04.11.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது உண்மையான தந்தையினால் உண்மையான தேவர்கள் ஆக்கப்படுகின்றீர்கள். ஆகவே, சத்தியத்தின் யுகமான, சத்தியயுகத்தில் நீங்கள் சத்திய சகவாசத்தைக் (சற்சங்கம்- சமய ஒன்றுகூடல்கள்) கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

கேள்வி:
சத்தியயுகத்தில் ஏன் தேவர்கள் எப்பாவச் செயல்களிலும் ஈடுபட முடியாது?

பதில்:
உண்மையான தந்தையிடமிருந்து அவர்கள் ஆசீர்வாதங்களைப் பெற்றிருப்பதனால் ஆகும். நீங்கள் இராவணனால் சபிக்கப்பட ஆரம்பிக்கும் போதே, பாவச் செயல்கள் செய்வது ஆரம்பமாகுகின்றன. சத்திய, திரேதா யுகங்களில், நீங்கள் சற்கதி பெற்றிருக்கின்றீர்கள். அந்த நேரத்தில் சீரழிதல் என்ற குறிப்பே இருக்காது. அந்நேரத்தில் விகாரங்களும் இல்லாததால், பாவச் செயல்கள் செய்யப்படுவதில்லை. துவாபர, கலியுகங்களில் இருக்கின்ற அனைவரும் சீரழிவு நிலையில் இருப்பதால், தொடர்ந்தும் பாவச் செயல்களைச் செய்கின்றார்கள். இதுவே புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான, ஆன்மீகக் குழந்தைகளான உங்களுக்குத் தந்தை இங்கிருந்து விளங்கப்படுத்துகின்றார். அவர் பரம தந்தையும், பரம ஆசிரியரும், பரம சற்குருவும் ஆவார். தந்தையின் இப் புகழ் மக்களிடம் கூறப்படும்போது, ஸ்ரீ கிருஷ்ணர் அனைவரதும் தந்தையாக இருக்க முடியாது என்பது இயல்பாகவே நிரூபிக்கப்படுகின்றது. அவர் சத்தியயுகத்தின் இளவரசனான, ஒரு சிறு குழந்தை. அவரால் ஒரு (லௌகீக) ஆசிரியராகவும் இருக்க முடியாது. அவரே அமர்ந்திருந்து, ஓர் ஆசிரியரிடம் கற்க வேண்டும். அங்கே அனைவரும் சற்கதி அடைந்திருப்பதால், குருமார்கள் எவரும் இருப்பதில்லை. அரைக் கல்பத்திற்குச் சற்கதியும், அரைக் கல்பத்திற்குச் சீரிழிவும் இருக்கின்றன. அங்கே சற்கதி இருப்பதால், இந்த ஞானத்திற்கான அவசியம் அங்கில்லை. அங்கே இந்த ஞானத்தைப் பற்றிய பேச்சுக்கே இடமில்லை, ஏனெனில் இங்கு ஞானத்தின் மூலம் உங்களுக்கு 21 பிறவிகளுக்குச் சற்கதி கிடைக்கின்றது. அதன்பின்னர் துவாபர யுகத்திலிருந்து, கலியுக இறுதிவரை சீரழிவே இருப்பதால், ஸ்ரீ கிருஷ்ணரால் எவ்வாறு துவாபர யுகத்தில் இருக்க முடியும்? எவருக்கும் இது தெரியாது. ஒவ்வொரு விடயத்திலும் ஆழமான கருத்துக்கள் இருப்பதால், அனைத்தையும் விளங்கப்படுத்துவது மிகவும் அவசியம். அவர் பரமதந்தையும் பரம ஆசிரியரும் ஆவார். ஆங்கிலத்தில், நீங்கள் அவரை மாத்திரமே ~~சுப்ரீம்|| என்று அழைக்கின்றீர்கள். சில ஆங்கில வார்த்தைகள் மிகவும் சிறந்தவை, உதாரணத்திற்கு ~~டிராமா|| என்ற வார்த்தை உள்ளது. ஒரு கூத்தை நாடகம் (சினிமா) என்று அழைப்பதில்லை. ஏனெனில் ஒரு கூத்தில் நடிகர்கள் மாற்றப்பட முடியும். இவ் உலகச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது என அவர்கள் கூறுகின்றார்கள். ஆனால் எவ்வாறு அது சுழல்கின்றது என்பது அவர்களுக்குத் தெரியாது. அது மாற்றம் எதுவும் இல்லாமல் அவ்வாறே சுழல்கின்றதா அல்லது அதில் மாற்றம் ஏதும் உண்டா என்பது எவருக்கும் தெரியாது. அவர்கள் கூறுகின்றார்கள்: ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டதே இடம்பெறுகின்றது. இது தொடர்ந்தும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற ஒரு நாடகமே. மனிதர்கள் மாத்திரமே தொடர்ந்தும் இச்சக்கரத்தில் சுற்;றி வருகின்றனர். நல்லது, இச் சக்கரத்தின் கால எல்லை என்ன? அது எவ்வாறு மீண்டும் சுழல்கின்றது? அது ஒருமுறை சுற்றி வருவதற்கு எவ்வளவு காலம் எடுக்கின்றது? எவருக்கும் இது தெரியாது. இந்த நாடகத்தில் பௌத்த மற்றும் இஸ்லாமிய குலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் நடிப்பதற்கென பாகங்கள் இருக்கின்றன. பிராமணர்களாகிய உங்களுக்கு வம்சம் இருப்பதில்லை. இதுவே பிராமண குலம். இது அதிமேன்மையான பிராமணக் குலம் என்று அழைக்கப்படுகின்றது. தேவ குலமும் இருக்கின்றது. இதனை விளங்கப்படுத்துவது மிகவும் இலகுவாகும். சூட்சும உலகில் சூட்சும தேவதைகள் வாழ்கின்றார்கள். அங்கே சதைகளும், எலும்புகளும் இருப்பதில்லை. தேவர்களுக்குச் சதைகளும், எலும்புகளும் இருக்கின்றன. பிரம்மா விஷ்ணுவாகவும், விஷ்ணு பிரம்மாவாகவும் ஆகுகின்றனர். அவர்கள் ஏன் விஷ்ணுவின் தொப்புள் கொடியிலிருந்து பிரம்மா தோன்றுவதைப் போல் சித்தரித்திருக்கின்றனர்? சூட்சும உலகில் இவ்விடயங்கள் இடம்பெறுவதோ, அல்லது அங்கே எந்த ஆபரணங்களும் இருப்பதோ இல்லை. இதனாலேயே பிரம்மா வெள்ளை ஆடை அணிந்த, ஒரு பிராமணராகச் சித்தரிக்கப்பட்டுள்ளார். பிரம்மா பல பிறவிகளின் இறுதிப் பிறவியில் ஒரு சாதாரண, ஏழை மனிதர் ஆகுகின்றார். இந்த நேரத்தில் அவர் கைத்தறியால் தயாரிக்கப்பட்ட பருத்தி ஆடைகளையே அணிகின்றார். சூட்சும சரீரம் என்றால் என்ன என்பதை அந்த அப்பாவி மனிதர்கள் புரிந்து கொள்வதில்லை. அங்கு சதையும் எலும்பும் அற்ற தேவதைகளே இருக்கின்றார்கள் எனத் தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். சூட்சும உலகில் எந்த அலங்காரங்களும் இருக்க முடியாது, ஆனால் அவை படங்களில் சித்தரிக்கப்பட்டிருப்பதால், பாபா அனுமனின் காட்சியை அருள்வதைப் போன்றே, சூட்சும உலகின் காட்சியையும் அருளி, அதன் அர்த்தத்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அனுமனைப் போன்ற அத்தகையதொரு மனிதர் இருப்பதில்லை. பக்தி மார்க்கத்தில், அவர்கள் பல வகையான படங்களை உருவாக்கியிருக்கின்றனர். அவற்றில் நம்பிக்கை கொண்டிருப்பவர்களிடம் அதனைப் பற்றி நீங்கள் எதுவும் கூறினால், குழப்பம் அடைகின்றார்கள். அவர்கள் தேவிகள் போன்றோரின் சிலைகளை அதிகளவு வழிபட்ட