06.05.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் முழுமையாகத் தூய்மை ஆகுகின்ற பொழுதே, உங்களின் அர்ப்பணம் ஏற்றுக் கொள்ளப்படும். நீங்கள் எந்தளவிற்குத் தூய்மை ஆகியுள்ளீர்கள் என நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் இதயத்தை வினவ வேண்டும்.

கேள்வி:
இந்நேரத்தில் குழந்தைகளாகிய நீங்கள் ஏன் உங்களைப் பெரும் சந்தோஷத்துடன் அர்ப்பணம் செய்கிறீர்கள்?

பதில்:
ஏனெனில், இந்நேரத்தில் உங்களைத் தந்தைக்கு அர்ப்பணிப்பதனால், அவர் தன்னை 21 பிறவிகளுக்கு உங்களுக்கு அர்ப்பணிப்பார் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்நேரத்தில் மனிதர்கள் அனைவரும் அழிவற்ற உருத்திர ஞானயாகத்தில் அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இதனாலேயே நீங்கள் உங்களின் சரீரங்கள், மனங்கள், செல்வத்தைப் பெரும் சந்தோஷத்துடன் முற்கூட்டியே அர்ப்பணித்து, உங்களிடமுள்ள அனைத்தையும் ஒரு தகுதியான முறையில் பயன்படுத்துகின்றீர்கள்.

பாடல்:
உங்கள் இதயக் கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பாருங்கள்!

ஓம் சாந்தி.
கடவுள் சிவன் பேசுகின்றார். அவர் நிச்சயமாகத் தனது குழந்தைகளுக்கு மாத்திரமே இந்த ஞானத்தையும், ஸ்ரீமத்தையும் கொடுக்கின்றார்: ஓ குழந்தைகளே! ஒ ஆத்மாக்களே! ‘உயிர் சரீரத்தைப் பிரியும் பொழுது, ‘ஆத்மா சரீரத்தை விட்டுச் செல்லும் பொழுது’ இந்த இரண்டுமே ஒன்றுதான். ஓ மனிதரே! அல்லது ஓ குழந்தையே! உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு பாவமும், புண்ணியமும் இருக்கின்றன என்று நீங்கள் பார்த்தீர்களா? எவ்வாறு அரைக் கல்பத்திற்குப் புண்ணியமும், அரைக் கல்பத்திற்குப் பாவமும் இருக்கின்றன என்ற கணக்கு உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. நீங்கள் உங்களுடைய புண்ணியம் எனும் ஆஸ்தியை, இராமர் என்று அழைக்கப்படுகின்ற, தந்தையிடம் இருந்து பெறுகின்றீர்கள். அசரீரியானவரே இராமர் என்று அழைக்கப்படுகின்றார். இது சீதைக்கு உரியவரைக் குறிப்பிடவில்லை. நீங்கள் உண்மையில் அரைக் கல்பத்திற்குத் தூய புண்ணியாத்மாக்களாக இருந்தீர்கள் என்பதும், பின்னர் அரைக் கல்பத்திற்குப் பாவாத்மாக்கள் ஆகினீர்கள் என்பதும் பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்களான, பிராமணர்கள் ஆகியுள்ள குழந்தைகளான உங்கள் புத்தியில் இப்பொழுது பிரவேசிக்கின்றன. நீங்கள் இப்பொழுது, தூய புண்ணியாத்மாக்கள் ஆகவேண்டும். நீங்கள் எந்தளவிற்குப் புண்ணியாத்மா ஆகியுள்ளீர்கள் என நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் இதயத்தை வினவ முடியும். நீங்கள் எவ்வாறு பாவாத்மாவில் இருந்து ஒரு புண்ணியாத்மா ஆகலாம் என்று தந்தையும் உங்களுக்கு விளங்கப்படுத்தி உள்ளார். யாகங்கள் வளர்ப்பதாலோ அல்லது தபஸ்யா போன்றவற்றைச் செய்வதாலோ, உங்களால் புண்ணியாத்மாக்களாக முடியாது. அது பக்தி மார்க்கமாகும். அதனைச் செய்வதன் மூலம் எந்த மனிதரும் ஒரு புண்ணியாத்மா ஆகமுடியாது. நீங்கள் புண்ணியாத்மாக்கள் ஆகுகின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். அசுர கட்டளைகளைப் பின்பற்றுவதன் மூலம் பாவாத்மாக்கள் ஆகுவதால், நீங்கள் ஏணியில் தொடர்ந்தும் கீழிறங்கினீர்கள். நீங்கள் எந்தளவு புண்ணியாத்மாக்களாகி, சந்தோஷம் எனும் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள் என உங்களில் எவருமே அறிய மாட்டீர்கள். மனிதர்கள் அனைவரும் தந்தையை நினைவுசெய்து, அவரைப் பரமாத்மா பரமதந்தை என்று அழைக்கின்றார்கள். பிரம்மா, விஷ்ணு, சங்கரரைக் கடவுள் என அழைக்க முடியாது. வேறு எவருமே கடவுள் என அழைக்கப்பட முடியாது. இந்நேரத்தில் நீங்கள் பிரஜாபிதா பிரம்மாவைப் பற்றிப் பேசிய பொழுதிலும் பக்தி மார்;க்கத்தில் உள்ள அனைவருமே மக்களின் தந்தையை (பிரஜாபிதா) நினைவு செய்வதில்லை. அசரீரியான தந்தையே அனைவராலும் நினைவு செய்யப்படுகின்றார். ஓ தந்தையாகிய கடவுளே! ஓ பகவானே (கடவுள்)! இவையே அவர்களுடைய வாயிலிருந்து வெளிப்படுகின்ற வார்த்தைகள். அவர்கள் ஒரேயொருவரை மாத்திரம் நினைவு செய்கின்றனர். மனிதர்களால் என்றுமே தங்களைத் தந்தையாகிய கடவுள் என்றழைக்கவோ அல்லது பிரம்மா, விஷ்ணு, சங்கரரும் தங்களைத் தந்தையாகிய கடவுள் என அழைக்கவோ முடியாது. அவர்களுக்குச் சரீரப் பெயர்கள் உள்ளன. தந்தையாகிய கடவுள் ஒருவர் மாத்திரமே இருக்கின்றார். அவருக்கெனச் சொந்தமாக ஒரு சரீரமில்லை. பக்தி மார்க்கத்தில் மக்கள் சிவனைப் பெருமளவில் வழிபடுகின்றார்கள். சிவபாபா இந்தச் சரீரத்தின் மூலம் “ஓ குழந்தைகளே!” என உங்களுடன் பேசுகின்றார் என்பதைக் குழந்தைகளான நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். அவர் இதை அதிகளவு அன்புடன் கூறுகின்றார்! தானே தூய்மையாக்குபவரும், அனைவருக்கும் சற்கதி அருள்பவரும் என்பதை அவர் அறிவார். மக்கள் தந்தையின் புகழ் பாடுகின்றனர், ஆனால் அவர் 5000 வருடங்களின் பின்னர் வருகின்றார் என அவர்கள் அறிய மாட்டார்கள். அவர் நிச்சயமாகக் கலியுக இறுதியின் பொழுதே வருகின்றார். இப்பொழுது இது கலியுக இறுதி என்பதால், அவர் நிச்சயமாக வந்து விட்டார். நீங்கள் ஸ்ரீமத்தைப் பெறுகின்றீர்கள், ஆனால் அது ஸ்ரீகிருஷ்ணரிடம் இருந்து வருவதில்லை. ஸ்ரீகிருஷ்ணரின் ஆத்மாவும் ஸ்ரீமத்தைப் பின்பற்றியதால், தேவர் ஆகினார். 