08.09.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது புதிய இறை இரத்தத்தைக் கொண்டுள்ளீர்கள். நீங்கள் பெருமளவு போதையுடன் சொற்பொழிவுகளை ஆற்றவேண்டும். அத்துடன் சிவபாபாவே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்ற போதையையும் கொண்டிருங்கள்.

கேள்வி:
உங்கள் இலக்கினதும் குறிக்கோளினதும் நிரந்தரமான போதையைக் கொண்டிருப்பதற்கு நீங்கள் என்ன வழிமுறையைக் கையாளவேண்டும்?

பதில்:
இராச்சியத்துக்கான உங்களின் கடவுச்சீட்டை உங்களுடன் வைத்திருங்கள். கீழே உங்களின் ஒரு சாதாரண படத்தையும், அதற்கு மேலே அரச ஆடையுடன் உங்களுடைய படத்தையும் அதற்கும் மேலே சிவபாபாவின் ரூபத்தையும் வைத்திருங்கள். அப்பொழுது உங்களால் இலகுவான உங்களுடைய இலக்கையும் குறிக்கோளையும் விழிப்புணர்வில் வைத்திருக்க முடியும். எப்போதும் உங்களின் கடவுச்சீட்டை சட்டைப்பையினுள் வைத்திருங்கள். மாயையின் புயல்கள் வரும்போது, உங்கள் கடவுச்சீட்டு ரத்துச்செய்யப்பட்டு, உங்களால் சுவர்க்கத்திற்குச் செல்லமுடியாமல் போய்விடும் என்ற எண்ணத்தைக் கொண்டிருங்கள்.

பாடல்:
ஓ இரவுப்பயணியே களைப்படையாதீர், விடியல் எனும் இலக்கு வெகுதொலைவில் இல்லை!

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் இப்பாடலின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டீர்கள். காரிருளான பக்தி மார்க்கம் இப்பொழுது முடிவுக்கு வருகின்றது. உங்களுக்கு இப்பொழுது மரணம் வராது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நாங்கள் இங்கே அமர்ந்திருக்கின்றோம். எங்களுடைய இலக்கும் குறிக்கோளும் மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுவதாகும். எருதுகளாகத் தங்களைக் கருதுபவர்கள் அந்த வடிவத்தையே எடுத்துவிடுவார்கள் என சந்நியாசிகள் மக்களுக்குக் கூறுகின்றார்கள். எவ்வாறு இராமர் வானரசேனையின் உதவியுடன் இராவணனிடம் இருந்து பாரதத்தை விடுவித்தார் என்ற உதாரணம் உள்ளதோ, அதேபோன்று அதுவும் பக்திமார்க்கத்தின் உதாரணமாகும். நீங்கள் இங்கே அமர்ந்திருக்கின்றீர்கள், நீங்கள் இரட்டைக் கிரீடம் அணிந்த தேவர்கள் ஆகுவீர்கள் என்பதை அறிவீர்கள். மாணவர்கள் பாடசாலையில் கற்கின்றபோது, அவர்கள் ஒரு வைத்தியராகவோ அல்லது பொறியியலாளராகவோ அக்கல்வியின் மூலம் ஆகுவோம் எனக் கூறுகின்றார்கள். இந்தக் கல்வியின் மூலம் நீங்கள் தேவர்கள் ஆகுகின்றீர்கள் என்பதை அறிவீர்கள். நாங்கள் சரீரத்தை விட்டுச்சென்று கிரீடம் அணிந்தவர்கள் ஆகுவோம். இது மிக அழுக்கான உலகம், ஆனால் புதிய உலகம் முதல்தரமானதாகும். பழைய உலகம் முற்றிலும் மூன்றாந்தரமானது. இந்த உலகம் ஒரு முடிவிற்கு வருகின்றது. உலகைப் படைத்தவரே நிச்சயமாக எங்களை உலகின் அதிபதிகள் ஆக்குகின்றார். வேறு எவராலும் எங்களுக்குக் கற்பிக்க முடியாது. சிவபாபாவே எங்களுக்கு அறிவூட்டி இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார். தந்தை கூறுகின்றார்: ஆத்ம உணர்வுடையவர் ஆகுங்கள்! ஆத்ம உணர்வு உடையவர் ஆகுவதற்கே முயற்சி தேவை. நீங்கள் ஒருமுறை முற்றிலும் ஆத்ம உணர்வுடையவர் ஆகியபின்னர் உங்களுக்கு மேலும் என்ன தேவையுள்ளது? நீங்கள் பிராமணர்கள், நீங்கள் தேவர்கள் ஆகின்றீர்கள் என்பதை அறிவீர்கள். உங்களிடம் அவ்வாறு ஆகுகின்ற போதையுள்ளது. முன்னர் நாங்கள் நரகமாகிய கலியுகத்தில் இருந்தபோது தூய்மையற்று இருந்தோம். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் அதிக வேறுபாடு உள்ளது. தேவர்கள் தூய்மையானவர்கள்! இங்கே மனிதர்கள் மிகவும் தூய்மை அற்றவர்கள்! அவர்கள் மனிதர்களின் தோற்றத்தைக் கொண்டிருந்தபோதும், அவர்களுடைய குணாதிசயங்கள் எவ்வாறுள்ளது எனப்பாருங்கள்! தேவர்களைப் பூஜிப்பவர்கள் அவர்களுடைய விக்கிரகங்களின் முன்னால் புகழ்கின்றனர்: நீங்கள் தெய்வீகக்குணங்கள் நிறைந்தவர்கள் ஆனால் நாங்களோ தெய்வீகக்குணங்கள் அற்றவர்கள். நீங்கள் இப்பொழுது தேவர்களாக மாறுகின்றீர்கள். நீங்கள் ஸ்ரீகிருஷ்ணரைப் பூஜிக்கின்றீர்கள். அதனால் நீங்கள் கிருஷ்ணரின் தேசத்திற்குச் செல்ல முடியும். எவ்வாறாயினும் எப்போது நீங்கள் அங்கே செல்வீர்கள் என அறியமாட்டீர்கள். கடவுள் வந்து உங்களுக்கு அதன் பலனைக் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் தொடர்ந்தும் பக்தி செய்கின்றீர்கள். பக்தியின் பலன் சற்கதியாகும். இது ஒரு கல்வி ஆகும். முதலில் யார் உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்ற நம்பிக்கையைக் கொண்டிருங்கள். அவர் ஸ்ரீ, ஸ்ரீ ஆவார். தந்தை உங்களுக்கு ஸ்ரீமத் கொடுக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இதை அறியாதவர்கள் எவ்வாறு மேன்மையானவர்கள் ஆகமுடியும்? இந்நாட்களில், அவர்கள் சீரழிவதற்கே ஒருவருக்கொருவர் வழிகாட்டல்களைக் கொடுக்கின்றனர். சீரழிந்த வழிகாட்டல்கள், அசுர வழிகாட்டல்கள் ஆகும். பிராமணர்களாகிய நீங்கள் அனைவரும் ஸ்ரீ, ஸ்ரீ சிவபாபாவின் வழிகாட்டல்களையே பின்பற்றுகின்றீர்கள். பரமாத்மாவின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதாலேயே நீங்கள் மேன்மையானவர் ஆகுகின்றீர்கள். பாக்கியத்தைக் கொண்டவர்களின் புத்தியிலேயே இது இருக்கும். இல்லையெனில், அவர்கள் எதையும் புரிந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் புரிந்து கொள்ளும்போது, உங்களுக்கு உதவி செய்ய ஆரம்பிப்பார்கள். சிலர் இவர் யார் எனவும் அறியமாட்டார்கள். இதனாலேயே பாபா எவரையும் சந்திப்பதில்லை. அவர்கள் தங்களுடைய அசுரவழிகாட்டல்களையே கொடுக்கின்றார்கள். அனைவருமே இப்பொழுது மனிதர்களின் வழிகாட்டல்களையே பின்பற்றுகின்றனர். ஸ்ரீமத்தை அறிந்து கொள்ளாததால் அவர்கள் பிரம்மாபாபாவுக்கும் தங்களுடைய சொந்த வழிகாட்டல்களைக் கொடுக்க ஆரம்பிக்கின்றனர். தந்தை இப்பொழுது குழந்தைகளாகிய உங்களை மேன்மையானவர்கள் ஆக்க வந்துள்ளார். குழந்தைகளாகிய நீங்கள் கூறுகின்றீர்கள், நாங்கள் 5000 வருடங்களுக்கு முன்னர் செய்தது போன்று மீண்டும் உங்களைச் சந்திக்கின்றோம். எதையும் அறியாதவர்களால் இவ்வாறான பதிலைக் கொடுக்க முடியாது. உங்களுடைய கல்வி பற்றிய அதிகளவு போதையை குழந்தைகளாகிய நீங்கள் கொண்டிருக்க வேண்டும். இந்தக்கல்வி மிக முக்கியமானது. எவ்வாறாயினும் மாயை