07.07.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்களுடைய பாபா உங்களை உலக அதிபதிகள் ஆக்குவதற்காக வந்துள்ளார் என்ற போதையை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். நாங்கள் அவருக்கு நேரடியாக முன்னால் அமர்ந்திருக்கின்றோம்.
கேள்வி:
ஆழமான கர்ம தத்துவத்தை அறிந்து கொண்டுள்ளவர்கள் நிச்சயமாக என்ன முயற்சியைச் செய்வார்கள்?பதில்:
நினைவில் இருப்பதற்கான முயற்சியை ஆகும், ஏனெனில் நினைவினூடாக மட்டுமே அவர்களின் கடந்தகாலக் கர்மக்கணக்குகள் தீர்க்கப்படும் என்பதை அவர்கள் அறிவார்கள். அவர்கள் தங்களுடைய கடந்த காலக் கர்மக்கணக்குகளையும், தமது கர்ம வேதனையையும் தீர்க்காவிட்டால் தண்டனை கிடைக்கும் என்பதனால் அவர்களின் அந்தஸ்து அழிக்கப்படும் என்பதை அந்த ஆத்மாக்கள் அறிவார்கள். அதன்பின்னர் அடுத்த பிறவியும் அதற்கேற்பவே அமையும்.ஓம் சாந்தி.
பாபா உங்களுக்கு முன்னால் நேரடியாக வந்திருப்பதைப் பார்க்கும்போது குழந்தைகளான உங்களில் முடிவற்ற சந்தோஷத்திற்கான பாதரசம் உயர்கிறது. சிவபாபா 5000 வருடங்களின் பின்னர் பிரம்மாவின் சரீரத்தில் பிரவேசித்துள்ளார் என்பதைக் குழந்தைகளான நீங்களும் அறிவீர்கள். என்ன செய்வதற்கு? குழந்தைகளான உங்களுக்கு இந்த போதை உள்ளது. தந்தை உங்களைச் சுவர்க்க அதிபதிகள் ஆக்குவதற்காக வந்துள்ளார் என்பதைக் குழந்தைகளான நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அவர் எங்களைத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்குகிறார். அவர் மீண்டும் மீண்டும் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகுவதற்கான வழிமுறையை எங்களுக்குக் கூறுகிறார். அந்த வழிமுறை மிகவும் இலகுவானது. அவர் குழந்தைகளுக்கு மிக இலகுவான நினைவினைக் கற்பிக்கின்றார். அறியாமைப் பாதையில், தந்தைக்கு மகன் பிறக்கும்போது, தனக்கு ஒரு வாரிசு பிறந்து விட்டார் என அவர் புரிந்து கொள்கிறார். தந்தை வந்து இந்த வேளையில் உங்களைத் தத்தெடுக்கிறார் என்பது குழந்தைகளான உங்களுக்குத் தெரியும். உண்மையில், நீங்கள் அனைவரும் சிவபாபாவின் குழந்தைகளே எனினும் எவ்வாறு பாபாவால் உங்களைத் தனக்குரியவராக்கி அவரால் உங்களுடன் பேசவும், அவர் கூறுவதை உங்களை கேட்கச் செய்யவும் முடியும்? இந்த பிரம்மாவின் சரீரத்தினூடாகச் சிவபாபா கூறுகிறார்: நான் உங்களுடைய தந்தை ஆவேன். நான் உங்களைச் சுவர்க்க அதிபதிகள் ஆக்குகிறேன். ஆத்மாக்களான நீங்கள் தூய்மை அற்றவர்களாக இருப்பதனால், உங்களால் முக்தி தாமத்திற்கோ அல்லது ஜீவன்முக்தி தாமத்திற்கோ செல்ல முடியாது. நீங்கள் அனைவரும் ஒரேயொரு தந்தையின் குழந்தைகள் ஆவீர்கள். நீங்கள் அனைவரும் தந்தையின் சொத்துக்களைப் பெற வேண்டும். பல குழந்தைகள் உள்ளார்கள். இந்த எண்ணிக்கை தொடர்ந்தும் வளரும். அவர் தொடர்ந்தும் அவர்களைத் தத்தெடுக்கிறார். ஓ ஆத்மாக்களே, நீங்கள் இப்போது எனது குழந்தைகள் ஆவீர்கள். உங்களை ஆத்மாக்கள் எனக் கருதுங்கள். நாங்கள் அரைக்கல்பமாக நினைவு செய்த தந்தையைக் கண்டடைந்து விட்டோம். ஒருபோதும் இதனை மறந்து விடாதீர்கள்! ஆத்மாக்கள் தமது சரீரத்தினூடாக அரைக்கல்பமாக, ‘ஓ தூய்மையாக்குபவரே, துன்பத்தை அகற்றி சந்தோஷத்தை அருள்பவரே!’ எனத் தந்தையை நினைவு செய்து வருகின்றனர். ஏனெனில் இது இராவண இராச்சியம் ஆகும். தங்களிடம் பல மில்லியன்கணக்கான செல்வம் இருப்பதனாலோ அல்லது தங்களிடம் ஆலைகளும் தொழிற்சாலைகளும் இருப்பதனாலோ தாம் மிகவும் சந்தோஷமாக இருப்பதாக நினைக்கும் மக்கள் உள்ளனர். ஆனால் அவை அனைத்தும் தற்காலிகமான காலத்திற்கே ஆகும். இறுதியில், அவர்கள் மிகுந்த துயரத்துடன் அழுவார்கள். துன்ப மலைகள் விழும். ஒரு விநாடியில் அந்தச் சொத்துக்கள் அனைத்தும் அழிந்து விடும். நீங்கள் ஒரு விநாடியில் தந்தையிடம் இருந்து ஆஸ்தியைப் பெற்றுக்கொள்கிறீர்கள். அவர் கூறுகிறார்: நான் ஒரு விநாடியில் சுவர்க்க இராச்சியத்தை உங்களுக்கு வழங்குகிறேன். இந்தப் பழைய உலகம் அழிக்கப்பட்டு விடும். யுத்தமும் இயற்கை அனர்த்தங்களும் நிகழும். சுத்தம் ஏற்பட வேண்டும். ஆத்மாக்களான நீங்கள் இப்போது தூய்மையானவர்கள் ஆகுகிறீர்கள். குழந்தைகளான நீங்கள் எவ்வளவு முயற்சி செய்கிறீர்கள் என்பதை பாபா, தாதா இருவராலும் புரிந்து கொள்ள முடியும். உங்களுடைய ஆஸ்தியைத் தந்தையிடம் இருந்து கோருவதற்கு உங்களை மிகச் சிறிதளவு முயற்சியையே தந்தை செய்ய வைக்கிறார் - உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள். அந்த ஆன்மீகத் தந்தை அசரீரியானவர். ஆத்மாக்களான நாங்கள் அவரை நோக்கி அழைக்கிறோம். தந்தை வினவுகிறார்: தூய்மை அற்றவர்களாக இருக்கும் ஆத்மாக்களான நீங்கள் எவ்வாறு தூய்மையானவர்கள் ஆகுவீர்கள்? ஒரேயொரு தந்தை மட்டுமே தூய்மையாக்குபவர் ஆவார். நீரைக் கொண்ட நதிகள் தூய்மையாக்குபவை என்றால், நீங்கள் விரைவாகச் சென்று அவற்றில் ஒன்றில் மூழ்கிவிட்டுத் திரும்பி வரமுடியும். பலரும் கங்கைகளில் நீராடுவதற்காகச் செல்கிறார்கள். அவ்வாறாயின், அவர்கள் ஏன் இன்னமும் தூய்மை அற்றவர்களாக இருக்கிறார்கள்? இரவு