பின்னர், அவற்றை மூழ்கச் செய்கின்றார்கள். அவை அனைத்தும் பக்தி மார்க்கம். அவர்கள் பக்தி மார்க்கம் என்ற புதைசேற்றில் தங்கள் கழுத்தளவிற்குச் புதையுண்டு விட்டனர். அவர்களை அதிலிருந்து எவ்வாறு வெளியேற்றுவது? அதலிருந்து அவர்களை வெளியேற்றுவது கடினமாகுகின்றது. பிறரை வெளியேற்றச் சிலர் கருவிகளாகியபோதிலும், பின்னர் அவர்களும் அதில் தாங்களாகவே சிக்கிக் கொள்கின்றார்கள். அவர்களும் புதைசேற்றில் கழுத்தளவிற்குக் சிக்கிக் கொள்கின்றார்கள், அதாவது,, அவர்கள் மிகப் பெரிய புதைசேற்றான, விகாரத்தில் விழுந்து விடுகின்றார்கள். இவ்விடயங்கள் சத்தியயுகத்தில் இருக்க மாட்டாது. நீங்கள் இப்பொழுது உண்மையான தந்தையினால் உண்மையான தேவர்கள் ஆக்கப்படுகின்றீர்கள். சத்தியயுகத்தில் சத்தியத்தின் சகவாசம் (சமய ஒன்றுகூடல்கள்) இருக்க மாட்டாது. இங்கேயே உங்களுக்குச் சத்தியத்தின் சகவாசம் இருக்கின்றது. அனைவரும் கடவுளின் வடிவங்கள் என மக்கள் நினைக்கின்றார்கள்; அவர்கள் எதனையுமே புரிந்துகொள்ளாமல் இருக்கின்றார்கள். தந்தை இங்கமர்ந்திருந்து, விளங்கப்படுத்துகின்றார்: கலியுகத்தில், அனைவரும் பாவாத்மாக்கள். ஆனால் சத்தியயுகத்தில் அனைவருமே புண்ணியாத்மாக்கள். பகலிற்கும் இரவிற்குமான வேறுபாடு இருக்கின்றது. நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள். உங்களுக்குக் கலியுகம், சத்தியயுகம் இரண்டையும் தெரியும். இப்பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்குச் செல்ல வேண்டியதே பிரதான விடயம். அவர்கள் நச்சுக்கடலையும் பாற்கடலையும் பற்றிக் குறிப்பிடுகின்றனர். ஆனால் அவர்கள் எதனையும் புரிந்துகொள்வதில்லை. தந்தை இப்பொழுது இங்கமர்ந்திருந்து, செயல்கள், நடுநிலைச் செயல்களைப் பற்றிய இரகசியங்களை விளங்கப்படுத்துகின்றார். மக்கள் செயல்களைச் செய்கின்றார்கள், ஆனால் சில செயற்பாடுகள் நடுநிலையானவை, ஏனையவை பாவச் செயல்கள். இராவண இராச்சியத்தில், சகல செயல்களும் பாவச் செயல்கள். சத்தியயுகத்தில் பாவச் செயல்கள் செய்யப்படுவதில்லை, ஏனெனில் அங்கே இராம இராச்சியமே இருக்கின்றது. அவர்;கள் தந்தையிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றிருக்கின்றனர். இராவணன் உங்களைச் சபிக்கின்றான். இது இன்பமும் துன்பமும் பற்றிய நாடகமாகும். துன்பத்தின்போதே அனைவரும் தந்தையை நினைவு செய்கின்றார்கள். சந்தோஷத்தின்போது எவரும் அவரை நினைவு செய்வதில்லை. அங்கே விகாரம் எதுவும் இருக்க மாட்டாது. மரக்கன்று நாட்டப்படுவது குழந்தைகளாகிய உங்களிடம் கூறப்பட்டுள்ளது. இப்பொழுது மரக்கன்;றுகளை நாட்டுகின்ற நடைமுறை ஆரம்பிக்கின்றது. தந்தை மரக்கன்றை நாட்டும் நடைமுறையை ஆரம்பித்தார். இங்கு பிரிட்டிஷாரின்; அரசாங்கம் இருந்தபோது, பத்திரிகைகளில் என்றுமே