08.05.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, ஆத்ம உணர்வு உடையவராகி, தந்தையை நினைவுசெய்தால், நீங்கள் யோக சக்தியைச் சேமிப்பீர்கள். யோக சக்தியினால், உங்களால் முழு உலக இராச்சியத்தையும் அடைய முடியும்.

கேள்வி:
குழந்தைகளாகிய உங்கள் எண்ணங்களிலும் கனவுகளிலும் இல்லாத, எந்த ஒரு விடயம் இப்பொழுது நடைமுறையில் இடம்பெற்றுள்ளது?

பதில்:
நீங்கள் கடவுளுடன் இராஜயோகத்தைக் கற்று, உலக அதிபதிகள் ஆகுவீர்கள் என்றோ அல்லது இந்தக் கல்வியை நீங்கள் இராச்சியம் ஒன்றைக் கோருவதற்காகக் கற்பீர்கள் என்றோ நீங்கள் ஒருபொழுதும் எண்ணவோ அல்லது கனவு காணவோ இல்லை. சர்வசக்திவானிடம் இருந்து நீங்கள் சக்தியைப் பெற்று, சத்தியயுக இராச்சியத்தின் ஆட்சிக்கான உரிமையைக் கோருகின்றீர்கள் என்ற முடிவற்ற சந்தோஷம் உங்களுக்கு இப்பொழுது உள்ளது.

ஓம் சாந்தி.
பயிற்சி செய்வதற்காகப் புதல்விகளான நீங்கள் இங்கே அமர்ந்துள்ளீர்;கள். உண்மையில், ஆத்ம உணர்வில் இருந்து கொண்டு, தந்தையை நினைவு செய்பவர்களே இங்கே (கதியில்) அமர வேண்டும். அவர் நினைவு செய்யாது அமர்ந்திருந்தால், அவரை ஆசிரியர் என்று அழைக்கக்கூடாது. நினைவு செய்வதில் சக்தி உள்ளது. இந்த ஞானத்தில் சக்தியில்லை. இது யோகசக்தி என்று அழைக்கப்படுகின்றது. ‘யோகசக்தி’ என்ற கூற்று சந்நியாசிகள் பயன்படுத்துகின்ற ஒரு கூற்றாகும். தந்தை கடினமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதில்லை. தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, சிறு குழந்தைகள் தங்கள் பெற்றோரை நினைவுசெய்வதைப் போன்று, இப்பொழுது நீங்கள் தந்தையை நினைவுசெய்யுங்கள். அவர்கள் லௌகீகப் பெற்றோர்கள். குழந்தைகளாகிய நீங்கள் சரீரம் அற்றவர்கள் ஆகுவீர்கள். இங்கேயே நீங்கள் அந்த உருவங்களைப் (சரீரங்கள்) பெறுகின்றீர்கள். நீங்கள் சரீரங்கள் அற்ற ஓர் உலகின் வாசிகள் ஆவீர்கள். அங்கே சரீரங்கள் இருப்பதில்லை. அனைத்துக்கும் முதலில் நீங்கள் ஓர் ஆத்மா என்பதை உறுதியாக்கிக் கொள்ளுங்கள். ஆகையால் தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுங்கள்! நீங்கள் ஆத்மாக்கள் என்ற நம்பிக்கையைக் கொண்டிருங்கள். நீங்கள் நிர்வாணா தாமத்திலிருந்து வருகின்றீர்கள். அதுவே ஆத்மாக்களாகிய உங்கள் அனைவரினதும் வீடாகும். உங்கள் பாகங்களை நடிப்பதற்காகவே நீங்கள் இங்கே வருகின்றீர்கள். அனைவருக்கும் முதலில் வருபவர் யார்? உங்கள் புத்திக்கு இது தெரியும். உலகில் உள்ள வேறு எவருக்கும் இந்த ஞானம் இல்லை. தந்தை கூறுகின்றார்: நீங்கள் கற்ற, சமயநூல்கள் போன்ற அனைத்தையும் மறந்து விடுங்கள். மக்கள் ஸ்ரீகிருஷ்ணரையும் இன்ன இன்னாரையும் அதிகளவு புகழ்கின்றார்கள். அவர்கள் காந்தியையும் அதிகளவு புகழ்கின்றார்கள். உண்மையில் (காந்தி) அவர் செல்வதற்கு முன்னர் கடவுளின் இராச்சியத்தை ஸ்தாபித்ததைப் போன்று அந்தப் புகழ் உள்ளது. எவ்வாறாயினும் கடவுள் சிவன் கூறுகின்றார்: ஆதிசனாதன