05.07.26    Avyakt Bapdada     Tamil Lanka Murli    15.12.2010     Om Shanti     Madhuban


‘எனது’ என்பதை ‘உங்களுடையது’ என்று மாற்றி, ஒரு கவலையற்ற சக்கரவர்த்தி ஆகுங்கள். ஒரு விநாடியில் வீணானவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பதைப் பயிற்சி செய்து, உங்களின் எண்ணங்கள் அனைத்தையும் மற்றும் காலத்தையும் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துங்கள்.


இன்று, பாபா எங்கும் உள்ள தனது கவலையற்ற சக்கரவர்த்திகளாக இருக்கும் குழந்தைகளைப் பார்க்கிறார். இப்போது மட்டுமே இத்தகைய கவலையற்ற சக்கரவர்த்திகளின் ஒன்றுகூடல் தென்படுகிறது. ஏனென்றால், இப்போது மட்டுமே தந்தை உங்களின் கவலைகளை நீக்கி, உங்களைக் கவலையற்ற சக்கரவர்த்திகள் ஆக்குகிறார். இதனாலேயே, உங்களின் இந்த ஒன்றுகூடல் இந்த வேளையில் மட்டுமே புலப்படுகிறது. நீங்கள் அதிகாலையில் விழித்து எழுந்ததில் இருந்து, நீங்கள் கவலையற்ற ஸ்திதியில் ஸ்திரமாக இருக்கிறீர்கள். உண்ணும்போதும் பருகும்போதும் அனைத்தையும் செய்யும்போதும் உங்களுக்கு எந்தவிதக் கவலைகளும் இல்லை. நீங்கள் தூங்கும்போது, கவலை அற்றவர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் ஒரு சக்கரவர்த்தி எனினும் கவலையற்றவர். நீங்கள் விழித்தெழுந்ததும் தூங்கப் போகும்போதும் இதை அனுபவம் செய்கிறீர்களா? நீங்கள் அனைவரும் உங்களின் கவலைகளைத் தந்தையிடம் ஒப்படைத்து, இந்த ஆன்மீக போதையைப் பெற்றுள்ளீர்கள். இதனாலேயே நீங்கள் கவலையற்ற சக்கரவர்த்திகள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து முன்னேறும்போது ஏதாவது கவலைகள் ஏற்பட்டால், அந்தக் கவலை உங்களை எவ்வாறு ஆக்கும்? உங்களிடம் இந்த ஆன்மீக போதை இருக்கும்போது ஒளியின் பிரகாசம் உங்களின் நெற்றியில் புலப்படும். ஏதாவது கவலை இருக்குமாயின், அங்கே சுமைகளின் கூடை தோன்றும். எனவே, பேசுங்கள்: நீங்கள் இந்த ஒளிப் பிரகாசத்தை விரும்புகிறீர்களா அல்லது சுமைகளின் கூடையை விரும்புகிறீர்களா? கவலையற்ற சக்கரவர்த்திகளான நீங்கள் உங்களையே நேசிக்கிறீர்கள். இத்தகைய ஸ்திதியில் நீங்கள் பறக்கும்போது, உங்களின் ஒளிப்பிரகாசத்தைப் பார்க்கும் மற்றவர்களும் உங்களிடம் அதிகளவு அன்பு வைத்திருப்பார்கள். இதனாலேயே, பாப்தாதா குழந்தைகளான உங்களை சதா கவலையற்ற சக்கரவர்த்திகளாக இருக்கும் விழிப்புணர்வில் ஸ்திரமாக இருக்கச் செய்கிறார். இதனாலேயே, உங்களின் பக்தர்கள் உங்களின் ரூபங்களை இரட்டைக் கிரீடாதாரிகளாகக் காட்டி உள்ளார்கள். ஒன்று, ஒளிக்கிரீடம். மற்றையது உங்களின் விகாரங்களை வெற்றி கொண்டதால் அடைந்த இராச்சியக் கிரீடம். அவர்கள் இரட்டைக் கிரீடங்களைக் காட்டியுள்ளார்கள். இதனாலேயே, பாப்தாதா எப்போதும் குழந்தைகளான உங்கள் அனைவருக்கும் இந்தக் கற்பித்தலை வழங்குகிறார்: சதா களிப்புடன் இருப்பது மிகவும் இலகுவானது. எது இலகுவானது? ‘எனது’ என்ற எல்லைக்கு உட்பட்ட உணர்வு எதையும் தந்தையிடம் கையளித்து விடுங்கள். ‘எனது’ என்பதை ‘உங்களுடையது’ என்று நீங்கள் மாற்றினால், கவலையற்ற சக்கரவர்த்திகள் ஆகுவீர்கள். ஓர் எழுத்தின் வேறுபாடே உள்ளது: தேரா (உங்களுடையது) மேரா (எனது). இந்த ஓர் எழுத்தின் வேறுபாட்டினால் நீங்கள் கவலையற்ற சக்கரவர்த்திகள் ஆகுகிறீர்கள். இது இலகுவானதுதானே? நீங்கள் கவலையற்ற