பகலாக அவர்கள் தொடர்ந்து உச்சாடனம் செய்கிறார்கள்: சீதைக்கு உரியவரான தூய்மையாக்குபவரான இராமா! அதன் அர்த்தம், பரமதந்தை பரமாத்மாவான ஒரேயொரு இராமாவே பக்தர்கள் அனைவரினதும், சீதைகள் அனைவரினதும் பாதுகாவலர் ஆவார் என்பதாகும். அவரே தூய்மையாக்குபவரும் கணவர்க்கு எல்லாம் கணவரும் ஆவார். அவர் வரும்போது மட்டுமே அவரால் உங்களைத் தூய்மையாக்க முடியும். தந்தை இப்போது கூறுகிறார்: எனது ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள்! வேறு எவருடைய கட்டளைகளையும் பின்பற்றாதீர்கள்! பக்தி செய்வதால் தாம் கடவுளைக் காணலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். பக்தி செய்வதனால் நீங்கள் கடவுளைக் கண்டடைந்தால், அவர் பக்தர்களைப் பாதுகாக்க வருவார் என அவர்கள் ஏன் கூறுகிறார்கள்? அவர் வந்து பக்தர்களைப் பாதுகாக்கும் அளவிற்கு பக்தர்களுக்கு என்ன அனர்த்தம் ஏற்பட்டது? அனர்த்தம் ஏற்படும்போது பாதுகாப்பு வழங்கப்படுகிறது. தந்தை கூறுகிறார்: நீங்கள் மிகவும் சீரழிந்து விட்டீர்கள்! இது ஆழ்நரகம் ஆகும். அனைவரும் சந்தோஷமற்றும் நோய்வாய்ப்பட்டும் இருக்கிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் என்ன நிகழ்கிறது என்று பாருங்கள்! துன்பத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை! இதனாலேயே அவர்கள் அழைக்கிறார்கள்: பாபா, எங்களுடைய துன்பத்தை நீக்கி, எமக்கு சந்தோஷத்தைத் தாருங்கள்! பாரதத்தில் சதா சந்தோஷம் நிலவியது. ஆனால் இப்போது அங்கு துன்பமே உள்ளது. இது பாரதத்திற்குரிய விடயமாகும். ஏனைய தேசங்களுக்கு உரியதன்று. அவை பின்னரே தோன்றுகின்றன. சிலர் 60 பிறவிகள் எடுக்கின்றனர். ஏனையோர் அதனை விடக் குறைந்தளவு பிறவிகளை எடுக்கின்றனர். தேவ தர்மத்தைச் சார்ந்தவர்கள் 84 பிறவிகளை எடுக்கின்றார்கள். இந்தக் கணிப்பீட்டின்படி, அரைக்கல்பத்தின் பின்னர் வருபவர்கள் 84 பிறவிகளில் அரைவாசியையே எடுப்பார்கள். அனைவரும் 84 பிறவிச் சக்கரத்தைச் சுற்றி வருவார்கள் என்பதல்ல. மக்கள் தமது மனதில் தோன்றியவற்றைப் பேசுகிறார்கள். குழந்தைகளான நீங்கள் இப்போது தந்தையிடம் இருந்து பெற்ற இந்த ஞான இரத்தினங்களால் உங்களுடைய புத்திகளை நிரப்புகிறீர்கள். இந்த இரத்தினங்கள் மிகவும் பெறுமதியானவை. தந்தை உங்களுக்கு மிக இலகுவாக விளங்கப்படுத்துகிறார். அவர் கூறுகிறார்: நீங்கள், ‘ஓ தூய்மையாக்குபவரே! வந்து எங்களைத் தூய்மை ஆக்குங்கள்!’ என்று அழைத்தீர்கள். எனவே, தந்தை வந்துள்ளார். நீங்கள் தூய்மை ஆகினால் சுவர்க்க அதிபதிகள் ஆகுவீர்கள் என்பதை நீங்கள் இப்போது புரிந்து கொண்டுள்ளீர்கள். சிவபாபா எங்களைக் கல்லுப் புத்தி உடையவர்களில் இருந்து தெய்வீகப் புத்தி கொண்டவர்களாக, கல்லுப் பிரபுக்களில் இருந்து தெய்வீகப் பிரபுக்களாக மாற்றுவதற்கு வந்துள்ளார். பக்தி மார்க்கத்தின் சிலைகள் அனைத்தும் கல்லில் வடிக்கப்பட்டவை. அவர்கள் தொடர்ந்தும் கல்லுடனேயே முயற்சி செய்கிறார்கள். தந்தை கூறுகிறார்: நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், எந்தவிதமான நன்மையும் ஏற்படப் போவதில்லை. முன்னர், நீங்கள் உங்களை அர்ப்பணித்தீர்கள். என்ன நன்மையை நீங்கள் அடைந்தீர்கள்? ஆகக் கூடியது, நீங்கள் தேவி தரிசனத்தைப் பெற்றிருக்கலாம். ஆனால் நீங்கள் முன்னர் எவ்வாறு இருந்தீர்களோ அவ்வாறே இருந்தீர்கள். தூய்மையாக்குபவராகிய தந்தை ஒரு தடவை சங்கமயுகத்திலேயே வருகிறார். சத்தியயுகத்தில் பக்தி மார்க்கத்திற்கு உரியவை எதுவும் இருக்காது. தந்தை உங்களை உங்களுடைய கழுத்தை வெட்டும்படியோ அல்லது வேறு எதனையுமோ செய்யும்படி கேட்கவில்லை. பக்தி மார்க்கத்தில் அவர்கள் பல்வேறுபட்ட விடயங்களைச் செய்கிறார்கள். முன்னர், அவர்கள் தேவிகளுக்கு நரபலி கொடுத்தார்கள். தந்தை கூறுகிறார்: நீங்கள் சீர்திருந்தியபோது தேவர்கள் ஆகினீர்கள். இப்போது நீங்கள் கல்லுப் புத்திகளைக் கொண்டவர்கள் ஆகிவிட்டீர்கள். உங்களுக்குச் சுவர்க்க இராச்சியம் வழங்கப்பட்டது. வைரங்களும் இரத்தினங்களும் பதிக்கப்பட்ட பல மாளிகைகள் அங்கிருந்தன. அத்துடன் அங்கு அளவற்ற செல்வம் இருந்தது. அவை அனைத்திற்கும் என்ன நிகழ்ந்தது? நீங்கள் இப்போது மிகவும் சந்தோஷம் அற்றவர்கள் ஆகிவிட்டீர்கள்! நீங்கள் ஆதியில் தேவ தர்மத்தைச் சார்ந்தவர்கள். நீங்கள் இப்போது இரஜோ, தமோ நிலைகளை அடைந்து விட்டீர்கள். நீங்கள் தேவ தர்மத்தைச் சார்ந்தவர்களாக இருந்தால், ஏன் உங்களை இந்துக்கள் என்று அழைக்கிறீர்கள்? ஏனைய மதத்தவர்கள் தங்களுடைய சொந்த மதத்தை மட்டுமே நம்புகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரேயொரு மதமே உள்ளது. முஸ்லிம்களுக்கு முஸ்லிம் மதம் உள்ளது. கிறிஸ்தவர்களுக்குக் கிறிஸ்தவ மதம் உள்ளது. உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் மிகவும் சந்தோஷமாகவும் தூய்மையாகவும் முற்றிலும் விகாரம் அற்றவர்களாகவும் இருந்தீர்கள். நீங்கள் இப்போது மிகவும் விகாரம் உடையவர்கள் ஆகிவிட்டீர்கள்! நீங்கள் உண்மையில் எவ்வாறு முற்றிலும் விகாரம் அற்றவர்களாக இருந்து, பின்னர் எவ்வாறு முற்றிலும் விகாரம் கொண்டவர்கள் ஆகினீர்கள் என்பது எவருக்கும் தெரியாது. 