84 பிறவிகள் எடுத்ததனால், நீங்கள் இப்பொழுது அசுர கட்டளைகளைப் பின்பற்றுகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: உங்கள் சக்கரம் முடிவடைய உள்ளபொழுதே, நான் வருகின்றேன். ஆரம்பத்தில் வந்த நீங்களே, இப்பொழுது முற்றிலும் உக்கிய நிலையில் உள்ளீர்கள். ஒரு மரம் முற்றிலும் உக்கிய நிலையை அடைகின்ற பொழுது, முழு மரமுமே அவ்வாறாகி விடுகின்றது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் தமோபிரதான் ஆகுவதால், அனைவரும் தமோபிரதானாகி விட்டார்கள். இதுவே மனித உலகின் பலவித மதங்களைக் கொண்ட விருட்சம் ஆகும். இது தலைகீழான விருட்சம் எனவும் அழைக்கப்படுகின்றது; இதன் விதை மேலே உள்ளது. முழு விருட்சமும் அந்த விதையானவரில் இருந்தே வெளிப்படுகின்றது. மக்கள் கூறுகின்றனர்: ஓ தந்தையாகிய கடவுளே! ஆத்மாக்களே இதைக் கூறுகின்றார்கள். ஒவ்வோர் ஆத்மாவினது பெயரும் ஆத்மாவே. ஓர் ஆத்மா ஒரு சரீரத்தினுள் பிரவேசிக்கும் பொழுது, சரீரத்துக்கு ஒரு பெயர் கொடுக்கப்படுகின்றது. இந்த நாடகம் தொடர்கின்றது. ஆத்மாக்களின் உலகில் எந்த நாடகம் இல்லை. இதுவே நாடகத்திற்கான இடமாகும். இங்கேயே நாடகத்திற்காக ஒளி மற்றும் அனைத்தும் உள்ளன. ஆத்மாக்கள் வசிக்கும் இடத்தில் சூரியன், சந்திரன் அல்லது நாடகத்தின் எந்தச் செயற்பாடுகளும் இருப்பதில்லை. பகலும், இரவும் இங்கேயே உள்ளன. சூட்சும உலகிலோ அல்லது அசரீரி உலகிலோ இரவோ அல்லது பகலோ இருப்பதில்லை. இதுவே கர்ம ஷேத்திரம். இங்கேயே மக்கள் நல்ல, தீய செயல்களைச் செய்கின்றனர். சத்திய, திரேதா யுகங்களில் நல்ல செயல்களே இருக்கின்றன. ஏனெனில், ஐந்து விகாரங்கள் என்ற இராவணனின் இராச்சியம் அங்கு இருப்பதில்லை. தந்தை இங்கே அமர்ந்திருந்து செயல், நடுநிலைச் செயல், பாவச்செயலின் இரகசியங்களை உங்களுக்குக் கூறுகின்றார். செயல்கள் செய்யப்படவே வேண்டும். ஏனெனில் இது கர்ம ஷேத்திரம் ஆகும். சத்தியயுகத்தில் மக்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் நடுநிலையானவை. அங்கே இராவண இராச்சியம் இல்லை. அது சுவர்க்கம் என அழைக்கப்படுகின்றது. இந்நேரத்தில் சுவர்க்கம் எதுவுமில்லை. சத்தியயுகத்தில் ஒரு பாரதம் மாத்திரமே இருந்தது; அங்கே வேறு எந்தத் தேசமும் இருக்கவில்லை. கூறப்பட்டுள்ளது: சுவர்க்கக் கடவுளாகிய தந்தை. எனவே தந்தை நிச்சயமாகச் சுவர்க்கத்தைப் படைக்கின்றார். பாரதமே புராதன தேசம் என்பதை அனைத்துத் தேசத்தினரும் அறிவார்கள். முதலில் பாரதம் மாத்திரமே இருந்தது என எவருமே அறியார். அது இப்பொழுது அவ்வாறு இல்லை. இது 5000 வருடங்களுக்கு முந்திய விடயமாகும். கிறிஸ்துவுக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் பாரதம் சுவர்க்கமாக இருந்தது எனக் கூறப்பட்டுள்ளது. படைப்பவர் நிச்சயமாகப் படைப்பைப் படைக்கின்றார். தமோபிரதான் புத்திகளைக் கொண்டுள்ளதால், அவர்கள் இந்தளவையேனும் புரிந்து கொள்ளவில்லை. பாரதமே அனைத்திலும் அதியுயர்ந்த தேசமாகும். அது மனித உலகின் முதல் சந்ததியாகும். இந்த நாடகம் நிச்சயிக்கப்பட்டது. செல்வந்தர்கள் ஏழைகளுக்கு