06.09.26 Avyakt Bapdada Tamil Lanka Murli 19.10.2011 Om Shanti Madhuban
நேரத்தை வீணாக்குவதிலும் வீணான எண்ணங்களிலும் வெற்றி நிறைந்தவர் ஆகுங்கள். ஒருவரை ஒருவர் சந்திந்து, எவ்வாறு சம்ஸ்காரங்களை ஒத்திசையச் செய்ய முடியும் என்பதைப் பற்றிச் சிந்தியுங்கள்.
இன்று, பாப்தாதா எங்கும் உள்ள தனது இனிமையிலும் இனிமையான, அழகான குழந்தைகளைப் பார்க்கிறார். அனைவரும் தமது நினைவுகளை மிகுந்த அன்புடன் வழங்குகிறார்கள். தந்தைக்காக மட்டும் அவர்கள் அதிகளவு அன்பைக் கொண்டிருக்கிறார்கள். இறைவனிடம் இருந்து பெறப்படும் இந்த அன்பானது இந்த வேளையில் மட்டுமே பெறப்படுகிறது. ஒவ்வொரு குழந்தையும் அன்பிலே மூழ்கி இருக்கிறார். தந்தையும் ஒவ்வொரு குழந்தைக்கும் அவரின் அன்பிற்கான பதிலை வழங்குகிறார். ஆஹா குழந்தைகளே! ஆஹா! தந்தைக்கு முன்னால் தனிப்பட்ட முறையில் இருந்தாலென்ன அல்லது தொலைவில் இருந்தாலென்ன, ஒவ்வொரு குழந்தையும் தந்தையின் இதயத்தில் அமிழ்ந்திருக்கிறார். ஒவ்வொரு குழந்தையின் இதயத்திலும் வேறு யார் என்மீது இந்தளவு அன்பு வைத்திருப்பார்? என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்த ஆத்ம உணர்வு அன்பானது தந்தைக்கும் குழந்தைகளுக்கும் இடையிலானது. இது ஒவ்வொரு குழந்தையையும் சரீரத்தில் இருந்து பற்றற்றவராகவும் தந்தையால் நேசிக்கப்படுபவராகவும் ஆக்குகிறது. இந்த வேளையில் மட்டுமே இந்த அன்பானது குழந்தைகளான உங்களால் பெறப்படுகிறது. இந்த அன்பானது குழந்தைகளான உங்களை, நீங்கள் இருந்ததில் இருந்து மகத்தான ஒன்றாக மாற்றுகிறது. இந்த அன்பானது இந்த ஒரு பிறவியில் மட்டுமே பெறப்படுகிறது. குழந்தைகளின் அன்பைப் பார்க்கும்போது, தந்தையும் குழந்தைகளின் அன்பிலே மூழ்கி இருக்கிறார்.
இன்று, பாப்தாதா ஒவ்வொருவரின் நெற்றியிலும் மூன்று பாக்கிய ரேகைகளைப் பார்க்கிறார். ஒன்று, தந்தையின் ரூபத்தில் இருந்து பெறப்பட்ட ஆஸ்தியின் பாக்கியம். இரண்டாவது, ஆசிரியரின் ரூபத்தில் பெறப்பட்ட மேன்மையான கற்பித்தல்களின் பாக்கியம். மூன்றாவது, சற்குருவின் ரூபத்தில் இருந்து பெறப்பட்ட ஆசீர்வாதங்களின் பாக்கியம். ஒவ்வொருவரின் நெற்றியும் இந்த மூன்று வகையான பாக்கியங்களல் ஜொலிக்கின்றன. பாப்தாதாவும் தனது பாக்கியசாலிக் குழந்தைகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். நீங்கள் தனிப்பட்ட முறையில் அவரின் முன்னால் அமர்ந்திருந்தாலென்ன அல்லது வெகு தொலைவில் இருந்தாலென்ன, நீங்கள் அவரின் இதயத்திற்கு நெருக்கமானவர்கள். குழந்தைகளுக்கும் தந்தைக்கும் இடையிலான இத்தகைய அன்பு, கல்பம் முழுவதிலும் இந்த நேரத்தில் மட்டுமே பெறப்படுகிறது. இந்த அன்பின் அனுபவத்தை நீங்கள் மற்றவர்களுக்கும் கொடுக்கிறீர்கள். இப்போது, பிராமண ஆத்மாக்களான நீங்கள் எதையோ கண்டு விட்டீர்கள் எனச் சில மக்கள் நினைக்கிறார்கள். நீங்கள் எதைப் பெற்றீர்கள் என்பது தொடர்ந்து அவர்களுக்குத் தெளிவாக ஆகுகிறது. எங்கும் பிளாற்றினம் விழாவின் பெரும் விளைவு இருப்பதைத் தந்தை கண்டார். குழந்தைகள் தமது இதயபூர்வமாகச் சேவை செய்தார்கள். அத்துடன் எதிர்காலத்திற்காகவும் திட்டங்களைச் செய்தார்கள். எங்கும் உள்ள குழந்தைகளான உங்கள் அனைவரையும் பாப்தாதா பாராட்டுகிறார்: ஆஹா குழந்தைகளே! ஆஹா! 