07.05.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, பிராமணர்களாகிய நீங்களே பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்கள் ஆவீர்கள். நீங்கள் மட்டுமே தந்தையிடம் இருந்து மூன்றாவது ஞானக் கண்ணைப் பெறுகிறீர்கள். இப்பொழுது நீங்கள் கடவுளின் மடியில் இருக்கிறீர்கள்.
கேள்வி:
வேறெந்த சமயமும் இல்லாத பிரிவினையற்ற இராச்சியத்தை ஸ்தாபிப்பதற்கான அடிப்படை என்ன?பதில்:
யோக சக்தி ஆகும். யோக சக்தியால் அன்;றிப் பௌதீக சக்தியால் ஒருபோதுமே பிரிவினையற்ற இராச்சியத்தை ஸ்தாபிக்க முடியாது. உண்மையில் கிறிஸ்தவர்கள் அதிகளவு சக்தியை உடையவர்கள். அவர்கள் ஒன்றுசேர்ந்தால் அவர்களால் முழு உலகையுமே ஆட்சி புரிய முடியும். ஆனால் அது நியதி அல்ல. உலகில் ஒரேயொரு இராச்சியத்தை ஸ்தாபிக்கும் பணி தந்தையினுடையதே ஆகும்.பாடல்:
உங்கள் ஆகாய சிம்மாசனத்தை விட்டிறங்கிப் பூமிக்கு வாருங்கள்.......ஓம் சாந்தி.
'ஓம் சாந்தி" என்பதன் அர்த்தம் குழந்தைகளாகிய உங்களுக்குப் பல தடவைகள் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஓம் என்றால் நான் யார்? என்பதாகும். நான் ஓர் ஆத்மா. இந்தச் சரீரம் எனது புலனங்கம் என்பதே அதன் அர்த்தமாகும். ஆத்மாவாகிய நான் பரந்தாமவாசி ஆவேன். பாரத மக்கள் அழைக்கிறார்கள்: ஓ, தொலை தூர வாசியே வாருங்கள். ஏனெனில் பாரதத்தில் பெருமளவு மத இகழ்ச்சியும் துன்பமும் இருக்கின்றன. மீண்டும் ஒருமுறை வந்து கீதையின் செய்தியைக் கொடுங்கள். கீதையில் மட்டுமே அவர்கள் கடவுளை வரும்படி அழைக்கிறார்கள்: சிவபாபா, வாருங்கள். ஏனென்றால், அவரே அனைவரதும் தந்தை ஆவார். அவர்கள் கூறுகிறார்கள்: மீண்டும் ஒரு முறை இராவணனாகிய மாயையின் நிழல் பாரதத்தின் மீது வீழ்ந்துள்ளது. இதனாலேயே அனைவரும் சந்தோஷம் அற்றவர்களாகவும் தூய்மை அற்றவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் அழைக்கிறார்கள்: உங்கள் ரூபத்தை மாற்றிக் கொண்டு இங்கே வாருங்கள். அதாவது, இங்கே ஒரு மனித ரூபத்தில் வாருங்கள். நான் ஒரு மனித ரூபத்திலேயே வருகிறேன். எனது வருகை தெய்வீகமானதும் தனித்துவமானதும் ஆகும். நான் ஒரு கருப்பையினுள் பிரவேசிப்பதில்லை. நான் ஒரு சாதாரண வயது முதிர்ந்த சரீரத்தினுள்ளேயே பிரவேசிக்கின்றேன். நான் என் அசரீரியான ரூபத்தை மாற்றிக் கொண்டே ஒவ்வொரு கல்பத்திலும் வருகிறேன் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். பரமாத்மாவான பரம தந்தையே ஞானக்கடல் ஆவார். ஸ்ரீகிருஷ்ணரை ஒருபோதும் இவ்வாறு அழைக்க முடியாது. தந்தை கூறுகிறார்: நான் இந்தச் சாதாரண சரீரத்தினுள் மீண்டும் ஒருமுறை பிரவேசித்து இலகு இராஜயோகத்தை உங்களுக்குக் கற்பிக்கிறேன். உலகம் தூய்மை அற்றதாகும் பொழுதே நான் வரவேண்டியுள்ளது. நான் கலியுகத்தைச் சத்திய யுகமாக மாற்றுவதற்காகவே வருகிறேன். பிரம்மா, விஷ்ணு, சங்கரின் படங்களும் உள்ளன. பிரம்மா