07.12.25    Avyakt Bapdada     Tamil Lanka Murli    18.01.2008     Om Shanti     Madhuban


சம்பூரணமான தூய்மையின் மூலம் ஆன்மீக இராஜரீகத்தையும் ஆளுமையையும் அனுபவம் செய்தவண்ணம், உங்களின் மாஸ்ரர் ஞான சூரியன் என்ற ரூபத்தை வெளிப்படுத்துங்கள்.


இன்று, பாப்தாதா எங்கும் உள்ள தனது இராஜரீகமும் ஆளுமையும் கொண்ட குடும்பத்தைப் பார்க்கிறார். இராஜரீகத்தினதும் ஆன்மீக ஆளுமையினதும் அத்திவாரம், சம்பூரணமான தூய்மையே ஆகும். ஒவ்வொருவரின் தலையிலும் ஒவ்வொருவரின் நெற்றியிலும் ஜொலிக்கும் ஒளிக்கிரீடமே தூய்மையின் அடையாளம் ஆகும். பிராமணக் குடும்பமான நீங்கள் மட்டுமே ஜொலிக்கும் கிரீடங்களை அணிபவர்கள், ஆன்மீக இராஜரீகத்தையும் ஆன்மீக ஆளுமையையும் கொண்டிருப்பவர்கள். ஏனென்றால், நீங்கள் தூய்மையைக் கடைப்பிடிக்கிறீர்கள். பிராமண ஆத்மாக்களான உங்களின் தூய்மையின் ஆதிக்கம் ஆரம்ப காலத்தில் இருந்தே பிரபல்யமானது. உங்களுக்கு அநாதி காலத்தையும் ஆதிகாலத்தையும் நினைவிருக்கிறதா? அநாதியாக, நட்சத்திரங்களான நீங்கள், தூய ஆத்மாக்களின் வடிவில் விசேடமான பிரகாசத்துடன் ஜொலித்ததை நினைவு செய்யுங்கள். ஏனைய ஆத்மாக்களும் அங்கே இருந்தார்கள். ஆனால், எல்லோருடனும் இருந்த போதும், நட்சத்திரங்களான உங்களின் பிரகாசம், விசேடமானதொரு ஜொலிப்புடன் காணப்பட்டது. ஆகாயத்தில் பல நட்சத்திரங்கள் இருந்தாலும், வெகு சில நட்சத்திரங்கள் மட்டுமே விசேட ஜொலிப்புடன் காணப்படுவதைப் போன்றே அது இருந்தது. நீங்கள் எல்லோரும் உங்களைப் பார்க்கிறீர்களா? ஆரம்ப காலத்திற்கான அந்த வேளையில், உங்களின் தூய்மையின் இராஜரீகமும் ஆளுமையும் எத்தனை மகத்துவமாக இருந்தன! நீங்கள் எல்லோரும் ஆரம்ப காலத்தை அடைந்து விட்டீர்களா? இப்போதே அங்கே செல்லுங்கள். சோதியுங்கள்: எனது கோட்டின் பிரகாசம் எத்தனை சதவீதமாக உள்ளது? ஆரம்ப காலத்தில் இருந்து இந்த இறுதிக் காலம் வரை, உங்களின் தூய்மையின் இராஜரீகமும் ஆளுமையும் எல்லா வேளைக்கும் நிலைத்திருக்கிறது. அநாதியான ரூபமான ஜொலிக்கும் நட்சத்திரம், பிரகாசிக்கும் தந்தையுடனேயே வசிக்கிறார். உங்களின் சிறப்பியல்பை இப்போது அனுபவம் செய்யுங்கள். நீங்கள் எல்லோரும் அநாதியை அடைந்து விட்டீர்களா? அதன்பின்னர், கல்பம் முழுவதும் தூய ஆத்மாக்களான உங்களின் இராஜரீகம் பல்வேறு ரூபங்களில் உங்களுடன் இருந்தன. ஏனென்றால், வேறு எவருமே ஆத்மாக்களான உங்களைப் போல் சம்பூரணமாகத் தூய்மை அடையவில்லை. விசேட ஆத்மாக்களான நீங்கள், தந்தையிடம் இருந்து தூய்மை என்ற பிறப்புரிமையைப் பெற்றுள்ளீர்கள். இப்போது, ஆரம்ப காலத்திற்குச் செல்லுங்கள். நீங்கள் அநாதியைக் கண்டீர்கள். இப்போது, ஆரம்ப காலத்தில், உங்களின் தூய்மையின் இராஜரீக வடிவம் மிகவும் உயர்ந்தது! நீங்கள் எல்லோரும் சத்திய யுகத்திற்கு வந்துவிட்டீர்களா? அங்கே வந்துவிட்டீர்களா? அங்கே சென்று விட்டீர்களா? தேவ ரூபம், மிகவும் அழகான ரூபம் ஆகும். கல்பம் முழுவதிலும், வேறெந்த ஆத்மாக்களுக்கும் தேவதேவியர்களிடம் இருந்த இராஜரீகமும் ஆளுமையும் இருக்கவில்லை. நீங்கள் தேவ ரூபத்தின் ஜொலிப்பை அனுபவம் செய்கிறீர்களா? அத்தகையதோர் ஆன்மீக ஆளுமை - அவை அனைத்துமே தூய்மையின் பேறே ஆகும். இப்போது, உங்களின் தேவ ரூபத்தை அனுபவம் செய்தவண்ணம், மத்திய காலப்பகுதிக்கு வாருங்கள். அங்கே சென்று விட்டீர்களா? அங்கே சென்று, அதை அனுபவம் செய்வது இலகுவாக இருக்கிறதல்லவா? எனவே, பாருங்கள், மத்திய காலப்பகுதியிலும், உங்களின் பக்தர்கள், பூஜிக்கத்தகுதி வாய்ந்த ஆத்மாக்களான உங்களை வழிபடுகிறார்கள். அவர்கள் உங்களின் உருவங்களை உருவாக்குகிறார்கள். அவர்கள் உங்களின் உருவங்களை மிகுந்த இராஜரீகத்துடன் உருவாக்கி, அதிகளவு இராஜரீகத்துடன் அவற்றை வழிபடுகிறார்கள். உங்களின் பூஜிக்கத்தகுதி வாய்ந்த ரூபத்தின் படம், உங்களின் முன்னால் வந்துள்ளதல்லவா? தர்மாத்மாக்கள், மதத்தாபகர்கள் மற்றும் நடிகர்களின் உருவங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், அவர்களுக்கும் உங்களின் ரூபங்களின் ஆன்மீகத்திற்கும் அத்துடன் சரியான முறையில் செய்யப்படும் வழிபாட்டிற்கும் இடையே வேறுபாடு உள்ளது. எனவே, உங்களின் பூஜிக்கத்தகுதி வாய்ந்த ரூபம் உங்களின் முன்னால் வந்ததா? ஓகே, இப்போது இந்த இறுதிக்காலப் பகுதியான சங்கம யுகத்திற்கு வாருங்கள். நீங்கள் இந்த ஆன்மீக அப்பியாசத்தைச் செய்கிறீர்கள்தானே? கல்பம் முழுவதும் சுற்றிவந்து, உங்களின் தூய்மையான ரூபத்தையும் உங்களின் விசேடமான பேறுகளையும் அனுபவம் செய்யுங்கள். இந்த இறுதிப் பகுதியான சங்கமயுகத்தில், பலமில்லியன் ஆத்மாக்களில் கைப்பிடி அளவினரான பிராமண ஆத்மாக்களான உங்களுக்கு மட்டுமே இறைவனிடம் இருந்தான பராமரிப்பை, இறைவனின் அன்பை, இறைவனுடன் கற்கும் வாய்ப்பிற்கான பாக்கியம் கிடைத்துள்ளது. இறைவனின் நேரடிப் படைப்பும் முதல் படைப்புமான தூய ஆத்மாக்களான நீங்கள் மட்டுமே அதைப் பெறுகிறீர்கள். இத்துடன் கூடவே, பிராமணர்களான நீங்கள், உலகிலுள்ள ஆத்மாக்களும் தமது முக்திக்கான ஆஸ்தியைத் தந்தையிடம் இருந்து பெறச் செய்கிறீர்கள். எனவே, கல்பம் முழுவதிலும், அநாதியாக, ஆரம்ப காலத்தில், மத்திய காலத்தில் மற்றும் இறுதிக்காலத்தில், இத்தகைய மேன்மையான பேற்றின் அடிப்படை தூய்மையே ஆகும். நீங்கள் கல்பம் முழுவதும் சுற்றி வந்துள்ளீர்கள். இப்போது, உங்களையே சோதித்துப் பாருங்கள். உங்களையே பாருங்கள். உங்களையே பார்ப்பதற்கு உங்களிடம் ஒரு கண்ணாடி உள்ளதல்லவா? உங்களைப் பார்ப்பதற்கு உங்களிடம் கண்ணாடி இருக்கிறதா? அதை வைத்திருப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! உங்களிடம் கண்ணாடி இருக்கிறதா? அது தெளிவாக இருக்கிறதா? எனவே, கண்ணாடியைப் பாருங்கள்: எனது தூய்மையின் சதவீதம் என்ன? தூய்மை என்பது வெறுமனே பிரம்மச்சரியம் மட்டுமல்ல, ஆனால் பிரம்மா-ஆச்சாரி (பிரம்மாவின் பாதச் சுவடுகளைப் பின்பற்றுபவர்) ஆகவும் இருப்பதாகும். எனது எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள், உறவுமுறைகள் மற்றும் தொடர்புகளில் தூய்மை இருக்கிறதா? அது என்ன சதவீதத்தில் உள்ளது? சதவீதத்தை எப்படிக் கணக்கிடுவது என்று உங்களுக்குத் தெரியுமல்லவா? ஆசிரியர்களான உங்களுக்கு இதை எப்படிச் செய்வது என்று தெரியுமா? பாண்டவர்களான உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் புத்திசாலிகள். தாய்மார்களான உங்களுக்குத் தெரியுமா? தாய்மார்களான உங்களுக்குத் தெரியுமா? அச்சா.