84 பிறவிகளை எடுக்கையில், நீங்கள் சதோவிலிருந்து தமோவாகி, இப்போது நீங்கள் முற்றிலும் தமோபிரதானாகவும் தூய்மை அற்றவர்களாகவும் ஆகிவிட்டீர்கள். அவர்கள் நிச்சயமாகச் சத்தியயுகத்தில் இருந்து கலியுகத்திற்கு யுகங்களினூடாகச் செல்ல வேண்டும். மதங்கள் அனைத்தும் சதோ, ரஜோ, தமோ நிலைகளுக்கூடாகச் செல்ல வேண்டும். விரிவாக்கம் இடம்பெறவே வேண்டும். நீங்களும் விருட்சத்தில் பங்கு வகிக்கிறீர்கள். விருட்சத்தின் படத்தைப் பாருங்கள்: பிரம்மா அந்த விருட்சத்தின் உச்சியில் நின்று கொண்டிருக்கிறார். பிரம்மா தனது 84 பிறவிகளின் இறுதிப் பிறவியில் விருட்சத்தின் உச்சியில் நிற்கிறார். கீழே தபஸ்யாவில் இருக்கும் பிராமணர்களான நீங்கள் அனைவரும் இறுதியில் தூய்மையற்ற சூத்திரர்கள் ஆகுகிறீர்கள். கீழே இருந்து நீங்கள் இராஜயோகத்தைக் கற்கிறீர்கள். நீங்களும் சூத்திரர்களாக இருந்தீர்கள். இப்போது பிராமணர்கள் ஆகிவிட்டீர்கள். இந்த விடயங்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டும். விருட்சம் மிக நல்லதொரு விளக்கத்தை அளிக்கிறது. நீங்கள் இப்போது இராஜயோகத் தபஸ்யாவை மேற்கொள்கிறீர்கள். உங்களுடைய ஞாபகார்த்தம் அங்கு நிற்கிறது. இது உயிர்வாழும் தில்வாலா ஆலயம் ஆகும். அது உயிரற்றது. அது சத்தியயுகத்தில் இருக்காது. உங்களால் உங்களுடைய ஞாபகார்த்தத்தை இந்த வேளையில் காணமுடியும். நீங்கள் நிஜமான தில்வாலா ஆலயத்தில் உயிருள்ள ரூபத்தில் நடைமுறையில் இருக்கிறீர்கள். சுவர்க்கம் ஸ்தாபிக்கப்படுகிறது. நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்லும்போது, இந்த ஆலயங்கள் போன்றவை இருக்காது. மம்மா, பாபா மற்றும் குழந்தைகளான நீங்களும் இங்கு இருக்கிறீர்கள். இந்த ஆலயம் உங்களுடையதை ஒத்த ஆலயமாகும். அது மதுவனம், உயிர்வாழும் தில்வாலா ஆலயம் என்று அழைக்கப்படுகிறது. பின்னர், பக்தி மார்க்கம் ஆரம்பம் ஆகும்போது, நீங்கள் ஆலயங்களைக் கட்டுவீர்கள். தந்தை உங்களை மிகுந்த செல்வந்தர்கள் ஆக்கினார். அதனால் நீங்கள் அவருக்கு ஆலயங்களைக் கட்டுவீர்கள். ஒருவர் மட்டும் சிவாலயத்தைக் கட்டினார் என்றில்லை. அவர்கள் அனைவரும் தமது கொள்ளளவிற்கேற்ப அவற்றைக் கட்டினார்கள். நீங்கள் பூஜிக்கத்தகுதி வாய்ந்தவர்களாக இருந்து பின்னர் துவாபர யுகத்தில் பூஜிப்பவர்கள் ஆகினீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். சிவபாபா உங்களை மிகுந்த