08.07.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, இந்த ஒன்றுகூடலில் அமர்ந்திருக்கும் பொழுது, புறநோக்கு உடையவர் ஆகாதீர்கள். தந்தையின் நினைவில் நிலைத்திருங்கள். உங்கள் நண்பர்கள், உறவினர்கள், வியாபாரம் போன்றவற்றை நினைவு செய்வதால் நீங்கள் சூழலில் தடைகளை உருவாக்குகின்றீர்கள்.
கேள்வி:
குழந்தைகளாகிய உங்களின் எந்த ஆன்மீக அப்பியாசத்தின் சிறப்பியல்பை மனிதர்களால் கொண்டிருக்க முடியாதுள்ளது?பதில்:
உங்கள் ஆன்மீக அப்பியாசம் புத்திக்கு உரியது. நீங்கள் காதலிகளாகி உங்கள் அன்பிற்கினியவரை நினைவு செய்வதே அதன் சிறப்பியல்பாகும். இது கீதையில் ‘மன்மனாபவ’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், மக்களுக்குத் தமது பரமாத்மாவான அன்பிற்கினியவரைத் தெரியாததால் அவர்களால் எவ்வாறு இந்த அப்பியாசத்தை மேற்கொள்ள முடியும்? எவ்வாறு பௌதீக அப்பியாசத்தைச் செய்வது என அவர்கள் ஒருவருக்கொருவர் கற்பிக்கின்றனர்.ஓம் சாந்தி.
இங்கே அமர்ந்திருக்கின்ற குழந்தைகள் (தியானத்தை வழிநடாத்துபவர்கள்) என்ன செய்கின்றார்கள் என்பதைக் குழந்தைகளான நீங்களும் புரிந்துகொள்வதுடன், தந்தையும் புரிந்து கொள்கின்றார். அவர்கள் நினைவு யாத்திரை என்ற அப்பியாசத்தை நடாத்துகின்றார்கள். எதனையும் வார்த்தைகளில் கூற வேண்டும் என்ற அவசியமில்லை. இது யாரை நினைவுசெய்தல் ஆகும்? பரமாத்மாவான பரமதந்தை சிவபாபாவை நினைவுசெய்தல் ஆகும். நாங்கள் நினைவு யாத்திரையில் இருக்கும் பொழுது, எந்தளவிற்கு அவரது நினைவில் நிலைத்திருக்கின்றோமோ, அதற்கேற்ப, எங்கள் பாவங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு, பாவச் செயல்களை வெற்றி கொண்டவர்கள் ஆகுவோம். இது ஆத்மாக்களுக்கான அப்பியாசம், சரீரங்களிற்கு உரியதல்ல. பாரதத்தில் மக்கள் கற்பிக்கின்ற, அப்பியாசங்கள் அனைத்தும் பௌதீகமானவை, ஆனால் இது ஆன்மீக அப்பியாசமாகும். குழந்தைகளாகிய உங்களைத் தவிர, வேறு எவருக்கும் இந்த ஆன்மீக அப்பியாசம் தெரியாது. இந்த ஆன்மீக அப்பியாசம் கீதையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடவுளின் வாசகங்கள் கடவுளின் குழந்தைகளின் வாசகங்களும் ஆகும். நீங்கள் இப்பொழுது கடவுளான சிவபாபாவின் குழந்தைகள் ஆகியுள்ளீர்கள். குழந்தைகளாகிய உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டல்: சதா என்னை மாத்திரமே நினைவு செய்யுங்கள்! தந்தை உங்களுக்கு அப்பியாசத்தைக் கற்பிக்கின்றார். குழந்தைகளாகிய நீங்களும் அதே அப்பியாசத்தையே கற்பிக்கின்றீர்கள். முன்னைய கல்பத்திலும் தந்தை கூறினார்: உங்கள் தந்தையான என்னை நினைவு செய்யுங்கள்! இதனை