சக்கரவர்த்திகள் ஆகிவிட்டீர்கள், அல்லவா? அல்லது, இன்னமும் ஏதாவது கவலை உங்களுக்குள் இருக்கிறதா? எந்தவொரு வேளையிலும் ஆன்மீக போதைக்குப் பதிலாக உங்களுக்குக் கவலை ஏற்படுமாயின் அனைத்தையும் ‘உங்களுடையது’ என்பதை ‘எனது’ என்று ஏற்றுக் கொள்வதால் ஏற்படும் வேறுபாடே ஆகும். எனவே, நீங்கள் அனைவரும் நடைமுறையில் எதைக் காட்டியுள்ளீர்கள்? நீங்கள் உங்களின் கவலைகள் அனைத்தையும் கையளித்து விட்டீர்களா? அல்லது, அவ்வப்போது உங்களின் ஆன்மீக போதையைக் கைவிட்டு கவலைப்படுகிறீர்களா? உங்களுக்குள் ஏதாவது கவலைகள் உள்ளதா அல்லது நீங்கள் சதா கவலையற்றவராக இருக்கிறீர்களா? சதா கவலையற்ற சக்கரவர்த்திகளாக இருப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! கவலையற்ற சக்கரவர்த்திகள், நிச்சயமாகவா? அல்லது சிலவேளைகளில் மட்டுமா? கவலையற்ற சக்கரவர்த்திகளே, உங்களின் கைகளை உயரே உயர்த்துங்கள்! சிலவேளைகளில் மட்டும் இவ்வாறு இருப்பவர்களும் உயர்த்துங்கள்! சேவையைப் பற்றிக் கவலைப்படுவது வேறு விடயம். அந்தக் கவலை, மற்றவர்களைக் கவலையற்றவர்கள் ஆக்குவதற்கான வழிமுறை ஆகுகிறது. உங்களிடம் கவலைக்குரிய சம்ஸ்காரங்கள் இருக்குமாயின், அந்த வேளையில் ‘எனது’ என்பதை ‘உங்களுடையது’ என்று மாற்றிக் கொள்ளுங்கள். உங்களின் கவலைகளைத் தந்தையிடம் ஒப்படைத்துவிட்டு இந்த ஆன்மீக போதையை எடுத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், தந்தை குழந்தைகளின் கவலைகளை நீக்கி, அவர்களுக்குப் போதையை வழங்குவதற்காகவே வந்துள்ளார். எனவே, உங்களுக்குள் சோதித்துப் பாருங்கள்: நான் சிலவேளைகளில் நீண்ட காலத்திற்குரிய சம்ஸ்காரங்களை மீண்டும் வெளிப்பட அனுமதிக்கிறேனா? இது ஏனென்றால் சிறிது காலமாக, குழந்தைகளான உங்களுக்கு, தற்சமயத்திற்கேற்ப எதுவும் நடக்கலாம் என்று பாப்தாதா கூறிவருகிறார். அது எந்த வேளையிலும் நடக்கலாம். இதனாலேயே குழந்தைகளான நீங்கள் ஒவ்வொருவரும் உங்களில் கவனம் செலுத்த வேண்டும்: என்னால் நான் விரும்பிய போது ஒரு விநாடியில் முற்றுப்புள்ளி வைக்க முடிகிறதா? உதாரணமாக, உங்களுக்குள் ஏதாவது வீணான எண்ணங்கள் ஏற்படும்போது, ஒரு முற்றுப்புள்ளி வைப்பதன் மூலம் ஒரு விநாடியில் உங்களால் அந்த வீணானவற்றை முடிக்க முடிகிறதா? உங்களிடம் இத்தகைய பயிற்சி உள்ளதா? அல்லது, அந்த வேளையில், சூழ்நிலைகளுக்கு ஏற்ப, அந்த வீணானதை முடிக்க நீங்கள் முயற்சி செய்ய வேண்டியுள்ளதா? நீங்கள் முற்றுப்புள்ளி இடுவதற்கு முயற்சி செய்கிறீர்கள். ஆனால் அதற்குப் பதிலாக, நீங்கள் ஒரு கேள்விக்குறியை இட்டுவிடுகிறீர்கள். அந்த வேளையில், நீங்கள் தொடர்ந்து, ‘ஏன்? என்ன? எப்படி?’ என்று நினைப்பீர்களாயின், தந்தையுடன் நீங்கள் திரும்பிச் செல்கின்ற இலட்சியம்: தந்தை ஒரு விநாடியில் திரும்பிச் சென்று விடுவார். அவர் ஒரு புள்ளி ஆவார், ஒரு விநாடியும் ஒரு புள்ளியே. ஒரு முற்றுப்புள்ளியும் ஒரு புள்ளியே. உங்களிடம் இத்தகைய பயிற்சி உள்ளதா? நீங்கள் இப்பொழுதில் இருந்தே இந்தப் பயிற்சியைச் செய்தால், உங்களின் கையைத் தந்தையின் ஸ்ரீமத் என்ற கரத்தில் வைப்பதன் மூலம், தந்தையைப் போல், உங்களால் வீடு திரும்பிச் செல்ல முடியும். இதனாலேயே, இரண்டு விடயங்களில் கவனம் செலுத்துவதற்குக் கீழ்க்கோடிடுமாறு பாப்தாதா ஏற்கனவே உங்களுக்குக் கூறியுள்ளார். அந்த இரண்டு விடயங்களும் எவை?

