05.05.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, எப்பொழுதும் சங்கமயுகத்துப் பிராமணர்களாக இருக்கின்ற போதையைக் கொண்டிருங்கள். அனைவராலும் அழைக்கப்படுகின்ற பாபா இப்பொழுது எங்கள் நேர் முன்னிலையில் அமர்ந்திருக்கின்றார் என்பது எங்களுக்குத் தெரியும்.

கேள்வி:
புத்தியில் மிகச்சரியான யோகத்தைக் கொண்டிருக்கும் குழந்தைகள் தொடர்ச்சியாகக் கொண்டுள்ள காட்சிகள் யாவை?

பதில்:
புதிய சத்தியயுக இராச்சியத்தில் இருக்கின்ற விடயங்களின் காட்சிகள் கிடைக்கும்: நீங்கள் எவ்வாறு பாடசாலையில் கற்று பின்னர் எவ்வாறு ஆட்சிசெய்வீர்கள். நீங்கள் மேலும் நெருங்கி வரும்பொழுது தொடர்ந்தும் அவ்விடயங்களின் காட்சிகளைப் பெறுவீர்கள். எவ்வாறாயினும் புத்தியில் மிகச்சரியான யோகத்தைக் கொண்டிருப்பவர்களும் தமது அமைதி தாமத்தையும் சந்தோஷ தாமத்தையும் நினைவு செய்பவர்களும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள பொழுதும் ஒரேயொரு தந்தையை மாத்திரம் நினைவு செய்கின்றவர்களும் மாத்திரமே இக் காட்சிகள் அனைத்தையும் பெறுவார்கள்.

பாடல்:
ஓம் நமசிவாய.

ஓம் சாந்தி.
பக்தி மார்க்கத்தில் இடம்பெறுகின்ற சத்சங்கங்களுக்கு நீங்கள் அனைவரும் சென்றிருப்பீர்கள். அங்கே ‘ஆஹா குரு!’ என்று கூறுங்கள் அல்லது இராம நாமத்தை உச்சரிக்குமாறே உங்களுக்குக் கூறப்பட்டிருக்கும். இங்கே எதனையும் உச்சரிக்குமாறு குழந்தைகளுக்குக் கூற வேண்டிய தேவை இல்லை. ஒருமுறை உங்களுக்குக் கூறப்பட்டால் அதனை மீண்டும் மீண்டும் கூற வேண்டியதில்லை. ஒரேயொரு தந்தையே உள்ளார், அவர் ஒரு விடயத்தை மாத்திரமே கூறுகின்றார். அவர் என்ன கூறுகின்றார்? அவர் கூறுகின்றார்: குழந்தைகளே சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள்! முதலில் நீங்கள் கற்க வேண்டும். அதன்பின்னர் இங்கே வந்து அமருங்கள். நீங்கள் யாருடைய குழந்தைகளோ அந்தத் தந்தையையே நீங்கள் நினைவுசெய்ய வேண்டும். அந்த ஒரேயொருவர் மாத்திரமே ஆத்மாக்களாகிய எங்கள் அனைவரதும் தந்தை என்பதை பிரம்மாவின் மூலம் நீங்கள் இப்பொழுது அறிந்துள்ளீர்கள். உலகில் உள்ள வேறு எவருக்கும் இது தெரியாது. நீங்கள் அந்தத் தந்தையின் குழந்தைகள் என்பதை நீங்கள் அனைவரும் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். அனைவரும் அவரைத் தந்தையான கடவுள் என்று அழைக்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: நான் உங்களுக்குக் கற்பிப்பதற்காக இப்பொழுது இந்தச் சாதாரண சரீரத்தில் பிரவேசித்துள்ளேன். பாபா இவரின் சரீரத்திலே பிரவேசித்துள்ளார் என்பதையும் நாங்கள் அவருக்கு உரியவர்கள் என்பதையும் நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். பாபாவே வந்து எங்களுக்குத் தூய்மை அற்றவரிலிருந்து தூய்மையானவர் ஆகுவதற்கான வழியைக் காட்டுபவர். இது உங்கள் புத்தியில் நாள் முழுவதும் இருக்கின்றது. உண்மையில் அனைவரும் சிவபாபாவின் குழந்தைகளே. ஆனால் நீங்கள் மாத்திரம் இதனைப் புரிந்து கொள்கின்றீர்கள். வேறெவரும் இதனைப் புரிந்து கொள்வதில்லை. நீங்கள் ஆத்மாக்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். தந்தை உங்களுக்கு ஒரு கட்டளை பிறப்பித்துள்ளார்: என்னை நினைவு செய்யுங்கள்! நான் உங்களின் எல்லையற்ற தந்தை. அனைவரும் கதறி அழுகின்றார்கள்: ஓ தூய்மையாக்குபவரே வாருங்கள்! நாங்கள் தூய்மை அற்றவர்கள் ஆகியுள்ளோம். இவ்வாறு கூறுவது சரீரங்கள் அல்ல. ஆத்மாக்களே சரீரங்களின் ஊடாகப் பேசுகின்றார்கள். ஆத்மாக்களே 84 பிறவிகளை எடுக்கின்றனர். நீங்கள் நடிகர்கள் என்பதை உங்கள் புத்தியில் வைத்திருங்கள். பாபா இப்பொழுது உங்களைத் திரிகாலதரிசிகள் ஆக்கியுள்ளார். அவர் உங்களுக்கு ஆரம்பம் மத்தி இறுதியின் ஞானத்தைக் கொடுத்துள்ளார். அனைவரும் தந்தையை அழைக்கின்றார்கள். இப்பொழுதும் மக்கள் அவரை வருமாறு அழைப்பதுடன் தொடர்ந்தும் அவரை வருமாறு அழைப்பார்கள். சங்கமயுகப் பிராமணர்களாகிய நீங்களோ பாபா வந்துவிட்டார் என்று கூறுகின்றீர்கள். உங்களுக்கு இந்தச் சங்கமயுகத்தைப் பற்றித் தெரியும். இந்த யுகம் மங்களகரமான யுகம் என்று நினைவுகூரப்பட்டுள்ளது. இந்த மங்களகரமான யுகம் கலியுகத்தின் இறுதிக்கும் சத்தியயுகத்தின் ஆரம்பத்திற்கும் மத்தியில் உள்ளது. உண்மையான மனிதர்கள் சத்தியயுகத்தில் உள்ளார்கள், பொய்யான மனிதர்கள் கலியுகத்தில் உள்ளார்கள். சத்தியயுகத்தில் வாழ்ந்தவர்களின் விக்கிரகங்கள் உள்ளன. அவ் விக்கிரகங்களே அனைத்திலும் பழைமையானவை. அவற்றை விடப் பழைமையான உருவங்கள் எவையும் இல்லை. மக்கள் பயனற்ற விக்கிரகங்கள் பலவற்றை உருவாக்குகின்றார்கள். வாழ்ந்து சென்றவர்கள் யார் என்பதை நீங்கள் அறிவீர்கள். பல கரங்களுடன் அம்பாளினதும் காளியினதும் விக்கிரகங்கள் உருவாக்கப்;பட்டுள்ளன. அத்தனை கரங்களுடன் ஒருவர் இருக்க முடியாது. அம்பாளிற்கு இரு கரங்கள் மாத்திரமே உள்ளன. மக்கள் அவரின் விக்கிரகத்தின் முன்னால் சென்று தங்கள் கைகூப்பி வழிபடுகின்றார்கள். பக்தி மார்க்கத்தில் பல்வேறு வகையான விக்கிரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மனிதர்களின் அந்த உருவங்கள் பல வகையில் அலங்கரிக்கப்படும் பொழுது அவற்றின் ரூபங்கள் மாற்றம் அடைகின்றன. உண்மையில் அவர்கள் அந்த விக்கிரகங்களின் ரூபத்தில் அவ்வாறு இருப்பதில்லை. அவை அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கு