05.05.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் சரீரதாரிகள் எவரிடமிருந்தும் அன்றி, ஒரேயொரு தந்தையிடம் இருந்து மட்டுமே அமைதிக்கும், சந்தோஷத்திற்குமான ஆசீர்வாதத்தைப் பெறுகின்றீர்கள். பாபா உங்களுக்கு முக்திக்கும், ஜீவன்முக்திக்குமான பாதையைக் காட்டவே வந்துள்ளார்.
கேள்வி:
தந்தையுடன் திரும்பிச் சென்று, பின்னர், சத்திய யுகத்தின் ஆரம்பத்தில் வருவதற்கு நீங்கள் என்ன முயற்சியைச் செய்ய வேண்டும்?பதில்:
நீங்கள் தந்தையுடன் திரும்பிச் செல்ல விரும்பினால், முழுமையாகத் தூய்மை ஆகுங்கள். சத்திய யுகத்தின் ஆரம்பத்தில் வருவதற்கு, உங்களின் புத்தியின் யோகத்தை ஏனைய அனைவரிடம் இருந்தும் துண்டித்து, ஒரேயொரு தந்தையின் நினைவில் இருங்கள். நிச்சயமாக ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுங்கள். நீங்கள் ஒரேயொரு தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றினால், ஒரு மேன்மையான அந்தஸ்திற்கான உரிமையைக் கோருவீர்கள்.பாடல்:
அன்பான கடவுளே, குருடர்களாகிய எங்களுக்கு வழிகாட்டுங்கள்!ஓம் சாந்தி.
இப்பாடலைப் பாடியவர் யார்? குழந்தைகள். ஏனெனில், ஒரேயொரு தந்தை மாத்திரமே உள்ளார், அவர் படைப்பவர் என்று அழைக்கப்படுகின்றார். படைப்புக்கள் படைப்பவரை அழைக்கின்றனர். பக்தி மார்க்கத்தில், உங்களுக்கு இரண்டு தந்தையர் இருக்கின்றனர் என பாபா உங்களுக்கு விளங்கப்படுத்தி உள்ளார்: ஒருவர் இவ்வுலகிலுள்ள தந்தை, மற்றவர் இவ்வுலகிற்கு அப்பால் உள்ளவர். சகல ஆத்மாக்களினதும் தந்தை ஒரேயொருவரே. ஒரேயொரு தந்தையைக் கொண்டிருப்பதால், சகல ஆத்மாக்களும் தங்களைச் சகோதரர்கள் என அழைக்கின்றனர். அவர்கள் அந்தத் தந்தையை அழைக்கின்றனர்: ஓ தந்தையாகிய கடவுளே! ஓ பரம தந்தையே, கருணை காட்டுங்கள்! என்னை மன்னித்து விடுங்கள்! ஒரேயொரு கடவுள் மாத்திரமே பக்தர்களின் பாதுகாவலர் ஆவார். முதலில், உங்களுக்கு இரண்டு தந்தையர் இருப்பதை விளங்கப்படுத்துங்கள். அப்பால் வசிக்கும் தந்தை அனைவருக்கும் பொதுவானவர், ஆனால் அனைவரினதும் லௌகீகத் தந்தை வேறுபட்டவர். எனவே, லௌகீகத் தந்தையா அல்லது இவ்வுலகிற்கு அப்பாலுள்ள தந்தையா மகத்தானவர்? ஒரு லௌகீகத் தந்தையை என்றுமே கடவுள் என்றோ அல்லது பரம தந்தை என்றோ அழைக்க முடியாது. ஆத்மாக்களின் தந்தை ஒரேயொரு பரமாத்மா பரமதந்தை மாத்திரமே. ஆத்மாக்களின் பெயர் ஒருபொழுதும் மாறுவதில்லை, சரீரங்களின் பெயர்களே மாறுகின்றன. ஆத்மாக்கள் வெவ்வேறு சரீரங்கள் மூலம் தங்கள் பாகங்களை நடிக்கின்றனர், அதாவது, அவர்கள் மறுபிறவி எடுக்கின்றனர். ஆத்மாக்கள் இறுதியில் எத்தனை பிறவிகளை எடுக்கின்றார்கள் எனத் தந்தையே வந்து விளங்கப்படுத்துகின்றார். குழந்தைகளே, உங்களின் சொந்தப் பிறவிகளைப் பற்றியே உங்களுக்குத் தெரியாது. தந்தை பாரதத்திற்கே வருகின்றார், அவரது பெயர் சிவன் என்பதாகும். சிவனே பரமாத்மா என்பதை அவர்கள் புரிந்து