ஒன்று, எண்ணங்களின் பொக்கிஷம், மற்றையது காலம் என்ற பொக்கிஷம். நீங்கள் பல பொக்கிஷங்களைப் பெற்றுள்ளீர்கள்: ஞானப் பொக்கிஷம், சக்திகளின் பொக்கிஷம். அத்துடன் நீங்கள் யோகத்தில் சம்பூரணம் ஆகுவதற்கும் பல பிரதானமான வழிமுறைகளைப் பெற்றுள்ளீர்கள். சங்கமயுகத்தின் இந்த நேரம் கல்பம் முழுவதிலும் அதிவிசேடமானதும் விலைமதிப்பற்றதும் ஆகையால், இந்த வேளையில் நீங்கள் விரும்பிய அளவு பேறுகளை உங்களால் அடைய முடியும். ஏனென்றால், இந்த ஒரு பிறவி, மிக மேன்மையான ஒரு பிறவி ஆகும். இந்த ஒரு பிறவியில் நீங்கள் பல பிறவிகளுக்கான உங்களின் வெகுமதியை உருவாக்க வேண்டும். சங்கமயுகத்தின் ஒரு விநாடியையேனும் நீங்கள் வீணாக்கக்கூடாது. ஒரு விநாடி, பல பிறவிகளுடன் தொடர்புடையது. ஒரு வருடச் சேமிப்பு, பல வருடங்கள் பேறுகளுக்குச் சமமானவை. ஆகவே, இந்த நேரத்தின் பெறுமதி, விநாடிகளும் நிமிடங்களும் மட்டுமல்ல, ஆனால் ஒரு மணிநேரமும் மகத்தானது. ஒரு விநாடியும் மகத்தானது. அத்துடன் இந்தச் சங்கமயுகத்தின் பிறவியில் எண்ணங்களே பிரதானமான அத்திவாரம் ஆகும். பாருங்கள், நீங்கள் யோகம் செய்யும்போது, ‘மன்மனாபவ’ எனக் கூறுகிறீர்கள். இதுவே உங்களின் அத்திவாரத்தின் அடிப்படை ஆகும். உங்களின் மனதின் வேலை எண்ணங்களைக் கொண்டிருப்பது. உங்களின் எண்ணங்களால் மட்டுமே நீங்கள் நினைவு யாத்திரையை அனுபவம் செய்கிறீர்கள். நீங்கள் குறிப்பாக ஒருவருக்கு ஒருவர் வெவ்வேறு எண்ணங்களைக் கொடுப்பதன் மூலம் மற்றவர்களையும் இதைப் பயிற்சி செய்ய வைக்கிறீர்கள், அல்லவா? எனவே, அனைத்தையும் சோதித்துப் பாருங்கள். நாள் முழுவதும் உங்களின் பெறுமதிமிக்க நேரம், அசையும் போதும் அனைத்தையும் செய்யும் போதும் மற்றவர்களுடன் உறவுமுறைகளைக் கொண்டிருக்கும் போதும் விலைமதிப்பற்ற முறையில் பயன்படுத்தப்படுகிறதா? இந்த நேரம் விலைமதிப்பற்றது என்பதனால், எண்ணங்கள் உங்களை சர்வசக்திவான்கள் ஆக்குகின்றன.