உங்களுக்கு முற்றிலும் எதிராக இருக்கின்றாள். நீங்கள் இந்தக்கல்வியைக் கற்பதனால் இரட்டைக்கிரீடத்தைப் பெறுவீர்கள் என்பதை அறிவீர்கள். நீங்கள் எதிர்காலத்தில் பிறவி, பிறவியாக இரட்டைக்கிரீடம் அணிந்தவர்கள் ஆகுவீர்கள். எனவே நீங்கள் அதற்கான முயற்சியைச் செய்யவேண்டும். இது இராஜயோகம் என்று அழைக்கப்படுகின்றது. இது அவ்வாறான அற்புதமாகும்! இலக்ஷ்மி, நாராயணன் ஆலயத்திற்குச் செல்லுமாறு பாபா எப்போதுமே கூறுகின்றார். நீங்கள் ஆலயத்தின் பூசாரிக்கும் விளங்கப்படுத்தலாம். எவ்வாறு இலக்ஷ்மி, நாராயணன் அவர்களுடைய அந்தஸ்தை அடைந்தார்கள் என்றும் எவ்வாறு அவர்கள் உலக அதிபதிகள் ஆகினார்கள் என்றும் அவரிடம் வினவுங்கள். இவ்வாறு நீங்கள் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துகின்ற போது ஆலயத்தை பராமரிக்கின்ற பூசாரியும் நன்மை அடைவார். நீங்கள் அவர்களுக்குக் கூறலாம்: எவ்வாறு இலக்ஷ்மி, நாராயணன் தங்களுடைய இராச்சியத்தைக் கோரினார்கள் என நாங்கள் விளங்கப்படுத்துவோம். “நான் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்து உங்களை அரசர்களுக்கெல்லாம் அரசர்கள் ஆக்குகின்றேன்” எனக் கடவுள் பேசுவதாகக் கீதையிலே கூறப்பட்டுள்ளது. எனவே குழந்தைகளாகிய நீங்கள் அவ்வாறு ஆகுகின்ற போதையை அதிகளவில் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் உங்களுடைய (தற்போதைய) படத்தையும் அரச ஆடையில் ஒரு படத்தையும் எடுத்து இரண்டையும் ஒன்றாகச் சேருங்கள். அடியிலே உங்களுடைய சொந்தப்படமும் அதற்குமேலே அரச ஆடையில் உள்ள படமும் இருக்க வேண்டும். இதில் எந்த செலவுமில்லை. நீங்கள் மிக விரைவாக அரச ஆடைகளைத் தைக்கலாம். அதை உங்களுடன் வைத்திருங்கள், அப்பொழுது நீங்கள் தேவர்கள் ஆகுகின்றீர்கள் என்பதை மீண்டும், மீண்டும் நினைவு செய்வீர்கள். மேலே சிவபாபாவின் படம் இருக்கவேண்டும். நீங்கள் இந்தப்படங்கள் எல்லாவற்றையும் எடுக்கவேண்டும். நாங்கள் மனிதர்களில் இருந்து தேவர்கள் ஆகுகின்றோம் நாங்கள் இந்தச் சரீரங்களை விடுத்து தேவர்கள் ஆகுகின்றோம். ஏனெனில் நாங்கள் இப்பொழுது இராஜயோகம் கற்கின்றோம். இந்தப் புகைப்படங்கள் உங்களுக்கு உதவி செய்யும். மேலே சிவபாபாவின் ரூபமும் பின்னர் அரச ஆடையிலுள்ள உங்களின் படமும் அதற்குக் கீழே உங்களுடைய சாதாரண படமும் இருக்க வேண்டும். நாங்கள் சிவபாபாவுடன் இராஜயோகம் கற்று, இரட்டைக் கிரீடமணிந்த தேவர்கள் ஆகுகின்றோம். இந்தப் புகைப்படங்களை வைத்திருக்கின்ற போது, எவராவது உங்களைக் கேட்டால், சிவபாபாவே எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்று உங்களால் கூறமுடியும். குழந்தைகளாகிய நீங்கள் இந்தப்படத்தைப் பார்க்கின்றபோது, போதையை உணர்வீர்கள். நீங்கள் கடைகளிலும் இந்தப் படங்களை வைக்கலாம். பாபா பக்திமார்க்கத்தில் இருந்தபோது நாராயணனின் படத்தை வைத்திருப்பது வழக்கம். அவர் அதன் புகைப்படத்தையும் அவரது சட்டைப்பையில் கொண்டு செல்வார். நீங்களும் உங்களின் புகைப்படத்தை வைத்திருக்க வேண்டும். அப்பொழுது நீங்கள் தேவர்கள் ஆகுகின்றீர்கள் என்பதை நினைவு