07.11.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, பிழையான சகவாசத்தின் ஆதிக்கம் அதிகளவு இழப்பை ஏற்படுத்துகின்றது. ஆகையால், உங்கள் சகவாசத்தையிட்டு நீங்கள் தொடர்ந்தும் மிகவும் அவதானமாக இருங்கள். பிழையான சகவாசத்தின் ஆதிக்கம் மிகவும் தீயது.
கேள்வி:
மூன்று வகையான குழந்தைப் பருவங்கள் யாவை? எந்தக் குழந்தைப் பருவத்தை நீங்கள் என்றுமே மறக்கக் கூடாது?பதில்:
முதலாவது உங்கள் லௌகீகத் தாய், தந்தையருக்குப் பிறக்கும் போதுள்ள குழந்தைப் பருவம். இரண்டாவது, நீங்கள் ஒரு குருவிற்குச் சிஷ்யராகும் போதுள்ளது. மூன்றாவது, நீங்கள் லௌகீகப் பெற்றோரை விட்டுச் சென்று, ஆன்மீகப் பெற்றோருக்கு உரியவராகும் போதுள்ளது. ஆன்மீகக் குழந்தைப் பருவம் என்றால் கடவுளின் குழந்தையாகத் தத்தெடுக்கப்படுதல். கடவுளின் குழந்தை ஆகுதல் என்றால் மரணித்து வாழ்தல் ஆகும். இந்த ஆன்மீகக் குழந்தைப் பருவத்தை என்றுமே மறந்து விடாதீர்கள். நீங்கள் இதனை மறந்தால். நீங்கள் அதிகளவு அழ நேரிடும். அழுதல் என்றால் மாயையினால் தாக்கப்படுதல் என்று அர்த்தம்.பாடல்:
உங்கள் குழந்தைப் பருவத்தை மறக்காதீர்கள்.ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் இந்தப் பாடலின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டார்கள். மூன்று வகையான குழந்தைப் பருவங்கள் இருக்கின்றன. ஒன்று லௌகீகக் குழந்தைப் பருவம். இரண்டாவது சந்நியாச மார்க்கக் குழந்தைப் பருவம். அதாவது, அவர்கள் தமது வீட்டையும், குடும்பத்தையும் விட்டுப் பிரிந்து, மரணித்து வாழ்ந்து, ஒரு குரு அல்லது ஒரு சந்நியாசிக்குச் சொந்தமாகும் போது ஏற்படுவது. இவர் அவர்களது தந்தை அல்ல. அவர்கள் சாதாரணமாக ஒரு குருவுக்கு உரியவர்களாகி, அவருடன் வசிப்பார்கள். அவர்களும் மரணித்து வாழ்கிறார்கள், அதாவது ஒரு குருவுக்கு உரியவர்களாகி, காட்டினுள் சென்று விடுகிறார்கள். மூன்றாவது, மரணித்து வாழும் இந்த அற்புதமான பிறவியாகும். நீங்கள் ஒரு பெற்றோரை விட்டு இன்னொரு பிரிவினரான பெற்றோருக்கு உரியவர்கள் ஆகுகின்றீர்கள். அவரே ஆன்மீகத் தாயும், தந்தையும் ஆவார். இது உங்களுடைய மரணித்து வாழும் பிறவி, அதாவது கடவுளின் மடியில் எடுக்கின்ற ஆன்மீகப் பிறப்பு ஆகும். ஆன்மீகத் தந்தை இப்போது உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார். மற்றவர்கள் எல்லோரும் லௌகீகத் தந்தையர்கள், ஆனால் அவரோ ஆன்மீகத் தந்தையாவார். இதனாலேயே ‘மரணித்து வாழ்ந்து, தந்தைக்கு உரியவராகிய பின்னர், இந்தக் குழந்தைப் பருவத்தை மறந்து விடாதீர்கள்’ எனப் பாடப்படுகிறது. சிவபாபாவே அதிமேலான கடவுள் ஆவார். மக்கள் கீதையை விவாதிக்கும் போது “எல்லாவற்றுக்கும் முதலில் அதிமேலான கடவுள் யார்?” என்று அவர்களிடம் கேளுங்கள். “பிரம்மதேவனுக்கு