பாப்தாதா மீண்டும் மீண்டும் உங்களுக்குக் கூறுகிறார்: ஓ அதியன்பிற்குரிய பாப்தாதாவின் குழந்தைகளே, எனது இதயத்தில் வாழும் குழந்தைகளே, இப்போது உங்களின் வீணானவற்றின் கணக்கை முடித்து விடுங்கள். அனைத்தையும் பயனுள்ள முறையில் பயன்படுத்துங்கள். அனைத்தையும் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துவது என்றால் வெற்றி பெறுவதாகும். ஒரு விநாடியே கடந்து சென்றது என்று நினைக்காதீர்கள். ஒவ்வொரு விநாடியும் ஒவ்வோர் எண்ணமும் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்தும் வகையில் நீங்கள் நிச்சயமாக உங்களின் மீது கவனம் செலுத்த வேண்டும். முற்றுப்புள்ளி இடுவதைப் பொறுத்தவரை இந்தளவிற்கு நீங்கள் உங்களையே சோதித்துப் பாருங்கள். கவனயீனம் ஆகாதீர்கள்: ‘பாப்தாதா இதைக் கூறினார், ஆனால் நான் அதைப் புரிந்து கொள்ளவில்லை. அந்த வேளையில் நான் அதைப் பற்றிச் சிந்திக்கவில்லை’. காலம் மிக வேகமாகச் செல்கிறது, அது அவ்வாறுதான் போகும். பாப்தாதா இப்போது உங்கள் அனைவரிடமும் இருக்கும் கவனயீனத்தை நீக்க விரும்புகிறார். ‘எனக்குப் புரியவில்லை அல்லது நான் அதைப் பற்றி நினைக்கவில்லை’ என்பதை பாபா கேட்க விரும்பவில்லை. இப்போது, புதிய வருடம் வரப்போகிறது. எனவே, புது வருடம் ஆரம்பம் ஆகுவதற்கு முன்னர், பிராமண உலகில் இருந்து கவனயீனத்தையும் சோம்பேறித்தனத்தையும் முடித்துவிடுங்கள். வெவ்வேறு வகையான சோம்பேறித்தனங்கள் உள்ளன. இப்போது இந்த வருடம் இன்னமும் எஞ்சியிருக்கும் இந்த நேரத்தில் அதைப் பயிற்சி செய்ய ஆரம்பியுங்கள். பின்னர் புது வருடம் ஆரம்பம் ஆகியதும் தைரியத்தைக் கொண்டிருந்து, இந்த எண்ணத்தை பாப்தாதாவின் முன்னால் வைத்து, அதற்கு விடை கொடுத்து விடுங்கள். வருடத்துடன் கூடவே, இதற்கும் விடை கொடுங்கள். உங்களால் இதைக் கொடுக்க முடியுமா? உங்களால் இதைக் கொடுக்க முடியுமா? அதற்கு விடை கொடுக்க முடியும் என்பவர்கள் உங்களின் கைகளை உயர்த்துங்கள்! (அனைவரும் தமது கைகளை உயர்த்தினார்கள்) ஆஹா குழந்தைகளே! ஆஹா! உங்களின் கைகளை உயர்த்தியதன் மூலம் நீங்கள் பாப்தாதாவை மிகவும் களிப்படையச் செய்துள்ளீர்கள். பல குழந்தைகள் தாம் கைகளை உயர்த்திய ஏதாவது ஒன்றிற்கான பிரதிபலனைக் கொடுக்க வேண்டும் என்று நினைவில் வைத்திருக்கிறார்கள், ஆனால் சிலர் இதை நினைவு செய்வதில் கவனக்குறைவாக உள்ளார்கள் என்பதை பாப்தாதா பார்த்துள்ளார். நீங்கள் பாப்தாதாவுடன் மிக நல்ல இதயபூர்வமான உரையாடல்களைச் செய்கிறீர்கள்: ‘இது நடக்கும். பாபா, நீங்கள் பாருங்கள், இது இப்போதே நடக்கும், இது இப்போது நடக்கும்’. கவனயீனமாக இருக்கும் குழந்தைகளிடம் இருந்து இவற்றைக் கேட்கும்போது பாப்தாதா புன்னகை செய்கிறார். அவரால் வேறு என்னதான் செய்ய முடியும்? நல்லது. நீங்கள் அதைச் செய்யப் போவதாக நினைக்கிறீர்கள், நீங்கள் அதைச் செய்யப் போகின்றீர்கள்..... பலர் இவ்வாறு நினைக்கிறார்கள், ஆனால் அவர்கள் அதைச் செய்கிறார்களா இல்லையா என்பதைத் தங்களுக்குள் சோதிப்பதைப் பற்றி என்னவென்று சொல்வது? அவர்கள் கவனக்குறைவாக இருக்கிறார்கள்.