செய்வீர்கள். நீங்கள் முயற்சிசெய்து தந்தையை நினைவு செய்வதற்கான வழிமுறையைக் கண்டுபிடிக்க வேண்டும். நீங்கள் தந்தையை நினைவு செய்ய மறக்கின்ற போதே, வீழ்கின்றீர்கள். நீங்கள் விகாரத்தில் வீழ்கின்றபோது உங்களால் ஒரு தேவராக முடியாது என வெட்கம் அடைகின்றீர்கள். உங்களுக்கு இதயவழுவல் ஏற்பட்டு எவ்வாறு நான் இப்பொழுது தேவராக முடியும் என நீங்கள் என நினைப்பீர்கள். பாபா கூறுகின்றார்: விகாரத்தில் ஈடுபடுபவர்களின் புகைப்படங்களை அகற்றுங்கள்! அவர்களிடம் கூறுங்கள்: நீங்கள் சுவர்க்கதிற்கு செல்லத் தகுதி உடையவரல்ல. உங்களுடைய கடவுச்சீட்டு இப்பொழுது ரத்தாகிவிட்டது. அவர்கள் தாங்களே உணர்வார்கள்: நான் வீழ்ந்துவிட்டேன். எனவே எவ்வாறு இப்பொழுது சுவர்க்கத்திற்குச் செல்லமுடியும்? இலக்ஷ்மியைத் திருமணம் செய்யத் தகுதி வாய்ந்தவரா என்று முகத்தைக் கண்ணாடியில் பார்க்கும்படி நாரதருக்கு கூறப்பட்டதாக பாபா உதாரணத்தைக் கொடுக்கின்றார். அவர் குரங்கின் முகத்தையே பார்த்தார். எனவே மனிதர்களும் தங்களுக்குள் விகாரம் இருக்கின்றபோது வெட்கம் அடைந்து தங்களையே கேட்க வேண்டும். எவ்வாறு அவர்கள் ஸ்ரீ இலக்ஷ்மியையோ, நாராயணனையோ திருமணம் செய்யமுடியும்? பாபா உங்களுக்குப் பல வழிமுறைகளைக் காட்டுகின்றார். எவ்வாறாயினும் நீங்களும் இந்த நம்பிக்கையைக் கொண்டிருக்க வேண்டும். விகாரத்தின் போதை இருக்கின்றபோது, நீங்கள் இரட்டைக் கிரீடமணிந்த அரசர்களுக்கு எல்லாம் அரசர்கள் ஆகின்ற சாத்தியமில்லை எனப் புரிந்து கொள்ளலாம். நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். பாபா விளங்கப்படுத்துகின்றார்: அற்புதமான வழிமுறைகளை உருவாக்கி, தொடர்ந்தும் அனைவருக்கும் விளங்கப்படுத்துங்கள். இராஜயோகத்தின் மூலம் ஸ்தாபனை இடம்பெறுகின்றது. மரணம் இப்பொழுது சற்று முன்னால் உள்ளது. நாளுக்கு நாள் புயல்களும் மென்மேலும் வலிமை உடையதாகும். குண்டுகள் இன்னமும் தயாரிக்கப்படுகின்றன. உயர்ந்த அந்தஸ்தைக் கோருவதற்காகவே குழந்தைகளாகிய நீங்கள் இந்தக் கல்வியைக் கற்கின்றீர்கள். நீங்கள் ஒரு தடவையே தூய்மை அற்றவர்களில் இருந்து, தூய்மை ஆகின்றீர்கள். மக்கள் கல்லுப்புத்தியைக் கொண்டிருப்பதால் தாங்கள் நரகவாசிகள் என்பதைப் புரிந்து கொள்வதில்லை. நீங்கள் இப்பொழுது கல்லுப்புத்தி உடையவர்களில் இருந்து, தெய்வீகப்புத்தி உடையவர்கள் ஆகின்றீர்கள். ஒருவரது பாக்கியத்தில் இது இருந்தால், அவர் விரைவாகப் புரிந்துகொள்வார். இல்லாவிடில், நீங்கள் எவ்வளவுதான் தலையை அடித்துக் கொண்டாலும் அவரது புத்தியில் அது பதியாது. அவர்கள் தந்தையை அறியாவிட்டால், நாஸ்திகர்கள் ஆவர், அதாவது, அவர்கள் அநாதைகள் ஆவர். நீங்கள் பிரபுவுக்கும் அதிபதிக்கும் சொந்தமாக வேண்டும். ஏனெனில் நீங்கள் சிவபாபாவின் குழந்தைகள். இங்கிருப்பவர்களில் இந்த ஞானம் உள்ளவர்கள் தொடர்ந்தும் தங்களது பிள்ளைகளையும் விகாரங்களில் இருந்து பாதுகாப்பார்கள். இந்த ஞானம் இல்லாதவர்கள், தாங்கள் எவ்வாறு விகாரத்தில் சிக்கியுள்ளார்களோ, அவ்வாறே தொடர்ந்தும் தங்களது