75 வருடங்களாக நீங்கள் அனைத்தையும் உங்களின் சொந்த முயற்சிக்கேற்ப செய்து வருகிறீர்கள். தடைகளில் இருந்து விடுபட்டிருப்பதன் மூலமும் மற்றவர்களைத் தடைகளில் இருந்து விடுபடச் செய்வதன் மூலமும் நீங்கள் இங்கே வந்தடைந்துள்ளீர்கள். குழந்தைகளான உங்களிடம் இருந்து தந்தை இப்போது எதை விரும்புகிறார்? ஒவ்வொரு குழந்தையும் தந்தைக்குச் சமமானவர் ஆகுவார் என்றே தந்தை சதா எதிர்பார்க்கிறார். எப்படித் தந்தை பிரம்மா வெற்றியாளர் ஆகினாரோ, அவ்வாறே, ஒவ்வொரு குழந்தையும் எப்போதும் வெற்றியாளர் ஆகவேண்டும். இதற்காகத் தந்தை பிரம்மா என்ன செய்தார்? தந்தையைப் பின்பற்றுங்கள்! எனவே, ஒவ்வோர் அடியை எடுத்து வைக்கும்போதும், நீங்கள் அனைவரும் அனைத்திற்கும் முதலில் சோதிக்க வேண்டும்: தந்தை பிரம்மா இதைச் செய்தாரா? குறிப்பிட்டதொரு குழந்தை அவரின் முயற்சிகளிலும் சேவையிலும் பலவீனமாக இருப்பதை அறிந்திருந்த போதிலும், பலவீனமாக இருப்பவர்களின் மீது அவர் மேலதிகமாக கருணை மற்றும் நன்மை செய்யும் உணர்வுகளைக் கொண்டிருந்தார். பாப்தாதா குழந்தைகள் அனைவருக்கும் கூறுகிறார்: அதேபோல், கருணை மற்றும் நன்மை செய்யும் பார்வையுடன் தூய உணர்வுகளையும் நல்லாசிகளையும் கொண்டிருங்கள், உங்களின் குடும்பத்தின் ஒவ்வொரு சகோதரன் மற்றும் சகோதரியுடன் ஒத்துழையுங்கள். பாப்தாதா உங்களுக்கு முன்னரும் கூறியுள்ளார், அதாவது, அன்பெனும் பாடத்தில், ஒவ்வொரு குழந்தையும் தனது கொள்ளளவிற்கேற்ப சித்தி அடைந்துள்ளார். அன்பினாலேயே நீங்கள் முன்னேறுகிறீர்கள். குழந்தைகளின் அன்பைப் பார்க்கும்போது, தந்தை களிப்படைகிறார். அன்பெனும் பாடத்தால், ஒவ்வொரு குழந்தையும் வரிசைக்கிரமாக, முன்னேறுகிறார். இப்போது அன்பினால் ஒரு தியாகம் செய்யப்பட வேண்டும் என்று பாப்தாதா விரும்புகிறார். உங்களுக்குத் தந்தையின் மீது அன்புள்ளது. எனவே, நீங்கள் எதைப் பலி கொடுக்கப் போகின்றீர்கள்? பாப்தாதாவிற்கு என்ன வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்கள். பாப்தாதாவிற்கு என்ன வேண்டும் என்று நீங்கள் புரிந்து கொண்டீர்கள், அல்லவா? தலையை அசையுங்கள்! உங்களுக்குப் புரிகிறதா? அப்படி என்றால் அதைச் செய்வதற்கான தைரியம் உங்களுக்கு இருக்கிறதா? உங்களுக்குத் தைரியம் இருந்தால், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! உங்களுக்குத் தைரியம் இருக்கிறதா? அச்சா. குழந்தைகளுக்குத் தைரியம் இருக்கும்போது, தந்தையின் உதவி எப்போதும் இருக்கும்.
இதுவரை பாப்தாதா பார்த்த பெறுபேறுகளில், சம்பூரணமான தூய்மையைப் பொறுத்தவரை, வீணான எண்ணங்களும் தூய்மை இன்மையின் விதையாக உள்ளன. உங்களில் பெரும்பாலானோரிடம் இன்னமும் வீணான எண்ணங்களைக் கொண்டிருக்கும் சம்ஸ்காரம் இருப்பதை பாப்தாதா பார்த்தார். ஒன்று, வீணான எண்ணங்கள், மற்றையது நேரத்தை வீணாக்குதல். இது இப்போதும் பெரும்பாலான குழந்தைகளான உங்களில் காணப்படுகிறது. வீணான எண்ணங்களுக்கான அடிப்படை, உங்களின் மனம் ஆகும். இது உங்களை மன்மனாபவ ஆகுவதற்கு அனுமதிப்பதில்லை. பாப்தாதா உங்களுக்கு இந்த சமிக்கையை நீண்ட காலமாக வழங்கி வருகிறார்: என்ன நடக்க இருக்கிறதோ, அது சடுதியாக நடக்கப் போகிறது. ஏதாவது சடுதியாக நடப்பதைப் பொறுத்தவரை, குழந்தைகளான உங்களில் பெரும்பாலானோரில் வீணான எண்ணங்களைக் கொண்டிருக்கும் சம்ஸ்காரம் இருப்பதை பாப்தாதா கண்டார். தந்தை பிரம்மா வீணான எண்ணங்களைக் கொண்டிருப்பதிலும் தனது நேரத்தை வீணாக்குவதிலும் வெற்றியாளர் ஆகினார். அவர் கர்மாதீத் ஆகினார். எனவே, தந்தையைப் பின்பற்றுங்கள்.
