08.05.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே நீங்கள் இப்பொழுது சூத்திர குலத்தில் இருந்து விலகிப் பிராமண குலத்திற்குள் வந்து விட்டீர்கள். பிரம்மாவின் வாயின் மூலமாகவே தந்தை உங்களைத் தத்தெடுத்துள்ளார். எனவே இந்தச் சந்தோஷத்தைப் பேணுங்கள்.

கேள்வி:
எந்த ஆழமான இரகசியத்தைப் பிராமண குலக் குழந்தைகளாகிய உங்களால் மாத்திரமே புரிந்து கொள்ள முடியும்?

பதில்:
அந்த அசரீரியான சிவபாபாவே உங்களுடைய தந்தையும் இந்த பிரம்மாவே உங்களுடைய தாயும் ஆவார். எவ்வாறு அசரீரயான கடவுளே உங்கள் தாயும் தந்தையும் சகோதரரும் நண்பனும் ஆவார் என்ற இந்த ஆழமான மறைமுகமான இரகசியத்தைப் பிராமண குலக் குழந்தைகளாகிய உங்களால் மாத்திரமே புரிந்து கொள்ள முடியும். இதிலும் தேவ குலத்தில் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுபவர்களாலேயே இந்த இரகசியத்தை மிகச் சரியாகப் புரிந்து கொள்ள முடியும்.

ஓம் சாந்தி.
இங்கே அமர்ந்துள்ள குழந்தைகளான நீங்கள் உங்களின் பாப்தாதா வந்துவிட்டார் என்பதைப் புரிந்து கொள்கிறீர்கள். தந்தை தாதாவுடன் ஒன்றாக இணைந்துள்ளார். அதனாலேயே பாப்தாதா வந்துவிட்டார் எனக் கூறப்படுகிறது. அவர் ஓர் ஆசிரியரும் ஆவார். தாதா இல்லாமல் பாபா உங்களுக்கு எதனையும் கூற மாட்டார். இது ஒரு புதிய விடயம் ஆதலால் உங்கள் புத்திகள் இதிலேயே வேலை செய்ய வேண்டும். அறியாமை மார்க்கத்தில் அவர்கள் ஒருவரையே நினைவு செய்கின்றார்கள். தங்களுடைய குரு இன்ன இடத்தில் இருக்கிறார் என அவர்கள் கூறுகிறார்கள். அவர்களுக்கு அவரது சரீரத்தின் பெயரைத் தெரியும். ‘எங்கள் தந்தை, தாய் இன்ன இடத்தில் இருக்கிறார்கள்’ என அவர்கள் கூறுகிறார்கள். அவர்களுக்கு பெயர், ரூபம் போன்றனவும் உள்ளன. பின்னர் மக்கள் இதைச் சுருக்கமாக எழுதினார்கள். ஆனால் அவர்கள் எழுதியவை அனைத்துமே பிழையானவை. 'நீங்களே தாயும் தந்தையும்" என நினைவு கூரப்பட்டாலும் அது அவர் ஒருவருக்கே பாடப்பட்டது. அது பிரம்மாவிற்குக் கூடப் பாடப்படவில்லை. அவருடைய பெயரோ அல்லது அவருடைய ரூபமோ அவர்களின் புத்திகளில் புகுவதில்லை. விஷ்ணு அல்லது சங்கரின் பெயர், ரூபங்களும் அவ்வாறே புகுவதில்லை. அவர்கள் பாடுகிறார்கள்: ‘தாயும் தந்தையும் நீங்களே, உங்கள் குழந்தைகள் நாங்களே’. அப்படியிருந்தும் அவர்களது புத்திகள் மேல் நோக்கியே செல்கின்றன. அவர்களால் அந்நேரத்தில் ஸ்ரீகிருஷ்ணரை நினைவு செய்ய முடிவதில்லை. அவர்கள் அசரீரியான ஒருவரை மாத்திரமே இன்னமும் நினைவு செய்கிறார்கள். அவருடைய புகழும் இருக்கிறது. தந்தை விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் இங்கே அமர்ந்திருக்கும் போது உங்களுடைய புத்தியை லௌகீக