வந்தனங்கள், விஷ்ணு தேவனுக்கு வந்தனங்கள்” என்று கூறிப் பின்னர் பரமாத்மா சிவனுக்கு வந்தனங்கள் எனக் கூறுகிறார்கள். எல்லா மதத்தினருக்கும் தந்தை அவரே. எல்லாவற்றுக்கும் முதலில், அதிமேலான தந்தை ஒரே ஒருவரே என்பதை விளங்கப்படுத்துங்கள். பிரம்மாவோ அல்லது விஷ்ணுவோ தந்தையாகிய கடவுள் என்று எவரும் கூற மாட்டார்கள். எல்லாவற்றுக்கும் முதலில், தந்தையாகிய கடவுள் ஒரேயொருவரே என்பதையும், அவர் அசரீரியானவர் என்பதையும் எல்லோரும் உண்மையிலேயே ஏற்றுக் கொள்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அவரே படைப்பவரும், தூய்மையாக்குபவரும் என்று அழைக்கப்படுகிறார். நீங்கள் நிச்சயமாகத் தந்தை ஒருவரிடம் இருந்தே ஆஸ்தியைப் பெற்றுக் கொள்வீர்கள். இதனைப் பற்றிச் சற்றுச் சிந்தியுங்கள்: எல்லையற்ற தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெற்றுக்கொண்டவர் யார்? தந்தையே புதிய உலகைப் படைக்கிறார். அவரது பெயர் சிவன். அவர்கள் கூறுகிறார்கள்: பரமாத்மா சிவனுக்கு வந்தனங்கள். அத்துடன் அவர்கள் அவரின் பிறந்த தினத்தையும் கொண்டாடுகிறார்கள். அவரே தூய்மையாக்குபவர், படைப்பவர், ஞானம் நிறைந்தவர் ஆவார். பின்னர் சர்வவியாபகர் என்ற கருத்தானது நிலைக்காது. அவரது புகழானது அவரின் செயல்களை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கிறது. கடந்த காலத்தில் ஏதாவது ஒன்றைச் செய்தவர்களின் புகழே பாடப்படுகிறது. தந்தையே அதி மேலானவர். அவரே விடுதலை அளிப்பவர், கருணை மிக்கவர், துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவர், வழிகாட்டி என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். நீங்கள் புதிய இடத்திற்குச் செல்லும்போது ஒரு வழிகாட்டியை உங்களுடன் அழைத்துச் செல்கிறீர்கள். மக்கள் வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்ததும் அவர்களுக்கு அனைத்தையும் காண்பிப்பதற்காக உள்ளுர்வாசி ஒருவர் வழிகாட்டியாக நியமிக்கப்படுகிறார். மக்களை யாத்திரைக்கு அழைத்துச் செல்லும் வழிகாட்டிகளும் உள்ளனர். தந்தையும் வழிகாட்டி என்று அழைக்கப்படுவதால் அவர் நிச்சயமாக அனைவருக்கும் வழிகாட்டியாக இருக்க வேண்டும். ஆனால் சர்வ வியாபகர் என்ற கருத்தினால் அந்த விடயமே அர்த்தமற்றதாக ஆகுகின்றது. எல்லாவற்றிற்கும் முதலில், தந்தை ஒருவர் என்பதையே முதலில் விளங்கப்படுத்துங்கள். சகல சமயநூல்கள் அனைத்திலும் கீதையே பிரதான இரத்தினமாகும். இது கடவுளாலேயே பாடப்பட்டது. நீங்கள் இதனை நிரூபித்தால், இதன் குழந்தைகளாகிய மற்றைய சமயநூல்களும் பொய் என்பது நிரூபணமாகும். எல்லாவற்றுக்கும் முதலில் நீங்கள் உண்மையான கீதையின் சாராம்சத்தைக் கொடுக்க வேண்டும். கடவுள் சிவன் பேசுகிறார்: சிவபாபாவின் தெய்வீகத் திருவிளையாடல்கள் என்ன? அவர் கூறுகிறார்: நான் இந்த சரீரத்தின் ஆதாரத்தை எடுத்து, உங்களைத் தூய்மை அற்றவர்களிலிருந்து தூய்மையானவர்கள் ஆகுவதற்கான வழியை உங்களுக்குக் காட்டுகிறேன். நான் வந்து, குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறேன். ஆகவே இதில் தெய்வீகத் திருவிளையாடல்களின் அவசியம் என்ன? இவரே வயது முதிர்ந்தவரும், அனுபவம் வாய்ந்தவரும் ஆவார். அவரே இங்கே வந்து குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கிறார். அவர் தூய்மை அற்றவர்களைத் தூய்மை ஆக்குவதற்கே உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறார். நீங்கள் சத்திய யுகத்திற்குச் சென்று, அங்கே ஆளுவீர்கள். நீங்கள் அந்த ஆஸ்தியைப் பெற்றுக் கொள்வீர்கள், ஆனால் ஏனையவர்கள் அசரீரி உலகமாகிய முக்தி தாமத்தில் இருப்பார்கள். இது விளங்கிக் கொள்வதற்கு மிகவும் இலகுவான ஒரு விடயம். பாரதத்திலே தேவர்களின் இராச்சியம் இருந்தது. அங்கே ஒரேயொரு சமயமே இருந்தது. இப்பொழுது கலியுகத்தில் பல மனிதர்கள் இருக்கிறார்கள். அங்கே மிகக் குறைவானவர்களே இருப்பார்கள். பரமாத்மா பரமதந்தை ஒரேயொரு சமயத்தை ஸ்தாபித்து, ஏனைய எண்ணற்ற சமயங்களையும் அழிப்பதற்கே இங்கு வருகிறார் ஏனையோர் சாந்தி தாமத்திற்குச் செல்வார்கள். அங்கே தூய்மையற்ற ஆத்மா எவருமே இருக்க முடியாது. அவரது பெயரே யாவருக்கும் சற்கதி அருள்பவராகிய தூய்மையாக்குபவர் என்பதாகும். இதுவே பழைய உலகமாகிய கலியுகம். சத்திய யுகமே பொன்னுலகம் என்று அழைக்கப்படுகிறது. தேவர்களை வழிபடுபவர்களால் அனைத்தையும் மிக இலகுவில் புரிந்து கொள்ள முடியும். பூஜிக்கத் தகுதி வாய்ந்தவர்களே பின்னர் பூஜை செய்பவர்களாகி உள்ளனர். ஆகவே அனைத்திற்கும் முதலில், தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். அவர்களிடம் கூறுங்கள்: நீங்கள் அவரது குழந்தைகள் என்பதை மறந்து விடாதீர்கள். அதனை நீங்கள் மறந்தீர்களாயின் நீங்கள் அழ நேரிடும். அத்துடன் ஏதாவது ஒரு வழியால் மாயையால் தாக்கப்படுவீர்கள். ஆத்ம உணர்வுடையவர் ஆகுங்கள்! சகல ஆத்மாக்களும் தந்தையுடன் வீட்டிற்குத் திரும்ப வேண்டும். இந்த மனிதர்கள் எல்லோருமே மரணிக்கப் போகிறார்கள். ஆகவே யாருக்காக யார் அழுவது? பாரத மக்களே பெரிதும் அழுகிறார்கள். அவர்கள் (யாராவது மரணம் அடைந்தால்) முதல் 12 மாதங்கள் பெருமளவு அழுது புலம்புகிறார்கள். அவர்கள் தம் மார்பிலும் அடித்துக் கொள்கிறார்கள். இதுவே இந்த மரண பூமியின் நடைமுறைகளும் சம்பிரதாயங்களும் ஆகும். உங்களுக்கு இப்பொழுது அமரத்துவ பூமியின் நடைமுறைகளும் சம்பிரதாயங்களும் கற்பிக்கப்படுகிறது. உங்களுக்கு இப்பொழுது இந்தப் பழைய உலகில் விருப்பமின்மை இருக்கிறது. தந்தை கூறுகிறார்: சதா என்னை மாத்திரமே நினைவு