06.07.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, உயிர்வாழும் பொழுதே, சரீரத்திலிருந்து பற்றற்று இருங்கள். சரீரமற்றவராகி, தந்தையை நினைவு செய்யுங்கள். இதுவே மயான அமைதி என்று அறியப்படுகின்றது.
கேள்வி:
குழந்தைகளான நீங்கள் எதன் அடிப்படையில் உங்களுடைய அத்;திவாரத்தை உறுதியாக ஆக்குகின்றீர்கள்?பதில்:
தூய்மையின் அடிப்படையிலாகும். ஆத்மாக்களாகிய நீங்கள், எந்தளவிற்குத் தூய்மை ஆகுகின்றீர்களோ, அதாவது, எந்தளவிற்கு அதிகமாக நிஜத்தங்கம் ஆகுகின்றீர்களோ, அந்தளவிற்கு உறுதியானவர்கள் ஆகுகின்றீர்கள். பாபா இப்பொழுது அரைக்கல்பத்திற்கு எவருமே அசைக்க முடியாத, சுய இராச்சியம் எனும் உறுதியான அத்திவாரத்தை இடுகின்றார். உங்கள் இராச்சியத்தை எவராலும் அபகரிக்க முடியாது.பாடல்:
ஓம் நமசிவாய!ஓம் சாந்தி.
பாபா கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள்; சரீரமற்றவர் ஆகுங்கள், அதாவது, ஒருவர் மரணிக்கின்ற பொழுது, அங்கே மயான அமைதி நிலவுவதைப் போன்று மயான அமைதி இருக்கட்டும். அவர்கள் கூறுகின்றார்கள்: அவரது சரீரம் மௌனமாகி விட்டது. ஆத்மாவும் சரீரத்திலிருந்து நீங்கும்பொழுது, அனைத்தும் முடிவடைகின்றது. குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் இங்கு அமர்ந்திருக்கும் பொழுது, அது மயான அமைதி என்று அழைக்கப்படுகின்றது. உயிர்வாழும் பொழுதே சரீரமற்றவர்கள் ஆகுங்கள்! உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள்! இதுவே உண்மையான அமைதி என்பதை நீங்கள் அறிவீர்கள். மக்கள் அமைதி என்றால் என்ன என்று அறிய மாட்டார்கள். அவர்கள் மயான அமைதி என்பதன் அர்த்தத்தையும் அறியார்கள். ஏன் அவர்கள் “மயான அமைதி” என்று கூறுகின்றார்கள்? ஒரு நபர் மரணித்து விட்டார், அவர் மௌனமாகி விட்டார் என உங்களுக்கு நினைவூட்டுவதற்கே ஆகும்! நீங்களும் மரணிக்கின்றீர்கள், அதாவது, நீங்கள் மௌனம் ஆகுகின்றீர்கள். பிரபல்யமான மக்கள் காந்திஜியின் புனித ஞாபகார்த்த இடத்திற்குச் செல்லும்பொழுது, “மயான அமைதி நிலவட்டும், அதாவது, மௌனமாக அமர்ந்திருங்கள்” என அவர்கள் கூறுகின்றனர். ஆத்மாக்களாகிய நாங்கள் அமைதி சொரூபங்கள் என்பதை அறிவோம். உலகம் இதை அறியாது. நாங்கள் எங்களுடைய ஆதி ரூபத்தில் ஸ்திரமாக ஆகுகின்றோம். அமைதியே எங்களது ஆதிதர்மம் ஆகும். ஆத்மாக்களாகிய நாங்கள் அமைதி சொரூபங்கள். மக்கள் இதை அறியார்கள், இதனாலேயே அவர்கள் அமைதியை வேண்டுகின்றார்கள். ஆத்மாக்கள் கூறுகின்றனர்: எனக்கு அமைதி தேவை! ஆத்மாக்கள் தங்களது ஆதிதர்மத்தை மறந்து விட்டார்கள். உண்மையில் அமைதியே ஆத்மாவின் தர்மமாகும். எனவே தாங்கள் ஏன் அமைதி அற்றிருப்பதாக ஆத்மாக்கள் கூறுகின்றார்கள்? அமர்ந்திருந்து, சரீரமற்றவர் ஆகுங்கள். அம்மக்கள் மரணித்து