உதவுகின்றனர். இது ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்தும் வந்துள்ளது. பக்திமார்க்கத்திலும் செல்வந்தர்கள் ஏழைகளுக்குத் தானம் செய்கின்றார்கள். எவ்வாறாயினும், இது தூய்மையற்ற உலகம். மக்களால் என்ன தானங்கள் கொடுக்கப்பட்டாலும், அதில் தூய்மை அற்றவர்களே தானம் செய்வதுடன், தூய்மை அற்றவர்களே அதைப் பெறுகின்றனர். தூய்மையற்றவர்கள், தூய்மை அற்றவர்களுக்குத் தானம் செய்வதால் என்ன பலனைப் பெறுவார்கள்? அவர்கள் எத்தனை தானம் செய்தால் என்ன, எந்தளவு புண்ணியம் செய்தால் என்ன, அவர்கள் தொடர்ந்தும் கீழிறங்கியே வந்துள்ளார்கள். பாரதம் தானம் செய்ததைப் போன்று, வேறு எந்த நாடும் செய்யவில்லை. நீங்கள் இப்பொழுது உங்களிடம் உள்ள உங்கள் சரீரம், மனம், செல்வம் அனைத்தையும் இதில் அர்ப்பணம் செய்கின்றீர்கள். இதுவே சுய இராச்சியத்தைப் பெறுவதற்காகக் குதிரை அர்ப்பணிக்கப்பட்ட, அழிவற்ற உருத்திர ஞானயாகம் என்று அழைக்கப்படுகிறது. ஆத்மா கூறுகின்றார்: இந்தப் பழைய சரீரமும் இங்கே அர்ப்பணிக்கப்பட வேண்டும். முழு உலகிலுள்ள மக்களும் இதில் அர்ப்பணிக்கப்படுவார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே, நாங்கள் ஏன் எங்களை பாபாவுக்குச் சந்தோஷத்துடன் அர்ப்பணிக்கக் கூடாது? நீங்கள் தந்தையை நினைவு செய்கின்றீர்கள் என்பதை ஆத்மாக்களான நீங்கள் அறிவீர்கள். நீங்கள் கூறுகின்றீர்கள்: பாபா, நீங்கள் வருகின்ற பொழுது, நான் என்னை உங்களுக்கு அர்ப்பணிப்பேன். ஏனெனில் நான் என்னை உங்களுக்கு அர்ப்பணிக்கும் பொழுது, நீங்கள் உங்களை 21 பிறவிகளுக்கு எனக்கு அர்ப்பணிப்பீர்கள். இது ஒரு பேரமாகும். நான் என்னை உங்களுக்கு அர்ப்பணிக்கின்றேன், நீங்கள் உங்களை எனக்கு 21 தடவைகள் அர்ப்பணிக்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையாகும் வரை நான் உங்கள் அர்ப்பணத்தை ஏற்க மாட்டேன். தந்தை கூறுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள், ஆத்மாக்களான நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். தந்தையை மறப்பதனால், நீங்கள் தூய்மை அற்றவர்களாகவும், சந்தோஷம் அற்றவர்களாகவும் ஆகிவிட்டீர்கள்! மக்கள் சந்தோஷம் அற்றிருக்கும் பொழுது, அடைக்கலம் தேடுகின்றார்கள். நீங்கள் இராவணனால் 63 பிறவிகளுக்குச் சந்தோஷம் அற்றவர்கள் ஆக்கப்பட்டீர்கள். இதில் ஒரு சீதையைப் பற்றிய கேள்வி மாத்திரம் இருப்பதில்லை; மனிதர்கள் அனைவருமே சீதைகளே. எவ்வாறு சீதை இராவணனால் துன்பக்குடிலில் இடப்பட்டார் என்னும் ஒரு கதையை அவர்கள் இராமாயணத்தில் எழுதியுள்ளார்கள். உண்மையில் அவை அனைத்தும் இந்த நேரத்தையே குறிப்பவை. அனைவரும் ஐந்து விகாரங்கள் எனும் இராவணனின் சிறையில் இருக்கின்றனர். இதனாலேயே அவர்கள் துன்பத்தில் அழைக்கின்றனர்: எங்களை இதிலிருந்து விடுவியுங்கள்! இது ஒருவரைப் பற்றிய கேள்வியல்ல. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: முழு உலகமும் இராவணனின் சிறையில் உள்ளது. இது இராவண இராச்சியமாகும். தங்களுக்கு இராம இராச்சியம் வேண்டுமெனக் காந்திஜியும், ஏனைய அனைவரும் கூறினார்கள். சந்நியாசிகள் என்றுமே தங்களுக்கு இராம இராச்சியம் வேண்டும் எனக் கூறுவதில்லை. பாரத மக்களே இதைக் கூறுகின்றனர். இந்த நேரத்தில் ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் இல்லை. ஏனைய அனைத்துக் கிளைகளும் உள்ளன. சத்தியயுகம் இருந்த பொழுது அங்கே ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் ஒன்றே அந்நேரத்தில் இருந்தது. அந்தப் பெயர் மாறி விட்டது. அவர்கள் தங்களுடைய சொந்தத் தர்மத்தை மறந்து, ஏனைய மதங்களுக்கு மாறிவிட்டார்கள். பலர் ஏனைய மதங்களுக்கு மாற்றப்பட்டதால், இருந்திருக்க வேண்டியதை விடவும் இந்துக்களின் சனத்தொகை குறைவாகவே உள்ளது. இதனாலேயே பாரத மக்களின் சனத்தொகை குறைவடைந்து விட்டது. இல்லையெனில் பாரத மக்களின் சனத்தொகையே மிகப்பெரியதாக இருந்திருக்கும். அவர்கள் பல மதங்களுக்கும் மாற்றப்பட்டுள்ளார்கள். தந்தை கூறுகின்றார்: உங்களுடைய ஆதி சனாதன தேவிதேவதா தர்மமே அனைத்திலும் உயர்வானது. நீங்கள் சதோபிரதானாக இருந்தீர்கள், பின்னர் மாற்றம் அடைந்து, தமோபிரதான் ஆகினீர்கள். நீங்கள் அழைத்த, தூய்மையாக்குபவரான, ஞானக்கடல் இப்பொழுது நேரடியாகவே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதைக் குழந்தைகளான நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். அவரே ஞானக்கடலும், அன்புக்கடலும் ஆவார். கிறிஸ்துவை அதேபோன்று புகழ முடியாது. ஸ்ரீகிருஷ்ணரையும் ஞானக்கடல் அல்லது தூய்மையாக்குபவர் என்று அழைக்க முடியாது. ஒரேயொரு கடலே இருக்கின்றார். நான்கு திசைகளிலும் சுற்றிவர ஒரு கடலே உள்ளது; இரண்டு கடல்கள் இல்லை. இது மனித உலகின் நாடகமாகும். ஒவ்வொருவரும் இதில் தத்தமது சொந்தப் பாகத்தைக் கொண்டுள்ளார். தந்தை கூறுகின்றார்: எனது கடமை ஏனையோரின் கடமையில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. நானே ஞானக்கடல். நீங்கள் என்னைத் தூய்மையாக்குபவர் என்று அழைக்கின்றீர்கள். பின்னர் நீங்கள் என்னை விடுதலையாக்குபவர் எனவும் அழைக்கின்றீர்கள். அவர் எதிலிருந்து உங்களை விடுதலை ஆக்குகின்றார்? எவருமே இதையும் அறியார். நீங்கள் சத்திய, திரேதா யுகங்களில் மிகவும் சந்தோஷமாக இருந்தீர்கள் என்பதை அறிவீர்கள். அது சுவர்க்கம் என்று அழைக்கப்பட்டது. இது இப்பொழுது நரகமாகும், இதனாலேயே அனைவரும் அழைக்கின்றனர்: எங்களைத் துன்பத்திலிருந்து விடுதலையாக்கி, சந்தோஷ பூமிக்கு அழைத்துச் செல்லுங்கள்! சந்நியாசிகள் ஒருபொழுதும் இன்னார், இன்னார் சுவர்க்கவாசி