மரக்கன்றுகள் நாட்டப்;பட்டதாகப் பிரசுரிக்கப்படவில்லை. தந்தை இங்கமர்ந்திருந்து, தேவ தர்மத்தின் மரக்கன்றுகளை நாட்டுகின்றார். அவர் வேறு எந்த மரக்கன்றையும் நாட்டுவதில்லை. ஏனைய பல சமயங்கள் இருந்தபோதிலும், தேவ தர்மம் மறைந்து விட்டது. அவர்கள் தமது தர்மத்திலும், கர்மத்திலும் சீரழிந்ததால், அவர்கள் அதன் பெயரை மாற்றி விட்டார்கள். தேவ தர்மத்தைச் சேர்ந்தவர்கள் மீண்டும் அதே தேவ தர்மத்தினர் ஆகுவார்கள். அனைவரும் தத்தமது சொந்தச் சமயங்களுக்குச் செல்ல வேண்டும். கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்தவர்களால் அதிலிருந்து வெளியேறி தேவ தர்மத்தினராக முடியாது. அவர்களால் அதிலிருந்து வெளியேற முடியாது. ஆம், வேறு சமயங்களுக்கு மாற்றம் செய்யப்பட்ட, தேவ தர்மத்தைச் சேர்ந்த சில ஆத்மாக்கள், தமது தேவ தர்மத்திற்கு மீண்டும் திரும்பி வருவார்கள். அவர்கள் உண்மையிலேயே இந்த ஞானத்தையும் யோகத்தையும் அதிகளவு விரும்புவதால், அவர்கள் உங்கள் தர்மத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை அது நிரூபிக்கும். இவ் விடயங்களைப் புரிந்து கொள்வதற்கும், விளங்கப்படுத்துவதற்கும் பரந்த, எல்லையற்ற புத்தி உங்களுக்குத் தேவை. கீதையைக் கூறும்போது மக்கள் அதனை அமர்ந்திருந்து செவிமடுப்பதைப் போல், நீங்களும் இவ்விடயங்கள் அனைத்தையும் ஒரு புத்தகத்தை வாசிப்பதைப் போல் பிறருக்குக் கூறுவதை விடுத்து, அதனை நீங்கள் கிரகித்த பின்னரே மற்றவர்களுக்குக் கூற வேண்டும். சிலரால் கீதையின் வாசகங்களை மனப்பாடம் செய்து கூற முடியும். அவர்கள் அனைவரும் அமர்ந்திருந்து, அதிலிருந்து கருத்துக்களைத் தாங்கள் விரும்பியவாறு அர்த்தப்படுத்திக் கொள்கின்றார்கள். வாசகங்கள் அனைத்தும் சமஸ்கிருதத்திலேயே இருக்கின்றன. கடலை மையாகவும், காடு முழுவதையும் எழுதுகோல்களாகவும் ஆக்கினாலும், இந்த ஞானத்திற்கு முடிவே இருக்க மாட்டாது என நினைவுகூரப்பட்டுள்ளது. கீதை மிகவும் சிறியது. அதில் 18 அத்தியாயங்களே இருக்கின்றன. சிலர் சிறியதொரு கீதையை தமது கழுத்தில் அணிந்தும் கொள்கின்றனர். அது சின்னஞ்சிறிய எழுத்துக்களைக் கொண்டது. சிலர் அதைத் தங்கள் கழுத்தில் அணியும் பழக்கமுடையவர்கள். அவர்கள் மிகச்சிறிய பேழையைச் செய்கின்றார்கள். உண்மையில், இது ஒரு விநாடிக்கான விடயமாகும். நீங்கள் ஒருமுறை தந்தைக்கு உரியவராகிய பின்னர், நீங்கள் உலக அதிபதிகள் ஆகுவதைப் போன்றதாகும். அத்தகைய குழந்தைகள், பாபாவிற்கு எழுதவும் ஆரம்பிக்கின்றார்கள்: ~~பாபா, நான் உங்கள் ஒருநாள் வயதுக் குழந்தை||. ஒரேநாளில் அவர்கள் நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டு, உடனடியாக பாபாவிற்குக் கடிதம் எழுதுகின்றார்கள். நீங்கள் ஒரு குழந்தையாகி விட்டதால், நீங்கள் ஓர் உலக அதிபதி. இது எவரதும் புத்தியில் அரிதாகவே