தூய்மையின் அடையாளங்கள் - மூன்றையும் சோதித்துப் பாருங்கள் - உங்களின் மனோபாவம், பார்வை மற்றும் செயல்கள் ஆகும். சம்பூரணமான தூய்மையான மனோபாவம் - அது உங்களின் புத்தியில் பிரவேசித்து உள்ளதல்லவா? இதைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். ஒவ்வோர் ஆத்மாவிற்கும் நல்லாசிகளையும் தூய உணர்வுகளையும் கொண்டிருப்பதே சம்பூரணமான தூய்மையான மனோபாவம் ஆகும். நீங்கள் அனுபவசாலிகள் தானே? எனவே, உங்களின் பார்வை எப்படி இருக்க வேண்டும்? ஒவ்வோர் ஆத்மாவையும் ஆத்ம ரூபத்தில் பார்க்க வேண்டும். ஆத்ம உணர்வு விழிப்புணர்வுடன் பேசிப் பழக வேண்டும். பாபா உங்களுக்குச் சுருக்கமாகவே சொல்கிறார், உங்களால் விவரமாகச் சொற்பொழிவுகள் ஆற்ற முடியும். செயல்களில், அதன் அர்த்தம், உங்களின் செயல்களால் சந்தோஷத்தைப் பெற்று சந்தோஷத்தை வழங்குவதாகும். இதைச் சோதியுங்கள்: எனது மனோபாவம், பார்வை, செயல்கள் இதற்கேற்ப உள்ளனவா? சந்தோஷத்தை எடுத்துக் கொள்ளுங்கள், துன்பத்தை எடுக்காதீர்கள். எனவே சோதித்துப் பாருங்கள்: நான் சிலவேளைகளில் துன்பத்தை எடுத்துக் கொள்கிறேனா? சிலவேளைகளில், நீங்கள் அதில் சிறிதளவை எடுத்துக் கொள்கிறீர்களா? ஆமாம், துன்பத்தை ஏற்படுத்துபவர்கள் இருக்கிறார்கள். உதாரணமாக, யாராவது உங்களுக்குத் துன்பம் கொடுத்தால், நீங்கள் அவரைப் போல் நடக்க வேண்டுமா? நீங்கள் அவரைப் பின்பற்ற வேண்டுமா இல்லையா? நீங்கள் யாரைப் பின்பற்ற வேண்டும்? உங்களுக்குத் துன்பம் கொடுத்தவரையா அல்லது தந்தையையா? அது அசரீரியானவரையே குறிக்கிறது. ஆனாலும் தந்தை பிரம்மா எந்தவொரு குழந்தையிடம் இருந்தும் துன்பத்தை எடுத்துக் கொண்டாரா? அவர் சந்தோஷத்தைக் கொடுத்து, சந்தோஷத்தையே பெற்றுக் கொண்டார். நான் அந்தத் தந்தையைப் பின்பற்றுகிறேனா? அல்லது, சிலவேளைகளில் நான் அதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உணர்கிறேனா? யாராவது உங்களுக்குத் துன்பம் கொடுக்கும்போது அல்லது உங்களை அவமதிக்கும் போது அது துன்பம் என்று சொல்லப்படுகிறது. யாராவது உங்களை இகழும்போது, அது தீங்கானது என்பதை நீங்கள் அறிவீர்கள். யாராவது உங்களை இகழும்போது அது நல்லது என நீங்கள் கருதுகிறீர்களா? அது தீயது என்றே நீங்கள் உணர்கிறீர்கள், அப்படித்தானே? எனவே, அவர் உங்களுக்குத் துன்பம் விளைவிக்கிறார் அல்லது உங்களை அவமதிக்கிறார். ஆகவே, யாராவது உங்களுக்குத் தீயது ஒன்றைக் கொடுக்கும் போது, நீங்கள் அதைப் பெற்றுக் கொள்வீர்களா? நீங்கள் அதை ஏற்றுக் கொள்வீர்களா? சிறிது நேரத்திற்காவது ஏற்றுக் கொள்வீர்களா? நீண்ட நேரத்திற்கு இல்லாமல் போகலாம், ஆனால் சிறிது நேரத்திற்கு நீங்கள் அதை ஏற்றுக் கொள்கிறீர்களா? தீங்கான எதையும் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டுமா? அப்படி என்றால், நீங்கள் ஏன் அந்தத் துன்பத்தை அல்லது அவமதிப்பை ஏற்றுக் கொள்கிறீர்கள்? அதாவது, அதை ஏன் நீங்கள் பிழையான உணர்வு என்ற வடிவில் உங்களின் மனதில் வைத்திருக்கிறீர்கள்? எனவே, உங்களையே கேட்டுப் பாருங்கள்: நான் துன்பத்தை எடுக்கிறேனா? அல்லது, அந்தத் துன்பத்தை நான் மாற்றத்திற்கான வடிவில் பார்க்கிறேனா? முதல் வரிசையில் அமர்ந்திருப்பவர்கள், என்ன நினைக்கிறீர்கள்: துன்பத்தை எடுப்பது சரியானதா? மதுவனத்தைச் சேர்ந்தவர்களே, அது சரியா? நீங்கள் சிறிதளவை எடுத்துக் கொள்வீர்களா? முதல் வரிசையில் இருப்பவர்களே, நீங்கள் அந்தத் துன்பத்தை எடுத்துக் கொள்ளலாம், அப்படியா? நீங்கள் அதை எடுத்துக் கொள்ளக் கூடாது, எனினும் நீங்கள் அதை எடுத்துக் கொள்கிறீர்கள். தவறுதலாக நீங்கள் அதை எடுத்துக் கொள்கிறீர்கள். அந்தத் துன்ப உணர்வால் துயரப்படுவது யார்? உங்களின் மனதில் குப்பையை நீங்கள் வைத்திருந்தால், யார் துயரப்படுவார்கள்? எங்கு குப்பை உள்ளதோ, அவர்தான் துயரப்படுவார். எனவே, அந்த வேளையில், உங்களின் இராஜரீகத்தையும் ஆளுமையையும் உங்களின் முன்னால் கொண்டு வாருங்கள். அப்போது, நீங்கள் உங்களை என்ன ரூபத்தில் பார்க்க வேண்டும்? உங்களின் பட்டம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? உங்களின் பட்டம், சகிப்புத்தன்மையின் தேவி, சகிப்புத்தன்மையின் தேவன் என்பதாகும். எனவே, நீங்கள் யார்? நீங்கள் சகிப்புத் தன்மையின் தேவ,தேவியரா? நீங்கள் அத்தகையவர்களா இல்லையா? நீங்கள் சிலவேளைகளில் அப்படி இருக்கிறீர்கள். உங்களின் நிலைமையை நினைவு செய்யுங்கள். உங்களின் சுயமரியாதையை நினைவு செய்யுங்கள். நான் யார்? இதை உங்களின் விழிப்புணர்வில் கொண்டு வாருங்கள். கல்பம் முழுவதிலும் உங்களின் விசேடமான ரூபத்தை உங்களின் விழிப்புணர்வில் கொண்டு வாருங்கள். நீங்கள் அதை நினைவு செய்கிறீர்கள்தானே?