உரியவை. இங்கே மக்கள் மாற்றுத் திறனாளிகள் ஆகுகின்றார்கள். சத்தியயுகத்தில் அது நடைபெறுவதில்லை. சத்தியயுகத்தையும் அங்கே ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் எவ்வாறிருந்தது என்பதையும் நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். இங்கே அனைவரது ஆடையும் எவ்வளவு வித்தியாசமாக உள்ளதெனப் பாருங்கள்; பல வகையானவை உள்ளன. அங்கே அரசரும் அரசியும் எவ்வாறோ அவ்வாறே பிரஜைகளும் இருக்கின்றார்கள். நீங்கள் அண்மித்து வரும்பொழுது உங்கள் இராச்சியத்தின் ஆடைகள் போன்றவற்றின் காட்சிகள் உங்களுக்குத் தொடர்ந்தும் கிடைக்கும். நீங்கள் எவ்வகையான பாடசாலையில் கற்கின்றீர்கள் என்பதையும் நீங்கள் செய்கின்ற பல்வேறு செயல்களையும் பார்ப்பீர்கள். எனினும் புத்தியின் யோகம் நன்றாக இருப்பவர்களே அவை அனைத்தையும் பார்ப்பார்கள். அவர்கள் தமது அமைதிதாமத்தையும் சந்தோஷ தாமத்தையும் நினைவு செய்கிறார்கள். நீங்கள் இப்பொழுதும் உங்கள் வியாபாரம் போன்றவற்றைக் கவனிக்க வேண்டும். பக்தி மார்க்கத்தில் மக்கள் வியாபாரம் போன்றவற்றில் ஈடுபடுகின்றார்கள்; அவர்களிடம் ஞானம் சிறிதளவேனும் இல்லை. அவை அனைத்தும் பக்தியாகும். அது பக்தியின் ஞானம் என்று அழைக்கப்படுகின்றது. நீங்கள் எவ்வாறு உலக அதிபதிகள் ஆகமுடியும் என்ற இந்த ஞானத்தை அவர்களால் கொடுக்க முடியாது. இப்பொழுது இங்கே நீங்கள் எதிர்காலத்தில் உலக அதிபதிகள் ஆகுவதற்காகக் கற்கின்றீர்கள். இந்தக் கல்வி புதிய உலகிற்கான அதாவது, அமரத்துவ உலகிற்கான கல்வியாகும் என்பதை நீங்கள் அறிவீர்கள். சங்கரர் அமரத்துவக் கதையை பார்வதிக்கு அமர்நாத்தில் கூறவில்லை. அவர்கள் சிவனையும் சங்கரரையும் இணைத்து விட்டார்கள். தந்தை இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார், இவரும் அதனைச் செவிமடுக்கின்றார். தந்தையைத் தவிர வேறு எவரால் உலகத்தின் ஆரம்பம் மத்தி இறுதியின் இரகசியங்களை விளங்கப்படுத்த முடியும்? இவர் ஒரு சாதுவோ புனிதரோ அல்ல. நீங்கள் ஓர் இல்லறத்தில் வாழ்வதைப் போன்று இவரும் அவ்வாறானவர். இவர் ஒரு குடும்பத்தினர் அணிகின்ற ஆடைகள் போன்றவற்றையே அணிகின்றார். எந்த ஒரு குடும்பத்திலும் தாய், தந்தை, குழந்தைகள் இருப்பதைப் போன்றே இங்கும் வேறு எந்த வித்தியாசமும் இல்லை. தந்தை குழந்தைகளிடம் வருவதுடன் இந்த இரதத்திலும் இருக்கின்றார். இவரே ‘பாக்கிய இரதம்’ என்று நினைவுகூரப்பட்டுள்ளார். சிலவேளைகளில் அவர்கள் அவர் (கடவுள்) ஒரு காளைமாட்டை ஓட்டுவதைப் போன்றும் காட்டுகின்றார்கள். மக்கள் இதனைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார்கள். ஒரு