மீண்டும் மீண்டும் கூற வேண்டும் என்றில்லை, ஆனால் அவர் அதனைக் கூற வேண்டியுள்ளது. இங்கே அமர்ந்திருக்கும் பொழுது, உங்களில் எவரேனும் தொடர்ந்தும் உங்கள் நண்பர்கள், உறவினர்கள் அல்லது வியாபாரம் போன்றவற்றைத் தொடர்ந்தும் நினைவு செய்தால், நீங்கள் சூழலில் தடைகளை உருவாக்குகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: இங்கு நீங்கள் அமர்ந்திருக்கும் பொழுதும், வேலையில் ஈடுபடும் பொழுதும், நடந்தும் உலாவியும் திரியும் பொழுதும் ஒரு காதலியும் அன்பிற்கினியவரும் ஒருவரையொருவர் தொடர்ந்தும் நினைத்துக் கொண்டிருப்பதைப் போல், நினைவில் நிலைத்திருங்கள். அவர்களின் நினைவு பௌதீகமானது, உங்கள் நினைவு ஆன்மீகமானது. பக்தி மார்க்கத்திலும் ஆத்மாக்கள் பரமாத்மாவான பரமதந்தையான அன்பிற்கினியவரின் காதலிகளாகவே உள்ளனர், ஆனால் அவர்களுக்குத் தமது அன்பிற்கினியவரையோ அல்லது தாங்கள் ஆத்மாக்கள் என்பதோ தெரியாது. அன்பிற்கினியவரான தந்தை வந்துள்ளார். ஆத்மாக்கள் பக்தி மார்க்கத்தில் காதலிகள் ஆகினார்கள். இது ஆத்மாக்கள், பரமாத்மா சார்ந்த விடயமாகும். தந்தை தனிப்பட்ட முறையில் குழந்தைகளாகிய உங்களிடம் கூறுகின்றார்: காதலிகளான நீங்கள் அன்பிற்கினியவரான என்னை நினைவுசெய்து கூறுகின்றீர்கள்: பாபா, வாருங்கள்! வந்து, எங்களைத் துன்பத்தில் இருந்து அகற்றி, எங்களை மீண்டும் உங்களுடன் அமைதிதாமத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். இம் மரண உலகமான, துன்ப உலகம் இப்பொழுது அழிவடையய உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். “மரண உலகிற்கு மரணமும், அமரத்துவ உலகிற்கு வெற்றியும்” கிட்டும். நீங்கள் இப்பொழுது பிராமணக் குழந்தைகள் ஆகியுள்ளீர்கள், ஆனால் அது உங்கள் மத்தியிலும் உங்கள் முயற்சிகளுக்கேற்ப வரிசைக்கிரமமாகவே இருக்கும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது நரகவாசிகளில் இருந்து 21 பிறவிகளுக்குச் சுவர்க்கவாசிகளாக மாறுகின்றீர்கள் என்ற முழுமையான நம்பிக்கையைக் கொண்டிருக்க வேண்டும். ஒருவர் மரணிக்கும் பொழுது, அவர் சுவர்க்கவாசியாகி விட்டார் என மக்கள் கூறுகின்றார்கள், ஆனால் எவ்வளவு காலத்திற்கு அவர் சுவர்க்கவாசி ஆகியுள்ளார் என்பதை எவரும் அறிய மாட்டார்கள். நீங்கள் இப்பொழுது சுவர்க்கவாசி ஆகுவதற்கு முயற்சி செய்கின்றீர்கள். நீங்கள் இந்த நம்பிக்கையைக் கொண்டிருக்குமாறு உங்களைத் தூண்டுபவர் யார்? கீதையின் கடவுளே தூண்டுகின்றார். எவ்வாறாயினும், அவர் மாத்திரமே ஒரேயொரு அசரீரியானவர் ஆவார். அசரீரியான ஒரேயொருவரே அசரீரியானவர் என்று மக்களும் புரிந்து