06.08.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்களுக்கு நேரம் இருக்கும் பொழுதெல்லாம் ஏகாந்தத்துக்குச் சென்று நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள். நீங்கள் உங்களுடைய இலக்கை அடையும் பொழுது மாத்திரமே உங்கள் யாத்திரை முடிவடையும்.
கேள்வி:
அரைக்கல்பத்திற்கு தொடர்கின்ற எந்தவொரு தெய்வீகக் குணத்தின் மூலம் சங்கமயுகத்தில் தந்தை தனது குழந்தைகளை நிரப்புகிறார்?பதில்:
தந்தை கூறுகிறார்: நான் அதி இனிமையானவர் என்பதைப் போன்றே குழந்தைகளாகிய உங்களையும் இனிமையானவர் ஆக்குகிறேன். தேவர்கள் மிகவும் இனிமையானவர்கள். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் இனிமையானவர் ஆகுவதற்கு முயற்சி செய்கிறீர்கள். பலருக்கும் நன்மை அளிப்பவர்களும் எந்த அசுர எண்ணங்களையும் கொண்டிராதவர்களுமே இனிமையானவர்கள் ஆவர். அவர்களே ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவார்கள். அவர்களே பின்னர் வழிபடப்படுபவர்களும் ஆகுவார்கள்.ஓம் சாந்தி.
ஆத்மாவே இச்சரீரத்தின் அதிபதி எனத் தந்தை இங்கே அமர்ந்திருந்து விளங்கப்படுத்துகிறார். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் இந்த ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். ஆகவே நீங்கள் முதலில் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் முதலில் நீங்கள் ஓர் ஆத்மா என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஆத்மா சரீரத்தினூடாகச் செயற்பட்டுத் தனது பாகத்தை நடிக்கிறார். வேறெந்த மனிதர்களும் அத்தகைய எண்ணங்களைக் கொண்டிருக்க முடியாது, ஏனெனில் அவர்கள் சரீர உணர்வு உடையவர்கள் ஆவார்கள். நீங்கள் ஆத்மாக்கள், அவை உங்களின் சரீரங்கள் என்னும் எண்ணத்துடன் நீங்கள் இங்கே அமர்த்தப்பட்டுள்ளீர்கள். ஆத்மாவாகிய நான், பரமாத்மாவாகிய பரமதந்தையின் ஒரு குழந்தை ஆவேன். நீங்கள் இந்த நினைவை மீண்டும் மீண்டும் மறந்து விடுகிறீர்கள். எல்லாவற்றுக்கும் முதலில் இதனை முழுமையாக நினைவு செய்யுங்கள். மக்கள் யாத்திரை செல்லும் பொழுது அவர்களுக்குத் தொடர்ந்து முன்னேறிச் சென்று கொண்டிருக்குமாறு கூறப்படுகிறது. நீங்களும் நினைவு யாத்திரையில் தொடர்ந்தும் முன்னேறிச் சென்று கொண்டிருக்க வேண்டும். அதாவது நினைவைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் நினைவைக் கொண்டிருக்காது விட்டால் நீங்கள் யாத்திரையில் இருக்கவில்லை எனவும் சரீர உணர்வு உள்ளது என்றும் அர்த்தம். சரீர உணர்வுள்ள பொழுது ஏதாவதொரு பாவச் செயல் புரியப்படுகிறது. மனிதர்கள் எப்பொழுதும் பாவச் செயல்களைப் புரிகிறார்கள் என்பதல்ல. அப்படியிருந்தால் அவர்களின் வருமானம் நிறுத்தப்படும். ஆகவே இயன்றளவுக்கு ஒருபொழுதும் நினைவு யாத்திரையில் பின்தங்கியிருக்க வேண்டாம். ஏகாந்தமாக அமர்ந்திருந்து இந்த ஞானக்கடலைக் கடைந்து கருத்துக்களைப் பிரித்தெடுங்கள். நீங்கள் எவ்வளவு