இலகு நினைவைக் கொண்டிருப்பதன் மூலம், ‘எனது’ என்ற வார்த்தையை நீங்கள் மாற்றி இருப்பதை பாப்தாதா பார்க்கிறார். எனவே, ‘எனது’ என்பதன் விரிவாக்கத்தைச் சுருக்குவதற்கு நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? ‘எனது பாபா’. ‘எனது’ என்ற உணர்வு ஏற்படும் போதெல்லாம், ‘எனது பாபா’ எனக் கூறுவதன் மூலம் நீங்கள் எல்லாவற்றையும் அமிழ்த்தி விடுகிறீர்கள். அதன்பின்னர், மீண்டும் மீண்டும் ‘எனது பாபா’ எனக் கூறுவதன் மூலம் நினைவு இலகுவானது ஆகுகின்றது, அத்துடன் மகத்தான பேறும் கிடைக்கிறது. அதேபோல், நாள் முழுவதும் எந்த வகையான பிரச்சனையோ அல்லது காரணமோ வரும்போதும், அதற்கான குறிப்பிட்ட காரணம் இந்த இரண்டு வார்த்தைகளே: ‘நான்’ மற்றும் ‘எனது’. எனவே, பாபா எனக் கூறுவதன் மூலம் ‘எனது’ என்ற வார்த்தை பக்கா (உறுதி) ஆகிவிடும். அது பக்கா ஆகியுள்ளதுதானே? இப்போது, நீங்கள் எல்லோரும் பாபா, பாபா எனக் கூறுவதில்லை. நீங்கள் ‘எனது பாபா’ என்றே சொல்கிறீர்கள். அதேபோல், ‘நான்’ என்ற வார்த்தையை மாற்றுவதற்கு, ‘நான்’ என்ற வார்த்தையை நீங்கள் சொல்லும் போதெல்லாம், உங்களின் சுயமரியாதை வடிவங்களின் பட்டியலை உங்களின் முன்னால் கொண்டு வாருங்கள். நான் யார்? ‘நான்’ என்ற வார்த்தை உங்களை விழச் செய்வதற்குக் கருவி ஆக முடியும். ஆனால், உங்களின் சுயமரியாதையின் விழிப்புணர்வைக் கொண்டிருப்பதன் மூலம் ‘நான்’ என்ற வார்த்தையால் உங்களை உயர்த்தவும் முடியும். அதனால், ‘எனது பாபா’ என்ற பயிற்சியை நீங்கள் வளர்த்துக் கொண்டுள்ளதைப் போல், ‘நான்’ என்ற வார்த்தைக்குப் பதிலாக, சரீர உணர்வின் விழிப்புணர்விற்குப் பதிலாக, உங்களின் மேன்மையான சுயமரியாதையை உங்களின் முன்னால் கொண்டு வாருங்கள்: ‘நான் ஒரு மேன்மையான ஆத்மா. நான் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் ஆத்மா. நான் உலக உபகாரி ஆத்மா’. இந்த முறையில், ஏதாவதொரு சுயமரியாதைக் கருத்தை ‘நான்’ என்ற வார்த்தையுடன் இணையுங்கள். அப்போது, ‘நான்’ என்ற வார்த்தை, முன்னேற்றத்திற்கான வழிமுறை ஆகிவிடும். எப்படிப் பெரும்பாலானோருக்கு, ‘எனது’ என்ற வார்த்தை, பாபா என்ற வார்த்தையை நினைவூட்டுகிறதோ, அவ்வாறே, ‘நான்’ என்ற வார்த்தை, உங்களின் சுயமரியாதையை உங்களுக்கு நினைவூட்ட வேண்டும். ஏனென்றால், காலம் இப்போது இயற்கையுடன் சேர்ந்து உங்களுக்குச் சவால் விடுக்கிறது.