உங்களின் மனம் உங்களின் படைப்பு, நீங்களே உங்களின் மனதைப் படைப்பவர் என்பதை பாப்தாதா பார்த்தார். அதனால் நீங்கள் உங்களின் மனதைக் கட்டுப்படுத்த வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் மனதின்மீது கட்டுப்படுத்தும் சக்தியையும் ஆளும் சக்தியையும் கொண்ட மாஸ்ரர் ஆவீர்கள். அப்படி இருந்தும், உங்களின் மனம் உங்களை ஏமாற்றுகிறது. அது உங்களின் படைப்பு. ‘இது என்னுடையது!’ என்று நீங்கள் சொல்கிறீர்கள். எவ்வாறாயினும், போதியளவு கட்டுப்படுத்தும் சக்தி இல்லாததால், அது உங்களை ஏமாற்றுகிறது. மனம் குதிரை போன்றது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் உங்களிடம் ஸ்ரீமத் என்ற கடிவாளம் உள்ளது. உங்களிடம் இந்தக் கடிவாளங்கள் இருக்கின்றன, அல்லவா? உங்களின் மனம் உங்களை ஏதாவது வீணானதற்குள் எடுத்துச் செல்லுமாயின், அந்தக் கடிவாளங்களை இறுக்குவதன் மூலம், உங்களால் இன்னமும் எஞ்சி உள்ள வீணான எண்ணங்கள் என்ற சிறிதளவு தூய்மை இன்மையையும் முடிக்க முடியும். உங்களின் மனதின் மாஸ்ரர் ஆகுங்கள். எவ்வாறு தந்தை பிரம்மா தனது மனதை ஒவ்வொரு நாளும் சோதித்தாரோ, அதேபோல், ஒவ்வொரு நாளும் உங்களின் மனதைச் சோதித்து, வீணான எண்ணங்கள் எவற்றையும் முடித்து விடுங்கள். இன்று, நீங்கள் இந்த வீணான எண்ணங்களை முடிக்க வேண்டும் என்றே பாப்தாதா விரும்புகிறார். குறைவான தீய எண்ணங்கள் காணப்படுகின்றன, ஆனால் அதிகளவில் வீணான எண்ணங்களே காணப்படுகின்றன. இவை உங்களின் அதிகளவு நேரத்தை எடுத்துக் கொள்கின்றன. உங்களின் மனதின் அதிபதியாகி, உங்களின் மனதை மும்முரமாக வைத்துக் கொள்ளுங்கள். அப்போது அதனால் கடிவாளங்களைத் தளர்வாக்கக் கூடிய எதனாலும் கவரப்பட முடியாது. இது சாத்தியமா? இன்று, பாப்தாதா அனைவருக்கும் வீணான எண்ணங்கள் அனைத்தையும் முடிப்பதற்கான எண்ணத்தை வழங்குகிறார். இது சாத்தியமா? வீணான எண்ணங்கள் அனைத்தையும் முடித்து, இதற்கான ஒரு விழாவைக் கொண்டாடுவோம் என்று நினைப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! அத்துடன் உங்களின் நேரம் வீணாக்கப்படுவதையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்களின் நேரம் மற்றும் உங்களின் எண்ணங்கள் இரண்டையும் நீங்கள் பாதுகாக்க வேண்டும். ஏனென்றால், பாப்தாதா ஒவ்வொருவரின் அட்டவணையையும் பார்க்கிறார். உங்களில் பெரும்பாலானோரின் அட்டவணைகளில் இந்தக் குறைபாடுகள் இருப்பதை பாப்தாதா கண்டார். தமது மனங்களின் அதிபதிகளால் மட்டுமே உலகின் அதிபதிகள் ஆகமுடியும். எவ்வாறு தந்தை பிரம்மா தனது மனதை வென்றவராகவும் உலகின் அதிபதியாகவும் ஆகினாரோ, அவ்வாறே அவர் இப்போது குழந்தைகளான உங்களை அழைக்கிறார். முன்னோடிக் குழுவினரும் உங்களை அழைக்கிறார்கள். முன்னோடிக் குழுவைச் சேர்ந்தவர்கள் அதிகாலை 4 மணிக்கு சூட்சும வதனத்திற்கு வந்து, ‘முக்தியின் வாசல் எப்போதும் திறக்கும்?’ என்று கேட்கிறார்கள் என உங்களுக்கு முன்னரே கூறப்பட்டுள்ளது. யார் இதைத் திறக்கப் போகின்றவர்கள்? நீங்கள் அனைவரும் முக்தியின் வாசலைத் திறக்கப் போகின்றீர்கள், அல்லவா? நீங்கள் சம்பூரணம் ஆகுவது என்றால் முக்தியின் வாசல் திறக்கும் என்று அர்த்தம். முன்னோடிக் குழுவைச் சேர்ந்தவர்கள் பாப்தாதாவுடன் இதயபூர்வமாக உரையாடுகிறார்கள்: எப்போது வரை? எனவே, தந்தை உங்களிடம் கேட்கிறார்: எப்போது வரை? எனவே, என்ன பதிலைக் கொடுப்பது? முதல் வரிசையில் இருப்பவர்களே: எப்போதுவரை? நீங்கள் ஒவ்வொரு பணிக்கும் ஒரு திகதியை நிச்சயம் செய்கிறீர்கள், அல்லவா? எனவே, இந்தப் பணிக்கு நீங்கள் எப்போது ஒரு திகதியை நிச்சயம் செய்வீர்கள்? தந்தை பிரம்மா தனது தேவதை ரூபத்தின் மூலம் உங்களை அழைக்கிறார். பாபாவிற்கு உங்களால் ஒரு திகதியைச் சொல்ல முடியுமா? கூறுங்கள்! உங்களால் ஒரு திகதியை நிச்சயம் செய்ய முடியுமா? இப்போது அந்தத் திகதி நிச்சயம் செய்யப்பட்டு விட்டதா? பாண்டவர்களே, உங்களின் கைகளை உயர்த்துங்கள். நீங்கள் அந்தத் திகதியை நிச்சயம் செய்து விட்டீர்களா? நீங்கள் செய்யவில்லை! ஏன்? தீதி கூறினார்: பாபா, எங்களுக்கு ஆழமான ஆசை இருந்தது: நாங்கள் வீடு செல்ல வேண்டும், நாங்கள் வீட்டுக்குச் செல்ல வேண்டும், நாங்கள் வீட்டுக்குச் செல்ல வேண்டும். தாதி கூறினார்: எங்களுக்கு ஆழமான ஆசை இருந்தது: நாம் கர்மாதீத் ஆகவேண்டும், நாம் கர்மாதீத் ஆகவேண்டும். உங்கள் அனைவருக்கும் தீதியின் மீதும் தாதியின் மீதும் அன்பு உள்ளதல்லவா? உங்களுக்கு அனைவரிடமும் அன்பு உள்ளது. ஏனென்றால், நீங்கள் அனைவரும் முன்னோடிக் குழுவிற்குச் சென்றுவிட்ட அனைவரின் மீதும் அன்பு வைத்திருக்கிறீர்கள். இப்போது, அவர்களின் கேள்விக்கான பதிலைச் சொல்லுங்கள். அதனால், இப்போது உங்களுக்கு இடையே இதயபூர்வமான உரையாடலைச் செய்து, ஒரு பதிலைத் தயார் செய்யுங்கள். நீங்கள் இதைச் செய்வீர்களா?
இன்று, இரட்டை வெளிநாட்டவர்கள் சந்திக்கும் நாள், அல்லவா? எனவே, இரட்டை வெளிநாட்டவர்களான நீங்களும் உங்களுக்கு இடையே இதைக் கலந்துரையாடி, அந்தத் திகதியை பாபாவிற்குக் கூறுங்கள். பாரதத்தைச் சேர்ந்தவர்களும் இதைக் கலந்துரையாடி பாபாவிடம் கூறுங்கள். உங்களிடம் பதில் இருக்கிறதா? ஆம், கூறுங்கள்! கூறுங்கள்! எதையாவது கூற விரும்புவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள். (நியூயோர்க் மோகினிபென்: பாபா, நீங்கள் ஒரு திகதியை நிச்சயம் செய்யுங்கள், நாங்கள் என்றும் தயாராகவே இருக்கிறோம்) இல்லை, நீங்கள் அதை நிச்சயம் செய்ய வேண்டும். நீங்கள் தயாராக வேண்டும், அல்லவா? தந்தை கூறுவார்: இந்தத் தீபாவளியில் இந்தத் தீபாவளியைக் கொண்டாடுங்கள். என்றும் தயாரா? நீங்கள் என்றும் தயாரா? இதனாலேயே பாபா கூறுகிறார்: நீங்கள் பாபாவிற்குக் கூறவேண்டும். (Dr.நிர்மலா கூறினார்: பாபா, எங்களுக்கு அடுத்த தீபாவளி வரை ஒரு வருடம் கொடுங்கள்) அச்சா, நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? அவர் ஒரு வருடம் கேட்கிறார். உங்களுக்கு ஒரு வருடம் தேவை என்று நினைப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! உங்களின் கைகளை உயரே உயர்த்துங்கள்! அச்சா. ஒரு வருடம் தேவை என்று நினைப்பவர்களின் பெயர்களைக் குறித்துக் கொள்ளுங்கள். நல்லது. ஏனைய அனைவரும் புன்னகை செய்கிறார்கள். கூறுங்கள்! (நிர்வேர்பாய்: இப்பொழுது இல்லையேல் எப்போதும் இல்லை! இது இன்றே இப்போதே இருக்க வேண்டும்) எனவே, கைதட்டுங்கள்! அச்சா. மிகவும் நல்லது. இப்போது, இப்பொழுதே நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் மனதில், நீங்கள் ஒருபோதும் வீணான எண்ணங்களை உங்களின் மனதில் பிரவேசிக்க அனுமதிக்க மாட்டீர்கள் என்று சத்தியம் செய்யுங்கள். இது சாத்தியமா? இப்பொழுதில் இருந்தே என்று நீங்கள் கூறுகிறீர்கள்: இப்போது இல்லையேல் எப்போதும் இல்லை. எனவே, குறைந்தபட்சம், நீங்கள் வீணான எண்ணங்களைக் கொண்டிருக்க மாட்டீர்கள் அல்லது உங்களின் நேரத்தை வீணாக்க மாட்டீர்கள் என்ற சத்தியத்தை நீங்கள் அனைவரும் செய்கிறீர்களா? இதற்குத் தயாராக இருப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! உங்களில் பெரும்பாலானோர் உங்களின் கைகளை உயர்த்துகிறீர்கள். இதற்கு நேரம் எடுக்கும் என்று உணர்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! எவரும் இல்லை. தமக்குச் சிறிது நேரம் தேவை என்று சொல்பவர்கள் ஒருசிலர் இருக்கிறார்கள். ஒருசிலர் தமது கைகளை உயர்த்துகிறார்கள். அச்சா, இந்தத் தீபாவளியின்போது இந்த ஒரு திடசங்கற்பமான எண்ணத்தைக் கொண்டிருங்கள். தமது கைகளை உயர்த்திய பெரும்பாலானோர் அனைவரும் நீங்கள் அனைவரும் ஒரு தியாகத்தைச் செய்ய வேண்டும். இதனாலேயே, உங்கள் அனைவரின் சார்பாகவும் நாங்கள் உங்களின் திடசங்கற்பமான எண்ணங்களுக்காக ஒரு கேக் வெட்டுவோம். உங்களுக்கு இது பிடித்திருக்கிறதா? இன்றைய கேக், இந்தத் திடசங்கற்பமான எண்ணத்தின் சின்னம் ஆகும். ஏனென்றால், நீங்கள் அனைவரும் - ஞானம் இல்லாதவர்கள்கூட - இப்போதே ஏதாவது நடக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். இப்போதே ஏதாவது நடக்க வேண்டும், ஆனால் அவர்களிடம் சக்தி இல்லை. உங்களின் எண்ணங்களை நிறைவேற்றும் சக்தி குழந்தைகளான உங்களிடம் உள்ளது. நீங்கள் தந்தையைப் பின்பற்றுகிறீர்கள்தானே? தந்தை பிரம்மாவின் பிறப்பு, ‘நான் இதைச் செய்ய வேண்டும்!’ என்ற திடசங்கற்பமான எண்ணத்துடனேயே நிகழ்ந்தது. நான் இதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். நான் இதைச் செய்யட்டுமா இல்லையா? என்றல்ல. நான் இதைச் செய்ய வேண்டும்! அந்த ஒரு திடசங்கற்பமான எண்ணம், பல குழந்தைகளின் எதிர்காலத்தை உருவாக்கியது. ஒரு பிரம்மாபாபா அதிகளவு தைரியத்தைப் பேணினார். அவர் தனது அரைவாசிப் பங்கைப் பெற்று, ஒரு யாகத்தை உருவாக்கினார். அவர் பிராமணர்களின் யாகத்தை உருவாக்கினார். இப்போது, தந்தை பிரம்மாவின் அந்த ஒரேயொரு திடசங்கற்பமான எண்ணத்தால், இந்தத் தேசத்தில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஆத்மாக்கள் இங்கே வந்தடைந்துள்ளார்கள். எனவே, திடசங்கற்பமான எண்ணத்தால் எதைத்தான் அடைய முடியாது? உங்களுக்கு முன்னால் இந்த உதாரணம் உள்ளது. உங்களிடம் மிக நல்ல எண்ணங்கள் இருக்கின்றன. அவை தந்தையை வந்தடைகின்றன. ஆனால் அவற்றிற்குத் திடசங்கற்பம் குறைவாக உள்ளது. ஏதாவது சந்தர்ப்பம் உங்களுக்கு முன்னால் வரும்போது, உங்களின் திடசங்கற்பம் குறைகிறது. திடசங்கற்பமே, வெற்றியின் திறவுகோல் ஆகும்.