அரசர், அரசிகளின் இராச்சியத்தில் இருந்த நியதிகள் தந்தையாலேயே ஸ்தாபிக்கப்பட்டன. தந்தையே அவர்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்ததன் மூலம், அவர்களை அரசர், அரசி ஆக்கினார். அந்த இறை சட்டதிட்டங்கள் கூட மீறப்பட்டுள்ளன. அவர் (காந்தி) ஓர் இராச்சியத்தை விரும்பவில்லை எனவும், அவர் மக்களை மக்கள் ஆட்சி செய்யும் ஓர் அரசாங்கத்தையே விரும்புவதாகக் கூறினார். இப்பொழுது அந்த அரசாங்கம் என்ன நிலையில் உள்ளது? துன்பம், துன்பத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. அவர்கள் தொடர்ந்தும் தங்கள் மத்தியில் சண்டை சச்சரவுகளில் ஈடுபடுகின்றார்கள். பல வகையான அபிப்பிராயங்கள் உள்ளன. குழந்தைகளாகிய நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் இப்பொழுது இராச்சியத்தைக் கோருகின்றீர்கள். அங்கே இராணுவம் போன்ற எவரும் இல்லாதவகையில், உங்களிடம் அதிகளவு சக்தி உள்ளது. அங்கே பயம் என்ற கேள்விக்கே இடமில்லை. அது இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமாக இருந்தது. அது பிரிவினையற்ற இராச்சியமாகும். முரண்பாடுகளை விளைவிக்கக்கூடிய, இரட்டைத்தன்மை அங்கே இருக்கவில்லை. அது பிரிவினையற்ற இராச்சியம் என்று அழைக்கப்பட்டது. தந்தை குழந்தைகளாகிய உங்களைத் தேவர்கள் ஆக்குகின்றார். பின்னர் நீங்கள் பிரிவினை அற்றவரில் இருந்து, இராவணனால் அசுரர்கள் ஆக்கப்பட்டீர்கள். பாரதவாசிகளாகிய நீங்களே முழு உலகினதும் அதிபதிகளாக இருந்தீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். நினைவுச் சக்தியின் மூலமே நீங்கள் இராச்சியத்தைப் பெற்றீர்கள். நீங்கள் இப்பொழுது மீண்டும் ஒருமுறை அந்த இராச்சியத்தைக் கோருகின்றீர்கள். நீங்கள் ஒவ்வொரு சக்கரத்திலும் நினைவுச் சக்தியின் மூலமே அதனைக் கோருகின்றீர்கள். கல்வியிலும் சக்தி உள்ளது. அதேபோன்று, ஒருவர் சட்டநிபுணர் ஆகும் பொழுது, அவருக்கு அதற்கான சக்தி உள்ளது. அந்தச் சக்தி சில சதங்களின் பெறுமதியானதே. நீங்கள் முழு உலகையும் யோகசக்தியினால் ஆட்சி செய்கின்றீர்கள். நீங்கள் சர்வசக்திவான் தந்தையிடம் இருந்து சக்தியைப் பெறுகின்றீர்கள். நீங்கள் கூறுகின்றீர்கள்: பாபா, நாங்கள் ஒவ்வொரு சக்கரத்திலும் சத்தியயுக இராச்சியத்தை உங்களிடம் இருந்து பெறுகின்றோம். பின்னர் அதனை நாங்கள் இழந்து, அதன்பின்னர் மீண்டும் அதனைப் பெற்றுக் கொள்கின்றோம். நீங்கள் இந்த முழு ஞானத்தையும் பெற்றுள்ளீர்கள். இப்பொழுது ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம், நாங்கள் மேன்மையான உலக இராச்சியத்தைப் பெறுகின்றோம். உலகமும் மேன்மையானது ஆகுகின்றது. இப்பொழுது மாத்திரமே உங்களுக்குப் படைப்பவரதும், படைப்பினதும் ஞானம் உள்ளது. இலக்ஷ்மியும் நாராயணனும் தாங்கள் எவ்வாறு தங்கள் இராச்சியத்தைப் பெற்றோம் என்ற ஞானத்தைக் கொண்டிருக்க மாட்டார்கள். நீங்கள் இப்பொழுது இங்கே கற்கின்றீர்கள், அதன்பின்னர் அங்கே சென்று