08.03.26 Avyakt Bapdada Tamil Lanka Murli 18.01.2009 Om Shanti Madhuban
40 வருட கால அவ்யக்த பராமரிப்பின் பிரதிபலனைக் கொடுப்பதற்கு, நான்கு விடயங்களைச் செய்யுங்கள்: மற்றவர்களுக்காகத் தூய, சாதகமான எண்ணங்களைக் கொண்டிருப்பவர், சுயத்திற்காகத் தூய, சாதகமான எண்ணங்களைக் கொண்டிருப்பவர், உங்களின் தூய மனோபாவத்தால் தூய சூழலை உருவாக்குபவர், ஸீரொ மற்றும் ஹீரோ என்ற விழிப்புணர்வில் இருப்பவர்.
இன்று, பாப்தாதா தனது சேவையாளர் சகபாடிக் குழந்தைகளை, ஆரம்பத்தில் இருந்தே சேவையில் சகபாடிகளாக இருப்பவர்களை, அத்துடன், ஏனைய சேவைகளிலும் சகபாடிகளாக இருப்பவர்களைச் சந்திக்க வந்துள்ளார். நீங்கள் மிக நன்றாக சேவையை விஸ்தரித்துள்ளீர்கள். எனவே, பாப்தாதா தனது சகபாடிகளைக் காண்பதில் மகிழ்ச்சி அடைவதுடன், தனது இதயத்தில் இந்தப் பாடலைப் பாடுகிறார்: ஆஹா, உலகை மாற்றுகின்ற சேவையில் எனது சகபாடிகளே! ஆஹா!
இன்று, அமிர்த வேளையில் இருந்து, குழந்தைகள் அனைவரும் பாப்தாதாவின் மீது அன்பெனும் மாலைகளை அணிவிக்கிறார்கள். மூன்று வகையான மாலைகள் இருந்தன. ஒன்று, தந்தைக்குச் சமமானவர் ஆகுகின்ற ஊக்கம், உற்சாகத்திற்கு உரிய மாலை. இரண்டாவது மாலை, தந்தையிடம் இருந்து பிரிந்து, பந்தனத்தில் உள்ள கோபிகைகளின் மாலை. அவர்களின் மாலைகள் இருந்தன, ஆனால் அவை மிக மிக விலைமதிப்பற்ற, ஜொலிக்கும் கண்ணீராலான மாலைகள் ஆகும். ஒவ்வொரு கண்ணீர்த்துளியும் ஒரு முத்தைப் போல் ஜொலித்தன. மூன்றாவது மாலை, சில குழந்தைகளின் முறைப்பாடுகளான இருந்தன.
இன்று, அமிர்த வேளையில் இருந்து, குழந்தைகள் அனைவரிலும் குறிப்பாக அன்பு அமிழ்ந்திருந்தது. பாப்தாதாவின் பல்வகை ரூபத்தினூடாக, பாபா குழந்தைகள் அனைவரையும் தனது நீட்டியுள்ள கரங்களால் அரவணைத்ததைப் போல் இருந்தது. இன்று, உண்மையில், அன்புடன் கூடவே, சகல சக்திகளையும் கையளித்த தினமும் ஆகும். பாபா தனது கரத்தை ஒரு புதல்வியின் கரத்தில் வைத்து, சகல சக்திகளையும் கையளித்தார். பாபா குழந்தைகள் அனைவரையும், சக்தி சேனையையும் பாண்டவர்களையும் பார்த்தார். சில குழந்தைகள் - பாண்டவர்களும் சக்திகளும் - மறைமுகமான முறையில் அகநோக்கில் இருப்பதன் மூலம் துரித கதியில் தமது முயற்சிகளில் முன்னேறுவதை பாப்தாதா கண்டார். புறத்தே, அது புலப்படவில்லை. ஆனால் அவர்கள் நல்ல முயற்சியாளர்கள். இன்றைய ரூபத்தில், குறிப்பாக அன்பெனும் பாடத்தில், அனைவரின் முகமும் பிரகாசித்ததை பாப்தாதா கண்டார். நீங்கள் ஞானிக் குழந்தைகள். ஆனால் அன்பெனும் பாடமும் அத்தியாவசியமானது. ஏனென்றால், அன்பைக் கொண்டிருப்பவர்கள் குறைவாகவே சிரமப்பட வேண்டியிருக்கும். அத்துடன் அவர்கள் இலகுவாக அன்பெனும் அனுபவத்தில் இருப்பார்கள். அந்தப் பிரச்சனை மலையைப் போல் பெரியதாக இருந்தாலும், அன்பெனும் சக்தியால் உங்களால் மலையையும் பஞ்சாக மாற்ற முடியும். உங்களால் மலையையும் நீரைப் போல் இலேசாக ஆக்க முடியும். அன்பு என்பது பாதுகாப்புக் குடை ஆகும். அந்தப் பாதுகாப்புக் குடையால் நீங்கள் சதா பாதுகாப்பாக இருப்பீர்கள். அது இலகுவாகி விடுகிறது. உங்களின் அன்பினால் நீங்கள் பரமாத்மாவாகிய