கொள்வதுடன், சிவனின் பிறந்த தினத்தை அல்லது சிவராத்திரியையும் அவர்கள் கொண்டாடுகின்றனர். ஆத்மாக்கள் அசரீரியானவர்களாக இருப்பதைப் போன்றே, அவரும் அசரீரியானவர். அவர் தனது பாகத்தை நடிப்பதற்காக, அசரீரியில் இருந்து ஒரு பௌதீக ரூபத்தினுள் வருகின்றார். அசரீரியான சிவனால் சரீரமின்றி ஒரு பாகத்தை நடிக்க முடியாது. மக்கள் இவ்விடயங்களைப் புரிந்து கொள்வதே இல்லை; அவர்கள் முற்றிலும் குருடர்களாக உள்ளனர். ஒவ்வொருவருடைய சரீரத்திலும் இரு பௌதீகக் கண்கள் உள்ளன. ஆனால், ஆத்மாக்களிடம் தெய்வீகக் கண் எனவும் அழைக்கப்படுகின்ற, மூன்றாவது ஞானக்கண் இல்லை. ஆத்மாக்கள் தங்களுடைய தந்தையை மறந்து விட்டனர், இதனாலேயே “குருடர்களான எங்களுக்கு வழிகாட்டுங்கள்!” என்று அவர்கள் அழைக்கின்றனர். எவ்விடத்திற்கான வழி? அமைதி தாமத்திற்கும், சந்தோஷ தாமத்திற்குமான வழி. அனைவருக்கும் சற்கதியை அருள்பவரும், அனைவரதும் சற்குருவும் ஒரேயொருவரே. மனிதர்களால் மனிதர்களுக்குக் குருமார்களாகவும் முடியாது, சற்கதியை அருளவும் முடியாது. அவர்களே சற்கதி அடைவதுமில்லை, அவர்களால் அதனைப் பிறருக்கு அருளவும் முடியாது. ஒரேயொரு தந்தை மாத்திரமே அனைவருக்கும் சற்கதியை அருள்கின்றார். அல்ஃபாவான, அந்த ஒரேயொரு தந்தையை நினைவு செய்யுங்கள்! தந்தை விளங்கப்படுத்துகின்றார்: எம் மனிதராலும் எவருக்கும் முக்தி, ஜீவன்முக்தி, அமைதி, சந்தோஷம் போன்றவற்றைச் சதா காலத்திற்கும் வழங்க முடியாது. ஒரேயொரு தந்தையால் மாத்திரமே அமைதிக்கும், சந்தோஷத்திற்குமான ஆசீர்வாதத்தை அருள முடியும். அதை மனிதர்களால் மனிதர்களுக்கு அருள முடியாது. பாரத மக்கள் சத்திய யுகத்து சுவர்க்கவாசிகளாக இருந்தபொழுது, சதோபிரதானாக இருந்தனர். ஆத்மாக்கள் தூய்மையாக இருந்தனர். ஆத்மாக்கள் தூய்மையாகவும், சதோபிரதானாகவும் இருந்தபொழுது, பாரதம் சுவர்க்கம் என அழைக்கப்பட்டது. இற்றைக்கு 5000 வருடங்களுக்கு முன்னர், பாரதம் உண்மையிலேயே சதோபிரதான் சுவர்க்கமாக இருந்ததை நீங்கள் அறிவீர்கள்; அது இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியமாக இருந்தது. இப்பொழுது இது கலியுகத்தின் இறுதி, இது நரகம் எனப்படுகின்றது. இந்தப் பாரதம் சுவர்க்கமாக இருந்தபொழுது, செல்வம் நிறைந்ததாக இருந்தது; அங்கு வைரங்களும், இரத்தினங்களும் பதிக்கப்பட்ட மாளிகைகள் இருந்தன. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு இதை ஞாபகப்படுத்துகின்றார். சத்திய யுகத்தின் ஆரம்பத்தில் அது இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் ஆகியது. அது வைகுந்தமான, சுவர்க்கம் என அழைக்கப்பட்டது. அது இப்பொழுது சுவர்க்கமாக இல்லையெனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். பாபா, பாரதத்திற்கு மாத்திரமே வருகின்றார். அசரீரியான சிவனின் பிறந்த தினம் கொண்டாடப்படுகின்றது, ஆனால் அவர் என்ன செய்கின்றார் என எவருக்குமே