ஆட்சிசெய்வீர்கள். ஒருவர் நல்ல, செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தால், அவர் தனது முன்னைய பிறவியில் நல்ல செயல்களில் ஈடுபட்டு, தான தர்மங்கள் செய்துள்ளார் என்று கூறப்படுகின்றது. நீங்கள் செய்யும் செயல்களைப் பொறுத்தே ஒரு பிறப்பைப் பெறுகிறீர்கள். இப்பொழுது, இது இராவண இராச்சியம். இங்கு மக்கள் செய்வன அனைத்தும் பாவகரமானவை. நீங்கள் ஏணியில் கீழிறங்க வேண்டும். அதி மகத்துவமானவர்களும், அதிமேலானவர்களுமான தேவ தர்மத்திற்கு உரியவர்களும் ஏணியில் கீழே இறங்க வேண்டும். அனைவருமே சதோ, இரஜோ, தமோ ஸ்திதிகளைக் கடந்து செல்ல வேண்டும். அனைத்தும் புதியதில் இருந்து பழையது ஆகுகின்றது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது முடிவற்ற சந்தோஷத்தை அனுபவம் செய்ய வேண்டும். நீங்கள் உலக அதிபதிகள் ஆகுவீர்களென நீங்கள் ஒருபொழுதும் எண்ணவோ அல்லது கனவு காணவோ இல்லை. உலகம் முழுவதும் இலக்ஷ்மி நாராயணனின் ஆட்சி நிலவியது என்பதைப் பாரத மக்கள் அறிவார்கள். அவர்கள் பூஜிக்கத் தகுதி உடையவர்களாக இருந்து, பின்னர் பூஜிப்பவர்கள் ஆகினார்கள். ‘பூஜிக்கத் தகுதி உடையவர்கள் பூஜிப்பவர்கள் ஆகினார்கள்’ என்பது நினைவுகூரப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இப்பொழுது உங்கள் புத்தியில் உள்ளது. இந்த நாடகம் மிகவும் அற்புதமானது. நாங்கள் எவ்வாறு 84 பிறவிகளை எடுக்கின்றோம் என்பதை எவரும் அறிய மாட்டார்கள். 8.4 மில்லியன் பிறவிகள் பற்றிச் சமயநூல்களில் எழுதப்பட்டுள்ளது. தந்தை கூறுகின்றார்: அவை அனைத்தும் பக்தி மார்க்கத்தில் சொல்லப்பட்ட பொய்களாகும். இது இராவண இராச்சியம். இராம இராச்சியம் எவ்வாறானது, இராவண இராச்சியம் எவ்வாறானது என்பது வேறு எவரின் புத்தியிலும் அன்றி, குழந்தைகளாகிய உங்களது புத்தியில் மாத்திரமே உள்ளது. இராவணன் ஒவ்வொரு வருடமும் எரிக்கப்படுகின்றான். எனவே அவன் எதிரியாவான். ஐந்து விகாரங்களும் மனிதர்களின் எதிரிகள் ஆகும். இராவணன் யார் என்பதையும், அவனை ஏன் எரிக்கின்றார்கள் என்பதையும் எவருமே அறியமாட்டார்கள். தங்களைச் சங்கமயுக வாசிகளெனக் கருதுபவர்கள் தாங்கள் இப்பொழுது மனிதர்கள் அனைவரிலும் அதி மேன்மையானவர்கள் ஆகுகின்றார்கள் என்பதை அறிவார்கள். கடவுள் எங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்து, எங்களை மனிதர்களில் இருந்து நாராயணனாகவும் சீரழிந்த மனிதர்களில் இருந்து மேன்மையான மனிதர்களாகவும் மாற்றுகின்றார். அதிமேலான அசரீரியான கடவுள் எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். ஆகையால் உங்களுக்குள் எல்லையற்ற சந்தோஷம் இருக்க வேண்டும். தாங்கள் மாணவர்கள் என்பதை ஒரு பாடசாலையில் உள்ள மாணவர்கள் அறிவார்கள். அங்கே கற்பிக்கின்ற ஆசிரியர்கள் பொதுவான ஆசிரியர்கள். இங்கே கடவுளே உங்களுக்குக் கற்பிக்கின்றார். இந்தக் கல்வியின் மூலம் உங்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோர முடியும் என்பதனால் நீங்கள் மிகவும் நன்றாகக் கற்க வேண்டும். இது மிகவும் இலகுவானது! நீங்கள் காலையில் தினமும் அரை மணித்தியாலம் முதல் முக்கால் மணித்தியாலம் வரை கற்க வேண்டும். நாள் முழுவதும், நீங்கள் வேலையிலோ அல்லது வியாபாரத்திலோ மும்முரமாக இருப்பதால், நினைவுசெய்ய மறந்து விடுகின்றீர்கள். ஆகையாலேயே நீங்கள் காலையில் இங்கே வந்து நினைவில் அமர்கின்றீர்கள். பெருமளவு அன்புடன் பாபாவை நினைவுசெய்யுமாறு உங்களுக்குக் கூறப்படுகின்றது. பாபா, நீங்கள் எங்களுக்குக் கற்பிப்பதற்கு வந்துள்ளீர்கள். நீங்கள் 5000 வருடங்களின் பின்னர் மீண்டும் ஒருமுறை எங்களுக்குக் கற்பிப்பதற்கு வந்துள்ளீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். குழந்தைகள் பாபாவிடம் வரும் பொழுது, பாபா அவர்களிடம் வினவுகின்றார்: நாங்கள் முன்னர் சந்தித்துள்ளோமா? சாதுக்கள், சந்நியாசிகள் போன்றவர்கள் இந்தக் கேள்வியை ஒருபொழுதும் கேட்க மாட்டார்கள். அங்கே, அந்தச் சத்சங்கத்தில் விரும்பியவர்கள் சென்று அமரலாம். மக்கள் ஓர் இடத்தில் ஒன்றுகூடுவதைக் காணும்பொழுது, மேலும் பலர் அவர்களுடன் சேர்ந்து கொள்கின்றார்கள். நீங்களும் கீதை, இராமாயணம் போன்றவற்றை அதிகளவு சந்தோஷத்துடன் சென்று செவிமடுத்தீர்கள் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். அப்பொழுது நீங்கள் எதனையும் புரிந்து கொள்ளவில்லை. அவை அனைத்தும் பக்தியின் சந்தோஷம். அங்கே மக்கள் தொடர்ந்தும் சந்தோஷத்தில் நடனம் ஆடுகின்றார்கள். இருப்பினும், அவர்கள் தொடர்ந்தும் கீழே இறங்குகின்றார்கள். பலவகைகளான ஹத்தயோகம் உள்ளன. அவர்கள் அவை அனைத்தையும் நல்ல ஆரோக்கியத்திற்காகச் செய்கின்றார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: அவை அனைத்தும் பக்தி மார்க்கத்தின் சம்பிரதாயங்கள். அவர்கள் எவருக்கும் படைப்பவரையும் படைப்பையும் தெரியாது. அவ்வாறாயின் வேறு என்ன எஞ்சியுள்ளது? படைப்பவரையும், படைப்பையும் அறியாததால், நீங்கள் என்னவாகினீர்கள் எனப் பாருங்கள். இப்பொழுது படைப்பையும் படைப்பவரையும் அறிந்திருப்பதால் என்ன ஆகுகின்றீர்கள் என்றும் பாருங்கள். அவற்றை அறிந்திருப்பதால், நீங்கள் வளமுடையவர்கள் ஆகுகின்றீர்கள். அவற்றை அறியாதிருந்தால், அதே பாரதமக்களாகிய நீங்கள் வளமற்றவர்கள் ஆகினீர்கள். அவர்கள் தொடர்ந்தும் பொய் கூறுகின்றார்கள். உலகில் பல விடயங்கள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. அதிகளவு தங்கமும் பணமும் கொள்ளை அடிக்கப்பட்டன. அங்கே நீங்கள் தங்க மாளிகைகளைக் கட்டுவீர்கள் என்று குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது தெரியும். சட்டநிபுணர்கள் ஆகுவதற்காகக் கற்பவர்கள், தாங்கள் சித்தியடையும் பொழுது, தாங்கள் இதைச் செய்வோம், வீடு போன்றவற்றைக் கட்டுவோம் என்பதையும் உள்ளே அறிவார்கள். நீங்கள் சுவர்க்கத்தின் இளவரசர் இளவரசிகள் ஆகுவதற்காகக் கற்கின்றீர்கள் என்பது