மூலம் படைத்தலும் சங்கரன் மூலம் அழித்தலும் விஷ்ணுவின் மூலம் காத்தலும் நடைபெறுகின்றன. இலக்ஷ்மியும், நாராயணனும் விஷ்ணுவின் இரட்டை வடிவமே ஆகும். பாபா மீண்டும் ஒருமுறை தனது ரூபத்தை மாற்றி இங்கே வந்திருக்கிறார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அவரே எங்கள் பரம தந்தையும், பரம ஆசிரியரும், பரம குருவுமாவார். மற்றைய குருமாரை பரமன் எனக் கூற முடியாது. இவரே தந்தையும் ஆசிரியரும் குருவுமாகிய மூன்றும் ஆவார். லௌகீகப் பெற்றோர் தம் குழந்தைகளைப் பராமரித்து அவர்களைப் பாடசாலைக்கும் அனுப்புகிறார்கள். ஒரு குழந்தையின் தந்தையே அவரின் ஆசிரியராகவும் இருப்பது அரிது. தந்தையே மூன்றுமாக இருக்கிறார் என எவராலும் கூற முடியாது. ஆத்மாக்கள் அனைவரும் என்னையே அழைக்கிறார்கள். அவர்கள் தந்தையான கடவுளைப் பற்றிப் பேசுவதால் அவரே ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தை ஆவார். இப்பாடல் பக்தி மார்க்கத்தைச் சேர்ந்தது. சத்திய யுகத்தில் மாயை இல்லாததால்; நீங்கள் அழைக்க வேண்டியதில்லை. அங்கே உங்களுக்குச் சந்தோஷத்தைத் தவிர வேறெதுவுமே இருக்காது. ஒவ்வொரு சக்கரம் 5000 ஆண்டுகளைக் கொண்டது என உங்களுக்குத் தெரியும். பகலான அரைக் கல்பத்திற்குச் சத்திய, திரேதா யுகங்கள் இருக்கும். இரவான அரைக் கல்பத்திற்குத் துவாபர, கலியுங்கள் இருக்கும். பிராணர்களாகிய நீங்களே பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்கள் ஆவீர்கள். பிரம்மாவின் அதாவது, பிராமணர்களாகிய உங்கள் பகலும், இரவும் நினைவு கூரப்படுகின்றன. குழந்தைகளாகிய உங்களிடம் பகலினதும், இரவினதும் இந்த ஞானம் இருக்கிறது. இலக்ஷ்மி, நாராயணனிடம் இந்த ஞானம் இல்லை. நீங்கள் இப்பொழுது சங்கம யுகத்தில் இருக்கிறீர்கள். பக்தி மார்க்கம் இப்பொழுது ஒரு முடிவிற்கு வந்து விடியற்காலம் வரப்போகின்றது என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் தந்தையிடம் இருந்து இந்த ஞானத்தைப் பெற்று இருக்கிறீர்கள். கலியுகத்திலோ, சத்திய யுகத்திலோ இருக்கும் எவரிடமும் இந்த ஞானம் இல்லை. இதனாலேயே பிரம்மாவின் இரவும், பிரம்மாவின் பகலும் நினைவு கூரப்படுகின்றன. நீங்கள் இப்பொழுது சூரிய, சந்திர வம்ச இராச்சியங்களைப் பெறுவதற்கு முயற்சி செய்கிறீர்கள். அரைக் கல்பத்தின் பின்னர் நீங்கள் உங்கள் இராச்சியத்தை இழக்கிறீர்கள். பிராமணர்களாகிய உங்களைத் தவிர வேறெவரிடமும் இந்த ஞானம் இல்லை. நீங்கள் தேவர்கள் ஆகியதும் இந்த ஞானம் இருக்கப் போவதில்லை. இப்பொழுது இது இரவு ஆகும். சிவனின் இரவாகிய சிவராத்திரி நினைவு கூரப்படுகிறது. ஸ்ரீகிருஷ்ணரின் இரவைப் பற்றியும் அவர்கள் பேசிய போதிலும் அதன் அர்த்தத்தை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. சிவனின் பிறந்ததினம் என்பது சிவன் மீண்டும் அவதரிப்பதையே குறிக்கிறது. அத்தகைய