உறவுகளில் இருந்து அகற்றி விட்டு இவ்வுலகிற்கு அப்பாலே இருக்கின்ற தந்தையை நினைவு செய்யுங்கள். இந்நேரத்தில் அவர் உங்கள் முன் நேரடியாவே இருக்கிறார். பக்தி மார்க்கத்தில் மக்கள் அவரை நோக்கிப் பாடும் போது அவர்கள் தங்களுடைய கண்களை மேலே உயர்த்தி 'தாயும் தந்தையும் நீங்களே" எனப் பாடுகிறார்கள். அவர்கள் அவரை நினைவு செய்து 'ஓ கடவுளே!" எனக் கூறுகிறார்கள். அவர்கள் 'கடவுளே" எனக் கூறும்பொழுது அவர்கள் சிவலிங்கத்தை நினைவு செய்யவில்லை. அவர்கள் ஒரு கிளியைப் போல் பாடுகிறார்கள். இதை நீங்கள் இலக்ஷ்மி நாராயணனுக்குமே கூற முடியாது. அவர்கள் சக்கரவர்த்தினியும் சக்கரவர்த்தியும் ஆவார்கள். அவர்களுடைய குழந்தைகள் மாத்திரமே அவர்களைத் தாயும் தந்தையும் என அழைக்கலாம். அவர்களின் குழந்தைகள் அவர்களைச் 'சதோதரர்" என்றெல்லாம் அழைக்க முடியாது. பக்தர்கள் தூய்மையாக்குபவரை நினைவு செய்கிறார்கள். ஆனால் அவரே சிவலிங்கமாக இருப்பார் என்பது அவர்களுடைய புத்திகளில் புகவில்லை. அவர்கள் பாடுகிறார்கள்: ஓ கடவுளே! ‘ஓ கடவுளே’ எனக் கூறியது யார்? யாருக்கு? அவர்களுக்கு எதுவுமே தெரியாது. தாமே கடவுளை அழைக்கும் ஆத்மாக்கள் என்ற ஞானம் அவர்களுக்கு இருந்திருந்தால் கடவுள் அசரீரியானவர் என்பதை அவர்கள் உணர்வார்கள். அவருடைய வடிவம் லிங்க வடிவானது. எவருமே தந்தையை மிகச்சரியாக நினைவு செய்வதில்லை. அவரிடம் இருந்து என்ன பேறுகளைப் பெறலாம் என்பதையோ அவற்றை எப்பொழுது பெறலாம் என்பதையோ அவர்கள் அறிந்திருக்கவில்லை. நீங்களும் இதை அறிந்திருக்கவில்லை. நீங்கள் இப்பொழுது தந்தைக்கே சொந்தமானவர்கள். பிரம்மா மூலம் சிவபாபா உங்களைத் தன்னுடைய குழந்தைகளாக ஆக்கியுள்ளார் என்பதை நீங்கள் அறிவீர்கள். இவர் தாயான பிரம்மா ஆவார். சிவபாபா உங்களைத் தாய் பிரம்மா மூலம் தத்தெடுக்கிறார். இந்நேரத்தில் நீங்கள் சிவபாபாவின் குழந்தைகள் என்பதை மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டீர்கள். பின் சரீர ரூபத்தில் நீங்கள் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள். பிரஜாபிதா மூலமாகவே மனித உலகம் உருவாக்கப்பட்டது. புதிதாக உலகம் ஒன்று உருவாக்கப்பட்டது என்பதல்ல, இல்லை. இந்நேரத்திலேயே அவர் வந்து உங்களைத் தத்தெடுக்கின்றார். நீங்கள் அவரைத் தாயும் தந்தையும் என அழைக்கிறீர்கள். எனவே சிவனே தந்தையும் பிரம்மாவே தாயும் ஆவார். அவர்கள் தாயும் தந்தையும் என்று அழைக்கப்படுகிறார்கள். தந்தை உங்களுக்கு பிரம்மா மூலமாகக் கூறுகிறார்: ஆத்மாக்களாகிய நீங்கள் என்னுடைய குழந்தைகள். அவர் இங்கே அமர்ந்திருந்து உங்களுக்கு ஆத்மா என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ள வைக்கிறார். ஆத்மா ஒரு நட்சத்திரத்தைப் போல் ஒவ்வொருவரின் நெற்றியின் மையத்திலும் வசிக்கின்றார் என்று அவர்கள் கூறுகிறார்கள். வேறு எதுவும் அவர்களுக்குத் தெரியாது. ஓர் ஆத்மா 84 பிறவிகளை எடுக்கின்றார். ஓர் ஆத்மாவே சரீரத்தின் மூலம் ஒரு பாகத்தை நடிக்கிறார் என அவர்களால் கூறமுடியாது. ஓர் ஆத்மா தன்னுடைய சரீரத்தை விட்டுப் பிரிந்ததும் அவருடைய பெயர், ரூபம், இடம், காலம், அவருடைய குடும்பம் முழுவதுமே மாறுகின்றன. எவரேனும் ஒருவரைத் தத்தெடுக்கும் போது அவருடைய குடும்பம் முழுவதுமே மாறுகின்றது. அவர் தன்னைப் பெற்றெடுத்த பெற்றோரை அறிவார். பின்னர் தன்னைத் தத்தெடுத்தவரின் குடும்பத்திற்கே அவர் உரியவர் ஆகின்றார். நீங்கள் சூத்திர குலத்தில் இருந்து விலகி இங்கே பிராமண குலத்திற்குள்ளே வந்துள்ளீர்கள். நீங்கள் பிரம்மாவின் சரீரத்தின் மூலமாகவே தத்து எடுக்கப்பட்டுள்ளீர்கள். நீங்கள் பிராமண குலத்தினுள் வந்துள்ளீர்கள். இவ்விடயங்களைச் சமயநூலிலே எழுத முடியாது. அவற்றை விளங்கப்படுத்தவே முடியும். எழுதி இருப்பதன் மூலம் எதையும் எவராலுமே புரிந்து கொள்ள முடியாது. இப்போது நீங்கள் பரமாத்மாவாகிய பரமதந்தையின் குழந்தைகள் ஆகிவிட்டீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். இந்த ஒருவரே தாய் ஆவார். பிரம்மாவை மாத்திரமே பிரஜாபிதா என்று அழைக்கலாம். நான் இவர் மூலமாகவே குழந்தைகளாகிய உங்களைத் தத்தெடுக்கிறேன். இவை அனைத்தும் ஆழ்ந்த விடயங்கள் ஆகும்! நேரடியாகவே இவற்றை விளங்கப்படுத்தாது விட்டால் இவ்விடயங்களை எவராலுமே புரிந்து கொள்ள முடியாது. இந்தப் பிராமண குலத்திற்கு சொந்தமானவர்களாலேயே இவ்விடயங்களைப் புரிந்து கொள்ள முடியும். அவர்களே தேவ குலத்தில் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவார்கள். இவ்விடயங்கள் புதியவர்களின் புத்தியில் இருக்க மாட்டாது. இந்த விடயங்கள் அவர்களுடைய புத்திகளிலே இருப்பதும் இல்லை, அவர்களால் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்தவும் முடியாது. உங்களிடையேயும் நீங்கள் எடுக்கின்ற முயற்சிக்கு ஏற்ப வரிசைக்கிரமாகவே அது உங்களுடைய புத்திகளில் இருக்கும். நீங்களே தாயும் தந்தையும் என்று நினைவு கூரப்படுகிறது. சிவபாபா நினைவு கூரப்படுகிறார். பின்னர் 'நீங்களே தாயும் தந்தையும்" என்றும் கூறப்படுகின்றது. தந்தை ஒருவர் எவ்வாறு தாயும் தந்தையுமாக இருக்க முடியும்? இவ்விடயங்களை எவரலுமே விளங்கப்படுத்த முடியாது. வியாசர் சமயநூல்களில் எழுதிய எல்லாவற்றையும் மக்கள் மனப்பாடம் செய்கிறார்கள். அவ்வாறே யாரோ ஒருவர் உங்களுக்கு இந்த விடயங்கள் அனைத்தையும் கூறியுள்ளார், நீங்கள் அவற்றை மனப்பாடம் செய்துள்ளீர்கள் என