ஏன் உங்கள் புத்தியில் புகுவதில்லை? அதிகளவு சந்தோஷம் இருக்க வேண்டும்! எவ்வாறாயினும், இங்கிருந்து நீங்கள் கிளம்பிய உடனேயே அந்தச் சந்தோஷம் மறைந்து விடுகின்றது. பல இளம் புதல்விகள் இந்த ஞானத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றார்கள். அவர்களின் உறவினர்கள் எதனையும் புரிந்துகொள்வதில்லை, ஆகவே, அவர்கள் வசியப்படுத்தப்பட்டுள்ளனர் என்று அவர்கள் கூறுகின்றார்கள். தங்கள் புதல்விகளைத் தாங்கள் கற்க அனுமதிக்கப் போவதில்லை என அவர்கள் கூறுகின்றார்கள். அத்தகைய சந்தர்ப்பங்களில், நீங்கள் இன்னமும் பெற்றோரில் தங்கியிருந்தால், உங்கள் பெற்றோர் கூறுவதையே நீங்கள் கேட்க வேண்டும். நாங்கள் (பாபா) உங்களை ஏற்க முடியாது. இல்லாவிட்டால், அதிகளவு முரண்பாடுகள் ஏற்படும். ஆரம்பத்தில் அதிகளவு முரண்பாடுகள் இருந்தன. ஒரு புத்திரி தனக்கு 18 வயதாகி விட்டது என்று கூறுவார், ஆனால் அவரது தந்தையோ அவருக்கு 16 வயது, இன்னமும் அவள் தன்னிலேயே தங்கியுள்ளார் என்று கூறுவார். அவர் இவ்வாறாகச் சண்டையிட்டுத் தனது புதல்வியை அழைத்துச் செல்வார். தந்தையில் நீங்கள் இன்னமும் தங்கி இருக்கின்றீர்கள் என்றால், உங்கள் (லௌகீக) தந்தையின் கட்டளைகளை இன்னமும் பின்பற்ற வேண்டும். நீங்கள் போதிய வயதை அடையும்பொழுது, நீங்கள் விரும்பியதைச் செய்ய முடியும். இவற்றிற்கான சட்டங்களும் உள்ளன. பாபா கூறுகின்றார்: நீங்கள் தந்தையிடம் (பாபாவிடம்) வரும்பொழுது, உங்கள் லௌகீகத் தந்தையின் சான்றிதழைக் (கடிதம்) கொண்டு வரவேண்டும் எனும் நியதி இங்கு உள்ளது. அதன்பின்னர், உங்கள் ஒவ்வொருவரின் பண்புகளும் அவதானிக்கப்படும். அவர்களின் பண்புகள் திருப்தியாக இல்லாவிட்டால், அவர்கள் வீட்டிற்குத் திருப்பி அனுப்பப்படுகின்றார்கள். ஒரு விளையாட்டிலும் அவ்வாறே நிகழ்கின்றது. ஒரு விளையாட்டில் ஒருவர் சரியாக விளையாடாது விட்டால், அவர் அந்த விளையாட்டில் இருந்து நீக்கப்படுகின்றார். ஏனெனில் அத்தகையவர்களால் அந்த அணியின் கௌரவம் இழக்கப்படும். நீங்கள் இப்பொழுது ஒரு யுத்தகளத்தில் இருக்கின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். தந்தை ஒவ்வொரு கல்பத்திலும் வந்து, எங்களை மாயையை வெற்றி கொள்ளச் செய்கின்றார். தூய்மை ஆகுவதே பிரதான விடயமாகும். ஆத்மாக்கள் விகாரங்களின் மூலம் தூய்மை அற்றவர்கள் ஆகியுள்ளார்கள். தந்தை கூறுகின்றார்: காமமே கொடிய எதிரியாகும். அது அதன் ஆரம்பம் முதல், மத்தியினூடாக இறுதிவரை துன்பத்தையே விளைவிக்கின்றது. பிராமணர்கள் ஆகுபவர்கள் பின்னர் தேவதர்மத்திற்குள் செல்கின்றார்கள். பிராமணர்களாகிய நீங்கள் வரிசைக்கிரமமானவர்கள். விட்டிற்பூச்சிகள் சுவாலையிடம் செல்லும்பொழுது, சில முற்றாகத் தங்களை அதில் அர்ப்பணித்து மரணிக்கின்றன. சிலவோ சுவாலையைச் சுற்றி வட்டமிட்டு விட்டு, பின்னர் பறந்து விடுகின்றன. குழந்தைகள் இங்கே வரும் பொழுது, சிலர் முற்றாகத் தங்களைச் சுவாலையில் அர்ப்பணிக்கின்றனர். ஆனால் ஏனையோர் ஞானத்தைச் செவிமடுத்து