தந்தையின் தினம் குறைந்தது ஒரு மாதத்திற்காவது கொண்டாடப்பட வேண்டும். முழு உலகையுமே தூய்மை அற்றதிலிருந்து தூய்மை ஆக்குபவருக்கென ஒரு நாள் விடுமுறை கூடக் கொடுக்கிறார்கள் இல்லை! தந்தை கூறுகிறார்: நானே அனைவரையும் விடுதலை செய்பவன் ஆவேன். நான் அனைவரினதும் வழிகாட்டி ஆகி, அவர்களை வீட்டிற்குத் திரும்பவும் அழைத்துச் செல்கிறேன். நீங்கள் இப்பொழுது இராஜயோகத்தைக் கற்பதற்கு முயற்சி செய்கிறீர்கள். தந்தை உங்கள் ஒவ்வொருவருக்கும் மூன்றாவது ஞானக் கண்ணைக் கொடுத்திருக்கிறார். ஆத்மாவின் வடிவம் என்ன என்று எவருக்குமே தெரியாது. தந்தை கூறுகிறார்: ஆத்மாக்களாகிய நீங்கள் பெருவிரலின் வடிவமானவர்களோ அல்லது எல்லையற்ற ஒளியோ அல்லர். நீங்கள் புள்ளி வடிவமான நட்சத்திரங்கள். ஆத்மாவாகிய நானும் ஒரு புள்ளியே. எவ்வாறாயினும் நான் மறுபிறவி எடுப்பதில்லை. எனது புகழ் வேறுபட்டது. நான் பரமன் என்பதால் நான் பிறப்பு இறப்புச் சக்கரத்தினுள் பிரவேசிப்பதில்லை. ஆத்மாக்களாகிய நீங்கள் ஒரு சரீரத்தினுள் பிரவேசித்து 84 பிறவிகளை எடுக்கிறீர்கள். நான் இந்தச் சரீரத்தினுள் பிரவேசிக்கின்றேன். நான் அதனைக் கடனாக எடுத்துள்ளேன். தந்தை விளங்கப்படுத்துகிறார்: நீங்களும் ஆத்மாக்களே. ஆனால் நீங்கள் ஆத்மாக்கள் என்பதை நீங்கள் தெளிவாக அறிந்து கொள்வது இல்லை. ஆத்மாவே தந்தையை நினைவு செய்கிறார். ஆத்மாக்கள் எப்பொழுதும் தாங்கள் சந்தோஷம் இல்லாது இருக்கும் பொழுதே அவரை நினைவு செய்கிறார்கள்: ஓ கடவுளே! ஓ கருணை நிறைந்த பாபாவே, எங்களில் கருணை கொள்ளுங்கள்! தந்தையே ஞானம் நிரம்பியவர், பேரானந்தமானவர், தூய்மை நிறைந்தவர் ஆதலால் நீங்கள் அவரிடம் அவரின் கருணையை வேண்டுகிறீர்கள். தந்தையே ஞானம் நிரம்பியவர் ஆவார். அவரே ஞானக்கடல் ஆவார்;. வேறெந்த மனிதருக்கும் இப்புகழைக் கொடுக்க முடியாது. முழு உலகிற்கும் பேரானந்தத்தை அளிப்பது தந்தையின் பணியே ஆகும். அவரே படைப்பவர் ஆவார். மற்றயவை படைப்பு ஆகும். படைப்பவரே படைப்பைப் படைக்கிறார். அவர் முதலில் ஒரு மனைவியை ஏற்றுக் கொண்டு, அவளின் மூலம் படைப்பைப் படைத்துப் பின்னர் அவற்றைப் பராமரிக்கவும் செய்கிறார். அவர் அதனை அழிப்பதில்லை. இந்த எல்லையற்ற தந்தை வந்து படைத்தல், காத்தல், அழித்தலை ஊக்குவிக்கிறார். அவர் ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தின் பராமரிப்பை ஊக்குவிக்கிறார். சத்திய யுக ஆரம்பத்தில் இராச்சியம் உடனடியாகவே ஸ்தாபிக்கப்படுகிறது. மற்றைய சமயத்தவர்கள் தமது சமயத்தையே ஸ்தாபிக்கிறார்கள். பின்னர் அந்தச் சமயம் நூறாயிரம் அல்லது மில்லியன் கணக்கான மக்களாக வளர்ச்சி அடையும் பொழுதே அவர்களின் இராச்சியம் வருகிறது. நீங்கள் யோக சக்தியினால் உங்கள் இராச்சியத்தை ஸ்தாபிக்கிறீர்கள். நீங்கள் யோக சக்தியால் உலகம் முழுவதற்குமே அதிபதிகள் ஆகுகின்றீர்கள். பௌதீகச் சக்தியினால் உலகை எவராலும் ஆட்சி