பிள்ளைகளையும் விகாரத்தில் சிக்கவைப்பார்கள். இங்கே, நீங்கள் விகாரங்களில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளீர்கள் என்பதை அறிவீர்கள். குமாரிகளே முதலில் பாதுகாக்கப்பட வேண்டும். பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளை விகாரத்தினுள் தள்ளுகின்றனர். இந்த உலகம் சீரழிந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். அனைவரும் மேன்மையான உலகையே விரும்புகின்றனர். ஆனால் யாரால் அதை உருவாக்க முடியும்? கடவுள் பேசுகின்றார்: நான் சாதுக்களையும் புனிதர்களையும்கூட ஈடேற்றுகின்றேன். கடவுளே அனைவரையும் ஈடேற்ற வேண்டுமென கீதையிலும் எழுதப்பட்டுள்ளது. கடவுள் ஒருவரே இருக்கின்றார். தந்தை வந்து அனைவரையும் ஈடேற்றுகின்றார். கீதையின் கடவுள் உண்மையில் சிவனே என்பதை இந்நேரத்தில் அவர்கள் அறிந்திருந்தால், என்ன நடந்திருக்கும் என யார் அறிவார்? எவ்வாறாயினும் அதற்கு இன்னமும் காலம் இருக்கின்றது. ஒவ்வொருவரின் நிலையும் ஆட்டங்காணத் தொடங்கும், அவர்களுடைய சிம்மாசனமும் அசையைத் தொடங்கும். யுத்தம் இடம்பெறும்போது, ஒருவரின் சிம்மாசனம் ஆட்டங்காணத் தொடங்கி விட்டதென்றும், அவர் இப்பொழுது விழப்போகின்றார் என்றும் நீங்கள் அறிவீர்கள். அவர்கள் இப்பொழுது ஆட்டங் கண்டால் குழப்பங்கள் நிலவும். அது எதிர்காலத்தில் இடம்பெறும். நீங்கள் உங்கள் சொற்பொழிவுகளில் விளங்கப்படுத்தலாம். சமஸ்கிருத மொழி தெரிந்தவர்களால் சமயநூல்களின் வாசகங்களைக் கூறமுடியும். தூய்மையாக்குபவரும், அனைவருக்கும் சற்கதியை அருள்பவரும் கூறுகின்றார்: நான் உண்மையில் பிரம்மாவின் சரீரத்தின் மூலம் ஸ்தாபனையை மேற்கொள்கின்றேன். அவரே(சிவபாபா) அனைவருக்கும் சற்கதி அருள்கின்றார், அதாவது, அவர் அனைவரையும் ஈடேற்றுகின்றார். சொற்பொழிவுகள் ஆற்றுவதற்கு உங்களுக்கு மகத்தான போதை இருக்கவேண்டும். குமாரிகள் புதிய இரத்தம் (இள இரத்தம்) கொண்டவர்கள் என்று கூறப்படுகின்றார்கள். அவர்களால் இந்த ஞானக்கல்லை வீசமுடியும். மாணவர்கள் இள இரத்தத்தைக் கொண்டுள்ளதால் அதிக குழப்பங்களை விளைவிப்பதுடன், கல்லெறியவும் செய்கின்றார்கள். அதிலே அவர்கள் மிகவும் திறமைசாலிகள். இதுவும் உங்களின் புதிய இரத்தமாகும். அவர்கள் அதிகளவு சேதத்தை ஏற்படுத்துகின்றார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இது உங்களுடைய இறை புதிய இரத்தமாகும். நீங்கள் பழையதில் இருந்து புதியதாகின்றீர்கள். கலியுகத்து பழைய ஆத்மாக்கள் ஆகிவிட்ட நீங்கள் இப்பொழுது புதிய சத்தியயுகத்தவர்களாக ஆகுகின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு ஆர்வத்தைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் எப்போதும் போதை கொண்டிருக்க வேண்டும். நீங்கள் உங்களுக்கு சமமானவர்களை ஈடேற்ற வேண்டும். தாய்குருவும் நினைவுகூரப்படுகின்றார். தாய்மார்கள் எப்போது குருமார்களாக ஆகின்றார்கள் என்பதை நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். குருமார்களின் வியாபாரம் இப்பொழுதே இடம்பெறுகின்றது. தந்தை வந்து இந்த ஞானக்கலசத்தை தாய்மார்கள்மீது வைக்கின்றார். இவ்வாறே