விட்டதைப் போன்று அமர்ந்திருந்து மூச்சைக் கட்டுப்படுத்தும் பயிற்சியைச் (பிரணாயாமம்) செய்கின்றார்கள். அது செயற்கையான அமைதி என்று அழைக்கப்படுகின்றது. அமைதியே உங்களுடைய ஆதிதர்மம் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் சுய இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள். ஆத்மாக்களே, அனைத்துமாக ஆகுகின்றார்கள். ஓர் ஆத்மாவே சட்டநிபுணர் ஆகுகின்றார். ஓர் ஆத்மா கூறுகின்றார்: எனக்கு ஓர் இராச்சியம் வேண்டும். அந்த ஆத்மா முன்னரும் தந்தையிடம் இருந்து ஓர் இராச்சியத்தைக் கோரியதுடன், அதை மீண்டும் ஒருமுறை கோருவதற்காக வந்துள்ளார். மக்கள் சரீர உணர்வு உடையவர்களாக ஆகும்பொழுது, துன்பத்தை அனுபவம் செய்கின்றார்கள். நீங்கள் ஆத்மாக்கள் எனவும், உங்கள் பரமாத்மா பரமதந்தையிடம் இருந்து உங்கள் சுய இராச்சியத்தைப் பெறுவதற்கு வந்துள்ளீர்கள் என்பதையும் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் இராச்சியத்தை வேண்டுகின்றீர்கள். இந்நேரத்திலேயே ஆத்மா எல்லையற்ற தந்தையிடம் இருந்து இராச்சியத்தை வேண்டுகின்றார். ஸ்ரீகிருஷ்ணர் இராச்சியத்தைக் கொண்டிருந்து, பின்னர் அதை இழந்தார். தந்தை வந்து விட்டார், அவர் இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு இராச்சியத்தைக் கொடுக்கின்றார். இது இராஜயோகம் என்று அழைக்கப்படுகின்றது. பரமாத்மா பரமதந்தை, உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார். மனிதர்கள் சரீர உணர்வு உள்ளவர்களாக இருப்பதால், “நான் இன்னார், இன்னார்” எனக் கூறுகின்றார்கள்! ஒவ்வொருவரும் சரீரத்தையே “நான்” என்று கருதுகின்றார்கள். உண்மையில் ஆத்மாவே “நான், நான்” என்று கூறுகின்றார். ஆத்மா கூறுகின்றார்: நான் இந்தப் பொருளை எடுக்கின்றேன். ஒரு பெண் கூறுவார்: நான் இந்தப் பொருளை (பெண் உடலைப் பயன்படுத்தி) எடுக்கின்றேன். உண்மையில் ஆத்மாக்கள் ஆண் ஆவார்கள். ஆத்மாவாகிய நான், தந்தையின் மகன் ஆவேன். ஆத்மா கூறுகின்றார்: பாபா, நான் எனது சுய இராச்சியத்தை உங்களிடமிருந்து கோருகின்றேன். பரமாத்மா, ஆத்மாக்களான உங்களுக்கு உங்கள் சுய இராச்சியத்தைக் கொடுக்கின்றார். பக்திக்கும், இந்த ஞானத்திற்கும் இடையில் எவ்வளவு வேறுபாடுள்ளது எனப் பாருங்கள்! சிவனுக்கு ஆலயங்கள் உள்ளன. சிவாலயங்களிலேயே அதிகளவு மணிகள் அடிக்கப்படுகின்றன. அவர்கள் அவரை விழித்தெழுமாறு செய்கின்றனர். அவர்கள் அனைவரையும் விழித்தெழச் செய்கின்றனர். அதிகாலையில் வாத்தியங்கள் வாசிக்கப்படுகின்றன. இங்கே, தந்தை குழந்தைகளாகிய உங்களை விழித்தெழச் செய்து, உங்களைத் தேவர்கள் ஆக்குகின்றார். இதில் மணியடிப்பது போன்ற கேள்வியே இல்லை. தந்தை