ஆகிவிட்டார் எனக் கூறுவதில்லை. அவர்கள் இன்னார், இன்னார் அப்பாலுள்ள தாமமாகிய, நிர்வாணாவுக்குச் சென்று விட்டார்கள் எனறே கூறுகின்றார்கள். வெளிநாடுகளிலும் அவர்கள் கூறுகின்றனர்: இன்னார், இன்னார் சுவர்க்கத்திற்குச் சென்று விட்டார். அந்த ஆத்மா தந்தையாகிய கடவுளிடம் சென்று விட்டதாக அவர்கள் நம்புகிறார்கள். ஏனெனில் உண்மையில் சுவர்க்கம் இருந்ததாலேயே அவர்கள் தந்தையாகிய, சுவர்க்கக் கடவுளைப் பற்றிப் பேசுகின்றார்கள். அது இப்பொழுது இல்லை. நரகத்திற்குப் பின்னர் சுவர்க்கம் இருக்க வேண்டும். தந்தையாகிய கடவுள் சுவர்க்கத்தை ஸ்தாபிப்பதற்கு இங்கேயே வரவேண்டும். சூட்சும உலகிலோ அல்லது அசரீரி உலகிலோ சுவர்க்கம் இல்லை. தந்தை நிச்சயமாக இங்கே வரவேண்டும். தந்தை கூறுகின்றார்: நான் வந்து சடப்பொருளின் ஆதாரத்தை எடுக்கின்றேன். நான் மனிதர்கள் பிறப்பதைப் போன்று பிறப்பு எடுப்பதில்லை. நான் ஒரு கருப்பையில் பிரவேசிப்பதில்லை. நீங்கள் ஒவ்வொருவரும் கருப்பையில் பிரவேசிக்கின்றீர்கள். சத்திய யுகத்தில் கருப்பை ஒரு மாளிகை போன்றுள்ளது. ஏனெனில் தண்டனை பெறும்வகையில், அங்கே எந்தப் பாவச்செயல்களும் செய்யப்படுவதில்லை. இதனாலேயே அது கருப்பை மாளிகை என அழைக்கப்படுகின்றது. இங்கே ஆத்மாக்கள் பாவச்செயல்கள் செய்வதால், தண்டனையை அனுபவம் செய்ய வேண்டியுள்ளது. இதனாலேயே கருப்பைச் சிறை என அழைக்கப்படுகின்றது. இங்கே இராவண இராச்சியத்தில் மக்கள் தொடர்ந்தும் பாவம் செய்கின்றார்கள். இது பாவாத்மாக்களின் உலகமாகும். அது புண்ணியாத்மாக்களின் உலகமாகிய சுவர்க்கமாகும். ஸ்ரீகிருஷ்ணர் அரசமிலையில் மிதந்து வந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இவ்வாறே அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் புகழைக் காட்டுகின்றார்;கள். சத்தியயுகத்தில், கருப்பையில் எவ்விதமான துன்பமும் இல்லை. தந்தை உங்களுக்குச் செயல், நடுநிலையான செயல், பாவச்செயலின் தத்துவத்தை விளங்கப்படுத்தி உள்ளார். அவர்கள் கீதை என்ற சமயநூலை இதிலிருந்தே எழுதினார்கள். ஆனால், கடவுள் சிவன் பேசுகின்றார் என்பதற்குப் பதிலாக, அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் பெயரைப் பயன்படுத்தி உள்ளார்கள். நீங்கள் எல்லையற்ற தந்தையிடம் இருந்து எல்லையற்ற சந்தோஷம் எனும் உங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள் என்பதை இப்பொழுது அறிவீர்கள். பாரதம் இப்பொழுது இராவணனால் சபிக்கப்பட்டுள்ளது, இதனாலேயே அது மிகவும் சீரழிந்தாகி விட்டது. இந்தப் பெரிய சாபமும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தந்தை வந்து ஆசீர்வாதங்களைக் கொடுக்கின்றார். நீங்கள் நீண்ட ஆயுளை உடையவராக இருப்பீர்களாக! நீங்கள் குழந்தைகளைக் கொண்டிருப்பீர்களாக! நீங்கள் செல்வந்தர்களாக