நேரத்துக்கு பாபாவின் நினைவில் இருக்கிறீர்கள்? இனிமையானவை இயல்பாகவே நினைவு செய்யப்படுகின்றன. இந்த நேரத்தில் மனிதர்கள் தொடர்ந்தும் ஒருவருக்கொருவர் ஓர் இழப்பை ஏற்படுத்துகிறார்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. பாபா ஆசிரியர்களை மாத்திரம் புகழ்கிறார். ஆனால் அவர்கள் மத்தியிலும் சில ஆசிரியர்கள் தீங்கானவர்கள். இல்லாவிட்டால் ஓர் ஆசிரியர் என்றால் கற்பிப்பவர், பண்புகளைக் கற்பிப்பவர் என்று அர்த்தமாகும். சமயப் பற்றுள்ளவர்களினதும் சிறந்த சுபாவத்தைக் கொண்டுள்ளவர்களினதும் நடத்தை சிறப்பாக உள்ளது. ஒரு தந்தை மதுபானம் போன்றவற்றை அருந்தினால் அவருடைய குழந்தைகள் அச்சகவாசத்தினால் நிறமூட்டப்பட்டிருப்பார்கள். இது இராவண இராச்சியம் ஆதலால் அது தீய சகவாசம் என அழைக்கப்படுகிறது. அங்கு நிச்சயமாக இராம இராச்சியம் இருந்தது. ஆனால் அது எவ்வாறு இருந்தது, அது எவ்வாறு ஸ்தாபிக்கப்பட்டது என்னும் இந்த அற்புதமான, இனிமையான விடயங்களைப் பற்றிக் குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரம் அறிவீர்கள். இனிமையானது, மிகவும் இனிமையானது, இனிமையிலும் இனிமையானது எனக் கூறப்பட்டுள்ளது. தந்தையின் நினைவில் நிலைத்திருப்பதால் மாத்திரமே நீங்களும் தூய்மையாகி ஏனையோரையும் தூய்மை ஆக்குவீர்கள். தந்தை புதிய உலகத்தினுள் வருவதில்லை. ஓர் உலகத்தில் மனிதர்கள், மிருகங்கள், பண்ணைகள், வயல்கள் போன்றவை இருக்கின்றன. மனிதர்களுக்கு அனைத்தும் தேவைப்படுகின்றன. சமயநூல்களில் பிரளயம் இருந்ததாகக் குறிப்பிடப்படுவது பிழையானது. ஒருபொழுதும் முழுப் பிரளயமும் நிகழ்வதில்லை. உலகச்சக்கரம் தொடர்ந்தும் சுழல்கிறது. குழந்தைகளாகிய நீங்கள் அதன் ஆரம்பம் முதல் இறுதிவரையும் உங்களின் விழிப்புணர்வில் வைத்திருக்க வேண்டும். மக்கள் பலவிதமான படங்களை நினைவு செய்கிறார்கள். அவர்கள் அனைத்து மேலாக்களையும் ஒன்றுகூடல்கள் போன்றவற்றையும் நினைவு செய்கிறார்கள். அவை அனைத்தும் எல்லைக்கு உட்பட்டவை. உங்கள் நினைவு எல்லையற்றது, உங்கள் சந்தோஷம் எல்லையற்றது, உங்கள் செல்வமும் எல்லையற்றதே. அவரே எல்லையற்ற தந்தை, இல்லையா? ஓர் எல்லைக்கு உட்பட்ட தந்தையிடம் இருந்து நீங்கள் பெறும் அனைத்தும் எல்லைக்கு உட்பட்டவையாகும். நீங்கள் எல்லையற்ற தந்தையிடம் இருந்து எல்லையற்ற சந்தோஷத்தைப் பெறுகிறீர்கள். செல்வத்தின் மூலம் சந்தோஷம் பெறப்படுகிறது. அங்கே எல்லையற்ற செல்வம் இருக்கிறது. அங்குள்ள அனைத்தும் சதோபிரதானாக இருக்கின்றன. நீங்கள் சதோபிரதானாக இருந்தீர்கள் என்பதும் நீங்கள் மீண்டும் அவ்வாறு ஆகவேண்டும் என்பதும் உங்கள் புத்திகளில் உள்ளன. இந்த நேரத்தில் அதனை நீங்கள் அறிவீர்கள். நீங்களும் வரிசைக்கிரமமாக இனிமையானவர்கள், மிகவும் இனிமையானவர்கள், இனிமையிலும் இனிமையானவர்கள் ஆவீர்கள். பாபாவை விடவும் மிகவும் இனிமையானவர்கள் ஆகுபவர்களே ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவார்கள். பலருக்கும் நன்மை அளிப்பவர்களே இனிமையிலும் இனிமையானவர்கள் ஆவார்கள். தந்தையும் இனிமையிலும் இனிமையானவர் ஆவார். இதனாலேயே அனைவரும் அவரை நினைவு செய்கிறார்கள். தேனும் சீனியும் மாத்திரம் இனிமையானவை என்பதல்ல. அது மனிதர்களின் நடத்தையைக் குறிப்பிடுகிறது. “இவர் ஓர் இனிமையான குழந்தை” எனச் சிலசமயங்களில் கூறப்படுகிறது. சத்தியயுகத்தில் எதுவும் அசுரத்தனமாக இருக்காது. அத்தகையதோர் உயர்;ந்த அந்தஸ்தைப் பெறுவதற்கு நீங்கள் நிச்சயமாக இங்கு முயற்சி செய்திருக்க வேண்டும். நீங்கள் இப்பொழுது புதிய உலகத்தை அறிவீர்கள். உங்களுக்காக சந்தோஷ தாமத்துப் புதிய உலகம் நாளையே இங்கு இருக்கும் என்பதைப் போன்றுள்ளது. அங்கு எப்பொழுது அமைதி இருந்தது என்பதை மக்கள் அறிந்திருக்கவில்லை. அவர்கள் உலகில் அமைதிக்காக வேண்டுகிறார்கள். உலகில் அமைதி இருந்தது என்பதையும் நீங்கள் இப்பொழுது அதனை மீண்டும் ஒருமுறை ஸ்தாபிக்கிறீர்கள் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் எவ்வாறு இதனை அனைவருக்கும் விளங்கப்படுத்த முடியும்? மக்கள் பெருமளவுக்கு விரும்புகின்ற விடயங்களைப் பற்றிய அத்தகைய கருத்துக்களை நீங்கள் பிரித்தெடுக்க வேண்டும். அங்கு பெருமளவுக்கு அமைதியின்மை இருக்கும் காரணத்தினால் அவர்கள் தொடர்ந்தும் உலகில் அமைதியை வேண்டிக் கதறுகிறார்கள். அவர்களுக்கு இலக்ஷ்மி நாராயணனின் படங்களைக் காண்பியுங்கள். அது அவர்களின் இராச்சியமாக இருந்த பொழுது உலகில் அமைதி இருந்தது. அது தேவர்களின் உலகமாகிய சுவர்க்கம் என்று அழைக்கப்பட்டது. அந்த உலகில் அமைதி இருந்தது. மிகச்சரியாக 5000 வருடங்களுக்கு முன்னர் என்ன நடைபெற்றது என்பதை வேறு எவரும் அறியார். இதுவே பிரதான விடயமாகும். உலகில் எவ்வாறு அமைதி நிலவ முடியும் என எங்கும் உள்ள ஆத்மாக்கள் வினவுகிறார்கள். ஆத்மாக்கள் அனைவரும் உலகில் அமைதிக்காக அழைக்கின்றார்கள். ஆனால் நீங்களோ இவ் உலகில் அமைதியை ஸ்தாபிக்க முயற்சி செய்கிறீர்கள். பாரதம் மாத்திரம் இருந்த பொழுது உலகில் அமைதி இருந்தது என உலகில் அமைதியை விரும்புபவர்களுக்குக் கூறுங்கள். பாரதம் சுவர்க்கமாக இருந்தபொழுது அமைதி இருந்தது, ஆனால் அது இப்பொழுது நரகமாகும். கலியுகத்தில் அமைதியின்மை உள்ளது. ஏனெனில் அங்கு இப்பொழுது எண்ணற்ற சமயங்கள் உள்ளன. இது மாயையின் இராச்சியம். பக்தியின் ஆடம்பரமும் உள்ளது. நாளுக்கு நாள் அது தொடர்ந்தும் வளர்கிறது. அங்கு நிச்சயமாக ஏதோவொரு உண்மை இருக்க வேண்டும் என எண்ணி மக்கள் மேலாக்களுக்கும் ஒன்றுகூடல்கள் போன்றவற்றுக்கும் செல்கிறார்கள். அவற்றின் மூலம் எவராலும் தூய்மையாக முடியாது என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் தூய்மை ஆகுவதற்குரிய வழியை மனிதர்களால் உங்களுக்குக் காண்பிக்க முடியாது. ஒரேயொரு தந்தையே தூய்மையாக்குபவர் ஆவார். ஒரேயொரு