கடவுளை உங்களது நண்பராக ஆக்கியுள்ளீர்கள். குதா-தோஸ்த் (நண்பராகிய கடவுள்) என்பது இதன் ஞாபகார்த்தம் ஆகும். கடவுளை உங்களது நண்பராக்கிக் கொள்ளும் போது, நண்பர் என்ற உறவுமுறை மூலம் உங்களால் எப்பிரச்சனையையும் இலகுவாக்கிவிட முடியும். அன்பு தந்தையை உங்களது சகபாடி ஆக்குகின்றது. இந்த ஞானம் விதையாகும். அன்பு என்ற நீரானது அவ்விதையில் பழத்தை உருவாக்குகின்றது. அதாவது பேறு என்ற பலனை பெற்றுத் தருகின்றது. அத்தகைய தந்தையின் அன்பான குழந்தைகள் தந்தையை நினைவு செய்வதை ஒரு முயற்சியாகக் கருத மாட்டார்கள், அவரை மறப்பதையே அவர்கள் சிரமமானதாகக் கருதுவார்கள். அன்பு காட்டுகின்ற ஒருவரால் அந்த அன்பை மறக்க முடியாது. நீங்கள் “எனது பாபா” என்று அன்புடன் இதயபூர்வமாகக் கூறும்போது, பொக்கிஷங்கள் அனைத்தினதும் திறவுகோலை நீங்கள் பெறுகின்றீர்கள். எனவே, பாபா, தாதா ஆகிய இருவரும் மிக அன்பானவர்களாக இருப்பதனால், அவர்களைத் தமது பிரபுவாகக் கருதி அன்பு செலுத்துபவர்களின் முன்னால் அவர்கள் பிரசன்னம் ஆகின்றார்கள். அனைவரும் அவர்களை நினைவு செய்கின்றனர். எனினும், சிலருக்கு அவர்களை நினைவு செய்வதற்கு முயற்சி தேவையாக உள்ளது. ஏனையவர்களோ சதா அன்புக்கடலில் மூழ்கியிருக்கின்றனர். ஆத்மா பரமாத்மாவுடன் இரண்டறக் கலப்பதாக மக்கள் கூறுகின்றனர். ஆனால், உண்மையில் ஆத்மா இறை அன்பில் மூழ்கியிருக்கின்றார். அவருடன் ஆத்மா இரண்டறக் கலப்பதில்லை, ஆனால் அவரின் அன்பில் மூழ்கிவிடுகின்றார்.
எனவே, இன்று அன்பில் மூழ்கி இருப்பதற்கான நாளாகும். முயற்சி முடிவடைந்து, அது அன்பின் வடிவமாகின்றது. எனவே, பாப்தாதா குழந்தைகள் அனைவரதும் பெறுபேற்றைப் பார்த்தார். உங்களில் பெரும்பான்மையானோர் உங்களது வீட்டுவேலையைச் செய்திருக்கின்றீர்கள். நீங்கள் தந்தைக்குச் சமமாக வேண்டும் என்ற இலக்கை மீண்டும் மீண்டும் மீட்டுப் பார்த்து, அதனை உணர்ந்துள்ளீர்கள். 75 வீதமான குழந்தைகளின் பெறுபேறு நன்றாக இருந்தது. எவ்வாறாயினும், நீங்கள் தந்தைக்குச் சமனானவர்களாக ஆகவேண்டும். உங்கள் முன்னிலையில் எவ்வகையான புயல்கள் வந்தாலும், இப்பொழுது கலியுகம் முடிவடைகின்ற காலமாகும். எனவே, இப்பொழுது மாற்றத்திற்கான நேரம் என்பதால், புயல்கள் நிச்சயமாக வரும். எவ்வாறாயினும், குழந்தைகளாகிய உங்களுக்கு வரும் புயல்கள் என்ன? முயற்சி செய்கின்ற குழந்தைகள் அனைவரதும் தலைமீது பாப்தாதாவின் ஆசீர்வாதக் கரங்கள் இருப்பதால், புயல்கள் (ரூஃபான்) புயல்களல்ல, ஆனால் அவை ஓர் பரிசேயாகும் (தோஃபா). திடசங்கற்பமான எண்ணம் ஒன்றைக் கொண்டவர்கள், அதாவது திடசங்கற்பம் என்ற திறவுகோலைப் பயன்படுத்தியவர்கள், அவர்களது தற்போதைய பெறுபேற்றில் வெற்றியை அடைந்துள்ளார்கள். எவ்வாறாயினும், இப்பொழுது, எப்பொழுதுமே புயல்களை ஒரு பரிசாக்கி, பிரச்சனைகளைத் தீர்வுகளாக்கி, தொடர்ந்தும் முன்னேறிச் செல்லுங்கள். பாப்தாதா தற்போதைய பெறுபேற்றையிட்டு சந்தோஷம் அடைகின்றார். நீங்கள் செய்த யோக-தபஸ்யாவில் ‘நான் இவ்வாறு ஆகவேண்டும்’ என்ற உறுதியான இலக்கொன்றைக் கொண்டிருந்தீர்கள்.