தெரியாது. சிவனே ஆத்மாக்களாகிய எங்களின் தந்தை. நாங்கள் அவரின் பிறந்த தினத்தைக் கொண்டாடுகின்றோம். தந்தையின் வரலாறு கூட அவர்களுக்குத் தெரியாது. துன்ப வேளையிலேயே அனைவரும் கடவுளை நினைவு செய்கின்றனர் என நினைவு கூரப்படுகின்றது. அவர்கள் அழைக்கின்றனர்: ஓ தந்தையாகிய கடவுளே, கருணை காட்டுங்கள்! இது இராவண இராச்சியம் என்பதால், நாங்கள் மிகவும் சந்தோஷம் இல்லாமல் இருக்கின்றோம். அவர்கள் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்தும் இராவணனின் கொடும்பாவியை எரிக்கின்றனர், ஆனால் பத்துத் தலைகளுடன் கூடிய இராவணன் யாரென்பதை அவர்கள் அறியார்கள். நாங்கள் ஏன் அவனை எரிக்கின்றோம்? நாங்கள் அவனது கொடும்பாவியைச் செய்து, பின்னர் எரிக்கும் அளவிற்கு அவன் எத்தகைய எதிரியாக இருந்திருக்க வேண்டும்? பாரத மக்களிடம் இந்த ஞானம் என்ற மூன்றாவது கண் இல்லாததால், அவர்களுக்கு இது தெரியாது. இதனாலேயே அவர்கள் இராம இராச்சியத்தை விரும்புகின்றனர். ஆணில் ஐந்து விகாரங்களும், பெண்ணில் ஐந்து விகாரங்களும் உள்ளன, அதனாலேயே இது இராவண சமுதாயம் எனப்படுகின்றது. இராவணனின் ஐந்து விகாரங்களே மாபெரும் எதிரி, அதனாலேயே மக்கள் அவனின் கொடும்பாவியைச் செய்து, பின்னர் எரிக்கின்றனர். தாங்கள் எரிக்கின்ற, இராவணன் யாரென்பது பாரத மக்களுக்குத் தெரியாது. இராவண இராச்சியம் எப்பொழுது வந்தது என்பதும் எவருக்கும் தெரியாது. சத்திய, திரேதா யுகங்கள் இராம இராச்சியம் என்றும், துவாபர, கலியுகங்கள் இராவண இராச்சியம் என்றும் தந்தை விளங்கப்படுத்துகின்றார். சத்திய யுகத்தில் அது இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமாக இருந்தது. எவ்வாறு அல்லது எவரிடமிருந்து அவர்கள் தங்களுடைய இராச்சியத்தைப் பெற்றார்கள் என்பதை எவரும் அறிய மாட்டார்கள். இவ்விடயங்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இவ்விடயங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும். தந்தையே அதியன்பிற்கினியவர், இதனாலேயே பக்தி மார்க்கத்தில் அவர்கள் அவரை அழைக்கின்றனர். பாரதத்தில் அவர்களின் (இலக்ஷ்மி, நாராயணன்) இராச்சியம் இருந்த பொழுது, துன்பத்தின் பெயரோ, சுவடோ இருக்கவில்லை. இது இப்பொழுது துன்ப பூமியாகும். பல சமயங்கள் உள்ளன. சத்திய யுகத்தில் ஒரு தர்மம் மாத்திரமே இருந்தது. அவர்கள் அனைவரும் குருடர்களாக இருப்பதனால், இவ்வாத்மாக்கள் அனைவரும் எங்கு செல்வார்கள் என்பது தெரியாமல் இருக்கின்றனர். எவருமே சமயநூல்களின் மூலம் இந்த ஞானம் என்ற மூன்றாவது கண்ணைப் பெறுவதில்லை. ஞானக்கடலான, பரமாத்மா பரமதந்தை மாத்திரமே உங்களுக்கு இந்த ஞானக் கண்ணை வழங்குகின்றார். ஆத்மாக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் இந்த ஞானம் என்ற மூன்றாவது கண்ணைப் பெறுகின்றீர்கள். தாங்கள் எத்தனை பிறவிகளை எடுத்துள்ளார்கள் என்பதை ஆத்மாக்கள் மறந்து விட்டார்கள். சத்திய