செய்யுங்கள்! இவை யாவுமே அழியப் போகின்றன. இந்த நாடகமானது முடிவடையப் போவதால் நாங்கள் இப்பொழுது வீடு திரும்பவுள்ளோம். இந்த நாடகத்தில் எல்லோரும் நடிகர்களே. ஆகவே நீங்கள் யாரில் பற்றைக் கொண்டிருப்பீர்கள்? ஒவ்வொருவரும் சென்று வேறு ஒரு பாகத்தை நடிக்க வேண்டும் என நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்கள். அவ்வாறாயின் அழ வேண்டிய அவசியம் என்ன? ஒவ்வொருவரது பாகமும் நிச்சயிக்கப்பட்டது. தந்தை ஞானக் கடலாகவும், பேரின்பக் கடலாகவும், அன்புக் கடலாகவும் இருக்கிறார். ஆகவே அவரைப் பின்பற்றி அவரைப் போல ஆகுங்கள். ஆறுகள் கடலில் இருந்தே வெளிவருகின்றன. எல்லோரும் வரிசைக்கிரமப்படியே உள்ளனர். சிலர் இந்த ஞானத்தை மிக நன்றாகப் பொழிந்து மற்றவர்களையும் தமக்குச் சமமானவர்களாக ஆக்குகிறார்கள். அவர்கள் குருடர்களின் ஊன்று கோல்கள் ஆகுகின்றார்கள். தந்தைக்குப் பல உதவியாளர்கள் தேவை. தந்தை கூறுகிறார்: குருடர்களின் ஊன்றுகோல்களாகி, அனைவருக்கும் வழிகாட்டுங்கள்! ஒரேயொரு ஆசிரியர் மாத்திரமே குருடர்களுக்கு வழி காட்டுபவராக ஆகுகின்றார் என்பதல்ல. எல்லோருமே அவ்வாறு ஆக வேண்டும். நீங்கள் மூன்றாவது கண்ணாகிய ஞானத்தைப் பெற்றிருக்கிறீர்கள். இதுவே மூன்றாம் கண்ணைப் பெறுகின்ற கதை எனப்படுகின்றது. தெய்வீகக்கண் என்பது ஆத்மாவையே குறிக்கிறது. மக்கள் எதையும் புரிந்து கொள்வதே இல்லை. அவர்கள் முற்றிலும் சீரழிந்த புத்தியைக் கொண்டிருக்கிறார்கள். பாரத மக்களுக்குத் தமது சமயத்தை ஸ்தாபித்தவர் யார் என்பது கூடத் தெரியாது. தந்தையின் பிறப்பு இங்கேயே இடம்பெறுகிறது. மக்கள் சிவனின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். ஆகவே அவரால் எவ்வாறு சர்வ வியாபியாக இருக்க முடியும்? உலகில் இருக்கின்ற வேறு எவருக்குமே தந்தையையோ அல்லது படைப்பையோ தெரியாது. சகல ரிஷிகளும், முனிவர்களும் கூறுகிறார்கள்: “நேற்றி, நேற்றி” (இதுவுமல்ல, அதுவுமல்ல). அவர்கள் கடவுள் சர்வ வியாபகர் என்று கூறுகின்ற ஒரேயொரு பெரிய தவறை மாத்திரமே செய்திருக்கிறார்கள். அவரே அனைவருடைய தந்தை என்றும், தூய்மையாக்குபவர் என்றும், முக்தியை அளிப்பவர் என்றும் உங்களால் நிரூபிக்க முடியும். அவர் உங்களைப் பழைய உலகிலிருந்து புதிய உலகிற்கு அழைத்துச் செல்கிறார். அங்கே துன்பம் என்ற கேள்விக்கே இடமில்லை. அவர்கள் சமயநூல்களில் எதை எழுதியிருக்கிறார்கள் எனப் பாருங்கள். அவர்கள் இலக்ஷ்மி நாராயணனைப் பற்றிக்கூட வினவுகிறார்கள். அவர்களால் விகாரம் இல்லாது எவ்வாறு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்? ஓஹோ, ஆனால் அவ்வுலகானது சகல தெய்வீகக் குணங்களும் நிறைந்தது என்றும், பதினாறு சுவர்க்கக் கலைகள் நிறைந்தது என்றும், முற்றாகவே விகாரங்கள் எதுவுமே அற்றது