40 வருட அவ்யக்த பராமரிப்பு இப்பொழுது பூர்த்தியாகி உள்ளது. எனவே, ‘40’ வருடத்தில் முதலாவதாக வருவது என்ன? ‘பூச்சியம்’ ஆகும். எனவே, நீங்கள் ஒரு கதாநாயகன் (ஓர் உண்மையான வைரம்) என்பதையும், சிறந்த கதாநாயகன் என்பதால் ஒரு கதாநாயக நடிகராக இருந்து ஒவ்வொரு பணியையும் ஒரு கதாநாயனைப் போன்று செய்யுங்கள் என்பதை பூச்சியம் உங்களுக்கு நினைவு படுத்துகின்றது. ஆகவே, எப்போதும் பூச்சியத்தையும் (சீரோவையும்) கதாநாயகனையும் (ஹீரோவையும்) நினைவு செய்யுங்கள். ‘4’ இற்கு நீங்கள் நான்கு விடயங்களை உங்கள் வாழ்க்கையில் இயல்பானதாக ஆக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் அதனை திடசங்கல்பத்துடன் செய்ய வேண்டும். நீங்கள் அதனைச் செய்வீர்களா? நீங்கள் அதற்குத் தயாரா? உங்களுக்கு முன்னால் எவ்விதமான பரீட்சைத்தாள் வந்த போதிலும் நீங்கள் இந்த நான்கு விடயங்களையும் உங்கள் வாழ்க்கையில் கொண்டிருக்க வேண்டும். உங்களால் நிச்சயமாக முடியுமா? நிச்சயமாக? நிச்சயமாக? பின்னால் இருப்பவர்களே, உங்களால் நிச்சயமாக முடியுமா? உங்களால் நிச்சயமாக முடியுமா? பலவீனமாக இருப்பவர்களை மாயை தின்று விடுகின்றாள். ஆகையாலேயே நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும். ஒரு விடயம் - எப்போதும் மற்றவர்களின் மீது தூய, ஆக்கபூர்வமான எண்ணங்களைக் கொண்டிருங்கள் (சுப சிந்தக்). பிறரில் பலவீனங்களைப் பார்க்கின்ற போதோ அல்லது கேட்கின்ற போதோ கருணை நிறைந்தவர்களாகி, அவர்கள் மீது தூய, ஆக்கபூர்வ எண்ணங்களைக் கொண்டிருந்து, நிச்சயமாக அவர்களுக்கு உங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும். நீங்கள் அவர்களது பலவீனங்களைப் பார்க்காது, நிச்சயம் உங்கள் ஒத்துழைப்பைக் கொடுங்கள். இதுவே மற்றவர்களின் மீது தூய, ஆக்கபூர்வமான எண்ணங்களைக் கொண்டிருப்பது என்பதாகும். நீங்கள் இதிலே உறுதியாக இருப்பீர்கள், இல்லையா? ஆதாரத்தை அருள்பவர்களே, கருணை நிறைந்தவர்களாகி உங்கள் ஒத்துழைப்பை வழங்குங்கள். நீங்கள் அவர்களை விட்டு விலகிச் செல்லவோ அல்லது அவர்கள் மீது வெறுப்புக் காட்டவோ வேண்டாம். ஆனால் மாறாக, அவர்களை மன்னித்து விடுங்கள். ஒருவர் புற ஆதிக்கத்திற்கு உள்ளிருக்கும் இன்னொருவரை ஒருபோதும் வெறுக்காது, அதற்கு மாறாக அவர்களுக்கு ஆதாரத்தையே கொடுப்பார். ஆகவே, மற்றவர்களையிட்டு தூய, சாதக எண்ணங்களைக் கொண்டிருங்கள். இரண்டாவது சுயத்தின் மீது தூய, ஆக்கபூர்வமான எண்ணங்களைக் கொண்டிருங்கள். இக்காலத்தில், பாப்தாதா பெரும்பான்மையான குழந்தைகள் வீணான எண்ணங்களை அதிகளவில் கொண்டிருப்பதைப் பார்த்தார். இதனால் நீங்கள் சேமித்த சக்திகள் வீணாக்கப்படுகின்றன. ஆகவே, சுயத்தின் மீது தூய, ஆக்கபூர்வமான எண்ணங்களைக் கொண்டிருக்கின்ற வீட்டுவேலையை உங்கள் மனத்திற்குக் கொடுங்கள் அல்லது உங்களுக்கு ஏதாவது ஒரு சுயமரியாதை பட்டத்தைக் கொடுங்கள். உங்கள் மனதிற்கு ஒரு நேர அட்டவணையை