கூறுகின்றார்: உங்களுக்கு உங்கள் சுய இராச்சியம் வேண்டுமானால், முதலில் தூய்மை ஆகுங்கள்! இலக்கும், குறிக்கோளும் உங்கள் புத்திகளில் உள்ளன. மாணவர்கள் கூறுகின்றார்கள்: நான் எனது மெட்ரிகுலேசன் பரீட்சையில் சித்தி அடைந்த பின்னர், இதைச் செய்வேன். சந்நியாசிகளும் அமைதியை வேண்டுகின்றார்கள். தனது கழுத்திலே அட்டியலை அணிந்து கொண்டு, அதைத் தேடிய ஓர் அரசியைப் பற்றிய கதை உள்ளது. அதேபோன்று மக்களும் அமைதியை வெளியில் தேடுகின்றனர். எவ்வாறாயினும், ஆத்மாக்கள் அமைதி சொரூபங்கள் ஆவர். ஆத்மாக்கள் தங்களது ஆதிதர்மத்தை மறந்து, இப்பொழுது தங்களைச் சரீரங்களாகக் கருதுகின்றனர். தந்தை உங்களுக்கு மீண்டும் ஒருமுறை ஞாபகம் ஊட்டுகின்றார்: நீங்கள் ஆத்மாக்கள் ஆவீர்கள். ஆத்மாக்களான நீங்கள் 84 பிறவிகளை எடுத்துள்ளீர்கள். இவ்விடயங்களை வேறெவராலும் விளங்கப்படுத்த முடியாது. தந்தை கூறுகின்றார்: உங்களுடைய சொந்தப் பிறவிகள் பற்றியும் நீங்கள் அறிய மாட்டீர்கள். நான் உங்களுக்கு அவை பற்றிக் கூறுகின்றேன். நீங்கள் பிரம்மாகுமாரர்களும், குமாரிகளும் ஆவீர்கள். தந்தை விளங்கப்படுத்தி உள்ளார்: தூய்மை இல்லாமல், உங்களால் இந்த ஞானத்தைக் கிரகிக்க முடியாது. கூறப்பட்டுள்ளது: பெண்சிங்கத்தின் பாலை வைப்பதற்கு உங்களுக்கு ஒரு தங்கப் பாத்திரம் தேவை. இங்கும் கூட ஒரு தங்கப் பாத்திரம் தேவைப்படுகின்றது. தந்தையை நினைவு செய்வதனால், ஆத்மாக்கள் தங்கமாக ஆகுகின்றனர். தந்தையும் நிஜத்தங்கம் ஆவார். ஆத்மா தந்தையை நினைவு செய்யும் பொழுதே, அவரது புத்தியில் இந்த ஞானம் பிரவேசிக்க முடியும். நீங்கள் நிஜத்தங்கமாகவும், தூய்மையாகவும் இருந்தீர்கள் என்ற இந்த ஞானத்தினால் எவருமே பாதிக்கப்படுவதில்லை. தந்தை கூறுகின்றார்: நான் ஆத்மாக்களாகிய உங்களுக்குச் சுய இராச்சியத்தைக் கொடுக்கின்றேன். இந்தப் பழைய உலகின் இறுதியும், அந்தப் புதிய உலகின் ஆரம்பமும் உள்ளபொழுது, நீங்கள் இந்த இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள். இப்பொழுது மக்கள் எல்லைக்கு உட்பட்ட இராச்சியத்தைக் கொண்டுள்ளனர்; அவர்கள் ஒருபொழுதும் எல்லையற்ற இராச்சியத்தைப் பெறுவதில்லை. அவர்களால் உலக அதிபதிகள் ஆகமுடியாது. நீங்கள் தந்தையின் மூலம் அவ்வாறு ஆகுகின்றீர்கள். தந்தையாகிய கடவுள் மட்டுமே உங்களுடைய 84 பிறவிகள் பற்றி அறிவார். தேவர்களால் தங்களுடைய பிறவிகளைப் பற்றி அறிய முடியாது. அவர்கள் அவை பற்றி அறிந்திருந்தால், சந்தோஷம் அற்றவர்கள் ஆகியிருப்பார்கள். தாங்கள் தொடர்ந்தும் ஏணியில் கீழிறங்கப் போகின்றார்களா என அவர்கள் ஆச்சரியம் அடைந்திருப்பார்கள். அவர்கள் இராச்சியத்தின் சந்தோஷத்தையும் இழந்திருப்பார்கள். இங்கே நீங்கள் அனைத்தையும் அறிவீர்கள். நீங்கள் ஆத்மாக்கள் என்பதை