கொள்கின்றார்கள். எனவே, அவர் எவ்வாறு இங்கே வந்து எங்களுக்குக் கற்பிப்பார்? தந்தையை அறியாததால், நாடகத்திற்கு ஏற்ப, அவர்கள் தவறுதலாக ஸ்ரீகிருஷ்ணரின் பெயரை இட்டுள்ளார்கள். இந்த நேரத்தில், ஸ்ரீகிருஷ்ணருக்கும் சிவனுக்கும் இடையில் நெருங்கிய உறவுமுறை உள்ளது. சிவனின் பிறந்தநாள் சங்கமயுகத்தில் இடம்பெறுகின்றது. பின்னர், நாளை ஸ்ரீகிருஷ்ணரின் பிறந்தநாள் இருக்கும். சிவனின் பிறந்தநாள் இரவில் இடம்பெறுகின்றது. ஆனால் ஸ்ரீகிருஷ்ணரின் பிறந்தநாள் அதிகாலை விடியலிலும் இடம்பெறுகின்றது. சிவனின் இரவு முடிவடையும் பொழுது, ஸ்ரீகிருஷ்ணரின் பிறப்பு இடம்பெறுகின்றது. குழந்தைகளான உங்களால் மட்டுமே இவ்விடயங்களைப் புரிந்து கொள்ள முடியும். இந்த ஒன்றுகூடலில் அமர்ந்திருக்கின்ற எவருக்கும் புறநோக்குடையவர் ஆகுவதற்கான அனுமதி கிடையாது என்பது நியதியாகும். தந்தையின் நினைவில் நிலைத்திருங்கள். மக்கள் அழைக்கின்றார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! வந்து எங்களைத் தூய்மை ஆக்குங்கள்! எவ்வாறாயினும், நாடகத்திற்கு ஏற்ப, கற்புத்தி உடையவர்கள் எதனையும் சற்றும் புரிந்து கொள்வதில்லை! அவர்கள் புரிந்து கொள்வார்களாயின், பிறருக்கும் கூறுவார்கள். இது கலியுகத்தின் இறுதி என்பதையோ, தந்தை வரும்பொழுது ஆரம்பம் இருக்கும் என்பதையோ அவர்கள் புரிந்து கொள்வதில்லை. மக்கள் காரிருளில் இருக்கின்றார்கள். கலியுகத்தில் இன்னமும் 40000 ஆண்டுகள் உள்ளன என மக்கள் நம்புகின்றார்கள். எல்லைக்கு உட்பட்ட தந்தை ஒருபொழுதும் தூய்மையாக்குபவராக இருக்க முடியாது என்று எல்லையற்ற தந்தை விளங்கப்படுத்துகின்றார். பலருக்கும் “பாபு” என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. முதியவர்களும் “பாபு” என்றோ அல்லது “பிதாஜி” என்றோ அழைக்கப்படுகின்றார்கள். தூய்மையாக்குபவரும், ஞானக்கடலுமான ஒரேயொருவரே ஆன்மீக பிதாஸ்ரீ (தந்தை) ஆவார். குழந்தைகள் தூய்மை ஆகுவதற்கு இந்த ஞானம் தேவையாகும். தண்ணீரில் நீராடுவதன் மூலம் எவராலும் தூய்மையாக முடியாது. சிவபாபா உங்கள் முன்னிலையில் இச்சரீரத்தில் பிரவேசித்துள்ளார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் பிராமணர்களான உங்களுக்குப் பிரம்மாவினூடாக இராஜயோகம் கற்பிக்கின்றார். அவர்கள் கூறுகின்றார்கள்: அர்ஜுனனுடன் கடவுள் பேசுகின்றார். பிராமணர்களின் பெயரோ அல்லது சுவடோ இல்லை. பிரம்மாவினூடாக ஸ்தாபனை இடம்பெறுகின்றது எனவும், விஷ்ணுவினூடாகப் பராமரிப்பு இடம்பெறுகின்றது எனவும் நினைவு கூரப்பட்டுள்ளது. பிரம்மாவினூடாக மாத்திரமே ஸ்தாபனை