என்றும் கூறப்படுகிறது. அதுவோ விகாரமற்ற உலகம். இது விகாரமான உலகம். ஆகவே அங்கும் விகாரங்கள் இருக்குமா என உங்களால் எப்படிக் கேட்க முடியும்? நீங்கள் முதலில் தந்தையை அறிந்து கொள்ளும் வரை உங்களால் எதனையும் புரிந்து கொள்ள முடியாது. சர்வவியாபி என்ற பெரும் தவறை அவர்கள் செய்திருக்கிறார்கள். அந்தத் தவறு திருத்தப்பட்டால் மாத்திரமே அவர்கள் தந்தையை அறிந்து கொள்வார்கள். அவர்கள் நம்பிக்கையைக் கொண்டிருக்க வேண்டும். பாபா நான் இப்பொழுது மீண்டும் உங்களிடமிருந்து இராச்சிய பாக்கியத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவே உங்களுக்கு உரியவனாகி உள்ளேன். அவர்கள் சமயநூல்களிலே எதை எழுதியிருக்கிறார்கள் என்று பாருங்கள். அவர்கள் சத்திய யுகத்தில் இலக்ஷ்மி நாராயணனைக் காட்டுகிறார்கள். ஆனால் அவர்களின் குழந்தைப் பருவமான ராதை, கிருஷ்ணரை துவாபர யுகத்தில் காட்டுகிறார்கள். எப்படியாயினும் ஸ்ரீகிருஷ்ணரே சத்திய யுகத்தின் இளவரசர் ஆவார். ஸ்ரீகிருஷ்ணரின் முகச்சாயல் பிறவி பிறவியாக மாறுகிறது. ஸ்ரீகிருஷ்ணர் அதே முகச்சாயலுடன் துவாபர யுகத்தில் இருக்க மாட்டார். எவராலுமே அதே முகச்சாயலைக் கொண்டிருக்க முடியாது. அது சாத்தியமானதல்ல. நீங்களே ஆதியில் அவ்விடத்தின் (அசரீரியான உலகின்) வாசியாக இருந்தீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அதுவே இனிய மௌனமான வீடாகும். மக்கள் அங்கு செல்வதற்காகவே பக்தி செய்கிறார்கள். அவர்கள் “எங்களுக்கு அமைதி தேவை!” எனக் கூறுகிறார்கள். ஆத்மாக்கள் தமது பாகங்களை நடிப்பதற்காகப் புலன் உறுப்புக்களைப் பெற்றுள்ளார்கள். ஆகவே எவ்வாறு அவர்களால் அமைதியாக இருக்க முடியும்? மக்கள் அமைதிக்காகவே ஹத்த யோகத்தைப் பயின்று, குகைகளினுள் செல்கிறார்கள். யாராவது ஒருவர் ஒரு மாதமாக ஒரு குகையில் இருப்பாராயின், அது சாந்திதாமம் என்று அர்த்தமாகுமா? நாங்கள் சாந்திதாமத்திற்கும் பின்னர் எங்கள் பாகத்தை நடிப்பதற்காகச் சந்தோஷ தாமத்திற்கும் செல்வோம். சந்தோஷமானவர்களுக்கு இது சுவர்க்கம் எனவும், சந்தோஷம் அற்றவர்களுக்கு இது நரகம் எனவும் அம்மக்கள் கூறுகின்றார்கள். புதிய உலகமே சுவர்க்கம் என்றும், பழைய உலகமே நரகம் என்றும் உங்களுக்குத் தெரியும். கடவுள் பேசுகிறார்: பக்தி செய்வது, யாகங்கள் வளர்ப்பது, தான தர்மங்கள் செய்வது ஆகிய யாவும் பக்தி மார்க்கத்தி;ற்கு உரியவை. அதில் எவ்வித அர்த்தமும் இல்லை. சத்திய, திரேதா யுகங்களே பிரம்மாவின் பகல் எனப்படுகிறது. பிரம்மாவின் பகலே பிராமணர்களாகிய உங்களதும் பகலாகும். பின்னரே உங்கள் இரவு ஆரம்பம் ஆகுகின்றது. முதலில் நீங்கள் சத்திய யுகத்திற்குச் செல்வீர்கள். பின்னர் நீங்கள் சக்கரத்தில் சுற்றிச் செல்கிறீர்கள். நீங்கள் பிராமணர்களாகவும், தேவர்களாகவும், சத்திரியர்களாகவும் அத்துடன் சூத்திரர்களாகவும் ஆகுகின்றீர்கள். “கடவுள் சிவன் பேசுகிறார்” என நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் அவர்களோ “கடவுள் கிருஷ்ணர் பேசுகிறார்” என்றே கூறுகிறார்கள். இதில் பெரும் வேறுபாடு இருக்கின்றது. இவரே முழு 84 பிறவிகளையும் எடுக்கிறார், சூரிய வம்சத்தவர் எல்லோருமே மறுபிறவியை இவருடன் எடுத்து, இப்பொழுது அவர்களின் இராச்சிய பாக்கியத்தை இறுதியில் பெற்றுக் கொள்கிறார்கள். குழந்தைகளாகிய உங்களிலும் இதனை புரிந்து கொள்பவர்கள் அதனால் சந்தோஷப்படுகின்றார்கள். புதியவர்கள் இதனால் சந்தோஷப்படுவதில்லை. நாங்கள் எவரையுமே இகழவில்லை. தந்தை உங்களுக்கு மிகவும் இலகுவான விளக்கத்தைக் கொடுக்கிறார். இங்கே நீங்கள் பாபாவின் சகவாசத்தில் இருக்கிறீர்கள். ஆகவே உங்களால் நன்றாக புரிந்து கொள்ள முடியும். பின்னர் நீங்கள் வெளிச் சகவாசத்தினுள் சென்றதும் உங்கள் நிலை எவ்வாறு ஆகும் என்று கூற முடியாது. தவறான சகவாசத்தின் ஆதிக்கமானது மிகவும் தீங்கானது. சுவர்க்கத்தில் இவ்வாறான விடயங்கள் இடம்பெற மாட்டாது. சுவர்க்கம், வைகுந்தம், சந்தோஷ தாமம் என்பதே அதன் பெயராகும். அசுரர்களும் அங்கு இருந்ததாக அவர்கள் சமயநூல்களில் எழுதி இருக்கிறார்கள். நீங்கள் உலக அதிபதிகள் என்பது இப்பொழுது உங்களுக்குத் தெரியும். அங்கே பூமியிலோ, வானத்திலோ எவ்விதமான பிரிவினைகளும் இல்லை. இப்பொழுதோ பல பிரிவினைகள் இருக்கின்றன. அவர்கள் தம் சொந்த எல்லைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள். இவ்வுலகில் இப்பொழுது பெருமளவு சண்டையே இடம்பெறுகிறது. எவரும் உங்களிடம் வரும் போது, அனைத்திற்கும் முதலில் தந்தை யார் என்றும், கடவுள் என்று அழைக்கப்படுபவர் யார் என்பதையும் அவருக்கு விளங்கப்படுத்துங்கள். பிரம்மா, விஷ்ணு, சங்கரர் ஆகியோர் தேவர்களே ஆவர். ஒரேயொரு கடவுளேயன்றி, பத்துக் கடவுள்கள் இருக்க முடியாது. ஸ்ரீகிருஷ்ணர் கடவுளாக இருக்க முடியாது. கடவுள் எவ்வாறு உங்களுக்கு வன்முறையைக் கற்பிப்பார்? கடவுள் பேசுகிறார்: காமமே மிகக் கொடிய எதிரி. ஆகவே அதனை வெல்வதற்காக ஒரு சத்தியத்தைச் செய்யுங்கள். இதற்கான ஒரு ராக்கியைக் கட்டுங்கள். இது தற்காலத்தையே குறிக்கிறது. கடந்த காலத்தில் பக்தி மார்க்கத்தில் நடந்தவை யாவும் மீண்டும் இடம்பெறும். தீபாவளியின்போது மக்கள் மகாலக்ஷ்மியை வணங்குகிறார்கள். இலக்ஷ்மியும், நாராயணனும் இணைந்தே இருக்கிறார்கள். என்பது எவருக்குமே தெரியாது. இலக்ஷ்மி செல்வத்தை எங்கிருந்து பெற்றார்? ஆண்களே உழைக்கிறார்கள், ஆயினும் இலக்ஷ்மியின் பெயரே நினைவுகூரப்படுகிறது. இலக்ஷ்மியே முதலில் நினைவு செய்யப்படுகிறார், பின்னரே நாராயணன் ஆவார். அவர்கள் மகாலக்ஷ்மியை