரீரம் கிடையாது). எனவே எவ்வாறு நான் மிருகத்திலோ அல்லது கற்களிலோ அல்லது துணிக்கை போன்றவற்றிலோ இருக்க முடியும்? முதல் இலக்கத்தில் இருந்த ஆத்மா, பின்னர் இறுதியில் தமோபிரதான் ஆகுகின்றார் எனத் தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். இவரது பல பிறவிகளின் கடைசிப் பிறவியில், நான் ஒரு சாதாரண சரீரத்தில் பிரவேசிக்கின்றேன் என நானே உங்களுக்குக் கூறுகின்றேன். இவர் முழுமையாக 84 பிறவிகள் எடுத்துள்ளதால், நிச்சயமாகத் தூய்மை அற்றவராகவே இருப்பார். இந்நேரத்தில் இவர் தூய்மையாக இருக்க முடியாது. தந்தையே கூறுகின்றார்: ஸ்ரீகிருஷ்ணரே முதலாம் இலக்க முதல் இளவரசர் ஆவார். அவர் பின்னர் ஓரளவு வயதை அடைந்ததும், ஸ்ரீநாராயணன் ஆகுவதால், 20 முதல் 25 வருடங்கள் குறைவாகவே உள்ளன. அவர்கள் கூட (இலக்ஷ்மி, நாராயணன்) முழுமையான 84 பிறவிகள் எடுப்பதாக நீங்கள் கூறமுடியாது. ஸ்ரீகிருஷ்ணர் முதலாம் இலக்கத்தவர், அவரது திருமணத்தின் பின்னர் அவர் நாராயணன் ஆகுகின்றார். எவ்வாறாயினும், குழந்தைகளாகிய நீங்கள் ஒரு கணக்கை வைத்திருக்க வேண்டும். ஸ்ரீகிருஷ்ணர் மாத்திரமே 5000 ஆண்டுகளில் முழுமையாக 84 பிறவிகள் எடுப்பவர் எனக் கூறப்படுகின்றார். தந்தை இங்கே அமர்ந்திருந்து விளங்கப்படுத்துகிறார்: ஒவ்வொரு கல்பத்திலும் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை ஒரு பாகத்தை நடிப்பவரின் அதே சரீரத்திலேயே நான் பிரவேசிக்கின்றேன். நான் வேறு எவரினது சரீரத்திலும் பிரவேசிக்க முடியாது. இந்தக் கணக்கு உள்ளது. பிரம்மாவே முதலாம் இலக்கத்தவர். நான் எவ்வாறு வேறு எவரினதும் சரீரத்தில் பிரவேசிக்க முடியும்? ‘கடவுள் ஏன் பிரம்மாவின் சரீரத்தில் மாத்திரம் வருகின்றார்?’ எனப் பலர் உங்களிடம் கேட்கின்றனர். எவ்வாறாயினும், இந்தக் கணக்கு உள்ளது. இவ்விடயங்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டும். பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை இடம்பெறுகின்றது என நினைவு கூரப்படுகின்றது. விஷ்ணு அல்லது சங்கரரின் மூலம் ஸ்தாபனை மேற்கொள்ளப்படுவதில்லை. அது வேறு எவரினதும் பணியுமல்ல. மக்கள் படைப்பவரையோ, படைப்பையோ அறிய மாட்டார்கள், இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டதே நடைபெறுகின்றது, எனவே நீங்கள் ஏன் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டும்? அது இந்த நேரத்தையே குறிக்கின்றது. என்ன நடைபெற வேண்டுமோ அது நடைபெறும். அதிலுள்ள எதையுமே மாற்ற முடியாது. இன்று என்ன நடைபெறுகின்றதோ, அது 5000 வருடங்களின் பின்னர் மீண்டும் நடைபெறும். நீங்கள் எதையாவது பார்க்கின்ற பொழுது, இது ஒன்றும் புதியதல்ல் இது 