நிகழும், விஷ்ணுவின் ஊடாகவோ, சங்கரரின் ஊடாகவோ அல்ல. இந்த நேரத்தில் குழந்தைகளாகிய நீங்கள் இந்த விளக்கத்தைப் பெறுகின்றீர்கள். தந்தை இங்கே வரவேண்டி உள்ளது. எந்த ஓர் ஆத்மாவினாலும் வீடு திரும்ப முடியாது. இங்கு வருகின்ற ஒவ்வொருவரும் சதோ, இரஜோ, தமோ ஸ்திதிகளைக் கடந்து செல்லவே வேண்டும். ஸ்ரீகிருஷ்ணர் முழு 84 பிறவிகளையும் எடுத்து, 5000 வருடங்கள் முழுவதும் பாகத்தை நடித்துள்ளார். ஆத்மா தாயின் கருப்பையில் இருக்கும் பொழுது, அதுவும் ஒரு பிறப்பாகவே கருதப்படுகின்றது. ஸ்ரீகிருஷ்ணரின் ஆத்மா கீழே வந்து தாயின் கருப்பையில் பிரவேசிக்கின்ற கணத்திலிருந்து 5000 வருடங்களில் 84 பிறவிகளுக்கான பாகங்களையும் அவர் நடிக்க வேண்டும். இவருக்குள் சிவன் அமர்ந்திருக்கும் பொழுதே நீங்கள் சிவனின் பிறந்ததினத்தைக் கொண்டாடுகின்றீர்கள். அதுபோன்றே ஸ்ரீகிருஷ்ணரின் ஆத்மா ஒரு கருப்பையில் பிரவேசிக்கும் பொழுது, அசைவு ஏற்படுகின்றது, அந்தக் கணத்திலிருந்து 5000 வருடங்களுக்கான கணக்கு ஆரம்பம் ஆகுகின்றது. அதில் ஏதும் வேறுபாடு இருந்தால், 5000 வருடங்களில் இருந்து அந்தளவு குறைவாக இருக்கும். இவ்விடயங்கள் மிகவும் சூட்சுமமானவையும், புரிந்து கொள்ளப்பட வேண்டியவையும் ஆகும். ஸ்ரீகிருஷ்ணரின் ஆத்மா மீண்டும் ஒருமுறை ஸ்ரீ கிருஷ்ணர் ஆகுவதற்காக மீண்டும் ஒருமுறை இந்த ஞானத்தை எடுக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்களும் கம்சனின் இந்த உலகிலிருந்து, கிருஷ்ணரின் அந்த உலகிற்குச் செல்கின்றீர்கள். தந்தை இங்கே அமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு இவ்விடயங்களை விளங்கப்படுத்துகின்றார். தந்தை கூறுகின்றார்: மாயை மிகவும் சக்திவாய்ந்தவள். அவள் மிகவும் சிறந்த மகாராத்திகளையும் தோற்கடிக்கின்றாள். இந்த ஞானத்தைப் பெறும் பொழுது, சிலவேளைகளில் தீய சகுனங்கள் உள்ளன. சிலர் இந்த ஞானத்தைச் செவிமடுக்கும் பொழுது வியப்படைந்து, எனக்கு உரியவர்களாகி, இந்த ஞானத்தைப் பேசுகின்றார்கள். ஓஹோ, மாயையே, அதன்பின்னர் அவர்கள் ஓடி விடுகின்றார்கள்! பின்னர் அவர்கள் வருமானத்தைச் சம்பாதிப்பதில் தீய சகுனங்கள்; ஏற்படுகின்றன. இராகு என்ற தீய சகுனத்தின் கிரகணங்கள் அனைவர் மீதும் உள்ளன. இப்பொழுது உங்கள் மீது வியாழ திசைகள் நிலவுகின்றன. பின்னர், முன்னேறிச் செல்லும்பொழுது, சிலர் இராகு சகுனத்தின் கிரகணத்தை அனுபவம் செய்கின்றார்கள். இதனாலேயே உலகிலுள்ள மகா அபாக்கியசாலிகளைக் காண வேண்டுமாயின், இங்கே அவர்களைக் காணலாம் என்று கூறப்படுகின்றது! ஆத்மாக்களாகிய நீங்கள் கூறுகின்றீர்கள்: நான் சதா சந்தோஷம் என்ற ஆஸ்தியைத் தந்தையிடம் இருந்து