விட்டு, சென்று விடுகின்றார்கள். முன்னர், தங்கள் இரத்தத்தினால் கூட எழுதினார்கள்: ‘பாபா, நான் உங்களுக்கு உரியவன்’. இருப்பினும் மாயை அவர்களைத் தோற்கடித்து விடுகின்றாள். மாயையுடன் அதிகளவு யுத்தம் புரிய நேரிடுகின்றது. அதனாலேயே, இது ஒரு யுத்தகளம் என்று அழைக்கப்படுகின்றது. பரமாத்மா பரமதந்தை வேதங்கள், சமயநூல்கள் அனைத்தினதும் சாராம்சத்தை பிரம்மாவினூடாக விளங்கப்படுத்துகின்றார் என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். பல படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. நாரதரின் உதாரணமும் இந்த நேரத்திற்கே உரியது. நீங்கள் அனைவருமே இலக்ஷ்மி அல்லது நாராயணனைப் போன்று ஆகுவீர்கள் என்று கூறுகின்றீர்கள். பாபா கூறுகின்றார்: அதற்கு நீங்கள் தகுதிவாய்ந்தவராக உள்ளீர்களா என்று உங்களுக்குள் சென்று பாருங்கள். எந்த விகாரங்களும் இல்லாமல் இருக்கின்றீர்களா என்று உங்களைச் சோதித்துப் பாருங்கள். அனைவருமே நாரதரைப் போன்று பக்தர்களே. அது கொடுக்கப்பட்டுள்ள ஓர் உதாரணமே ஆகும். பக்தி மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தாங்கள் இலக்ஷ்மியைத் திருமணம் செய்யலாமா என்று கேட்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: இல்லை! இந்த ஞானத்தைச் செவிமடுக்கும் பொழுது மாத்திரமே அவர்களால் சத்கதியைப் பெற முடியும். தூய்மையாக்குபவரான என்னால் மாத்திரமே அனைவருக்கும் சத்கதியை அருள முடியும். தந்தை உங்களை இராவண இராச்சியத்தில் இருந்து விடுவிக்கின்றார் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். அந்த யாத்திரைகள் பௌதீகமானவை. கடவுள் பேசுகின்றார்: மன்மனாபவ! இதில் தடுமாறித் திரிதல் என்ற கேள்விக்கு இடமில்லை. அந்தத் தடுமாறித் திரிதல் அனைத்தும் பக்திமார்க்கத்திற்கு உரியவை. அரைக் கல்பத்திற்கு பிரம்மாவின் பகலும் அரைக்கல்பத்திற்கு பிரம்மாவின் இரவும் உள்ளன. பிரம்மாகுமார், பிரம்மாகுமாரிகளாகிய எங்கள் அனைவருக்கும் இப்பொழுது அரைக்கல்பத்திற்குப் பகல் வரவுள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். நாங்கள் சந்தோஷ தாமத்தில் இருப்போம். அங்கே எந்தப் பக்தியும் இருக்க மாட்டாது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது, அனைவரிலும் அதிசெல்வந்தர்கள் ஆகுகின்றீர்கள் என்பதை அறிந்துள்ளீர்கள். எனவே அதிகளவு சந்தோஷம் இருக்க வேண்டும். நீங்கள் அனைவரும் கரடுமுரடான கற்களாக இருந்தீர்கள். தந்தை இப்பொழுது உங்களைச் செதுக்குகின்றார் (உங்களைச் சுத்தமாக்கி மினுக்குகின்றார்). பாபா இரத்தின வியாபாரியும் ஆவார். நாடகத்திற்கு ஏற்ப, பாபா அனுபவம் வாய்ந்த இரதத்தை எடுத்துள்ளார். ‘கிராமத்துச் சிறுவன்’ என்று நினைவுகூரப்பட்டுள்ளது. ஸ்ரீகிருஷ்ணர் எவ்வாறு கிராமத்துச் சிறுவனாக இருக்க முடியும்? அவர் சத்தியயுகத்தில் வாழ்ந்தவர். அவரை ஊஞ்சலில் தாலாட்டுகின்றார்கள். அவர் ஒரு கிரீடத்தை