காளைமாடு எவ்வாறு ஆலயத்தில் இருக்க முடியும்? ஸ்ரீகிருஷ்ணர் ஓர் இளவரசர். அவர் காளைமாட்டின் மீது அமர மாட்டார். பக்தி மார்க்கத்தில் உள்ள மக்கள் அதிகளவு குழப்பம் அடைந்துள்ளார்கள். அவர்கள் பக்தி மார்க்கத்தின் போதையில் உள்ளார்கள். உங்களுக்கு இந்த ஞான மார்க்கத்தின் போதை உள்ளது. பாபா சங்கமயுகத்தில் உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். நீங்கள் இவ்வுலகில் இருந்தாலும் நீங்கள் சங்கமயுகத்துப் பிராமணர்கள் என்பதை உங்கள் புத்தி புரிந்துகொள்கின்றது. ஏனைய மனிதர்கள் அனைவரும் கலியுகத்தில் உள்ளார்கள். நீங்கள் இவ்விடயங்கள் அனைத்தையும் அனுபவம் செய்கின்றீர்கள். நீங்கள் கலியுகத்தில் இருந்து அகன்று விட்டீர்கள் என்று உங்கள் புத்தி கூறுகின்றது. பாபா வந்துள்ளார். இந்தப் பழைய உலகம் மாறப் போகின்றது. இது உங்கள் புத்தியில் உள்ளது. வேறு எவரும் இதனைப் புரிந்து கொள்வதில்லை. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் தந்தை தான் சங்கமயுகத்தில் வாழ்வதாகக் கூறுவார், அவரின் மகன் தான் கலியுகத்தில் வாழ்வதாகக் கூறுவார். அது ஓர் அற்புதமாகும்! இக் கல்வி முடிவடையும் பொழுது விநாசம் இடம்பெறும் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். விநாசம் இடம்பெறுவது அவசியமாகும். உங்கள் மத்தியிலும் சிலரே இதைப் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். இவ்வுலகம் அழியப் போகின்றது என்பதை நீங்கள் அனைவருமே புரிந்து கொண்டிருந்தால் நீங்கள் அனைவருமே புதிய உலகிற்காகத் தயார் ஆகுவதில் மும்முரமாகி விடுவீர்கள். ‘இன்னமும் சிறிது காலமே உள்ளதால் இப்பொழுது பாபாவிற்கு உரியவர் ஆகுவோம்!’ என நீங்கள் உங்கள் பயணப் பொதிகளைத் தயார் ஆக்குவீர்கள். நீங்கள் பட்டினி கிடக்க நேர்ந்தாலும்இ பாபாவே முதலில் பட்டினி கிடப்பார். பின்னரே குழந்தைகள் பட்டினி கிடப்பார்கள். இது பாபாவின் பண்டாரா (சமையலறை); நீங்கள் சிவபாபாவின் பண்டாராவில் இருந்தே உண்கின்றீர்கள். பிராமணர்களால் சமைக்கப்படுவதால் இவ்வுணவு பிரம்மபோசனம் என்று அழைக்கப்படுகின்றது. தூய பிராமணர்கள் நினைவில் இருந்து இவ்வுணவைத் தயாரிக்கின்றார்கள். பிராமணர்களைத் தவிர வேறெவராலும் சிவபாபாவின் நினைவில் இருக்க முடியாது. அந்தப் பிராமணப் புரோகிதர்கள் சிவபாபாவின் நினைவில் இருப்பதில்லை. இதுவே பிராமணர்கள் உணவு தயாரிக்கும் சிவபாபாவின் பண்டாராவாகும். பிராமணர்கள் யோகத்தில் நிலைத்து இருக்கின்றார்கள். அவர்கள் எவ்வாறாயினும் தூய்மையானவர்கள். எனினும் யோகம் என்ற கேள்வியே உள்ளது. இந்த யோகத்திற்கே முயற்சி தேவை. நீங்கள் இதைப் பற்றி