பெறுகின்றேன். பாபா, முன்னைய கல்பத்திலும் நான் உங்களிடம் இருந்து இந்த ஆஸ்தியைப் பெற்றேன். நீங்கள் தந்தையிடம் மீண்டும் ஒருமுறை வந்திருக்கின்றீர்கள். தந்தை விளங்கப்படுத்தி உள்ளார்: வெளியில் உள்ள உங்கள் நிலையங்களுக்கு இவ்விடயங்களைப் புரிந்து கொள்வதற்குப் பலரும் வருவார்கள். இங்கு இது இந்திர சபையாகும். சிவபாபாவே இந்திரன். அவர் உங்கள் மீது இந்த ஞானத்தைப் பொழிகின்றார். ஆகையால், தூய்மையற்ற எவரும் அத்தகையதோர் ஒன்றுகூடலுக்குள் வர முடியாது. விகாரத்தில் ஈடுபடுபவர்களைத் தம்முடன் இங்கே அழைத்து வரவேண்டாம் என்று வழிகாட்டிகளாக உள்ள பிராமணர்களாகிய, தேவதைகள் அனைவரிடமும் கூறப்பட்டுள்ளது. தவறினால் இருவருமே பொறுப்பாளிகள் ஆவர். விகாரத்தில் ஈடுபடுகின்ற ஒருவரை எவரேனும் அழைத்து வந்தால், இருவருமே தம் மீது பெரும் கறையைப் பூசிக் கொள்வதால் பின்னர் பெரும் தண்டனை இருக்கும். தேவதைகளான உங்களின்மீது பெரும் பொறுப்பு உள்ளது. மன்சரோவாரில் (ஏரி) நீராடுவதால் ஒருவர் தேவதை ஆகலாம் எனக் கூறப்படுகின்றது. உண்மையில், அது இந்த ஞானம் என்ற மன்சரோவார் ஆகும். பாபா ஒரு மனித சரீரத்தில் பிரவேசித்து இந்த ஞானத்தைப் பொழிகின்றார். அவர் ஞானக்கடல் ஆவார். நீங்கள் நதிகளும், ஏரிகளும் ஆவீர்கள். ஞானக்கடல் இவருக்குள் அமர்ந்திருந்து குழந்தைகளான உங்களைச் சுவர்க்கத்திற்குச் செல்லும் தகுதியுடையவர்கள் ஆக்குகின்றார். சுவர்க்கத்தில், அது ஸ்ரீ இலக்ஷ்மியினதும், நாராயணனதும் இராச்சியமாகும். இதுவே இல்லறப் பாதையின் இலக்கும் குறிக்கோளும் ஆகும். அவர்கள் கூறுகின்றார்கள்: நாங்கள் இருவருமே இந்த ஞானச்சிதையில் அமர்ந்து இலக்ஷ்மி நாராயணன் ஆகுவோம். நீங்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோர விரும்புகின்றீர்கள். அரைக் கல்பத்திற்கு ஆத்மாக்கள் விரக்தியில் உள்ளனர். பாபா, வந்து எங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்து எங்களைத் தூய்மை ஆக்குங்கள்! தந்தை உங்களுக்கு ஒரு சமிக்ஞை கொடுக்கின்றார். தேவர்களின் மீது நம்பிக்கையைக் கொண்டுள்ள பாரதவாசிகள் நிச்சயமாக 84 பிறவிகளை எடுத்துள்ளார்கள். தேவர்களின் பக்தர்களுக்கு எவ்வாறு தந்தை வந்து மூன்று தர்மங்களையும் ஸ்தாபிக்கின்றார் என்று விளங்கப்படுத்துவதற்கு முயற்சி செய்யுங்கள். அவர் பிராமண, சூரியவம்ச, சந்திரவம்ச தர்மங்களை ஸ்தாபிக்கின்றார். பின்னர், அரைக்கல்பத்திற்கு எச்சமயங்களும் ஸ்தாபிக்கப்படுவதில்லை. பின்னர் மற்றைய அரைக் கல்பத்திலேயே பல பிரிவுகளும், சமயங்களும் ஸ்தாபிக்கப்படுகின்றன. மறுபுறத்தில் அரைக் கல்பத்திற்கு ஒரேயொரு