யுகத்துத் தேவர்களின் இராச்சியம் எங்கே சென்றது? மனிதர்கள் 84 பிறவிகள் எடுப்பது நினைவு கூரப்படுகின்றது. அவர்கள் 84 பிறவிகளின் சக்கரத்தைப் பற்றிப் பேசுகின்றனர், ஆனால், எவ்வாத்மாக்கள் 84 பிறவிகளை எடுக்கின்றனர்? பாரதத்திற்கு முதலாவதாக வருபவர்களே தேவர்கள் ஆவார்கள். அவர்கள் 84 பிறவிகளை எடுத்து, இறுதியில் தூய்மை அற்றவர்கள் ஆகுகின்றனர். அவர்கள் பாடுகின்றனர்: ஓ தூய்மையாக்குபவரே! அவர்களே தூய்மை அற்றிருப்பதையே இது நிரூபிக்கின்றது. இதனாலேயே அவர்கள் அழைக்கின்றனர்: ஓ தூய்மையாக்குபவரே, வந்து எங்களைத் தூய்மை ஆக்குங்கள்! தூய்மை அற்றிருப்பவர்களால் எவ்வாறு வேறு எவரையும் தூய்மையாக்க முடியும்? தந்தை விளங்கப்படுத்துகின்றார்: அரைக் கல்பத்திற்கு, இராவண இராச்சியத்தில் பக்தி மார்க்கம் இருந்தது. ஐந்து விகாரங்களால், பாரத மக்கள் அதிகளவு துன்பத்தை அனுபவித்து விட்டனர். அவர்கள் 84 பிறவிகளை எடுக்கின்றனர். இந்தக் கணிப்பீடு விளங்கப்படுத்தப்பட வேண்டும். முதலில், சத்தியயுகத்தில், நீங்கள் சதோபிரதானாகவும், பின்னர் திரேதா யுகத்தில் சதோவாகவும் இருக்கின்றீர்கள். ஆத்மாக்களில் கலப்படம் கலக்கப்பட்டது. தந்தை பாரதத்திற்கு மாத்திரமே வருகின்றார். சிவனின் பிறந்த தினம் உள்ளது. ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் ஒரு கருப்பையினூடாகவே பிறப்பு எடுக்கின்றனர். தந்தை கூறுகின்றார்: நான் ஒரு சாதாரண, வயதான சரீரத்தில் இவரது பல பிறவிகளின் இறுதிப் பிறவியில் இவரினுள் பிரவேசிக்கின்றேன். இவ்விளக்கம் ஒரு நபருக்கு மாத்திரம் வழங்கப்படவில்லை. இது ஒரு கீதா பாடசாலை. இந்த இராஜயோகம் உங்களைத் தேவர்களாக மாற்றுவதற்கே மனிதர்களாகிய உங்களுக்குக் கற்பிக்கப்படுகின்றது. தந்தையால் மாத்திரமே உங்களுக்கு வழங்கக்கூடிய, சுவர்க்க இராச்சியத்தைப் பெறுவதற்கே நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள். வெறுமனே கீதையைப் படிப்பதால் மாத்திரமே எவரும் ஒர் அரசராக முடியாது. உண்மையில், அவர் மேலும் ஏழை ஆகுகின்றார். தந்தை உங்களுக்கு இந்தக் கீதை ஞானத்தைக் கொடுத்து, உங்களை அரசர்கள் ஆக்குகின்றார். மற்றவர்களிடம் இருந்து கீதையைச் செவிமடுப்பதால், நீங்கள் ஏழைகள் ஆகிவிட்டீர்கள். பாரதத்தில் இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் இருந்தபொழுது, தூய்மையும், அமைதியும், செழிப்பும் இருந்தன. அது தூய இல்லற ஆச்சிரமமாக இருந்தது. அங்கு வன்முறை பற்றிய குறிப்பே இல்லை. துவாபர யுகத்திலேயே வன்முறை ஆரம்பித்தது. காம வாளைப் பயன்படுத்தியதாலே, இது உங்கள் நிலைமையாகி விட்டது. சத்திய யுகத்தில் நீங்கள் 100% வளமானவர்களாகவும், சதோபிரதானாகவும் இருந்தீர்கள். சாதுக்கள், புனிதர்களில் எவருமோ அல்லது வேறு எவருமோ இந்த இரகசியத்தை அறிய மாட்டார்கள். ஞானக்கடலும், தூய்மையாக்குபவருமான தந்தையே வந்து, சதோபிரதான் ஆகுவதற்கான வழியை