பொய் பேசக்கூடாது. ‘நான் முழுமையான யோகத்தில் இருக்கின்றேன்’ என்றோ அல்லது ‘80 வீதமான நேரம் நான் யோகத்தில் இருக்கின்றேன்’ என்றோ எவராலுமே கூற முடியாது. இவ்வாறாக எவராலும் கூற முடியாது. உங்களுக்கு இந்த ஞானமும் தேவை. குழந்தைகளாகிய உங்கள் மத்தியிலுள்ள யோகிகளினால் தமது திருஷ்டியின் மூலம் பிறரை மௌனமாக இருக்கச் செய்ய முடியும். இதுவும் ஒரு சக்தியாகும். அந்த நேரத்தில் அங்கு முற்றிலும் மயான அமைதி நிலவும். நீங்கள் சரீரமற்றவர்கள் ஆகி தந்தையின் நினைவில் நிலைத்திருக்கும் பொழுது அதுவே உண்மையான நினைவாகும். இதனை நீங்கள் மீண்டும் மீண்டும் பயிற்சி செய்ய வேண்டும். இங்கே நினைவில் அமரும்பொழுது இதனைப் பயிற்சி செய்ய நீங்கள் தூண்டப்படுகின்றீர்கள். எவ்வாறாயினும் அனைவரும் நினைவுசெய்வதில்லை. அவர்களின் புத்திகள் பல்வேறு இடங்களில் அலைந்து திரிகின்றன, அது இழப்பை ஏற்படுத்துகின்றது. அப்பியாசத்தைக் கற்பிக்கும் ஆசிரியர் என்று தம்மைக் கருதுபவர்களே கதியில் அமர்த்தப்பட வேண்டும். அனைவரின் முன்னிலையிலும் அவர்கள் தந்தையின் நினைவில் அமர்ந்திருக்க வேண்டும். அவர்களின் புத்தியின் யோகம் வேறு எங்கும் செல்லக்கூடாது. அப்பொழுது அங்கு மயான அமைதி நிலவும். அதன் பின்னர் நீங்கள் சரீரமற்றவர்கள் ஆகி தந்தையின் நினைவில் நிலைத்திருப்பீர்கள். இதுவே உண்மையான நினைவுசெய்தல் ஆகும். சந்நியாசிகளும் மௌனமாக அமர்கின்றார்கள். அவர்கள் யாரை நினைவு செய்கின்றார்கள்? அது உண்மையான நினைவு அல்ல. அவர்களால் எவருக்கும் நன்மை செய்ய முடியாது. அவர்களால் உலகை அமைதி அடையச் செய்ய முடியாது. அவர்களுக்குத் தந்தையைக் கூடத் தெரியாது. அவர்கள் பிரம்ம தத்துவத்தைக் கடவுள் என்று கருதுகின்றார்கள். ஆனால் அது உண்மையல்ல. இப்பொழுது உங்களுக்கு ஸ்ரீமத் கொடுக்கப்படுகின்றது: என்னை மாத்திரமே நினைவு செய்யுங்கள்! நீங்கள் 84 பிறவிகள் எடுக்கின்றீர்கள் என்பதைப் புரிந்து கொள்கின்றீர்கள். படிப்படியாக நீங்கள் ஒவ்வொரு பிறவியை எடுக்கும்பொழுதும் சந்திரனின் கலைகள் குறைவடைவதைப் போல் உங்கள் சுவர்க்கக் கலைகளும் குறைவடைகின்றன. நீங்கள் அதனைப் பார்க்கும்பொழுது இன்னமும் எவரும் முழுமை அடையவில்லை என்பதை நீங்கள் உணர்வீர்கள். நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும்பொழுது காட்சிகளைப் பெறுவீர்கள். ஆத்மாக்கள் சின்னஞ்சிறியவர்கள். எனினும் ஆத்மாவின் காட்சியைப் பெறுதல் சாத்தியமே. இல்லாவிடின் ஒருவரை விட இன்னொருவருக்கு அதிகளவு ஒளி உள்ளது என்று குழந்தைகளால் எவ்வாறு கூற முடியும்? அவர்கள் ஆத்மாக்களைத் தெய்வீகக் காட்சிகளினூடாகக் காண்கின்றார்கள். அவை அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளன. எனது கரங்களில் எதுவும் இல்லை. நாடகமே என்னை அனைத்தையும் செய்யத் தூண்டுகின்றது. நடக்கின்ற அனைத்தும் நாடகத்திற்கு ஏற்பவே நடக்கின்றது. போக் படைத்தல் போன்றனவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு செயலும் விநாடிக்கு விநாடி நடக்கின்றது. நீங்கள் எவ்வாறு தூய்மை ஆகலாம் என்பதைத் தந்தை இப்பொழுது உங்களுக்குக் கற்பிக்கின்றார். நீங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். ஆத்மாக்களாகிய நீங்கள் மிகவும் சின்னஞ்சிறியவர்கள். நீங்கள் தூய்மை அற்றவர்களாகி இப்பொழுது மீண்டும் ஒருமுறை தூய்மையாக உள்ளீர்கள். இது அற்புதமானதொரு விடயம். இயற்கையின் அற்புதம் பற்றிப் பேசப்பட்டுள்ளது. நீங்கள் தந்தையிடம் இருந்து இயற்கையின் அற்புதங்கள் அனைத்தையும் பற்றிச் செவிமடுக்கின்றீர்கள். ஆத்மாக்களும் பரமாத்மாவுமே அனைத்தையும் விட அதி அற்புதமான விடயங்கள். வேறு எவருக்கும் இதனைப் பற்றித் தெரியாது. ரிஷிகள் முனிகள் போன்ற எவருக்கும் இது தெரியாது. அத்தகைய சின்னஞ்சிறிய ஆத்மாக்களே கல்லுப்புத்தி உடையவராகி பின்னர் தெய்வீகப்புத்தி உடையவராகவும் ஆகுகின்றனர். உங்கள் புத்தியில் இருக்க வேண்டிய எண்ணங்கள்: இந்த ஆத்மாவாகிய நான், கல்லுப்புத்தி உடையவனாகி விட்டேன். நான் இப்பொழுது மீண்டும் ஒருமுறை தந்தையை நினைவுசெய்து தெய்வீகப் புத்தி உடையவன் ஆகுகின்றேன். இந்தப் பௌதீக உலகில் லௌகீகத் தந்தையரும் பின்னர் ஆசிரியர்களும் குருமார்களும் உள்ளனர். அந்த ஒரேயொரு புள்ளியே தந்தையும் ஆசிரியரும் குருவும் ஆவார். நீங்கள் சக்கரம் முழுவதும் சரீரதாரிகளையே நினைவுசெய்துள்ளீர்கள். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: என்னை மாத்திரமே நினைவு செய்யுங்கள்! அவர் உங்கள் புத்திகளை ஆழமானதாகவும் சூட்சுமமானதாகவும் ஆக்குகின்றார். உலக அதிபதி ஆகுதல் சிறியதொரு விடயமல்ல. இலக்ஷ்மியும் நாராயணனும் எவ்வாறு உலக அதிபதிகள் ஆகினார்கள் என்பதைப் பற்றி எவரும் சிந்திப்பதில்லை. நீங்களும் இதனை வரிசைக்கிரமமாக உங்கள்; முயற்சிக்கு ஏற்பவே புரிந்து கொள்கின்றீர்கள். புதிதாக வருகின்ற எவரும் இவ் விடயங்களைப் புரிந்து கொள்வதில்லை. மேலோட்டமாக இதனை அவர்கள் புரிந்துகொண்ட பின்னரே மேலும் மெருகூட்டிய முறையில் ஆழமாக விளங்கப்படுத்த வேண்டும். தந்தை புள்ளி வடிவமானவர். இருப்பினும் அவர்கள் மிகப்பெரிய நீள்கோள வடிவத்தை (லிங்கம்) உருவாக்கி உள்ளார்கள். அவர்கள் மனிதர்களின் பெரிய வடிவங்களையும் உருவாக்குகின்றார்கள். ஆனால் அவர்கள் அவ்வாறாக இருப்பதில்லை. மனிதர்கள் சாதாரணமான சரீரங்களையே கொண்டிருக்கின்றார்கள். பக்தி