தர்மம் மாத்திரமே ஸ்தாபிக்கப்படுகின்றது. அதுவும் எதிர்காலத்திற்காகச் சங்கமயுகத்தில் ஸ்தாபிக்கப்படுகின்ற ஓர் இராச்சியம் ஆகும். ஏனைய சமய ஸ்தாபகர்கள் அனைவரும் இப்பழைய உலகிலேயே தமது சொந்தச் சமயங்களை ஸ்தாபிக்கின்றார்கள். இங்கே, தந்தை அரைக் கல்பத்திற்கு நீடிக்கக்கூடிய ஒரேயொரு தர்மத்தை ஸ்தாபிக்கின்றார். வேறு எவருக்கும் இந்தச் சக்தி கிடையாது. தந்தை உங்களைத் தனக்குரியவர் ஆக்கி, சூரிய, சந்திர வம்சங்களை ஸ்தாபித்து, ஏனைய அனைத்தையும் அழிக்கின்றார். பின்னர் ஆத்மாக்கள் அனைவரும் மௌனத்திற்குள் செல்ல, நீங்கள் சந்தோஷத்திற்குள் செல்கின்றீர்கள். அந்த நேரத்தில், கடவுளை நீங்கள் நினைவு செய்யத் தேவையேற்படும் வகையில் எத்துன்பமும் இருக்க மாட்டாது. உங்கள் புத்திகளில் இந்த ஞானம் உள்ளது. ஞானக்கடலான தந்தையே உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒரேயொரு கடலானவரே உள்ளார். நீங்கள் உங்களைக் கடல்கள் என்று அழைக்க மாட்டீர்கள். நீங்கள் அவரது உதவியாளர்கள் ஆகுவதாலேயே, நீங்கள் ஞான கங்கைகள் என்று அழைக்கப்படுகின்றீர்கள். மற்றையது ஆற்றுநீராகும். தந்தை கூறுகின்றார்: ஞானக்கடலான எனது குழந்தைகளான நீங்களே, காமச்சிதையில் அமர்ந்ததால், எரிக்கப்பட்டுள்ளீர்கள், அதாவது, நீங்கள் தூய்மை அற்றவர்கள் ஆகியுள்ளீர்கள். இப்பொழுது என்னை நினைவு செய்வதனால், நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். இவ்வுலகச் சக்கரம் 5000 வருடங்களுக்கானது. எவருக்கும் இது தெரியாது. உலகச் சக்கரம் நான்கு சம பகுதிகளாக உள்ளது. நான்கு யுகங்கள் உள்ளன. இந்தச் சங்கமயுகமே நன்மை செய்யும் யுகமாகும். இது சங்கமம் (கும்பம்) என்று அழைக்கப்படுகின்றது. சங்கமம் என்றால் சந்திப்பு என்று அர்த்தமாகும். ஓர் ஆறு வந்து, கடலோடு சங்கமிக்கின்றது. ஆத்மாக்கள் வந்து பரமாத்மாவைச் சந்திக்கின்றார்கள். இதுவே ஒரு சந்திப்பு என்று அழைக்கப்படுகின்றது. பரமாத்மாவுடனான ஆத்மாக்களின் சந்திப்பை இப்பொழுது நீங்கள் பார்க்க முடியும். உங்கள் மத்தியிலும் நீங்கள் சந்தித்துக் கருத்தரங்குகளை நடாத்துகின்றீர்கள். அதனைச் சந்திப்பு, அதாவது, சங்கமம் என்று அழைக்க முடியாது. கடல் தனக்குரிய இடத்தில் அமர்ந்திருக்கின்றார். அவர் இவரின் சரீரத்தில் இருக்கின்றார். இவரின் சரீரம் எங்குள்ளதோ அங்கே ஞானக்கடல் இருக்கின்றார். ஞான நதிகளாகிய நீங்கள் உங்கள் மத்தியில் சந்திக்கின்றீர்கள். நதிகள் சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ இருக்கலாம். மக்கள் அங்கே நீராடுவதற்காகச் செல்கின்றார்கள். கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற நதிகள் உள்ளன. யமுனை நதிக்கரையில் உள்ள டெல்கியே சுவர்க்கமாகும். டெல்கி தேவதைகளின் பூமியாக இருந்தபொழுது, அது இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமாக இருந்தது எனக் கூறப்படுகிறது. அதை ஸ்ரீகிருஷ்ணரின் இராச்சியம் என்று சொல்ல முடியாது. இராதையும் கிருஷ்ணரும் தம்பதி ஆகியதன் பின்னரே, அவர்களால் ஆட்சிசெய்ய முடியும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது மிகவும் சந்தோஷமாக இருக்கின்றீர்கள். மாயையின் புயல்கள் பல வரும். இது எல்லையற்ற குத்துச்சண்டை ஆகும். ஒவ்வொருவரும் ஐந்து விகாரங்களுடன் யுத்தம் செய்கின்றார்கள். நாங்கள் பாபாவைச் சதா நினைவு செய்ய விரும்புகின்றோம், ஆனால் மாயை எங்கள் புத்தியின் யோகத்தைத் துண்டிக்கின்றாள். கடவுள் ஒருபுறம் இழுக்க, மாயை மறுபுறத்தில் இருந்து உங்களை இழுக்கின்ற ஒரு நாடகத்தையும் அவர்கள் காட்டுகின்றார்கள். அவர்கள் இதனையிட்டு ஒரு நாடகத்தைத் தயாரித்துள்ளார்கள். திரைப்படம் என்ற நாகரீகம் அண்மையில் உருவாகியுள்ளது. நாடகத்திற்கேற்ப, திரைப்படங்களின் உதாரணங்களைப் பயன்படுத்தி நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். ஒரு நாடகத்தில் மாற்றங்கள் இருக்கக்கூடும். இது அநாதியாக முற்கூட்டியே நிச்சயிக்கப்பட்ட அழியாத நாடகம் ஆகும். முற்கூட்டியே நிச்சயிக்கப்பட்டதே இடம்பெறுகின்றது. இன்ன இன்னார் மரணிக்கின்றார் என்றால் அவர் நாடகத்தில் அந்தளவு பாகத்தை மாத்திரமே நடிக்க வேண்டியிருந்தது. ஆகையால், நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? அது நாடகத்தில் உள்ளது. அவர் சரீரத்திலிருந்து நீங்கிய பின்னர், அவரால் மீண்டும் அதற்குள் திரும்பவும் வர முடியாது. எனவே அழுவதனால் என்ன நன்மை உள்ளது? இவ்விடத்தின் பெயரே துன்ப உலகமாகும். சத்தியயுகத்தில் பற்றை வென்ற அரசர்கள் உள்ளனர். அதனையிட்டும் ஒரு கதை உள்ளது. சத்தியயுகத்தில் பற்று என்ற கேள்விக்கே இடமே இல்லை. இங்கே, மக்கள் ஒருவர் மீது ஒருவர் அதிகளவு பற்று கொண்டுள்ளனர்! ஒருவரின் மரணத்தின் பொழுது, ஒருவர் அழாதிருந்தால், மற்றவர்கள் அழுது அவரையும் அழச் செய்கின்றார்கள். அதனால், அவர் தங்களைப் போன்று அனுதாபப்படுகின்றார் என்பதாக அவர்கள் உணர்கின்றார்கள். அவ்வாறில்லா விட்டால் அவதூறு ஏற்படும்! இவை யாவும் பாரதத்திற்குரிய சம்பிரதாயங்கள். பாரதத்திலேயே சந்தோஷமும் உள்ளது, பாரதத்திலேயே பெருமளவு துன்பமும் உள்ளது. இறைவன், இறைவியர் பாரதத்தை ஆட்சிசெய்தனர். பழைய சிலைகளை வெளிநாட்டவர் பெருமளவு சந்தோஷத்துடன் தம்முடன் எடுத்து