5000 வருடங்களுக்கு முன்னரும் நடைபெற்றது என நீங்கள் கூறவேண்டும் என பாபா விளங்கப்படுத்தி உள்ளார். மக்கள் உங்களிடம் வந்து அது பற்றிக் கேட்கக் கூடியவாறு நீங்கள் இதைத் தெளிவாக எழுதவேண்டும். இதை எழுதுவதில் எந்தத் தவறும் இல்லை. முன்னரும் இந்த யுத்தம் இடம்பெற்றது. இது ஒன்றும் புதியதல்ல. மகாபாரத யுத்தமும் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்றது. கிறிஸ்தவர்கள் வந்து, பாரத இராச்சியத்தை அபகரித்தார்கள். அது புதியதல்ல. அது அடுத்த கல்பத்திலும் இதேபோன்று மீண்டும் நடைபெறும். உலகின் வரலாறும், புவியியலும் தொடர்ந்தும் மீண்டும் மீண்டும் இடம்பெறும். ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் மீண்டும் ஒருமுறை ஸ்தாபிக்கப்படுகின்றது. முழுமையாக 84 பிறவிகள் எடுத்துள்ளவர்கள் முதலாம் இலக்க இலக்ஷ்மி, நாராயணன் ஆகுவார்கள். தந்தையே இங்கே அமர்ந்திருந்து, இந்த இரகசியங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். தந்தை கூறுகின்றார்: நானே மனித உலக விருட்சத்தின் விதை ஆவேன். இது தலைகீழான விருட்சம் எனவும் அழைக்கப்படுகின்றது. இந்தக் கல்ப விருட்சத்தின் கால எல்லை 5000 வருடங்கள் ஆகும். சுவஸ்திகாவிலே நீங்கள் நான்கு சம பாகங்களைக் காண்கின்றீர்கள். யுகங்களும் சமமானவை; அதில் வேறுபாடு எதுவும் இருக்க முடியாது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: உலகில் என்ன நடக்கின்றது எனப் பாருங்கள்! சிலர் சந்திரனுக்குச் செல்கின்றார்கள், சிலர் நெருப்பின் மீதோ அல்லது நீரின் மீதோ நடக்கக் கற்றுக் கொள்கின்றார்கள். அவை அனைத்தும் பயனற்றவை; அவற்றில் எவ்வித நன்மையும் இல்லை. மனிதர்களால் தூய்மையாகி, முக்திக்கோ அல்லது ஜீவன்முக்திக்கோ செல்ல முடியாது. அவர்கள் என்ன செய்தாலும், அவர்களால் வீடு திரும்ப முடியாது. ஆத்மாக்கள் தங்களினதும், தந்தையினதும் வீட்டை மறந்து விட்டார்கள். ஆத்மாக்கள் தங்களையே மறந்து விட்டதால், சரீர உணர்வு உடையவர்களாகி விட்டார்கள். மக்கள் ஆலயங்களுக்குச் சென்று, ‘நீங்கள் தெய்வீகக் குணங்கள் அனைத்தும் நிறைந்தவர்கள், நாங்களோ சீரழிந்த பாவிகள்’ எனப் புகழ் பாடுகின்றார்கள். அவர்கள் தங்களையே இகழ்;கின்றார்கள். தந்தை ஒருபொழுதும் பூஜிப்பவர் ஆகுவதில்லை. இரண்டாவதாக, சங்கரரும் என்றென்றும் பூஜிக்கத்தகுதி வாய்ந்தவர் என நீங்கள் கூறுவீர்கள். அவரும் ஒருபொழுதும் பூஜிப்பவர் ஆகுவதில்லை. அவருக்கு இங்கே ஒரு பாகமும் இல்லை. பிரம்மாவும், விஷ்ணுவும் மாத்திரமே இந்த மேடையில் பாகங்களைக் கொண்டுள்ளார்கள். பிரம்மாவும், விஷ்ணுவும் கொண்டிருக்கும் பாகங்களை இந்த உலகிலுள்ள எவருமே