அணிகின்றார். அவரை ஏன் கிராமத்துச் சிறுவன் என்று அழைக்க வேண்டும்? கிராமத்துச் சிறுவர்கள் அழுக்காகவே இருப்பார்கள். நீங்கள் அழகானவர்கள் ஆகுவதற்காகவே இப்பொழுது இங்கே வந்துள்ளீர்கள். தந்தை இந்த ஞானம் என்ற உளியினால் உங்களைச் செதுக்குகின்றார். ஒவ்வொரு கல்பத்திலும் ஒருமுறை மாத்திரமே நீங்கள் சத்தியமானவரின் சகவாசத்தைப் பெறுகின்றீர்கள். ஏனைய அனைத்துச் சகவாசமும் பொய்யானவை. ஆகையாலேயே தந்தை கூறுகின்றார்: தீயதை கேட்காதீர்கள்! எனக்கும் உங்களுக்கும் அவதூறை விளைவிக்கின்ற அத்தகைய விடயங்களைச் செவிமடுக்காதீர்கள். இந்த ஞானத்திற்கு வருகின்ற குமாரிகள் தங்கள் லௌகீகத் தந்தையின் சொத்தில் தங்களுக்கும் பங்கு உள்ளது என்று கூற முடியும். “பாரதத்திற்குச் சேவை செய்வதற்காக நான் ஏன் ஒரு நிலையத்தை திறக்கக்கூடாது?” எவ்வாறாயினும் ஒரு புதல்வி தானம் செய்யப்பட (திருமணம் செய்து கொடுக்கப்படல்) வேண்டியவளே. ‘அந்தப் பங்கை என்னிடம் கொடுப்பதனால், நான் ஒரு நிலையத்தைத் திறப்பேன், பலரும் நன்மை பெறுவார்கள்” என உங்கள் லௌகீகத் தந்தையிடம் கேளுங்கள். அத்தகைய சாதுரியங்களைப் பயன்படுத்துங்கள். இது உங்களது இறை பணியாகும். நீங்கள் கல்லுப்புத்தி உடையவர்களைத் தெய்வீகப்புத்தி உடைவர்களாக மாற்றுகின்றீர்கள். எங்கள் தர்மத்திற்கு உரியவர்கள் வருவார்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களில், தேவ தர்மத்திற்குரிய மலர்கள் தோன்றுவார்கள், ஆனால் ஏனையோர் வர மாட்டார்கள். அதற்கு முயற்சி தேவை. தந்தை ஆத்மாக்கள் அனைவரையும் தூய்மையாக்கி, பின்னர் அவர்களைத் திரும்பவும் வீட்டிற்கு அழைத்துச் செல்வார். ஆகையாலேயே பாபா சக்கரத்தின் படத்தில் சங்கமயுகத்தை விளங்கப்படுத்துமாறு கூறியுள்ளார்: இப்புறம் கலியுகமும் மறுபுறம் சத்தியயுகமும் உள்ளன. சத்தியயுகத்தில் தேவர்களும், கலியுகத்தில் அசுரர்களும் உள்ளனர். இதுவே அதி மங்களரமான சங்கமயுகம் என்று அழைக்கப்படுகின்றது. தந்தை உங்களை அதிமேன்மையான மனிதர்களாக ஆக்குகின்றார். நன்றாகக் கற்பவர்கள் சத்தியயுகத்திற்குச் செல்வார்கள். ஏனைய அனைவரும் முக்திதாமத்திற்குச் சென்று அங்கே இருப்பார்கள். பின்னர், அவர்கள் தங்களுக்குரிய நேரத்தில், கீழே இறங்குவார்கள். சக்கரத்தின் படம் மிகவும் நல்லது. குழந்தைகளாகிய உங்களுக்குச் சேவை செய்வதற்கும், ஏழைகளை ஈடேற்றி, அவர்களை உலக அதிபதிகள் ஆக்குகின்ற அத்தகைய சேவையைச் செய்வதற்கும் உற்சாகம் இருக்க வேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களால் ஸ்ரீ இலக்ஷ்மியாகவும் ஸ்ரீ நாராயணனாகவும் ஆக முடியுமா என்று நீங்கள் உங்களையே சோதித்து பாருங்கள். உங்களுக்குள் எந்த விகாரமாயினும் உள்ளதா? நீங்கள் சுவாலையை வட்டமிடும் விட்டிற்பூச்சியா அல்லது உங்களைச் சுவாலையில் அர்ப்பணிக்கும் விட்டிற்பூச்சியா? தந்தையின் கௌரவம் இழக்கப்படும் வகையில் உங்கள் பண்புகள் இல்லைத்தானே என்பதைச் சோதித்துப் பாருங்கள்.