செல்வது வழக்கம் ஆகும். பழைய காலப் பொருட்களுக்கு பெருமளவு மதிப்புள்ளது. அனைவரிலும் அதி புராதனமானவரான சிவன் இங்கே வருகின்றார். அவர்கள் அவரைப் பெருமளவு வழிபடுகின்றார்கள். இப்பொழுது சிவபாபா வந்துள்ளதால், நீங்கள் அவரை வழிபடுவதில்லை. அவர் வந்து சென்று விட்டதாலேயே, அவர்கள் அவரைத் தொடர்ந்தும் வழிபடுகின்றார்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் புத்தியில் இந்த நாடகத்தின் ஞானத்தை வைத்திருந்து, கவலையற்றவர்களாக இருங்கள். எதனையிட்டும் கவலைப்படாதீர்கள். ஏனெனில், முற்கூட்டியே நிச்சயிக்கப்பட்டதே இடம்பெறுவதை நீங்கள் அறிவீர்கள். பற்றிலிருந்து விடுபடுங்கள்.2. நீங்கள் தந்தையிடம் இருந்து வியாழதிசையை அனுபவம் செய்வதால், இராகுவின் சகுனங்களின் கிரகணத்தால் பீடிக்கப்படாமல் இருப்பதில் கவனம் செலுத்துங்கள். தீய சகுனங்கள் ஏதும் இருப்பின், இந்த ஞானத்தைத் தானம் செய்வதனால் அவற்றை முடித்து விடுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் சொந்தப் பதட்டத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் ஓர் உலக உபகாரியாக உலகின் பதட்டத்தை முடிப்பீர்களாக.நீங்கள் மற்றவர்களின் மீது அதிக கவனம் செலுத்தும்போது, உங்களுக்கே பதட்டத்தை உருவாக்கிக் கொள்கிறீர்கள். எனவே, விரிவாக்கத்தை உருவாக்குவதற்குப் பதில், சாரத்தில் நிலைநிறுத்தி, அதிக எண்ணிக்கையில் உள்ள எண்ணங்களை அமிழ்த்தி, தரமான எண்ணங்களை உருவாக்குங்கள். அனைத்திற்கும் முதலில், உங்களின் சொந்தப் பதட்டத்தில் கவனம் செலுத்துங்கள். அப்போது உங்களால் உலக உபகாரி ஆகி, உலகிலுள்ள பல வகையான பதட்டங்களையும் முடிக்க முடியும். அனைத்திற்கும் முதலில், உங்களையே பாருங்கள்: முதலில் சுய சேவை. நீங்கள் உங்களுக்கே சேவை செய்யும்போது, இயல்பாகவே மற்றவர்களுக்கும் சேவை இடம்பெறும்.
சுலோகம்:
யோகத்தை அனுபவம் செய்வதற்கு திடசங்கற்பத்தின் சக்தியால் உங்களின் மனதைக் கட்டுப்படுத்துங்கள்.அவ்யக்த சமிக்கை: எரிமலை ஸ்திதியில் இருந்தவண்ணம், சக்திவாய்ந்த நினைவை அனுபவம் செய்யுங்கள்.
எந்தளவிற்கு நீங்கள் ஸ்தாபனைக்கு எரிமலை ரூபத்தில் ஒரு கருவி ஆகுகிறீர்களோ, அந்தளவிற்கு விநாசத்தின் சுவாலைகள் வெளிப்படும். ஒன்றுதிரட்டிய, எரிமலை நினைவின் ரூபம், உலக விநாசப் பணியைப் பூர்த்தி செய்யும். இதற்கு, சகல நிலையங்களிலும் விசேடமான யோகா நிகழ்ச்சிகள் தொடர்ந்து இடம்பெற வேண்டும். இவை விநாசத்தின் சுவாலைகளைக் கொழுந்து விட்டு எரியச் செய்யும். யோகத்தீயில் இருந்தே விநாசத்தீ ஆரம்பிக்கும். இந்தச் சுவாலையால் அந்தச் சுவாலைகள் எரிய ஆரம்பிக்கும்.