வித்தியாசமானவர் எனக் கருதி அவரை நான்கு கரங்களுடன் காட்டியிருக்கிறார்கள்: இரண்டு ஆணிற்கு உரியதும், இரண்டு பெண்ணிற்கு உரியதுமாகும். எவ்வாறாயினும் அவர்களுக்கு இவ் விடயங்கள் தெரியாது. நீங்கள் இப்பொழுது இவ் விபரங்களை அறிவீர்கள். பாடலை நீங்கள் செவிமடுத்தீர்கள்: உங்கள் குழந்தைப் பருவ காலத்தை மறக்காதீர்கள். ஆத்மா கூறுகிறார்: பாபா, நான் இப்பொழுது அதை நினைவு செய்கிறேன். அதிகாலையிலே விழித்தெழுந்து தந்தையுடன் பேசுங்கள். தந்தையை அமிர்த வேளையில் நினைவு செய்வது சிறந்தது. மாலையில் ஏகாந்தத்தில் அமர்ந்திருங்கள். நீங்கள் ஒரு தம்பதியினராக வசித்தாலுமே தொடர்ந்தும் இந்த ஒழுக்கத்தைப் பின்பற்றுங்கள். பிரம்மாவின் சரீரத்தினூடாக சிவபாபா என்ன கூறினார்? நாங்கள் பூஜை செய்யத் தகுதி வாய்ந்தவர்களாக இருக்கும் பொழுது நாம் பாபாவை ஒருமுறையேனும் நினைப்பதில்லை. நாம் பூஜை செய்பவர்களாக ஆகும்பொழுதே தந்தையை நினைவு செய்கிறோம். இவ்வாறு உங்களுடன் நீங்கள் பேசுவதன் மூலம் இதனைச் செவிமடுப்பவர் எவராக இருப்பினும் அவர் அதிசயிப்பார். நாம் அரைக்கல்பமாகக் காமச் சிதையில் அமர்ந்திருந்து, எரிந்து, இறந்து கொண்டிருந்தோம். நாங்கள் இடுகாட்டில் இருந்தோம். நாங்கள் இப்பொழுது ஞானச்சிதையில் அமர்ந்து சுவர்க்கத்திற்குச் செல்ல வேண்டும். இதுவோ பழைய உலகம். பாரத மக்கள் இது சுவர்க்கம் என நினைக்கிறார்கள். ஓஹோ! ஆனால் சத்திய யுகத்திலேயே சுவர்க்கம் இருந்தது. சுவர்க்கத்தில் தேவர்களின் இராச்சியம் இருந்தது. இங்கே மாயையின் பகட்டே இருக்கின்றது. பாபா இப்பொழுது கூறுகிறார்: தீய சகவாசத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு மரணிக்க வேண்டாம். அல்லாவிடின் நீங்கள் மிகவும் வருந்த வேண்டி நேரிடும். ஒரு பரீட்சையின் முடிவுகள் அறிவிக்கப்படும் பொழுது எல்லோருமே அந்த முடிவுகளை அறிந்து கொள்வார்கள். ஆரம்பத்தில் புதல்விகள் திரான்சில் சென்று தாங்கள் எவ்வாறு ஆகுவோம் எனக் கூறுவார்கள்: 'அரசி ஆகுவோமோ அல்லது பணிப்பெண் ஆகுவோமோ?". பின்னர் பாபா அதனை நிறுத்தி விட்டார். இறுதியிலே நீங்கள் எவ்வளவு தந்தையின் சேவையைச் செய்தீர்கள் என்றும், எத்தனை பேரை நீங்கள் உங்களுக்குச் சமமாக்கினீர்கள் என்பதுவும் தெரியவரும். நீங்கள் அனைத்தையும் நினைப்பதோடு உங்களுக்குக் காட்சிகளும் கிடைக்கும். காட்சியைக் கொடுக்காது தர்மராஜாவினால் உங்களுக்குத் தண்டனை வழங்க முடியாது. இதனாலேயே குழந்தைகளாகிய உங்களுக்கு மீண்டும் மீண்டும் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது: என்னை மாத்திரமே நினைவு செய்யுங்கள்! தந்தை இங்கு வந்து, மிக இனிய விருட்சத்தின் நாற்;றை நாட்டுகிறார். அந்த அரசாங்கம் மரக் கன்றுகளை நாட்டி, (மரநாட்டு) விழா கொண்டாடுகிறார்கள். இங்கே