அனைத்தும் ஆரம்பமாகின்றது. சிலர் தங்களுடைய நிலையத்திற்கு ஒரு பிராமண ஆசிரியரை அனுப்பிவைக்க வேண்டுமென கூறுகின்றார்கள். பாபா கூறுகின்றார்: நீங்களே நிலையத்தை நடாத்தலாம். உங்களுக்கு போதியளவு தைரியமில்லை என்றும், நிச்சயமாக ஒரு தாய் தேவை என்றும் நீங்கள் பதில் அளிக்கின்றீர்கள். நீங்கள் தாய்மார்களுக்கு மரியாதை கொடுப்பது நல்லது. இந்நாட்களில் மக்கள் மேலோட்டமான மரியாதையையே கொடுக்கின்றார்கள். எவருமே நிரந்தரமான மரியாதையைப் பெறுவதில்லை. இந்நேரத்தில் குழந்தைகளாகிய நீங்கள் நிரந்தரமான இராச்சிய பாக்கியத்தைப் பெறுகின்றீர்கள். தந்தை உங்களுக்குப் பல வழிகளில் விளங்கப்படுத்துகின்றார். எவ்வாறு உங்களை சதா மலர்ச்சியாக வைத்திருப்பது என மிக நல்ல வழிமுறைகளைத் தந்தை உங்களுக்குக் கூறுகின்றார். நீங்கள் எப்போதும் இலக்ஷ்மி, நாராயணன் ஆகுவதற்கான நல்லாசிகளைக் கொண்டிருக்க வேண்டும். ஒருவருடைய பாக்கியத்தில் அது இல்லையெனில் அவர் என்ன முயற்சியைச் செய்வார்? தந்தை உங்களுக்கு என்ன முயற்சி செய்ய வேண்டும் எனக்கூறுகின்றார். முயற்சி ஒருபோதும் வீணாகாது. அது எப்போதும் பெறுமதி வாய்ந்ததாகும். இராச்சியம் ஸ்தாபிக்கப்படும், மகாபாரத யுத்தத்தின் மூலம் விநாசம் இடம்பெற வேண்டும். நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும்போது, பலசாலிகள் ஆகுவீர்கள், அனைவரும் உங்களிடம் வருவார்கள். அவர்கள் இப்பொழுது இதைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். இல்லையெனில் அவர்களுடைய இராச்சியம் முடிந்துவிடும். நீங்கள் மிக நல்ல படங்கள் வைத்திருக்கின்றீர்கள். அது சற்கதி அடைந்த சந்தோஷ தாமமும், இது முக்திதாமமும் ஆகும். ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் நிர்வாணதாமத்தில் வசிக்கின்றீர்கள், அங்கிருந்து நீங்கள் பேசும் உலகிற்கு வருகின்றீர்கள் என உங்களுடைய புத்திகள் கூறுகின்றன. ஆத்மாக்களாகிய நாங்கள் அந்த இடத்து வாசிகள் ஆவோம். இந்நாடகம் பாரதத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். மக்கள் சிவனின் பிறந்ததினத்தை இங்கேயே கொண்டாடுகின்றனர். தந்தை கூறுகின்றார்: நான் இப்பொழுது வந்துள்ளேன். மீண்டும் ஒரு கல்பத்தின் பின்னர் வருவேன். பாரதமே வைகுந்தமாக இருக்கிறது. கிறிஸ்துவுக்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் அங்கே சுவர்க்கம் இருந்தாகக் கூறப்படுகின்றது. அது இப்பொழுது இல்லை. ஆனால் பின்னர் இருக்கும். எனவே நிச்சயமாக நரகவாசிகளின் அழிவும் சுவர்க்கவாசிகளின் ஸ்தாபனையும் இருக்க வேண்டும். நீங்கள் அந்த சுவர்க்கவாசிகள் ஆகுகின்றீர்கள். நரகம் அழிக்கப்படும். நீங்களும் இதைப் புரிந்துகொள்ள வேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத்தந்தை ஆன்மீகக்குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. அனைவர் மீதும் நல்லாசிகளைக் கொண்டிருங்கள். அனைவருக்கும் உண்மையான மரியாதை கொடுங்கள். சத்தியயுக இராச்சியத்தில் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவதற்கு முயற்சி செய்யுங்கள்.