பாருங்கள், டெல்லியைச் சேர்ந்தவர்கள் திடசங்கற்பமான எண்ணத்தைக் கொண்டிருக்கிறார்கள்: நாங்கள் இதைச் செய்ய வேண்டும். எனவே, அது நடந்தது, அப்படியல்லவா? ‘நாங்கள் அதைப் பற்றிச் சிந்தித்துப் பார்ப்போம், நாங்கள் அதைப் பார்ப்போம்’ என்று அவர்கள் சொல்லவில்லை. அது அனைவரின் திடசங்கற்பமான எண்ணமாக இருந்தது. இந்தப் புதல்வியும் இந்தக் குழந்தையும் கருவிகள் ஆகினார்கள். ஆனால் அனைவரின் ஒத்துழைப்பும் திடசங்கற்பமான எண்ணங்களும் நடைமுறை வெற்றியை ஏற்படுத்தின. அனைவரும் தமது கையை இதற்காகக் கொடுத்தார்கள், அவர்கள் அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட்டார்கள். ஆம், இல்லை, ஆம், இல்லை என்று அவர்கள் சொல்லவில்லை. திடசங்கற்பமான வழிகாட்டல் இருந்தது. ஏனென்றால், திடசங்கற்பத்திற்கு இந்தளவு சக்தி உள்ளது. நீங்கள் என்ன பணியை ஆரம்பித்தாலும் அனைத்திற்கும் முதலில், திடசங்கற்பமான எண்ணங்கள் என்ற விதையை விதையுங்கள். அது நிச்சயமாகப் பழத்தைத் தரும். இந்த 75 வருடங்களும் (இந்த வருடம் 90) எப்படிக் கடந்து சென்றன? தந்தை பிரம்மாவினதும் குழந்தைகளினதும் சகவாசத்தாலும் அவர்களின் திடசங்கற்பமான எண்ணங்களாலும் நாங்கள் 75 வருடங்களைப் பூர்த்தி செய்துவிட்டோம். அவர்கள் தொடர்ந்து முன்னேறினார்கள், மற்றவர்களையும் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் முன்னேறச் செய்தார்கள். இவ்வாறுதான் 75 வருடங்கள் பூர்த்தியாகின. இன்று, இந்த எண்ணத்தைக் கொண்டிருங்கள்: இன்று, நான் நிச்சயமாக காலத்தை வீணாக்குவதையும் வீணான எண்ணங்களையும் முடிக்க வேண்டும். வீணானவை முடிவடையும்போது, நிலையான, மேன்மையான எண்ணங்களின் பொக்கிஷம் அற்புதங்களைச் செய்யும்.
பாப்தாதா இரட்டை வெளிநாட்டவர்களைக் காண்பதில் மகிழ்ச்சி அடைகிறார். நீங்கள் முன்னேறுவதுடன் இரட்டைச் சேவை செய்வதிலும் மிக நல்ல கவனத்தைச் செலுத்துகிறீர்கள். அப்படி இருந்தும் பாப்தாதா மீண்டும் இந்த சமிக்ஞையை வழங்குகிறார்: நீங்கள் ஒருவரோடு ஒருவர் உங்களின் சம்ஸ்காரங்களை ஒத்திசைக்கும் நடனத்தைச் செய்ய வேண்டும். நிலையம் நன்றாக நடக்கிறது, நல்ல சேவை நடக்கிறது என்று நினைக்காதீர்கள். எவ்வாறாயினும், இது ஒரு குடும்பம் என்பதனால், இது இறைகுடும்பம், லௌகீகக் குடும்பம் அல்ல, ஆனால் இறை குடும்பம் - இறை குடும்பம் என்றால் ஒருவருக்கு ஒருவர் நல்லாசிகளையும் நன்மை செய்யும் உணர்வுகளையும் கொண்டிருத்தல் என்று அர்த்தம். இந்த எண்ணத்தை ஒருவருக்கு ஒருவர் கொண்டிருங்கள்: நாங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒருவர் மற்றவரின் சகவாசத்தால் முன்னேறிச் சென்று முக்தியின் வாசல்களைத் திறந்து, ஒன்றாக வீடு திரும்புவோம். இதனாலேயே, ஒவ்வொரு நிலையத்திலும் எத்தகைய சூழல் இருக்க வேண்டும் என்றால், இங்கே எட்டு அல்லது பத்துப் பேர் இருக்கிறார்கள் என்று மக்கள் நினைக்கக்கூடாது, ஆனால் இந்தப் பத்துப் பேரும் ஒன்றாக (ஒற்றுமையாக) இருக்கிறார்கள் என்று நினைக்க வேண்டும். இப்போது, நீங்கள் ஒவ்வொருவரும் தீபாவளியில் உங்களின் சம்ஸ்காரங்களை ஒத்திசைக்கும் நடனத்தை ஆட வேண்டும் என்ற எண்ணத்தை உங்களின் மனதில் கொண்டிருக்க வேண்டும். ஓர் ஆத்மாவேனும் எவரிடம் இருந்தும் பிரிந்து இருக்கக்கூடாது. அனைவரும் ஒற்றுமையாகவே இருக்க வேண்டும். இந்தத் தீபாவளியில், சம்ஸ்காரங்களை ஒத்திசைக்கும் நடனத்தை ஆடுங்கள். உங்களின் மனதில் இந்தத் திடசங்கற்பமான எண்ணத்தைக் கொண்டிருங்கள்: ஒருவரேனும் என்னுடன் சுமை உடையவராக ஆகக்கூடாது. அனைவரும் இலேசாக இருக்க வேண்டும். உங்களின் சம்ஸ்காரங்கள் ஒத்திசைவாக இல்லாவிட்டால், சுமை ஏற்படும். இந்த எண்ணத்துடன் நீங்கள் விரைவாக வாசல்களைத் திறப்பதற்குத் தயார் ஆகிவிடுவீர்கள் என்று தந்தை உணர்கிறார். சோதித்துப் பாருங்கள்: எவரும் உங்களுடன் குழப்பம் அடையக் கூடாது என்பது மட்டுமல்ல, எவரும் சுமை உடையவராகவும் ஆகக்கூடாது. இது சாத்தியமா? இது சாத்தியமா? இது சாத்தியம் என்றால் தலையை அசையுங்கள்! இது சாத்தியம் என்றால், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! அப்போது இந்தத் தீபாவளி மிகப் பிரமாண்டமாக இருக்கும்.