நிற்கின்றது. நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள். அங்கே வேறு எந்தத் தேசமும் இல்லை. அவற்றின் பெயர், வடிவம் அனைத்தும் மறைந்து விட்டது. இந்தத் தேசங்கள் இருந்தன என்பதும் எவருக்கும் தெரியாது. அவை இருந்திருந்தால், அவற்றின் வரலாறும் புவியியலும் நிச்சயமாக இருந்திருக்கும். அங்கே அந்தத் தேசங்கள் இருக்க மாட்டாது. இதனாலேயே நீங்கள் உலக அதிபதிகள் ஆகுவதாகக் கூறப்படுகின்றது. பாபா விளங்கப்படுத்தியுள்ளார்: நான் உங்கள் தந்தையும், நானே ஞானக்கடலும் ஆவேன். இந்த ஞானம் மிகவும் மேன்மையானது என்பதால் நாங்கள் அதன் மூலம் உலக அதிபதிகள் ஆகுகின்றோம். எங்கள் தந்தையே பரம்பொருள். அவரே உண்மையான தந்தையும், உண்மையான ஆசிரியரும் ஆவார். அவர் எங்களுக்கு உண்மையைக் கூறுகின்றார். அவர் எங்களுக்குக் கொடுக்கின்ற கற்பித்தல்கள் எல்லையற்றவை. அவர் அனைவருக்கும் சற்கதி அருள்கின்ற, எல்லையற்ற குரு. நீங்கள் ஒரேயொருவரைப் பற்றி புகழ் பாடும்போது, அப்புகழ் வேறு எவருக்கும் உரியதாக இருக்க முடியாது. அவர் உங்களைத் தனக்குச் சமமாக ஆக்கும்போதே, அது அப்படியிருக்க முடியும். ஆகவே, நீங்களும் தூய்மையாக்குபவர்கள் ஆகுகின்றீர்கள். மக்கள் எழுதுகின்றார்கள்: சத்நாம். (சத்தியத்தின் பெயரில்). தாய்மார்களாகிய நீங்களே தூய்மையாக்குகின்ற கங்கைகள். உங்களைச் சிவசக்திகள் என்றோ அல்லது சிவனின் குலத்தைச் சேர்ந்த பிரம்மாகுமார்கள் பிரம்மாகுமாரிகளான, சிவ குலத்தினர் என்றோ அழைக்கலாம். அனைவரும் சிவனின் குலத்தினரே, ஆனால்;, பிரம்மாவின் மூலம் படைப்பு உருவாக்கப்படுவதால், பிரம்மாகுமாரிகளும் பிரம்மாகுமார்களுமாகிய நீங்கள் சங்கமயுகத்தில் மாத்திரமே இருக்கின்றீர்கள். அவர் உங்களைப் பிரம்மாவினூடாகத் தத்தெடுக்கின்றார். முதன்முதலில், பிரம்மாகுமார்களும் பிரம்மாகுமாரிகளுமான நீங்கள் இருக்கின்றீர்கள். எவரும் எதிர்த்தால், நீங்கள் அவரிடம் கூறலாம்: இவரே தந்தை பிரவேசிக்கின்ற, பிரஜாபிதா பிரம்மா. தந்தை கூறுகின்றார்: நான் இவரின் பல பிறவிகளில் இறுதிப் பிறவியில் இவரினுள் பிரவேசிக்கின்றேன். அவர்கள் பிரம்மா விஷ்ணுவின் தொப்புள் கொடியிலிருந்து வெளிப்படுவதைப் போன்று சித்தரித்துள்ளார்கள். அச்சா. ஆகவே, விஷ்ணு எவரது தொப்புள் கொடியிலிருந்து வெளிப்பட்டார்? நீங்கள் எதிரும் புதிருமான அம்புக்குறியைக் வரைய வேண்டும்: விஷ்ணு பிரம்மாவாகவும், பிரம்மா விஷ்ணுவாகவும் ஆகுகின்றார். அவர் இவரிலிருந்தும், இவர் அவரிலிருந்தும் வெளிப்படுகின்றார்கள். இவருக்கு (பிரம்மா) ஒரு விநாடியே எடுக்கின்றது, அவருக்கு (விஷ்ணு) 5000 வருடங்கள் எடுக்கின்றன. இவை அமர்ந்திருந்து, நீங்கள் பிறருக்கு விளங்கப்படுத்துகின்ற அற்புதமான விடயங்கள். தந்தை கூறுகின்றார்: இலக்ஷ்மியும் நாராயணனும் 