மார்க்கத்தில் மக்கள் சகல வகையான விடயங்களையும் உருவாக்குகின்றார்கள்; மக்கள் மிகவும் குழப்பமடைந்து உள்ளார்கள். தந்தை கூறுகின்றார்: கடந்த காலத்தில் நடந்தவை அனைத்தும் மீண்டும் ஒருமுறை நடக்கும். இப்பொழுது தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். இவருக்கு பாபா ஸ்ரீமத்தைக் கொடுத்ததுடன் காட்சிகளையும் கொடுத்துள்ளார். அவர் கூறினார்: நான் உங்களுக்கு இராச்சியத்தைக் கொடுக்கின்றேன். இப்பொழுது இந்தச் சேவையில் ஈடுபட்டிருங்கள். உங்கள் ஆஸ்தியைப் பெற முயற்சி செய்யுங்கள். அவை அனைத்தையும் துறந்திடுங்கள். எனவே இவர் ஒரு கருவியாக ஆகினார். அனைவரும் இவ்வாறாகக் கருவிகள் ஆகுவதில்லை. போதையுடன் இருந்தவர்கள் இங்கு வந்து அமர்ந்தார்கள். ‘நாங்கள் இராச்சியத்தைப் பெறுவதால் சதப் பெறுமதியானவற்றை வைத்திருந்து என்ன செய்வது?’ ஆகையால் தந்தை இப்பொழுது குழந்தைகளாகிய உங்களை முயற்சி செய்யத் தூண்டுகின்றார். இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது. சில குழந்தைகள் கூறுகின்றார்கள்: நாங்கள் ஸ்ரீ இலக்ஷ்மி நாராயணனை விடச் சிறிதளவேனும் குறைவாக வரப் போவதில்லை. ஆகையால் புலம்பிக் கொண்டிருக்காது ஸ்ரீமத்தைப் பின்பற்றி அதனை நிரூபித்துக் காட்டுங்கள். தனது குழந்தைகளுக்கு என்ன நடக்கும் என்று பாபா ஒருபொழுதும் கேட்பதில்லை. ஒருவர் விபத்தில் திடீரென மரணிக்க நேர்ந்தாலும் எவரும் பட்டினி கிடக்கப் போகின்றார்களா? சில நண்பர்கள் அல்லது உறவினர் போன்றோர் நிச்சயமாக உங்களுக்கு உணவளிப்பார்கள். ஒரு பழைய குடிலில் பாபா வாழ்வதைப் பாருங்கள். ஆனால் குழந்தைகளாகிய நீங்களோ மாளிகைகளில் வாழ்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளாகிய நீங்கள் உண்டு பருகி நன்றாக வாழ்கின்றீர்கள். இங்கு எதுவுமே கொண்டுவராதவர்களும் ஒவ்வொன்றையும் ஒழுங்காகப் பெறுகின்றார்கள். இந்த பாபாவை விட அவர்கள் சிறப்பாக வாழ்கின்றார்கள். சிவபாபா கூறுகின்றார்: நான் அலைந்து திரியும் யோகி. நான் ஒருவருக்கு நன்மை விளைவிப்பதற்காக விரும்பிய இடத்திற்குச் செல்ல முடியும். ஞானம் நிறைந்த குழந்தைகள் காட்சிகளுடன் சம்பந்தமான விடயங்களையிட்டு என்றுமே சந்தோஷம் அடைய மாட்டார்கள். யோகத்தை விடச் சிறந்தது எதுவும் இல்லை. ஆகையால் காட்சிகளுக்குரிய விடயங்களினால் உங்களைச் சந்தோஷப்படுத்தாதீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1எவரையும் உங்கள் திருஷ்டியினால் மௌனம் அடையச் செய்யத்தக்க வகையில் உங்கள் யோக ஸ்திதியை உருவாக்குங்கள். முற்றிலும் மயான அமைதி நிலவட்டும். இதற்குச் சரீரம் அற்றவர் ஆகுவதைப் பயிற்சி செய்யுங்கள்.