இருப்பீர்களாக! அவர் சகலவிதமான சந்தோஷம் எனும் உங்களின் ஆஸ்தியை உங்களுக்குக் கொடுக்கின்றார். அவர் வந்து உங்களுக்குக் கற்பிக்கின்றார். நீங்கள் இதனைக் கற்பதனால், தேவர்கள் ஆகுகின்றீர்கள். புதிய படைப்பு படைக்கப்படுகின்றது. பிரம்மாவின் மூலம் தந்தை உங்களைத் தனக்குச் சொந்தம் ஆக்குகின்றார். பிரஜாபிதா பிரம்மா நினைவு கூரப்படுகின்றார். நீங்கள் பிரம்மாகுமார், குமாரிகளான, அவரின் குழந்தைகள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் பாட்டனாரின் ஆஸ்தியைத் தந்தையின் மூலம் கோருகின்றீர்கள். நீங்கள் முன்னரும் அதைக் கோரினீர்கள். தந்தை இப்பொழுது மீண்டும் வந்துள்ளார். தந்தையின் குழந்தைகள் தந்தையிடமே செல்ல வேண்டும். எவ்வாறாயினும் மனித உலகம் பிரஜாபிதா பிரம்மாவின் மூலம் ஸ்தாபிக்கப்பட்டதாக நினைவு கூரப்படுகின்றது. இது இங்கேயே இடம்பெற வேண்டும். ஆத்மாக்கள் என்ற ரீதியில் நீங்கள் சகோதரர்கள் என்று கூறுகின்றீர்கள். நீங்கள் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் ஆகும்பொழுது, நீங்கள் சகோதர சகோதரிகள். இந்நேரத்தில் நீங்கள் அனைவரும் சகோதர, சகோதரிகள். நீங்கள் உங்களின் ஆஸ்தியைத் தந்தையிடம் இருந்து பெற்றீர்கள். நீங்கள் இப்பொழுதும் தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். சிவபாபா கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள்! ஆத்மாக்களான நீங்கள் சிவபாபாவை நினைவுசெய்ய வேண்டும். அவரை நினைவு செய்வதால் மாத்திரமே நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். வேறெந்த வழியுமில்லை. நீங்கள் தூய்மை ஆகாமல் முக்தி தாமத்திற்குச் செல்ல முடியாது. முதலில் ஜீவன்முக்தி தாமத்தில் புராதன தேவ தர்மம் இருந்தது. பின்னர் ஏனைய அனைத்து மதங்களும் வரிசைக்கிரமமாக வரத் தொடங்கின. இறுதியில் தந்தை வந்து, அனைவரையும் துன்பத்திலிருந்து விடுவிக்கின்றார். அவர் விடுதலையாக்குபவர் என அழைக்கப்படுகின்றார். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் அழைக்கின்றீர்கள்: பாபா வாருங்கள்! எங்களைத் தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மை ஆக்குங்கள்! ஓர் ஆசிரியர் உங்களுக்குக் கற்பிப்பதை மாத்திரமே செய்கின்றார். அவர் உங்களின் குணாதிசயங்களை உருவாக்குகின்றாரா? இதுவும் ஒரு கல்வியாகும். ஞானக்கடலான தந்தை மாத்திரமே வந்து, உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. செயல், நடுநிலைச் செயல், பாவச்செயல் என்பவற்றின் தத்துவத்தை அறிந்து, மேலும் பாவச்செயல்கள் எதையும் செய்யாதீர்கள். கர்ம ஷேத்திரத்தில் செயல்களைச் செய்யும் பொழுதும், விகாரங்கள் அனைத்தையும் துறப்பதனால், பாவச் செயல்களில் இருந்து பாதுகாப்பாக இருங்கள்.