இன்று, உங்களின் நாடுகளிலும் உங்களின் இடங்களிலும் குழந்தைகளான உங்கள் அனைவராலும் மிகத் தெளிவாக அனைத்தையும் பார்க்கவும் கேட்கவும் முடிகிறது என்பதை பாப்தாதா கண்டார். தனிப்பட்ட முறையில் பாப்தாதாவின் முன்னால் வந்திருக்கும் குழந்தைகளான உங்களுக்கும் உங்களின் சொந்த இடங்களில் இருந்தவண்ணம் கேட்டும் பார்த்தும் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கும் பாப்தாதா கூறுகிறார்: இப்போது உங்களின் முயற்சிகள், உங்களின் எண்ணங்கள், சங்கமயுகத்தில் உங்களின் நேரம் என்பவற்றைக் கீழ்க்கோடிடுங்கள். அன்பெனும் பாடத்தில், குழந்தைகளான உங்களில் பெரும்பாலானோர் சித்தி அடைந்துள்ளீர்கள். அன்பின் அடிப்படையில் நீங்கள் அனைவரும் மிக நன்றாக முன்னேறுகிறீர்கள். அன்பினால், தந்தையின் அன்பின் பதிலை பாபா பெறுவதனால், நீங்கள் முன்னேறிச் செல்கிறீர்கள். ஆனால், நீங்கள் அன்பில் அனுபவசாலிகள் ஆகுவதைப் போல், நீங்கள் நினைவெனும் பாடத்திலும் பல பிறவிகளுக்கான உங்களின் பாவங்களை அழிப்பதிலும் மேலதிக கவனத்தைச் செலுத்த வேண்டும். ஏன்? உங்களின் பாவங்கள் அழிக்கப்பட்டால் மட்டுமே நீங்கள் தந்தையுடன் திரும்பிச் செல்வீர்கள். இல்லாவிட்டால், நீங்கள் அவரைப் பின்தொடர்ந்தே செல்வீர்கள். நீங்கள் நேசிக்கும் ஒரேயொருவர் உங்களை என்ன செய்யச் சொல்கிறாரோ, அதை நீங்கள் நிச்சயமாகச் செய்யும்போதே, தந்தை அன்பான பதிலை உணர்கிறார். குழந்தைகளான உங்களுக்குத் தந்தையின் மீது அன்பு இருப்பதனால், நாங்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே அவரின் ஆசை ஆகும். நீங்கள் தந்தை பிரம்மாவுடன் உங்களின் இராச்சியத்திற்குள் வந்தீர்கள். இராச்சியத்திற்குள் வருவது என்றால், அரச குடும்பத்தில் ஒருவர் ஆகுதல் என்று அர்த்தம். நீங்கள் சிம்மாசனத்தில் அமராமல் விடலாம், குறைந்தபட்சம் நீங்கள் அரச குடும்பத்தின் உறுப்பினர்களின் சகபாடிகள் ஆகுகிறீர்கள். இதை எவ்வாறு இனங்காண்பது என்று பாப்தாதா ஏற்கனவே உங்களுக்குக் கூறியுள்ளார். நீங்கள் வந்த நேரத்தில் இருந்து, இந்த ஞானத்தில் எவ்வளவு காலம் இருந்தாலும் அந்த நேரத்தில் இருந்து எப்போதும் பாப்தாதாவின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தீர்கள் என்றால், நீண்ட காலத்திற்கு இந்த இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கு, தமது பாதங்களைத் தூசியில் பதிக்காதவர்களுக்கு, அதற்கேற்ப, அவர்கள் அரச குடும்பத்துடன் நெருக்கமான உறவுமுறையில் வருவார்கள். அவர்கள் அரச குடும்பத்தில் ஒருவர் ஆகுவார்கள். உங்களுக்கு அன்பு இருக்கிறது, அன்பு வைத்திருப்பவர்கள், அந்த அன்பின் பொறுப்பை நிறைவேற்றுவதில் பின்தங்க மாட்டார்கள். இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர்கள், துவாபர, கலியுகங்களிலும் ஏதாவது உறவுமுறையில் இருப்பார்கள். அவர்கள் நெருக்கமாக இருப்பார்கள். இதனாலேயே, அன்பின் பொறுப்பை நிறைவேற்றுபவர்கள், சதா இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதுடன் பிறவி பிறவியாக அவர்களின் உரிமையைப் பெறுவார்கள். இதனாலேயே, பாப்தாதா ஒவ்வொரு குழந்தையின் மீதும் அன்பு வைத்திருக்கிறார். இந்தப் பாடத்தில் சித்தி அடைந்திருப்பதற்காக உங்களில் பெரும்பாலானோருக்கு பாபா ஒரு சான்றிதழை வழங்கி உள்ளார். நீங்கள் இப்போது நிச்சயமாக சகல பாடங்களிலும் சித்தி அடைய வேண்டும். நீங்கள் சித்தி அடைய வேண்டும், அத்துடன் நெருக்கமாகவும் (பாஸ்) இருக்க வேண்டும். அச்சா.

முதல் தடவை வந்திருக்கும் குழந்தைகளே, எழுந்து நில்லுங்கள்! முதல் தடவை வந்திருப்பவர்கள். வகுப்பில் அரைவாசிப் பேர் புதியவர்கள். வந்திருப்பவர்களை பாப்தாதா வரவேற்கிறார். பாராட்டுக்கள். முதல் தடவை இங்கே வந்திருப்பதற்குப் பாராட்டுக்கள். நீங்கள் பிந்தி வந்திருந்தாலும் ‘மிகவும் தாமதம்’ என்பதற்கு முன்னர் நீங்கள் வந்துவிட்டீர்கள். இப்போது, குறுகிய காலத்திற்குள் தீவிர முயற்சியாளர் ஆகுவதில் கவனம் செலுத்தி, நீங்கள் விரும்பிய அளவிற்கு உங்களின் எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்களின் தீவிர முயற்சிகளால் உங்களால் முன்னேறிச் செல்ல முடியும். ஏனென்றால், இப்போதும் முயற்சி செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. நீங்கள் விரும்பிய அளவிற்கு உங்களால் முன்னேறிச் செல்ல முடியும். பாப்தாதாவும் இந்த தெய்வீகக் குடும்பமும் நீங்கள் முன்னேறிச் செல்வதற்கு உதவி செய்யும் வகையில் அதிர்வலைகளை வழங்குவார்கள். ஆகவே, முன்னேறிச் செல்லுங்கள்! தைரியத்தைப் பேணுங்கள்! உங்களின் தைரியத்துடனும் பாப்தாதாவிடம் இருந்தும் குடும்பத்திடம் இருந்தும் உதவியுடனும் முன்னேறிச் செல்லுங்கள்! இவை அனைத்தும் சரிதானே? ஆம் என்று சொல்லுங்கள்! முன்னேறிச் செல்லுங்கள்! அச்சா.