84 பிறவிகளை எடுக்கின்றார்கள். அதன்பின்னர் நான்; இவரின் பல பிறவிகளின் இறுதிப் பிறவியில் இவருக்குள் பிரவேசித்து, இவரை இவ்வாறு ஆக்குகின்றேன். இது புரிந்துகொள்ளப்பட வேண்டிய விடயமாகும். அமருங்கள், இவரை நாங்கள் ஏன் பிரம்மா என அழைக்கின்றோம் என்பதை நாங்கள் உங்களுக்குக் கூறுகின்றோம். இப்படங்கள் முழு உலகிற்கும் காட்டப்படுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளன. எங்களால் இவற்றை உங்களுக்கு விளங்கப்படுத்த முடியும். எவ்வாறாயினும், இதனைப் புரிந்துகொள்கின்ற நியதியுடையவர்கள் மாத்திரமே இவற்றைப் புரிந்துகொள்வார்கள். அதனைப் புரிந்து கொள்ளாதவர்களுக்கு, அவர்கள் எங்கள் குலத்திற்கு உரியவர்கள் அல்ல என்றே நாங்கள் கூறுகின்றோம். அவர்கள் அங்கே சென்றபோதிலும், அவர்கள் பிரஜைகளில் ஒருவராகவே இருப்பார்கள். எங்களைப் பொறுத்தவரை, அனைவருமே ஆதரவற்ற ஏழைகள். செல்வம் இல்லாததால், ஏழைகளாக இருப்பவர்களே ஆதரவற்ற ஏழைகள் எனக் கூறப்படுகின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் பல்வேறு கருத்துக்களையும் கிரகிக்க வேண்டும். தலைப்புக்களில் சொற்பொழிவுகள் ஆற்றப்பட வேண்டும். இந்தத் தலைப்பு எதிலும் குறைந்ததா? அவர்கள் பிரஜாபிதா பிரம்மாவையும் சரஸ்வதியையும் நான்கு கரங்களுடன் காட்டுகின்றார்கள். ஆகவே, இரண்டு கரங்கள் புத்திரிக்கானவை. அவர்கள் தம்பதியினர் அல்ல. உண்மையில், விஷ்ணுவின் ரூபமே தம்பதி. பிரம்மாவின் புத்திரியே சரஸ்வதி. சங்கரருக்கும் துணைவி இருப்பதில்லை. இதனாலேயே அவர்கள் சிவனையும் சங்கரரையும் பற்றிப் பேசுகின்றார்கள். சங்கரர் என்ன செய்கின்றார்? விநாசம் அணுகுண்டுகளினால் இடம்பெறுகின்றது. தந்தையால் எவ்வாறு தனது குழந்தைகளுக்கு மரணத்தை ஏற்படுத்த முடியும்? அது ஒரு பாவமாகி விடும். தந்தை உண்மையில், உங்கள் அனைவரையும் எந்த முயற்சியும் இல்லாமல், அமைதி தாமத்திற்கு அழைத்துச் செல்கின்றார். அனைவரும் தத்தமது கர்மக் கணக்குகளைத் தீர்த்த பின்னர் வீடு திரும்புகின்றார்கள், ஏனெனில் இது தீர்வுக் காலமாகும். தந்தை சேவை செய்வதற்காக வருகின்றார். அவர் அனைவருக்கும் சற்கதி அருள்கின்றார். நீங்களும் முதலில் முக்தியையும், பின்னர் சற்கதியையும் பெறுவீர்கள். இவ்விடயங்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும். வேறு எவருக்கும் இவ்விடயங்கள் முற்றிலுமே தெரியாது. சிலர் உங்கள் புத்தியைப் பெருமளவில் தின்று விடுகின்றனர், இருப்பினும் அவர்கள் முற்றிலும் எதனையும் புரிந்துகொள்வதில்லை! நன்கு புரிந்துகொள்ள விரும்புபவர்கள் வந்து புரிந்து கொள்வார்கள். அவர்களிடம் கூறுங்கள்: ஒவ்வொரு விடயத்தையும் நீங்கள் புரிந்துகொள்ள விரும்பினால், அதற்கு நீங்கள் நேரம் ஒதுக்க வேண்டும். இங்கே, தந்தையின் அறிமுகத்தைக் கொடுப்பதற்கான