உருவாக்குங்கள். எவ்வாறாயினும், உங்கள் செயல்களுக்காக நீங்கள் ஒரு நேர அட்டவணையை வைத்திருக்கிறீர்கள். ஆனால் இப்போது உங்கள் மனதிற்கு ஒரு நேர அட்டவணையை உருவாக்குங்கள். அமிர்த வேளையிலே பாப்தாதாவுடன் ஒரு சந்திப்பைக் கொண்டாடியதன் பின்னர், உங்களது மனதிற்கு ஒரு சுயமரியாதைக் கருத்தைக் கொடுங்கள். எவ்வாறாயினும், பாபா முன்னர் கூறியுள்ளதைப் போன்று, ஒவ்வொரு நாளும், 12, 13 தடவைகள் நிச்சயமாக நேரம் உள்ளது, அவ்வேளைகளில் உண்மை நிலையை உணர்ந்து, அதனை மீட்டுப் பாருங்கள். உங்கள் மனதை மும்முரமாக வைத்திருப்பதன் மூலம், உங்கள் நேரம் வீணான எண்ணங்களில் செலவழியாது. நீங்கள் முயற்சி செய்ய வேண்டி இருக்காது. சங்கம யுகம், ஒரு குதூகலமான யுகம். நீங்கள் ஒவ்வொரு கணமும் அந்தக் குதூகலத்கில் இருக்கிறீர்கள். இரண்டாவது விடயம், சுயத்தின் மீது தூய, ஆக்கபூர்வமான எண்ணங்களைக் கொண்டிருப்பதாகும். சோதித்துப் பார்த்து மாறுங்கள். மூன்றாவது, தூய மனோநிலையாகும். தூய்மையற்ற மனோபாவத்தைக் கொண்டிருப்பதனால், நீங்கள் தூய்மை இன்மையைச் சூழலில் பரப்புவீர்கள். அதனால், தூய மனோபாவத்தைக் கொண்டிருங்கள். நான்காவது, ‘ஒரு தூய சூழலை உருவாக்குதலும், பிறரை பார்க்காதிருப்பதும் எனது கடமை’ என்ற பொறுப்பை நீங்கள் ஒவ்வொருவரும் எடுத்தலாகும். சூழலிலே துர்நாற்றம் வீசும் போது நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் நறுமணத்தைத் தெளிக்கிறீர்கள், அப்படித்தானே? உங்களால் துர்நாற்றத்தைச் சகிக்க முடியாதுள்ளது. எனவே நீங்கள் ஏதாவது ஒரு நறுமணத்தைத் தெளிக்கிறீர்கள். அவ்வாறே, நீங்கள் நிச்சயமாக ஒரு சாதாரண அல்லது தூய்மையற்ற சூழலை மாற்ற வேண்டும். ஒருவர் இளையவராக அல்லது புதியவராக இருந்தாலும் கூட, இது அனைவரதும் பொறுப்பாகும். நீங்கள் திடசங்கல்ப எண்ணத்தைக் கொண்டிருக்க வேண்டும்: நான் நிச்சயமாக ஒரு தூய சூழலை உருவாக்க வேண்டும். இந்த உறுதிமொழி, வெளிப்பாட்டைக் கொண்டுவரும். நீங்கள் ஒரு சத்தியதைச் செய்தீர்கள், அதனால் பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். ஆனால் சில வேளைகளில் நீங்கள் செய்யும் சத்தியத்தில் திடசங்கல்பம் இல்லாததாலேயே உங்களுக்கு எதிர்பார்த்த அளவில் வெற்றி கிடைப்பதில்லை. நீங்கள் ஒவ்வொருவரும் அத்தகைய ஒரு சூழலை முழு உலகத்திலும், சடப்பொருட்களிலும், ஆத்மாக்களிலும் உருவாக்க வேண்டும். ஆத்மாக்களில்? பிராமண ஆத்மாக்களும் அடங்குகிறார்கள். நீங்கள் ஒவ்வொருவரும் திடசங்கற்ப எண்ணத்துடன் அவரவர் சேவை ஸ்தலங்களிலே அத்தகைய சூழலை உருவாக்க வேண்டும். ஏதாவதொன்றை நீங்கள் துறக்க வேண்டும் என்றால், அதனைச் செய்யுங்கள். ‘ஏனையவர்கள் எவற்றையாவது துறந்தாலேயே நான் அதனைத் துறப்பேன்’ என்றிருக்கக் கூடாது. இல்லை. ‘நடைமுறைகள் சரியாக இருந்தாலேயே ......” இவ்வாறான நிபந்தனைகள் விதிக்காதீர்கள். நான் நிச்சயமாக அதனைச் செய்ய வேண்டும். உலகில் மாற்றத்தை