செல்வந்தர்கள் ஆக்குகிறார்! எனவே, பின்னர், பக்தி மார்க்கத்தில், நீங்கள் அவருக்கு ஆலயங்களைக் கட்டினீர்கள். இந்த வேளையில் நீங்கள் இந்த விடயங்களைப் புரிந்து கொள்கிறீர்கள். எனவே, இப்போது முயற்சி செய்து அரசர்க்கெல்லாம் அரசர்கள் ஆகுங்கள். சத்தியயுகத்தில் அவர்கள் சக்கரவர்த்திகள் என்று அழைக்கப்படுகிறார்கள். திரேதா யுகத்தில் அவர்கள் அரசர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். பின்னர், உலகம் தூய்மை அற்றதாகியதும், சக்கரவர்த்திகள் தூய்மை அற்றவர்கள் ஆகிவிட்டார்கள். அரசர்களும் தூய்மை அற்றவர்கள் ஆகிவிட்டார்கள். அவர்கள் விகாரமற்ற சக்கரவர்த்திகளுக்கு ஆலயங்களைக் கட்டி அவர்களை வழிபடுகிறார்கள். அவர்கள் முதலில் சிவனுக்கு ஆலயத்தைக் கட்டுகிறார்கள். பின்னர் தேவர்களுக்குக் கட்டுகிறார்கள். நீங்களே ஆலயங்களைக் கட்டி அவர்களை வழிபடுகிறீர்கள். நீங்கள் 84 பிறவிகளை எடுக்கிறீர்கள். நீங்கள் அரைக்கல்பத்திற்குப் பூஜிக்கத்தகுதி வாய்ந்தவர்களாகிப் பின்னர் அரைக்கல்பத்திற்குப் பூஜிப்பவர்கள் ஆகுகிறீர்கள். கடவுள் பூஜிக்கத்தகுதி வாய்ந்தவரும் பூஜிப்பவரும் ஆவார் என்று மக்கள் நினைக்கிறார்கள். அவர் அனைத்தையும் வழங்கிவிட்டுப் பின்னர் அவரே அதனை எடுத்துக் கொள்கிறார் என்று அவர்கள் கூறுகிறார்கள். சரி, அவர் அதனை வழங்கிவிட்டு அவரே அதனை எடுத்துக் கொண்டால், நீங்கள் ஏன் அதனைப் பற்றிக் கவலைப்படுகிறீர்கள்? நீங்கள் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் மட்டுமே. எனவே, அழுவதற்கான தேவை என்ன? தந்தை இங்கிருந்து ஆத்மாக்களான உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். நீங்கள் இப்போது வரிசைக்கிரமமாக ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுகிறீர்கள். சிலர் தந்தையை நினைவு செய்வதே இல்லை! அவர்கள் ஆத்ம உணர்வு உடையவர்களாக இருப்பதே இல்லை! இங்கு, உங்களுக்கு அதிகளவில் விளங்கப்படுத்தப்படுகிறது: நீங்கள் ஓர் ஆத்மா, பரமாத்மா உங்களுக்குக் கற்பிக்கிறார். சம்ஸ்காரங்கள் ஆத்மாவில் உள்ளன. ஆத்மாவே சட்டத்தரணியாகவோ அல்லது நீதிபதியாகவோ ஆகுகிறார். நீங்கள் நாளை என்னவாகுவீர்கள்? ஆத்மாக்களான நீங்கள் தந்தையை நன்றாக நினைவு செய்தால், நீங்கள் அமரத்துவ பூமியில் பிறப்பு எடுப்பீர்கள். இந்த மரணபூமியில் நீங்கள் இன்னொரு பிறப்பு எடுக்க மாட்டீர்கள். ஏதாவது கர்மக்கணக்குகள் எஞ்சியிருந்தால், நீங்கள் தண்டனையை அனுபவம் செய்ய நேரிடும். அவை அனைத்தும் உங்களின் கர்ம