மதுவனவாசிகள்: மதுவனத்தைச் சேர்ந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள். இந்த ஒன்றுகூடலைச் சிறிது பலமானதாக ஆக்கி உங்களின் சகபாடிகளை உருவாக்குங்கள். வேறு எதற்காகவும் சகபாடிகளை உருவாக்கிக் கொள்ளாதீர்கள். மதுவனத்தைச் சேர்ந்தவர்கள், இதற்காக ஒருவரை ஒருவர் தமது சகபாடிகள் ஆக்கி முதல் இலக்கத்தைக் கோரிக் கொள்ள வேண்டும். நீங்கள் இதைக் கோருவீர்களா? கடந்து சென்றது, கடந்ததாக இருக்கட்டும். என்ன நடந்ததோ, அனைவரும் அதைப் பற்றிக் கேட்டார்கள் அல்லது பார்த்தார்கள். மதுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கு மகத்தான பொன்னான வாய்ப்பு உள்ளது. அனைவரும் மதுவனத்தில் அடங்குகிறார்கள். மதுவனத்தைச் சேர்ந்தவர்கள் - இது பாண்டவ பவனத்தைச் சேர்ந்தவர்கள், வேறொரு இடத்தைச் சேர்ந்தவர்களை விட வேறானவர்கள் என்பது இதன் அர்த்தம் அல்ல, இல்லை. மதுவனம் என்றால் அனைவரும் ஒற்றுமையாக இருத்தல் என்று அர்த்தம். எனவே, மதுவனத்தைச் சேர்ந்த நீங்கள் இதைச் செய்வீர்கள் என்று நினைக்கிறீர்களா? இதைச் செய்யக் கூடியவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! அனைவரும் தமது கைகளை உயர்த்தினார்கள். உங்களில் சிலர் இதைச் செய்ய வேண்டும், இது பெரிய விடயம் அல்ல என்று நினைக்கிறீர்கள். ஏனென்றால், பாப்தாதாவையும் தாதிகளையும் கொண்டிருப்பது பெரிய விடயம் அல்ல. தாதிகள் என்ன நினைக்கிறீர்கள்? மதுவனத்தைச் சேர்ந்தவர்கள் முதலாம் இலக்கத்தினர் ஆவார்கள். இது நல்லது. இதை அனைவரையும் செய்யும்படியும் அனைவருக்கும் செய்து காட்டும்படியும் பாபா கூறியுள்ளார். எவ்வாறாயினும், மதுவனம் மதுவனமே. அனைவரும் இதற்காகவும் அதிர்வலைகளை வழங்க வேண்டும், அது நடக்கும். இது பெரியதொரு விடயம் அல்ல. தடைகளின் பெயரோ அல்லது சுவடோ இருக்கக் கூடாது. ஓகே, ஏதோவொன்று நடந்திருக்கலாம், ஒரு பரிமாற்றம் ஏற்பட்டிருக்கும். ஆனால் அது முடிந்து விட்டது. சிறிது காலத்திற்கு முன்னர், தாதி இங்கே இருந்தபோது, அனைவரும் ‘ஹா ஜி’ என்ற பாடத்தை உறுதியாக்கி இருந்தார்கள். எவருமே இல்லை எனச் சொல்லவில்லை, ஆனால் ஹா ஜி என்றே சொன்னார்கள். மிகவும் நல்லது. மதுவனம் முதல் இலக்கத்தில் வரும். பாப்தாதாவிற்கு மதுவனத்தின் போதை இருக்கிறது. அவருக்கு ஒவ்வொரு பிராந்தியத்தின் போதையும் உள்ளது. மதுவனம் இப்போது பாபாவின் முன்னால் உள்ளது. ஆனால் பாபா சகல பிராந்தியங்களைச் சேர்ந்தவர்களுக்கும் கூறுகிறார்: ஹா ஜி. இனிமையான ஆத்மாக்களே, இந்தப் பாடம் அனைவருக்கும் உறுதியாக உள்ளதா? இது உறுதியாக உள்ளதா? மதுவனம் இந்தப் பரிசைப் பெற்றுக் கொள்ள வேண்டும். உங்களால் ஒரு விநாடியில் கடந்து சென்றதைக் கடந்ததாக விட்டுவிட முடியும். ஓகே, நீங்கள் முயற்சியாளர்கள். ஏதோவொன்று நடந்தது. ஆனால் இப்போது, கடந்ததைக் கடந்ததாக ஆக்கிவிட்டுப் பறவுங்கள். பறப்பவர்கள், கடந்ததைக் கைவிட வேண்டும். அப்போது மட்டுமே அவர்களால் பறக்க முடியும். எனவே, மிகவும் நல்லது.

