07.05.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, இந்த ஞானத்தின் மூலமும், யோகத்தின் மூலமும் உங்கள் நம்பிக்கை வளர்கின்றதே அன்றி, காட்சிகளைக் காண்பதனால் அல்ல. காட்சிகள் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளன. ஆயினும் அவை எவருக்கும் நன்மை அளிப்பதில்லை.
கேள்வி:
தந்தை நிச்சயமாக மந்திரவித்தையைக் கொண்டிருந்த பொழுதிலும், எந்தச் சக்தியை அவர் காட்டுவதில்லை?பதில்:
கடவுள் எல்லாம் வல்லவர் என்பதால் அவரால் இறந்தவர்களையும் உயிர்ப்பிக்க முடியும் என மக்கள் நம்புகின்றார்கள். எவ்வாறாயினும் பாபா கூறுகின்றார்: நான் இந்தச் சக்தியை வெளிப்படுத்துவதில்லை. ஆனால் ஒருவர் தீவிர பக்தி செய்கின்ற பொழுது, நான் அவருக்குக் காட்சியை அருள்கின்றேன். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. காட்சிகளை அருளும் மந்திரவித்தை தந்தையிடம் உள்ளது. இதனாலேயே சில குழந்தைகள் வீட்டில் இருந்தவாறே பிரம்மாவின் காட்சியையோ அல்லது ஸ்ரீகிருஷ்ணரின் காட்சியையோ காண்கின்றார்கள்.பாடல்:
அதிகாலையில் என் மனக் கதவில் வந்தது யார்?ஓம் சாந்தி.
இந்தப் பாடல் குழந்தைகள் அனைவரினதும் அனுபவமாகும். சத்தியத்தின் ஒன்றுகூடல்கள் (சத்சங்கங்கள்) பல இருக்கின்றன. குறிப்பாகப் பாரதத்தில் பல சத்சங்கங்கள் இருக்கின்றன. பல அபிப்பிராயங்களும், கருத்துக்களும் இருக்கின்றன. உண்மையில் அந்த ஒன்றுகூடல்கள் சற்சங்கங்கள் அல்ல. இந்த ஒரேயொரு சத்சங்கம் மாத்திரமே உள்ளது. அங்கே நீங்கள் கல்விமான்கள் அல்லது பண்டிதர்கள் போன்றவர்களினது முகங்களையே காண்பீர்கள். உங்கள் புத்தி அவர்கள் மீதே ஈர்க்கப்படும். எவ்வாறாயினும் இங்கே இது ஒரு தனித்துவமான விடயமாகும். இந்தச் சங்கமயுகத்தில் ஒருமுறை மாத்திரமே, இந்தச் சத்சங்கம் இடம்பெறுகின்றது. இது முற்றிலும் புதியதொரு விடயம். எல்லையற்ற தந்தைக்குத் தனக்கெனச் சொந்தமாக ஒரு சரீரமில்லை. அவர் கூறுகின்றார்: நான் உங்கள் அசரீரியான சிவபாபா. நீங்கள் ஏனைய சற்சங்களுக்குச் செல்லும்பொழுது சரீரங்களையே பார்க்கின்றீர்கள். நீங்கள் சமயநூல்களை மனப்பாடம் செய்து, பின்னர் அவர்களுக்குக் கூறுகின்றீர்கள். பல்வேறுபட்ட வேத சாத்திரங்கள் உள்ளன. பிறவிபிறவியாக நீங்கள் அவற்றைக் கேட்டு வருகிறீர்கள். இப்பொழுது இங்கே இது புதிய விடயமாகும். ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் புத்தியினால் புரிந்துகொள்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: ஓ எனது நீண்டகாலம் தொலைந்து இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகளே! ஓ எனது சாலிகிராம்களே! 