செய்ய முடியாது. கிறிஸ்தவர்களுக்கு எவ்வளவோ சக்தி இருப்பதால் அவர்கள் ஒன்றுசேர்ந்தால் அவர்களால் உலகத்தையே ஆள முடியும் என பாபா விளங்கப்படுத்தி இருக்கிறார். பௌதீகச் சக்தியினால் யாராவது உலக இராச்சியத்தைப் பெறுவது என்பது நியதி இல்லை. பௌதீகச் சக்தியை உடையவர்கள் உலகிற்கு அதிபதிகள் ஆகுவது நாடகத்தின் நியதியில் இல்லை. தந்தை விளங்கப்படுத்துகிறார்: உங்களின் யோக சக்தியினாலேயே உலக இராச்சியத்தை என்னிடம் இருந்து பெற முடியும். அங்கே பிரிவினைகள் போன்றவை இருக்காது. ஆகாயம், பூமி அனைத்துமே உங்களுக்கு உரியவையாக இருக்கும். எவராலும் உங்களைத் தொடவேனும் முடியாது. அது பிரிவினையற்ற இராச்சியம் எனப்படுகிறது. இங்கே எண்ணற்ற இராச்சியங்கள் இருக்கின்றன. தந்தை விளங்கப்படுத்துகிறார்: ஒவ்வொரு 5000 ஆண்டுகளுக்கு ஒருமுறை, நான் குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த இராஜயோகத்தைக் கற்பிக்கின்றேன். இப்பொழுது ஸ்ரீகிருஷ்ணரின் ஆத்மாவும் இதனைக் கற்றுக் கொண்டு இருக்கிறார். ஸ்ரீகிருஷ்ணரே முதல் இலக்கத்தைக் கொண்ட இளவரசன்; ஆவார். இப்பொழுது இந்த நேரத்தில் அவரின் 84 பிறவிகளின் இறுதியில் அவர் பிரம்மா ஆகுகிறார். உலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கிறது என்று குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. தந்தை மீண்டும் ஒருமுறை சுவர்க்கத்தை ஸ்தாபிக்கிறார். எண்ணற்ற சமயங்கள் அனைத்துமே நிச்சயமாக அழிக்கப்பட உள்ளன. ஒரேயொரு தர்மத்தின் ஸ்தாபனையே நடைபெறும். பாரதம் 100வீதம் வளம் நிறைந்ததாக இருந்த பொழுது அது தனது தர்மத்தில் மேன்மையானதாக இருந்தது. தேவர்களின் செயல்களும் மேன்மையானவையாக இருந்தன. சகல தெய்வீகக் குணங்களும் நிரம்பியவர்கள் என அவர்களின் புகழ் பாடப்பட்டது. அவர்கள் ஆரம்பத்தில் தூய்மையாக இருந்து இப்பொழுது தூய்மை அற்றவர்கள் ஆகியுள்ளார்கள். தந்தை வந்து மீண்டும் ஒருதடவை ஆண், பெண், இருபாலாரையும் தூய்மை ஆக்குகிறார். 'ரக்ஷா பந்தன்" விழாவை ஏன் அவர்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள் என எவருக்குமே தெரியாது. தந்தை வந்து, இக்கடைசிப் பிறவியில் நீங்கள் இருவரும் தூய்மையாக இருப்பீர்கள் எனும் வாக்குறுதியை உங்களிடம் இருந்து பெறுகிறார். சந்நியாசிகளின் சமயம் முற்றிலும் வேறானது. உங்களுக்கே இந்த ஞானம், பக்தி, விருப்பமின்மை இருக்கிறது. கிறிஸ்தவப் பாதிரிமார் எவ்வாறு ஒரே திசையையே தம் கண்களால் பார்த்த வண்ணம் நடக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர்கள் வேறு எவரையுமே பார்ப்பதில்லை! கன்னியாஸ்திரிகளும் இருக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவை நினைவு செய்கிறார்கள். கிறிஸ்து, கடவுளின் மகன் எனக் கூறப்பட்டுள்ளது. நீங்கள் ஆத்மாக்கள் ஆவீர்கள். வெள்ளை