அவர்கள் கூறுகிறார்கள். புதியவர்களுக்கு இதை விளங்கிக் கொள்வது மிகவும் சிரமமானது. இங்கே இருப்பவர்களாலேயும் கூட தாங்கள் ஆத்மாக்கள் என்பதையும் பரமாத்மாவாகிய பரமதந்தையே தங்களுடைய தந்;தை என்பதையும் போதுமான அளவிற்கு விளங்கப்படுத்த முடியாமல் இருக்கின்றது. எல்லையற்ற தந்தையால் மாத்திரமே உங்களுக்கு ஓர் எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுக்க முடியும். அவர் உங்களுக்கு ஆஸ்தியைக் கொடுத்;துள்ளார். பின்னர் மறுபிறவி எடுத்தவண்ணம் நீங்கள் இப்பொழுது 84 பிறவிகளையும் நிறைவு செய்துள்ளீர்கள். எனவே மீண்டும் ஒருமுறை உங்களது ஆஸ்தியை உங்களுக்குக் கொடுப்பதற்காகவே தந்தை வந்துள்ளார். இதை மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவது மிகவும் சுலபமானது! யாரை நீங்கள் தாயும் தந்தையும் என அழைப்பது என்பது சிந்திப்பதற்கான ஒரு விடயமாகும்! அவர் பிரம்மா மூலம் உங்களைத் தத்தெடுக்கிறார். எனவே தாய் என்பவள் நிச்சயமாகத் தேவை. அதனால் நாடகத் திட்டத்திற்கு ஏற்ப ஒரு மிக விசேடமான புதல்விக்கு உலகத்தாய் ஜெகதாம்பா என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. ஓர் ஆணை, உலகத் தாய் என்று அழைக்க முடியாது. அவரை உலகத் தந்தை ஜெகத்பிதா என்றே அழைக்கலாம். அவருடைய பிரஜாபிதா என்ற பெயர் மிகவும் பிரசித்தி பெற்றது. நல்லது. எனவே பிரஜா மாதா (மக்களின் தாய்) எங்கே? இதனாலேயே தாயை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆதிதேவரும் உள்ளார். பின்னர் ஆதி தேவியும் நியமிக்கப்பட்டுள்ளார். ஒரேயொரு ஜெகதாம்பாவே உள்ளார், அவருக்குப் புகழ் உள்ளது. ஜெகதாம்பாவிற்காகப் பல ஒன்றுகூடல்கள் நடக்கின்றன. எவ்வாறாயினும் அவருடைய தொழிலைப் பற்றி எவருக்குமே தெரியாது. கல்கத்தாவிலே காளிக்கு ஓர் ஆலயம் உள்ளது. பம்பாயில் ஜெகதாம்பாளிற்கு ஓர் ஆலயம் உள்ளது. அவர்களுடைய முகங்கள் வெவ்வேறானவை. ஜெகதாம்பாள் யார்? எவருக்குமே இது தெரியாது. பெண் தெய்வம் என்றே அவரை அழைப்பார்கள். ஜெகதாம்பாவைப் பெண் தெய்வம் என்று அழைக்க முடியாது, அவர் ஒரு பிராமணர். அவர் இந்த ஞானத்தின் இளவரசி ஆவார். அவர் தந்தையிடம் இருந்தே இந்த ஞானத்தைப் பெற்றார். நீங்கள் அனைவரும் ஜெகதாம்பாவின் குழந்தைகளே. நீங்கள் இந்த ஞானத்தைச் செவிமடுத்து மற்றவர்களுக்கும் கூறுகிறீர்கள். இதுவே உங்களுடைய தொழில் ஆகும். கடவுளே உங்களுக்குக் கற்பிக்கிறார். உங்களுக்குக் கற்பிப்பது மனிதரேயல்ல. இந்த பிரம்மாவும் ஒரு மனிதரே. மனிதர்களால் எவரையுமே தூய்மையாக்க முடியாது. மனிதர்களுடைய புத்தி மந்தமாகி விட்டதால் அவர்களால் எதையுமே புரிந்து கொள்ள முடிவதில்லை! தந்தை ஒருவர் மாத்திரமே