5000 வருடங்களுக்கு முன்னர் பாபா இந்தச் சரீரத்தின் மூலம் உங்களுக்குக் கற்பித்தார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். உங்கள் புத்திகள் பின்னோக்கித் தொலைதூரம் செல்கின்றன. பாபா இப்பொழுது மீண்டும் வந்துள்ளார். “பாபா” என்ற வார்த்தை மிகவும் இனிமையானது! அவரே தாயும் தந்தையும் ஆவார். வேறு எவராவது இதைச் செவிமடுக்கும் பொழுது கூறுவார்கள்: அவர்களுடைய தாயும் தந்தையும் யார் என்று எனக்குத் தெரியாது. அவர் உண்மையில் காட்சிகளை அருள்கின்றார். மக்கள் இதனால் குழப்பம் அடைகின்றார்கள். அவர்கள் சில நேரங்களில் பிரம்மாவையும் சில நேரங்களில் கிருஷ்ணரையும் பார்த்து, அது என்னவாக இருக்கும் எனத் தொடர்ந்தும் ஆச்சரியம் அடைகிறார்கள். வீட்டில் இருந்தவாறே, பலர் பிரம்மாவின் காட்சிகளைக் காண்கின்றார்கள். பிரம்மாவை எவருமே பூஜிப்பதில்லை; மக்கள் ஸ்ரீகிருஷ்ணர் போன்றோரைப் பூஜிக்கின்றார்கள். உண்மையில் பிரம்மாவை எவருமே அறியவும் மாட்டார்கள். பிரஜாபிதா பிரம்மா இப்பொழுது வந்துள்ளார். இவர் பிரஜாபிதா. முழு உலகமும் தூய்மையற்றது எனத் தந்தை இங்கே அமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார். ஆகவே இவரும் தனது பல பிறவிகளின் இறுதிப் பிறவியில் தூய்மையற்றவர் ஆகியுள்ளார். எவருமே தூய்மையாக இல்லை. இதனாலேயே அவர்கள் கும்பமேலாவுக்கும், ஹரித்துவாரிலுள்ள கங்கை ஆற்றின் மேலாக்களுக்கும் செல்கின்றார்கள். அங்கே நீராடுவதன் மூலம் தாங்கள் தூய்மை ஆகுவோம் என அவர்கள் நினைக்கின்றார்கள். எவ்வாறாயினும் அந்த ஆறுகள் தூய்மையாக்குபவை அல்ல. கடலிலிருந்து ஆறுகள் வெளியாகுகின்றன. உண்மையில் நீங்களே இந்த ஞான கங்கைகள். உங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஞான கங்கைகளான நீங்கள் எல்லா இடங்களிலும் தோன்றுகின்றீர்கள். அம்பு பாய்ந்த இடத்தில் கங்கை வெளிப்பட்டதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது அம்பு எய்வது என்ற கேள்வி அல்ல. இந்த ஞான கங்கைகளான நீங்கள் பல்வேறு தேசங்களுக்குச் செல்கின்றீர்கள். சிவபாபா கூறுகின்றார்: நானும் நாடகத்தின் பந்தனத்தால் கட்டப்பட்டுள்ளேன். ஒவ்வொருவரினது பாகமும் நிச்சயிக்கப்பட்டது. எனது பாகமும் நிச்சயிக்கப்பட்டது. கடவுள் சக்தி வாய்ந்தவர், அவரால் இறந்தவர்களையும் உயிர்ப்பிக்க முடியும் என மக்கள் நம்புகின்றார்கள். அவை அனைத்தும் கட்டுக் கதைகளாகும். நான் உங்களுக்குக் கற்பிக்கவே வருகிறேன். நான் என்ன சக்தியைக் காட்ட முடியும்? காட்சிகளை அருள்வதும் மந்திரவித்தையே. மக்கள் தீவிர பக்தி செய்யும்பொழுது, நான் அவர்களுக்கு ஒரு காட்சியை அருள்கிறேன். உதாரணமாக, நான் அவர்களுக்குக் காளியின் ரூபத்தைக் காட்டுகிறேன்: அவர்கள் அவரது விக்கிரகத்தின் மீது எண்ணெயை ஊற்றுகின்றார்கள். எவ்வாறாயினும் அத்தகையதொரு காளி உண்மையில் இருப்பதில்லை. காளியை அநேகமான மக்கள் பெருமளவு தீவிர பக்தி செய்கிறார்கள். உண்மையில் ஜெகதாம்பாவே காளியாவார். அவர்கள் சித்தரித்துள்ளது போன்ற ரூபம் காளிக்கு இல்லை. அவர்கள் தீவிர பக்தி செய்கின்றபொழுது, பாபா அவர்களுக்கு அவர்களின் பக்தியின் பலனைக் கொடுக்கின்றார். காமச்சிதையில் அமர்ந்ததனால் நீங்கள் அவலட்சணமாக ஆகினீர்கள். இப்பொழுது இந்த ஞானச் சிதையில் அமர்வதன் மூலம் நீங்கள் அழகானவர்கள் ஆகுகின்றீர்கள். எவ்வாறு இப்பொழுது ஜெகதாம்பாவாக இருக்கின்ற காளியால் காட்சிகளை அருள முடியும்? அவர் இப்பொழுது இங்கே தனது பல பிறவிகளின் இறுதிப் பிறவியில் இருக்கின்றார். தேவர்கள் இப்பொழுது இல்லை, எனவே அவர்கள் எவ்வாறு காட்சிகளைக் கொடுக்க முடியும்? தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நான் காட்சிகளை அருள்வதற்கான சாவியை எனது கையில் வைத்திருக்கினறேன். நான் அவர்களின் ஆசைகளைத் தற்காலிகமாகப் பூர்த்தி செய்வதற்காக ஒரு காட்சியை அருள்கின்றேன். ஆனால் அதன் மூலம் அவர்களில் எவருமே என்னைச் சந்திக்க முடியாது. நான் காளியின் உதாரணத்தை மாத்திரம் கொடுத்துள்ளேன். ஆனால் அனுமான், கணேஷ் போன்ற ஏனைய பல உதாரணங்களும் இருக்கின்றன. சீக்கியர்கள் குருநானக்கின் மீது பெருமளவு பக்தி செய்கின்ற பொழுது அவருடைய காட்சியைக் காண முடியும். எவ்வாறாயினும் அவர்கள் தொடர்ந்தும் கீழே இறங்குகின்றார்கள். பாபா குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகின்றார்: பாருங்கள், அவர் குருநானக்கைப் பூஜிக்கின்றார், ஆனால் நானே அவருக்குக் காட்சியைக் கொடுக்கின்றேன். அவர் எவ்வாறு காட்சி கொடுக்க முடியும்? அவரிடம் காட்சி கொடுப்பதற்கான சாவி இல்லை. இந்த பாபா (பிரம்மா) கூறுகின்றார்: அந்த பாபா (சிவபாபா) எனக்கு ஸ்தாபனையினதும், விநாசத்தினதும் காட்சிகளைக் கொடுத்தார். எவ்வாறாயினும் எவருமே காட்சிகளின் மூலம் நன்மை அடைவதில்லை. பலர் அவ்வாறான காட்சிகளைக் கண்டார்கள். ஆனால் அவர்கள் இப்பொழுது இங்கில்லை. குழந்தைகளில் பலர் கூறுகின்றார்கள்: நான் ஒரு காட்சியைக் காணும்பொழுது நம்பிக்கையை வளர்த்துக் கொள்வேன். எவ்வாறாயினும், காட்சிகளால் நம்பிக்கை வளர்வதில்லை. இந்த ஞானம், யோகத்தின் மூலமே நம்பிக்கை வளர்கின்றது. 