2. தந்தை உங்களின் அர்ப்பணத்தை ஏற்றுக்கொள்ளும் அளவிற்குத் தூய்மையாகுங்கள். தூய்மையாகித் தூய உலகிற்குச் செல்லுங்கள். இந்த யாகத்தில் உங்கள் சரீரம், மனம், செல்வத்தை அர்ப்பணித்து, உங்களிடமுள்ள அனைத்தையும் ஒரு தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துங்கள்

ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு மாஸ்ரர் ஞானம் நிறைந்தவராகி, இந்த ஞானத்தின் ஒளியாலும் சக்தியாலும் தடைகளை அழிப்பவர் ஆகுவீர்களாக.

பக்தி மார்க்கத்தில், தடைகளை அழிப்பவராக கணேஷ் வழிபடப்படுகிறார். அத்துடன் கூடவே, அவர் மாஸ்ரர் ஞானம் நிறைந்தவர், அதாவது, ஞானபதி என்றும் அறியப்படுகிறார். மாஸ்ரர் ஞானம் நிறைந்தவர்கள் ஆகுகின்ற குழந்தைகளான நீங்கள், ஒருபோதும் தடைகளால் தோற்கடிக்கப்படுவதில்லை. ஏனென்றால், இந்த ஞானம், ஒளி மற்றும் சக்தி எனப்படுகிறது. இதன் மூலம் உங்களின் இலக்கை அடைவது உங்களுக்கு இலகுவாக இருக்கும். அதேபோல், தடைகளை அழிப்பவர்களும் தந்தையுடன் சதா ஒன்றிணைந்து இருப்பவர்களும் தொடர்ந்து இந்த ஞானத்தைக் கடைபவர்களும் ஒருபோதும் தடைகளால் தோற்கடிக்கப்பட முடியாது.

சுலோகம்:
உள்ளும் புறமும் உள்ள குறைகள் அனைத்தையும் தந்தையிடம் முற்றுமுழுதாக ஒப்படையுங்கள், உங்களிடம் அக சக்தி ஏற்படும்.

அவ்யக்த சமிக்ஞை: சதா ஆட்ட அசைக்க முடியாத மற்றும் நிலையான ஸ்திதியை அனுபவயுங்கள்.

இது இப்போது ஆட்ட, அசைக்க முடியாதவராக இருப்பதை நீங்கள் அனுபவம் செய்வதுடன், மற்றவர்களையும் அனுபவம் அடையச் செய்வதற்கான வேளை ஆகும். விளையாட்டுக்கள் விளையாடுகின்ற நேரம் இப்போது முடிவடைந்து விட்டது. இப்போது, சதா சக்திசாலியாகித் தொடர்ந்து பலவீனமான ஆத்மாக்களைச் சக்திசாலி ஆக்குங்கள். உங்களிடம் பலவீனமான சம்ஸ்காரங்கள் இருந்தால், நீங்கள் மற்றவர்களையும் பலவீனம் ஆக்குவீர்கள். இந்த ஞானத்தின் ஒவ்வொரு கருத்திலும் அனுபவசாலி ஆகுவதற்கு, ஏகாந்தத்தை விரும்புவராகி, உங்களின் ஒருமுகப்படுத்தும் பயிற்சியை அதிகரியுங்கள்.