உலகமே உள்ளது. அது புதிய உலகம் எனவும் பழைய உலகம் எனவும் அழைக்கப்படுகிறது. புதிய உலகில் புதிய பாரதமும் புதிய டெல்லியும் இருக்கிறது எனக் கூறப்படுகிறது. அது மீண்டும் புதியதாக வேண்டும், அங்கு புதிய இராச்சியம் இருக்கும். இங்கு பழைய உலகில் பழைய இராச்சியம் இருக்கிறது. பழைய உலகம் என்றால் என்ன என்பதையும் புதிய உலகம் என்றால் என்ன என்பதையும் நீங்கள் மாத்திரம் அறிவீர்கள். அதிகளவுக்குப் பக்தியின் விரிவாக்கம் உள்ளது. அது அறியாமை என அழைக்கப்படுகிறது. ஒரேயொரு தந்தையே ஞானக்கடல் ஆவார். தந்தை உங்களை “இராமா இராமா” எனச் செபிக்குமாறோ அல்லது இதைச் செய்யுங்கள் அல்லது அதைச் செய்யுங்கள் எனவோ கூறுவதில்லை, இல்லை. எவ்வாறு உலகின் வரலாறும் புவியியலும் மீண்டும் மீண்டும் நடைபெறுகிறது என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் இப்பொழுது ஆன்மீக ஞானம் என்று அழைக்கப்படுகின்ற இக்கல்வியைக் கற்கிறீர்கள். இதன் அர்த்தத்தை எவரும் அறிய மாட்டார்கள். ஒரேயொரு தந்தையே ஞானக்கடல் என அழைக்கப்படுகிறார். அவரே ஆன்மீக ஞானம்-நிறைந்த தந்தை ஆவார். தந்தை ஆத்மாக்களுடன் பேசுகிறார். தந்தை உங்களுக்குக் கற்பிக்கிறார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இது ஆன்மீக ஞானமாகும். “ருஹானி ஞானம்” என்பது ஆன்மீக ஞானமாகும். பரமாத்மாவாகிய பரமதந்தை ஒரு புள்ளி என்பதையும் அவர் உங்களுக்குக் கற்பிக்கிறார் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். ஆத்மாக்களாகிய நாங்கள் கற்கிறோம். இதனை மறக்க வேண்டாம். பின்னர் ஆத்மாக்களாகிய நாங்கள் பெறுகின்ற இந்த ஞானத்தை ஏனைய ஆத்மாக்களுக்குக் கொடுக்கிறோம். நீங்கள் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையின் நினைவில் நிலைத்திருக்கும் பொழுது மாத்திரமே அங்கு நினைவு இருக்க முடியும். பலர் நினைவுசெய்வதில் பலவீனமாக இருக்கிறார்கள். அவர்கள் மிக விரைவில் சரீர உணர்வு உடையவர்கள் ஆகுகிறார்கள். ஆத்ம உணர்வு உடையவர்களாக இருப்பதை நீங்கள் பயிற்சி செய்ய வேண்டும். இந்த ஆத்மாவாகிய நான் இவருடன் ஒரு பேரத்தைச் செய்கிறேன். ஆத்மாவாகிய நான் வியாபாரத்தைச் செய்கிறேன். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுவதிலும் தந்தையை நினைவு செய்வதிலும் மாத்திரமே நன்மை உள்ளது. நான் ஒரு யாத்திரையில் இருக்கிறேன் எனும் ஞானம் இந்த ஆத்மாவுக்கு உள்ளது. நீங்கள் செயல்களைச் செய்ய வேண்டும். நீங்கள் உங்கள் குழந்தைகளையும் உங்கள் வியாபாரம் போன்றவற்றையும் கவனித்துக் கொள்ள வேண்டும். வியாபாரத்தைச் செய்யும்பொழுது “நான் ஓர் ஆத்மா” என்பதைப் பெரும் சிரமத்துடனேயே எவராவது நினைவு செய்கிறார்கள். தந்தை கூறுகிறார்: ஒருபொழுதும் தவறான செயல்கள் எதனையும் செய்ய வேண்டாம். விகாரத்தில் ஈடுபடுவதே மிகப்பெரும் பாவமாகும். இதுவே அனைவரையும் அதிகளவுக்குத் தொல்லைப்படுத்துகிறது. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் தூய்மை ஆகுவதற்குரிய ஒரு சத்தியத்தைச் செய்கிறீர்கள். இச்சத்தியத்தின் ஞாபகார்த்தமே ரக்ஷா பந்தன் ஆகும். ஆரம்ப நாட்களில் ராக்கிகள் ஒரு சில பைசாக்கள் பெறுமதி வாய்ந்தவையாக இருந்தன. ஒரு பிராமணக் குருக்கள் சென்று ராக்கிகளைக் கட்டுவது வழக்கமாகும். இந்நாட்களில் அவர்கள் அத்தகைய நாகரிகமான ராக்கிகளைச் செய்கிறார்கள். உண்மையில் இந்நேரத்துக்கே ராக்கி பொருத்தமாக உள்ளது. நீங்கள் தந்தைக்குச் சத்தியம் செய்கிறீர்கள்: நான் மீண்டும் ஒருபொழுதும் விகாரத்தில் ஈடுபட மாட்டேன். உலக அதிபதியாகும் என்னுடைய ஆஸ்தியை நான் உங்களிடம் இருந்து கோருவேன். தந்தை கூறுகிறார்: நீங்கள் 63 பிறவிகளாக நச்சுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கிறீர்கள். இப்பொழுது நான் உங்களைப் பாற்கடலுக்கு அழைத்துச் செல்கிறேன். உண்மையில் அதைப் போன்ற கடல் இருப்பதில்லை. ஒப்பிட்டுப் பார்ப்பதற்காகவே அவ்வாறு கூறப்படுகிறது. நான் உங்களைச் சிவாலயத்துக்கு (சிவனின் ஆலயம்) அழைத்துச் செல்கிறேன். அங்கே பெருமளவு சந்தோஷம் உள்ளது. இப்பொழுது இது இறுதிப் பிறவியாகும். ஓ ஆத்மாக்களே, தூய்மை ஆகுங்கள்! நீங்கள் தந்தை கூறுவதைச் செவிமடுக்க மாட்டீர்களா? உங்கள் தந்தையான கடவுளே உங்களுக்குக் கூறுகிறார்: இனிய குழந்தைகளே, விகாரத்தில் ஈடுபடாதீர்கள். உங்கள் தலைமீது பல பிறவிகளின் பாவச்சுமை உள்ளது. என்னை நினைவு செய்வதால் மாத்திரமே அவை எரிக்கப்பட முடியும். உங்களுக்கு முன்னைய கல்பத்திலும் இக்கற்பித்தல்கள் கொடுக்கப்பட்டன. நீங்கள் தொடர்ந்தும் அவரை மாத்திரம் நினைவு செய்வீர்கள் எனும் உத்தரவாதத்தை நீங்கள் தந்தைக்குக் கொடுக்கும் பொழுது மாத்திரம் தந்தை உங்களுக்கு இந்த உத்தரவாதத்தைக் கொடுக்கிறார். மேலும் சரீரங்களின் உணர்வு எஞ்சியிராதவாறு அவரைத் தொடர்ந்தும் அதிகளவுக்கு நினைவு செய்யுங்கள். பிரம்ம தத்துவத்தின் ஞானமுள்ள சந்நியாசிகளில் சிலர் மிகவும் உறுதியானவர்களும் திடசங்கற்பத்தை உடையவர்களும் ஆவர். அவர்களும் எங்காவது அமர்ந்திருக்கையில் தங்கள் சரீரத்தை விட்டு நீங்குகிறார்கள். இங்கு தூய்மையாகி விட்டதும் நீங்கள் வீடு திரும்ப வேண்டும் எனத் தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். அம்மக்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் வேளையில் தங்கள் சரீரங்களை விட்டு நீங்குகிறார்கள். எவ்வாறாயினும் அவர்கள் தங்கள் சரீரங்களை விட்டு நீங்கும்பொழுது முக்திக்கோ அல்லது ஜீவன்முக்திக்கோ செல்வார்கள் என்பதல்ல, இல்லை. அவர்கள் மீண்டும் இங்கேயே திரும்பி வர வேண்டியுள்ளது. ஆனால் அவர்கள் நிர்வாணாவுக்குச் சென்று விட்டதாக அவர்களுடைய சிஷ்யர்கள் நம்புகிறார்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: ஒருவர் கூட வீடு திரும்பிச் செல்ல முடியாது, அது நியதியல்ல. விருட்சம் நிச்சயமாக