5000 வருடங்களுக்கு முன்னரும் நான் உங்களுக்கு இந்தக் காட்சிகளைக் கொடுத்ததாகக் கூறியுள்ளேன். மீராவும் காட்சியைக் கண்டார். அதற்காக ஆத்மா அங்கே சென்றார் என்றில்லை. இல்லை, எங்கேயாவது அமர்ந்திருக்கும்பொழுது அவர்களால் காட்சிகளைப் காண முடியும். ஆனால் அதன் மூலம் எவரும் என்னை அடைய முடியாது. தந்தை கூறுகின்றார்: உங்களுக்கு எதைப் பற்றியாவது சந்தேகம் இருந்தால், பிராமண ஆசிரியர்களை கேளுங்கள். நீங்கள் வரிசைக்கிரமமானவர்கள் எனக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். ஆறுகளும் வரிசைக்கிரமமானவை. சில தேங்கி நிற்கின்ற நீரைக் கொண்டுள்ள குளங்கள்; அப்படி இருந்தும் மக்கள் அங்கே பெருமளவு நம்பிக்கையுடனும் பக்தியுடனும் செல்கின்றார்கள். அது பக்தியின் குருட்டு நம்பிக்கை. எவரையும் அவர்களின் பக்தியை நிறுத்தி விடுமாறு ஒருபொழுதும் கூறாதீர்கள். அவர்கள் இந்த ஞானப் பாதைக்கு வந்ததும் தானாகவே பக்தி செய்வதை நிறுத்தி விடுவார்கள். பாபா நாராயணனின் பக்தராக இருந்தார். அவர் ஒரு படத்தில் நாராயணனின் பாதங்களை இலக்ஷ்மி ஒரு வேலைக்காரியைப் போன்று பிடித்து விடுவதைப் பார்த்தபொழுது, அதை விரும்பவில்லை. சத்தியயுகத்தில் அப்படி இருக்க மாட்டாது. எனவே நான் இலக்ஷ்மியை ஒரு வேலைக்காரி போன்று இருப்பதிலிருந்து விடுவிக்குமாறு ஓர் ஓவியரிடம் கூறினேன். பாபா ஒரு பக்தராக இருந்தார்; அப்பொழுது அவரிடம் இந்த ஞானம் இருக்கவில்லை. ஒவ்வொருவரும் ஒரு பக்தரே. நாங்கள் பாபாவின் குழந்தைகள், நாங்கள் அதிபதிகள். நான் குழந்தைகளாகிய உங்களையும் பிரம்மாந்தத்தின் அதிபதிகள் ஆக்குகிறேன். அவர் கூறுகின்றார்: நான் உங்கள் இராச்சியப் பாக்கியத்தை உங்களுக்குக் கொடுக்கின்றேன். நீங்கள் இவ்வாறான பாபாவை முன்னர் எப்பொழுதாவது கண்டிருக்கின்றீர்களா? அவ்வாறான தந்தை மிக நன்றாக நினைவுசெய்யப்பட வேண்டும். உங்கள் பௌதீகக் கண்களினால் அவரை நீங்கள் பார்க்க முடியாது. நீங்கள் அவருடன் யோகத்தைக் கொண்டிருக்க வேண்டும். நினைவும் இந்த ஞானமும் மிக இலகுவானவை. நீங்கள் விதையையும் விருட்சத்தையும் அறிந்துகொள்ள வேண்டும். நீங்கள் அந்த அசரீரியான விருட்சத்தின் பாகமாக இருந்ததிலிருந்து பௌதீக விருட்சத்தின் பாகமாக ஆகியுள்ளீர்கள். பாபா காட்சிகளின் இரகசியத்தை உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். அவர் விருட்சத்தின் இரகசியத்தையும் உங்களுக்கு விளங்கப்படுத்தி உள்ளார். பாபா கர்ம தத்துவத்தையும், நடுநிலையான செயல், பாவச் செயல் பற்றியும் உங்களுக்கு விளங்கப்படுத்தி உள்ளார். நீங்கள் மூவரிடமிருந்தும் கற்பித்தல்களைப் பெறுகின்றீர்கள்: தந்தை, ஆசிரியர், குரு. பாபா கூறுகின்றார்: நீங்கள் 21 பிறவிகளுக்கு என்றென்றும் சந்தோஷமாக இருப்பதற்கான அத்தகைய கற்பித்தல்களை நான் இப்பொழுது உங்களுக்குக் கொடுப்பதுடன், அத்தகைய செயல்களையும் கற்பிக்கின்றேன். ஓர் ஆசிரியர் உங்களுக்குக் கற்பித்தல்களைக் கொடுக்கின்றார், ஒரு