அறிவீர்கள். இது பற்றிய சந்தேகம் என்ற கேள்வியே இல்லை. நீங்கள் ஒருவரையொருவர் கூறுவதைச் செவிமடுக்கின்றீர்கள், உங்கள் எண்ணிக்கை தொடர்ந்தும் வளர்கின்றது. இந்தத் தேவ தர்மத்தின் விருட்சம் ஸ்தாபிக்கப்படுகின்றது. ஒருவர் வருகின்ற பொழுது, உங்;களால் புரிந்துகொள்ள முடியும்: எங்கள் பிராமணக் குலத்திற்குச் சொந்தமானவர் வந்துள்ளார்; அவர் தனது பக்தியை முடித்து, இப்பொழுது தந்தையிடம் இருந்து தனது ஆஸ்தியைத் பெற வந்துள்ளார். இந்த ஞானம் முடிவிற்கு வருகின்ற பொழுது, பக்தி ஆரம்பிக்கின்றது. எவருமே இதை அறிய மாட்டார்கள். ஒரு கட்டடமும் முதலில் புதிதாக இருந்து, பின்னர் பழையதாக ஆகுகின்றது. பலவீனமான அத்திவாரத்தைக் கொண்ட கட்டடம் நிச்சயமாகக் குறைந்த ஆயுட்காலத்தையே கொண்டிருக்கின்றது. பூமியதிர்ச்சி ஏற்படுகின்ற பொழுதும், வீழ்ந்து, இழப்புக்கள் ஏற்படாத வகையில், மிகவும் உறுதியான கட்டடங்களை அவர்கள் இந்நாட்களில் கட்டுகின்றார்கள். அவர்கள் அவற்றை மிகவும் உறுதியானவையாகக் கட்டுகின்றார்கள். அவர்கள் மிகவும் உறுதியான அத்திவாரங்களை இடுகின்றார்கள். நீங்கள் இப்பொழுது உங்கள் சுய இராச்சியத்திற்கான அத்திவாரத்தை இடுகின்றீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் 21 பிறவிகளுக்கான இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள். இங்குள்ள இராச்சியங்களில் எதுவுமேயில்லை. இன்று அவர்களிடம் இராச்சியம் உள்ளது, நாளை ஒருவர் அவற்றைத் தாக்கும்பொழுது, அனைத்தும் முடிவடைந்து விடும். எவற்றிற்குமே அத்திவாரம் எதுவுமில்லை. மனிதர்களுக்கும் அத்திவாரம் இல்லை; அவர்கள் இன்று இங்குள்ளார்கள், நாளை சென்று விடுவார்கள். நீங்கள் 21 பிறவிகளுக்கு உங்கள் இராச்சிய பாக்கியத்தைக் கோரும் வகையில், பாபா இப்பொழுது உறுதியான அத்திவாரத்தை உங்களுக்காக இடுகின்றார். உங்கள் இராச்சியத்துக்கான உறுதியான அத்திவாரம் இடப்படுகின்றது. எந்தப் பௌதீகமான புயல்களும் உங்களை அசைக்க முடியாது. கீதையிலும் கூறப்பட்டுள்ளது: எவருமே உங்களிடம் இருந்து அபகரிக்கவோ அல்லது வீழ்த்தவோ முடியாத, அத்தகையதோர் இராச்சியத்தை பாபா உங்களுக்குக் கொடுக்கின்றார். அவர் உங்களுக்குத் துன்பத்தின் சிறிதளவு குறிப்பு கூட இல்லாத அவ்வாறான இராச்சியத்தைக் கொடுக்கின்றார். ஆத்மாக்களாகிய நீங்கள் அதிகளவு சந்தோஷத்தை அனுபவம் செய்ய வேண்டும்! உங்களுக்கு அந்த நம்பிக்கை உள்ளது. நம்பிக்கை இல்லையென்றால், அந்த ஆத்மா சுவர்க்கத்திற்குச் செல்லத் தகுதியற்றவர். பல பிரம்மாகுமாரர்களும், குமாரிகளும் உள்ளனர்; அவர்கள் தொடர்ந்தும் (எண்ணிக்கையில்) அதிகரிக்கின்றனர். ஞானக்கடலும், தூய்மையாக்குபவரும் ஆனவர் எங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஸ்ரீகிருஷ்ணரே