2. ஆத்ம உணர்வு உடையவர் ஆகுவதற்கு முயற்சி செய்யுங்கள். மனிதர்களின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதைத் துறந்து, ஒரேயொருவரின் வழிகாட்டல்களையே பின்பற்றுங்கள். உங்கள் கல்வியின் போதையைப் பேணுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் இந்த ஞானத்தின் மாஸ்ரர் சூரியனாகி, ஆத்மாக்கள் அனைவரினதும் தூய்மையற்ற எண்ணங்கள் மற்றும் மனோபாவங்கள் அனைத்தையும் எரிப்பீர்களாக.

எவ்வாறு சூரியன் தனது கதிர்களால் குப்பைகள் மற்றும் கிருமிகள் போன்றவற்றை எரிக்கின்றதோ, அதேபோல், நீங்கள் இந்த ஞானத்தின் மாஸ்ரர் ஞான சூரியனாகி தூய்மையற்ற ஆத்மாக்களைப் பார்த்தால், அவர்களின் தூய்மையற்ற எண்ணங்கள், தூய்மையற்ற மனோபாவம், தூய்மையற்ற பார்வை என்பவை எரிக்கப்பட்டுவிடும். தூய்மையற்ற எண்ணங்களால் தூய்மையாக்கும் ஆத்மாக்களைத் தாக்க முடியாது. தூய்மையற்ற ஆத்மாக்கள் தங்களைத் தூய்மையாக்கும் ஆத்மாக்களிடம் அர்ப்பணிப்பார்கள். இதற்கு, சக்தி வீடாகுங்கள். அதாவது, இந்த ஞானத்தின் மாஸ்ரர் சூரியனின் ஸ்திதியில் ஸ்திரமாக இருங்கள்.

சுலோகம்:
உங்களின் தாரணையின் ரூபத்தால் உங்களின் யோகி வாழ்க்கையின் மூலம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதே மிகவும் மகத்தான சேவை ஆகும்.

அவ்யக்த சமிக்ஞை: இப்போது உங்களின் அருள்கின்ற ரூபத்தை வெளிப்படுத்துங்கள்.

பாக்கியத்தை அருள்பவரான தந்தை, பிரம்மாவினூடாக பாக்கியத்தைப் பகிர்ந்து அளித்ததாக நினைவு கூரப்படுகிறது. எனவே, பிரம்மாவின் பணி, பிராமணர்களான உங்களின் பணியும் ஆகும். உலகிலுள்ள மக்கள் ஆடைகள், உணவு, நீர் என்பனவற்றைப் பகிர்ந்தளிக்கிறார்கள். ஆனால், பாக்கியத்தை அருள்பவரின் குழந்தைகளான உங்களால் மட்டுமே இந்த மேன்மையான பாக்கியத்தைப் பகிர்ந்து அளிக்க முடியும். இந்தப் பாக்கியத்தை அடைபவர்கள் அனைத்தையும் பெறுகிறார்கள். ஆகவே, இந்தப் பாக்கியத்தைப் பகிர்ந்து அளிப்பதில் பெருந்தன்மையான இதயத்தைக் கொண்டவர் ஆகுங்கள்.