ஏற்படுத்துபவர் என்பதே உங்கள் சுய மரியாதை ஆகும், அல்லவா? நீங்கள் அனைவரும் உலகை மாற்றுபவர்கள் அல்லவா? கரங்களை உயர்த்துங்கள்! நல்லது. உலகை மாற்றுபவர்களே. மிகவும் நல்லது. எனவே முதன் முதலில் பாப்தாதா பார்க்க விரும்புவது – அது உள்ளது, அது நடக்கும் - ஆனால், இவ்வருடம் பாபா சிறிய, பெரிய எல்லா நிலையங்களிற்கும் பயணிக்கும் போது, சூழல் எவ்வாறு இருக்கும்? இன்று அன்பும் சக்தியும் நிறைந்த நாளாக இருப்பதைப் போன்று, கிராமத்திலும், பெரிய நிலையங்களிலும் உள்ள நிலையங்களின் சூழல் உயிருள்ள ஆலயம் போலிருக்க வேண்டும். பாதகமானவற்றை சாதகம் ஆக்குவதில் நான் முதலில் இருக்க வேண்டும். நீங்கள் முதலில் செய்யுங்கள் என்றிருக்கக் கூடாது. இல்லை. நானே முதல் என்றிருக்க வேண்டும். பாப்தாதாவும், முன்னோடிக் குழுவும், இக்காலத்தில் இயற்கையும் கூட, அனைத்துமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன. நீங்களே அனைத்து ஆயத்தங்களையும் செய்கின்றீர்கள், நீங்கள் இதற்காகக் காத்திருக்காது ஆயத்தங்களைச் செய்யுங்கள்.
இன்று எங்கும் பயம் உள்ளது. உலகில் உள்ள பெரும்பாலான மக்களின் இதயத்திலும் ஒரேயொரு எண்ணமே உள்ளது: ‘நாளை என்ன நடக்கும்?’ நாளை என்ன நடக்கவுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். ‘நானே மாற்றத்தை ஏற்படுத்துவதில் முதலாவது கருவியாக இருப்பேன்’ என்ற இந்த எண்ணத்தைக் யார் கொண்டிருக்கின்றீர்கள்? இதற்கு உங்கள் கைகளை உயர்த்துங்கள். நீங்களே அதனைச் செய்ய வேண்டும். நீங்களே அதனைச் செய்ய வேண்டும். நீங்களே மாற வேண்டும். நீங்கள் ஒரு பாதுகாவலர் ஆக வேண்டும். நீங்கள் எதனையாவது துறந்து, அன்பை பெற்றுக் கொள்ள வேண்டும். உங்கள் மனம் என்ற கரத்தை உயர்த்தினீர்களா அல்லது பௌதீக கரத்தையா உயர்த்தினீர்கள்? மனம் என்ற கரத்தை உயர்த்தியவர் யார்? உங்கள் மனம் மாறும் போது, உலகம் மாறுகின்றது. எனவே இந்த வருடத்திற்கான சுலோகம் என்ன? அது என்ன சுலோகம் ஆகும்? ‘பிரச்சனை இல்லை’ உங்கள் இதயத்தில் வெற்றி கொடி ஏற்றப்படும். அத்துடன் நீங்கள் அனைவரும் தமது மனதில் சந்தோஷ நடனம் ஆடுவார்கள். எனவே, நீங்கள் ஒவ்வொரு கணத்திலும் சந்தோஷ நடனம் ஆடுவீர்கள். மற்றும், நீங்கள் நன்மை பயப்பவரின் குழந்தைகள் ஆகையால், உங்களிடம் வருபவர்களிடம் நிச்சயமாக ஏதாவது ஒரு தெய்வீகக் குணத்தைப் பரிசாகக் கொடுங்கள். பின்னர் ஒரு விநாடியில், அந்த திடசங்கல்ப எண்ணமாகிய, நன்மை பயக்கின்ற எண்ணம் ஒரு மேலுயர்த்தியாகும், அவர்கள் எவ்வித முயற்சியும் இல்லாமலேயே, ஒரு விநாடியில் பரந்தாமத்திற்கோ, சூட்சும வதனத்திற்கோ, பௌதீக மதுவனத்திற்கோ அல்லது பௌதீக உலகத்திற்கோ, விரும்பிய இடத்தை அடைவார்கள். உங்களுக்கு முன்னால் யார் வந்தாலும், அவர்களை வெறுங்கையுடன் அனுப்பாதீர்கள். உங்களுடைய வார்த்தைகளிலோ, உங்களுடைய முகத்திலோ, உங்களுடைய நடத்தையிலோ நற்குணங்கள் இல்லாது அவர்களைச் சந்திக்காதீர்கள்.