வளரவே வேண்டும். நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் அமர்ந்திருக்கிறீர்கள். ஏனைய மனிதர்கள் அனைவரும் கலியுகத்தில் இருக்கிறார்கள். நீங்கள் தேவ சமுதாயத்தில் ஒருவர் ஆகுகிறீர்கள். உங்கள் தர்மத்துக்கு உரியவர்கள் தொடர்ந்தும் வருவார்கள். அங்கு தேவர்களின் வம்சாவளி விருட்சம் உள்ளது. இங்கு அவர்கள் ஏனைய சமயங்களுக்கு மாறுகிறார்கள் அல்லது மதம் மாற்றப்படுகிறார்கள். அவர்கள் மீண்டும் ஒருமுறை வெளிப்படுவார்கள். அங்கு வேறு யார் அவர்களின் இடத்தை நிரப்புவார்கள்? தங்கள் சொந்த இடத்தை நிரப்புவதற்கு அவர்கள் நிச்சயமாக இங்கே திரும்பவும் வருவார்கள். இவை மிகவும் சூட்சுமமான விடயங்களாகும். ஏனைய சமயங்களுக்கு மாற்றப்பட்டுள்ள மிகவும் சிறந்தவர்கள் பலரும் வருவார்கள். ஆகவே அவர்கள் தங்களின் சொந்த இடத்துக்குத் திரும்பவும் வருவார்கள். இஸ்லாமியர்களும் கூட உங்களிடம் வருவார்கள். பெருமளவு எச்சரிக்கை இருக்க வேண்டும். ஏனைய சமயத்தவர்கள் எத்தனை பேர் இங்கு வருகிறார்கள் என அவர்கள் (காவல் துறையினர்;) புலன் விசாரணை செய்வதற்காக விரைந்து வருவார்கள். அவசரகாலச் சட்டம் இருக்கும்பொழுது அவர்கள் பலரைக் கைது செய்கிறார்கள். ஆனால் அவர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டால் அவர்கள் அவர்களை விடுவிக்கிறார்கள். ஒரு கல்பத்தின் முன்னர் என்ன நடைபெற்றது என்பதை நீங்கள் இப்பொழுது காண்கிறீர்கள். முன்னைய கல்பத்திலும் அது அவ்வாறே நடைபெற்றது. நீங்கள் இப்பொழுது மேன்மையானவர்களாக சாதாரண மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுகிறீர்கள். இதுவே அதிமேன்மையான பிராமண குலமாகும். இந்த நேரத்தில் தந்தையும் குழந்தைகளும் ஆன்மீக சேவையில் இருக்கிறார்கள். ஒரு ஏழையைச் செல்வந்தர் ஆக்குவது ஆன்மீக சேவையாகும். தந்தை பலருக்கும் நன்மை அளிக்கிறார். ஆகவே குழந்தைகளாகிய நீங்களும் உதவி செய்ய வேண்டும். ஏனைய பலருக்கும் வழியைக் காண்பிப்பவர்கள், மிகவும் உயரச் செல்வார்கள். குழந்தைகளாகிய நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். ஆனால் தந்தையிடமே பொறுப்பு உள்ளதால் நீங்கள் கவலைப்படக் கூடாது. நீங்கள் மிகவும் தீவிரமாக முயற்சி செய்வதற்குத் தூண்டப்படுகிறீர்கள். பின்னர் நீங்கள் என்ன பலனைப் பெற்றாலும் அதையே நீங்கள் முன்னைய கல்பத்திலும் பெற்றதாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகிறார்: குழந்தைகளே, கவலைப்பட வேண்டாம். சேவை செய்வதற்கான முயற்சியைச் செய்யுங்கள். குழந்தைகள் அவ்வாறு ஆகாது விட்டால் தந்தையால் என்ன செய்ய முடியும்? அவர்கள் இந்தக் குலத்துக்கு உரியவர்கள் இல்லையெனில், அப்பொழுது நீங்கள் எவ்வளவு கடுமையாக முயன்றாலும் சிலர் உங்களுக்கு அதிகளவு சிரமத்தையும் சிலர் குறைவான சிரமத்தையும் கொடுக்கின்றார்கள். அவர்கள் அதிகளவு துன்பத்தை அனுபவிக்கும் பொழுது