ஆடைகள் போன்றவற்றுடன் உங்களுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை. நீங்கள் வேறெவரையுமே அன்றி, ஒரேயொருவருக்குச் சொந்தமானவர்கள். நீங்கள் ஒருவரையே நினைவு செய்ய வேண்டும். நீங்களே உண்மையான கன்னியாஸ்திரிகள் ஆவீர்கள். நீங்கள் அந்த பாபாவிடம் இருந்து ஓர் ஆஸ்தியைப் பெற உள்ளீர்கள். அவரை நினைவு செய்வதாலேயே உங்கள் பாவங்கள் அழிக்கப்படுகின்றன. இதனாலேயே தந்தையின் கட்டளையாவது: சதா என்னை மாத்திரமே நினைவு செய்யுங்கள்! தாங்கள் ஆத்மாக்கள் என்ற நம்பிக்கை இல்லாததால் கன்னியாஸ்திரிகள் கிறிஸ்துவை நினைவு செய்கிறார்கள். கடவுள் யார் என்பது அவர்களுக்குத் தெரியாது. ஆரம்பத்தில் வந்த பாரத மக்களுக்கும் எதுவுமே தெரியாது. இலக்ஷ்மி நாராயணனுக்கும் இவ்வுலக ஞானமும் கிடையாது, தாம் திரிகாலதரிசிகள் என்பதும் தெரியாது. பிராமணர்களாகிய நீங்களே திரிகாலதரிசிகள் ஆகுகிறீர்கள். தந்தை உங்களைச் சிப்பிகளில் இருந்து வைரங்களாக மாற்றுகிறார். இப்பொழுது நீங்கள் கடவுளின் மடியில் இருக்கிறீர்கள். உங்கள் இக்கடைசிப் பிறவி மிகவும் அளப்பரிய பெறுமதி வாய்ந்தது ஆகும். பொதுவாக உலகிலும் குறிப்பாகப் பாரதத்திலுமே நீங்கள் ஆன்மீக சேவை செய்கிறீர்கள். அவர்களோ பௌதீக சமூக சேவையாளர்கள், ஆனால் நீங்களோ ஆன்மீக சேவையாளர்கள் ஆவீர்கள். உங்களுக்குக் கற்பிப்பவரோ பரமாத்மா ஆவார். ஒவ்வோர் ஆத்மாவிற்கும் தந்தையை நினைவு செய்யும்படி கூறுங்கள். தந்தையே தூய்மையாக்குபவர் என நினைவு செய்யப்படுகிறார். நீங்கள் கீழே இறங்குவதற்கு 84 பிறவிகள் எடுக்கின்றீர்கள். பின்னர் மீண்டும் மேலேறுவதற்கு ஒரு விநாடியே எடுக்கின்றது. இம்மரண பூமியில் இதுவே உங்கள் கடைசிப் பிறவியாகும். மரண பூமிக்குத் தோல்வியும் அமரத்துவ பூமிக்கு வெற்றியும் இருக்கிறது. இது அமரத்துவக் கதை எனவும் கூறப்படுகிறது. அநாதியான தந்தை வந்து அமரத்துவமான ஆத்மாக்களாகிய உங்களுக்கு அமரத்துவக் கதையைக் கூறி அமரத்துவ யுகத்திற்கு எடுத்துச் செல்கிறார். தந்தை கூறுகிறார்: சரி, மற்றைய எல்லாவற்றையும் நீங்கள் மறந்து விட்டாலும், நீங்கள் ஓர் ஆத்மா எனும் நம்பிக்கையைக் கொண்டிருந்து உங்கள் தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள். உங்கள் புத்தியின் யோகத்தை என்னுடன் தொடர்புபடுத்தி உங்கள் பாவங்களை எரிப்பதால் நீங்கள் தர்மாத்மாக்கள் ஆகுவீர்கள். நீங்கள் மனிதர்களில் இருந்து தேவர்களாக மாறுகின்றீர்கள். இது ஒரு புதிய விடயமல்ல. 5000 ஆண்டுகளின் பின்னர் தந்தை வந்து, உங்களுக்கு உங்கள் ஆஸ்தியைக் கொடுக்கிறார். பின்னர் இராவணன் உங்களைச் சபிக்கிறான். இது ஒரு நாடகம் ஆகும். இக்கதை பாரதத்தைப் பற்றியதே. தந்தையே இதனை விளங்கப்படுத்துகிறார். வேதங்களிலோ அல்லது சமயநூல்களிலோ இது குறிப்பிடப்படவில்லை. இதனாலேயே தந்தையாகிய கடவுள் ஞானம் நிரம்பியவர், அமைதியானவர், பேரானந்தமானவர் என