உங்களுக்குக் கூறுகின்றார். இராவணனின் கட்டளைகளைப் பின்பற்றுவதால். மக்களின் நிலைமை எவ்வாறாகி விட்டது எனப் பாருங்கள்! அரசர்கள் கூட, கடந்த காலத்தில் தூய அரசர்களாக இருந்தவர்களின் விக்கிரகங்களின் காலடியில் வீழ்ந்து, அவர்களின் புகழைப் பாடுகின்றனர்: நீங்கள் தெய்வீகக் குணங்கள் நிறைந்தவர்கள், நாங்களோ சீரழிந்த பாவிகள். எங்களிடம் தெய்வீகக் குணங்கள் கிடையாது. பின்னர் அவர்கள் கூறுகின்றனர்: எங்கள் மீது கருணை காட்டுங்கள்! வந்து, எங்களை ஆலயத்தில் வீற்றிருக்கத் தகுதியானவர்கள் ஆக்குங்கள். எவ்வாறு தந்தை வந்து, மீண்டும் ஒருமுறை ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தின் ஸ்தாபனையை மேற்கொள்வதை எவராலும் புரிந்துகொள்ள முடியாது. நீங்கள் தேவ தர்மத்திற்கு உரியவர்களாக இருந்ததை இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். நாங்கள் சத்திரியர்களாகவும், வைசியர்களாகவும், சூத்திரர்களாகவும் ஆகி, இத்தனை பிறவிகளை எடுத்தோம், நாங்கள் இப்பொழுது எங்கள் 84 பிறவிகளைப் பூர்த்தி செய்கின்றோம். உலகச் சக்கரம் மீண்டும் சுழல வேண்டும். இதனாலேயே இங்கு நீங்கள் மீண்டும் ஒருமுறை தூய்மையாக வேண்டும். தூய்மையற்ற எவருமே அமைதி தாமத்திற்கோ அல்லது சந்தோஷ தாமத்திற்கோ திரும்பிச் செல்ல முடியாது. சதோபிரதானாக இருந்த நீங்கள் தமோபிரதானாகி விட்டதைத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் சத்திய யுகத்திலிருந்து இக்கலியுகத்திற்கு வந்துவிட்டீர்கள். நீங்கள் மீண்டும் ஒரு தடவை சத்திய யுகத்திற்கு உரியவர்கள் ஆகவேண்டும், அப்பொழுதே உங்களால் முக்தி தாமத்திற்கும், சந்தோஷ தாமத்திற்கும் செல்ல முடியும். பாரதம் சந்தோஷ தாமமாக இருந்தது. இப்பொழுது அது துன்ப தாமமாக இருக்கிறது. ‘குருடர்களாகிய எங்களுக்குப் பாதையைக் காண்பியுங்கள்’ என நீங்கள் பாடலில் கேட்டீர்கள். எவ்வாறு நாங்கள் எங்களது அமைதி தாமத்திற்குச் செல்ல முடியும்? கடவுள் சர்வவியாபி என்றும், அவர் இன்ன இன்னவற்றில் அவதரிப்பதாகவும் அம்மக்கள் கூறுகின்றனர். தந்தை பரசுராமர் ஆகி, எவரையாவது கொலை செய்வாரா? (பரசுராமர் - கோடரியை வைத்திருக்கும் இராமர் பற்றிய இதிகாசக் கதை) அது அசாத்தியம். எவ்வாறு நீங்கள் இந்தச் சக்கரத்தில் 84 பிறவிகளை எடுத்துள்ளீர்கள் எனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். இப்பொழுது அல்பாவான, என்னை நினைவு செய்யுங்கள்! ஓ ஆத்மாக்களே, ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுங்கள்! சரீர உணர்வு உடையவர்கள் ஆகுவதால் நீங்கள் முற்றிலும் ஏழைகளாகவும், சந்தோஷம் அற்றவர்களாகவும் ஆகிவிட்டீர்கள். நீங்கள் நரகவாசிகளாகி விட்டீர்கள். நீங்கள் சுவர்க்கவாசிகளாக விரும்பினால், நிச்சயமாக ஆத்ம உணர்வு உடையவர்களாக வேண்டும். ஆத்மாக்கள் தங்கள் சரீரங்களை நீக்கி, இன்னொன்றை எடுக்கின்றார்கள். உங்களின் 84 பிறவிகள் இப்பொழுது