அறியார். அவர்கள் திரிமூர்த்தி பிரம்மா பற்றிப் பேசுகின்றார்கள், ஆனால் அவர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை என்று அவர்கள் பேசுகின்றார்கள், ஆனால் அதை ஸ்தாபித்தவரின் எந்த ரூபமும் அவர்களிடம் இல்லை. அவர்கள் இதைக் கூறுகின்றார்கள், ஆனால் அவர் எங்கே? சிவன் யார் என்பது அவர்களுக்குத் தெரியாது. ஓர் அற்புதமான நட்சத்திரம் நெற்றியின் மத்தியில் பிரகாசிக்கின்றது என ஆத்மாக்கள் பற்றி அவர்கள் கூறுகின்றார்கள். ஆத்மாவான நான் அழியாதவன், இந்தச் சரீரம் அழியக்கூடியது. தாங்;கள் எத்தனை சரீரங்களை எடுத்தார்கள் என்பதையும் அவர்கள் அறியார்கள். மனிதர்கள் மிகவும் சந்தோஷம் அற்றிருப்பதால், தொடர்ந்தும் விரக்தியில், “ஓ தந்தையாகிய கடவுளே!” எனக் கதறி அழுகின்றனர். அவர்கள் துன்பத்தை அனுபவம் செய்ய ஆரம்பித்ததில் இருந்தே அழைக்கின்றார்கள். பாரதத்தில் இராவண இராச்சியம் ஆரம்பித்த பொழுது, ஏனைய மதங்களில் இராவண இராச்சியம் இருக்கும் என்பதில்லை எனவும் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. இல்லை, அவர்கள் சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகளினூடாக, அவர்களுக்குரிய நேரத்தில் செல்ல வேண்டும். இந்தக் கதை பாரதத்தை அடிப்படையாகக் கொண்டது. அவை துணைக் கதைகள் ஆகும். தந்தை மத்தியிலேயே வருகிறார். பாரதம் தமோபிரதானாகிய பின்னர், முழு விருட்சமும் தமோபிரதான் ஆகுகின்றது. அவர்கள் அனைவரும் சந்தோஷத்தையும், துன்பத்தையும் அனுபவம் செய்ய வேண்டும். விருட்சத்தில் வெளிப்படுகின்ற புதிய இலைகள் மிகவும் அழகானவை. புதியவர்களும் நிச்சயமாகச் சதோ, ரஜோ, தமோ, ஸ்திதிகளினூடாகச் செல்ல வேண்டும். இறுதியில் வருபவர்களுக்குச் சிறிது மரியாதை கொடுக்கப்படுகின்றது. அவர்கள் ஒரு பிறவியிலேயே சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகளைக் கடந்து செல்கின்றனர், ஆனால் அவர்களுக்கு எந்தப் பெறுமதியும் இல்லை. கதாநாயக, கதாநாயகி பாகங்களை நடிப்பவர்களுக்கே பெறுமதி உள்ளது. பாபா மாத்திரமே கதாநாயக, கதாநாயகிப் பாகத்தை நடிக்கின்றார் என்றில்லை. பாபா பற்றி இவ்வாறு கூறப்பட முடியாது. அவர் வந்து தூய்மை அற்றவர்களைத் தூய்மையானவர்கள் ஆக்குகின்றார். அவர் தூய்மை அற்றவர் ஆகுவதில்லை. நீங்கள் தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மையானவர்கள் ஆகுவதற்கு முயற்சி செய்கின்றீர்கள். நீங்கள் இராஜயோகத்தின் ஸ்ரீமத்தைப் பின்பற்றியதன் மூலம் உங்கள் இராச்சியத்தைக் கோரினீர்கள். இப்பொழுது மீண்டும் ஒருமுறை நீங்கள் அதைப் பெறுகின்றீர்கள். பாபா கூறுகின்றார்: நான் இராச்சியத்தை ஆட்சி செய்வதில்லை, ஆனால் உங்களை