காலத்தின் நெருக்கத்தைப் பொதுவான ஒன்றாகக் கருதாதீர்கள். உங்களின் கர்மயோகி வாழ்க்கையில், ஒவ்வொரு கணமும் ‘சடுதியாக’ மற்றும் ‘என்றும் தயார்’ என்ற வார்த்தைகளை உங்களின் விழிப்புணர்வில் வைத்திருங்கள். எப்படி விஞ்ஞானம் தொடர்ந்து பல புதிய பரிசோதனைகளைத் தொடர்கிறதோ, அதேபோல், உங்களின் அமைதிச் சக்தியால் வெவ்வேறு முறைகளில் உங்களுடன் பரிசோதனை செய்யுங்கள். எந்தளவிற்கு நீங்கள் உங்களுடன் அதிகளவு பரிசோதனை செய்கிறீர்களோ, அந்தளவிற்கு நீங்கள் அமைதி சக்தியால் மற்றவர்களுடன் தொடர்ந்தும் பரிசோதனை செய்வீர்கள்.

இப்போது, குறிப்பாக உங்களின் சக்திகளின் சகாஷை எங்கும் பரப்புங்கள். உங்களின் சடப்பொருள், சூரியனின் சக்தி மற்றும் சூரியனின் கதிர்கள் பல்வேறு முறைகளில் தமது பணியைச் செய்கின்றன: அவை மழையை ஏற்படுத்துகின்றன, அத்துடன் நீரையும் வற்றச் செய்கின்றது. பகலை இரவாகவும் இரவைப் பகலாகவும் மாற்றுவதன் மூலம் இதை நடைமுறைப்படுத்திக் காட்டுகிறது. எனவே, உங்களால் உங்களின் சக்திகளின் சகாஷைச் சூழலில் பரப்ப முடியாதா? உங்களின் சக்திகளின் சகாஷைப் பயன்படுத்தி, உங்களால் ஆத்மாக்களின் துன்பத்தில் இருந்தும் அமைதியின்மையி;ல் இருந்தும் அவர்களை விடுவிக்க முடியாதா? உங்களின் ஞான சூரியன் என்ற ரூபத்தை வெளிப்படச் செய்யுங்கள். உங்களின் கதிர்களைப் பரப்புங்கள், அந்த சகாஷைப் பரப்புங்கள். ஸ்தாபனையின் ஆரம்பத்தில், ஆத்மாக்கள் பலரும் வீட்டில் இருக்கும்போதே, பாப்தாதாவிடம் இருந்து சந்தோஷம் மற்றும் அமைதியின் சகாஷைப் பெறுவதை அனுபவம் செய்தார்கள். அவர்களுக்கு அந்த எண்ணம் ஏற்பட்டது: அங்கே செல்லுங்கள்! அதேபோல், இப்போது, மாஸ்ரர் ஞானக் கடல்களான குழந்தைகளான உங்களினூடாக, சந்தோஷம் மற்றும் அமைதி அலைகள் பரவுகின்ற அனுபவம் ஏற்பட வேண்டும். எவ்வாறாயினும், அதைச் செய்வதற்கான வழிமுறை, மனதின் ஒருமுகப்படுத்தலையும் நினைவில் ஒருமுகப்படுத்தலையும் கொண்டிருப்பதே ஆகும். அப்போது மட்டுமே அது நிகழும். உங்களில் ஒருமுகப்படுத்தும் சக்தியை அதிகரியுங்கள். நீங்கள் விரும்பியபோது, விரும்பியவாறு, விரும்பிய அளவு நேரத்திற்கு உங்களின் மனதை ஒருமுகப்படுத்த வேண்டியது அவசியம். இப்போது, உங்களின் மாஸ்ரர் ஞான சூரியன் என்ற ரூபத்தை வெளிப்படுத்தி, சக்திக் கதிர்களை அல்லது சகாஷைப் பரப்புங்கள்.