2. எல்லையற்ற சந்தோஷத்தில் நிலைத்திருப்பதற்கு, அதிகாலையில் பெருமளவு அன்புடன் தந்தையை நினைவுசெய்வதுடன், நன்றாகப் படியுங்கள். கடவுளே உங்களுக்குக் கற்பித்து உங்களை அதிமேன்மையான மனிதர்கள் ஆக்குகின்றார். நீங்கள் சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள் என்ற போதையைப் பேணுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் அனுபவ ரூபமாகி, சகல நற்குணங்கள் என்ற உங்களின் அனுபவத்தால் தந்தையை வெளிப்படுத்துவீர்களாக.

நீங்கள் தந்தையைப் பற்றிப் பாடுகின்ற நற்குணங்கள் எல்லாவற்றிலும் அனுபவசாலி ஆகுங்கள். தந்தை ஆனந்தக் கடலாக இருப்பதைப் போல், ஆனந்தக் கடலின் அலைகளில் பயணம் செய்யுங்கள். உங்களுடன் தொடர்பில் வருகின்ற எவருக்கும் ஆனந்தம், அன்பு, சந்தோஷம், சகல நற்குணங்களின் அனுபவத்தை வழங்குங்கள். இந்த முறையில் சகல நற்குணங்களினதும் சொரூபம் ஆகுங்கள். தந்தையின் ரூபம் உங்களின் ஊடாக வெளிப்படுத்தப்படும். ஏனென்றால், மகாத்மாக்களான உங்களால் மட்டுமே, உங்களின் அனுபவ ரூபங்களாலேயே பரமாத்மாவை வெளிப்படுத்த முடியும்.

சுலோகம்:
காரணத்தைத் தீர்வுகளாக மாற்றி, புண்ணியமற்ற விடயங்களை புண்ணியமான விடயங்களாக ஏற்றுக் கொள்ளுங்கள்.

அவ்யக்த சமிக்கை: ஆன்மீக இராஜரீகம் மற்றும் தூய்மையின் ஆளுமையைக் கடைப்பிடியுங்கள்.

பிராமணர்களின் வாழ்க்கைகளும் வாழ்க்கைத் தானமும் தூய்மையே ஆகும். ஆதியான, அநாதியான ரூபமே தூய்மையாகும். நீங்கள் ஆதியாக ஒரு தூய்மையான, அநாதியான ஆத்மா என்ற விழிப்புணர்வைக் கொண்டிருக்கும்போது, அந்த விழிப்புணர்வு என்றால் உங்களிடமும் தூய்மை சக்தி உள்ளது என்றே அர்த்தம். நினைவின் சொரூபங்களாகவும் சக்தி சொரூபங்களாகவும் உள்ள ஆத்மாக்கள், தூய்மையின் ஆதி சம்ஸ்காரங்களைக் கொண்ட ஆத்மாக்கள் ஆவார்கள். ஆகவே, உங்களின் ஆதி சம்ஸ்காரங்களை வெளிப்படச் செய்து, தூய்மையின் ஆளுமையைக் கிரகியுங்கள்.