இரட்டை வெளிநாட்டவர்கள்: பாப்தாதா இரட்டை வெளிநாட்டவர்களான உங்களை ஒவ்வொரு நாளும் தனது இதயத்தில் வெளிப்படச் செய்கிறார். ஏன்? ஏன் அவர் உங்களை வெளிப்படச் செய்கிறார்? ஏனென்றால், இரட்டை வெளிநாட்டவர்கள் உலகம் முழுவதும் தந்தையின் பெயரைப் பெருமைப்படுத்துவதற்குக் கருவிகள் ஆகியுள்ளார்கள். எதனூடாக? அவர்கள் பாரதவாசிகள் இல்லாததால், அவர்கள் வெளிநாட்டவர்கள் என்பதனால், தமது பாக்கியத்தை அவர்கள் உருவாக்கி உள்ளார்கள். ஆகவே, அவர்கள் ஏன் விடுபட வேண்டும்? இந்தத் தூண்டுதல் டெல்லியில் இந்த நிகழ்ச்சிகளின் ஊடாக மிக நன்றாகப் பரவியது. இதனாலேயே, பாப்தாதா குழந்தைகளான உங்களை சேவைக்குக் கருவிகளாக வெளிப்படச் செய்துள்ளார். நீங்கள் பாரதத்தை விழித்தெழச் செய்வீர்கள். நீங்கள் அதை விழித்தெழச் செய்கிறீர்கள். நீங்கள் எதிர்காலத்திலும் பாரதத்தை விழித்தெழச் செய்யக்கூடிய விஐபி களைத் தயார் செய்வீர்கள். வெளிநாட்டவர்களான உங்களின் அனுபவம் பாரத மக்களை விழித்தெழச் செய்யும். ஆரம்பத்தில் நீங்கள் எவ்வாறு விஐபிகள் பலரை இங்கே அழைத்து வந்தீர்கள் என்பதை பாப்தாதா நினைவுகூருகிறார். நீங்கள் பல நிகழ்ச்சிகளை நடத்தினீர்கள். அந்தச் சேவை இப்போது நடைபெறுவதில்லை. தமது அனுபவங்களை மேடையில் பகிரக்கூடிய விஐபி களைத் தயார் செய்யுங்கள். இப்போது, அதிகளவில் கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன. நீங்களும் உங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டீர்கள், ஆனால் சிறிதளவு நேரமே இருந்தது. இப்போது, பாரதத்தைச் சேர்ந்தவர்களின் பாக்கியத்தை விழித்தெழச் செய்யக்கூடிய வெளிநாட்டவர்களைக் கொண்டு வாருங்கள். இப்போது, நீங்கள் அனைவரும் இத்தகைய சேவையை ஒன்றாகத் தொடர்ந்து அதிகரிக்க வேண்டும். இப்போது பிரதானமான விடயம் என்னவென்றால், நீங்கள் ஒவ்வொருவரும், அது பாரதவாசியோ அல்லது வெளிநாட்டைச் சேர்ந்தவரோ, உங்களை மிக விரைவாக சம்பூரணம் ஆக்கவேண்டும், அப்போது உங்களின் சம்பூரணநிலை முக்திக்கான வாசல்களைத் திறக்கும். அச்சா.
நீங்கள் பாபாவின் முன்னால் அமர்ந்திருந்தாலென்ன அல்லது எங்கே அமர்ந்திருந்தாலென்ன, அனைவரின் கவனமும் மதுவனத்தின் மீதே உள்ளது. அனைவரும் பாப்தாதாவைப் பார்க்கிறார்கள். உங்களின் பெரும்பாலானோர் பாப்தாதாவைப் பார்க்கிறீர்கள். சதா மலர்ச்சியாக உள்ள எங்கும் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் சதா இரட்டை முயற்சியாளர்களுக்கும் - இரட்டை முயற்சியாளர்கள் என்றால், சுயத்திற்கான முயற்சியைச் செய்வதுடன் சேவைக்காகவும் முயற்சியைச் செய்பவர்கள் - இத்தகைய இரட்டை முயற்சியாளர்களுக்கும், இரட்டைப் போதையையும் நம்பிக்கையையும் கொண்டிருப்பவர்களுக்கும் சதா தந்தையுடன் இருப்பவர்களுக்கும் சதா நன்மை செய்யும் உணர்வுகளையும் கருணையான தூய உணர்வுகளைக் கொண்டிருப்பவர்களுக்கும் பாப்தாதா தனிப்பட்ட முறையில் தனது இதயபூர்வமாக ஒவ்வொரு குழந்தைக்கும் அவரின் பெயரால் அன்பையும் நினைவுகளையும் வழங்குகிறார்.