குழந்தைகள் வெவ்வேறு இடங்களில் மிகுந்த ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் மிக நல்ல சேவை செய்கிறார்கள் என்பதைக் கேட்டு பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். பாப்தாதா எங்கும் இருந்து மிக நல்ல செய்திகளைப் பெற்றுள்ளார். கண்காட்சிகள், செய்திக்கடிதங்கள் அல்லது தொலைக்காட்சி என்று எதன் மூலமாக இருந்தாலும், நீங்கள் செய்தியைக் கொடுக்கும் பணியில் நீங்கள் தொடர்ந்து முன்னேறுகிறீர்கள். அந்தச் செய்தி அவர்களைச் சென்று அடைகிறது. நீங்கள் செய்தியைக் கொடுப்பதில் மிக நன்றாகச் செய்கிறீர்கள். இன்னமும் எஞ்சியுள்ள கிராமங்களிலும், ஒவ்வொரு பிராந்தியமும் தமது சொந்தப் பிரதேசத்தில் அந்த சேவையை அதிகரிக்கிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சி மற்றும் பல்வேறு ஏனைய வழிமுறைகளால் நீங்கள் அதை ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் செய்கிறீர்கள். பாப்தாதா அதைச் செய்யும் குழந்தைகள் எல்லோருக்கும் ஆசீர்வாதங்கள் நிறைந்த அதிகளவு அன்பான வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். இப்போது, செய்தியை வழங்குவதில் மிக நல்ல ஊக்கமும் உற்சாகமும் காணப்படுகின்றன. ‘பிரம்மா குமாரிகள் யார், அவர்கள் மிகவும் சக்திவாய்ந்த ஒரு பணியைச் செய்கிறார்கள்’ என்ற ஒலி மிக நன்றாக எங்கும் பரவுகிறது, அது அதிகரிக்கிறது. ஆனால்! பாபா அது என்னவென்று உங்களுக்குச் சொல்லட்டுமா? இப்போது, ‘பிரம்மா குமாரிகளின் பாபா மிகவும் நல்லவர்!’ என்ற ஒலியே அதிகரிக்க வேண்டும். பிரம்மா குமாரிகள் நல்ல பணியைச் செய்கிறார்கள். ஆனால் இப்போது, அவர்களை அதைச் செய்ய வைப்பது யார் என்பது வெளிப்பட வேண்டும். இது இப்போது வெளிப்பட வேண்டும். தந்தை வந்துள்ளார் என்ற செய்திகள் அவர்களின் மனங்களைச் சென்றடைய வேண்டும். இதற்காக ஒரு திட்டத்தைச் செய்யுங்கள்.