எனவே, இவ்வருடத்தில், ஒவ்வொரு மாதத்தின் பெறுபேற்றை உங்களுடன் வைத்திருந்து, ‘நன்றாக உள்ளேன்’ (OK) என்ற அட்டையை உங்களுடைய ஆசிரியர் மூலமாக யக்யத்திற்கு அனுப்புங்கள். நீண்ட கடிதத்தை அனுப்பாதீர்கள், ஆனால் ‘நன்றாக உள்ளேன்’ என்ற அட்டையை மாத்திரம் அனுப்புங்கள். பெரிய அட்டையை அனுப்பாதீர்கள், உலகியல் அட்டைகளை அனுப்பாதீர்கள். நீங்கள் உங்களுடைய ஆசிரியரிடம் இருந்து பெற்ற ஆசீர்வாத அட்டையை அனுப்புங்கள். நற்குணங்களினதும் சக்திகளினதும் எத்தனை பரிசுகளை நீங்கள் கொண்டுள்ளீர்கள்? நீங்கள் ஒரு பட்டியலைத் தயாரித்தீர்கள் என்றால், அது நீண்ட பட்டியலாக இருக்கும். நீங்கள் கொடுக்கக் கொடுக்க குறையும் என்றில்லை, ஆனால் தொடர்ந்தும் அவை அதிகரிக்கும். அவர்கள் மாயமந்திரத்தைப் பற்றிப் பேசுகின்றார்கள். ஆனால் நீங்கள் எந்த நற்குணங்களைக் கொண்டிருக்கின்றீர்களோ, அது உங்களுக்கு குறைவடையாது, அதற்குப் பதிலாக அது அதிகரிக்கும் என்பதே சிவமந்திரமாகும். ஏனெனில் “நீங்கள் தானம் செய்யும் பொழுது, தீய சகுனத்திலிருந்து விடுதலை ஆகுவீர்கள்” என்று கூறப்படுகின்றது. நல்லது.
இங்கு முதல் தடவையாக வந்தவர்கள், எழுந்து நில்லுங்கள்! இது நல்லது. (மத்திய பிரதேசத்தின் ஆளுநரும் ஒன்றுகூடலில் இருந்தார்.) நீங்கள் இந்த ஒன்றுகூடலுக்கு வந்தது நல்லது. பாப்தாதா வந்திருக்கின்ற உங்கள் அனைவருக்கும் இந்த ஆசீர்வாதத்தைக் கொடுக்கின்றார்: நிச்சயமாகத் தந்தைக்கு ‘காலை வணக்கம்’, ‘இரவு வணக்கம்’ எனக் கூறுங்கள். ஏனெனில் காலையில் நீங்கள் கண்களைத் திறக்கும் போது முதலாவதாக தந்தையை பார்த்தால், முழு நாளும் நல்லதாக இருக்கும். இங்கே முதல் தடவையாக வந்திருக்கும் குழந்தைகளுக்கு பலமில்லியன் தடவைகள் அன்பும், நினைவுகளும், வாழ்த்துக்களும். நல்லது.
இப்பொழுது, நான்கு விடயங்களைப் பற்றி பாபா உங்களுக்குக் கூறியிருக்கின்றார். ஐந்தாவது விடயம் ஒன்றுள்ளது. அது பூச்சியமாகவும், கதாநாயகனாகவும் ஆகுவதாகும் - தேவதைகளாக ஆகவிருப்பவர்களும், இக்கருத்துக்களைக் கடைந்து அதில் மூழ்கிய நிலையில் இருப்பவர்களுமாகிய பிராமண ஆத்மாக்களாகிய நீங்கள் தேவர்கள் ஆகுவது உங்களது பிறப்புரிமையாகும். நீங்கள் தேவர்களாகப் போகின்ற தேவதைகள். எனவே, எப்பொழுதும் அன்பில் மூழ்கியிருங்கள். திடசங்கற்பமான எண்ணங்கள் என்ற திறவுகோலை மனதிலும், புத்தியிலும், விழிப்புணர்விலும் சதா கொண்டிருங்கள். ஏனெனில், மாயை இத்திறவுகோலைப் பெருமளவில் துரத்திச் செல்கின்றாள். எப்பொழுதும் தங்களது மனதிலும், புத்தியிலும் சக்திவாய்ந்தவர்களாக இருக்கின்ற, எங்கும் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், நமஸ்தேயும்.