தூய்மையாக்குபவர். தூய்மை அற்றவர்களைத் தூய்மை ஆக்குவதற்கே அவர் வருகிறார். இந்த முழு உலகும் தமோபிரதானாகவே உள்ளது. யாவரும் தூய்மை அற்றவர்களே. புதிய உலகம் தூய்மையாகவும் இந்தப் பழைய உலகம் தூய்மை அற்றதாகவும் உள்ளது. இந்தப் பழைய உலகிலே நரகவாசிகளும் புதிய உலகிலே சுவர்க்கவாசிகளும் உள்ளார்கள். சத்திய யுகத்திலே பாரதவாசிகளான தேவர்களே உள்ளார்கள் எனப் புத்தி கூறுகிறது. அங்கே வேறு எவருமே இருக்க மாட்டார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இந்த ஞானத்தைப் பெறுகிறீர்கள். புதிய உலகிலே சூரிய வம்சத் தேவர்களும் அதன் பின்னர் சந்திர வம்சத்தவர்களும் இருந்தார்கள். எனவே சூரிய வம்சம் கடந்தகாலம் ஆகுகிறது. பின்னர் சந்திர வம்சமும் அதற்குப் பின்னர் வைசிய வம்சமும் இருந்தன. உண்மையில் இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமே இருந்தது. நல்லது, அவர்களுக்கு முன் என்ன இருந்தது? எவருமே இதைப் புரிந்து கொள்ளவில்லை. குழந்தைகளாகிய உங்களுக்குக் கல்பத்தின் இரகசியங்களைத் தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். துவாபர யுகத்திலே வைசிய வம்சம் இருந்தது. கலியுகத்திலே சூத்திர வம்சம் இருந்தது. இப்பொழுது நீங்கள் பிராமணர்கள் ஆகிவிட்டீர்கள் என்பதைப் புரிந்து கொள்கிறீர்கள். தந்தை உங்களைத் தனக்கே சொந்தம் ஆக்கியுள்ளார். அதாவது அவர் உங்களைச் சூத்திர சமயத்தில் இருந்து தேவ தர்மத்திற்கு மாற்றியுள்ளார். இந்த நேரத்தில் அந்த சூரிய, சந்திர வம்சங்கள் இல்லை. இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமோ அல்லது இராமரின் இராச்சியமோ இல்லை. இப்பொழுது இது கலியுக முடிவாகும். இந்தக் கலியுக முடிவின் பின்னர் நிச்சயமாகச் சத்தியயுகமே இருக்கும். இந்தப் பழைய தூய்மையற்ற உலகமே கலியுகத்தில் இருக்கும். சகலரும் பெரும் துன்பத்தில் இருக்கிறார்கள். இதனாலேயே அவர்கள் தேவர்களின் புகழைப்பாடி அவர்களின் சிலைகளை வீழ்ந்து வணங்குகிறார்கள். நல்லது, இலக்ஷ்மி நாராயணனுக்கு அவர்களுடைய இராச்சியத்தைக் கொடுத்தது யார்? இதை எங்களுக்குக் கூறக்கூடியவர் எவராவது உள்ளாரா? இது எவருடைய எண்ணத்திலும் இல்லை. ஏனெனில் கலியுகம் இன்னமும் அதன் குழந்தைப் பருவத்திலேயே இருக்கிறதென அவர்களுடைய புத்திகள் கூறுகின்றன. அவர்கள் இன்னமும் 40000 வருடங்கள் இருக்கின்றது என எண்ணுகிறார்கள். எனவே இவ்வாறான எண்ணங்கள் அவர்களுடைய புத்திகளில் புகுவதில்லை. இப்பொழுது உங்களுக்கு இவ்வாறான எண்ணங்கள் இருக்கின்றன. குழந்தைகள் சிலர் தங்களால் நினைவில் நிலைத்திருக்க முடியவில்லை எனக் கூறுகிறார்கள். ஏன்? ஏனென்றால் அவர்கள் அதிகாலையில் விழித்தெழுந்து