குரு தூய்மையைக் கற்பிக்கின்றார், அத்துடன் சமயக் கதைகளையும் கூறுகின்றார். ஆனால்; அதில் இந்த ஞானம் எதுவும் கிரகிக்கப்படுவதில்லை. இங்கே தந்தை கூறுகின்றார்: உங்கள் இறுதி எண்ணங்கள் உங்களை, உங்கள் இலக்கிற்கு இட்டுச் செல்லும். மக்கள் மரணிக்கும் தருணத்தில் அவர்களுக்கு இராமரின் பெயரை உச்சரிக்குமாறு கூறப்படுகின்றது. அப்பொழுது அவர்களின் புத்தி அவரிடம் செல்லும். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: சரீரதாரிகளுடனான உங்கள் யோகம் இப்பொழுது துண்டிக்கப்பட்டு விட்டது. நான் இப்பொழுது உங்களுக்கு மிக நல்ல செயல்களைக் கற்பிக்கின்றேன். ஸ்ரீ கிருஷ்ணரின் படத்தைப் பாருங்கள்: அவர் பழைய உலகை அப்பால் உதைத்துத் தள்ளி, புதிய உலகிற்குள் பிரவேசிப்பதாகக் காட்டியுள்ளார்கள். நீங்களும் இந்தப் பழைய உலகை அப்பால் உதைத்துத் தள்ளி விட்டுப் புதிய உலகிற்குச் செல்கின்றீர்கள் எனவே, உங்கள் பாதங்கள் நரகத்தை நோக்கியும், உங்கள் முகங்கள் சுவர்க்கத்தை நோக்கியும் இருக்கின்றன. ஒரு சடலத்தை சுடுகாடு நோக்கி எடுத்துச் செல்லும் பொழுது, முகம் சுடுகாட்டை நோக்கியும் பாதங்கள் மற்றைய திசையை நோக்கியும் திருப்பப்படும். இந்தப் படமும் அதேமாதிரி உருவாக்கப்பட்டுள்ளது. மம்மா, பாபாவும் குழந்தைகளாகிய நீங்களும் மாத்திரம் இருக்கின்றீர்கள். நீங்கள் அவர்களின் சிம்மாசனத்தைக் கோரும் வகையில், மம்மாவையும் பாபாவையும் பின்பற்ற வேண்டும். ஓர் அரசரின் குழந்தைகள் இளவரசர்கள், இளவரசிகள் என அழைக்கப்படுகிறார்கள். நீங்கள் எதிர்கால இளவரசர்களாகவும் இளவரசிகளாகவும் ஆகுகின்றீர்கள் எனக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். உங்களுக்கு இவ்வாறான செயல்களைக் கற்பிக்கக்கூடிய வேறு எந்தத் தந்தையோ, ஆசிரியரோ அல்லது குருவோ இருக்கின்றார்களா? நீங்கள் எல்லா வேளைக்கும் சந்தோஷமாக ஆகுகின்றீர்கள். இது சிவபாபாவிடம் இருந்து பெற்ற வரமாகும். அவர் இந்த ஆசீர்வாதத்தை உங்களுக்கு வழங்குகின்றார். அதனால் அவரது கருணையை நாங்கள் கொண்டிருக்கின்றோம் என்பதல்ல. சிலவற்றை வேண்டுவதன் மூலம் எதுவுமே நிகழ்வதில்லை. நீங்கள் அனைத்தையும் கற்க வேண்டும். ஆசீர்வாதங்களைப் பெறுவதால் நீங்கள் அவ்வாறாக முடியாது. அவரது வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள். இந்த ஞானத்தையும் யோகத்தையும் கிரகியுங்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: உங்கள் வாயினால் “இராமா, இராமா” எனக் கூறுவது சத்தத்தை ஏற்படுத்துவதாகும். நீங்கள் முற்றாகச் சத்தத்திற்கு அப்பால் செல்ல வேண்டும். நீங்கள் மௌனமாக இருக்க வேண்டும். பல