இப்போது, குஜராத் ஏதாவது புதியதைச் செய்ய வேண்டும். பாப்தாதா டெல்லியைச் சேர்ந்தவர்களுக்கும் ஏதாவது புதியதைச் செய்யும்படி கூறியுள்ளார். இந்தத் தேசத்தையும் வெளிநாடுகளையும் சேர்ந்த இளைஞர்கள் எதையோ ஆரம்பித்து உள்ளார்கள் என்றும் அதில் இருந்து நல்ல பெறுபேறைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் செய்திகளை பாப்தாதா பெற்றுள்ளார். இந்தக் கண்டுபிடிப்பு ஆரம்பித்து மட்டுமே உள்ளது. ஆனால் பாரதமும் வெளிநாடுகளும் ஒன்றாகச் சேர்ந்து அற்புதங்களைச் செய்ய முடியும். நீங்கள் இப்போதுதான் ஆரம்பித்துள்ளீர்கள். டெல்லியைச் சேர்ந்தவர்கள் தமது தைரியத்தை நன்றாகப் பேணியுள்ளார்கள். நீங்கள் ஆரம்பித்துள்ளீர்கள். இது உலகம் முழுவதும் பரவுமாயின், வெளிநாடுகளும் பாரதமும் உலகின் முன்னால் ஒரு பிராமணக் குடும்பம் ஆகி, உலகையே ஒன்றுபடுத்தும். இது ஏற்கனவே ஆரம்பித்து விட்டது. எவ்வாறாயினும், இப்போது பெரிய நிகழ்ச்சிகளைச் செய்யுங்கள். அதில் பிரதானமான நாடுகளைச் சேர்ந்தவர்கள் வரவேண்டும். அப்போது அதன்மூலம் சகோதர, சகோதரிகள் அனைவரும் ஒரேயொரு தந்தையின் குழந்தைகள் என்று உலகில் பிரபல்யம் அடைவார்கள். சகோதரத்துவம் மற்றும் சகோதரித்துவம் தொடர்ந்து பரவ வேண்டும். ஒரே மேடையில், வெவ்வேறு இடங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும் விசேடமான அனுபவத்தைப் பெற வேண்டும். நீங்கள் அனைவரும் இதற்கான திட்டங்களைச் செய்கிறீர்கள். நீங்கள் இப்போது எல்லையற்றதற்குள் செல்கிறீர்கள். இது இறை குடும்பம் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். இது பிரபல்யம் அடைய வேண்டும். வருகின்ற அனைவரும் சேவை செய்கிறார்கள். நீங்கள் உங்களின் சொந்த முயற்சிகளைச் செய்கிறீர்கள், அத்துடன் இந்த இறை பணியையும் செய்கிறீர்கள். இதுவும் உலகில் பிரபல்யம் இடையும். இது ஒரு குடும்பம் ஆகும். அச்சா.

பாப்தாதா இப்போது எங்கும் உள்ள குழந்தைகளான உங்கள் அனைவரையும் பாராட்டுகிறார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணிநேரமும் முன்னேறிச் செல்வதற்குப் பாராட்டுக்கள். காலம் உங்களுக்காகக் காத்திருக்கிறது. நீங்கள் காலத்திற்காகக் காத்திருக்கக்கூடாது. உங்களால் காலத்தின் நிறைவை நீங்கள் விரும்பியபடி நெருக்கமாகக் கொண்டு வர முடியும். காலம் வரும்போது நீங்கள் தயாராக இருப்பீர்கள் என்று பிராமணர்களான நீங்கள் நினைக்கக்கூடாது. நீங்களே காலத்தை நெருக்கமாகக் கொண்டு வரவேண்டும். காலம் தந்தையிடம் சொல்கிறது: காலமான என்னை இப்போது பிராமண ஆத்மாக்களே நெருக்கமாகக் கொண்டு வரவேண்டும். சடப்பொருள் தந்தையிடம் சொல்கிறது: இப்போது நிறைவினை நெருக்கமாகக் கொண்டு வாருங்கள். எனவே, பாப்தாதா என்ன பதிலை வழங்குவது? அவர் என்ன பதில் சொல்வார்? காலம் இப்போது பெரும்பாலும் இங்கே வந்துவிட்டது என்று அவர் சொல்வதா? உங்களின் சார்பாக அவர் இந்தப் பதிலைச் சொல்லட்டுமா? கூறுங்கள்! அவர் என்ன பதிலைச் சொல்வார்? இப்போது நிறைவை நெருக்கமாகக் கொண்டு வாருங்கள். அதாவது, உங்களை சம்பூரணமாகவும் முழுமையாகவும் ஆக்குங்கள். ஏனென்றால், பாப்தாதா தனியே திரும்பிச் செல்ல மாட்டார். அவர் குழந்தைகளான உங்களுடனேயே திரும்பிச் செல்வார். எனவே, ஒரு திகதியை நிச்சயம் செய்து கொள்ளுங்கள்! எப்போதளவில்? உங்களுக்குச் சில பணிகள் கொடுக்கப்பட்டுள்ளன, எனவே இப்போது அதை உங்களுக்கு இடையே கலந்துரையாடுங்கள். பாப்தாதா பஞ்சபூதங்களுக்கும் என்ன பதிலைச் சொல்வார்? பஞ்சபூதங்களும் மிகவும் துயரத்துடன் இருக்கின்றன. சந்தோஷம் அற்றிருக்கும் ஆத்மாக்கள் தமது மனங்களில் அழுகிறார்கள். இப்போது உங்களின் மனங்களால் செய்யும் சேவையை அதிகரியுங்கள். நீங்கள் உங்களின் மனங்களால் சேவை செய்கிறீர்கள். ஆனால் இது தொடர்ந்து அதிகரிக்க வேண்டும். இப்போது இதை மேலும் அதிகரியுங்கள். ஏனென்றால் பஞ்சபூதங்களும் சந்தோஷமற்ற ஆத்மாக்களும் தந்தையிடம் வந்து துயரத்துடன் அழுகிறார்கள். எனவே, நீங்கள் அவர்களுக்கு அமைதி மற்றும் சந்தோஷத்தின் அனுபவத்தை வழங்க வேண்டும். அவர்களுக்கு ஒரு விநாடி அமைதி தேவையாக உள்ளது: எங்களுக்குச் சிறிதளவு அமைதியைக் கொடுங்கள்! ஒருவர் பசியாக இருக்கும்போது, அவருக்கு உண்பதற்குச் சிறிதளவாயினும் ஏதாவது தேவைப்படும். எனவே இப்போது, உங்களின் மனங்களால் செய்யும் சேவையை அதிகரியுங்கள். நீங்கள் வார்த்தைகளால் சேவை செய்கிறீர்கள். பாப்தாதா அதையிட்டு மகிழ்ச்சி அடைகிறார். அச்சா. பாப்தாதா உங்களுக்கு வழங்கிய உங்களின் வீட்டுவேலையை நினைவில் வைத்திருந்து மற்றவர்களுக்கும் அதை நினைவூட்டுங்கள். அச்சா.