அழைக்கப்படுகிறார். அவர் உங்களையும் தன்னைப் போல் ஆக்குகிறார். நீங்களும் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்து பின்னர் பூஜிப்பவர்கள் ஆகினீர்கள். பின்னர் நீங்கள் பூஜிப்பவர்களில் இருந்து பூஜிக்கத் தகுதி வாய்ந்தவர்களாக ஆகுகிறீர்கள். இது கடவுளுக்குப் பொருத்தமானது அல்ல. இது பாரத மக்களாகிய உங்களையே குறிக்கின்றது. ஆரம்பத்தில் சிவனை மாத்திரமே நீங்கள் வழிபட்டீர்கள். நீங்கள் கலப்படமற்ற பக்தியைச் செய்தீர்கள். பின்னர் நீங்கள் தேவர்களை வழிபடத் தொடங்கியதால் தொடர்ந்தும் கீழிறங்கினீர்கள். நீங்கள் இப்பொழுது மீண்டும் தேவர்கள் ஆகுகிறீர்கள். குறைவாகக் கற்பவர்கள் பிரஜைகளுள் ஒருவர் ஆகுவார்கள். நன்றாகக் கற்று மற்றவர்களுக்கும் கற்பிப்பவர்கள், அரச குடும்பத்தினுள் வருவார்கள். பிரஜைகள் பலர் உருவாக்கப்படுகிறார்கள். ஒரு சக்கரவர்த்திக்கு நூறாயிரம் அல்லது மில்லியன் கணக்கான பிரஜைகள் இருப்பார்கள். முன்னைய கல்பத்தில் நீங்கள் முயற்சி செய்ததைப் போல், இப்பொழுதும் முயற்சி செய்கிறீர்கள். ஒவ்வொருவரும் செய்யும் முயற்சியில் இருந்து, மாலையின் மணி ஆகுபவர்கள் யார்? எனக் கண்டு கொள்ள முடியும். பிரஜைகளுக்கு உள்ளேயும் சிலர் செல்வந்தர்களும் சிலர் வறியவர்களும் ஆகுவார்கள். பக்தி மார்க்கத்தில் மக்கள் கடவுளின் பெயரில் தானம் செய்கிறார்கள். ஏன்? கடவுளிடம் ஒன்றும் இல்லையா? அல்லது ஸ்ரீகிருஷ்ணரிடம் தாம் எல்லாவற்றையும் ஒப்படைத்து விட்டதாக கூறுகிறார்கள். உண்மையில் அவை அனைத்துமே கடவுளுக்கே படைக்கப்படுகிறது. மக்கள் எதனைச் செய்தாலும் அதன் பலாபலனை மறுபிறவியிலேயே பெறுகிறார்கள். அவர்கள் அதனை ஒரு பிறவிக்கே பெறுகிறார்கள். இப்பொழுது தந்தை கூறுகிறார்: உங்களுக்கு 21 பிறவிகளுக்கு உங்கள் ஆஸ்தியைத் தருவதற்காகவே நான் வந்துள்ளேன். நீங்கள் எனது பெயரால் நேரடியாகச் செய்பவற்றிற்குரிய பலாபலனை 21 பிறவிகளுக்குப் பெறுகிறீர்கள். நீங்கள் மறைமுகமாகச் செய்யும் போது, ஒரு பிறவிக்குத் தற்காலிகமான சந்தோஷத்தைப் பெறுகிறீர்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: உங்களுடைய அனைத்துமே மண்ணோடு மண்ணாகப் போகின்றன. ஆகையால் யாவற்றையும் பயனுள்ள முறையில் பயன்படுத்துங்கள். சகலரும் என்றென்றும் ஆரோக்கியமாகவும், செல்வந்தர்களாகவும் ஆகுவதற்கு ஓர் ஆன்மீகப் பல்கலைக்கழகம் சார்ந்த வைத்தியசாலையை திறந்து வையுங்கள். இதன் மூலம் பெருமளவு வருமானம் சம்பாதிக்கப்படுகிறது. நீங்கள் யோகத்தின் மூலம் ஆரோக்கியத்தையும் சக்கரத்தைத்; தெரிந்து கொள்வதன் மூலம் செல்வத்தையும் பெறுகிறீர்கள். ஆதலால் தொடர்ந்தும் ஒவ்வொரு வீட்டிலும் அத்தகைய பல்கலைக்கழகம் சார்ந்த வைத்தியசாலைகளையும் திறந்து வையுங்கள். பல முக்கியஸ்தர்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் மற்றும் பலரும் வரக்கூடியதாகப் பெரிய நிலையங்களைத் திறவுங்கள். இயற்கை