கட்டளையே உங்களுக்குக் கொடுக்கப்படுகின்றது. இது முட்காடு; அனைவருமே ஒருவருக்கொருவர் துன்பத்தை விளைவிக்கின்றார்கள். இது துன்ப உலகம் எனப்படுகின்றது. சத்தியயுகம் சந்தோஷ உலகமாகும். இத்துன்ப உலகம் எவ்வாறு சந்தோஷ உலகமாக மாற்றமடைகின்றது என்பதை நாங்கள் உங்களுக்கு விளங்கப்படுத்துவோம். இலக்ஷ்மியும் நாராயணனும் சந்தோஷ உலகில் இருந்தார்கள். பின்னர் 84 பிறவிகளை எடுத்த பின்னர், அவர்கள் இத்துன்ப உலகிற்குள் பிரவேசித்தார்கள். இவருக்கு எவ்வாறு பிரம்மா எனப் பெயரிடப்பட்டது? தந்தை கூறுகின்றார்: நான் இவருக்குள் பிரவேசித்து, எல்லையற்ற துறவறத்தை மேற்கொள்வதற்கு இவரைத் தூண்டுகின்றேன். தந்தை உடனடித் துறவறத்திற்கான தூண்டுதலை ஏற்படுத்துகின்றார், ஏனெனில், அவர் இவரைச் சேவை செய்யத் தூண்ட வேண்டும்; அவரே அனைத்தையும் தூண்டுகின்றார். இவருக்குப் பின்னர் பலரும் உருவாகினார்கள், அவர்களுக்கும் பெயர்களும் வழங்கப்பட்டன. அவர்கள் பின்னர் பூனைக் குட்டிகளின் உதாரணத்தையும் காட்டுகின்றார்கள். அவை அனைத்தும் கட்டுக் கதைகள். பூனைக் குட்டிகள் எவ்வாறிருக்க முடியும்? ஒரு பூனையினால் அமர்ந்திருந்து, இந்த ஞானத்தைச் செவிமடுக்க முடியாது. பாபா சேவை செய்வதற்கு உங்களுக்குப் பல வழிகளைக் காட்டுகின்றார். ஒருவர் ஏதேனும் புரிந்துகொள்ளாது விட்டால், அவரிடம் கூறுங்கள்: நீங்கள் அல்ஃபாவைப் புரிந்துகொள்ளும் வரையில், வேறு எதனையும் உங்களால் புரிந்துகொள்ள முடியாது. இந்த ஒரு விடயத்தின் மீது நம்பிக்கை வைத்து அதனை எழுதுங்கள். இல்லாவிடின் நீங்கள் அதனை மறந்து விடுவீர்கள். மாயை உங்களை அதனை மறக்கச் செய்வாள். தந்தையின் அறிமுகமே பிரதான விடயமாகும். வேறு எவருக்குமே தெரியாத, உலகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களை எங்களுக்குக் கூறுகின்ற எங்கள் தந்தையே பரமதந்தையும், பரம ஆசிரியரும் ஆவார். இதனை விளங்கப்படுத்துவதற்குக் காலம் எடுக்கின்றது. அவர்கள் தந்தையைப் புரிந்துகொள்ளும் வரை, தொடர்ந்தும் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்கள் அல்ஃபாவைப் புரிந்துகொள்ளாது விட்டால், பீற்றாவையும் புரிந்து கொள்ள இயலாதிருக்கும். அவர்கள்; அர்த்தமில்லாமல் சந்தேகம் கொண்டு தொடர்ந்தும் வினவுவார்கள்: சமயநூல்களில் இவ்வாறே குறிப்பிடப்பட்டிருக்கின்றது, நீங்கள் ஏன் இவ்வாறு கூறுகின்றீர்கள்? ஆகவே, முதலில் தந்தையின் அறிமுகத்தை அனைவருக்கும் கொடுங்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. கர்மம், நடுநிலைக் கர்மம், பாவக் கர்மத்தின் ஆழமான தத்துவத்தை உங்கள் புத்தியில் வைத்திருப்பதனால், எப்பாவச் செயலையும் செய்யாதீர்கள். இந்த ஞானத்தையும், யோகத்தையும் கிரகித்துப் பின்னர் பிறருக்கு இந்த ஞானத்தைக் கொடுங்கள்.