நினைவில் அமர்ந்திருந்து இந்த ஞானத்தைக் கிரகிப்பதில்லை. அவர்கள் அதைப் புரிந்து கொண்டாலும் எவருக்கும் விளங்கப்படுத்த முடியாமல் இருக்கிறார்கள். இது நிச்சயமாகவே நிகழும். அனைவராலும் ஒரேமாதிரி விவேகமானவர்களாக இருக்க முடியாது. விவேகமானவர்களும் விவேகம் அற்றவர்களும் இருக்கவே வேண்டும். மிகவும் விவேகமானவர்கள் அங்கே சென்று அரசன் அரசிகள் ஆகுவார்கள். எந்தளவிற்கு ஒருவர் தானும் புரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் விளங்கப்படுத்துகிறாரோ அந்தளவிற்கு அவரின் பெயர் போற்றப்படும். அவர்கள் ஒரு கண்காட்சியை வைக்கும் பொழுது இன்னார் இன்னாரை அனுப்பி வைக்கும்படி பாபாவிற்கு எழுதுவார்கள். உங்களால் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்த முடியாதா? ‘பாபா, அவருக்கு அதிகப் பயிற்சி உள்ளது! நாங்கள் இன்னமும் சிறிதளவில் பலவீனமாகவே இருக்கின்றோம்!’ பாபாவே கூறுகின்றார்: நீங்கள் ஓர் அழைப்பிதழைப் பெறும் போதெல்லாம் பாபாவிற்கு எழுதுங்கள். அப்பொழுது யார் இருக்கிறார்கள், யாரை அனுப்ப முடியும்? என பாபா பார்ப்பார். அதே இடத்திற்கு சந்நியாசிகள் எவராவது அழைக்கப்பட்டிருக்கிறார்களா? அப்படியானால் மிகச் சிறந்த பிரம்மாகுமாரியை அங்கே அனுப்ப வேண்டும். நல்லது. குமார்க்கா, மனோகர், கங்கா இவர்களில் எவரையேனும் ஒருவரை நீங்கள் அனுப்பலாம். குழந்தைகள் பலர் உள்ளனர். ஜெகதீசை அனுப்புங்கள்! ரமேஷை அனுப்புங்கள்! நீதிபதிகளும் நியாயாதிபதிகளும் இருப்பதைப் போல இவர்களும் ஒருவரை விட ஒருவர் திறமைசாலியாக இருப்பதையும் உங்களால் புரிந்து கொள்ள முடியும். அவர்கள் அனைவரும் ஒருவரைவிட மற்றையவர் அதி திறமைசாலிகளாக இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் மற்றவரை விடத் திறமைசாலிகள் என்பதை அரசாங்கமும் அறிந்துள்ளது. இதனாலேயே ஒரு வழக்கு, ஒரு நீதிமன்றத்தில் இருந்து இன்னொன்றுக்கு அதைவிட உயர்வான நீதிமன்றத்திற்குப் போகின்றது. பின்னர் அந்த வழக்கு, உயர் நீதிமன்றத்தை அடையும்போது அதைவிட மேலே இருக்கும் நீதிமன்றத்திற்குச் செல்கிறது. அங்கே உள்ளவர்களும் சரியான தீர்ப்பை வழங்கா விட்டால் அதை விட உயர்வான நீதிமன்றத்திற்கு அந்த வழக்கு எடுத்துச் செல்லப்படும்: இவர் மீது கருணை காட்டுங்கள்! இவ்வாறான விடயங்கள் இங்கேதான் நடக்கிறது. அவை சத்திய திரேதாயுகங்களில் நிகழ்வதில்லை. துவாபரயுகத்தில் இருந்து அரசன், அரசியின் இராச்சியமே இருக்கும். அங்கே சக்கரவர்த்தி சக்கரவர்த்தினி வழக்குகளைக் கவனிப்பார்கள். அங்கே ஒருசில வழக்குகளே இருக்கும். இப்பொழுது சகலரும் தூய்மையற்றும் தமோபிரதானாகவும் உள்ளார்கள். ஒரு வழக்கைச் சக்கரவர்த்தியிடம் எடுத்துச் சென்றால் அவர் சிறியதொரு