நல்ல நாடகங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. கற்காதவர்கள் புத்துக்கள் (அப்பாவி முட்டாள்கள்) எனப்படுகின்றனர். பாபா கூறுகின்றார்: இப்பொழுது அனைவரையும் மறந்து, முழுமையான புத்துக்கள் ஆகுங்கள். நான் உங்களுக்குக் கொடுக்கும் வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் பரந்தாமத்தில் சரீரமற்று வசிக்கின்றீர்கள். பின்னர் இங்கே வந்து சரீரங்களை எடுக்கும்பொழுது, நீங்கள் உயிர் வாழ்பவர்கள் என அழைக்கப்பட்டீர்கள். ஆத்மா கூறுகின்றார்: நான் இந்தச் சரீரத்தை விடுத்து எனது இன்னொரு சரீரத்தை எடுக்கிறேன். தந்தை கூறுகின்றார்: நான் உங்களுக்கு முதற்தரமான செயல்களைக் கற்பிக்கின்றேன். ஓர் ஆசிரியர் உங்களுக்குக் கற்பிக்கும்பொழுது, அது சக்தியை வெளிப்படுத்துகின்ற ஒரு விடயமல்ல. அவர் உங்களுக்கு ஒரு காட்சியைக் கொடுக்கும் பொழுது, அது மந்திரவித்தை என அழைக்கப்படுகின்றது. மனிதர்களைத் தேவர்களாக மாற்றுகின்ற மந்திரவித்தையை வேறு எவராலும் செய்ய முடியாது. பாபாவும் வியாபாரியே; அவர் உங்கள் பழைய பொருட்களுக்குப் புதியதை மாற்றீடு செய்கின்றார். இவர் ஒரு பழைய இரும்புப் பாத்திரம் என அழைக்கப்படுகின்றார்; இவருக்கு எந்தப் பெறுமதியும் இல்லை. இப்பொழுது நாணயங்கள் செப்பினாலும் செய்யப்படுவதில்லை. எவ்வாறாயினும் அங்கு தங்க நாணயங்கள் இருக்கும். எவ்வாறு அனைத்தும் அதிகளவு மாறியுள்ளது என்பதும் அற்புதமே! தந்தை கூறுகின்றார்: நான் உங்களுக்கு முதல்தரமான செயல்கள் செய்வதற்குக் கற்பிக்கின்றேன். “மன்மனாபவ” ஆகுங்கள்! பின்னர் நீங்கள் சுவர்க்கத்து இளவரசர் ஆகுகின்ற, கல்வியும் இருக்கின்றது. மறைந்த தேவதர்மம் இப்பொழுது மீண்டும் ஒருமுறை ஸ்தாபிக்கப்படுகின்றது. நீங்கள் பேசுகின்ற புதிய விடயங்களைச் செவிமடுக்கும்பொழுது, மக்கள் ஆச்சரியம் அடைகிறார்கள். அவர்கள் வினவுகின்றார்கள்: ஒரு கணவன், மனைவி ஒன்றாக வாழும்போது, தூய்மையாக இருப்பது எப்படிச் சாத்தியமாகும்? பாபா கூறுகின்றார்: நீங்கள் ஒன்றாக வாழலாம். இல்லாவிடின் எவ்வாறு நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்? உங்களிடையே ஞான வாள் இருக்க வேண்டும். அதிகளவு தைரியம் காட்டப்பட வேண்டும். பரீட்சைகளும் இருக்கின்றன. மக்கள் இந்த விடயங்கள் பற்றி ஆச்சரியம் அடைகின்றார்கள். ஏனெனில் இவை சமயநூல்களில் குறிப்பிடப்படவில்லை. இங்கே, நீங்கள் இந்த முயற்சியை நடைமுறையில் செய்ய வேண்டும். தூய திருமணம் என்பது இங்கேயே பொருத்தமாக இருக்கிறது. நீங்கள் இப்பொழுது தூய்மை ஆகுகின்றீர்கள். ஆகவே பாபா கூறுகின்றார்: உங்கள் தைரியத்தைக் காட்டுங்கள். சந்நியாசிகளுக்கு