2.  உண்மையான தந்தையின் இந்த உண்மையான ஞானத்தைக் கொடுப்பதன் மூலம், சாதாரண மனிதர்களைத் தேவர்களாக மாற்றுகின்ற சேவையைச் செய்யுங்கள். விகாரம் என்ற புதைசேற்றிலிருந்து அனைவரையும் அகற்றி விடுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஆன்மீகப் போதையை அனுபவம் செய்து, சதா வெற்றியாளர் ஆகுவதனால், உங்கள் நம்பிக்கையின் அத்தாட்சியைக் காட்டுவீர்களாக.

அலௌகீக, ஆன்மீகப் போதையே உங்கள் நம்பிக்கை எனும் கண்ணாடி. நம்பிக்கையின் அத்தாட்சி போதையும், போதையின் அத்தாட்சி சந்தோஷமும் ஆகும். சதா சந்தோஷமாகவும், போதையடைந்து இருப்பவர்களினதும் முன்னால் மாயையினால் தனது விளையாட்டுக்களை மேற்கொள்ள முடியாது. ஒரு கவலையற்ற சக்கரவர்த்தியின் இராச்சியத்திற்குள் மாயையினால் பிரவேசிக்க முடியாது. ஆன்மீகப் போதையானது உங்களை இந்தப் பழைய உலகையும், உங்கள் பழைய சம்ஸ்காரங்களையும் இலகுவில் மறக்கச் செய்கின்றது. ஆகவே, சதா உங்கள் ஆத்ம உணர்வு ரூபத்தின் போதையையும், உங்கள் ஆன்மீக வாழ்வின் போதையையும், ஒரு தேவதையாக இருக்கின்ற போதையையும், எதிர்காலத்தின் போதையையும் பேணினால், நீங்கள் வெற்றியாளர்கள் ஆகுவீர்கள்.

சுலோகம்:
இனிமை எனும் நற்குணம் பிராமண வாழ்வின் மகத்துவம்; ஆகவே, இனிமையானவர்களாகிப் பிறரையும் இனிமையானவர்கள் ஆக்குங்கள்.

அவ்யக்த சமிக்ஞை: சரீரமற்ற ஸ்திதியின் பயிற்சியை அதிகரியுங்கள் (அசரீரி மற்றும் விதேஹி).

சரீரமற்ற பாப்தாதா குழந்தைகளாகிய உங்களையும் சரீரமற்றவர்கள் ஆக்கும்பொருட்டு, ஒரு சரீரத்தின் ஆதாரத்தைப் பெற வேண்டும். அதேபோல், நீங்கள் ஒவ்வொருவரும் இந்த வாழ்விலும், இந்தச் சரீரத்திலும் இருக்கும்பொழுது, ஒரு சரீரமற்ற ஆத்மாவின் ஸ்திதியிpலும், ஆத்ம உணர்விலும் ஸ்திரமானவர்கள் ஆகுவதுடன், ஒரு கரவன்காராக (செய்து முடிப்பவர்) அச்சரீரத்தைச் செயல்களைச் செய்யுமாறு வைக்க வேண்டும். அந்தச் சரீரம் ஒரு கரன்கார் (செய்பவர்), நீங்கள் அதன் சரீரமற்ற கரவன்கார். இந்த ஸ்திதியானது சரீரமற்ற ஸ்திதியும், தந்தையைப் பின்பற்றுதலும் என அறியப்பட்டுள்ளது. தந்தையைப் பின்பற்றுகின்ற ஸ்திதியானது உங்கள் சரீரத்தின் விழிப்புணர்விற்கு அப்பாற்பட்டுச் சதா சரீரமற்றிருப்பதும், அசரீரியாக இருப்பதும் ஆகும்.