எவ்வாறாயினும், வீணான எண்ணங்களை முடிப்பதைப் பற்றி பாபா இன்று கூறியதை மறக்காதீர்கள். எப்படியும் பதிவுகள் பாப்தாதாவை வந்தடைகின்றன. எத்தனை தீவிர முயற்சியாளர் குழந்தைகள் இருக்கிறார்கள் என்றும் ஒருவர் மற்றவரில் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அதிகரிப்பதுடன் அவர்களை முன்னேறச் செய்கின்றவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்றும் பாப்தாதா பார்ப்பார். யாராவது ஏதாவது தவறு செய்யும்போது, அவரின் தவறைப் பற்றிய எண்ணங்கள் உங்களின் மனதில் இருக்கும்: அவர் இதை அல்லது அதை அல்லது இதைச் செய்கிறார். இவை அனைத்தையும் முடித்து விடுங்கள்! அவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுங்கள், உங்களின் மேன்மையான உணர்வுகளைக் கொடுங்கள். இத்தகைய சேவை செய்வதன் மூலம், ஒன்றுகூடல் முழுவதையும் நீங்கள் மேன்மையான எண்ணங்கள் கொண்டவர்களாக ஆக்க வேண்டும். எந்தவொரு நிலையத்திலும் நிலையத்தில் உள்ள எவருக்காயினும் வேறு எதாவது உணர்வு இருக்கக்கூடாது. நல்லாசிகளும் தூய உணர்வுகளும் மட்டுமே இருக்க வேண்டும், இது சரிதானே? மிகவும் நல்லது. பாராட்டுக்களுடன்கூடவே, பாப்தாதா குழந்தைகள் அனைவருக்கும் தனது இதயபூர்வமாக அன்பையும் நினைவுகளையும் வழங்குகிறார். அச்சா.ஆசீர்வாதம்:
நீங்கள் கருணைநிறைந்த உலக நன்மைசெய்பவராகி, தன்னலமற்ற சேவை செய்வதன் மூலம் உலக இராச்சியத்தைப் பெறுவீர்களாக.தன்னலமற்ற சேவையாளர்கள் ஒருபோதும், ‘நான் இந்தளவு செய்துள்ளேன், அதன் காரணத்தால் நான் ஏதாவது கௌரவத்தை அல்லது மரியாதையைப் பெற வேண்டும்’ என்று நினைக்க மாட்டார்கள். அதுவும் எடுக்கும் ஒரு முறையே ஆகும். அருள்பவரின் குழந்தைகள் எடுத்துக் கொள்ளும் எண்ணங்களைக் கொண்டிருந்தால், அவர்களால் அருள்பவர்கள் ஆகமுடியாது. அவ்வாறு எடுத்துக் கொள்ளும் முறையானது, அருள்பவர்களுக்குப் பொருந்தாது. அந்த எண்ணம் முடிவடையும்போது, நீங்கள் உலகச் சக்கரவர்த்தி என்ற அந்தஸ்தைப் பெறுவீர்கள். இத்தகைய எல்லையற்ற விருப்பமின்மையைக் கொண்டுள்ள தன்னலமற்ற சேவையாளர்களால் மட்டுமே, கருணைநிறைந்த உலக உபகாரிகள் ஆகமுடியும்.
சுலோகம்:
உங்களின் தவறுக்காக மற்றவர்களைக் குறைகூறுவதும் மற்றவர்களைப் பற்றிச் சிந்திக்கும் (பரசிந்தன்) ஒரு வடிவமே ஆகும்.அவ்யக்த சமிக்ஞை: இப்போது உங்களின் அருள்கின்ற ரூபத்தை வெளிப்படுத்துங்கள்.
அனைத்திலும் மிகச்சிறந்த பரிசு, அருள்பவரின் குழந்தையாகி, அனைவருக்கும் ஒத்துழைப்பை வழங்குவதே ஆகும். பாழாகிப் போன ஒரு பணியை, பாழாகிப் போன சம்ஸ்காரங்களை அல்லது பாழாகிப் போன மனோநிலையை சரியாக்குவதற்காக உங்களின் நல்லாசிகளால் அனைவருடனும் எப்போதும் ஒத்துழையுங்கள். இவர் இதைக் கூறினார் அல்லது இதைச் செய்தார். இதைப் பார்த்து, கேட்டுப் புரிந்து கொள்ளும் போது, உங்களின் ஒத்துழைப்புக் களஞ்சியத்தால் மாற்றத்தை ஏற்படுத்தி, அந்த ஆத்மாவை நிரம்பியவர் ஆக்குங்கள். இதுவே அனைத்திலும் மிகப் பெரிய தானம் ஆகும்.