அதைக் கற்பித்ததாக மக்கள் கூறுகின்றார்கள். சிவபாபா ஒரு மனித சரீரத்தில் பிரவேசித்து, அதைக் கற்பித்தார் என எவ்வாறு அவர்களால் புரிந்துகொள்ள முடியும்? பாரதம் தூய்மையாக இருந்தது, அது இப்பொழுது தூய்மையற்றுள்ளது. அவர்கள் தேவர்களின் விக்கிரகங்களின் முன்னால் சென்று தலைவணங்கி, அவர்களின் புகழைப் பாடுகின்றனர். நீங்கள் சகல தெய்வீகக் குணங்களும் நிறைந்தவர், 16 சுவர்க்கக் கலைகளும் நிறைந்தவர் என அவர்கள் சிவனின் முன்னால் என்றுமே பாட மாட்டார்கள். சிவனின் புகழ் வேறுபட்டது. அவர் ஞானக்கடலும், தூய்மையாக்குபவரும், அனைவருக்கும் சற்கதி அருள்பவரும், அனைவரது மடிகளையும் நிரப்புகின்ற கள்ளங்கபடமற்ற பிரபுவும் எனப் புகழப்படுகின்றார். அவ்வாறான தந்தையை அனைவரும் மறந்து விட்டார்கள். பரமாத்மா பரமதந்தையை, வந்து தங்களுடைய துன்பத்தை நீக்கித் தங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுக்குமாறு மக்கள் அழைக்கின்றார்கள். ஒரேயொருவர் மாத்திரமே துன்பத்தை நீக்கி, சந்தோஷத்தை அருள்பவர். அவரது வழிகாட்டல்களே அதிமேன்மையானவை. அவை இரட்டை மேன்மையான கடவுளின் வழிகாட்டல்கள், அவற்றின் மூலம் குழந்தைகளான நீங்கள் மேன்மையானவர்கள் ஆகுகின்றீர்கள். இவ்வுலகம் சீர்கெட்டது என அரசாங்கமும் கூறுகின்றது. யாரால் அதை மேன்மையாக்க முடியும் என அவர்கள் அறிய மாட்டார்கள். அந்தச் சாதுக்கள் அதை மேன்மை ஆக்குவார்கள் என்று அவர்கள் நினைக்கின்றார்கள். எவ்வாறாயினும் அவர்களால் அதைச் செய்ய முடியாது; அது தந்தையின் பணி மாத்திரமே ஆகும். முன்னர் அவர்கள் ஓர் அரசனின் வழிகாட்டல்களைப் பின்பற்றினார்கள். சத்தியயுகத்தில் உங்களுக்கு ஆலோசகர்கள் போன்றோர் இருக்க மாட்டார்கள். சக்கரவர்த்திகளே அந்தச் சக்திகளைக் கொண்டிருப்பார்கள். “ஆலோசகர்கள்” என்ற பட்டம் அங்கே குறிப்பிடப்பட மாட்டாது. நீங்கள் உலக அதிபதிகளாகி, இராச்சியத்தை ஆட்சிசெய்தீர்கள் என்பதைப் புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் முன்னர் செய்ததைப் போன்று, அங்கே சென்று ஆட்சிசெய்ய வேண்டும். உண்மையில் சத்தியயுகத்தில் இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியம் இருந்தது. ஒவ்வொருவரும் தத்தமது சொந்த இராச்சியத்தைப் பெறுவார்கள். ஸ்ரீகிருஷ்ணர் தனது சொந்த இராச்சியத்தைக் கொண்டிருப்பார். ஏனைய அரசர்களும் அங்கே இருக்கின்றனர். அங்கே குறைந்தபட்சம் 8 பேர் இருக்கின்றார்கள், ஆனால் பின்னர் அங்கே 8 பேரா அல்லது 108 பேரா உள்ளனர் என்பதை நீங்கள் முன்னேறிச் செல்லும்பொழுது, அறிந்து கொள்வீர்கள். உங்களுக்கு இறுதியில் கொடுக்கப்படுகின்ற ஞானம் இப்பொழுது கொடுக்கப்பட மாட்டாது. தந்தை