சில குழந்தைகள் பாப்தாதாவிடம் ஒரு கேள்வி கேட்டார்கள்: யாரை நீங்கள் ஒரு வாரிசு அல்லது ஒரு மைக் என்று அழைப்பீர்கள்? மைக் ஆத்மாக்கள் வெளிப்பட்டுள்ளார்கள். எவ்வாறாயினும், தற்போதைய நேரத்திற்கேற்ப, பாப்தாதாவிற்கு ஒரு மைக் தேவைப்படுகிறார். அவரின் வார்த்தைகளில் ஆதிக்கம் இருக்கத்தக்க மைக் ஒருவர் தேவைப்படுகிறார். சாதாரணமான மக்கள் ‘பாபா’ எனச் சொல்லும்போது, அது நல்லதே. குறைந்தபட்சம் நீங்கள் இந்த நிலையை எட்டியுள்ளீர்கள். எனவே, அதற்காக பாப்தாதா உங்களைப் பாராட்டுகிறார். ஆனால் இப்போது மக்கள் மதிக்கின்ற குரலைக் கொண்ட அத்தகைய மைக்குகள் தேவைப்படுகிறார்கள். அவர்கள் மிகவும் பிரபல்யமாக இருக்க வேண்டும். பிரபல்யம் என்றால், அவர்கள் உயர்ந்ததொரு பதவி வகிக்க வேண்டும் என்பதல்ல. ஆனால், அவர்களின் வார்த்தைகளை மக்கள் கேட்கும்போது, அவற்றைக் கூறுகின்றவரின் வார்த்தைகளில் பெறுமதி உள்ளது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர் தனது அனுபவத்தில் இருந்து பேசினால், அதற்குப் பெறுமதி இருக்கும். பல மைக்குகள் இருக்கிறார்கள். ஆனால் சில மைக்குகளிடம் ஒரு நிலையான சக்தி இருக்கும். ஏனையோரிடம் வேறு நிலையான சக்தி இருக்கும். அதேபோல், அத்தகைய சக்தியைக் கொண்ட ஒரு மைக்கைத் தேடுங்கள். அவரின் வார்த்தைகளைக் கேட்பதன் மூலம், அவர் ஓர் அனுபவத்தைப் பெற்றே வந்துள்ளார், அதனால் அங்கே நிச்சயமாக ஏதோ இருக்க வேண்டும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே, தற்சமயம், மைக் ஆத்மாக்கள் நிச்சயமாக ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒவ்வொரு பிரிவிலும் வெளிப்பட்டுள்ளார்கள். செய்யப்பட்ட சேவையில், புலப்படும் பெறுபேறு இல்லை என பாப்தாதா சொல்லவில்லை. அந்தப் பெறுபேறு உள்ளது. ஆனால் இப்போது காலம் குறுகியது. அதனால், நீங்கள் சேவையின் முக்கியத்துவத்தையும் பெறுமதியான குரலையும் கொண்ட ஆத்மாக்களைக் கருவிகள் ஆக்க வேண்டும். அவர்களிடம் ஓர் அந்தஸ்து இல்லாமல் போகலாம். ஆனால், அவர்களின் நடைமுறை வாழ்க்கை நடைமுறை அனுபவத்தின் அதிகாரத்தைக் கொண்டிருக்க வேண்டும். அவர்களின் வார்த்தைகள் அனுபவத்தின் அதிகாரத்தைக் கொண்டிருக்க வேண்டும். என்ன வகையான மைக் தேவை என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? உங்களுக்கு வாரிசுகளைப் பற்றித் தெரியும்: தமது ஒவ்வொரு மூச்சிலும் தமது ஒவ்வோர் அடியிலும் தந்தையையும் அவரின் பணியையும் கொண்டிருப்பவர்கள். அத்துடன் கூடவே, அவர்களின் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களிலும் மற்றும் சரீரம், மனம், செல்வத்திலும் அவர்கள் பாபாவையும் யக்யாவையும் மட்டுமே தமக்குள் ஒன்றுகலந்து வைத்திருப்பார்கள். எல்லையற்ற சேவை அவர்களுக்குள் ஒன்றுகலந்து இருக்க வேண்டும். சகாஷ் கொடுக்கும் சக்தி அவர்களிடம் இருக்க வேண்டும். அச்சா.

இப்போது, ஒரு விநாடியில், அது ஒரு விநாடியா? ஒரு விநாடியில், முழு ஒன்றுகூடலும் நீங்கள் எங்கே இருந்தாலும், உங்களின் மனதை ஒரேயொரு எண்ணத்தில் ஸ்திரப்படுத்த வேண்டும்: தந்தையும் நானும் பரந்தாமத்தில் அநாதியான ஒளிப்புள்ளிகளாக இருக்கிறோம். பரந்தாமத்தில் தந்தையுடன் இருங்கள். அச்சா. இப்போது பௌதீகத்திற்குத் திரும்பி வாருங்கள்.

இப்போது, தற்போதைய நேரத்தில், உங்களின் மனதையும் புத்தியையும் ஒருமுகப்படுத்தும் பயிற்சியைச் செய்யுங்கள். நீங்கள் என்ன செயலைச் செய்து கொண்டிருந்தாலும், அந்தப் பணியைச் செய்யும்போது உங்களின் மனதை ஒருமுகப்படுத்துங்கள். உங்களின் கட்டுப்படுத்தும் சக்தியை மேலும் அதிகரியுங்கள். உங்களின் மனம், புத்தி, சம்ஸ்காரங்களின் மீது கட்டுப்படுத்தும் சக்தியைக் கொண்டிருங்கள். வருகின்ற காலங்களுக்கு இந்தப் பயிற்சியானது மிகவும் உதவியாக இருக்கும். சூழலுக்கேற்ப, நீங்கள் ஒரு விநாடியில் கட்டுப்படுத்த வேண்டும். அப்போது மட்டுமே நீங்கள் நடக்க வேண்டும் என விரும்புவது நடக்கும். எனவே, இந்தப் பயிற்சியானது மிகவும் அவசியமானது. இதை இலேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், இந்தப் பயிற்சியானது இறுதிக் கணங்களைச் சரியான வேளையில் அழகானவையாக ஆக்கும். அச்சா.