வேதனையால் தீர்க்கப்பட வேண்டியிருக்கும். அதன்பின்னர் நீங்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தையும் பெற மாட்டீர்கள். தந்தை இங்கிருந்து குழந்தைகளான உங்களுக்கு ஆழமான கர்ம தத்துவத்தை விளங்கப்படுத்துகிறார். சத்தியயுகம் சதோபிரதான் என்றும், அங்கிருக்கும் அனைத்தும் சதோபிரதான் ஆனவை என்றும் ஆத்மாக்களான நீங்கள் அறிவீர்கள். கிருஷ்ணர் பசுக்களை மேய்த்தார் என்று அவர்கள் கூறுகிறார்கள். அரசர்கள் பசுக்களை மேய்ப்பார்களா? இத்தகைய விடயம் சாத்தியமல்ல! சத்தியயுகப் பசுக்கள் முதற்தரமானவையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. அவை காமதேனு (சகல ஆசைகளையும் நிறைவேற்றுபவை) என்று அழைக்கப்படுகின்றன. ஜகதாம்பா சரஸ்வதியும் காமதேனு ஆவார். அவர் 21 பிறவிகளுக்கு அனைவரின் ஆசைகளையும் பூர்த்தி செய்கிறார். நீங்களும் காமதேனுக்களே. அதிகளவு பால் கொடுக்கும் பசுக்களுக்கு அவர்கள் அந்தப் பெயரை வழங்கியிருக்கிறார்கள். அரசர்களின் மாளிகைகளில் முதற்தரமான பசுக்கள் இருக்கும். இங்குள்ள அரசர்களிடமே இத்தகைய நல்ல பசுக்கள் இருக்கும்போது, சத்தியயுகத்தில் அவை எத்தனை அழகானவையாக இருக்கும் எனக் கற்பனை செய்து பாருங்கள்! அங்கு துர்நாற்றமே இருக்காது. தந்தை இப்போது குழந்தைகளான உங்களுக்குக் கூறுகிறார்: நான் உங்களை அழகானவர்களாக்கி என்னுடன் மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக நான் வந்துள்ளேன். நீங்கள் என்னை நோக்கி அழைக்கிறீர்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! இந்தத் தூய்மையற்ற உலகிற்கு தூய்மையற்ற சரீரத்தில் வாருங்கள்! இவர் தூய்மை அற்றவர். அவர் தூய்மையான தேவதை ஆவார். ஒப்பீடு செய்யப்படுகிறது. தூய்மை அற்றவர்களில் இருந்து நீங்களும் தூய தேவதைகள் ஆகுவீர்கள். சத்தியயுகத்தில் உள்ள தேவர்கள், தேவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சூட்சுமவதனத்தில் தேவதைகள் இருக்கிறார்கள். தேவதைகளான நீங்கள் இப்போது தூய்மையானவர்கள் ஆகுகிறீர்கள். தந்தை உங்களுக்கு இந்தக் கற்பித்தல்களை மிக இலகுவாக வழங்குகிறார். நீங்கள் இங்கு வரும்போது, உங்களுடைய நண்பர்கள், உறவினர்கள் அல்லது உங்களுடைய வீடு மற்றும் குடும்பத்தையோ அல்லது வியாபாரம் போன்றவற்றையோ நினைவு செய்யக்கூடாது. நீங்கள் தந்தைக்கு முன்னால் வந்துள்ளீர்கள். நீங்கள் யோகத்தினூடாக வருமானத்தைச் சம்பாதிப்பதற்காக இங்கு வந்துள்ளீர்கள். எனவே, உங்களை இதில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. தண்டனையில் இருந்து