அரசர்களுக்கெல்லாம் அரசர்கள் ஆக்குகின்றேன். உலகிலுள்ள மக்கள் பல விடயங்களைக் கூறுகின்றனர். கடவுள் பேசுகின்றார்: நான் உங்களை அரசர்களுக்கு எல்லாம் அரசர்கள் ஆக்குகின்றேன். ஆயினும் அதன் அர்த்தத்தை அவர்களே புரிந்து கொள்வதில்லை, எனவே அவர்களால் இதை எவருக்கும் விளங்கப்படுத்த முடியாதுள்ளது. கடவுள் பேசியிருந்தால், அப்பொழுது அவர் நிச்சயமாக வந்திருக்க வேண்டும். அவர் கூறியிருப்பார்: ஓ குழந்தைகளே! பாரதத்திலேயே மக்கள் சிவனின் பிறந்ததினத்தையும், சிவராத்திரியையும் கொண்டாடுகிறார்கள். தந்தை பாரத தேசத்தில் மாத்திரமே வருகின்றார். பாரதமே அழியாத தேசமாகும். அதனுடைய புகழ் மிகவும் மகத்தானது. எவ்வாறு தந்தையின் புகழ் முடிவற்றதோ, அதேபோன்று, பாரதத்தின் புகழும் முடிவற்றது. பரமாத்மா பரமதந்தை, பாரதத்திலேயே வந்து மனிதர்கள் அனைவருக்கும் சற்கதி அருள்கின்றார். அவர் அனைவருக்கும் சந்தோஷத்தை அருள்கின்றார். அவருடைய பிறப்பிடம் பாரதம் ஆகும். பாரதமே புராதன தேசமாகும். கடவுள் இராஜயோகம் கற்பிக்கின்றார், அவர் பாரதத்திலேயே வருகின்றார். எவ்வாறாயினும் ஸ்ரீகிருஷ்ணரைக் கடவுள் என அவர்கள் கூறியதால், அந்த ஒரேயொருவரின் புகழ் மறைந்து விட்டது. கடவுள் ஒருவரே. அவர் மாத்திரமே சற்குரு என்று அழைக்கப்படுகின்றார். ஏனைய பல குருமார்கள் இருக்கின்றார்கள். உங்களுக்கு ஏதாவது தொழிலைக் கற்பிப்பவர்களும் குருமார் என்றே அழைக்கப்படுகின்றனர். இந்நாட்களில் அனைவரையும் ஓர் அவதாரமென அவர்கள் நம்புகின்றார்கள். அவர்கள் எதையும் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் முற்றிலும் தூய்மை அற்றவர்களாகும் பொழுது, “பாபா, வந்து எங்களைத் தூய்மை ஆக்குங்கள்!” என அழைக்கின்றார்கள். தந்தை மாத்திரமே வந்து, உங்களுக்கு உண்மையான அமரத்துவக் கதையைக் கூறுகின்றார். எவ்வாறு நீங்கள் 84 பிறவிகளின் சக்கரத்தில் சுற்றி வந்தீர்கள் என்பது இப்பொழுது உங்கள் புத்தியில் உள்ளது. முதற் பிறவி நன்றாக இருக்கும், பின்னர் நீங்கள் தொடர்ந்தும் கீழே இறங்குவீர்கள். உலகமும் கீழிறங்குகின்ற ஸ்திதியினூடாகச் செல்கின்றது. மனிதர்களின் புத்தி சதோ, ரஜோ, தமோ ஆகுகின்றது; சத்திய யுகத்தில் இருந்து கலைகள் தொடர்ந்தும் சிறிதுசிறிதாகக் குறைவடைகின்றன. கூறப்பட்டுள்ளது: ஏறுகின்ற ஸ்திதியும், இறங்குகின்ற ஸ்திதியும் இருக்கின்றன. உங்களாலேயே அனைவருக்கும் நன்மை ஏற்படுகிறது. ஒரேயொரு தந்தையே அனைவருக்கும் சற்கதி அருள்பவர். அந்தக் குருமார்கள் சமயநூல்களை மாத்திரமே கூறுகின்றார்கள். அதைக் கேட்கின்ற வேளையிலேயே நீங்கள் தொடர்ந்தும் கீழிறங்கினீர்கள். எல்லையற்ற தந்தை வந்து குழந்தைகளான உங்களிடம் வினவுகின்றார்: நான் உங்களை அதிசெல்வந்தர்களாக்கி, வைரங்களாலும், இரத்தினங்களாலும் பதிக்கப்பட்ட பல்வேறு மாளிகைகளைக் கொடுத்துச் சென்றேன், அவை அனைத்துக்கும் என்ன நடந்தது? ஒரு லௌகீகத் தந்தை தனது குழந்தைகளுக்குப் பணத்தைக் கொடுத்து, அவர்கள் அதை வீணாக்கினால், “எவ்வாறு அந்தப் பணம் அனைத்தையும் வீணாக்கினீர்கள்?” என அவர் அவர்களைக் கேட்பார். குழந்தைகள் பணம் வைத்திருக்கும் பொழுது, அதை அவர்கள் அநாவசியமாகப் பயனற்ற விடயங்களில் செலவழிக்கின்றார்கள். ஒரு தந்தை தர்மாத்மாவாக இருக்கலாம், ஆனால் அவரது குழந்தைகள் வெளிநாட்டுக்குச் சென்று நூறாயிரங்களை வீணாக்கினால், அவரால் எதுவும் செய்ய முடியாதிருக்கும். சொத்து பாட்டனாருடையது என்பதால், தனது குழந்தைகளை அவரால் கைவிட முடியாதிருக்கும். ஆயினும் அவர் உள்ளே எரிந்து கொண்டிருப்பார். சில குழந்தைகள் தங்கள் தந்தை இறக்கின்ற பொழுது, அசுத்தமானவர்கள் ஆகுகிறார்கள். அதனால் 12 மாதங்களிலேயே செல்வம் அனைத்தையும் வீணாக்கி விடுகிறார்கள். அது ஓர் எல்லைக்கு உட்பட்ட விடயம், ஆனால் இங்கோ, இது ஓர் எல்லையற்ற விடயம். எல்லையற்ற தந்தை கூறுகின்றார்: நீங்கள் உலகின் அத்தகைய செல்வந்த அதிபதிகளாக இருந்தீர்கள்! எனவே எவ்வாறு நீங்கள் கடனாளிகள் ஆகினீர்கள்? அந்தச் செல்வம் அனைத்தையும் என்ன செய்தீர்கள்? தந்தை தனது குழந்தைகளையே கேட்பார். நான் பாரதத்தை மிகவும் செல்வந்தமாக ஆக்கினேன்! அந்தச் செல்வம் அனைத்தும் எங்கே போனது? தந்தை மட்டுமே குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். பக்தி மார்க்கத்தில் நீங்கள் அதிகளவு பணத்தைச் செலவழித்தீர்கள், நீங்கள் சமயநூல்கள் போன்றவற்றில் அதிகளவு செலவு செய்தீர்கள். உங்கள் தலை தேய்ந்து போகும் வகையில், தொடர்ந்தும் தலைவணங்கினீர்கள். நீங்கள் அந்தச் செல்வம் அனைத்தையும் இழந்து விட்டீர்கள். இதுவே நாடகம்! நான் உங்களைச் செல்வந்தர்கள் ஆக்குகின்றேன், பின்னர் இராவணன் உங்களை ஏழைகள் ஆக்குகின்றான். தந்தை இதைப் பாரத மக்களுக்கே விளங்கப்படுத்துகின்றார். பாரதமே தங்கச் சிட்டுக்குருவியாக இருந்தது. ஏனைய மதத்தவர்கள் வந்து அதைக் கொள்ளை அடித்துச் செல்லும் வகையில், அது அதிகளவு செல்வத்தைக் கொண்டிருந்தது. பாரதம் எவ்வாறு இருந்தது எனச் சிந்தித்துப் பாருங்கள்! இந்த நாடகம் முற்கூட்டியே நிச்சயிக்கப்பட்டது. பாரதம் சுவர்க்கமாக இருந்தது, பாரதம் இப்பொழுது நரகமாக உள்ளது. அது இப்பொழுது நரகமாக உள்ளதாலேயே, தாங்கள் தூய்மை அற்றவர்கள் என எவரும் புரிந்து கொள்வதற்காக, பாபா ஏணிப் படத்தை உருவாக்கி வைத்துள்ளார். சிறிய குழந்தைகளுக்குப் படங்களைக் காட்டியே