எங்கும் இரட்டைச் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் எல்லோருக்கும், பாப்தாதாவின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதுடன் உலக இராச்சிய சிம்மாசனத்தின் உரிமையைக் கொண்டிருப்பவர்களுக்கும் சதா தமது அநாதியான ரூபத்தில், ஆதியான ரூபத்தில், மத்திய கால ரூபத்தில், இறுதி ரூபத்தில் தாம் விரும்பிய போது ஸ்திரமாக இருப்பவர்களுக்கும் சகல பொக்கிஷங்களையும் தங்களுக்காகப் பயன்படுத்துவதுடன் மற்றவர்களையும் சகல பொக்கிஷங்களாலும் நிரப்புவர்களுக்கும் சகல ஆத்மாக்களையும் தந்தையிடம் இருந்து தமது முக்தி என்ற ஆஸ்தியைப் பெறச் செய்பவர்களுக்கும் இறையன்பிற்குப் பாத்திரமான ஆத்மாக்களுக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் இதயபூர்வமான ஆசீர்வாதங்களும் நமஸ்தேயும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு சகபாடியாகவும் ஒரு பற்றற்ற பார்வையாளராகவும் இருப்பதை அனுபவம் செய்வதன் மூலம் சதா வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.

தந்தையுடன் சதா இருக்கும் குழந்தைகள், இயல்பாகவே பற்றற்ற பார்வையாளர்கள் ஆகுகிறார்கள். ஏனென்றால், தந்தையே தனது பாகத்தை ஒரு பற்றற்ற பார்வையாளராகவே நடிக்கிறார். ஆகவே, அவருடன் இருப்பவர்களும் தமது பாகங்களை பற்றற்ற பார்வையாளர்களாகவே நடிக்க வேண்டும். அத்துடன் சர்வசக்திவான் தந்தையைத் தமது சகபாடியாக வைத்திருப்பவர்கள், இயல்பாகவே வெற்றி சொரூபங்கள் ஆகுவார்கள். பக்தி மார்க்கத்தில், அவரின் சகவாசத்தைக் குறுகிய நேரத்திற்கு அனுபவம் செய்வதற்கும் அவரின் கண நேர தரிசனத்தைப் பெறுவதற்கும் அவர்கள் அவரை அழைக்கிறார்கள். ஆனால் நீங்களோ சகல உறவுமுறைகளிலும் அவரின் சகபாடிகள் ஆகியுள்ளீர்கள். ஆகவே, நீங்கள் அடைய விரும்பியதை அடைந்து விட்டீர்கள் என்ற சந்தோஷத்தையும் போதையையும் பேணுங்கள்.

சுலோகம்:
வீணான எண்ணங்களைக் கொண்டிருப்பதன் அடையாளம், சோகமான மனமும் உங்களின் சந்தோஷம் மறைந்து போவதுமே ஆகும்.

அவ்யக்த சமிக்கை: இப்போது சம்பூரணம் மற்றும் கர்மாதீத் அடைவதற்கான ஆழ்ந்த அக்கறையைக் கொண்டிருங்கள்.

ஆட்ட, அசைக்க முடியாதவராகவும் தடைகளில் இருந்தும் பந்தனங்களில் இருந்தும் பாவ எண்ணங்களில் இருந்தும் பாவச் செயல்களில் இருந்தும் விடுபட்டிருங்கள். இதன் அர்த்தம்: அசரீரியாகவும் விகாரம் அற்றவராகவும் அகங்காரம் அற்றவராகவும் நீண்ட காலத்திற்கு இருங்கள். அப்போது மட்டுமே உங்களால் கர்மாதீத் ஆகமுடியும். நீங்கள் எந்தளவிற்கு சேவையை விஸ்தரித்தாலும், விஸ்தாரத்திற்குள் செல்லும்போது, சாரத்தின் ஸ்திதியில் நீங்கள் இருப்பது குறைவதை அனுமதிக்காதீர்கள். விரிவாக்கத்தில் சாரத்தை மறக்காதீர்கள். உண்ணுங்கள், பருகுங்கள், சேவை செய்யுங்கள். ஆனால் பற்றற்றவர் ஆகுவதை மறந்து விடாதீர்கள்.