புதிய உலகிற்கான மரக்கன்று நாட்டப்படுகிறது. ஆகவே அத்தகைய தந்தையை மறக்காதீர்கள். தந்தையின் சேவையிலே உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். அல்லாவிடின் இறுதியில் நீங்கள் மிகவும் மனம் வருந்த வேண்டி ஏற்படும். இப்பொழுது நீங்கள் உங்கள் ஆஸ்தியைப் பெறாவிடின், அதுவே ஒவ்வொரு கல்பத்திற்குமான கணக்காகிவிடும். ஆகவே முழு முயற்சியைச் செய்யுங்கள். நல்லது.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையே ஞானக்கடலும், பேரானந்தக் கடலும், அன்புக்கடலும் ஆவார். ஆகவே அவருக்குச் சமமானவர் ஆகிப் பிறரை உங்களுக்குச் சமமானவர் ஆக்குகின்ற சேவையைச் செய்யுங்கள். அனைவருக்கும் இந்த ஞானம் என்ற மூன்றாவது கண்ணைக் கொடுங்கள்.2. நீங்கள் வருந்தத்தக்க சகவாசத்தை ஒருபோதும் கொண்டிருக்காதீர்கள். சகவாசத்தின் ஆதிக்கம் மிகவும் தீயது என்பதால் உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தந்தையிடமிருந்து உங்கள் முழு ஆஸ்தியையும் பெற முயற்சி செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
உங்களுடைய திருப்தி, உங்கள் மகத்துவம் ஆகிய சிறப்பியல்புகளினால் ஆசீர்வாதங்களை அருள்கின்ற ரூபம் ஆகுவதன் மூலம் அனைவரதும் இஷ்ட தெய்வம் ஆகுவீர்களாக.தம்மையிட்டும் பிறரையிட்டும் சதா திருப்தியாக இருப்பவர்கள் மாத்திரமே இஷ்ட தெய்வமாகவும், எட்டு இஷ்ட தெய்வங்களில் ஒருவராகவும் ஆக முடியும். நீங்கள் அதனை அனைத்திலும் அதி சிறந்த தெய்வீகக் குணம் என்றழைத்தாலும் சரி, தானம் என்றழைத்தாலும் சரி, ஒரு சிறப்பியல்பு அல்லது மகத்துவம் என்றழைத்தாலும் சரி அது திருப்தியே ஆகும். திருப்தியான ஆத்மாக்கள் மாத்திரமே கடவுளாலும், தம்மாலும் நேசிக்கப்படுகிறார்கள். அத்தகைய திருப்தியான ஆத்மாக்கள் ஆசீர்வாதங்களை அருள்கின்ற ஆத்மாக்கள் என அனைவராலும் அறியப்படுகிறார்கள். இப்பொழுது, இறுதிக் கணங்களில், மகாதானி என்ற வடிவத்தையும் விட ஆசீர்வாதங்களை அருள்பவர் என்ற வடிவத்தினூடாகவே அதிகளவு சேவை இடம்பெறும்.
சுலோகம்:
தனது நெற்றியில் சதா வெற்றி திலகத்தின் பிரகாசத்தை கொண்டிருப்பவரே வெற்றி இரத்தினம் ஆவார்.அவ்யக்த சமிக்ஞை: தந்தை பிரம்மாவைப் போல், சம்பூரணமான, முழுமையான ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.
பாண்டவர்கள் மலைகளில் உருகிப் போனார்கள் என்பதே அவர்களைப் பற்றிய ஞாபகார்த்தமாகும். அது மலைகளில் அல்ல, ஆனால் தமது மேன்மையான ஸ்திதியில் அவர்கள் உருகிப் போனார்கள். அவர்கள் கீழே உள்ள அனைத்தில் இருந்தும் முற்றாகத் தம்மை அவ்யக்த ஸ்திதிக்கு எடுத்துச் சென்றார்கள். அவர்கள் அந்த ஸ்திதியில் உருகிப்போனார்கள், அதாவது, அந்த ஸ்திதியில் தமது முழுமையை அடைந்தார்கள். இது பாண்டவர்களாகிய உங்களுடைய ஞாபகார்த்தமாகும்.