பாப்தாதாவின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் குழந்தைகளுக்கு, சதா உலக நன்மை என்ற பணியில் முன்னேறுகின்ற குழந்தைகளுக்கு, திருஷ்டி அளிப்பதுடன் கூடவே பாப்தாதா தனது இதயபூர்வமாக அன்பை உங்களுக்கு வழங்குவதுடன் உங்களைப் பாராட்டுகிறார். பாராட்டுக்கள். வெகு தொலைவில் இருந்தாலும் ஒவ்வொரு குழந்தையும் தன்னைத் தனிப்பட்ட முறையில் பாபாவின் முன்னால் அமர்ந்திருப்பதாகவே அனுபவம் செய்கிறார். குழந்தைகள் அனைவரையும் தனது இதயத்தில் அமிழ்த்திய வண்ணம் பாப்தாதா கூறுகிறார்: நமஸ்தே, நமஸ்தே.

ஆசீர்வாதம்:
நீங்கள் அன்பு மற்றும் சக்தியின் சமநிலை ரூபமாகச் சேவை செய்வதன் மூலம் வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.

நீங்கள் சதா ஒரு கண்ணில் தந்தையின் மீது அன்பையும் மறுகண்ணில் தந்தையால் உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள கடமையின் (சேவை) விழிப்புணர்வையும் வைத்திருக்கிறீர்கள். அதேபோல், அன்பு ரூபமாக இருப்பதைப் போன்றே, இப்போது சக்தி ரூபமாகவும் ஆகுங்கள். அன்புடன்கூடவே, உங்களின் வார்த்தைகள் எத்தகைய சக்தியால் நிரம்பி இருக்க வேண்டும் என்றால், உங்களால் எவரின் இதயத்தையும் ஊடுருவிச் செல்லக் கூடியதாக இருக்க வேண்டும். ஓர் அம்மா தனது குழந்தைக்குத் தேவைப்படும் வார்த்தைகளால் கற்பிப்பார். அவரின் அன்பினால் அந்த வார்த்தைகள் கடுமையானதாகவோ அல்லது கசப்பானதாகவோ உணரப்பட மாட்டாது. அதேபோல், இந்த உண்மையான ஞானத்தைத் தெளிவான வார்த்தைகளால் அனைவருக்கும் கூறுங்கள். ஆனால் அந்த வார்த்தைகள் அன்பினால் நிறைந்திருக்க வேண்டும். அதன் மூலம் நீங்கள் வெற்றி சொரூபம் ஆகுவீர்கள்.

சுலோகம்:
சர்வசக்திவான் தந்தையை உங்களின் சகபாடி ஆக்கிக் கொள்ளுங்கள், நீங்கள் வருந்துவதில் இருந்து விடுதலை அடைவீர்கள்.

அவ்யக்த சமிக்கை: எரிமலை யோகத்தில் இருந்தவண்ணம் சக்திவாய்ந்த நினைவை அனுபவம் செய்யுங்கள்.

எவ்வாறு சூரியனின் கதிர்கள் எங்கும் பரவுகிறதோ, அவ்வாறே, மாஸ்ரர் சர்வசக்திவான் என்ற ஸ்திதியால் எங்கும் சக்திகள் மற்றும் சிறப்பியல்புகளின் கதிர்களைப் பரப்புவதை அனுபவம் செய்யுங்கள். இதற்கு, உங்களை இந்த சுயமரியாதையின் விழிப்புணர்வு ஆசனத்தில் ஸ்திரப்படுத்திக் கொள்ளுங்கள்: நான் மாஸ்ரர் சர்வசக்திவான் ஆத்மா, நான் தடைகளை அழிப்பவன். உங்களின் யோகம் எரிமலையாக இருக்க வேண்டும். அப்போது எந்தவொரு தடையும் உங்களின் முன்னால் வர முடியாது.