இன்னமும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்குத் தொடர்ந்தும் இந்த ஞானத்தைக் கொடுத்துக் கொண்டே இருப்பார். அவர் அதைக் கொடுக்க வேண்டும்; அது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. பரமாத்மாவின் பாகம், இந்த நேரத்திலேயே ஆகும். ஞானம் கொடுக்கின்ற பாகம் இந்நேரத்திற்கே நிச்சயிக்கப்பட்டுள்ளது. தந்தை கூறுகின்றார்: நீங்கள் முன்னேறிச் செல்லும்பொழுது, பெருமளவு புரிந்துகொள்வீர்கள். அவர் தொடர்ந்தும் நாளுக்கு நாள் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் எவ்வாறு அங்கே இராச்சியத்தை ஆட்சிசெய்வீர்கள் எனவும், எவ்வாறு அங்கே திருமணம் இடம்பெறுகின்றது எனவும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். நீங்கள் திரான்சில் செல்லும்பொழுது சுவர்க்கத்தையும், அங்கே எவ்வாறு தங்க மாளிகைகள் இருக்கின்றன என்றும், அங்கே வேறெதுவுமன்றி, தங்கம் மாத்திரம் இருக்கின்றது என்றும் காண்கின்றீர்கள். உங்களை நீங்களே தெய்வீக தாமத்தில் காண்கின்றீர்கள். தங்கக் கட்டிகளினாலான கட்டடங்கள் கட்டப்படுகின்றன. சில தங்கக் கட்டிகளைக் கொண்டு வரவேண்டும் போன்று நீங்கள் உணர்கிறீர்கள், ஆனால் திரான்சிலிருந்து கீழே வந்ததும் உங்களை நீங்கள் இங்கே காண்கின்றீர்கள். திரான்சில் மீரா சென்று, ஸ்ரீகிருஷ்ணருடன் தான் நடனமாடுவதாகக் கண்டாள். நீங்களும் சூட்சும உலகிற்குச் செல்கின்றீர்கள், ஆனால், அங்கே எலும்புகள், சதையாலான உடல் இருப்பதில்லை, நீங்கள் தேவதைகள் ஆகுகின்றீர்கள். பிரம்மாவின் சரீரமும் சூட்சும உலகில் தெரிகின்றது. இவரே ஒரு தேவதை ஆகுகின்றார்! நீங்கள் தோட்டங்கள் போன்றவற்றையும் காண்கின்றீர்கள். தந்தை உங்களுக்குக் காட்சிகளை அருள்கின்றார். பாபா உங்களுக்கு மாம்பழச்சாறு (சுபிராஸ்) அருந்தக் கொடுத்ததாக நீங்கள் கூறுகின்றீர்கள். அவர் அதை உங்களுக்குச் சூட்சும உலகில் அருந்தக் கொடுக்க முடியாது. வைகுந்தத்திலுள்ள மலர்களும், பழங்களும் முதற்தரமானவை. சூட்சும உலகில் எவ்விதமான பூந்தோட்டங்களும் இருக்க மாட்டாது. நீங்கள் பூந்தோட்டத்திற்குச் சென்றதாகவும், அங்கே ஓர் இளவரசர் இருந்ததாகவும் கூறுகின்றீர்கள். அது வைகுந்தம் ஆகும். வைகுந்தத்தில் உள்ளவற்றை நீங்கள் இங்கே பெற முடியாது. அங்கே அனைத்துப் பொருட்களும் முதற்தரமானவை. தந்தை கூறுகின்றார்: நான் உங்களை வைகுந்தத்தின் அதிபதிகள் ஆக்குகின்றேன். இங்கே துன்பத்தைத் தவிர வேறெதும் இல்லை. “ஓ கடவுளே, என்னைத் துன்பத்தில் இருந்து விடுவியுங்கள்!” என்று கூறாத ஒரு மனிதரும் இங்கில்லை. துன்பத்தின் பொழுதே, அவர்கள் கடவுளை நினைவு செய்கின்றனர். ஸ்ரீகிருஷ்ணரைப் பூஜிப்பவர் கூறுகின்றார்: “கிருஷ்ணரின் பெயரால் எடுத்துக் கொள்ளுங்கள்”, அனுமானைப் பூஜிப்பவர்கள் “அனுமானுக்கே வெற்றி” எனக் கூறுகின்றனர். இங்கே தந்தை கூறுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள்! இறுதியில் வேறு எவரைப் பற்றிய விழிப்புணர்வும் இல்லாமல் இருக்கும் அளவிற்கு என்னை நினைவு செய்யுங்கள். மக்கள் தங்களைக் காசியில் அர்ப்பணிக்கும் பொழுது, தாங்;கள் செய்துள்ள பாவங்களை உணர்ந்து, பிறவிபிறவியாக தண்டனையை அனுபவம் செய்வது போல உணர்வார்கள். பல பாவங்கள் செய்யப்பட்டுள்ளன. இது பாவாத்மாக்களின் உலகம் என்று அழைக்கப்படுகின்றது. ஆத்மாக்கள் பாவிகள். ஆத்மாக்களே, பரமாத்மாவை அழைக்கின்றார்கள்: ஓ பரமாத்மாவான பரமதந்தையே! ஓ சிவபாபா, பரமந்தாமவாசியே, அவருக்கு ஒரேயொரு உண்மையான பெயர் மாத்திரமே உள்ளது. அவர் ஆத்மாக்கள் அனைவரதும் தந்தை ஆவார். உருத்திரனின் பெயரின் பின்னர் “சாலிகிராம்கள்” என்று கூறுவது சரியாகப் படவில்லை. “சிவனும், சாலிகிராம்களும்” என்று கூறுவதே சரியாகப்படுகின்றது. அவர்கள் களிமண்ணினால் நீள்கோள வடிவான சிவலிங்கத்தையும், சாலிகிராம்களையும் செய்கின்றார்கள். அவர் மாத்திரமே தூய்மையாக்குபவர். அவர்கள் இங்கேயும் யாகங்களை வளர்க்கின்றார்கள். பாரதமே அனைத்திலும் அதிமேன்மையானது. ஆனால் அவர்கள் தேவ தர்மத்தை மறந்து விட்டார்கள். உங்களுடைய தர்மம் ஆதிசனாதன தேவிதேவதா தர்மமாகும். அதுவே எப்பொழுதும் தொடர்ந்திருக்க வேண்டும். இந்து சமயம் ஒரு சமயமல்ல. தேவ தர்மத்தைச் சேர்ந்தவர்கள் சதோ, ரஜோ, தமோ, ஸ்திதிகளுக்கூடாகச் செல்கின்றார்கள். அவர்கள் தமோ ஸ்திதிக்கு வருகின்ற பொழுது, தங்களைத் தேவர்கள் என்று அழைக்க முடியாது. உண்மையில் “இந்து” சமயம் என்று ஒன்றில்லை. எனவே உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது: நீங்கள் தேவர்களாக முடியும், எனவே வந்து, இதைப் புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் தங்களுக்கு நேரமில்லை எனப் பதில் அளிக்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: உங்களுக்குச் சந்தோஷமும், அமைதியும் எனும் ஆஸ்தியைக் கொடுப்பதற்கு, நான் உங்களை எனக்கு உரியவர்கள் ஆக்குகின்றேன். சில குடும்பங்கள் ஒன்றாக வாழ்ந்து கொண்டே ஒருவருடன் ஒருவர் பெருமளவு அன்புடன் பழகுகின்றனர். அவர்கள் தாங்கள் சம்பாதிப்பது அனைத்தையும் ஒன்றாகவே வைத்திருக்கிறார்கள். ஆகையால் அங்கே எதனைப் பற்றியும் குழப்பங்கள் எதுவும் இருப்பதில்லை. எவ்வாறாயினும் இந்த இடம் சுவர்க்கம் என்று அழைக்கப்பட முடியாது. சத்தியயுகத்தில் எந்த ஒரு வீட்டிலும் எவருமே என்றும் நோய்வாய்ப்பட்டோ அல்லது சந்தோஷமற்றோ இருக்க மாட்டார்கள்: இதன் பெயரே சுவர்க்கம் ஆகும். அங்கே அனைவரும் சந்தோஷமாகவே இருக்கின்றார்கள். சதா