கற்பிக்கப்படுகின்றது. படங்கள் இல்லாமல் குழந்தைகளால் எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்? தந்தை மாத்திரம் வந்து, தூய்மை அற்றவர்களில் இருந்து, தூய்மையானவர்கள் ஆகுவதற்கான இலகுவான வழியை உங்களுக்குக் கற்பிக்கின்றார். இதுவே அனைத்திலும் மிக இலகுவானதும், அனைத்திலும் அதி கடினமானதுமாகும். சத்திய யுகத்தில் நீங்கள் ஆத்ம உணர்வு உடையவர்களாக இருக்கின்றீர்கள். தனது சரீரம் முதிர்ச்சி அடைந்து விட்டதால், இந்தப் பழைய சரீரத்தை நீக்கிப் புதியதை எடுக்க வேண்டும் என ஆத்மா புரிந்து கொள்கின்றார். அது உங்களின் எதிர்கால குழந்தை வடிவத்தின் காட்சியை நீங்கள் காண்பது போன்றதாகும். உங்கள் பழைய சரீரத்தை நீங்கள் நீக்குகின்றீர்கள். இங்கே ஒரு நபர் மரணிக்கின்ற பொழுது, மக்கள் அழுவதுடன், பான்ட் வாத்தியக் குழுவையும் இசைப்பதற்காக வாடகைக்கு அமர்த்துகின்றார்கள். சத்திய யுகத்தில் அவர்கள் சந்தோஷமாகத் தங்களுடைய சரீரங்களை நீங்கி, மற்றைய சரீரத்தை எடுக்கின்றார்கள். அங்கே அவர்கள் கொண்டாடுகின்றார்கள், ஆனால் இங்கோ அவர்கள் அதிகளவு துன்பம் அடைகின்றார்கள்! ஒருவர் மரணிக்கின்ற பொழுது, அவர் சுவர்க்கத்திற்குச் சென்று விட்டதாக அவர்கள் கூறுகின்றனர். அவர் நரகத்திலே இருந்தார் என்பதே இதன் அர்த்தமாகும். நீங்கள் இப்பொழுது சுவர்க்கவாசிகள் ஆகுவதற்கு முயற்சி செய்கின்றீர்கள். தந்தை உங்களைச் சுவர்க்கவாசிகள் ஆக்குகின்றார். தந்தை உங்களுக்கு ஜீவன்முக்தியை அருள்வதற்கு வருகின்றார். அவர் உங்களை இராவணனின் பந்தனத்தில் இருந்து விடுவித்து, ஜீவன்முக்தியை அருள்கின்றார். தந்தை கூறுகின்றார்: நான் முன்னைய சக்கரத்தில் வந்தது போலவே, மிகச்சரியாக வந்து, உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றேன். நான் ஒவ்வொரு கல்பத்திலும் பிரம்மாவின் சரீரத்திலேயே பிரவேசிக்கின்றேன். நீங்கள் நிச்சயமாகப் பிராமணர்கள் ஆகவேண்டும். ஒரு யாகத்திற்குப் பிராமணர்கள் நிச்சயமாகத் தேவைப்படுகின்றனர். இதுவே சுய இராச்சியத்திற்காக, குதிரை அர்ப்பணிக்கப்படுகின்ற அழியாத ஞானயாகம் ஆகும். இந்த இரதம் அர்ப்பணிக்கப்பட வேண்டும். இந்த இரதமே குதிரை என அழைக்கப்படுகின்றது. குதிரைகள், அதாவது, சரீரங்கள் அனைத்தும் சுய இராச்சியத்திற்கான இந்த யாகத்தில் அர்ப்பணிக்கப்படப் போகின்றன. ஆத்மாக்களை அர்ப்பணிக்க முடியாது. ஆத்மாக்கள் தங்களுடைய கர்மக் கணக்குகளைத் தீர்த்த பின்னர் செல்வார்கள், பின்னர் அனைவருடைய பாகமும் புதிதாக ஆரம்பிக்கும். இதுவே வரலாறும், புவியியலும் மீண்டும், மீண்டும் நிகழ்வது என்று அழைக்கப்படுகின்றது. புதிய உலகை ஸ்தாபித்து, இந்தப் பழைய உலகை அழிப்பதற்கே தந்தை வருகின்றார். இந்த மகாபாரத யுத்தமே, சமயநூல்களிலே நினைவு கூரப்படுகின்றது. இந்த யுத்தத்தின் மூலமே சுவர்க்கத்துக்கான வாயில்கள் திறக்கப்படும் என நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். இதனாலேயே இது சமயநூல்களிலே நினைவுகூரப்பட்டுள்ளது. அச்சா.
இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.தாரணைக்கான சாராம்சம்:
1. கடந்த கால விடயங்கள் பற்றிக் கவலைப்படாதீர்கள். எதுவுமே புதிதல்ல எனக் கருதுவதால், நடந்தவற்றை மறந்து விடுங்கள்.2. சுய இராச்சியத்திற்காக, குதிரை அர்ப்பணிக்கப்படுகின்ற இந்த யாகத்தில், உங்கள் சரீரம், மனம், செல்வத்தை அர்ப்பணித்து, அவற்றைத் தகுதியான முறையில் பயன்படுத்துங்கள். இந்த இறுதிப் பிறவியில், முழுமையாகத் தூய்மையாகுவதற்கு முயற்சி செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் சதா சக்திவாய்ந்தவராகி, முன்னேறுவதற்காக உங்களின் இல்லறத்தை ஒரு வழிமுறையாக ஆக்குவதற்காக உங்களின் மேன்மையான மனோபாவத்தைப் பயன்படுத்துவீர்களாக.ஓர் இல்லறத்தில், அனைத்திற்கும் முதலில், நீங்கள் உங்களின் மனோபாவத்தால் ஒன்றில் தூய்மை ஆகுவீர்கள் அல்லது தூய்மை அற்றவர் ஆகுவீர்கள். நீங்கள் எப்போதும் உங்களின் மனோபாவத்தை ஒரேயொரு தந்தையுடன் இணைத்தால், நீங்கள் வேறு எவருக்குமன்றி ஒரேயொரு தந்தைக்குச் சொந்தமானவர் ஆகினால், இத்தகைய மேன்மையான மனோபாவத்தை நீங்கள் கொண்டிருந்தால், உங்களின் இல்லறம் நீங்கள் முன்னேறுவதற்கான வழிமுறையாக இருக்கும். உங்களின் மனோபாவம் மேன்மையாக இருந்தால், அதனால் விஷமத்தனம் செய்ய முடியாது. இத்தகைய மேன்மையான மனோபாவத்துடன் முயற்சி செய்வதன் மூலம், நீங்கள் இலகுவாக முக்தியையும் சத்கதியையும் பெறுவீர்கள். அப்போது முறைப்பாடுகள் அனைத்தும் முற்றுப் பெறும் (முடிந்துவிடும்).
சுலோகம்:
உங்களின் தூய்மை உங்களின் கனவுகளிலேனும் அசையுமாக இருந்தால், உங்களின் நம்பிக்கையின் அத்திவாரம் பலவீனமாக உள்ளதென்று அர்த்தம்.அவ்யக்த சமிக்ஞை: இப்போது உங்களின் அருள்கின்ற ரூபத்தை வெளிப்படுத்துங்கள்.
பிரகாசிக்கும் நட்சத்திரங்களான நீங்கள், சூரியன் மற்றும் சந்திரனைப் போன்று, உங்களின் சம்பூரணமான ஸ்திதியை அடையும்போது, அதாவது, மாஸ்ரர் அருள்பவர் என்ற உங்களின் ஸ்திதியில் நீங்கள் ஸ்திரமடையும்போது, இயல்பாகவே, அலைந்து திரியும், தேடித் திரியும் ஆத்மாக்கள் எதையாவது அடைவதற்கும் உங்களைச் சந்திப்பதற்கும் விரைவாக உங்களிடம் வருவார்கள். நீங்கள் அனைவரும் துரித கதியில் சேவை செய்து, அந்த ஆத்மாக்கள் அனைவரும் தந்தையிடம் இருந்து ஒரு விநாடியில் முக்தி மற்றும் ஜீவன் முக்திக்கான உரிமையைப் பெறச் செய்ய வேண்டும்.