வைத்தியம் செய்பவர்கள் செய்வதைப் போல் உங்கள் அறிவிப்புப் பலகைகளிலும் எழுதுங்கள். தந்தை ஒவ்வொருவரின் சுபாவத்தையும் மாற்றி அதைத் தூய்மை ஆக்குகிறார். இப்பொழுது அனைவருமே தூய்மை அற்றவர்கள். முழு உலகையுமே என்றென்றும் ஆரோக்கியமானதாகவும் செல்வம் நிறைந்ததாகவும் ஆக்குகின்றவர் தந்தையே ஆவார். அவரே குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது கற்பிக்கிறார். நீங்களே மிக இனிமையான குழந்தைகள் ஆவீர்கள். நல்லது.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் இந்த விலை மதிப்பற்ற வாழ்க்கையில் உங்களை ஆன்மீக சேவையில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். பொதுவாக உலகிற்கும், குறிப்பாகப் பாரதத்திற்கும் சேவை செய்யுங்கள்.2. உங்களிடம் இருக்கும் அனைத்தையுமே பயனுள்ள முறையில் பயன்படுத்துவதற்காக அதனைக் கடவுளிடம் நேரடியாக ஒப்படையுங்கள். ஓர் ஆன்மீக வைத்திய சாலையையும் பல்கலைக்கழகத்தையும் திறவுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் சகல கவர்ச்சிகளில் இருந்தும் விடுபட்டு, உங்களின் நிலையான, ஸ்திரமான ஸ்திதியால் அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்வீர்களாக.நீங்கள் புலன்களினதும் உங்களின் உறவுகளினதும் எந்தவிதமான கவர்ச்சிகளில் இருந்தும் விடுபட்டு இருக்கும்போது, உங்களால் அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்ய முடியும். ஏதாவது புலன்களின் ஆதிக்கத்திற்கு நீங்கள் உட்படும்போது, உங்களைக் கவரும் வெவ்வேறு விடயங்கள், நீங்கள் அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்வதற்கும் சந்தோஷமாக இருப்பதற்கும் தடைகளை உருவாக்கும். எவ்வாறாயினும், உங்களின் புத்தியானது சகல கவர்ச்சிகளில் இருந்தும் விடுபட்டு, ஒரு விடயத்தில் ஸ்திரமாகும்போது, குழப்பங்கள் அனைத்தும் முடிந்துவிடும். அப்போது, நிலையான, ஸ்திரமான ஸ்திதியைக் கொண்டிருப்பதனால் நீங்கள் அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்வீர்கள்.
சுலோகம்:
உங்களின் புத்தியின் ரேகையை சதா தெளிவாக வைத்திருங்கள், உங்களால் மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியும்.அவ்யக்த சமிக்ஞை: சதா ஆட்ட அசைக்க முடியாத மற்றும் நிலையான ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.
எந்த வகையான குழப்பத்தின் மத்தியிலும் அசைக்க முடியாதவராக இருப்பதே, மேன்மையான பிராமணரின் அடையாளம் ஆகும். உலகம் குழப்பத்தில் இருக்கக்கூடும், ஆனால் மேன்மையான ஆத்மாக்களான உங்களால் தளம்பல் அடைய முடியாது. ஏன்? உங்களுக்கு நாடகத்தின் ஒவ்வொரு காட்சியையும் தெரியும். ஞானம் நிறைந்த மற்றும் சக்திசாலி ஆத்மாக்கள் எப்போதும் அத்துடன் இயல்பாகவும் அசைக்க முடியாதவர்களாக இருப்பார்கள். எனவே, நீங்கள் ஒருபோதும் சூழலால் பயப்படக்கூடாது. சதா பயமற்றவராக இருக்க வேண்டும்.