அவர்கள் அனைவரும் வருவார்கள் என பாபா கூறியுள்ளார். உங்களுடையது எதுவும் வீணாகப் போக மாட்டாது. சரியான வழியைக் காண்பிப்பதே, உங்கள் கடமையாகும். சிவபாபா கூறுகிறார்: என்னை நினைவு செய்தால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நிச்சயமாகக் கடவுள் இருக்கிறார் எனவும் மகாபாரத யுத்த காலத்திலும் அவர் இருந்தார் எனவும் பலர் கூறுகிறார்கள். எவ்வாறாயினும் அந்நேரத்தில் எந்தக் கடவுள் இருந்தார் என்பதில் அவர்கள் குழப்பம் அடைந்துள்ளார்கள். அது ஸ்ரீகிருஷ்ணராக இருந்திருக்க முடியாது. சத்தியயுகத்தில் மாத்திரமே ஸ்ரீகிருஷ்ணர் அந்த அதே முகச்சாயல்களுடன் இருக்க முடியும். ஒவ்வொரு பிறவியிலும் முகச்சாயல்கள் மாறுகின்றன. இப்பொழுது உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. கடவுள் எவ்வாறு பழைய விடயங்களைப் புதியது ஆக்குகிறார் என்பதை எவரும் அறிய மாட்டார். இறுதியில் உங்கள் பெயர் போற்றப்படும். இப்பொழுது ஸ்தாபனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பின்னர் விநாசம் நடைபெற்று அதன்பின்னர் நீங்கள் ஆட்சி செய்வீர்கள். ஒருபுறத்தில் புதிய உலகையும் மறுபுறத்தில் பழைய உலகையும் காண்பிக்கும் படம் மிகவும் சிறந்ததாகும். பிரம்மாவினூடாக ஸ்தாபனையும் சங்கரரினூடாக விநாசமும் எனக் கூறப்பட்டுள்ளது, ஆனால் அவர்கள் எதையும் புரிந்து கொள்வதில்லை. திரிமூர்த்தியே பிரதான படமாகும். சிவபாபாவே அதிமேன்மையானவர் ஆவார். சிவபாபாவே உங்களுக்கு பிரம்மாவினூடாக நினைவு யாத்திரையைக் கற்பிக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். பாபாவை நினைவு செய்யுங்கள். “யோகம்” எனும் வார்த்தை சிரமமாக உணரப்படுகிறது. “நினைவு செய்தல்” என்னும் வார்த்தை மிகவும் இலகுவானது. “பாபா” என்னும் வார்த்தை மிகவும் அழகானது. உலக இராச்சியத்தைக் கொடுக்கின்ற தந்தையை ஆத்மாக்களாகிய உங்களால் நினைவு செய்ய இயலாதுள்ளது என்பதையிட்டு நீங்களே வெட்கப்பட வேண்டும். நீங்களே வெட்கப்பட வேண்டும். தந்தையும் கூறுகிறார்: நீங்கள் விவேகம் அற்றவர்கள்! உங்களால் தந்தையை நினைவு செய்ய இயலாதிருப்பின் நீங்கள் எவ்வாறு உலக இராச்சியத்தைக் கோருவீர்கள்? எவ்வாறு உங்கள் பாவங்கள் அழிக்கப்படும்? நீங்கள் ஆத்மாக்கள், நான் பரமாத்மாவாகிய உங்களின் அநாதியான பரம தந்தை ஆவேன். நீங்கள் தூய்மையாகி சந்தோஷ தாமத்துக்குச் செல்ல விரும்பினால் அப்பொழுது ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். உங்கள் தந்தையான என்னை நினைவுசெய்தால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் என்னை நினைவு செய்யாவிட்டால் எவ்வாறு உங்கள் பாவங்கள் அழிக்கப்படும்? அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய் தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. எதைப் பற்றியும் கவலைப்படாது எல்லா வகையிலும் முயற்சி செய்யுங்கள். ஏனெனில் தந்தை, தானே எங்களுக்கான