தாதிகளுக்கு: (தாதி ஜான்கி): உங்கள் சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த பின்னர் வந்துள்ளீர்கள். மிகவும் நல்லது. நீங்கள் செய்வது மிகவும் நல்லதாகும். ஜெகதாம்பாள் கொடியை பிடித்துக் கொண்டு நடுவில் நிற்க, ஏனைய சக்திகள் அனைவரும் பின்னால் சூழ்ந்து நிற்கின்ற படத்தை பாபா நினைவு கூர்ந்தார். அந்தப் படத்தை இப்பொழுது உலகத்திற்கு காட்டுவதற்கு பாப்தாதா விரும்புகின்றார். பிராமணர்கள் அனைவரிலும் கருவி ஆகுகின்ற அத்தகையதொரு சக்தி சேனையை உருவாக்குங்கள். சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளும் போது, சூழலை சக்திமிக்கதாக ஆக்குங்கள். அவர்கள் கொண்டிருக்க வேண்டிய திடசங்கற்ப எண்ணம்: ‘இந்தச் சூழலை நிச்சயமாக மாற்றுவதன் மூலம் இதனைச் செய்து காட்டுவோம் என்ற திடசங்கற்ப எண்ணத்தைக் கொண்டிருக்கின்றோம்.’ அவர்கள் இக் கொடியை ஏற்ற வேண்டும். நாலாபுறமும் பயணித்து தமது ஸ்திதியினால், வார்த்தைகளினால், சகவாசத்தினால் சூழலைச் சரியாக்குகின்ற அத்தகையதொரு குழுவை உருவாக்குங்கள். அத்தகையதொரு குழுவை தயாராக்குவதன் மூலம் இதனைச் செய்து காட்டுங்கள். பாப்தாதா இப் படத்தை நினைவு கூர்ந்துள்ளதால், அது நடைமுறையில் இடம்பெற வேண்டும். உங்களுக்கு நேரம் இல்லை என்று கூற வேண்டாம். உங்களுக்கு நேரம் இல்லை என்று எவருமே கூற முடியாது. நல்லாசிகள் இருந்தால் நீங்கள் நேரத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள். அத்தகையதொரு குழுவை தயாராக்கி பாப்தாதாவிடம் அழைத்து வாருங்கள்.
இளைஞர் குழு: இவ்வருடத்தில், உங்களது மனம், வார்த்தைகள், செயல்கள், உறவுமுறைகள், தொடர்புகள் போன்றவற்றின் மூலமாக, பிராமணக் கோட்பாடுகள் அனைத்தையும் நீங்கள் முழுமையாகப் பின்பற்றுவீர்கள் என்பதையும் அதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் அத்தகையதோர் குழுவைத் தயார்ப்படுத்த வேண்டும். இவ்வருடத்தில் எந்தவொரு மரியாதைக் கோட்பாடும் மீறப்படக் கூடாது. உங்கள் மத்தியில் அத்தகையதோர் குழுவை உருவாக்குங்கள். ஆரம்பித்து வைப்பவர்கள் அர்ஜூனர்கள். நீங்கள் இதனை விரும்புகின்றீர்களா? யார் இதனைச் செய்வீர்கள்? நீங்கள் இதனைச் செய்வீர்களா? உங்களது கரங்களை உயர்த்துங்கள்! நீங்கள் இதனைச் செய்வீர்களா? இளைஞர்கள் அனைவரும் இதனைச் செய்வீர்களா? உங்களில் எத்தனை பேர் இருக்கின்றீர்கள்? (400) உங்களது குழுவிற்குள் இதனை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அப்பொழுது, நீங்கள் அனைவரும் மரியாதைக் கோட்பாடுகளைப் பின்பற்றுபவர்கள் என்பதை நாங்கள் அரசாங்கத்திற்குக் காண்பிப்போம். அரசாங்கமும் இதனையே விரும்புகின்றது. எனினும், அதனைச் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றது. உங்களால் இதனை நடைமுறையில் செய்துகாட்ட முடியும். ஓர் உதாரணமாக இருப்பதன் மூலம் அதனைக் காண்பியுங்கள். நீங்கள் உங்களது வீட்டுவேலையைப் பெற்றுவிட்டீர்கள், இல்லையா? எங்குமுள்ள பிராமணர்கள் அனைவரும் இவ்வருடத்தில் அற்புதங்கள் செய்ய வேண்டும் என்பதையே பாப்தாதா விரும்புகின்றார். வீணான எண்ணங்களின் கிளர்ச்சிகள் எதுவும் இருக்கக்கூடாது. வீணான எண்ணங்கள் எதுவும் வர அனுமதிப்பதற்கு நேரமே இல்லாத வகையில் தூய எண்ணங்கள் பலவற்றைச் சேகரியுங்கள். உங்களிடம் இந்தளவிற்குப் பொக்கிஷங்கள் உள்ளன, இல்லையா? நீங்கள் தூய எண்ணங்கள் என்ற பொக்கிஷங்கள் பலவற்றைச் சேமித்து விட்டீர்களா? சேமித்து விட்டீர்களா? உங்களது கரங்களை உயர்த்துங்கள்! சக்திகளும் இருக்கின்றனர். அது நல்லது. சக்திகள் உதாரணமாக இருக்க வேண்டும். பாண்டவர்களும் உதாரணமாக இருக்க வேண்டும். நல்லது. பாப்தாதா மகிழ்ச்சி அடைகின்றார்.