தண்டனையையே கொடுப்பார். செய்த தவறு தீவிரமாக இருந்தால் அவர் கடுமையான தண்டனையைப் பெறுவார். இங்கே அனேக நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் உள்ளார்கள். செயல்களிலே பெருமளவு வித்தியாசமும் உள்ளது. சத்திய யுகத்திலே என்ன நிகழ்கிறது என எவருக்குமே தெரியாது. தந்தை இப்பொழுது உங்களுக்கு விளங்கப்படுத்தி உள்ளார்: இலக்ஷ்மி நாராயணனைத் தெரியுமா என யாரையாவது கேளுங்கள். உதாரணமாக பிர்லா இலக்ஷ்மி நாரயணனுக்குப் பல ஆலயங்களைக் கட்டியுள்ளார். புத்திசாலியான ஒரு குழந்தை கடிதம் ஒன்றை அவருக்கு எழுத வேண்டும்: ‘நீங்கள் இலக்ஷ்மிக்கும் நாராயணனுக்கும் பல ஆலயங்களைக் கட்டியுள்ளீர்கள். எவ்வாறாயினும் அவர்கள் தங்களது இராச்சியத்தை எவ்வாறு பெற்றார்கள்? ஏனெனில் சத்திய யுகத்திற்கு முன்னர் கலியுகமே இருந்தது’. கலியுகத்தில் எதுவுமே இல்லை. தேவர்கள் எவருடனும் யுத்தம் செய்திருக்க மாட்டார்கள். எவராலும் யுத்தம் செய்து உலகின் அதிபதியாக ஆக முடியாது. இலக்ஷ்மி நாராயணனுடைய படங்களே உலகின் அதிபதிகளாக இருந்தவர்களது படங்களே ஆகும். இது இப்பொழுது கலியுகமாகும். இங்கே மக்கள் ஆயுதங்களால் சண்டை இடுகிறார்கள். கிறிஸ்தவ சமயத்தவர்கள் ஒன்று சேர்ந்து ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தினார்களே ஆயின் அவர்களால் உலகின் அதிபதிகள் ஆக முடியும் எனத் தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். எவ்வாறாயினும் இலக்ஷ்மியும் நாராயணனுமே உலகின் அதிபதிகள் ஆகினார்கள். அவர்கள் ஒன்று சேர்வார்களாயின் உலகின் அதிபதிகள் ஆகுவார்கள் எனப் புத்தி கூறுகிறது. ஆனால் அவர்கள் எவராலும் சத்தியயுகத்தின் ஓர் அரசனாகவோ அரசியாகவோ ஆக முடியாது. நாடகம் இவ்வாறுதான் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பொழுது நாங்கள் மீண்டும் ஒருமுறை எங்களின் சுவர்க்க ஆஸ்தியை யோக சக்தியினால் பெறுகின்றோம். ஒரு கல்பத்தின் முன்னரும் சங்கமயுகத்திலே அவர்கள் எவ்வாறு தங்கள் அந்தஸ்தைத் தந்தையிடம் இருந்து பெற்றார்கள் என்பதை அவர்களுக்கு நீங்கள் விளங்கப்படுத்த முடியும். நாங்கள் 84 பிறவிகளையும் நிறைவு செய்து விட்டோம். எனவே மீண்டும் ஒருமுறை எங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றோம். நல்லது.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய் தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இந்த ஞானத்தைக் கிரகித்து மற்றவர்களுக்கும் கிரகிக்கத் தூண்ட வேண்டுமாயின் அதிகாலையில் விழித்தெழுந்து தந்தையை நினைவு செய்ய வேண்டும். நீங்கள் புரிந்து கொண்டவற்றை மற்றவர்களுக்கும் விளக்குவதைப் பயிற்சி செய்யுங்கள்.