பொறுப்பு எடுத்துள்ளார். எங்களுடையது எதுவும் வீணாகப் போக முடியாது.2. தந்தையைப் போன்று மிக மிக இனிமையானவர் ஆகுங்கள். பலருக்கும் நன்மை அளியுங்கள். இந்த இறுதிப் பிறவியில் நிச்சயமாகத் தூய்மை ஆகுங்கள். வியாபாரம் போன்றவற்றைச் செய்யும் பொழுது “நான் ஓர் ஆத்மா” என்பதைப் பயிற்சி செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் காட்சிகளை அருளும் ரூபமாகி உங்களின் குடும்பம் என்ற விரிவாக்கத்திற்குள் இருக்கும்போது உங்களின் தேவதை ரூபத்தைக் காட்டுவீர்களாக.உங்களின் இல்லறத்தின் விரிவாக்கத்திற்குள் இருக்கும்போது அந்த விரிவாக்கத்தை அமிழ்த்தி அப்பால் இருப்பதைப் பயிற்சி செய்யுங்கள். ஒருகணம், உங்களின் பௌதீகப் பணிகளைச் செய்யுங்கள். அடுத்தகணம், சரீரமற்றவர் ஆகுங்கள். இந்தப் பயிற்சியானது உங்களின் தேவதை ரூபத்தைக் காட்டும். நீங்கள் உங்களின் அதியுயர்ந்த ஸ்திதியில் இருப்பதன் மூலம் அற்பமான சூழ்நிலைகளும் புறத்தே இருப்பது போல் அனுபவம் செய்யப்படும். மேலே இருப்பதன் மூலம் நீங்கள் தாழ்ந்து இருப்பதில் இருந்து விடுபடுவீர்கள். சிரமப்படுவதில் இருந்தும் நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள். காலமும் சேமிக்கப்படும். சேவையும் வேகமாக நடைபெறும். உங்களின் புத்தியும் மிகப் பரந்ததாகவும் எல்லையற்றதாகவும் ஆகிவிடும். அப்போது உங்களால் ஒரே வேளையில் பல பணிகளைச் செய்யக் கூடியதாக இருக்கும்.
சுலோகம்:
சதா சந்தோஷமாக இருப்பதற்கு ஆத்ம தீபத்தில் இந்த ஞானம் என்ற எண்ணெயைத் தொடர்ந்து ஊற்றுங்கள்.அவ்யக்த சமிக்கை: ஓர் இலகு யோகியாக இருப்பதற்கு இறை அன்பை அனுபவிப்பவராக இருங்கள்.
தந்தைக்குக் குழந்தைகளான உங்களிடம் அதிகளவு அன்பு உள்ளது. இதனாலேயே அவர் கூறுகிறார்: குழந்தைகளே, நீங்கள் யாராக இருந்தாலும் எப்படிப்பட்டவராக இருந்தாலும் நீங்கள் என்னுடையவர்களே. அதேபோல் அன்புக்கடலில் அமிழ்ந்திருந்து உங்களின் இதயபூர்வமாக ‘பாபா, நீங்கள் எப்படிப்பட்டவராக இருந்தாலும் நீங்களே என்னுடைய சகலதுமாக இருக்கிறீர்கள்!’ எனக் கூறுங்கள். ஒருபோதும் பொய்மையான இராச்சியத்தின் எதனுடைய ஆதிக்கத்திற்கும் உள்ளாகாதீர்கள். தந்தை குழந்தைகளான உங்களுக்கு உங்களின் மேன்மையான பாக்கிய ரேகையை வரைவதற்கான பேனாவை வழங்கியுள்ளார்: உங்களால் நீங்கள் விரும்பிய அளவு பாக்கியத்தை உருவாக்க முடியும்.
விசேட அறிவித்தல்: பாபாவின் ஸ்ரீமத்திற்கேற்ப முரளிகள் பாபாவின் குழந்தைகளுக்கு மட்டுமே ஆகும். இராஜயோகா பாடநெறியை எடுத்துக் கொள்ளாதவர்களுக்கு அல்ல. ஆகவே கருவி ஆசிரியர்கள், சகோதர, சகோதரிகள் எல்லோரிடமும் பாபாவின் சாகார் முரளிகளின் ஓடியோ மற்றும் வீடியோப் பதிவுகளை யுரியூப், பேஸ்புக், இன்ஸ்ரகிராம் அல்லது எந்தவொரு வட்ஸ் அப் குழுவிலும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் எனப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.