இதன் அத்தாட்சியைக் காட்டப்பட வேண்டும். சர்வசக்திவான் தந்தை முழு உலகையும் தூய்மை ஆக்குகின்றார். தந்தை கூறுகின்றார்: நீங்கள் ஒன்றாக வாழலாம், ஆனால் தூய வாழ்க்கை வாழுங்கள். இவை அனைத்தும் தூய்மையாக இருப்பதற்கான வழிகளாகும். இதைச் செய்வதன் மூலம் நீங்கள் மிகப்பெரிய பேற்றினைப் பெறுகிறீர்கள். நீங்கள் பாபாவின் வழிகாட்டல்களைப் பின்பற்றி ஒரு பிறவிக்குத் தூய்மையாக இருக்க வேண்டும். இந்த ஞானத்தின் மூலமும் யோகத்தின் மூலமும் நீங்கள் 21 பிறவிகளுக்கு என்றென்றும் ஆரோக்கியமானவர்களாக ஆகுகின்றீர்கள். இதற்கு முயற்சி தேவை. நீங்களே சக்தி சேனைகள். நீங்கள் மாயையை வெற்றிகொள்வதால், உலகை வெற்றி கொள்கின்றீர்கள். நீங்கள் அனைவரும் இவ்வாறு ஆகுவதில்லை. முயற்சி செய்கின்ற குழந்தைகள் உயர்ந்த அந்தஸ்தைக் கோருகின்றார்கள். நீங்கள் பாரதத்தைத் தூய்மையாக்கிப் பின்னர் பாரதத்தை ஆட்சிசெய்கின்றீர்கள். யுத்தம் செய்வதால், எவருமே உலக இராச்சியத்தைக் கோர முடியாது. இது ஓர் அற்புதமே. இந்த நேரத்தில் அவர்கள் அனைவரும் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுத் தங்களையே அழித்துக் கொள்கின்றார்கள். பாரதம் வெண்ணெயைப் பெறுகின்றது. தாய்மார்களே இதை நடைபெறச் செய்ததினால் வணங்கப்படுகின்றார்கள். உங்களில் பெரும்பான்மையினர் தாய்மார்களே. பாபா கூறுகின்றார்: நீங்கள் பிறவிபிறவியாகக் குருமார்களைப் பின்பற்றியும் சமயநூல்களைப் படித்தும் வந்தீர்கள். இப்பொழுதே நான் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றேன். எது சரியென நீங்களே தீர்மானியுங்கள்! சத்தியயுகம் நீதியான உலகம். மாயை அதை அநீதியானதாக மாற்றி விட்டாள். பாரதமக்கள் இப்பொழுது அதர்மானவர்களாக ஆகிவிட்டார்கள். அவர்கள் அதர்மவான்கள் ஆகியதால் எந்தவிதச் சக்தியும் இருப்பதில்லை. அவர்கள் அதர்மவான்கள், அநீதியானவர்கள், சட்டவிரோதமானவர்கள் மற்றும் கடனாளிகளாக ஆகிவிட்டார்கள். பாபாவே எல்லையற்ற தந்தை. ஆதலால் அவர் இந்த எல்லையற்ற விடயங்களை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவர் கூறுகின்றார்: நான் உங்களை மீண்டும் ஒருமுறை தர்மவான்களாகவும் அதி சக்திசாலிகளாகவும் ஆக்குகின்றேன். சுவர்க்கத்தை உருவாக்குவது சக்திவாய்ந்த ஒரேயொருவரின் பணியே. எவ்வாறாயினும் அவர் மறைமுகமானவர். நீங்கள் மறைமுகமான போர்வீரர்கள். தந்தை குழந்தைகளாகிய உங்கள் மீது நிறைந்த அன்பு வைத்துள்ளார். அவர் உங்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார். தந்தையின் வழிகாட்டல்கள், ஆசிரியரின் வழிகாட்டல்கள், குருவின் வழிகாட்டல்கள், பொற்கொல்லரின் வழிகாட்டல்கள்,சலவைசெய்பவரின் வழிகாட்டல்கள் அனைத்தும் இந்த வழிகாட்டல்களில் அடங்குகின்றன. அச்சா.இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப் பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத்தந்தை ஆன்மீகக்குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. இந்த கடைசி ஒரு பிறவியில் தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள். அத்துடன் வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழும்போதும் தூய வாழ்க்கை வாழுங்கள். இதில் உங்கள் தைரியத்தைக் காட்டுங்கள்.2. சதா ஸ்ரீமத்தைப் பின்பற்றி, மேன்மையான செயல்களைச் செய்யுங்கள். சத்தத்திற்கு அப்பால் செல்லுங்கள். நீங்கள் முன்னர் கற்றுள்ள, செவிமடுத்துள்ள அனைத்தையும் மறந்து, ஒரேயொரு தந்தையை நினைவுசெய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் இக்கட்டான சூழ்நிலைகளை உங்களின் நல்ல அதிர்ஷ்டமாகக் கருதுவதன் மூலம் உங்களின் நம்பிக்கை அத்திவாரத்தைப் பலமானது ஆக்கி, ஆட்ட, அசைக்க முடியாதவர் ஆகுவீர்களாக.இக்கட்டான சூழ்நிலைகள் வரும்போது, உயரே பாயுங்கள். ஏனென்றால், அந்த இக்கட்டான சூழ்நிலைகள் உங்களின் நல் அதிர்ஷ்டத்தின் அடையாளம் ஆகும். அவை உங்களின் நம்பிக்கையின் அத்திவாரத்தைப் பலமானதாக மாற்றுவதற்கான வழிமுறைகள் ஆகும். நீங்கள் இறுதியாக அங்கதனைப் போல் வலிமையானவர் ஆகும்போது, அந்தப் பரீட்சைகள் வந்து உங்களை வணங்கும். முதலில், அவை பயங்கரமான வடிவத்தில் வரும். பின்னர் அவை உங்களின் வேலையாட்கள் ஆகிவிடும். மகாவீரர்களாக அவற்றுக்குச் சவால் விடுங்கள். எப்படித் தண்ணீரில் ஒரு கோடு போட முடியாதோ, அதேபோல், மாஸ்ரர் கடலான உங்களை எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையும் தாக்க முடியாது. உங்களின் ஆதி ஸ்திதியில் இருப்பதன் மூலம், நீங்கள் ஆட்ட, அசைக்க முடியாதவர் ஆகுவீர்கள்.
சுலோகம்:
பழைய வருடத்திற்கு விடைகொடுக்கிறேன் என்று சொல்வதுடன் கூடவே, கசப்பிற்கும் விடைகொடுக்கிறேன் எனச் சொல்லுங்கள்.அவ்யக்த சமிக்கை: ஆன்மீக இராஜரீகம் மற்றும் தூய்மையின் ஆளுமையைக் கடைப்பிடியுங்கள்.
ஆசீர்வாதங்களை அருள்பவருக்கும் ஆசீர்வாதங்களைப் பெறுகின்ற உங்களுக்கும் இடையில் உள்ள உறவுமுறை, நீங்கள் அன்பாக இருப்பதன் அடிப்படையில் நெருக்கமாகவும் நிலையாகவும் இருந்தால், நீங்கள் சதா உங்களின் ஒன்றிணைந்த ரூபத்தில் இருந்தால், இயல்பாகவே தூய்மையின் குடை இருக்கும். எங்கே சர்வசக்திவான் தந்தை இருக்கிறாரோ, அங்கே உங்களின் கனவுகளிலேனும் எந்தவிதமான தூய்மையின்மையும் இருக்க மாட்டாது. நீங்கள் தனியாக இருக்கும்போதே, தூய்மையின் சுகாக் (திருமணம் செய்திருப்பதன் திலகம்) போய்விடுகிறது.