2. உண்மையான ஞான போதையில் இருப்பதற்கு நீங்கள் சங்கமயுகத்தைச் சேர்ந்தவர், பழைய உலகம் மாற உள்ளது, நீங்கள் வீடு திரும்ப இருக்கின்றீர்கள் என்பவற்றை நினைவு செய்யுங்கள். புலம்பாமல் தொடர்ந்தும் ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் பல ரூபங்களைக் கொண்டிருப்பதில் தந்தைக்குச் சமமானவர் ஆகி இறைவனுடனான சந்திப்பின்போது உங்களின் இதயபூர்வமான உரையாடலில் சரியான பதிலைப் பெறுவீர்களாக.

தந்தைக்குப் பல ரூபங்கள் உள்ளன. ஒரு விநாடியில் அவர் அசரீரியானவரில் இருந்து சூட்சும ஆடையை அணிந்து கொள்கிறார். அதேபோல் நீங்களும் களிமண்ணால் ஆன உங்களின் ஆடையை விடுத்து சூட்சுமமான தேவதை ஆடையை ஜொலிக்கும் ஆடையை அணிந்தால் இலகுவாக உங்களால் ஒரு சந்திப்பை ஏற்படுத்த முடியும். அத்துடன் உங்களின் இதயபூர்வமான உரையாடலின் பதிலையும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். இத்தகைய ஆடை மாயையின் நீரால் மற்றும் நெருப்பால் பாதிக்கப்படாதது. அத்துடன் பழைய உலகின் மனோபாவத்தாலும் அதிர்வலைகளாலும் பாதிக்கப்படாதது. மாயையால் இதில் தலையிட முடியாது.

சுலோகம்:
திடசங்கற்பம் அசாத்தியத்தையும் சாத்தியம் ஆக்குகிறது.

அவ்யக்த சமிக்கை: ஆன்மீக இராஜரீகம் மற்றும் தூய்மையின் ஆளுமையைக் கடைப்பிடியுங்கள்.

ஒரு பிரம்மாகுமார்/பிரம்மாகுமாரி என்பவர் சதா தூய்மையின் ஆளுமையையும் இராஜரீகத்தையும் பேணுபவர் ஆவார். இந்தத் தூய்மை என்ற ஆளுமை உலகிலுள்ள ஆத்மாக்களை தன்னை நோக்கிக் கவருகிறது. அத்துடன் இந்தத் தூய்மை என்ற ஆளுமை உங்களை தர்மராஜின் இடத்தில் உரிமை ஊதியத்தை (ரோயல்டி) கட்டுவதில் இருந்து விடுவிக்கும். இந்த இராஜரீகத்தின் அடிப்படையில் உங்களால் எதிர்கால அரச குடும்பத்திற்குள் வரமுடியும். எப்படி பௌதீக ஆளுமை உங்களைச் சரீர உணர்விற்குள் எடுத்துச் செல்கிறதோ, அவ்வாறே தூய்மையின் ஆளுமையும் உங்களை ஆத்ம உணர்வு உடையவராக்கி தந்தைக்கு உங்களை நெருக்கமாக எடுத்துச் செல்கிறது.