முடிவிற்கு வருகின்றன, நீங்கள் சத்திய யுகத்தின் ஆரம்பத்திற்குச் செல்ல வேண்டும். இப்பொழுது, என்னை நினைவு செய்யுங்கள், உங்கள் புத்தியின் யோகத்தை ஏனையோரிடம் இருந்து துண்டித்து விடுங்கள். நீங்கள் வீட்டில் உங்கள் குடும்பங்களுடன் வசிக்கலாம், ஆனால் நீங்கள் ஆத்மாக்கள் என்ற நம்பிக்கையைக் கொண்டிருங்கள். ஓர் ஆத்மா தனது சரீரத்தை நீக்கி, இன்னொன்றை எடுக்கின்றார். இப்பொழுது ஆத்ம உணர்வு உடையவராகி, என்னை நினைவு செய்யுங்கள், கலப்படம் எரிக்கப்படும். நீங்கள் தூய்மை ஆகுவீர்கள், பின்னர் நான் குழந்தைகள் அனைவரையும் என்னுடன் திரும்பவும் வீட்டிற்கு அழைத்துச் செல்வேன். நீங்கள் எனது வழிகாட்டல்களைப் பின்பற்றாது விட்டால், அத்தகையதோர் உயர்ந்த அந்தஸ்தைக் கோர மாட்டீர்கள். இலக்ஷ்மியும், நாராயணனும் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோரினார்கள். அது அவர்களின் இராச்சியமாக இருந்த பொழுது, வேறெந்தச் சமயங்களும் இருக்கவில்லை. துவாபர யுகத்திலேயே ஏனைய சமயங்கள் அனைத்தும் வர ஆரம்பித்தன. சத்திய யுகத்தில் மிகச்சில மனிதர்களே உள்ளனர். இப்பொழுது, பல சமயங்கள் இருப்பதால், அவர்கள் மிகவும் சந்தோஷம் அற்றவர்களாகி விட்டனர். தேவர்கள் தூய்மை அற்றவர்கள் ஆகினார்கள். எனவே, அவர்களால் இப்பொழுது தங்களைத் தேவர்கள் என்று அழைக்க முடியவில்லை. பின்னர் அவர்கள் தங்களுக்கு இந்துக்கள் என்ற பெயரை வழங்கினர். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் தகுதிவாய்ந்த தேவர்களாக இருந்தபொழுது, முழு உலகையும் ஆட்சி செய்தீர்கள், நீங்கள் அனைவரும் மிகவும் சந்தோஷமாக இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் சந்தோஷம் அற்றவர்களாகி விட்டீர்கள். பாரதம் சுவர்க்கமாக இருந்தது, அது இப்பொழுது நரகமாகி விட்டது. எனவே, தந்தையின்றி, எவராலுமே நரகத்தைச் சுவர்க்கமாக்க முடியாது. தேவர்கள் முற்றிலும் விகாரம் அற்றவர்கள் எனப்படுகின்றனர். இங்குள்ள மக்கள் முற்றிலும் விகாரமானவர்கள்; அவர்கள் தூய்மை அற்றவர்கள் எனப்படுகின்றனர். பாரதம் சிவபாபாவினால் ஸ்தாபிக்கப்பட்ட, சிவாலயமாக இருந்தது. தந்தை சுவர்க்கத்தைப் படைக்கின்றார், இராவணன் அதை நரகம் ஆக்குகின்றான். இராவணன் உங்களைச் சபிக்கின்றான், தந்தையோ உங்களுக்கு 21 பிறவிகளுக்கான உங்கள் ஆஸ்தியைக் கொடுக்கின்றார். இப்பொழுது, நீங்கள் ஒவ்வொருவரும் எந்தச் சரீரதாரிகளையும் அன்றி, தந்தையையே நினைவு செய்ய வேண்டும். சரீரதாரிகளைக் கடவுள் என்று அழைப்பதில்லை. ஒரேயொரு கடவுளே உள்ளார். தந்தை உங்களுக்கு ஓர் எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுக்கின்றார், பின்னர் இராவணன் உங்களைச் சபிக்கின்றான். இந்நேரத்தில், பாரதம் சபிக்கப்பட்டு, பெருமளவு துன்பத்தை அனுபவிக்கின்றது. இராவணனை இப்பொழுது வெற்றிகொள்ள வேண்டும். நினைவு கூரப்படுகின்றது: நீங்கள் விகாரங்களைத் தானம் செய்யும் பொழுது, கிரகணத்தின் சகுனங்கள் அகற்றப்படுகின்றன. பூமி மீது விழும் நிழலே மற்றைய பௌதீகக் கிரகணங்கள் ஆகுகின்றன. தந்தை இப்பொழுது கூறுகின்றார்: ஐந்து விகாரங்கள் என்ற கிரகணத்தின் சகுனங்கள் உங்கள் மீது உள்ளன. நீங்கள் இந்த ஐந்து விகாரங்களையும் தானம் செய்ய வேண்டும். ஒருபொழுதும் விகாரத்தில் ஈடுபடாமல் இருப்பதே முதலாவதாகச் செய்யப்பட வேண்டிய தானம். இந்தக் காம வாளே மனிதர்களைத் தூய்மை அற்றவர்கள் ஆக்குகின்றது. அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தை உங்களுக்குக் கற்பிக்கின்ற இந்த ஞானத்தில் முழுக் கவனம் செலுத்துங்கள். இந்த இறுதிப் பிறவியில், இந்த ஞானம் என்ற உங்கள் மூன்றாவது கண்ணால் உங்களின் 84 பிறவிகளைப் பற்றிப் புரிந்துகொண்டு, தூய்மை ஆகுங்கள்.2. இராவணனின் சாபத்தில் இருந்து பாதுகாக்கப்படுவதற்கு, ஒரேயொரு தந்தையின்; நினைவில் நிலைத்திருங்கள். ஐந்து விகாரங்களையும் தானம் செய்யுங்கள். ஒரேயொரு தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் பாப்தாதாவின் உதவியாளர்களாக இருப்பதன் மூலம், இதய சிம்மாசனத்தில் வீற்றிருந்து, ஒரு கிரீடத்தையும், திலகத்தையும் ஏற்றுக் கொள்வீர்களாக.ஓர் அரசர் தனது சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் பொழுது, ஒரு கிரீடமும், திலகமுமே அதன் அடையாளங்கள் ஆகும். அதேபோல், இதய சிம்மாசனத்தில் வீற்றிருப்பவர்களின் நெற்றியில் எப்பொழுதும் ஆத்ம உணர்வு ஸ்திதி எனும் திலகம் பிரகாசிப்பது புலப்படுகின்றது; தொலைவில் இருந்தே அதனைப் பார்க்க முடியும். சகல ஆத்மாக்களுக்கும் நன்மை அளிக்கின்ற நல்லாசிகள் அவர்களின் கண்களிலும், அவர்களின் முகங்களிலும் புலப்படுகின்றன. அவர்களின் ஒவ்வோர் எண்ணமும், வார்த்தையும், செயலும் தந்தையின் உடையவைக்குச் சமமானவை.
சுலோகம்:
இலகு நினைவைக் கொண்டிருப்பதற்கு, இலகு சுபாவம் எனும் நற்குணத்தைக் கிரகித்து,அவ்யக்த சமிக்ஞை: சதா ஆட்ட, அசைக்க முடியாத மற்றும் நிலையான ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.அவ்யக்த சமிக்ஞை: சதா ஆட்ட, அசைக்க முடியாத மற்றும் நிலையான ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.
நாடகத்தின் இந்த ஞானத்தின் மூலம் தங்கள் நடைமுறை வாழ்வுகளில் சக்தியைக் கிரகித்து விட்டவர்களுக்கு என்றுமே எந்தக் குழப்பமும் இருக்க முடியாது. நாடகம் எனும் இந்தக் கருத்து சதா ஆட்ட, அசைக்க முடியாதவர்களாக இருப்பதற்கான விசேடமான சக்தியைத் தருகின்றது. அதைச் சக்தி வடிவில் கிரகித்து விட்டவர்களை என்றுமே தோற்கடிக்க முடியாது. இந்த நன்மை அளிக்கின்ற நாடகத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ஏதோவொரு நன்மை அமிழ்ந்துள்ளது. பொறுமையாக இருந்து, அனைத்தையும் ஒரு பற்றற்ற பார்வையாளராகப் பார்ப்பதைப் பயிற்சி செய்யுங்கள், நீங்கள் அப்பொழுது ஆட்ட, அசைக்க முடியாதவர்களாக இருப்பீர்கள்.