2. உங்கள் புத்தியின் யோகத்தை உங்கள் லௌகீக உறவினர்களிடம் இருந்து அகற்றி இவ்வுலகிற்கு அப்பாலே இருக்கின்ற தந்தை ஒருவரை நினைவு செய்யுங்கள். தந்தையிடம் இருந்து நீங்கள் பெறுகின்ற இந்த ஞானத்தைச் செவிமடுத்து அதை மற்றவர்களுக்கும் கூறுவதே உங்கள் தொழிலாகும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஏற்றுக் கொள்ளும் சக்தியைக் கொண்டவராகி ஒற்றுமையான சூழலை உருவாக்குவதில் ஓர் உதாரணம் ஆகுவீர்களாக.

சமமாக இருக்கும் மணிகள், ஒரேயொருவரின் மீது அன்பு கொண்டிருப்பதுடன் நிலையான, ஸ்திரமான ஸ்திதியைக் கொண்டிருப்பவர்கள், ஒரேயொருவரின் வழிகாட்டல்களைப் பின்பற்றுபவர்கள், தங்களுக்கு இடையே தமது எண்ணங்களால் ஒற்றுமையாக இருப்பவர்கள். அவர்களே மாலையாகக் கோர்க்கப்படக் கூடியவர்கள். எவ்வாறாயினும் ஒரு வழிகாட்டலைப் பின்பற்றும் சூழல், ஏற்றுக் கொள்ளும் சக்தியை நீங்கள் கொண்டிருக்கும் போது மட்டுமே உருவாக்கப்படும். எந்தவொரு சூழ்நிலையிலும் ஏதாவது அபிப்பிராய பேதம் ஏற்பட்டால் நீங்கள் அந்த வேறுபாட்டை ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்போது மட்டுமே நீங்கள் அந்த ஒற்றுமையுடன் நெருக்கமாக வருவீர்கள். அத்துடன் அனைவருக்கும் உதாரணம் ஆகுவீர்கள்.

சுலோகம்:
உங்களின் ஒவ்வோர் எண்ணத்திலும் வார்த்தையிலும் செயலிலும் ஆன்மீகத்தைக் கிரகியுங்கள், அப்போதுதான் நீங்கள் செய்யும் சேவை பிரமாதமாக இருக்கும்.

அவ்யக்த சமிக்ஞை: சதா ஆட்ட, அசைக்க முடியாத மற்றும் நிலையான ஸ்திதியை அனுபவியுங்கள்.

நீங்கள் ஏதாவது வேதனையான காட்சியைக் காணும்போது ‘எதுவும் புதியதல்ல’ என்பதை உணருங்கள். ‘எதுவும் புதியதல்ல’ என்ற பாடத்தை உறுதியாக்கிக் கொண்டவர்கள், ஒருபோதும் பயப்பட மாட்டார்கள். ‘என்ன நடந்தது? எப்படி அது நடந்தது? இது நடந்தது....’ செய்திகளைக் கேட்கும்போதும் பார்க்கும்போதும் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட நாடகம் முன்னால் விரிவதைப் பார்க்கும்போது சக்திசாலியாக இருந்து மற்றவர்களுக்குத் தொடர்ந்து சக்தியை வழங்குங்கள். உலக மக்கள் பயப்படுவார்கள். ஆனால் நீங்கள் அந்த ஆத்மாக்களைச் சக்தியால் நிரப்புங்கள். உங்களுடன் தொடர்பில் வருகின்ற அனைவருக்கும் அமைதி மற்றும் சக்திகளின் தானத்தைத் தொடர்ந்து வழங்குங்கள்.