சந்தோஷம் எனும் உங்களுடைய ஆஸ்தியைப் பெறுவதற்காகவே நீங்கள் தந்தையிடம் வந்துள்ளீர்கள். இப்பொழுது நீங்கள் இந்த ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் கூறுகின்றீர்கள்: பாபா, நீங்களே தூய்மையாக்குபவர். எங்களைத் தூய்மை ஆக்குங்கள்! குழந்தைகளாகிய நீங்களும் தந்தையின் இறை உதவியாளர்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. சுய இராச்சியத்தைக் கோருவதற்கு, இப்பொழுது தூய்மை எனும் அத்திவாரத்தை உறுதியானதாக ஆக்குங்கள். தந்தை எவ்வாறு தூய்மையாக்குபவராக இருக்கின்றாரே, அவ்வாறே தந்தையைப் போன்று தூய்மையானவர் ஆகுங்கள்.2. உங்கள் ஆதிதர்மமான அமைதியில் உங்களை ஸ்திரமாக்குங்கள். இயன்றளவிற்குச் சரீர உணர்வைத் துறந்து, ஆத்ம உணர்வில் நிலைத்திருங்கள். மயான அமைதியில் இருப்பதைப் பயிற்சி செய்யுங்கள், அதாவது, சரீரமற்றவர் ஆகுவதைப் பயிற்சி செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
உங்களுக்கும் அத்துடன் மற்றவர்களுக்கும் சேவை செய்வதன் மூலம் நீங்கள் வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.வெற்றி சொரூபம் ஆகுவதற்கு, மற்றவர்களுக்குச் சேவை செய்வதுடன் கூடவே, உங்களுக்கும் சேவை செய்யுங்கள். நீங்கள் சேவை செய்யப் போகும் பொழுதெல்லாம் அந்தச் சேவையைச் செய்வதுடன் கூடவே, நீங்கள் இறுதியாக உங்களின் பழைய சம்ஸ்காரங்களையும் தகனம் செய்கிறீர்கள் என்றும் எப்போதும் நினையுங்கள். எந்தளவிற்கு நீங்கள் உங்களின் சம்ஸ்காரங்களைத் தகனம் செய்கிறீர்களோ, அந்தளவிற்கு அதிக மரியாதையை நீங்கள் பெறுவீர்கள். ஆத்மாக்கள் அனைவரும் தமது மனங்களில் உங்களை வணங்குவார்கள். எவ்வாறாயினும், வெறுமனே புறத்தே அவர்கள் உங்களை வணங்குவதாக மட்டுமன்றி, தமது மனங்களிலும் உங்களை வணங்குபவர்களாக நீங்கள் அவர்களை ஆக்க வேண்டும்.
சுலோகம்:
எல்லையற்ற சேவை செய்யும் இலட்சியத்தை வைத்திருங்கள், உங்களின் எல்லைக்கு உட்பட்ட பந்தனங்கள் அனைத்தும் உடைந்துவிடும்.அவ்யக்த சமிக்கை: எரிமலை ஸ்திதியில் இருந்தவண்ணம், சக்திவாய்ந்த நினைவை அனுபவம் செய்யுங்கள்.
உங்களின் நினைவானது எரிமலை ஆகாதவரை, விநாசத்தின் சுவாலைகளும் தமது சம்பூரணமான எரிமலை ரூபத்தை அடைய மாட்டாது. அவை கொழுந்து விட்டு எரிந்து பின்னர் அணைந்து விடுகின்றன. ஏனென்றால், எரிமலை ரூபத்தைக் கொண்டிருப்பதுடன் ஆதார ரூபங்களாகவும் இருக்கும் ஆத்மாக்கள், எல்லா வேளையும் அந்த எரிமலை ரூபத்தை எடுப்பதில்லை. இப்போது, எரிமலை ரூபம் ஆகுகின்ற திடசங்கற்பமான எண்ணத்தைக் கொண்டிருந்து, உங்களின் மனம் மற்றும் புத்தியின் ஒருமுகப்படுத்தலை ஒன்றுதிரட்டிய முறையில் எங்கும் சக்திவாய்ந்த யோகா அதிர்வலைகளைப் பரப்புவதற்குப் பயன்படுத்துங்கள்.