ஆசீர்வாதம்:
நீங்கள் எண்ணங்களின் எந்தவொரு சூட்சுமமான பந்தனத்தில் இருந்தும் விடுபடுவதன் மூலம் பந்தனத்தில் இருந்து விடுபட்டவராகவும் உயர்ந்த ஸ்திதியை அனுபவம் செய்பவராகவும் ஆகுவீர்களாக.குழந்தைகளான நீங்கள் பந்தனத்தில் இருந்து விடுபடும் அளவிற்கு, உங்களால் உயர்ந்த ஸ்திதியில் ஸ்திரமாக முடியும். ஆகவே, சோதித்துப் பாருங்கள்: எனது எண்ணங்கள், வார்த்தைகள் அல்லது செயல்களில் சூட்சுமமான முறையிலும் ஏதாவது இழை பற்றியுள்ளதா? ஒரேயொரு தந்தையைத் தவிர, வேறு எவரையும் நினைவு செய்யாதீர்கள். உங்களின் சரீரத்தையும் நீங்கள் நினைவு செய்தால், உங்களின் சரீரத்துடன்கூடவே, உங்களின் சரீர உறவுகள், உங்களின் பௌதீக உடமைகள் மற்றும் உலகமும் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடரும். ‘நான் பந்தனத்தில் இருந்து விடுபட்டுள்ளேன்’. இந்த ஆசீர்வாதத்தை உங்களின் விழிப்புணர்வில் வைத்திருந்து, மாயையின் பிடியில் இருந்து முழு உலகையும் விடுவிக்கும் சேவையைச் செய்யுங்கள்.
சுலோகம்:
ஆத்ம உணர்வு ஸ்திதியால் தமது சரீரங்கள் மற்றும் மனங்களின் எந்தவொரு பிரச்சனையையும் முடிப்பவர்களால் அசைக்க முடியாதவர்களாக இருக்க முடியும்.அவ்யக்த சமிக்கை: உங்களின் நம்பிக்கையின் அத்திவாரத்தை உறுதியாக்கிக் கொண்டு, சதா பயமற்றவராகவும் கவலையற்றவராகவும் இருங்கள்.
பிரச்சனைகளின் கடமை, வருவது. ஆனால், புத்தியில் நம்பிக்கை வைத்திருக்கும் ஓர் ஆத்மாவின் கடமை, தீர்வுகளின் சொரூபமாகவும் பிரச்சனைகளை மாற்றுபவராகவும் ஆகுவதாகும். ஏன்? நீங்கள் ஒவ்வொருவரும் பிறப்பு எடுத்தவுடனேயே, நீங்கள் மாயையை வென்றவர் ஆகுவீர்கள் என்று மாயைக்குச் சவால் விடுக்கிறீர்கள். பிரச்சனையின் வடிவமே, மாயையின் வடிவம் ஆகும். நீங்கள் அவளுக்குச் சவால் விட்டிருப்பதனால், மாயை நிச்சயமாக உங்களை எதிர்ப்பாள். எவ்வாறாயினும், உங்களின் வெற்றி ரூபத்தினாலும் நம்பிக்கை கொண்ட உங்களின் புத்தியாலும் அனைத்தையும் ‘எதுவும் புதியதல்ல’ எனக் கருதி, சூழ்நிலைகளை வெற்றி கொள்ளுங்கள். நீங்கள் ஒரு கவலையற்ற சக்கரவர்த்தியாக இருப்பீர்கள்.