விடுபடுவதற்கு, யோக சக்தியால் உங்களுடைய கடந்தகாலக் கர்மக்கணக்குகளைத் தீருங்கள். நம்பிக்கைப் பொறுப்பாளராகி அனைத்தையும் பராமரியுங்கள். எதனையிட்டும் கவலைப்படாதீர்கள். ஆத்ம உணர்வுடையவர் ஆகுங்கள்.2. இது வருமானத்தைச் சம்பாதிப்பதற்குரிய காலமாகும். நீங்கள் இதில் உங்களுடைய வீடு மற்றும் குடும்பம் அல்லது வியாபாரம் போன்றவற்றை நினைவு செய்யக்கூடாது. தேவதை ஆகுவதற்கு, ஒரேயொரு தந்தையின் நினைவில் இருப்பதற்கு முழுமையான முயற்சி செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் நினைவெனும் தேடும் விளக்கினால் சரியான சூழலை உருவாக்கும் ஒரு வெற்றி இரத்தினம் ஆகுவீர்களாக.சேவையாளர் ஆத்மாக்கள் எப்போதும் தமது நெற்றிகளில் வெற்றித் திலகத்தை அணிந்திருப்பார்கள். எனவே, நீங்கள் எந்த இடத்திற்குச் சேவை செய்யச் சென்றாலும் அந்த இடத்திற்கு முன்கூட்டியே ஒரு களிப்பூட்டும் தேடும் விளக்கைப் பொருத்துங்கள். ஆத்மாக்கள் அனைவரும் இலகுவாக நெருக்கமாக வரும் வகையில் சூழல் ஒன்று உங்களின் நினைவெனும் தேடும் விளக்கினால் உருவாக்கப்படும். அப்போது நீங்கள் மிகக் குறுகிய காலத்தில் ஆயிரம் மடங்கு வெற்றியை அடைவீர்கள். இதற்கு, வெற்றி இரத்தினம் ஆகுவதற்கான திடசங்கற்பத்தைக் கொண்டிருந்து, உங்களின் ஒவ்வொரு செயலிலும் எவ்வாறு வெற்றி அமிழ்ந்துள்ளது என்று பாருங்கள்.
சுலோகம்:
உங்களை அல்லது மற்றவர்களைக் குழப்புகின்ற எந்தவொரு சேவையும் சேவையே அல்ல, ஆனால் ஒரு சுமையே ஆகும்.அவ்யக்த சமிக்கை: எரிமலை ஸ்திதியில் இருந்தவண்ணம், சக்திவாய்ந்த நினைவை அனுபவம் செய்யுங்கள்.
எரிமலை ரூபம் ஆகுவதற்கு, இப்போது நீங்கள் வீடு திரும்ப வேண்டும் என்பதை சதா நினைவு செய்யுங்கள். திரும்பிச் செல்வது என்றால் அப்பால் இருப்பதாகும். உங்களின் அசரீரி இல்லத்திற்கு நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டும் என்பதனால், அதற்கேற்ப உங்களின் ஆடையையும் தயார் செய்து கொள்ள வேண்டும். எனவே, நீங்கள் அங்கே திரும்பிச் செல்ல வேண்டும், பின்னர் அனைவரையும் அங்கே அழைத்துச் செல்ல வேண்டும். இந்த விழிப்புணர்வைக் கொண்டிருப்பதன் மூலம் நீங்கள் இயல்பாகவே சகல உறவுமுறைகளுக்கும் சடப்பொருளின் சகலவிதமான கவர்ச்சிகளுக்கும் அப்பால் செல்வீர்கள். அதாவது, ஒரு பற்றற்ற பார்வையாளர் ஆகுவீர்கள். ஒரு பற்றற்ற பார்வையாளர் ஆகுவதன் மூலம் நீங்கள் இலகுவாகத் தந்தையின் சகபாடியாக ஆகுவதுடன் அவருக்குச் சமமானவராகவும் ஆகுவீர்கள்.